அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3273 topics in this forum
-
பட மூலாதாரம்,FEROZ SHAIKH 34 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவில் பெண்கள் மல்யுத்தம் செய்வது விசித்திரமாக பார்க்கப்பட்ட 1950களில், ஹமீதா பானோ ஆண் மல்யுத்த வீரர்களுக்கு ஒரு சவாலாகத் திகழ்ந்தார். இந்த 32 வயது மல்யுத்த வீராங்கனை, ஆண் மல்யுத்த வீரர்களிடம் ஒரு சவால் விடுத்தார். "என்னை யார் மல்யுத்த களத்தில் தோற்கடிக்கிறாரோ அவர் என்னைத் திருமணம் செய்து கொள்ளலாம்" என்பதுதான் அவர் விடுத்த சவால். இதேபோன்ற சவாலில், 1954 பிப்ரவரியில் இருந்து அவர் ஏற்கெனவே இரண்டு ஆண் மல்யுத்த சாம்பியன்களை தோற்கடித்திருந்தார். இவர்களில் ஒருவர் பாட்டியாலாவை சேர்ந்தவர். மற்றவர் கொல்கத்தாவை சேர்ந்தவர். அந்த ஆண்டு மே மாதம் தனது மூன்றாவது போட்டிக்…
-
- 0 replies
- 240 views
- 1 follower
-
-
தங்கள் விமானங்களில் பயணிக்கும் ஹஜ் யாத்திரிகர்கள் புனித நீரான ஜம் ஜம் நீரை எடுத்து வரக்கூடாது என ஏர் இந்தியா அறிவித்திருந்தது விமர்சனத்துக்கு ஆளான நிலையில், ஜம் ஜம் நீரை எடுத்துவரலாம் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ம் தேதி ஏர் இந்தியா அலுவலகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் ஜெட்டாவில் இருந்து ஐதராபாத், மும்பை, கொச்சி ஆகிய நகரங்களுக்கு இயங்கும் தங்கள் நிறுவன விமானங்களில் ஹஜ் யாத்திரையின் புனித நீரான ஜம் ஜம் நீரை கொண்டு செல்ல அனுமதியில்லை என கூறப்பட்டுள்ளது. செப்டம்பர் 5 ம் தேதிவரைக்கும் இந்த தடை நீடிக்கும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இத்தேர்க்கு இந்தியாவை சேர்ந்த ஹஜ் யாத்திரிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சூழலில் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம…
-
- 0 replies
- 240 views
-
-
பட மூலாதாரம்,UGC 9 ஜூலை 2025, 06:25 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் (இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) மத்திய குஜராத்தையும் சௌராஷ்டிராவையும் இணைக்கும் கம்பீரா பாலத்தின் நடுப்பகுதி இன்று காலை திடீரென உடைந்து விழுந்ததில், அதில் சென்று கொண்டிருந்த சில வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய குஜராத் பகுதியில் உள்ள பிபிசி குஜராத்தி குழுவினர், மஹிசாகர் ஆற்றில் அமைந்துள்ள இந்த பாலம் பெரியளவில் உடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த பாலம் வதோதரா மாவட்ட எல்லைக்குள் அமைந்துள்ளது. இந்த சம்பவத்தையறிந்து, உள்ளூர் அதிகாரிகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் …
-
- 5 replies
- 240 views
- 1 follower
-
-
மலிவு விலை செயற்கை சுவாசக் கருவி ‘ஜீவன்’: கரோனா நோயாளிகள் உயிரைக் காக்க ரயில்வேயின் புதிய முயற்சி: ஐசிஎம்ஆர் ஒப்புதலுக்காக காத்திருப்பு ரயில்வே தயாரித்த செயற்கை சுவாசக் கருவியின் மாதிரிப் படம். புதுடெல்லி கரோனா வைரஸுக்கு எதிராக நாடு போராடி வரும் நிலையில், பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் அளிப்பதற்காக மலிவு விலையில் செயற்கை சுவாசக் கருவியை ரயில்வேயின் கபூர்தலா ரயில் தொழிற்சாலை தயாரித்துள்ளது. இந்த மலிவு விலை செயற்கை சுவாசக் கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அனுமதி அளித்தால், ரயில்வே உற்பத்தியைத் தொடங்கிவிடும். நாள் ஒன்றுக்கு 100 கருவிகளைத் தயாரிக்க முடியும். கரோனா வைரஸ் பாதிப்பு தீவி…
-
- 0 replies
- 240 views
-
-
குஜராத்தில் தங்கத்தை தேடி தோண்டியபோது கிடைத்தவை, மனித வரலாற்றை மாற்றும் பொக்கிஷங்களா? பட மூலாதாரம்,PRASHANT GUPTA படக்குறிப்பு, லோத்ரானி பகுதியில் ஹரப்பா நாகரிக காலத்தை சேர்ந்த தொன்ம எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளது. 26 பிப்ரவரி 2024, 02:39 GMT குஜராத் மாநிலம் கட்ச் நகரின் தோலாவிராவிலிருந்து 51 கிமீ தொலைவில் உள்ள லோத்ரானி பகுதியில் ஹரப்பா நாகரிக காலத்தை சேர்ந்த தொன்ம எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளது. தோலாவிராவில் கிடைத்த புதைபடிவங்களைப் போன்றே இங்கும் கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சிந்து சமவெளி பண்பாட்டின் முக்கிய நகரங்களாகக் கருதப்படும் ஆமதாபாத்தின் லோத்தல் மற்றும் கட்சின் தோலாவிரா ஆகியவை, தற்போது குஜராத்…
-
- 0 replies
- 240 views
- 1 follower
-
-
சீனாவின் அறிவிப்புக்கு எதிர்ப்பை வெளியிட்ட இந்தியா. சீனாவின் ஹோட்டன் பகுதியில் புதிதாக 2 நிர்வாக அலகுகளை உருவாக்கும் அறிவிப்புக்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. குறித்த நிர்வாக அலகுகளில் சில இடங்கள் இந்திய – லடாக்கின் அதிகார வரம்புக்குட்டவை என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சீனாவின் ஹோட்டன் பகுதியில் புதிதாக 2 நிர்வாக அலகுகளை உருவாக்கும் அறிவிப்பை அண்மையில் சீனா வெளியிட்டது. இதற்குச் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு ஒப்புதல் அளித்தது. இது தொடர்பில் டெல்லியில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால், சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்தியா ஏற்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்…
-
- 3 replies
- 240 views
-
-
இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவது கடினம் – நிதின் கட்கரி “இந்தியாவை 350 இலட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் கொண்ட நாடாக உயர்த்துவது கடினம் தான். எனினும், அது நடக்காத காரியம் அல்ல” என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில், இந்துார் மேலாண்மை சங்கத்தின் 29வது சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “2024ம் ஆண்டுக்குள் இந்தியாவை 350 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் கொண்ட நாடாக உயர்த்துவது என்பது கடினமான இலக்கு தான். எனினும் அது நடக்காத காரியம் அல்ல. உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து இறக்குமதியை குறைத்துவிட்டால் அந்த இலக்கை நாம் எளிதில் எட்டிவிடலாம். நம் நாட்…
-
- 0 replies
- 240 views
-
-
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி?- டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று ஜெகன்மோகன் சந்திப்பு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக் கிறார். அப்போது, பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது குறித்தும் அவர் பேசவிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர சட்டப்பே ரவைக்கும் தேர்தல் நடந்தது. இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 151-ல் வெற்றி பெற்று, ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை கைப்பற்றினார். இது போல் ஆந்திராவில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 22-ல் கட்சி வெற்…
-
- 0 replies
- 240 views
-
-
பால்கரில் சாதுக்கள் கொல்லப்பட்டதில் சிபிஐ, என்ஐஏ விசாரணை கோரி மனு: மகாராஷ்டிர அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் இரு சாதுக்கள் உள்பட 3 பேர் கடந்த ஏப்ரல் மாதம் கும்பலால் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் சிபிஐ மற்றும் என்ஐஏ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் மகாராஷ்டிர அரசு பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பை காண்டிவாலி பகுதியைச் சேர்ந்த சாதுக்கள் சிக்னே மகராஜ் கல்பவிருக்சகிரி (வயது 70), சுஷில் கிரி மகராஜ் (வயது 35) ஆகியோர் ஓட்டுநர் நிலேஸ் டெல்கடே (வயது 30) உடன் சேர்ந்து குஜராத் மாநிலம் சூரத்தில் நிகழ்ந்த ஒரு இறுதிச்சடங்கிற்கு காரில் கடந்…
-
- 0 replies
- 239 views
-
-
இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக ஜேர்மனி அதிபர் இந்தியா வருகை! ஜேர்மனி அதிபர் ஒலப் ஸ்கோல்ஸ், இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக இந்த வார இறுதியில் இந்தியா வருகை தரவுள்ளார். எதிர்வரும் 25ஆம் திகதி இந்தியா வரும் ஒலப் ஸ்கோல்ஸ் இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் வர்த்தகம், இருநாட்டு உறவு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளனர். மேலும், ஜேர்மனி அதிபர் ஒலப் ஸ்கோல்ஸ், எதிர்வரும் 26ஆம் திகதி பெங்களூருவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்தப் பயணத்தின் போது ஜேர்மனி – இந்திய தொழில்துறையினர் இடையே ஆலோசனைகளும் நடைபெறவுள்ளது. இதன்பிறகு…
-
- 3 replies
- 239 views
-
-
பிரதிநிதித்துவப் படம். மொரேனா துபாயிலிந்து திரும்பி வந்த நபருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானதையடுத்து, அவர் அளித்த விருந்தில் பங்கேற்ற 26 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா நகரில் நடந்துள்ளது. இதுகுறித்து மொரேனா மாவட்ட துணை ஆட்சியர் ஆர்.எஸ்.பக்னா நிருபர்களிடம் கூறியதாவது: ''மொரேனா நகரைச் சேர்ந்த நபர் துபாயில் ஒரு தனியார் உணவகத்தில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் அவரின் தாய் இறந்ததையடுத்து கடந்த மாதம் 17-ம் தேதி துபாயிலிருந்து இந்தியா திரும்பினார். அவரின் தாய் இறந்தபின் 13-வது நாளில் அவர் சார்ந்திருக்கும் மத வழக்கத்தின்படி உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கடந்த மாதம் 20-…
-
- 0 replies
- 239 views
-
-
கொரோனா வைரஸ் தீவிரம் – முக்கிய நாட்டவர்களுக்கான விசா ரத்து: மத்திய அரசு அறிவிப்பு! கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவருவதையடுத்து, இத்தாலி, ஈரான், தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மார்ச் 3 ஆம் திகதிக்கு முன்பு வழங்கப்பட்டிருந்த அனைத்து விசாக்களும் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அந்த நாட்டில் இதுவரை 3000 பேர் உயிரிழந்துள்ளதுடன் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர இத்தாலி, தென் கொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறதுடன் உலகம் முழுவதும் 35 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்நிலையில் சீனாவி…
-
- 0 replies
- 239 views
-
-
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 118 வயது மூதாட்டி போபால், மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் 118 வயதுள்ள மூதாட்டி முதல் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். இதுதொடர்பாக மாவட்ட நீதிபதி தீபக் சிங் பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில், சாகர் மாவட்டத்தில் சதர்பூர் கிராமத்தில் வசிக்கும் 118 வயது பெண் துல்சபாய் இன்று தனது முதல் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டுள்ளார். இதையடுத்து நாட்டில் மிகவும் வயதுள்ள மூதாட்டி முதல்முறையாக தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து மூதாட்டி கூறுகையில், நான் கொ…
-
- 0 replies
- 239 views
-
-
வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கும் மத்திய அரசின் யோசனை நிராகரிப்பு: “போராட்டம் நீடிக்கும்” என்று விவசாய அமைப்புகள் அறிவிப்பு புதுடெல்லி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு பல சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நேற்றுமுன்தினம் 10-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. அதில், வேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், சுமுக தீர்வு காண ஒரு கூட்டுக்குழுவை அமைப்பதாகவும் ஒரு திட்டத்தை மத்திய அரசு முன்வைத்தது. மத்திய அரசின் திட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக, டெல்லி சிங்கு எல்லையில், விவசாய …
-
- 0 replies
- 239 views
-
-
சத்ரபதி சிவாஜி: ஔரங்கசீப்பின் சிறையில் இருந்து தப்பியவர், முகலாய பேரரசின் வீழ்ச்சிக்கு வித்திட்டது எப்படி? ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,DR. KAMAL GOKHALE படக்குறிப்பு, சத்ரபதி சிவாஜி ஒரு நபர் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்துடன் மோதுவது மட்டுமல்லாமல், அதன் கண்ணில் விரலை விட்டு ஆட்டுவதை கற்பனை செய்து பாருங்கள். அந்தப் பேரரசு, அந்தக் காலத்தில் அனேகமாக உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த பேரரசாக இருந்தது. …
-
- 0 replies
- 239 views
- 1 follower
-
-
குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி தேசியக்கொடி ஏற்றினார்.. January 26, 2019 இந்தியாவின் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியின் ராஜபாதையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடி ஏற்றி வைத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுள்ளார். இந்திய ராணுவத்தின் முப்படை அணிவகுப்பைத் தொடர்ந்து, நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு மாநிலங்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார வாகனங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் கண்கவர் வாகனங்களும் அணிவகுத்து வருகின்றன. குடியரசு தின விழாவை கண்டுகளிப்பதற்காக ராஜபாதையில் பல லட்ச…
-
- 0 replies
- 238 views
-
-
சோனியா காந்தியின் தாயார் காலமானார் By RAJEEBAN 01 SEP, 2022 | 12:23 PM புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ, வயது முதிர்வு காரணமாக இத்தாலியில் உள்ள தனது வீட்டில் காலமானார். காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மனோ இத்தாலியில் வாழ்ந்து வந்தார். 90 வயதான அவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தாயாரைப் பார்ப்பதற்காகச் சோனியா காந்தி கடந்த 23-ம் தேதி டெல்லியில் இருந்து இத்தாலி புறப்பட்டுச் சென்றார். அவருடன் மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோரும் சென்றனர். இந்நிலையில், சோனியா காந்தியின…
-
- 0 replies
- 238 views
- 1 follower
-
-
Image caption தாஹிர் ஹுசேன் (இடது) மற்றும் கொலை செய்யப்பட்ட அங்கித் சர்மா (வலது) டெல்லி மதக் கலவரத்தில் இந்திய உளவுத் துறையில் பணியாற்றும் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தாஹிர் ஹுசேன் என்பவர் மீது கொலை மற்றும் வன்முறையில் தீவைத்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தாஹிர் ஹுசேன் கிழக்கு டெல்லி மாநகராட்சி உறுப்பினராக உள்ளார். உளவுத் துறையில் பணியாற்றிய அங்கித் சர்மா என்பவர் கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ஜாஃப்ராபாத் எனும் இடத்தில் உள்ள சாக்கடை ஒன்றில் செவ்வாய் இரவு பிணமாக மீட்கப்பட்டார். அவர் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியபோது கும்பல் ஒன்றால…
-
- 0 replies
- 238 views
-
-
அதானி மின்சார ஒப்பந்தத்தை வங்கதேசம் மறுபரிசீலனை செய்ய முயல்வது ஏன்? முன்னி அக்தர் பிபிசி வங்கமொழி சேவை 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அதானி குழுமத்திடம் இருந்து மின்சாரம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு வங்கதேச அரசுக்கு அந்நாட்டு மின்சார மேம்பாட்டு வாரியம் கடிதம் எழுதியுள்ளது. இந்தக் கடிதத்தை அரசு பரிசீலித்துவருவதாக நம்பப்படுகிறது. அதானி குழும பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதிக்குள் வங்கதேசம் வந்து இந்தப் பிரச்னை குறித்து விவாதி…
-
- 0 replies
- 238 views
- 1 follower
-
-
டெல்லியில்... முகக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை! இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகின்ற நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க மத்திய அரசு வலியுறுத்தி வருகின்றது. அந்தவகையில் டெல்லி பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு முகக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி டெல்லியில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்தியாவில் நேற்று ஒரேநாளில் ஆயிரத்து 913 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 33 பேர் உயிரிழந்துள்…
-
- 0 replies
- 238 views
-
-
05 MAY, 2025 | 02:18 PM இந்தியாவின் ஆக்ராவில் உள்ள ஏரியல் டெலிவரி ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது (ஏடிஆர்டி) புவி கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிக்காக வானில் மிகவும் உயரத்தில் நீண்ட நேரம் பறந்து செல்லக்கூடிய ஆகாய கப்பலை செலுத்துவது தொடர்பான பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது. இந்த ஆகாய கப்பலானது கண்காணிப்பு கருவியை வானில் சுமார் 17 கி.மீ. தூரம் உயரம் வரை எடுத்துச் செல்லும். இந்த கண்காணிப்பு கருவியில் பொருத்தப்பட்ட சென்சார்கள் மூலம் பெறப்படும் தரவுகள் தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் பெறப்பட்டு கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிக்கு பயன்படுத்தப்படும். இந்த ஆகாய கப்பலை கடந்த சனிக்கிழமை மத்திய பிரதேசத்தில் உள்ள ஷியாபூரில் பறக்கவிட்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு ம…
-
- 0 replies
- 238 views
- 1 follower
-
-
அக்னிபத்: வேலூரில் போராட்டம் - "இளைஞர்களின் ராணுவ கனவைக் கலைக்கும் திட்டம் இது" பிரசன்னா பிபிசி தமிழுக்காக 16 ஜூன் 2022 இந்திய அரசு தற்போது அறிவித்துள்ள "அக்னி பத்" திட்டத்தை ரத்து செய்ய கோரி வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தேசிய கொடியுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய ராணுவத்திற்காக ஆட்களை சேர்க்க திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதில், சென்னை திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்ட…
-
- 1 reply
- 238 views
- 1 follower
-
-
உக்ரைனில் அமைதி ஏற்படுத்தும் பேச்சுக்கு உதவத் தயார் என பிரதமர் மோடி அறிவிப்பு உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கும் இந்தியா உதவி செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா வந்துள்ள ஜேர்மனி பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். உக்ரைன் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்ஜீய ரீதியில் தீர்வு காண வேண்டும் என ஆரம்பம் முதலே இந்தியா வலியுறுத்தி வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த சந்திப்பின்போது இந்தியா மற்றும் ஜேர்மனிக்கு இடையில் காற்றாலை, சூரிய ஒளி திட்டம் என பல ஒப்பந்தங்கள்…
-
- 0 replies
- 238 views
-
-
ஆப்கானில் இருந்து... இந்தியாவிற்கு, வந்தவர்களுக்கு கொரோனா! ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ள 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காபூலில் இருந்து 83 பேர் ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியாவிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவ்வாறு அழைத்துவரப்பட்டவர்கள் சாவ்லா என்ற இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர்களுக்கு கொரோனா பாரிசோதனை செய்யப்பட்டது. இதன்போதே 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன், குறித்த 10 பேரும் இந்தோ திபெத்திய பொலிஸ் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1235975
-
- 0 replies
- 237 views
-
-
சிங்கப்பூருக்கான பயணங்களை தவிர்க்குமாறு மத்திய அரசு வேண்டுகோள்! சிங்கப்பூரில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்தே மத்திய அரசு மேற்படி வலியுறுத்தியுள்ளது. சீனாவின் வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சீனாவைத் தவிர்த்து ஜப்பான், ஹாங்காங், பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், தைவான் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் கொரோனா ப…
-
- 0 replies
- 237 views
-