அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3269 topics in this forum
-
அயோத்தி வழக்கின் தீர்ப்புக்கு மிக முக்கிய காரணமாக தொல்லியல் சான்றுகள் அயோத்தி வழக்கில் இராமர் கோயிலுக்கு ஆதரவான தீர்ப்புக்கு தொல்லியல் ஆய்வுகள் மூலம் கிடைத்த சான்றுகளே முக்கிய காரணம் என இந்த வழக்கில் ஆஜராகி வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கே.பராசரன் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற அயோத்தி வழக்கில் இராமருக்காக ஆஜரான 93 வயதான மூத்த வழக்கறிஞர் கே.பராசரனுக்கு தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக்கழகம் சார்பில் சென்னை தியாகராய நகர் வாணி மகாலில் நேற்று (திங்கட்கிழமை) பாராட்டு விழா நடைபெற்றது. இதன்போது அவர் உரையாற்றுகையில், “அயோத்தி வழக்கில் கடவுள் இராமரின் சார்பில் என்னுடன் 10 வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். இதில் தமிழகத்தைச் சேர்ந்த சி.எஸ்.வைத்தியநாதன், யோகேஸ்வரன் ஆகியோ…
-
- 0 replies
- 263 views
-
-
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பாக்கிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் காஸ்மீரில் காணப்படும் மனித உரிமை நிலவரம் குறித்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ்குணவர்த்தனவிற்கு தெளிவுபடுத்தியுள்ளார். பாக்கிஸ்தானின் வெளிவிவகார அலுவலக பேச்சாளர் முகமட் பைசல் இதனை தெரிவித்துள்ளார். இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்முகாஸ்மீரில் காணப்படும் மோசமான நிலைமை மற்றும் மனித உரிமை நெருக்கடி குறித்து வெளிவிவகார அமைச்சர் சா மெஹ்மூட் குரேசி இலங்கை வெளிவிவகார அமைச்சரிற்கு எடுத்துரைத்தார் என பாக்கிஸ்தானின் வெளிவிவகார அலுவலக பேச்சாளர் முகமட் பைசல் குறிப்பிட்டுள்ளார். ஜம்முகாஸ்மீரில் 100 நாட்களாக காணப்படும் நிலைமை சர்வதேச சமூகத்தின் கரிசனைக்குரிய விடயமாக உள்ளது என பாக்கிஸ்தான் …
-
- 0 replies
- 188 views
-
-
குஜராத்தில் நித்தியானந்தாவின் ஆசிரமத்திற்கு பூட்டு குஜராத்தின் ஹிராபுர் பகுதியில் செயற்பட்டு வந்த சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் ஆசிரமம் மூடப்பட்டது. தனியார் பள்ளி வளாகத்தில் சட்டவிரோதமாக செயற்பட்டு வந்ததாக மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கையின் பேரில் இவ்வாறு ஆசிரமம் மூடப்பட்டது. ஹிராபுர் பகுதியில் செயற்பட்டு வந்த நித்தியானந்தா ஆசிரமம் மீது மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து முறைப்பாடுகள் வந்தன. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் நடத்திய விசாரணையில் தனியார் பள்ளி வளாகத்தில் சட்டவிரோதமாக நித்தியானந்தா ஆசிரமம் செயற்பட்டு வந்தமை தெரியவந்தது. பள்ளி வளாகத்தில் ஆசிரமம் செயற்பட அனுமதியுள்ளதாக நித்தியானந்தா ஆசிரம நிர்வாகம் அளித்த சான்றிதழும் போலி என தெரியவந்தத…
-
- 0 replies
- 291 views
-
-
டெல்லியில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டம் டெல்லியில் தீவிரவாதத் தாக்குதல் நடத்த ஜெய் ஷே முகமது இயக்கம் சதித்திட்டம் தீட்டியதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புல்வாமா தீவிரவாத தாக்குதல் வழக்கில் குற்றவாளிகளான சஜத் அகமது கான், தன்வீர் அகமது, பிலால் அகமது, முசாபர் அகமது ஆகிய நான்கு பேர் மீது தேசிய புலனாய்வு அதிகாரிகள் கடந்த செப்டெம்பர் மாதம் டெல்லி என்.ஐ.ஏ.சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். குறித்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதிலேயே சஜத் கான், கடந்த மார்ச் மாதம் டெல்லியில் கைது செய்யப்பட்டான். அப்போது நாடாளுமன்ற வளாகம், டெல…
-
- 0 replies
- 211 views
-
-
பிரியங்கா வீட்டில் மர்ம கார் புகுந்ததால் பரபரப்பு! பாதுகாப்பு குறைபாடு என காங். கண்டனம்! காரில் இருந்தவர்கள் சர்வ சாதாரணமாக பிரியங்காவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளப் போகிறோம் என்று கூறிவிட்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகளும், கட்சியின் உத்தரப்பிரதேச பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியின் வீடு டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ளது. இங்கு இன்று மர்ம கார் ஒன்று திடீரென புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை பாதுகாப்பு குறைபாடு என்று காங்கிரசார் கண்டித்து வருகின்றனர். பிரியங்கா காந்தியின் உயிருக்கு அச்சம் இருப்பதால் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடியை பாதுகாத்த SPG சிறப்பு அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. …
-
- 0 replies
- 437 views
-
-
ஹைதராபாத் பாலியல் தாக்குதல்: '100 ஊடகத்தினரும் வந்து ஒரே கேள்வியை கேட்க வேண்டுமா?' ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்பட்ட பெண்ணின் தங்கை, ஒரே கேள்வியை 100 ஊடகங்கள் தங்களிடம் கேட்டு, ஏற்கனவே மனவருத்தத்தில் உள்ள தங்களை மேலும் காயப்…
-
- 2 replies
- 2k views
- 1 follower
-
-
ராகுல் பஜாஜ் - "இந்தியாவில் அசாதாரணமான சூழல் நிலவுகிறது" - அமித்ஷா முகத்துக்கு நேரே ஆட்சியை விமர்சித்த ராகுல் பஜாஜ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES நாட்டில் அச்சம் தரும் சூழல் நிலவுவதாக இந்தியாவின் மூத்த தொழிலதிபர் ராகுல் பஜாஜ் நிகழ்வு ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முகத்துக…
-
- 0 replies
- 330 views
- 1 follower
-
-
இந்தியாவின் சாஞ்சி புத்த மடத்திலுள்ள பெயர்ப்பலகைகளில் சிங்களமும் இடம்பெற்றுள்ளது. இதுவரை இந்தியாவின் புத்த வழிபாட்டிடங்கள், மடங்களி் ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமே பெயர்ப்பலகைகள் இருந்தன. தற்போது சாஞ்சி மடத்தில் முதன்முறையாக அனைத்து பெயர்ப்பலகைகளிலும் சிங்களம் இடம்பெற்றுள்ளது. அண்மையில் சாஞ்சி மடத்தை பார்வையிட்ட இந்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹ்லாத் சிங் படேல், இந்தியாவின் தொல்பொருள் அதிகாரிகளுக்கு வழங்கிய ஆலோசனையின்படி, புதிய பெயர்ப்பலகைகள் இடப்பட்டுள்ளன. சிங்கள பெயர்ச்சொற்களின் திறப்பு வார இறுதியில் அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் முன்னிலையில் நடைபெற்றது. இந்தியாவிலுள்ள அனைத்து புத்த வழிபாட்டிடங்களின் அறிவிப்பு பலகைகளிலும் சிங்கள மொழி …
-
- 0 replies
- 652 views
-
-
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய - இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு 20 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைANI இந்தியாவுக்கு அரசு முறைப் பயணமாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகிய இருவரும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை டெல்லியில் சந்தித்தனர். சந்தித்துள்ளா…
-
- 0 replies
- 323 views
- 1 follower
-
-
7.4 கிலோ எடை கொண்ட சிறுநீரகத்தினை வெற்றிகரமாக அகற்றி மருத்துவர்கள் சாதனை! டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கு 7.4 கிலோ எடையில் இருந்த சிறுநீரகம் அகற்றப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் இடது சிறுநீரகம் வழக்கத்தை விட பெரிதாக இருந்தது பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதை அகற்ற மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டதில் 7.4 கிலோ எடை கொண்ட சிறுநீரகம் அகற்றப்பட்டது. நாட்டிலேயே முதல்முறையாகவும் உலகிலேயே மூன்றாவது அதிக எடை கொண்ட சிறுநீரகம் என்ற சிறப்பை இது பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/7-4-கிலோ-எடையில்-சிறுநீரகம்/
-
- 0 replies
- 315 views
-
-
மோடியின் ‘தேசிய ஜனநாயக கூட்டணி மொடலுக்கு’ அச்சுறுத்தலா? எம். காசிநாதன் / 2019 நவம்பர் 26 , பி.ப. 04:53 இந்தியாவில் 288 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மஹாராஷ்டிரா மாநிலத்தில், புதிய கூட்டணி ஆட்சி உருவாக இருக்கிறது. “புதிய கூட்டணி மட்டுமல்ல” வித்தியாசமானதொரு கூட்டணியாக இது உருவெடுக்கும் என்று தெரிகிறது. “அரசியலில் நிரந்தர பகைவரும் இல்லை. நிரந்தர நண்பர்களும் இல்லை” என்ற இலக்கணத்தை, “நிரந்தரப் பகைவர்களாக” இருந்த கட்சிகள் தங்களுக்குள் மாற்றிக்கொள்ள முன்வந்திருப்பது, இந்திய அரசியலில் புதிய பரிணாம வளர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது. மஹாராஷ்டிராவைப் பொறுத்தமட்டில் “தீவிர இந்துத்வா” “தீவிர மராத்தா” முகத்துடன், சிவசேனா கட்சியை மறைந்த பால்தாக்ரே வளர்த்தார். “இந்துத…
-
- 0 replies
- 255 views
-
-
முல்லைப் பெரியாறு அணை தமிழக அரசின் கட்டுப்பாட்டிலே இருக்கும் – மத்திய நீர்வளத் துறை அமைச்சர் அணைகள் பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டாலும் கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணை தமிழக அரசின் கட்டுப்பாட்டிலே இருக்கும் என மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழக அரசுக்கு உறுதி அளித்துள்ளார். அணைகள் பாதுகாப்புக்கென தனி அமைப்பு உருவாக்குவதற்கான சட்டமூலத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த சட்டமூலம் தமிழக நலனுக்கு எதிராக இருக்கும் என தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பாக முல்லைப் பெரியாறு உட்பட ஐந்து அணைகள் ஏனைய மாநிலங்களில் உள்ளன. ஆனால் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. புதிய சட்டமூலத்தால் தமிழகத்தின் உரிமை பறிபோ…
-
- 0 replies
- 378 views
-
-
மேற்குவங்கத்தில் பாஜக வேட்பாளரை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் சரமாரியாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்கத்தில் கரீம்பூர், காரக்பூர் உள்ளிட்ட 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் கரீம்பூர் தொகுதி பாஜக வேட்பாளரான ஜாய் பிரகாஷ் மஜூம்தார், நாடியா மாவட்டத்தில் காரில் சென்றார். காரை திரிணமூல் காங்கிரஸார் வழிமறித்ததால், கீழே இறங்கினார். அப்போது எதிர்பாராத நேரத்தில் அவரை, செடி கொடிகளுக்குள் பிடித்து தள்ளிய திரிணமூல் காங்கிரஸார், காலால் எட்டி உதைத்தனர். இதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். இதைக் கண்டு, பாதுகாப்புப் படையினர் திரிணமூல் காங்கிரஸாரை விரட்டியடித்தனர். பாஜக வேட்பாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அ…
-
- 0 replies
- 285 views
-
-
Jharkhand: Budhia’s eyes glowed with joy as she held her catch of the day, a big fat rat, close to herself. Dressed in a pink shimmery gown that she was gifted for performing at a wedding, the seven-year-old didn’t leave her catch for a moment while she continued to blow smoke and fire into the freshly dug ground. She would not be sleeping hungry today. For Musahrs, besides the lack of shelter and respect, hunger has always been a constant companion. Budhia’s fragile frame and undernourished limbs could make anyone believe that she would not be more than three years old. Her best friend has been the long standing Mahua tree next to her home. If only the Mah…
-
- 0 replies
- 751 views
-
-
அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதை எந்த சக்தியும் தடுக்க முடியாது – ராஜ்நாத் சிங் அயோத்தியில் பிரமாண்டமான இராமர் கோயில் கட்டுவதைத் தடுக்க பூமியில் எந்த சக்தியும் இல்லை என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரம் நடைபெற்று வருகின்ற நிலையில் பிரசார நிகழ்வொன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றிம்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “பிரான்சில் இருந்து வாங்கப்பட்டுள்ள ரஃபேல் போர் விமானங்கள் எல்லையில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும். அயோத்தியில் கோயில் கட்டுவதற்கான பாதையை உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது. அயோத்தியில் பிரமாண்ட இராமர் கோயில் கட…
-
- 0 replies
- 575 views
-
-
மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்.! - பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டிய மோடி.! பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் உரையாடும் மன்கிபாத் நிகழ்ச்சி அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பானது. இன்று காலை 11 மணியளவில் 59-வது மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது இந்தியாவின் கலாசாரம் மொழி குறித்து பேசியவர் `முப்பது கோடி முகமுடை யாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள் இவள் செப்பு மொழிபதி னெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்’ என்ற மகாகவி பாரதியாரின் வரிகளை மோடி மேற்கோள் காட்டி பேசினார். இந்தியாவில் 30 கோடி முகங்கள் இருந்தாலும் அதன் உருவம் ஒன்றே. 18-க்கும் ம…
-
- 0 replies
- 1.5k views
-
-
இந்தியா முழுவதும் நடந்த சாலை விபத்துகளில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 7.35 லட்சம் பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் வாகனங்களின் பயன்பாடு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக அனைத்து சாலைகளும் நெரிசல் மிகுந்து காணப்படுகின்றன. ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பது, மதுபோதையில் வாகனங்களை இயக்குவது, மொபைல் போன்களில் பேசிக்கொண்டு செல்கின்றனர். இதுபோன்ற செயல்களால் விபத்துகள் நடக்கிறது. இதைத்தடுக்க ஹெல்மெட் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. வாகனங்களை விற்பனை ெசய்யும் நிறுவனங்களிடத்தில் ெஹல்மெட்டும் சேர்த்து விநியோகிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களிடத்தில் சாலைகளில் பயணிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய சால…
-
- 0 replies
- 298 views
-
-
மகாராஷ்டிரா அரசியலில் எதிர்பாராத திருப்பமாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். மகாராஷ்டிராவில் கடந்த 10 நாட்களாக குடியரசுத்தலைவர் ஆட்சி அமலில் இருந்த நிலையில், பாஜகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்துள்ளன. இந்நிலையில், பதவியேற்ற முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 தொகுதிகளிலும், சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. காங்கிர…
-
- 1 reply
- 449 views
-
-
வளைகுடா நாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 34 ஆயிரம் இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வெளியுறவுத்துறை அதிர்ச்சி புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. பதிவு: நவம்பர் 22, 2019 16:53 PM புதுடெல்லி குவைத், சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 6 நாடுகளில் நாள்தோறும் சராசரியாக 15 இந்தியர்கள் உயிரிழப்பதாகவும் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளீதரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள அவர், வளைகுடா நாடுகளில் 2014ஆம் ஆண்டு முதல் 33,988 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாகவும், இந்த ஆண்டில் மட்டும் 4 ஆயிரத்து 823 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 2014-ஆம் ஆண்டில் 5388 பேரும்…
-
- 0 replies
- 315 views
-
-
இந்தியாவில் இள வயதில் நீதிபதி பொறுப்பை ஏற்கும் ராஜஸ்தான் இளைஞன் இந்தியாவில் மிக இள வயதில் நீதிபதி பொறுப்பை ஏற்பவர் எனும் பெருமையை ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெறவுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள மானசரோவர் பகுதியைச் சேர்ந்த மயங்க் பிரதாப் சிங் (21 வயது), தனது ஐந்து ஆண்டு சட்டப்படிப்பை ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பூர்த்தி செய்தார். அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு நடந்த நீதிபதிகளுக்கான தகுதி தேர்வில் கலந்துகொண்ட மயங்க் பிரதாப், அதிலும் தேர்ச்சிபெற்றார். இந்நிலையில் விரைவில் பதவி ஏற்கவுள்ளார். இதனூடாக அவர், இந்தியாவிலேயே மிக இள வயதில் நீதிபதி ஆனவர் எனும் சிறப்பையும் பெறவுள்ளார். நீதிபதி ஆவதற்கு குறைந்தபட்ச வரம்பாக இருந்த 23 வயதை …
-
- 0 replies
- 307 views
-
-
பாபர் மசூதி தீர்ப்பு: வரலாற்றை கேவலப்படுத்தல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 நவம்பர் 21 வரலாற்றை விளங்குவதன் அவசியம், தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. வரலாற்றைப் பதிவதும், வரலாற்றை ஆவணமாக்குவதும் எவ்வளவு முக்கியமானதோ, அந்தளவுக்கு முக்கியமானது, வரலாற்றை விளங்கிக் கொள்வது. வரலாற்றைத் தவறாக விளங்குவதும் விளக்குவதும் நிகழக் கூடாத விடயங்கள். இதன் பயங்கரத்தை, அண்மைய நிகழ்வொன்று காட்டி நிற்கின்றது. அண்மையில், பாபர் மசூதி இருந்த இடத்தின் மீதான, உரிமை கோரும் வழக்கின் தீர்ப்பை, இந்திய உச்சநீதிமன்றம் வழங்கியிருந்தது. இத்தீர்ப்பு, பல்வேறு வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்திருக்கிறது. இராமர் பிறந்த இடத்தில், மசூதி அமைக்கப்பட்டுள்ளது என்ற பிரசாரமும…
-
- 0 replies
- 364 views
-
-
இந்தியாவிற்கு ஆயுதங்களை வழங்க அமெரிக்க ஒப்புதல்! இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டொலர் மதிப்புள்ள 13 கடற்படை துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அமெரிக்க அரசாங்கம் இந்தியாவிற்கு 13 எம்.கே.45 ரக கடற்படை துப்பாக்கிகள் மற்றும் இராணுவ உபகரணங்களை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்கள், உதிரி பாகங்கள், அவற்றை கையாள்வதற்கான பயிற்சி, தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் போக்குவரத்து செலவ…
-
- 1 reply
- 440 views
-
-
இந்தியாவிற்கு 7 ஆயிரம்கோடி ரூபாய் மதிப்பிலான கடற்படை பீரங்கிகள் மற்றும் போர்த்தளவாடங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்திய கடற்படையின் வலிமையை அதிகரிக்கும் வண்ணம் போர்க்கப்பல்களில் பயன்படும் விமான எதிர்ப்பு பீரங்கிகளை அமெரிக்காவிடம் இருந்து வாங்க சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன்படி 5 அங்குல விட்டம் கொண்ட 13 எம்கே 45 ரக பீரங்கிகளை இந்தியாவுக்கு விற்பனை செய்ய டிரம்ப் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தவகை ஆயுதங்கள் தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் திறனை இந்தியாவுக்கு வழங்கும் என்று அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு மையம் கூறியுள்ளது. இதன் மூலம் இந்தியாவும், அமெரிக்காவும் பரஸ்பரம் நட்பை அதிகப்படு…
-
- 0 replies
- 309 views
-
-
‘‘சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினரை அடையாளம் காண, நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும்’’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். கடந்த 1971ம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போர் மற்றும் வங்கதேச விடுதலைப் போரைத் தொடர்ந்து, வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து ஏராளமானோர் சட்டவிரோதமாக அசாம் மாநிலத்தில் குடியேறினர். இதனால், கடந்த 1971 மார்ச் 25ம் தேதிக்குப் பிறகு சட்டவிரோதமாக குடியேறியவர்களை கணக்கெடுக்க தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) புதுப்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்தாண்டு வெளியான இதன் வரைவு அறிக்கையில் 40 லட்சம் பேரின் பெயர் விடுபட்டதால் நாடு முழுவதும் கடும் எதிர்ப்ப…
-
- 0 replies
- 264 views
-
-
கண் பார்வையில்லைன்னா.. எதுக்காக போராட்டத்துக்கு வந்தே? ஜேஎன்யூ மாணவன் மீது போலீஸ் தடியடி பார்வையற்றவர்னா ஏன் போராட்டத்துக்கு வந்தே என ஜேஎன்யூ போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவனிடம் கேட்டு விடாமல் லத்தியால் தாக்கிய போலீஸாருக்கு கண்டனங்கள் குவிகின்றன. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டணங்கள் 300 சதவீதம் உயர்த்தப்பட்டன. மேலும் போராட்டங்களை முன்னெடுக்கும் மாணவ அமைப்புகளின் தலைவர்களுக்கான அபராதத் தொகையும் மிக கடுமையாக அதிகரிக்கப்பட்டது. இவற்றை திரும்ப பெற கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சப்தர்ஜங் சமாதி பகுதியில் கூடியிருந்த மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். அப்போது நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல ம…
-
- 1 reply
- 455 views
-