யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.
58 topics in this forum
-
பசுவூர்க்கோபியின் படம்சொல்லும் வரிகள்-03 ********************************** கூட்டுக்குடும்ப வாழ்வை விட்டு குடத்து நீரை இடுப்பில் அணைத்து பிரிவின் துயரை மனதில் சுமந்து ஒற்றையடி பாதையிலே ஓரமாய் வந்தேன் அப்போது.. கும்பலாய் கிடந்த நெருஞ்சி முற்கள் குத்திச் சொன்னது. இயற்கையின் விதியை தனியே வாழ ஆசைப்படுகிறோம் தாயே எடுத்து தூர எறியுங்கள். உதிரம் வடிந்த காலின் வலியால் ஒளிமயமானது எங்களின் வாழ்வும். -பசுவூர்க்கோபி- 08.04.2021
-
-
- 3 replies
- 1.5k views
-
-
நான் ஐரோப்பிய நாட்டுக்கு வந்து முதல்,முதல் கொட்டிப்பார்த்த.. வெண்பனித்தூறல் நான் பிறந்த மண்ணின்(ஈழம்) வாசனையே என்னுக்குள் வந்து எழுத வைத்தது. வெண்பனித்தூறல்..! ***************** மார்கழி தொடங்கிவிட்டால் வானம் மந்திரித்துக் கொட்டுமிந்த-வெண்மைநிற தேங்காய்த் துருவலோ? தேசமெல்லாம் பூத்திருக்கும் மல்லிகையோ!முல்லையோ! வெள்ளை நிற றோஜாவோ? வெண்தாமரை இதழ்தானோ-ஏன் கடல் களைத்து கரையொதுங்கும் நுரையலையோ.. கண்சிமிட்டிக் கொட்டுகின்ற விண்மீனோ.. வெட்டுக்களி எழுப்பும் வெண்புளுதிப் படலமோ வெற்றிலைக்கு போட்டுமெல்லும் வெண்நிறத்துச் சுண்ணாம்போ பாலாறு ஓடி தயிர் படிந்து உறைந்ததுவோ ப…
-
-
- 9 replies
- 1.5k views
-
-
இரவில் டோர்ச் லைட் டின் வெளிச்சம் கூட தயங்கி தயங்கி நகரும் கடும் இருள் நிறைந்த வளவு. இலுப்பை மரங்களின் உச்சியில் தங்கி தூங்கும் வெளவால்களின் எச்சங்களால் நிறைந்திருக்கும் சிறு காடு போன்றது இந்த வளவு. பகலில் ஆடுகளுக்கு குழை வெட்டுவதற்காக மட்டும் சிலர் வந்து போனாலும், பலர் உள் நுழையவே அஞ்சும் தோற்றத்துடன் உள்ள இந்த வளவின் மண்ஂணுக்குள் புதைக்கப்பட்ட பெண் போராளிகளின் ஆவிகள் இரா காலங்களில் நாவல்மரங்களில் மீதேறி இருந்து தமக்குள் அரட்டுவதை கேட்ககூடியதாக இருப்பதாகவும் திகில் நிறைந்ததாகவும் சப்தங்களால் நிறைந்து இருப்பதகாவும் அயல் சனங்களால் சொல்லப்படும் பெரும் வளவு இது. அதன் மூலையில் என் சிறு குடில் . கொழும்புத்துறை வீதியில், கணக்கர் சந்திக்கு அருகில் இருக்கும் இந்த வளவு…
-
-
- 4 replies
- 1.5k views
- 1 follower
-
-
சிறு வயதில் கனக்க கதைகள் படித்திருப்போம் கேட்டிருப்போம் ஏன் கனக்க அனுபவங்களை கதைகளாக நாமே கண்டிருப்போம் அவை சொல்லப்படும் விதமும் எம்மை வந்து சேர்ந்த விதமும் மாறுபடுவது போல கதையை அல்லது அனுபவத்தை கிரகித்தலும் மாறுபடலாம் மாறுபட்டு விடக்கூடும் ஆனால் கதையின் கருவும் அனுபவத்தின் அனுகூலமும் மாறுவதில்லை அதேநேரம் அதை நாம் கடந்து செல்வதும் கூட அல்லது கண்டும் காணதுபோவதும் போவது போல பாசாங்கு செய்வதும் கூட நடக்கும் நடந்திருக்கலாம்? சின்ன சின்னக்கதைக்குள் திருக்குறளைப்போல பெரும் புதையலும் கருவும் பாடமும் புதைந்து கிடக்கின்றன அவரவரது அனுபவங்களுக்கேற்ப ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறுபடுமே அன்றைய சமூக கா…
-
-
- 9 replies
- 1.3k views
-
-
மொழி ஆதிக்கம்..! ************ சிங்கள நகரமெல்லாம் சீன எழுத்துக்கு முதலிடமா.. சிங்களம் ஆங்கிலம் அதற்கு கீழே இருப்பது சிரிப்பைத் தருகிறது. ஊர் பலகையில்-தமிழ் மொழி இல்லையென்று உனக்கு மகிழ்வு இருந்தால் விரைவில்.. உன் மொழியும் அழிந்து உலக மொழியொன்று வியாபிக்கும்.. இது உண்மை. அப்போதும் உணருவாயோ தெரியவில்லை ஏனென்றால் இப்போது தேசத்தின் கீதம் கூட குயிலாக இருந்தாலும் மயிலாக இருந்தாலும் சிங்கம் போலத் தான் கர்ச்சிக்க வேண்டுமாமே. உன்நாட்டில்.. அன்புடன் -பசுவூர்க்கோபி-
-
-
- 7 replies
- 1.3k views
-
-
வண பிதா வுக்கு கண்ணீரால் எழுதுகின்றேன். ********************* வண பிதாவே.. நீங்கள் பிறந்ததாலே நெடுந்தீவு தாய்க்கு மகிழ்ச்சி நீங்கள் பிறந்த மண்ணில் நாங்களும் பிறந்தோம் என்பது எங்களுக்கு மகிழ்ச்சி நீங்கள் இறைபணித்தூதராய் துறவறம் பூண்டு செய்த சேவைகள் இலங்கை மக்களுக்கே மகிழ்ச்சி தமிழ் உணர்வாளராய் தமிழை தலைநிமிர வைத்தது-உலக தமிழினத்துக்கே மகிழ்ச்சி. மனித நேயம் கலந்து.. இத்தனை மகிழ்சிகள் எமக்குத்தந்த பிதாவே இன்று(1.04.21) எமைவிட்டு பிரிந்த செய்தி அறிந்து அகிலமே கண்ணீரால் கரையுதையா. இறைவனோடு இறைவனாய் என்றும் எம்மனதில் நிலைத்திருப்பீர்கள். போய் வாருங்கள் ஆண…
-
-
- 3 replies
- 1.3k views
-
-
-
-
- 2 replies
- 1.2k views
-
-
கைக்குழுந்தைகளாக எம் பிள்ளைகள் எம் கையில் தவளத்தொடங்குவதாலோ என்னவோ அவர்களை என்றும் அவ்வாறே நாம் கணக்கிடுகின்றோமா?? அவர்களுக்கான படிப்பு சார்ந்து அல்லது அவர்களின் வயது சார்ந்து அல்லது எமது கல்வி அல்லது கேட்டறிந்த அனுபவங்களை அவர்கள் மேல் செலுத்துவது சார்ந்து அதை நாமும் அவர்களும் எவ்வாறு கிரகிக்கக்கூடும் என்று நாம் எந்தளவுக்கு கரிசனை கொள்கின்றோம் அதிலும் உடலின் சில அந்தரங்க உறுப்புக்கள் அல்லது உடலுறவு சார்ந்து எமக்கும் அவர்களுக்குமிடையிலான உணர்தல் எந்தளவில்?? அநேகமான பெற்றோர் பிள்ளைகளின் முன் முத்தங்கள் சில்மிசங்களை கூட தவிர்த்தல் என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதியாக உள்ளநிலையில் அதற்கு மேல…
-
-
- 4 replies
- 1.1k views
-