தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
PowerPoint 2007 இல் YouTube வீடியோக்களை இணைப்பது எப்படி ? இவ்வளவு காலமும் PowerPoint இல் படங்களை இணைத்து வந்த நாம் இனி மேல் வீடியோக்களையும் இணைத்துக் கொள்ள முடியும். இந்த வசதியை authorSTREAM Desktop என்ற ஒரு சிறிய Plugin தருகிறது. இந்த Plugin மூலம் YouTube தளத்தில் இருந்து வீடியோக்களையும் Bing தேடுபொறியில் இருந்து Image களையும் நேரடியாக PowerPoint Slide இல் இணைக்க முடியும். இனி எவ்வாறு powerPoint இல் வீடியோக்களை இணைக்கலாம் என்று பார்ப்போம். முதலில் கீழ் உள்ள சுட்டியில் இருந்து authorSTREAM Desktop என்ற Plugin ஐத் தரவிறக்கிக் Install பண்ணிக் கொள்ளுங்கள் பின் PowerPoint இல் உங்களுக்குத் தேயையான Slide ஐத் தயாரித்துவிட்டு வீடியோ தேயைப்படும் இ…
-
- 0 replies
- 1k views
-
-
You Tube இன் அபார வளர்ச்சி! திங்கட்கிழமை, 31 ஜனவரி 2011 11:10 சென்ற இரண்டு ஆண்டுகளில், யு-ட்யூப் வீடியோ தளம் மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ளது. ஸ்மார்ட் போன் பயன்பாடு மற்றும் யு-ட்யூப் அப்ளிகேஷன்கள் பதிந்து விற்பனை செய்யப்படும் மொபைல் போன்கள் இதற்குக் காரணம் என்று கருதுகின்றனர். யு-ட்யூப் மொபைல் தளம் இப்போது மக்களிடையே அதிக பிரபலம் அடைந்து வருகிறது. நாளொன்றுக்கு 20 கோடி வீடியோ காட்சி பைல்கள் அப்லோட் செய்யப்படுவதாகக் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இது 2010 ஜனவரியில் இருந்ததைக் காட்டிலும், மூன்று மடங்கு அதிகமாகும். மேலும், யு-ட்யூப் தன் லைப்ரேரியில் மியூசிக் வீடியோ பைல்களைத் தொடர்ந்து இணைத்து வருகிறது. இது ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் மட்டுமே இயங்கும் பைல…
-
- 0 replies
- 998 views
-
-
சீனாவுக்கு நகரும் இந்திய ஐ.டி. நிறுவனங்கள்! சீனாவில் தகவல் தொழில்நுட்பம் எனப்படும் ஐ.டி. சேவை நிறுவனங்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அந்த சந்தையில் தங்களுக்கான இடத்தை பெரிய அளவில் வளைத்துப்போட, டிசிஎஸ் (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) , விப்ரோ, இன்ஃபோசிஸ் போன்ற இந்தியாவின் மாபெரும் ஐ.டி. நிறுவனங்கள் படு தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சீனா அச்சுறுத்தலாக விளங்கிய நிலையில், அதன் பின்னர் தற்போதுதான் முதல்முறையாக, சீனாவில் இந்திய நிறுவனங்கள் கால் பதித்துள்ளன. சீனாவின் செங்டு மற்றும் தலியான் ஆகிய நகரங்களில் டிசிஎஸ், விப்ரோ மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற இந்திய ஐ.டி. நிறுவனங்கள் தங்களது 10 வி…
-
- 5 replies
- 1.4k views
-
-
உங்களிடம் ஒரு "ஐடியா" உள்ளதா? அதற்கு பணம் தேவையா? அதற்கு உதவிகள் தேவையா? இப்படியானவர்களுக்கு அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் பல உதவுவது வழமை. அப்படியான ஒரு இணையத்தளம் ஆயிரம் டாலர்கள் வரை மாதம் ஒன்றுக்கு கொடுத்து கை கொடுக்கின்றது. http://awesomefoundation.org/ அமெரிக்கா, கனடாவில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
-
- 0 replies
- 211 views
-
-
ஷெல் என்பவர் முப்பத்தேழு வயதுப் பெண்மணி. ஒரு பெரிய அமெரிக்கக் கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு பெரிய தப்பு செய்துவிட்டார். அவசரமாக முடிவு எடுத்து, ஆலோசிக்காமல் செயல்பட்டு, அகலக் கால் வைத்துவிட்டார். அவரால் கம்பெனிக்கு பல லட்சம் டாலர் நஷ்டம். தன் மடத்தனம் புரிந்தவுடன் தயங்கிக்கொண்டே முதலாளியிடம் போய் விஷயத்தைத் தெவித்தார். கேள்வி: இந்த நிலையில் பாஸ் என்ன செய்வார்? வேறொரு கம்பெனியாக இருந்திருந்தால் உடனே ஷெலுக்கு சீட்டுக் கிழிவதுடன், அவருடைய சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசர் வரை அத்தனை பேருக்கும் அண்டர்வேருடன் நிறுத்தி வைத்து பரேடு நடந்திருக்கும். ஆனால் ஷெலின் பாஸ் புன்னகையுடன், ""அப்படியா, தாங்க்ஸ்!'' என்றார். ""…
-
- 28 replies
- 6.6k views
-
-
www.yebol.com கூகுலை முட்டாள்களின் தேடியந்திரம் என்றோ, சோம்பேறிகளின் தேடியந்திரம் என்றோ சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா? இப்படி சொல்வதால் கூகுலை குறைத்து மதிப்பிடுவதாகவோ, கூகுலை பயன்படுத்துபவர்களை கேலி செய்வதாகவோ பொருள் இல்லை. கூகுலை விட மேம்பட்ட தேடியந்திரங்களின் மகிமையை எடுத்துச் சொல்ல, இந்த வர்ணனை தேவைப்படுகிறது. அதாவது, கூகுலில் தேடும் போது இணைய வலரிகள் தேடுவதை தவிர வேறு எதையும் செய்ய வேண்டியிருப்பதில்லை. குறிச்சொல்லை அடித்தவுடன் கூகுல் நொடிக்கும் குறைவான நேரத்தில் முடிவுகளை பட்டியலிட்டு தந்து விடுகிறது. அநேகமாக முதல் முடிவு (அ) முதல் பக்கத்தில் உள்ள முடிவுகளில் ஒன்று இணைய வலரிகள் தேடியதாக இருக்கும். மற்றபடி கூகுலில் தேட கஷ்டப்பட வேண்டியதில்லை. முடிவுக…
-
- 0 replies
- 905 views
-
-
A.R.றஹ்மானின் நான் வருவேன் பாடல்.ஒலி வடிவம்
-
- 2 replies
- 208 views
-
-
உலகின் முன்னனி நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிளின் முதன்மை இயக்குனர் ஆன ஸ்டீவ் ஜாப் மீண்டும் மருத்துவ விடுமுறையில் செல்ல உள்ளார். முன்பு தை 2009இல் மருத்துவ விடுமுறையில் சென்றிருந்தார் இவருக்கு சதையியில் புற்றுநோய் (pancreatic cancer) முன்பு இருந்தது. அது மீண்டு பரவி இருக்கலாம் என நம்பப்படுகின்றது. பலரும் இவர் இல்லாமல் இந்த நிறுவனம் ஒருபோதுமே அவர் உள்ளது போல இருக்காது என்கிறார்கள். Apple Says Jobs Will Take a New Medical Leave Steven P. Jobs, the co-founder and chief executive of Apple, is taking a medical leave of absence, a year and a half after his return from a liver transplant, the company said on Monday. Mr. Jobs announced his leave in a lett…
-
- 3 replies
- 1.4k views
-
-
ஐபோன்.. ஐபொட்.. ஐபாட் போன்றவற்றிற்கு தேவையான அப்ஸ் கீழுள்ள இணையத்தில் நிறைந்து இருக்கின்றன. நீங்கள் உங்கள் அப்பிள் உபகரணத்தை ஜெயில் பிரேக் செய்தால் மட்டும் இந்த முழு அப்ஸையும் காசின்றி இலவசமாக பயன்படுத்த முடியும். இவற்றை ஐரியுனில் பெற வேண்டின் பெருந்தொகையை நீங்கள் செலவிட்டே அனுபவிக்க முடியும். யாழில் பிறிதொரு தலைப்பில் ( http://www.yarl.com/forum3/index.php?showtopic=76271) ஜெயில் பிரேக் பற்றி எழுதப்பட்டுள்ளது. வாசிக்குக. http://apptrackr.org/
-
- 3 replies
- 1.5k views
-
-
உலக மின்வலை தளத்திற்கு வயது 20 உலக மின்வலை தளம் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று கிடத்தட்ட ஆண்டுகள் 20 ! World Wide Web turns 20 பௌதீகவியலாளர் Tim Berners-Lee இருபது வருடத்திற்கு முன்னர் முதலாவது உலக மின்வலை தளம் ஏற்றப்பட்டது. ஒரு புதிய புரட்சி உருவானது. இன்று 225 மில்லியன் உயிரோட்டம் உள்ள தளங்கள் உள்ளதாக கருதப்படுகின்றது. Dec. 25, 1990, அன்று மக்கள் தமது தகவல்களை பரிமாறி ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கோடு இது ஆரம்பிக்கப்பட்டது. இல்லை இதன் பிறந்தநாள் Mar. 13, 1989 என்றும் சொல்லப்படுகின்றது. ஆனால் அந்த திகதியில் தான் பௌதீகவியலாளர் Tim Berners-Lee, தனது எண்ணத்தை எழுத்தில் சமர்பித்த நாள். ( http://www.scientificamerican.com/report.cfm?id=web-20-annive…
-
- 0 replies
- 932 views
-
-
வலைப்பூவில் பாட்டு போடுவது எப்படி....? மக்களே அல்லாருக்கும் வணக்கோம்! சும்மா கருத்து, கவிதை எழுதிக்கிட்டு இருந்த நம்மள தொழில்நுட்ப பதிவும் (அட சுட்டு போட்டது தான்யா) எழுதுறதுக்கு பதிவுலகம் வாய்ப்பு குடுக்குதுப்பா. என்னோட வலைத்தளத்தை படிக்கும்போது சில பேரு அதுல வர்ற பாட்டுக்களை கேட்டுருப்பீக. சில பேரு இதுவரை கேட்டதில்லையினா அதுக்கு ரெண்டு காரணம் இருக்கும்யா. ஒன்னு உங்க கணிப்பொறி-ல சத்தம் வர்ற வாய்க்கு சீல் போட்டிருப்பீக(ஏல mute-த்தான் அப்படி சொன்னேன்ல). இல்லையினா நம்ம போற வேகத்துக்கு நம்ம இணைய வேகம் இருந்திருக்காது... இந்த பதிவ(தகவல), விரும்பிக்கேட்ட மதிப்பிற்குரிய முனைவர் அறிஞர் பழனியப்பன் கந்தசுவாமி அவர்களுக்கு, அன்போட அளிக்கிறேன். அவரு வயசானவர…
-
- 0 replies
- 1.1k views
-
-
இணையதள முன்னணி நிறுவனங்களில் ஒன்றான யாஹூ அதன் 650 ஊழியர்களை நீக்கத் திட்டமிட்டுள்ளது. இது யாஹூவின் விற்பனைப் பொருள்கள் பிரிவின் ஒட்டுமொத்த ஊழியர்களில் 5 சதவீதமாகும். இதுகுறித்து யாஹு நிறுவன வட்டாரங்களை மேற்கோள்காட்டி நியுயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. யாஹூவின் தலைமை நிர்வாகி கரோல் பார்ட்ஸால் 8 மாதங்களுக்கு முன்பு அமர்த்தப்பட்டிருந்த மைக்ரோசாப்ட் முன்னாள் அதிகாரி பிளேர் இர்விங் தலைமையிலான குழுவை நீக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. எனினும் இதுகுறித்து யாஹூ செய்தித்தொடர்பாளர் கிம் ரூபே கருத்து கூற மறுத்துவிட்டார். யாஹூவின் ஆன்லைன் விளம்பர வர்த்தகம் வழக்கத்தைவிட குறைவாக இருப்பதால் செலவைக் குறைப்பதற்காக யாஹூவின் தலைமை நிர்வாகி கரோல் பார்ட்ஸ் இந்நடவடிக்கை…
-
- 1 reply
- 1.1k views
-
-
உலகின் மிகச்சிறிய இணையத்தளம் http://www.guimp.com/
-
- 0 replies
- 1.1k views
-
-
'ரொக்மெல்ட்(rockmelt)' எனும் புதிய சமூக வலைப்பின்னல் தேடுபொறி அறிமுகம் .'ரொக்மெல்ட்' எனும் புதிய இணையத்தள தேடுபொறி (பிரவுசர்) இன்று அறிமுகம் செய்யப்பட்டது. சமூக வலைத்தளங்களான பயர்பொக்ஸ் (Firefox) மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் (Internet explorer) ஆகியவற்றுக்குப் போட்டியாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வலைப் பதிவில் புதிய தேடியந்திரத்தை பற்றி 'ரொக்மெல்ட்' நிறுவனம் தெரிவிக்கையில், "புதிய பிரவுசர் மூலம் பயனாளிகள், இலவசமாக பூரண திருப்தியுடன் எமது சேவையின் மூலம் இணையத் தேடல்களை மேற்கொள்ள முடியும். மிக இலகுவாக இணையப் பக்கங்களுக்குச் செல்லவும் முடியும். http://www.youtube.com/watch?v=lBPjZSNeNDM&feature=player_embedded
-
- 0 replies
- 736 views
-
-
சென்ற அக்டோபர் 7 அன்று பேஸ்புக் தளத்தில் புதிய குரூப் என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது. இது ஏற்கனவே இந்த தளத்தில் கிடைக்கும் குரூப்ஸ் வசதியைப் போலின்றி, சில தனிப்பட்ட சிறப்பு வசதிகள் கொண்டது. ஒரு சிறிய குழுவாக, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கொண்ட குழுவினை அமைத்துஅரட்டை அடிக்க, போட்டோக்க...ள் மற்றும் பைல்களைப் பகிர்ந்து கொள்ள, மின்னஞ்சல்களை குழு உறுப்பினர் களுக்குள் அனுப்பிக் கொள்ள இது வசதி அளிக்கிறது. இந்தக் குழு உறுப்பினர்களுக்குள் மட்டுமே இதனை மேற்கொள்ள முடியும். எப்படி இது ஏற்கனவே உள்ள பெரிய அளவிலான குழுக்களில் இருந்து வேறுபட்டுள்ளது என்று இங்கு பார்க்கலாம். வழக்கமான பேஸ்புக் குரூப் லிங்க், அதன் தளத்தில் இடது பிரிவில் கிடைக்கும். புதிய குரூப்ஸ் (New groups) செல்ல இங்க…
-
- 1 reply
- 979 views
-
-
போர் இன்னும் நிறைவுக்குவரவில்லை. ஃபேஸ்புக் இணைய தளத்தின் Friend find பக்கத்திலிருந்து ஜி-மெயில் நீக்கப்பட்டுள்ளது. எனவே இனி ஜி-மெயில் கணக்கினைக் கொண்டு நமது நண்பர்கள் ஃபேஸ்புக்கில் இருக்கிறார்களா என இனி தேடமுடியாது என்று தெரியவருகிறது. ...இந்தச் செய்தியை பல ஊடகங்களும் வெளியிட்டாலும் Tech Chrunch எனும் ஆங்கில இணைய தளத்தின் செய்தி நம்பத்தகுந்த ரீதியில் அமைந்துள்ளது. Friend Find என்பது , புதிதாக ஒருவர் ஃபேஸ்புக் இணைய தளத்டில் இணையும் போது அவரின் மின்னஞ்ஞல் கணக்குகளை பயன்படுத்தி நண்பர்களை தேடித்தரும் சேவையாகும். இங்கு குறிப்பாக ஜிமெயில், யாஹுமெயில் ,MSN, HOTMAIL, AOL போன்ற பல பிரபலமான மின்னஞ்ஞல் சேவைகளின் இணைப்புக்கள் காணப்பட்டது ஆனால் தற்போது ஜி-மெயில் இங்கிருந்து …
-
- 0 replies
- 851 views
-
-
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் உள்ள சிறிய குறை காரணமாக, புதிய வைரஸ் தாக்குதல் இருக்கும் என்று அறிவித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி, ஒருவர் தொலைவில் இருந்தே, இன்னொருவரின் கம்ப்யூட்டரைத் தன் வயப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளது. இது ஒரு ஸீரோ டே அட்டாக...் (Zero Day Attack) ஆக இருக்கும். அன்ரி வைரஸ் தொகுப்பு களைத் தயாரித்து வழங்கும் சைமாண்டெக் நிறுவன வல்லுநர் விக்ரம் தாக்கூர் இது பற்றிக் கூறுகையில், இமெயில் மூலம் கவனத்தைத் திருப்பி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பலவீனத்தைப் பயன்படுத்தி, வைரஸ் அல்லது வேறு மால்வேர் உள்ளே புகலாம் என்று கூறியுள்ளார். தாக்குதலுக்குக் குறி வைத்துள்ள நிறுவனம் அல்லது குழு உறுப்பினர் ஒருவருக்கு, இமெயில் ஒன்றை அ…
-
- 0 replies
- 751 views
-
-
விண்டோசை விட லினக்ஸ் ஏன் சிறந்தது? லினக்ஸ் இயங்குதளம் முற்றிலும் இலவசமாகும். இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். வைரஸ் பிரச்சனைகள் கிடையாது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடைய முதன்மை அலுவலர் Steve Balmer கூறுகிறார் வைரஸ்தாக்குதலை முற்றிலுமாக விண்டோஸ் இயங்க்குதளத்தில் ஒழிக்கமுடியாது என்று. விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ளது போன்று Spyware தாக்குதல்கள் லினக்ஸில் கிடையாது. லினக்ஸ் இயங்குதளங்கள் Crash ஆகாது. புதிய வன்பொருள்களை கணினியில் இணைத்தால் கணினியை மறுதொடக்கம் (REBOOT) செய்ய வேண்டிய அவசியம் இல்லை. லினக்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்தினால் பற்றி கவலைபடத் தேவையில்லை. லினக்ஸ் இயங்குதளத்தினால் 100 க்கும…
-
- 8 replies
- 2.2k views
-
-
நம்மில் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் தேடுபொறி Google !! இதில் பொதுவாக இணையத்தளங்களை மட்டுமே நாம் தேடி வந்தோம். ஆனால் GOOGLE இன்னும் பல வசதிகளை நமக்கு அளிக்கிறது. இப்பொழுது நாம் கூகிளில் மறைந்துள்ள சில வசதிகளை பார்ப்போம். 1.நமக்கு SONY நிறுவனத்தின் தற்போதைய பங்கு சந்தை நிலவரத்தை அறிய.......sony stock price என்று தட்டச்சு செய்து Enter கொடுத்தால் போதும். 2. குறிப்பிட்ட இடத்தின் வெப்பநிலையை அறிய உதாரணமாக இலங்கையில் உள்ள ஒரு இடத்தின் வெப்ப நிலையை அறிந்து கொள்ள colombo weather என்று தட்டச்சு செய்து Enter கொடுத்தால் போதும்.. அந்த இடத்தின் வெப்ப நிலையை காட்டும். 3.ஒரு நாட்டின் தற்போதைய நேரத்தை அறிந்துகொள்ள உதாரணமாக இலங்கையின் நேரத்தை அறிய sri lanka time என்று…
-
- 13 replies
- 1.8k views
-
-
இணைய உலகில் இன்று நிகழும் புதிய புரட்சி _ வீரகேசரி இணையம் 11/15/2010 10:03:46 AM இணையத்தள உலகில் இன்று புதியதொரு புரட்சி ஏற்படப்போகிறது. ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சென் பிரான்ஸிஸ்கோ நகரில் இந்தப் புரட்சி ஆரம்பமாகும் என தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. சமூக வலைப்பின்னலில் ஜாம்பவானாக விளங்கிக்கொண்டிருக்கும் பேஸ்புக் (facebook.com) - மின்னஞ்சல் சேவை ஜாம்பவான்களில் ஒன்றான ஜிமெயில் (gmail.com) ஆகியவற்றுக்கிடையில் சில வாரங்களாக முறுகல் நிலை தோன்றியது. அதனால் ஜிமெயிலை வழங்கும் கூகுள் (google.com) நிறுவனம் பேஸ்புக் சமூக வலைப்பின்னலில் வழங்கும் சேவைகளிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டது. அதேவேளை, மற்றுமொரு மின்னஞ்சல் ஜாம்பவான் என அழைக்கப்படு…
-
- 0 replies
- 938 views
-
-
உலக நாடுகளில் இணைய வேகமும் அதன் விலையும்
-
- 1 reply
- 1k views
-
-
கூகுள் Vs பேஸ்புக்... தொடங்கியது புதிய யுத்தம்!! கலிபோர்னியா: இணையதள உலகின் ஜாம்பவானான கூகுளுக்கும் சமூக இணையதளமான பேஸ்புக்குக்கும் புதிய யுத்தம் தொடங்கியுள்ளது. இதுவரை பேஸ்புக் பயனாளர்கள், கூகுளின் ஜி-மெயிலில் உள்ள தொடர்பாளர்களின் மின்னஞ்சல் முகவரிகளை அப்படியே தரவிறக்கம் செய்ய வசதி இருந்தது. இதனை தற்போது தடை செய்துள்ளது கூகுள். இதனால், இனி ஜி-மெயில் கணக்கில் உள்ள தங்களின் நண்பர்கள், தெரிந்தவர்கள் மின்னஞ்சல் முகவரிகளை இனி பேஸ்புக்கில் இறக்க முடியாது. ஒரு முறை தங்கள் தொடர்பு முகவரிகளை பேஸ்புக் போன்ற சமூகத் தளங்களில் இறக்கிக் கொள்ளும் பயனாளர்கள், மீண்டும் அதுபோல செய்ய தடை செய்யப்பட்டுள்ளது", என கூகுள் இன்று தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 889 views
-
-
- புதிய வலையோடி, சமூகவலையில் வாழும் பூச்சிகளுக்காக ஆக்கப்பட்டதாம் . . . ? ... கூறுகிறார்கள் பழைய நெற்ஸ்கேப் காறர்கள் பகிர, தேட, நண்பர்கள், புதினம் என்பது இவர்களின் சுலோகம் RockMelt Browser Revealed By Netscape Founder November 9, 2010 by Tom Jowitt A new web browser dubbed RockMelt has arrived, designed to appeal to social networking users. The idea behind RockMelt, which is based on Google’s Chromium software, is that social networking and Google searches make up the majority of users’ online activities. To this end, the RockMelt browser displays a selection of each user’s most-used Facebook Friends a…
-
- 1 reply
- 802 views
-
-
பிரிட்டிஷ் அரசி எலிசபெத் II தனக்கென பேஸ்புக் பக்கம் திறந்துள்ளதாக அவரது அதிகாரப்பூர்வ பக்கிங்ஹாம் அரண்மனை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இப்பக்கம் சாதாரண பேஸ்புக் பயனர்களின் பக்கங்களைப் போல அரசியின் சுயகுறிப்புகள் அடங்கிய பக்கமாக இராது என்றும், பக்கிங்ஹாம் அரண்மனையில் அரசி மேற்கொள்ளும் அலுவல்களின் நாட்குறிப்பு போல மட்டுமே இருக்கும் என்றும் அச்செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. பிற ஃபேஸ்புக் பயனர்களைப் போல பிரிட்டிஷ் அரசியை யாரும் "தோழி"(Friend) யாக ஆக்கிக் கொள்ள முடியாது. அதேபோல தமது நட்பு வளையத்துக்குள் வருமாறு பிரிட்டிஷ் அரசிக்கு யாரும் கோரிக்கை வைக்க முடியாது. அதேவேளை, அரசியின் பக்கத்தை விருப்பப் பக்கமாக சேமித்துக் கொள்ளவும், அரண்…
-
- 0 replies
- 831 views
-
-
நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா? அப்படியாயின் இந்த 10 விடயங்களும் உங்களுக்காக... சனி, 06 நவம்பர் 2010 12:05 பேஸ்புக் எவ்வளவு சுவாரஸ்யமானதோ அந்தளவு ஆபத்தானதும் கூட. தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு நிபுணர் டேவிட்வைட்லெக் பேஸ்புக் இனது இன்னொரு பக்கத்தை இவ்வாறு விளக்குகின்றார். இதில் சில படங்களையோ அல்லது தகவல்களையோ போடுவது நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்படும் ஆபத்தை, அல்லது ஒரு குற்றத்தில் சிக்கும் ஆபத்தை அல்லது அதை விட மோசமான ஆபத்ததை ஏற்படுத்தக் கூடியது. 'data mining'எனப்படும் கணினி மூலம் மேற்கொள்ளப்படும் திருட்டுக்கள் உள்ளன. அதன்மூலம் பேஸ்புக்கில் இல் ஊடுருவி பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம், விலாசம் என்பனவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் . இது குற்றவா…
-
- 0 replies
- 1.1k views
-