Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. 8. 7 மில்லியன் குழந்தைகளை பாலியல் தோற்றத்தில் சித்திரிக்கும் படங்களை முகநூல் நிறுவனம் நீக்கியது : October 25, 2018 8.7 மில்லியன் அளவில் குழந்தைகளைத் தவறான தோற்றத்தில் காட்டும் படங்களையும் தவறாகச் சித்தரிக்கும் பாலியல் படங்களையும் அகற்றிவிட்டதாக முகப்புத்தக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து முகப்புத்தக நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி அண்டிகான் டேவிஸ் நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு குழந்தைகள் தொடர்பான பாலியல் படங்கள் முழுவதும் அகற்றப்பட்டுள்ளன எனவும் இப்படங்களை வலைதளத்தில் ஏற்றியவர்களுக்கு தகவல்கள் அனுப்பியதன் பின்னர் சுமார் 99 சதவீதமானவை அகற்றப்பட்டு விட்டன என…

  2. இணையவெளித் துன்புறுத்தல்கள் – சட்டப் பாதுகாப்பிற்கான சாத்தியங்களும் சவால்களும்: கோசலை மதன் அறிமுகம் நவீன தொடர்பு சாதனங்களின் புதிய பரிணாமங்களை அடுத்து மனித சமூகத்தின் கல்வி, பொருளதாரம், சமூகக் கட்டமைப்பு, தனிமனித உறவு முதலான இன்னோரன்ன தளங்களில் பல நேர்மறைத் தாக்கங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதை நாம் வெளிப்படையாகவே அறிந்துகொள்ள முடிகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உலகநாடுகள் பலவற்றிலும் வழமையான இயங்குநிலை பாதிக்கப்பட்டு இருந்த சூழ்நிலையில் கல்வி, பொருளாதாரம் முதல் நாளாந்த செயற்பாடுகள் வரை இணையச் சாதனங்களின் துணையோடு ஓரளவிற்காவது இயல்புநிலையில் செயற்பட்டிருந்தமை மிக அண்மைய உதாரணமாகும். இணையச் சாதனங்களின் பாவனையால் கிடைக்கக்கூடிய நன்மைகளுக்குச் சமாந்தரமா…

  3. இலவச மின்னஞ்சல் முகவரி: yourname@EELAMBOX.COM பெற்றுக்கொள்ள: http://www.eelambox.com

    • 0 replies
    • 1.1k views
  4. உங்கள் ஐபோனை வேகமாக செயல்பட வைக்கும் யுக்திகள் அன்றாடம் பயன்படுத்தும் ஐபோன்கள் நாளடைவில் மிகக் மெதுவாக செயல்படுவது பலருக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு பிரச்சனையே! இது போன்ற பிரச்சனைகளை சில வழிமுறைகளை கையாண்டால் எளிதில் நீக்கி விடலாம். ஐபோன் பயனர்களுக்கான முக்கிய வழிமுறைகள் பின்வருமாறு : *மொபைலில் அளவுக்கதிகமாக சேமித்து வைத்துள்ள பழைய புகைப்படங்களை மற்றும் தேவையில்லாத டாக்குமெண்ட்டுகளை நீக்குவதும் மிக அவசியமே . நூற்றுக்கணக்கான அளவு புகைப்படங்கள் இருப்பின் அவற்றை கணினியில் ஒரு போல்டரில் போட்டு வைப்பது சிறந்தது. *அதிகளவு ஏற்றி வைத்துள்ள பயன்பாடுகளை நீக்க வே…

  5. வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்தனை செய்யும் வசதி அறிமுகம் பொழுது போக்கு மற்றும் தொலைத் தொடர்புகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த வாட்ஸ்அப் செயலியில், புது அம்சமாக உள்ளூர் கடைகளின் பட்டியலை பார்க்க மற்றும் பொருட்களை வாங்கிய பின் கிரெடிட், டெபிட் உள்ளிட்ட அட்டைகள் மூலம் பணத்தை செலுத்தும் வசதி இணைக்கப்பட்டுள்ளது. முறைகேடான பரிவர்த்தனைகளைத் தவிர்க்கும் வகையில் கட்டணம் செலுத்தும் செயல்முறையை முடிக்க ஆறு இலக்க கடவுச்சொல் எண் அல்லது கைரேகை பாதுகாப்பை கொண்டுள்ளது. ஒன்லைன் பண பரிவர்த்தைனை ஊக்குவிக்கும் வகையில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வசதி தற்போது பிரேசிலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவுக்கு அடுத்ததாக அதி…

  6. ஆண்ட்ராய்டில் வெளியானது 'பிரிஸ்மா'! மொபைல் போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அழகாக ஓவியம் போன்ற புகைப்படங்களாக மாற்றித் தரும் 'பிரிஸ்மா என்னும் செயற்கை அறிவுத்திறன் கொண்ட ஆப், சென்ற மாதம் வெளியானது. சாதாரண புகைப்படங்களை நிஜ ஓவியம் போன்று மாற்றிக்கொடுப்பதுதான் இதன் சிறப்பு. இது உலகம் முழுவதும் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆப் - ஐ பயன்படுத்தி, எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. ஆப் ஸ்டோரில் கொட்டிக் கிடக்கும் விதவிதமான ஆப்கள், தங்களுக்கு கிடைக்கவில்லையென்று வருத்தப்பட்டனர் ஆண்ட்ராய்டு வாசிகள். ஆப்பிள் ஐஓஎஸ் பயன்பாட்டாளர்களுக்குத்தான் இந்த ஆப் சென்ற மாதம் முதலில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ஆண்ட…

  7. Facebook: சதிக்கோட்பாடு பரப்பிய 2 லட்சம் பேர் கொண்ட குழுவை நீக்கியது ஃபேஸ்புக் Facebook சதிக்கோட்பாடு ஒன்றை பரப்பி அது பற்றி விவாதித்து வந்த குழுவொன்றை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது. டீப் ஸ்டேட், வணிக மற்றும் ஊடக சக்திகள் தங்களுக்குள் ஒரு ரகசியத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிராக செயல்படுகின்றன என்ற ஒரு சதிக் கோட்பாாட்டை நம்பும், அதனை பரப்பும், விவாதிக்கும் ஒரு குழுவுக்குப் பெயர் கியூஅனான் (QAnon) என்பதாகும். டீப் ஸ்டேட் என்றால் என்ன? டீப் ஸ்டேட் என்றால் வெளித் தோற்றத்தில் தெரியும் அரசுக்குள் செயல்படும் அதிகாரம் மிக்க ஒரு …

  8. ஒவ்வொரு முறையும் ஃபேஸ்புக்குக்குள் நுழையும்போது, உங்களுக்குப் பிடித்தமானவர்கள் மற்றும் சிறப்பாக இயங்குபவர்களின் பதிவுகளை முதலில் பார்க்கும் வசதியை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தி இருக்கிறது. நீங்கள் என்ன பார்க்க விரும்புகிறீர்களோ, அதையே முதலில் பார்க்கும் வசதியை இன்று (வியாழன்) முதல் தொடங்கியிருக்கிறது ஃபேஸ்புக். யாருடைய பதிவுகளைத் தவறவிடக் கூடாது அல்லது முதலில் பார்க்க வேண்டும், படிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவர்களுடைய புரொஃபைலுக்குச் செல்லுங்கள். அதில் "following" என்று குறிப்பிட்டுள்ள பெட்டியைத் திறந்து "see first" என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். இதேபோல், நீங்கள் ஏற்கெனவே விரும்பிய ஃபேஸ்புக் பக்கங்களுக்குச் சென்று, 'Liked' என்ற பெட்டியைத் திறந்து "see first" என்…

    • 0 replies
    • 438 views
  9. யூடியூப்பிற்கு போட்டியாக ஈரானின் 'மேர்' By Kavinthan Shanmugarajah 2012-12-10 16:45:05 யூடியூப் போன்ற காணொளிகள் பகிரும் தளமொன்றை ஈரான் ஆரம்பித்துள்ளது. ஈரானிய அரசாங்கம் தான் தடைசெய்துள்ள தளங்களுக்கு மாற்றீடாக சில தளங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. அவ்வரிசையிலேயே யூடியூப்பிற்கு பதிலாக ' மேர்' (Mehr) யூடியூப்பிற்கு போட்டியாக ஈரானின் 'மேர்'என்ற தளத்தை ஆரம்பித்துள்ளது. ஈரான் மற்றும் இஸ்லாமிய கலாசாரத்தினை ஊக்குவிப்பதுடன் அந்நாட்டு கலைஞர்களின் படைப்புகளை வெளியுலகிற்கு கொண்டுசெல்வதே இத்தளத்தின் பிரதான நோக்கம் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இத்தளமும் மிகத்தீவிரமாக கண்காணிப்புக்குள்ளாகுமெனவும் நம்பப்படுகின்றது. ஈரானில் பேஸ்புக், டுவிட்டர் போன்ற தளங்கள் ஏற்கனவே தடை…

  10. வல்லவனுக்கு ஆன்ட்ராய்டும் ஆயுதம்! பாரதி கண்ட புதுமைப் பெண்கள் அதிகளவில் உலாவும் இந்த காலத்தில்தான் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையும் நிலவுகிறது. இந்த நேரத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் பெண்களுக்கு பாதுகாப்பு கவசங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஆன்ட்ராய்டு ஃபோன்கள் இல்லாத பெண்கள் இல்லை என்றாகிவிட்ட இந்த காலத்தில் அதில் விதவிதமான செயலிகளை பயன்படுத்து கின்றனர் நம் யுவதிகள். அவை வெறும் பொழுதுபோக்கிற்கு என்று மட்டுமில்லாமல் பாதுகாப்பு தருபவையாகவும் இருந்தால் எத்தனை உதவியாக இருக்கும்? பிரச்சனையைச் சந்திக்க நேரிடும் ஒவ்வொரு பெண்ணின் ஃபோனிலும் இருக்க வேண்டிய அத்தியாவசியமான 3 செயலிகள் இவை... SOS - safety first : இந்த செயலி மிகவும் துரிதமானது. நமக்கு நெருக்கமானவர்களை…

  11. இனி DSLR வேண்டாம்! மொபைலே போதும்! #HasselbladTrueZoom எல்லா வசதிகளையும் கொண்ட டிஜிட்டல் கேமராவை ஒரு ஸ்லிம்மான செல்லுக்குள் அடக்கினால் எப்படி இருக்கும். உண்மையிலேயே நடந்துவிட்டது. 'ஹாசல்பிளாட் கேமரா' (Hasselblad) என்ற கேமரா ஒரு சின்ன மொபைலுக்குள் அடங்கிவிட்டது. நம்மில் பெரும்பாலோனோர்க்கு 'ஹாசல்பிளாட்' கேமரா (Hasselblad) பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. போட்டோகிராபி துறையில் பல சாதனைகள் புரிந்த நிறுவனம் ஹாசல்பிளாட். நிலவுக்கு ஆம்ஸ்ட்ராங் சென்ற பொழுது நிலவில் படம் பிடிக்க நாசாவால் தேர்ந்தெடுக்கப்பட்டதும், இந்த நிறுவனத்தின் கேமராக்கள்தான். இந்த நிறுவனத்தின் கேமராக்களின் விலையை கேட்டால் சற்று மலைப்பாகத்தான் இருக்கும். இதனால்தான் என்னவோ இதனை பயன்படுத்துபவர்க…

  12. 'வாட்ஸ் அப்'பை வாங்கியது 'ஃபேஸ்புக்' [Thursday, 2014-02-20 06:14:54] காலத்தின் நவீனமயத்துக்கு ஏற்ப இந்த பரந்த உலகின் தகவல் தொடர்பு சாதனங்கள் மிகவும் குறுகிப்போய் கைபேசியின் துணையால் உள்ளங்கையில் உலகம் என்ற அளவுக்கு சுருங்கி விட்டது. 'பேஜர்', 'செல்போன்', எதிர் முனையில் இருப்பவரின் முகத்தை பார்த்தபடியே பேசும் திறன் கொண்ட '3-ஜி செல்போன்' ஆகியவற்றின் மூலம் ‘இ-மெயில்', 'ஃபேஸ்புக்', 'ட்விட்டர்' போன்ற இணையங்களின் வாயிலாக உலகின் கடைக்கோடியில் உள்ள செய்திகளையும் நாம் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த நவீனமயத்தின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியாக 'வாட்ஸேஎஅப்’ என்ற உபகரனம் இன்றைய இளைஞர்களுக்கு வாய்த்த வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. இதன் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்ற…

  13. இணைய வரலாறு - ஒரு எக்ஸ்பிரஸ் பார்வை இணைய வரலாற்றில் கவனிக்கப்பட்ட முக்கிய திருப்பங்கள் மட்டும் ஒரு எக்ஸ்பிரஸ் பார்வையில் இதோ!! ஆகஸ்ட்-6-1991-டிம் பெர்னஸ் லீ-யின் சொடுக்க சொடுக்க இணைப்பு கொடுக்கும் "Web" மென்பொருள் வெளியிடப்பட்டது. டிசம்பர்-12- 1991- ஐரோப்பாவுக்கு வெளியே முதல் வெப்செர்வர் ஆன்லனில் வந்தது. நவம்பர் 1992-இப்போது 26 வெப்செர்வர்கள் ஆன்லைனில் இருந்தன. ஏப்ரல்-30-1993-மொசைக் (Mosaic) எனப்படும் விண்டோஸுக்கான பிரவுசர் வெளியிடப்பட்டது.World Wide Web எனப்படும் www சேவை இலவசமாக அனைவருக்கும் வழங்கப்பட்டது. மே 1993-முதல் ஆன்லைன் செய்திதாள் தி டெக் " The Tech" MIT மாணவர்களால் வெளியிடப்பட்டது. http://www-tech.mit.edu ஜூன் 1993- HTML பயன்படுத்தி இணைய பக்…

  14. உலகில் முதல் முதலாக டிஜிட்டல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்திய பின்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடான பின்லாந்து உலகிலேயே முதன்முதலாக டிஜிட்டல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் போன் செயலி அடிப்படையில் செயற்படும் இந்த டிஜிட்டல் கடவுச்சீட்டை பயன்படுத்துவதன் மூலம் விமான நிலையத்தில் வரிசையில் நிற்கும் நேரம் வெகுவாக குறைக்கப்பட்டு பயணிகளுக்கு நேரம் மிச்சமாகும் என கூறப்படுகிறது. ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் மனித தொடர்புகளின் தேவையைக் குறைப்பதன் மூலம் பயணத்தை வேகமாகவும், மென்மையாகவும், மேலும் பாதுகாப்பானதாகவும் மாற்றுவதைத் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. பின் ஏர், பின்னிஷ் பொலிஸ் மற்றும் பின் ஏவியா விமா…

    • 0 replies
    • 629 views
  15. இன்ஸ்டாகிராம் ரீல்களில் நேரத்தை வீணடிக்கிறீர்களா? அகராதியில் உங்களுக்கென புதிய வார்த்தை வந்துள்ளது Getty Images யாஸ்மின் ரூஃபோ பிபிசி செய்தி இன்ஸ்டாகிராம் ரீல்களில் நேரத்தை வீணடிக்கிறீர்களா? உங்களை அறியாமல் பலமணிநேரங்கள் ரீல்களை பார்க்க ஸ்க்ரோல் செய்கிறீர்களா? அப்படியானால், உங்களுக்கு ப்ரெயின் ராட் (brain rot) பாதிப்பு இருக்கலாம். ப்ரெயின் ராட் என்னும் வார்த்தையை, ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டி பிரஸ், இந்த ஆண்டின் வார்த்தை (word of the year) எனக் குறிப்பிடுகிறது. ப்ரெயின் ராட் என்பது சமூக ஊடகங்களில் பயனற்ற ஆன்லைன் உள்ளடக்கங்களை பார்க்க நேரம் செலவிடுவதால் ஏற்படும் விளைவை குறிப்பிடும் ஒரு…

  16. சேவை தளங்களில் நீங்கள் வழங்கும் தனிநபர் தரவுகள் திருடப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இணையம் வழியாக உங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள், அதனால் நீங்கள் சந்திக்கும் சவால்கள், அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாகச் சொல்லும் பிபிசி தமிழின் சைபர் செக்யூரிட்டி தொடரின் இரண்டாம் பகுதி இது. இது டிஜிட்டல் உலகம். இங்கு எல்லாமே தரவுகள்தான் (data). நீங்கள் அள்ளிக் கொடுக்கும் தனிநபர் தரவுகளை கொண்டு இங்கு ஒரு பெரும் சந்தை இயங்கி கொண்டிருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ யாரோ ஒருவர் உங்களை இயக்குவதற்கு …

  17. பேஸ்புக் ரகசியம் நீங்கள் பேஸ்புக் அபிமானியா? டிவிட்டர் விரும்பியா? இல்லை நீங்கள் லிங்க்டுஇன் அல்லது ஜி-பிளஸ் சேவையை அதிகம் பயன்படுத்துபவரா? உங்கள் அபிமான வலைப்பின்னல் சேவை எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், கேள்வி என்ன என்றால் அந்த சேவையில் உள்ள எல்லா அம்சங்களும் உங்களுக்குத்தெரியுமா? என்பதுதான். ஏனெனில் பரவலாகப் பயன்படுத்தப்படும் சமூக வலைப்பின்னல் தளங்களில் பலரும் அறிந்திராத சின்ன சின்ன அம்சங்கள் இருக்கின்றன என்கின்றனர். உதாரணத்துக்கு குறும்பதிவு சேவையான டிவிட்டரில் பயனாளிகள் தங்கள் டிவிட்டர் நண்பர்களை அன்பாலோ செய்யாமல், அவர்கள் குறும்பதிவுகள் தங்கள் டைம்லைனில் தோன்றாத வகையில் மியூட் மட்டும் செய்யலாம். அதே போல டிவிட்டரில் ஒளிப்படத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது அத…

  18. நேரலை தொலைக்காட்சி கட்டண சேவை : யூ டியூப்பின் அடுத்த அதிரடி அமெரிக்காவில் உள்ள கேபிள் சேனல் ஒளிபரப்புத் தொகுப்புக்கு சவால்விடும் வகையில் மாதம் 35 டாலர் என்ற கட்டணத்தில் தொலைக்காட்சி சேவையை யூ டியூப் நிறுவனம் வழங்க உள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்த நேரலை தொலைக்காட்சியில் 40க்கும் மேற்பட்ட சேனல்கள் இடம்பெற்றிருக்கும். ஏ பி சி, சி பி எஸ், ஃபாக்ஸ், என் பி சி மற்றும் இ எஸ் பி என் போன்ற நாட்டின் பெரிய சேனல்களும் இதில் அடங்கும். இந்த சேவையில் கிளவுட் டிவிஆர் என்ற அம்சமும் அடங்குகிறது. இதன் மூலம், பயன்பாட்டாளர்கள் நிகழ்ச்சிகளை பதிவு செய்து சேகரித்து வைக்கவும் முடியும். பாரம்பரிய கேபிள் நிறுவனங்களுக்கு யூ ட…

  19. ட்விட்டர் லைக்ஸை விற்பனை செய்த நிறுவனம்: விசாரணைக்கு உத்தரவு படத்தின் காப்புரிமைGETTY IMAGES சமூக ஊடகமான ட்விட்டரில் இயங்குபவர்களை, அவர்களது ட்விட்டர் கணக்கில் பின் தொடர்வதற்கென போலியான தானியங்கி ட்விட்டர் கணக்குகளை தொடங்கி அதனை விற்ற நிறுவனத்தை விசாரிக்க அமெரிக்க நீதித் துறை உத்தரவிட்டுள்ளது. திரை நட்சத்திரங்கள், அரசியல் விமர்சகர்கள், தொழிமுனைவோர்கள் தங்களை ட்விட்டரில் அதிகம் பேர் பின் தொடர்வதை விரும்புவார்கள். இவர்களை பின் தொடர்வதற்கென போலி தானியங்கி கணக்குகளை உண்டாக்கி அந்த கணக்குகளை அவர்களுக்கு விற்றுள்ளது அமெரிக்காவின் ஒரு நிறுவனம். இது குறித்து பேசிய நியூயார்க் அட்டர்னி ஜெனரல் எரிக், "ஆள்மாறாட்டம் மற்…

  20. உங்க கம்ப்யூட்டர் வாங்கும் போது இருந்த வேகம் இப்போ இல்லையா, உடனே கவலை படாமல் இதை செய்யுங்கள். அதன் பின் உங்க கணினியின் வேகம் அதிகரிக்குதா இல்லையா என்று பாருங்க.. கணினி வாங்கும் போது ஆர்வ கோளாறுல பல மென்பொருள்களை இன்ஸ்டால் செய்திருப்பீர்கள், அவ்வாறு இன்ஸ்டால் செய்ததில் நீங்கள் பயன்படுத்தாத பெரிய மென்பொருள்களை அன் இன்ஸ்டால் செய்ய வேண்டும். உங்க கம்ப்யூட்டரில் ஸ்டார்ட் பட்டனை க்ளிக் செய்து msconfig என டைப் செய்து என்டர் பட்டனை க்ளிக் செய்து ஸ்டார்ட்அப் லிஸ்டில் இருக்கும் தேவை இல்லாத மென்பொருள்களை எடுத்து விடுங்கள். டிஸ்க் க்ளீன் அப் இம்முறை விண்டோஸ் கணினியில் இருக்கும் தேவையில்லாத பெரிய ஃபைல்களை ஸ்கேன் செய்யும். இதன் மூலம் கணினியில் தேவையில்லாத ஃபைல்களை அழித்து வ…

    • 0 replies
    • 631 views
  21. தற்போது நாம் அதிகபட்சமாக இணையத்தில் உலாவியாக பயன்படுத்தி வரும் ஃப்யர்பாக்ஸ் 3.03 உலாவிக்கு போட்டியாக கூகுல் குரோம் என்ற உலாவியை கொண்டு வந்தது கூகுல் நிறுவனம். அது மிகவும் சுலபமாகவும் அதிக வேலைப்பாடு இல்லாமலும் சற்று வேகமாகவும் இயங்கி வந்தது. ஃப்யர்பாக்ஸ் வெளியீட்டு நிறுவனமான மோஸில்லா (Mozilla) தற்போது மைன்ஃபில்டு (Minefield) என்ற எதிர்கால ஃப்யர்பாக்ஸ் உலாவியக ஆல்பா வெர்சன் ஆக வெளியிட்டுள்ளது. இது ஃப்யர்பாக்ஸை விட அதிவேகத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். மேலும் கூகுல் குரோமை விட 10 சதவீத வேகத்தில் இயங்குகிறது எனக்கூறுகின்றனர். மேலும் இது விண்டோஸ்,மேக் ஓஎஸ் எக்ஸ், லினிக்ஸிலும் இயங்கும்படி கொடுத்துள்ளனர். என்ன இப்பொதைக்கு ஃப்யர்பாக்ஸ் ஆட் ஆன் எக்ஸ்…

  22. யார் இந்த ஜானி ஐவ்... ஆப்பிளின் வெற்றிக்கு இவரது பங்கு என்ன? ஜோனாதன் பால் ஐவ் ஐபோன் என்றதும் ஒரு அழகிய ஸ்டைலிஷான வடிவம் ஒன்று உங்கள் மனதுக்குத் தோன்றும். ஆப்பிள் சாதனங்களுக்கேயான அந்த ராயல் லுக் இவரது கைவண்ணம். ஜானி ஐவ் என்று செல்லமாக அழைக்கப்படும் இவர்தான் இன்றைய டிசைனிங் (கேட்ஜெட்) மாணவர்களின் டெண்டுல்கர். இவர், லண்டனில் பிறந்தவர். 'என்னை டிசைனராக மாற்றியது, பதின்பருவத்தில் கார்களின்மீது எனக்கு ஏற்பட்ட காதல்தான்' என்னும் இவர், 1980-களில் நீயூகாஸ்டில் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்றார். அங்கு படிக்கும்போது அவர் வடிவமைத்த கேட்டல் குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும் சாதனம், லண்டன் வடிவமைப்பு அருங்காட்சியகத்தில…

  23. டுவிட்டரின் தற்போதைய பெறுமதி 20 பில்லியன் டொலர்க‍ளே : இலோன் மஸ்க் கூறுகிறார் Published By: SETHU 27 MAR, 2023 | 12:57 PM டுவிட்டர் நிறுவனத்தின் தற்போதைய பெறுமதி 20 பில்லியன் டொலர்களே என அதன் உரிமையாளர் இலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். பங்குரிமை இழப்பீட்டுத் திட்டமொன்று தொடர்பில், ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றில் இதனை இலோன் மஸ்க் குறிப்பிட்டுள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 5 மாதங்களுக்கு முன்னர் 44 பில்லியன் டொலர்களுக்கு இந்நிறுவனத்தை இலோன் மஸ்க் வாங்கியமை குறிப்பிடத்தக்கது. டுவிட்டர் கடும் நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டதாக குறிப்பிட்டுள்ள இலோன் மஸ்க், ஒரு கட்டத்தில் இந்நி…

  24. கீழ் உள்ள சுட்டியை சொடுக்கி விண்டோசின் சகலவிதமான பதிப்புக்கள். மென்பொருள்கள் உதவிகள் ஆகியவற்றின் தமிழ் பதிப்பை பார்வையிட்டு தேவையானவற்றி பெற்றுக்கொள்ளுங்கள் சுட்டி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.