நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
********
-
- 1 reply
- 1.4k views
-
-
உடல் எடையைக் குறைக்கும் உணவு முறை! உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதிக புரோட்டீன் சத்து கொண்ட அதே நேரத்தில் குறைவான கொழுப்புச் சத்து கொண்ட உணவினை உட்கொண்டாலே போதும் உடல் எடை குறையும். ஆனால் அவற்றைக் கடைபிடிப்பது தான் கடினமான ஒன்றாகும். உடலில் இருந்து அதிக கலோரி சக்தி வெளிப்படக்கூடிய வகையில் உடற்பயிற்சி செய்யலாம். அல்லது மொத்த உணவில் உள்ள கலோரியின் அளவைக் குறைக்கலாம். இவை எல்லாமே சொல்வதற்கு மட்டும் தான் எளிது. ஒருபுறம் டயட்டில் இருக்கிறேன் என்று கூறிக் கொண்டு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும்பட்சத்தில் உடல் குண்டுக்கு மேல் குண்டாக அதிகரித்துக் கொண்டே போகும். அமெரிக்காவில் சுமார் 64 சதவீதம் பேர் அதிக எடை கொண்டவர்களாக இருக்…
-
- 1 reply
- 9.4k views
-
-
-
-
பூசணிக்காயின் மருத்துவ குணங்கள் பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது. காய்கறி வகைகளில் ஒன்றான, இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும். உடல் சூட்டைத் தணிக்கும். சிறுநீர் வியாதிகளை நீங்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும். புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும்போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும். மருத்துவத்தில் பூசணிக்காயின் கதுப்பு, நீர்விதை ஆகியவை பயன்படுத்தப் படுகின…
-
- 33 replies
- 10.2k views
-
-
குண்டாக இருப்பவர்களுக்கு மாரடைப்பை தாங்கும் சக்தி அதிகமென்கிறது மருத்துவ ஆய்வு மாரடைப்பு வந்தபின்னர், ஒல்லியாக இருக்கும் நபர்களைவிட, குண்டாக இருப்பவர்களால் எளிதாகத் தாங்க முடிகிறது. அவர்களுக்கு உயிர் பிழைக்கும் வாய்ப்பும் அதிகம் என்று கண்டுபிடித்துள்ளனர் அமெரிக்காவில் உள்ள டேவிட் ஷெபன் மருத்துவ ஆராய்ச்சி மைய நிபுணர்கள். ஒரு மனிதனின் பி.எம்.ஐ. என்று சொல்லப்படும், எடை, உயர கூட்டு அளவைக்கும், அவர் மாரடைப்பால் பாதிக்கும் போது அளிக்கப்படும் சிகிச்சைக்கும் தொடர்பு உள்ளது என்று இப்போது தான் முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குண்டாக இருந்தால், அவர்களுக்கு இருதயக் கோளாறு நிச்சயம் என்றுதான் இதுவரை சொல்லப்பட்டு வருகிறது. அதேசமயம், மருத்துவமனையில் மாரடைப்புக்காக சேர்க…
-
- 1 reply
- 1.4k views
-
-
அழகுக் குறிப்புகள் தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். -------------------------------------------------------------------------------- ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும். -------------------------------------------------------------------------------- முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும். -----…
-
- 4 replies
- 2.3k views
-
-
120 நாட்களாக செயற்கை இதயத்துடன் புதன், 29 ஆகஸ்ட் 2007( 15:55 ஈஸ்T ) Wஎப்டுனிஅ செயற்கை இதயத்துடன் 120 நாட்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறான் ஒரு சிறுவன். செயற்கை கை, கால்கள், செயற்கை எலும்பு என மனிதனின் எத்தனையோ பாகங்கள் செயற்கையாக வந்து விட்டன. மனிதனின் உயிராகக் கருதப்படும் இதயமும் தற்போது செயற்கை எனும் அதிசயத்திற்கு தலை வணங்கிவிட்டது. ஆம் செயற்கை இதயம்தான். அந்த செயற்கை இதயத்தைப் பொருத்திக் கொண்டுள்ள ஒரு சிறுவன் லண்டனில் 120 நாட்களாக உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறான் என்பது மற்றுமொரு அதிசயமே. பிறந்த 8 மாதங்களே ஆன ஜாக் வெலம் என்ற குழந்தைக்கு இதய தசைகள் வீக்கமடைந்து மிக மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அப்போது அந்த குழந்தைக்கு …
-
- 1 reply
- 1.1k views
-
-
பார்ப்பவர்களை சட்டென்று கவரும் உதடுகளுக்குத் தேவை லிப்ஸ்டிக். உங்கள் மூடு, உடை, விருப்பம் ஆகியவற்றிற்கு ஏற்ப நிறத்தை பயன்படுத்த சிறந்த இடம் உதடுகள்தான்! இளஞ்சிவப்பு முதல் பிரவுன் வரை, வைலெட் முதல் கறுப்பு வரை எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்! லிப்ஸ்டிக் வெவ்வேறு வகைகளில் கிடைக்கும். · கிளாஸ்:- இது பளபளப்பானது, அதே நேரத்தில் மிகக் குறைந்த அளவில் நிறத்தை தரக் கூடியது. லேசான நிறம் பெற சிறந்தது. ஆனால் அதிக நேரம் நீடிக்காது. குறிப்பு:- லிப் பென்ஸிலால் உதடுகளில் நிறத்தை பூசிவிட்டு லிப் கிளாஸ் தடவினால், நீண்ட நேரம் நீடிக்கும். · மெட்டாலிக் (ஷிம்மர்):- இதைப் பார்த்தால் அதிக நிறம் கொண்டது என்று தோன்றலாம் ஆனால் இதைத் தடவினால் லேசான நிறத்தைத் தரும். வெளிச்சத்தில…
-
- 50 replies
- 8.9k views
-
-
தேன் என்று சொன்னாலே நாவெல்லாம் தித்திக்கும். தேனால் நம் சருமம் அடைகிற நன்மைகளைச் சொன்னால் மனசெல்லாம் பூரிக்கும். தேன் தரும் அற்புத நனமைகளை சற்று தெரிந்து கொள்வோம். தோல் தொய்ந்து போய் சீக்கிரம் வயதான தோற்றம் வந்து விட்டதே என்ற கவலை உள்ளதா? இனி அந்த கவலை வேண்டாம். அதற்கான அட்டகாசமான நிவாரணம் உள்ளது. இரண்டு முட்டைகளை உடைத்து அடித்துக்கொள்ளவும். அதனுடன், ஒரு ஸ்பூன் தேன், இரண்டு ஸ்பூன் பால், கொஞ்சம் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். அதில் சிறிய குளியல் சோப்புத் துண்டுகளை போடவும். ஷாம்பு மாதிரி நுரை வரும். இந்த எண்ணெயை உடம்பு முழுவதும் தேய்த்து அலசுங்கள். வாரம் இருமுறை செய்தாலே போதுமானது. தோல் சுருக்கம் ஓடிப்போவதுடன் தோலுக்குத் தேவையான புரத சத்துக்களும் கிடைக்கு…
-
- 9 replies
- 6k views
-
-
ஆஸ்துமா - உணவு முறையே சிகிச்சையாக ஆஸ்துமா என்பது ஒவ்வாமையால் ஏற்படும் நோய் என்பது அனைவரும் அறிந்ததே. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் போதிலும் கூட ஆஸ்துமா தொல்லைக்கு பலர் ஆட்பட்டு வருகின்றனர். சிலருக்கு சுற்றுச்சூழல் நிலைமைகளாலும், சிலருக்கு கோதுமை, முட்டைகள், பால், சாக்கலேட்டுகள், பீன்ஸ், உருளைக்கிழங்கு, மாட்டிறைச்சி போன்ற உணவுகளாலும் கூட ஆஸ்துமா ஏற்படுவதாக சில ஆய்வுகள் தெரிவித்துள்ளன. மேலும் சிலருக்கு மனச்சிக்கல்கள் காரணமாக ஆஸ்துமா ஏற்படுகிறது. இளம் வயதில் ஆஸ்துமா ஏற்படும் 25 சதவீதத்தினருக்கு உணர்வுபூர்வ பாதுகாப்பின்மை, பெற்றோர்கள் அன்பும் அரவணைப்பும் இன்மை ஆகிய காரணங்களால் ஏற்படுகிறது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் பரம்பரையில் யாருக்க…
-
- 0 replies
- 4.7k views
-
-
வணக்கம்! நானும்தான் நீண்ட காலமாக கட்டான உடலை பெறுவதற்கு (மேலுள்ள படத்தில் உள்ளது போன்று) முயற்சி செய்தேன். முடியவில்லை. முயற்சியைக்கைவிட்டு விட்டேன். ஆனால் இவ்விடையமாக நான் யாழ் கள உறவுகளின் கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கின்றேன். யாழ் களத்தில் படத்தில் உள்ளது போன்ற உடலமைப்பை தீவிர பயிற்சியின் மூலம் பெற்ற நண்பர்கள் இருக்கக்கூடும். அவர்கள் தமது அனுபவங்களை மனந்திறந்து பகிர்ந்து கொள்ளலாம். மேலும் இதிலுள்ள தீய விளைவுகளைப் பற்றியும் விவாதிக்கலாம். இதைவிட எவ்வாறு உடற்பருமனைக் குறைக்கலாம் அல்லது கூட்டலாம் என்பது பற்றிய உங்கள் கருத்துக்களையும் அறிய ஆவலாக இருக்கின்றேன். வேறு இணையத்தளங்களிலுள்ள கட்டுரைகளை வெட்டி ஒட்டாது, கூடுதலான வரை உங்கள் வாழ்பனுபவங்களை பகிர்ந்து கொண்டால் நன்…
-
- 29 replies
- 6.6k views
-
-
நெடுநாள் ஆரோக்கியத்திற்கு தேவை நீண்ட தூர நடைப்பயிற்சி! தினமும் காலையில் ஈரமான புல்வெளியையும், சுத்தமான காற்றை சுவாசிக்கவும் நாம் நடப்பது என்பது எல்லோர் வாழ்விலும் ஏற்படும் ஒரு அனுபவமாகும். இந்த `நடக்கும்' தியானத்தை நாம் தினமும் செய்து வந்தாலே போதும். நம் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை நாம் சுலபமாக வெற்றி கொள்ளலாம். நடப்பது என்ற செயல் ஒரு உடற்பயிற்சி தொடர்புடைய செயல் ஆதலால் நம்முடைய தினசரி பழக்கங்களுடன் இதையும் நாம் சுலபமாக நுழைத்து விடமுடியும். தினமும் சில மைல்கள் நடக்க வேண்டுமா? கீழ்வரும் ஒரு 10 வழிகளை கடைபிடியுங்கள் : முதலில் அனுமதி பெறுங்கள் : நீங்கள் இதுவரை உடற்பயிற்சியோ அல்லது நடப்பதை ஒரு உடற்பயிற்சியாக செய்யாதவராகவோ இருந்தால், …
-
- 1 reply
- 2.6k views
-
-
வயதைச் சொல்லும் கழுத்து வியாழன், 9 ஆகஸ்ட் 2007 ஒரு பெண்ணின் கழுத்தைப் பார்த்து அவரின் வயதைச் சொல்லி விடலாம். அதற்கு காரணம் கழுத்திலே ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் கோடுகள். வழவழப்பான கழுத்தைப் பெறுவது அரிது. ஆனால் கீழ்வரும் பயிற்சிகளைச் செய்வதன் மூலம் கழுத்தை சுருக்கமில்லாமல் நன்றாக வைத்துக் கொள்ள முடியும். தினசரி கழுத்துப் பயிற்சி தலையை பின்புறம் 10 முறையும் முன்புறம் 10 முறையும் சாய்க்கவும். தலையை நன்றாக பின்நோக்கி வைத்துக் கொண்டு, வாயை நன்றாகத் திறந்து அசைத்து மூடவும். தலையை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு திருப்பவும். பிறகு தலையை வலது தோள்பட்டை வரை கொண்டு சென்று மறுபடி இடது தோள்பட்டைக்கு கொண்டு செல்லவும். இது போல் 10 முதல் 20 தடவை …
-
- 15 replies
- 5.1k views
-
-
புற்றுநோய்களால் பாதிக்கப் பட்டவர்கள் உலகில் அதிகம். இங்கிலாந்தில் மட்டும் நாளொன்றுக்கு 24பேர் புற்று நோயால் இறக்கிறார்கள் என அறிக்கை ஒன்று சொல்கிறது. இதைக் குணப்படுத்துவதற்கான மருந்துகள் இன்னும் வரவில்லை. அப்போ ஸ்ரீதர் இயக்கிய நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படத்தில் கல்யாணகுமார் எப்படி புற்று நோயாளியான முத்துராமனைக் குணப்படுத்துகிறார் என்று கேட்டு விடாதீர்கள். புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான வழிகள் என்ன என்பதை ஆராய்ந்து அவ்வப் போது ஏதாவது அறிவித்துக் கொண்டிருப்பாhகள். சமீபத்தில் 1300 பேரைப் பரிசோதித்து அமெரிக்க ஆய்வாளர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். பழவகைகள், காய்கறி வகைகளை உட்கொண்டால் புற்றுநோயை எதிர்க்கும் சக்தி உடலில் அதிகரிக்கும் என்ற கதை ஏற்கனவே அறிய…
-
- 6 replies
- 2k views
-
-
அதிக நேரம் கையடக்க தொலைபேசியை பயன்படுத்தினால் மனநிலை பாதிக்கும் அதிக நேரம் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவோருக்கு மன உளைச்சல், கோபம் அதிகரிக்கும் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். கையடக்க தொலைபேசிகளை அதிகநேரம் பயன்படுத்துகிறவர்கள் இளைஞர்கள், இளைஞிகள் தான். மணிக்கணக்கில் அவர்கள் நண்பர்களுடனும் காதலனுடனும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எஸ்.எம்.எஸ். அனுப்புவதிலும் அதைப் பார்ப்பதிலும் கூடுதல் நேரத்தை செலவிடுகிறார்கள். ஸ்பெயின் நாட்டுக் கிரினேடா பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இதுபற்றி ஓர் ஆய்வு நடத்தினார்கள். 18 முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களிடம் 10 ஆண்டுகளாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்படி 40 சதவீத வாலிபர்கள் மற்றும் இளம்பெண்க…
-
- 3 replies
- 1.6k views
-
-
அஜினோமோட்டோ : ஒரு வரலாறு! குழந்தைகளை மையமாக வைத்துத் தயாரிக்கப்படும் ரெடிமேட் நொறுக்குத் தீனிகளான மேகி, லேய்ஸ், குர்குர்ரே என்பதிலிருந்து இன்று பலவகை துரித உணவுகள், வீட்டுச் சமையல் அறைகள் வரை புகுந்துவிட்ட இந்த அஜினோ மோட்டோ, தன் கரங்களை இன்னும் அதிகமாக நீட்டிக் கொண்டிருப்பது அதன் ஆக்கிரமிப்புத் தன்மையையே காட்டுகிறது. சாப்பாட்டில் அதிகம் பிரியமில்லாத நோஞ்சான் குழந்தைகளுக்குப் பல பெற்றோர்கள், இந்த அஜினோமோட்டோ கலந்த நொறுக்குத் தீனி பொட்டலங்களை வாங்கிக் கொடுப்பர். இந்தக் குழந்தைகளும் வீட்டு உணவைவிட இந்தப் பொட்டலத் தீனிகளை அளவுக்கு மீறி தின்பர். ‘இதையாவது பிரியப்பட்டு தின்கிறானே’ என்று ஆசை ஆசையாய் பலரும் இதை அவனுக்கு வாங்கிக் கொடுப்பர். சில மாதங்கள், வர…
-
- 3 replies
- 2.8k views
-
-
தமிழ் இலக்கியத்தில் சித்த மருத்துவம். சித்த வைத்தியம் தமிழ் வைத்தியமாகும். தொன்மையுள் தொன்மையான, நம் தமிழர்க்கே உரிய தனிச் சிறப்பு வாய்ந்தது. தமிழ் நாட்டுப் பண்டைச் சித்தர்கள் இதனைத் தமிழ் மொழியில் உருவாக்கித் தந்துள்ளார்கள். உண்மைத் தவநெறியில் பிறழாது உன்னத நிலையில் வாழ்ந்த சித்தர்கள் தங்கள் அருள் ஞான அறிவால் அதனை நன்குணர்ந்து மிகவும் துல்லியமாக கூறியுள்ளனர். அவர்கள் கூற்றுக்கள் அனுமானங்கள், அல்ல; மறுக்கமுடியாத அனுபவ உண்மைகள். நாளுக்கு நாள் மாறக்கூடியவைகள் அல்ல; நாள் எல்லைக்குள்ளும் நாழிகை வரையறைக்குள்ளும் தீர்க்கக் கூடியவை. இயற்கையில் கிடைக்ககூடிய எண்ணற்ற புல், பூண்டு,மரம்,செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, முதலியவைகளைத் கொண்…
-
- 4 replies
- 8.3k views
-
-
பழங்களின் மருத்துவ குணங்கள் 1.செவ்வாழைப்பழம் கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும் 2.பச்சை வாழைப்பழம் குளிர்ச்சியை கொடுக்கும் 3.ரஸ்தாளி வாழைப்பழம் கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது. 4.பேயன் வாழைப்பழம் வெப்பத்தைக் குறைக்கும் 5.கற்பூர வாழைப்பழம் கண்ணிற்குக் குளிர்ச்சி 6.நேந்திர வாழைப்பழம் இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும் 7.ஆப்பிள் பழம் வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது 8.நாவல் பழம் நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும் 9.திரட்சை 1 வயது குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை…
-
- 3 replies
- 2.8k views
-
-
நீரிழிவுக்கு தீட்டப்படாத கைக்குத்தல் அரிசி சனி, 21 ஜூலை 2007( 12:09 ஈஸ்T ) நீரிழிவு நோயாளிகள் தீட்டப்படாத புழுங்கல் அரிசியை உட்கொண்டால் நல்லது என்று மருத்துவர் மோகன் தெரிவித்துள்ளார். மெட்ராஸ் நீரிழிவு நோய் சிறப்பு மையத்தின் தலைவர் மருத்துவர் வி.மோகன் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைக் கூறினார். இந்தியாவில் 4 கோடி பேர் நீரிழிவு (சர்க்கரை) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை 2025-ம் ஆண்டு 7 கோடியை தாண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். பெற்றோர்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் வருவது நிச்சயம் ஆனால் பெற்றோருக்கு இல்லாமலும் இப்போது உள்ள உணவு பழக்க வழக்கத்தினாலும் உடற்பயிற்சி இல்லாததாலும…
-
- 2 replies
- 2.8k views
-
-
புருவங்கள் முகத்தின் சிறந்த அம்சங்களில் ஒன்று. புருவங்கள் அழகாக இருந்தால் கண்களில் அழகு கூடும். முகமே புது பொலிவு பெறும். ஆனால் புருவங்களை சரியாக வடிவமைப்பதே பலருக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. புருவங்களை முகத்துக்கு ஏற்ற விதத்தில் வடிவமைக்க சில குறிப்புகள்: தேவையான பொருட்கள்:- * டுவீஜர் (புருவத்தில் உள்ள தேவை இல்லாத முடிகளை அகற்ற) * புருவத்திற்கான பிரஷ் (பல் தேய்க்கும் பிரஷ் கூட உபயோகிக்கலாம்) * ஆஸ்ட்ரின்ஜென்ட் (சருமத்தை மிருதுவாக்கி, வலியை குறைக்க) * கண்ணாடி (அவசியம் தேவை) * சிறிய கத்தரிக்கோல் (புருவத்தின் முடியை சரி செய்ய) * ஐப்ரோ பென்சில் முதலில் புருவத்தை மேல் நோக்கி பிரஷ் செய்து விடவும். புருவத்தின் வளைவை விட நீட்டமாக உள்ள முடிகளை கத்தர…
-
- 22 replies
- 5k views
-
-
கண்ணும் உணவும் நம் தினசரி உணவுப் பழக்க வழக்க முறைகளிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன, உதாரணமாக பச்சைக் காய்கறிகள் கண்கள் ஆரோக்கியத்திற்கு ஆற்றும் பணிகளைப் பற்றி நாம் சுருக்கமாக பார்ப்போம். பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. பார்வைக்கு தெரியும் ஒளியின் நீலமான பகுதிக்குத்தான் கண்களின் விழித்திரை அதிகமாக பாதிக்கப்படுகிறது, இது கண் விழித்திரைக்கு பின்பகுதியில் உள்ள ஆயஉரடய-வை சேதம் செய்யலாம். இந்தப் பகுதிதான் நம் கூர்மையான பார்வைக்கு உதவும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. பச்சைக் காய்கறிகளுள்ள வைட்டமின் சத்துகள் (ஆன்டி - ஓxஇடன்ட்ச்) Mஅcஉல -வை ஆரோக்கியமா…
-
- 2 replies
- 1.5k views
-
-
மன அழுத்தம் : தவித்தலும், தவிர்த்தலும் May 7th, 2007 at 1:26 pm (மனஅழுத்தம், மன அழுத்தம்) ( இந்த வார தமிழ் ஓசை களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை முழு வடிவம் ) . இறுக்கமான சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது உலகம். எல்லா துறையிலும் எல்லா பணி நிலைகளிலும் அனைவரும் ஒருவிதமான மன இறுக்கத்துடனேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். மனிதனுக்கு வரும் நோய்களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருபவையே என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது. இதுவே மன அழுத்தத்தைக் கையாள்வதன் தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது. சக மனிதன் மீதான கரிசனையும், ஆத்மார்த்தமான அக்கறையும் விலகி சுயநலச் சிந்தனைகள் விஸ்வரூபமெடுக்கும் போது இத்தகைய இறுக்கமான சூழல்கள் உருவ…
-
- 0 replies
- 1.3k views
-
-
உங்கள் குழந்தையை சரியான முறையில் எழுப்புங்கள். அப்போதுதான் அவள் நாள் முழுக்க உற்சாகமாக, பாதுகாப்பாக உணர்வாள். குழந்தைகள் இரவு முழுக்க நன்றாகத் தூங்கிய பின் நல்ல மூடில் இருப்பார்கள். 2 முதல் 5 வயதான குழந்தைகளுக்குக் குறைந்தது 8 முதல் 10 மணி நேரம் தடங்கல் இல்லாத தூக்கம் தேவை. சில குழந்தைகள் கொஞ்சம் அதிக நேரம் தூங்குவார்கள். எனவே பெற்றோர்கள் அவர்களை எழுப்ப வேண்டியிருக்கும். தூக்கத்திலிருந்து விழிப்பு நிலைக்கு மாறுவது என்பது யாருக்குமே குழப்பமான ஒரு தருணம்தான். குழந்தைகளுக்கு எப்படி இருக்கும் என்று சொல்லவே தேவையில்லை. இந்தத் தருணம் குழந்தைகளுக்கு நாளெல்லாம் மனதில் நிற்கும் வகையில் பெற்றோர்கள் அவர்களிடம் மிகவும் பாசத்தோடு, இரக்கத்தோடு, பரிவுடன் நடந்துகொள்ள வேண்டும். …
-
- 24 replies
- 6.7k views
-
-
முத்து முத்தாக பருக்கள் உள்ளதா? ''பருக்கள் தோன்றுவதற்கே முகத்தில் அதிகளவில் எண்ணெய் சுரப்பதுதான் காரணம். இதைத் தடுக்கவும் பருக்களை விரட்டவும் சில ஆலோசனைகள்.... துண்டுகளாக்கிய வெட்டிவேரை தண்ரில் கொதிக்கவிட்டு, அந்த நீரினால் முகத்தை கழுவுங்கள். இது, முகத்தில் வடியும் அதிகப்படியான எண்ணெயை எடுத்து பருக்கள் மீண்டும் வராமல் தடுக்கும். புதினா, கொத்தமல்லி ஜூஸாலும் முகத்தை அலம்பலாம். டால்கம் பவுடரை பயன்படுத்தக் கூடாது. அப்சார்ப் (Absorb) என்ற பவுடரை (மருந்து கடைகளில் கிடைக்கும்) பயன்படுத்துங்கள். இது எண்ணெய் பசையை எடுத்துவிடும். அக்னில் (Acnil) என்ற மருத்துவ சோப்பை மட்டும் பயன்படுத்துங்கள். இது பருக்களால் ஏற்படும் அரிப்பை போக்கும். அரிப்பு ஏற்படும்போதெல்…
-
- 23 replies
- 6.8k views
-