நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
பன்றிக்காய்ச்சலுக்கு சீனா மருந்து தயாரிப்பு [23 - June - 2009] பன்றிக் காய்ச்சலுக்கு (influenza A(H1N1) சீனா முதற்தொகுதி மருந்தைத் தயாரித்துள்ளதாக நேற்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது. சீனாவின் மருந்தாக்கல் நிறுவனமொன்றே இந்த முதற்தொகுதி மருந்துவகையைத் தயாரித்திருப்பதாக அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஐ.ஏ.என்.எஸ்.செய்திகள் தெரிவித்தன. செப்டெம்பரிலேயே சந்தைக்கு இத்தடுப்பு மருந்துகள் பாவனைக்கு விடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆய்வுகூடங்களில் பாதுகாப்பு பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை முன்சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின் செப்டெம்பரில் இந்த மருந்துவகை சந்தைக்கு வரும் என்று ஹியூலான் உயிரியல் பொறியியல் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வைரஸ் மாதிரியை உலக…
-
- 0 replies
- 713 views
-
-
எம்.மணிகண்டன் பிபிசி தமிழ் (பாலியல் நலம் குறித்து பிபிசி தமிழ் வெளியிட்டு வரும் தொடரின் மூன்றாவது பாகம் இது) தாம்பத்ய உறவில் திருப்தியில்லை, கருத்தரிப்பதில் சிக்கல் ஆகிய பிரச்னைகளுடன் பாலியல் நிபுணரின் ஆலோசனைக்குச் சென்றனர் கிருஷ்ணா - மாலா தம்பதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர்களைப் பரிசோதனை செய்து பார்த்ததில் அவர்கள் இருவருக்கும் உடல் ரீதியாக எந்தப் பிரச்னையும் இல்லை என்பது தெரியவந்தது. பின்னர் இருவரிடமும் தனித்தனியே விவரங்களைக் கேட்கும்போது, தன்னுடைய கணவர் இரவு இரண்டு மணி வரை ஆபாசப் படங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதாக பாலியல் நிபுணரிடம் கூறியிருக்கிறார் மாலா. சமூக ரீதியாக தம்மை நன்றாக நடத்துவதாலும், மரியாதைக்குரியவர் என்பதாலும்…
-
- 0 replies
- 267 views
-
-
''எப்பவும் டயர்டா இருக்கு. சுறுசுறுப்பா எந்த வேலையும் செய்ய முடியலை, முடி கொட்டுது. சத்துக்குறைவா இருக்கும்னு தோணுது. ஏதாவது சத்து மாத்திரை எழுதித் தாங்க டாக்டர்' இப்படிக் கேட்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆரோக்கியமான சரிவிகித உணவை உட்கொண்டதுபோய், காலையில் இரண்டு, மதியம் ஒன்று, இரவுக்கு மூன்று என மாத்திரைகள் மூலமே ஆரோக்கியமாக வாழ்ந்துவிடலாம் என நம்பத் தொடங்கிவிட்டோம். ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்டு டாக்டரின் ஆலோசனைப்படி மாத்திரை எடுத்துக்கொள்வதில் தவறு இல்லை. ஆனால், சுயமாக ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிடுவதால் பாதிப்புகள்தான் அதிகம். யாரெல்லாம் வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம், எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளலாம், வைட்டமின் மாத்திரைகளிலும் பக்கவிளை…
-
- 0 replies
- 2.3k views
-
-
வாழ்க்கையில் நாம் சில விஷயங்களை நிச்சயம் கடைபிடித்தே ஆக வேண்டுமென்ற கட்டாயம் உள்ளது. அதில் முக்கியமான ஒன்று கோபம். எதை அடக்க தெரிகிறதோ இல்லையோ, கோபத்தை அடக்க தெரிந்திருக்க வேண்டும். கோபம் உங்களின் நட்பை மட்டும் கெடுக்கவில்லை. உங்கள் உடல் நலனையும் கெடுக்கின்றது. கோபம் என்பது எந்த நேரத்திலும் வரும். ஆனால் அந்த கோபம் அளவுக்கு அதிகமானால், அவை உடலில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். உதாரணமாக, மன அழுத்தம், இதய நோய், இரத்த அழுத்தம், தலைவலி, போதிய தூக்கம் இல்லாமை போன்றவை.இத்தகைய பிரச்சனைகள் உடலில் வந்தால், பின் உடல் நிலையானது மிகவும் மோசமாகி, பின் இறக்கவும் நேரிடும். இன்றைய நமது ஹெல்த் டிப்ஸ் பகுதியில் கோபத்தால் ஏற்படும் உடல் பிரச்சனைகளைக் காணலாம்… மன அழுத்தம் …
-
- 0 replies
- 798 views
-
-
அதிகரிக்கும் சிறுநீரக நோய் [07 - March - 2007 நாளைய தினம் உலக சிறுநீரக தினமாகப் பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் பலவற்றில் சிறுநீரக நோய் பரவலாகக் காணப்படுகின்றதெனினும், மக்கள் மத்தியில் அது தொடர்பான விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே இருக்கிறது. சர்வதேச சிறுநீரகவியல் சங்கத்தின் இணை அமைப்பாக விளங்கும் இலங்கை சிறுநீரகவியல் மற்றும் உறுப்புமாற்று சிகிச்சை சங்கம் சிறுநீரக நோய் தொடர்பாக இலங்கையர்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்குடன் பாரிய பிரசார இயக்கமொன்றை ஆரம்பிக்கவிருக்கிறது. சிறுநீரக நோயைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் செய்தியைப் பரப்புவதற்கான சுவரொட்டி இயக்கம் முன்னெ…
-
- 0 replies
- 1.1k views
-
-
உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு. இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில டிப்ஸ்: * தினமும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும். * எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும். * வேக வ…
-
- 0 replies
- 602 views
-
-
மனிதனின் குணங்களை இனி விரல்கள் சொல்லும் ஒருவரை எந்த வகையான நோய்கள் தாக்கும் என்பதையும், அவருக்கு மற்றவர்கள் மேல் உள்ள நாட்டத்தையும் விரல் அமைப்பை வைத்தே தெரிந்து கொள்ளலாம் என்கிறது புதிய ஆய்வு ஒன்று. விரல் அமைப்புகளுக்கும் நோய்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து இங்கிலாந்தின் நாட்டிங்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். 2000 பேரை தேர்வு செய்து அவர்களது விரல்கள் பரிசோதிக்கப்பட்டன. இதே போல ஸ்வான்சீ பல்கலைக்கழகம் சார்பிலும் 200 பேரிடம் தனியாக ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வுகளில் தெரிய வந்த தகவல்கள் பற்றி விஞ்ஞானிகள் கூறுவதாவது: ஒருவர் தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே உடலமைப்பு உறுதிப்படுகிறது. விரல்களும் இதில் அடங்கும். ஆள்காட்டி வி…
-
- 0 replies
- 811 views
-
-
தயிர் தரும் பலன்கள் தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. தயிரில் உள்ள புரதம் பாலில் உள்ள புரதத்தை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32 சதவீதம் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91 சதவீதம் உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும். குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தரும். ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும். பாலைத் தயிராக மாற்றும் பக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. தயிரில் இருக்கும் பக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பக்டீரியாவை உருவாக்குகிறது.தயிரில் இருக்கும் புரதம் இது ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி …
-
- 0 replies
- 775 views
-
-
பற்கள் அழகாகவும், பளிச்சென்று வெள்ளையாக இருக்கவும் தினமும் இரு முறை பற்களை துலக்குவோம். இவ்வாறு பற்களை துலக்குவதால் வாயானது புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, ஈறுகள் பலமடைந்து, வாயிலிருந்து வரும் துர்நாற்றம் இல்லாமலும் இருக்கும். ஆனால் இப்படி பற்களை துலக்கினால் மட்டும் தான் பற்கள் வெள்ளையாகுமா என்ன? இல்லை, பற்கள் வெள்ளையாக பல வழிகள் இருக்கிறது. ஒன்று டூத் பிரஸ்-ஆல் அல்லது விரலால் பற்களை துலக்குவது. மற்றொன்று, இப்போது எங்காவது வெளியூருக்குச் செல்லும் போது சில சமயம் பிரஸை மறந்து விடுவோம். அப்போது ஒரு சில உணவுகளை உண்டாலே பற்களானது சுத்தமாகிவிடும். அது என்னென்ன உணவுகள் என்று படித்துப் பாருங்கள்... ஸ்ட்ராபெர்ரி: இயற்கையாகவே ஸ்ட்ராபெர்ரி ஒரு டூத் பேஸ்ட். இதில் சிட்ரஸ் ஆசி…
-
- 0 replies
- 610 views
-
-
பேலியோ உணவு முறையை பின்பற்றுவதால் நீரிழிவு ஏற்படுமா? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்? க. சுபகுணம் பிபிசி தமிழ் 54 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சின்னத்திரை நடிகர் பரத் கல்யாணின் மனைவி உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்துள்ளார். அவர் பேலியோ உணவுமுறையைப் பின்பற்றத் தொடங்கிய பிறகு நீரிழிவு நோய் ஏற்பட்டு, அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அங்கு கோமாவில் இருந்தவர் நேற்று அதிகாலை உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், பேலியோ உணவுமுறையைப் பின்பற்றுவது நிரிழிவு நோய், சிறுநீரக பாதிப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துமா என…
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
மூல நோய் என்பது என்ன? எப்படிக் கண்டறிவது? பட மூலாதாரம்,GETTY IMAGES 21 நிமிடங்களுக்கு முன்னர் இந்திய மக்கள் அதிகமாக பாதிக்கப்படும் நோய்களில் ஒன்றாக தற்போது மூலநோயும் இருக்கிறது. மாறிவரும் உணவு பழக்கங்கள், வாழ்வியல் முறைகள் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 5சதவீத பேர் மூலநோயால் பாதிப்பட்டிருப்பதாக உலக சுகாதார மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவிக்கிறது. மூல நோய் பாதிப்பு குறித்தும் அதன் சிகிச்சை முறைகள் மற்றும் அதிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் மேலும் சில தகவல்களை தெரிந்துகொள்வதற்காக, மூலநோய் சிறப்பு சிகிச்சை நிபுணர் …
-
- 0 replies
- 861 views
- 1 follower
-
-
நாரிப்பிடிப்புகள் வருவது பாரம் தூக்குவதனால் மட்டும்தானா? இல்லை .... நாரிப்பிடிப்புகள் வருவது பாரம் தூக்குவதனால் மட்டும்தானா?பாரம் தூக்குவது மட்டுமல்ல உங்கள் நாளந்த செயற்பாடுகளும் நாரிப்பிடிப்புகளை கொண்டு வரலாம் நாரிப்பிடிப்பு பிரச்சனையால் பாதிக்கப்படாதவர்கள் இருக்கவே முடியாது. தமது வாழ்நாளில் என்றாவது ஒரு நாளாவது இதை அனுபவித்தே இருப்பார்கள். அந்தளவுக்கு மனிதர்களை அதிகம் பீடிக்கும் பிர்சனையாக இருக்கிறது. நாரிப்பிடிப்பு என்று நாம் பொதுவாகச் சொல்வது எமது பின்புறத்தின் கீழ் முள்ளெலும்புகள் உள்ள பகுதியில் ஏற்படும் வலியாகும். Low backpain என ஆங்கிலத்தில் சொல்வார்கள். இதேபோல பின்புறத்தின் மேல் பகுதியிலும் வலி ஏற்படலாம். இதை…
-
- 0 replies
- 1.6k views
-
-
நமது உடல் உறுப்புகளிலேயே, தோலும், அதைச் சார்ந்த முடியும், நகங்களும் மட்டுமே, முழுக்க முழுக்க மரபணுக்களைச் சார்ந்தது என்பது, நம்மில் பலர் அறியாத அறிவியல் உண்மை. ஒரே இனத்தைச் சார்ந்தவர்களாக இருப்பினும் ஒருவர், தோல், முடி, நகம் போல், இன்னொருவருடைய தோல், முடி, நகம் இருப்பதில்லை. இவ்வுலகில் பிறந்த எல்லா மனிதர்களுக்கும், அவர்களுடைய தோலும், முடியும், நகங்களும், அவரவர் மரபணுக்களுக்கேற்ப தனித்துவம் வாய்ந்தவை.எனவே தான், என்றென்றும் கைவிரல் ரேகை, மனிதர்களின் தன்னிகரற்ற, யாராலும் மாற்றவியலாத தனித்துவமிக்க அடையாளமாக, உலகெங்கும் சட்ட ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.கரு உருவான எட்டாவது வாரத்தில் உருவாகி விடும், தோலும், முடியும், நகமும், நம் மரபணுக்களோடு இரண்டறக் கலந்திருப்பத…
-
- 0 replies
- 338 views
-
-
[size=4]உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. அதிலும் அந்த எடையை குறைக்க நிறைய பணத்தை செலவு செய்து குறைக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இவற்றால் உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு முழுவதும் குறைந்துவிடாது. அதற்கு தினமும் வீட்டு சமையலறையிலேயே சூப்பரான மருந்து இருக்கிறது. அத்தகைய வீட்டு மருந்துகளை சாப்பிட்டு வந்தால், உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு நிச்சயம் குறைந்துவிடும். அது என்னென்னவென்று பார்ப்போமா!!![/size] [size=4][/size] [size=4]* உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் க…
-
- 0 replies
- 1.3k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாதிக்கப்பட்ட குழந்தைகள் பலவித அறிகுறிகளை வெளிப்படுத்துவார்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,ஃபெர்னாண்டா பால் பதவி,பிபிசி செய்திகள் 2 ஜூலை 2023 "முதல் முறை இந்த அனுபவம் ஏற்பட்டபோது, அவன் மயக்கத்தில் இருந்ததாகவே நான் உணர்ந்தேன். அதனால் அவனை எழுப்ப முயன்றேன். அமைதியாக இருக்கச் சொன்னேன். ஆனால், அவன் வேறு ஏதோ ஒரு உலகில் மிகத்தொலைவில் இருந்ததைப் போல் நடந்துகொண்டான்." சாண்டியாகோ டி சிலியில் வசிக்கும் ஒலிவியா கார்சியா 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தனது மகன் ஜுவான் - அப்போது 4 வயது - இரவு நேரத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையி…
-
- 0 replies
- 334 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அமண்டா ருகேரி பதவி, பிபிசி 11 ஆகஸ்ட் 2024, 05:56 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் பொதுவாக ஒரு பெண் கருவுறும்போது அவர் என்ன சாப்பிடுகிறார், அருந்துகிறார் என்பதில் அதிக கவனம் செலுத்தப்படுவது வழக்கம். எனவே கருவில் இருக்கும் குழந்தையின் தந்தைக்கு மதுப்பழக்கம் இருந்தாலும் கவனிக்கப்படுவதில்லை. ஆனால் ஒரு புதிய ஆராய்ச்சி, தந்தையின் மதுப்பழக்கமும் கருவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்னும் கருத்தை முன் வைத்துள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக, கர்ப்ப காலத்தில் மது அருந்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்…
-
- 0 replies
- 378 views
- 1 follower
-
-
முயலிறைச்சியை மட்டும் வேறு எதையும் உண்ணாமல் தொடர்ந்து தின்றால் மரணம் சம்பவிக்குமாம். இன்று பிபிசி 2 - கியூ ஐ புரோக்கிராமில் சொன்னார்கள். நமது பிள்ளைகள் காடுகளில் அலைகிறார்கள். அவர்களுக்கு இந்தச்செய்தி பிரயோசனமாயிருக்குமென்று கருத்துக்களத்துக்கு எழுதுகிறேன். உணவில்லாமல் காடுகளில் நெடுநாள் இறைச்சிகளையே உண்பவர்கள் முயலிறைச்சியைத் தனியே தொடர்ந்து உண்பதைத் தவிர்க்கவும். வேறு உணவுகளோடு உண்டால் பிரச்சனையில்லையாம்.
-
- 0 replies
- 1.4k views
-
-
9 மணி நேரங்களுக்கு முன்னர் தினமும் கருத்தடை மாத்திரைகள் சாப்பிட வேண்டியுள்ளது என்று நீங்கள் எப்போதாவது கவலைப்பட்டிருக்கிறீர்களா? அல்லது ஆணுறையைப் பார்த்து வெறுத்தது உண்டா? நல்லது நண்பர்களே, கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் பொது சுகாதாரத் துறை கண்டுபிடிப்புகளில் இரண்டு கருத்தடை சாதனங்கள் அநேகமாக சிறந்தவையாக இருக்கும். அதனால்தான் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 26ஆம் தேதி, புத்திசாலித்தனமான இந்தப் படைப்புகள் - உலக கருத்தடை நாள் - என்று கௌரவிக்கப்படுகின்றன. கருத்தடை சாதனங்கள் மற்றும் அவற்றைப் பயன்படுத்தும் நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரித்தலை நோக்கமாகக் கொண்டு உலகம் முழுக்க உள்ள வெவ்வேறு அமைப்புகளின…
-
- 0 replies
- 703 views
-
-
கற்றுக் கொண்டால் குற்றமில்லை - சோம்பல் அறுங்கள் ஆக்கம்: 'எழுத்துச் சித்தர்' பாலகுமாரன் சங்கருக்கு தூக்கம் என்பது மிக மிகப் பிடித்தமான விஷயம். குறிப்பிட்ட நேரத்தில் சோறு இல்லாமல் இருந்துவிடலாம். தூக்கமில்லாமல் இருந்துவிட முடியுமா? தூங்கினால் தானே சோம்பல் நீங்கும். சோம்பல் நீங்கினால் தானே சுறுசுறுப்பாக இருக்க முடியும். சுறுசுறுப்பாய் இருந்தால் தானே வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். எனவே, வாழ்வை ஜெயிப்பதற்ககு தூக்கம் அவசியம் என்பது சங்கரின் வாதம். வாதம் சரிதான். ஆனால், எப்போது தூக்கம்... எவ்வளவு நேரம் தூக்கம் என்பது மிகப் பெரிய கேள்வி. எட்டரை மணிக்கு பள்ளிக்கூடம் என்றால், ஏழு ஐம்பத்தைந்து வரை தூங்குவது சங்கரின் வழக்கம். ஒன்பது மணிக்கு கல்லூரி என்றால், எட்டு நாற்பது வரை…
-
- 0 replies
- 17.8k views
-
-
பெண்கள் கருத்தரிக்காமலே போனால் உலகம் என்னவாகும்? செயற்கை கருப்பையின் புதிய கண்ணோட்டம் ㅤ பிபிசி ரீல்ஸ் 39 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் அவசியம் இல்லாமல் போனால் என்னவாகும்? பெண்களுக்கு பதில், ஒரு சிறிய கருவி கருவுற்று குழந்தையைப் பெற்றெடுத்தால் எப்படி இருக்கும்? என்ன? அறிவியல் புனைகதையைப் போல் இருக்கிறதா? உலகெங்கிலும் ஆய்வுக்கூடங்களில் விஞ்ஞானிகள் இதனை சாத்தியமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். மனித கருப்பையை ஒத்திருக்கும், அதைப் போலவே செயல்படும் கருவிகளை உருவாக்கும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்.…
-
- 0 replies
- 182 views
- 1 follower
-
-
மன அழுத்தம் விலக ஆசனப் பயிற்சிகள் மனம் விரிந்து குவிந்தது மாதவ மனம் விரிந்து குவிந்தது வாயு மனம் விரிந்து குவிந்தது மன்னுயிர் மனம் விரைந்துரை மாண்டது முத்தியே. மனம் நிம்மதி, மன அமைதி பெற ஒரு சில யோகப் பயிற்சிகள், பிராணாயமாப் பயிற்சிகள் குறிப்பாக சாந்தி ஆசனம் அத்துடன் நெற்றி ஈரத்துணிப்பட்டி, வயிற்று ஈரத்துணிப் பட்டி செய்திட மிக மிக நல்ல பலனை இலகுவாக, சுலபமாக செலவில்லாமல் செய்யலாம். உடல் களைத்தும், சோர்வாகவும் இருக்கும் சமயம் 10 நிமிடம் செய்தால் இரண்டு மணி நேரம் தூங்கியதன் பலன கிட்டி நாம் நல்ல புத்துணர்ச்சி பெறலாம். அற்புதமான காற்று, ஆகாயம் என்ற இரு பஞ்ச பூதங்கள் இணைந்த சிகிச்சையாகவும் உள்ளது. அனைவரும் தினமும் அவசியம் செய்யவேண்டும். சாந்தி ஆசனம் செய்முறை: காலை, மாலை…
-
- 0 replies
- 3.7k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பல தோல் பிரச்னைகளுக்கு புற ஊதா கதிர்கள் தான் காரணமாக இருக்கின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், அனுஜா வைத்யா லத்தி பதவி, பிபிசிக்காக 4 செப்டெம்பர் 2023 சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, நாம் ஒவ்வொருவரும் ஊட்டச்சத்து மிக்க சரிவிகித உணவுகளை உட்கொள்ளவேண்டும். மேலும், தோல் பராமரிப்புக்காக எந்த மாதிரியான பொருட்களை தேர்வு செய்ய வேண்டும், எப்போது மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்பது போன்ற விஷயங்களையும் நாம் அறிந்திருக்க வேண்டும். தோல் பராமரிப்பில் மூன்று முக்கிய விஷயங்களை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும். அவற்றில் முதலாவத…
-
- 0 replies
- 224 views
- 1 follower
-
-
இது முகநூலில் பகிரபட்டிருந்தது இதன் உண்மை தன்மை தெரியவில்லை சிறுநீரககல் பிரச்சினை படித்த மருத்துவர் அல்ல. எனதுஅனுவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன். இன்றய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும்... ஒப்பிடமுடியாதது. அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்து விடும். இரண்டு நாட்கள் முன், சக பதிவர் ” தோழி” என்பவரின் பதிவு படித்தேன். அதை படித்ததிலிருந்து, நான் எனக்கு ஏற்பட்ட சிறுநீரகக்கல் பிரச்சினையை எப்படி `10 செலவில் தீர்வு கண்டேன் என்பதை நாலு பேருக்கு தெரிவிக்கலாம் என்பதெ இந்த பதிவுன் நோக்கம். எனக்கு நான்கு வருடங்களுக்கு ம…
-
- 0 replies
- 505 views
-
-
கலங்கடிக்கும் கல்லீரல் சுருக்கம் "என்.முருகன்" கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், அப்போலோ மருத்துவமனை அன்றாடம் காய்கறிகளை விற்றுப் பிழைப்பு நடத்திவந்த செல்வத்துக்கு, திடீரென வயிற்றில் கடுமையான வலி. அதனைத் தொடர்ந்து மஞ்சள் காமாலை, அடுத்த சில நாட்களிலேயே கல்லீரல் முற்றிலும் செயல் இழப்பு ஏற்பட்டு, இறந்துபோனார். இன்று, அவர் மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் ஆதரவு இன்றித் தவிக்கின்றனர். செல்வத்தின் மரணத்துக்குக் காரணம், கல்லீரல் சுருக்கம் எனப்படும் ‘லிவர் சிரோசிஸ்’ (Liver Cirrhosis) நோய். 10 ஆண்டுகளுக்கும் மேலாக, மது அருந்தியதன் விளைவுதான், கல்லீரல் செயல் இழப்புக்குக் காரணம். மது அருந்தியதன் காரணமாக், கல்லீரல் பிரச்னையால் அவதிப்படுபவர்களின் எண்…
-
- 0 replies
- 1.3k views
-
-
பா.காயத்திரி அகல்யா பிபிசி தமிழ் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்த நாளில் உலகின் பல பகுதிகளை அனைவரும் ஒன்று சேர்ந்து யோகா பயிற்சிகள் மேற்கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக யோகா நிகழ்ச்சிகள் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்படவில்லை. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பலர் தங்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலை ஏற்பட்டுள்ளதால் உடற்பயிற்சி, யோகா என பலவற்றை இணையத்தில் பார்த்து கற்றுக்கொண்டு தங்கள் உடல் நலனை பாதுகாக்கும் முயற்சியில் அனைத்து வயதினரும் ஆர்வம் காட்டுகின்றனர். யோகா பயிற்சியின்போது பொதுவாக சிலர் மேற்கொள்ளும் தவறுகளை என்னென்ன, யோகா மேற்கொள்ளும்போது நாம் கவனத்தில…
-
- 0 replies
- 543 views
-