Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. இன்றைய வாழ்க்கை முறை மிகவும் மாறித்தான் போயிருக்கிறது. பழமை மாறி புதுமை அந்த இடத்தை பிடித்துவிட்டது கூடவே நோயும். பழமை நமது உணவுமுறையும் வாழ்க்கைமுறையும் அறிவியல் நோக்கில் இருந்தன அதை நாம் மறந்து விட்டோம் அதனால் நோய்கள் நம்மை பின்தொடர விட்டுவிட்டோம் . முன்பு குளிக்கும் முறைகூட அறிவியல் அடிப்படையில் இருந்து நோயில் இருந்து காத்தத்து இன்று குளியலே நோயை உண்டாக்குவதாக இருக்கிறது . இன்றைய வழலைக்கட்டி (சோப்பு )வெறுமனே காஸ்டிக்சோடா போட்டு குளிப்பதால் உடலில் இருந்து இயற்கையாக சுரக்கும் எண்ணத் தன்மை முழுவதும் நீங்கி எலும்புகள் கலகலத்து போய் நோயில் மரித்து போகிறனர் . இந்நிலை கூடாதென என எண்ணிய நமது பழம் பெரும் சித்த மருத்துவ அறிவர்…

  2. இளம்பெண்களை அச்சுறுத்தும் எலும்பு தேய்மானம்... தீர்வு என்ன? #ArthritisAlert 40 வயதைக் கடந்த பெண்களுக்குத்தான் இடுப்புவலி, முதுகுவலி, மூட்டுவலி எனப் பல பிரச்னைகள் ஏற்படுவது வழக்கம். காரணம், எலும்பு தேய்மானம். 35 வயதைத் தாண்டியதும் எலும்பு தேய்மானம் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எதனால் எலும்பு தேய்மானப் பிரச்னை வருகிறது... அதற்கு என்ன தீர்வு என்பதை ஊட்டச்சத்து நிபுணர், தாரிணி கிருஷ்ணன் விளக்குகிறார். எலும்பு தேய்மானத்துக்கு முக்கியக் காரணம், உடல் உழைப்பு இல்லாததே. அந்தக் காலத்துப் பெண்களுக்கு இந்தப் பிரச்னை அவ்வளவாக இருந்ததில்லை. ஏனென்றால், அவர்கள் நன்றாக ஓடி, ஆடி வேலை செய்தனர். வீட்டு வேலைகள், தண்ணீர்க் குடம் சுமத்தல், பக்கெட்டுகளில்…

  3. Cardiac Arrest, Heart Attack இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு நேற்றைய தினம் கார்டியாக் அர்ரெஸ்ட் (Cardiac Arrest) ஏற்பட்டது அப்போலோ மருத்துவமனை தெரிவித்திருந்தது. ஊடங்கள் மற்றும் சமூக ஊடங்களில் மாரடைப்பு என சிலர் குறிப்பிட்டார்கள். நிஜத்தில் கார்டியாக் அரெஸ்ட்டுக்கும், மாரடைப்புக்கும் என்ன வித்தியாசம்? மாரடைப்பு : - இதயத்துக்கு செல்லும் பிரத்யேக கரோனரி (Caronary) இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்துக்கு இரத்தம் செல்வதில் தடை ஏற்படுவதைத் தான் மாரடைப்பு (Heart Attack) எனச் சொல்வார்கள். மாரடைப்பு ஏற்படும் போது முதலில் நெஞ்சுப் பகுதியில் ஒரு விதமான பாரம் ஏற்படுவது போல தோன்றும். பெரும்பாலும் மாரடைப்பு ஏ…

  4. அண்மையில் மறைந்த கியூப பொதுவுடைமைத் தலைவர் ஃபிடெல் காஸ்ட்ரோவுக்கு முதுமையில் ஏற்பட்ட நோயிலிருந்து விடுபடப் பெரிதும் உதவியது முருங்கை. காஸ்ட்ரோவுக்கு முருங்கை செய்த உதவி தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் உலாவரும் செய்திகள், அதன் ஒரு பாகத்தை மட்டுமே சொல்கின்றன. காஸ்ட்ரோவின் கெரில்லா படைத் தளபதி சே குவேரா, மெக்சிகோ நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட முருங்கையைக் கியூபாவில் அறிமுகம் செய்தார். அதன்பிறகு ஃபிடெல் காஸ்ட்ரோ தன் வீட்டின் அருகே முருங்கைத் தோட்டத்தை வளர்த்துவந்தார். முதுமையில் தன்னைக் காப்பாற்றிய முருங்கை தாவரத்தின் அற்புதத் திறன்கள் பற்றி, தன் நாட்டு மக்களிடையே காஸ்ட்ரோ உரையாற்றியுள்ளார். அதை அதிசயமான தாவரம் என்று புகழ்ந்து பேசியது மட்டுமல்லாமல், வீடுதோறும் முருங்கை…

  5. அளவுக்கு அதிகமாக திரவ உணவு உயிருக்கு ஆபத்தானதா? உடல்நிலை சரியில்லாதபோது மருத்துவர்கள் பெரும்பாலும் நோயாளிகளை திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ளுமாறு ஆலோசனை வழங்குவார்கள். ஆனால், அதிக தண்ணீரை விரைவாக அருந்தினால் அது ஆபத்தில் முடிவடையும் என்பது 59 வயது பெண் ஒருவரைப் பொருத்தவரை உண்மையாகியிருக்கிறது. சிறுநீர் தொற்று ஒன்றை தவிர்க்க எடுத்த முயற்சிகளை தொடர்ந்து, அந்த பெண்மணி ஹைபோனேடேரேமியா அல்லது நீர் போதை என்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் நோய்கள் குறித்த கட்டுரைகளை எழுதும் மருத்துவர்கள், ஆரோக்கியமான மனிதர்களிடையே ஏற்படும் ஓர் அரிதான நிகழ்வு என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், நோயாளிகள் திரவ உணவு…

  6. தூக்கத்தை இழந்தால் இதயம் பாதிக்கும்: ஆய்வு எச்சரிக்கை கோப்புப் படம் நீண்ட நேரம் பணியாற்றுவதால் ஏற்படும் தூக்கமின்மையின் விளைவாக, இதயம் இயங்குவதில் பெரிய அளவில் பாதிப்பு நேரிடலாம் என்று புதிய மருத்துவ ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது. தீயணைப்புப் படையினர், அவசர மருத்துவக் குழுவினர் உள்ளிட்ட 24 மணி நேர சேவைத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களால் பெரும்பாலும் அன்றாடம் குறைந்த நேரமே தூங்க முடிகிறது. ஜெர்மனியின் போன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் டானியல் கியூட்டிங் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 24 மணி நேர சேவைப் பணியாளர்களில் குறைவான தூக்கத்தை வழக்கப்படுத்திக் கொண்டவர்களுக்கு இதய நோய் சார்ந்த பாதிப்புகள் …

  7. பெப்டிக் அல்சரை தவிர்க்கலாமே..! இன்றைய நவீன வாழ்க்கையில், எம்மில் பலரும் அல்சர் என்ற இரைப்பைப் புண்ணுடனேயே வாழ்கிறோம். அத்துடன் இதணை வயது வேறுபாடின்றி, பாலின வேறுபாடின்றி அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சனையாகவும் இருந்து வருகிறது. எமது, இரைப்பையில், புரத உணவை செரிமானம் செய்ய, இரைப்பை, ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை சுரக்கின்றது. ஒரு நாளில், கிட்டத்தட்ட 1.5 லீற்றர் அளவிற்கு இந்த ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கிறது. இந்த அமிலம், எமக்கு உணவு செரிமானம், கிருமி எதிர்ப்பு, விற்றமின்கள் உட்கிரகிப்பு என பல வகைகளில் பயன்படுகிறது. இரைப்பையில் இந்தஅமிலம் அதிகமாகச் சுரக்கும்போது இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றிலுள்ள மியூகஸ் என்ற படலம் சேதமடைவதையே இரைப்பை அழற்சி (Gast…

  8. குறட்டைக்கு ‘குட்பை’ சொல்லலாம் ஈஸியா..! #SolutiontoSnoring ‘கொர் கொர்...’ என்று காதைப் பிளக்கும் குறட்டைச் சத்தத்தில் தூக்கம் தொலைத்த அனுபவம் அனைவருக்குமே இருக்கும். மேலை நாடுகளில் குறட்டைவிடும் கணவனிடமிருந்து விவாகரத்துக் கோரும் அளவுக்கு விபரீதப் பிரச்னையாகக் குறட்டை உள்ளது. தூக்கத்தில் ஏற்படும் சுவாசக் கோளாறுகள் பொதுவாக, ஏழு சதவிகித ஆண்களையும், நான்கு சதவிகிதப் பெண்களையும் பாதிக்கின்றன. இந்தப் பிரச்னைகளில் குறட்டை பிரதானமானது. குறட்டைவிட்டுத் தூங்கும் மனிதர்கள் நிம்மதியாகத் தூங்குகிறார்கள் என நினைகிறோம். ஆனால், `அது ஒரு மயக்க நிலை; ஆரோக்கியமான தூக்கம் கிடையாது’ என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள். இதனால், காலையில் தலைவலி, உடல்சோர்வு, வேலையில் நா…

  9. தைராய்ட் சுரப்பியை அகற்றலாமா..? இன்றைய திகதியில் திருமணமாகி ஒன்றோ இரண்டோ குழந்தைப் பெற்றத் தம்பதிகள் தங்களின் மாதவிடாய் சுழற்சி நிற்கவிருக்கும் கடைசி கட்டத்திலோ அல்லது மாதவிடாய் கோளாறின் காரணமாகவோ மருத்துவர்களின் கண்காணிப்பு மற்றும் ஆலோசனையின் பேரில் தங்களின் கர்ப்பப் பையை சத்திர சிகிச்சையின் மூலம் அகற்றிக் கொள்கிறார்கள். இதனால் ஒரு சிலருக்கு ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு அவர்கள் தொடர்ந்து மருந்துகளையும், மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளவேண்டியதிருக்கும். அதே போல் தற்போது தைரொய்ட் பிரச்சினை ஏற்பட்டால் அதனையும் அகற்றிவிடலாமா? என கேட்கிறார்கள். ஆனால் இத்தகைய நிலை, பத்தாண்டுகளுக்கு முன் இருந்த நிலை. தற்போது தைரொய்ட் பிரச்சினை எத்தகையதாக இருந்தா…

  10. நீங்களும் ஆகலாம் சர்க்கரை நோயாளி... உபயம்: குளிர்பானங்கள் உலக அளவில் பரவும் தன்மை இல்லாத நோய்களால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சர்க்கரை நோய், உடல் பருமன் மற்றும் இதய நோய்கள். இந்நோய்களின் பெருக்கத்துக்கு முக்கிய காரணம், சர்க்கரை கலந்த குளிர்பானங்கள், செயற்கை ஜூஸ் வகைகளால் தான் என்று உலக சுகாதார மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலே சொன்ன நோய் வகைகளால் ஏற்படும் மரணங்களுக்கு 80% சர்க்கரை கலந்த பானங்களால் தான் காரணியாக இருக்கின்றனவாம். 6.6 கோடி சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்களுடன், உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது இந்தியா. கூடிய விரைவில் சர்க்கரை நோயாளிகளின் தலைமை இடமாக இந்தியா மாறும் வாய்ப்பு அதிகம் என்கின்றன ஆய்வுகள். இந்தியாவ…

  11. நுரையீரல் சளியை குணப்படுத்த... எம்மில் பலருக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்படும். இதற்கு பல காரணங்கள் உண்டு ஒரு சிலருக்கு இந்த மூச்சு திணறல் தொடர்ந்து இருக்கும். இத்தகையவர்களின் நுரையீரல் பரிசோதிக்கப்படும். இதன் போது ஒரு சிலருக்கு ஹைபர் சென்சிவிட்டி நியூமோனிடிஸ் என்ற பாதிப்பு இருப்பது கண்டறியப்படும். நுரையீரலுக்கு ஒவ்வாத பொருட்கள் நுரையீரலை தாக்கி, "நியூமோனிடிஸ்' ஏற்பட்டால், அதனை ஹைபர் சென்சிவிட்டி நியூமோனிடிஸ் என்பார்கள். நச்சுத்தன்மை கொண்ட புகை, தூசி, சுவற்றில் இருக்கும் பூஞ்சை, செல்லப் பிராணிகளின் கழிவுகள் மற்றும் அதன் ரோமங்கள் போன்ற எந்த ஒரு பொருளாலும், நுரையீரலில் ஒவ்வாமை உண்டாகும். அதே போல் சில சமயங்களில் எந்த ஒரு காரணமும் அறியமுடியாத பொருள் ந…

  12. இந்த நோய்கள் எல்லாம் பரம்பரையாக வரலாம்!! எவை தெரியுமா?உங்கள் அப்பாவின் அதே கண்கள், அம்மாவின் பாதம், தாத்தாவின் காது, அத்தையின் சிரிப்பு என அதெப்படி ஒவ்வொருவரிடமிருந்து எல்லாம் கலந்த ஒரு உருவம் வந்திருக்கிறது என வியப்பு சில சமயங்கள் உங்களிடம் தோன்றியிருக்கலாம். உங்கள் அம்மா, அப்பா இருவரிடமிருந்தும் தரப்பட்ட தலா ஒரு ஜீன் நகலில் உருவானவர்தான் நீங்கள். ஆனால் அந்த ஜீன் உண்ணும் உணவு, வாழும் இடம், இருக்கும் சூழ் நிலை இவற்றிற்கும் தகுந்தாற்போல் கருவாக உருவாகும்.அந்த வழியில்தான் சொட்டை, நோய்கள், மன அழுத்தம் எல்லாம் ஒன்று போல் மற்றவற்கும் இருக்கும். அப்படி என்னென்ன நோய்கள் பரம்பரையாக உங்கள் அம்மா, அப்பவிடமிருந்து வரலாம் என பார்க்கலாமா?அதிக கொலஸ்ட்ரால்: சிலர் விளையாட்டு வீரர்களாக இர…

  13. முதுமை இனிமையாக இருக்க..! முதுமையில்ஆண் பெண் என இருபாலாருக்கும் தாக உணர்ச்சி குறையும் அல்லது குறைவாக இருக்கும். ஆகையால் தண்ணீர் அருந்துவது குறைந்து உடல் பலவீனம் அடையலாம். நாளொன்றிற்கு குறைந்தபட்சம் 1.5 லீற்றர் முதல் 2 லீற்றர் வரை தண்ணீர் அருந்துவது அவசியம். ஆனால் அதே தருணத்தில் இதய நோயாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளிகள் மருத்துவர்களின் ஆலோசனைப்படியே நீர் குடிக்கவேண்டும். அதேபோல் முதுமையில் உள்ளவர்களுக்கு தினமும் 5 மணித்தியாலம் முதல் 7 மணித்தியாலம் வரை தூக்கமும் அவசியம். ஏனெனில் நாம் ஆழ்ந்து தூங்கும் போது தான் மூளையில் உள்ள செல்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, நாம் விழித்திருக்கும் போதான செயல்திறனை மேம்படுத்துகின்றன. அத்துடன் இதன் விளைவாகவே ந…

  14. பெண்­களில் எண்­டோ­மெற்­றி­யோசிஸ் நோய் ஏற்­ப­டுத்தும் தாக்கம் பரு­வ­ம­டைந்த பெண் ஒரு­வ­ருக்கு மாதவிடாய் வரு­வது வழக்கம். இதன்­போது பெரும்­பா­லா­னோரில் ஒரு­வித சாதா­ரண வயிற்­று­வலி, வயிற்­றுத்­த­சை­களில் இறுக்கம், அசெ­ள­க­ரியம் (Discomfort) என்­பன தோன்­று­வது வழக்கம். ஆனால் இதற்கு மாறாக சிலரில் அதி­கூ­டிய, பல நாட்கள் நீடிக்கும் வலி ஏற்­ப­டு­கின்­றது. இவ்­வாறு மாத­விடாய் காலத்தில் ஏற்­படும் வயிற்­று­வ­லியின் போது தோன்றும் நோய் அறி­கு­றி­க­ளா­வன, · வலி வழக்­க­மாக மாத­விடாய் வரு­வ­தற்கு முன் தொடங்கி மாத­விடாய் காலத்தில் ஒன்று / இரண்டு நாட்கள் நீடித்து மறையும். · அடி­வ­யிற்றில் தசை­களில் இறுக்கம் ஏற்­ப­டலாம்…

    • 1 reply
    • 447 views
  15. காய்ச்சல்... சில குறிப்புகள்! - நலம் நல்லது! - 1 #DailyHealthDose மருத்துவர் கு.சிவராமன் ஆனந்த விகடனில் வெளியான ‘ஆறாம் திணை’, ‘ஏழாம் சுவை’, ’உயிர் பிழை’ தொடர்கள் மூலம் பரவலான வாசகர்களின் கவனத்தைப் பெற்றவர் மருத்துவர் கு.சிவராமன். இவருடைய `நலம் 360’ மற்றும் `நாட்டு மருந்துக்கடை’ ஆகியவையும் மிக முக்கியமான மருத்துவ நூல்கள். உணவு எப்படி மருந்தாகிறது; இயற்கை, நோய் வராமல் காக்க நமக்கு என்னவெல்லாம் வழங்கியிருக்கிறது என்பதையெல்லாம் ஆதாரபூர்வமாக, அழுத்தமாக எடுத்துச் சொல்பவர். நம் ஆரோக்கியத்துக்கு வழிகாட்ட, இனி விகடன் டாட்.காமில் திங்கள் முதல் வெள்ளி வரை சின்னச்சின்ன டிப்ஸுகளையும் வழங்க இருக்கிறார். பின்பற்றுவோம்... பயன்பெறுவோம்! மருத்துவர் கு.ச…

    • 475 replies
    • 143.4k views
  16. கண்களைத் தாக்கும் அலர்ஜி அலர்ஜி என்­பது சரு­மத்­தில்தான் வரும் என்­றில்லை. கண்­க­ளிலும் வரலாம். கண்­களில் ஏற்­ப­டு­கிற பல பிரச்­னை­களும் ஒவ்­வா­மையின் அறி­கு­றிகள் என்­பதே பல­ருக்கும் தெரி­வ­தில்லை. குழந்­தைகள் மற்றும் பெரி­ய­வர்­க­ளுக்கு கண்­களில் ஏற்­படும் பருவ கால ஒவ்­வா­மைகள் மிகவும் சக­ஜ­மா­னவை. ஏற்­க­னவே அலர்ஜி இருப்­ப­வர்கள், உதா­ர­ணத்­துக்கு ஆஸ்­துமா, சைனஸ் போன்ற சுவாச மண்­டலம் தொடர்­பான அலர்ஜி இருப்­ப­வர்கள், சரும அலர்ஜி உள்­ள­வர்கள், கொசு கடித்தால் உடம்­பெல்லாம் சிவப்பு நிறத் தடிப்பைப் பெறு­ப­வர்கள் போன்­ற­வர்­க­ளுக்கு கண்­க­ளிலும் அலர்ஜி வரு­வ­தற்­கான வாய்ப்­புகள் அதிகம். பொது­வாக கண்­களில் வரக்­கூ­டிய அலர்­ஜிக்கு A…

  17. வேகமான நடைப்பயிற்சி மற்றும் விரைவான சைக்கிள் ஓட்டம் போன்ற தொடர் பயிற்சிகளின் மூலம் 13 வகையான தீவிர புற்றுநோய்களைத் தடுக்கலாம் என ஆய்வு ஒன்றின் மூலம் அறியப்பட்டுள்ளது. லண்டன் பல்கலைக்கழக கல்லூரியை சேர்ந்த ஆய்வுக்குழுவினர், பல்வகையான புற்றுநோய்களால் பாதிக்கப்பட்ட சுமார் 14 லட்சம் மக்களிடம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடத்திய ஆராய்ச்சிகளின் விளைவாக வேகமான நடைபயிற்சி மற்றும் விரைவான சைக்கிள் ஓட்டத்தொடர் பயிற்சி போன்றவற்றின் மூலம் ஈரல் புற்றுநோயை 27 சதவீதம் அளவுக்கு கட்டுப்படுத்தலாம் என்பது தெரியவந்துள்ளது. exercise மேலும், சிறுநீரகம், நுரையீரல், தலை, கழுத்து, மார்பகம், சிறுநீரகப்பை மற்றும் ஆசனவாய் சார்ந்த சிலவகை புற்றுநோய் தாக்கும் ஆபத்தையும் சுமார் 25 சதவீதம…

  18. உப்பில்லா பண்டம் குப்பையிலே.. என்பதைப் போல் எம்முடைய உணவில் உப்பு இல்லாமல் இருக்க இயலாது. அதே சமயத்தில் உப்பிற்கு மாற்றும் உப்பு தான். எம்முடைய உடலைப் பாதுகாக்க வேண்டும்என்றால் அயோடின் கலக்காத உப்பை பயன்படுத்தவேண்டும். இவைஇப்போதும் சந்தையில் கிடைக்கத்தான் செய்கிறது. அதை வாங்கலாம் அல்லது இந்துப்பு வாங்கலாம். இந்துப்பு என்பதை ஆங்கிலத்தில் ஹிமாலயன் ராக் சால்ட் என்பார்கள். இது பெருன்பான்மையாக வெள்ளை நிறத்திலும், சிவப்பு மற்றும்ஊத நிறத்திலும் காணப்படும். சித்தா மற்றும் ஆயுர்வேத முறையில்மருந்துகள் தயாரிக்கும் போது இவை ஒரு கூட்டுக்கலவையாக பயன்படுத்தப்படுகிறது. இந்துப்பிற்கு உடலை குளிர்விக்கும் தன்மையும் உண்டு. பசியைத்தூண்டும் தன்மையும், மலத்தை இளக்கும் தன்மையும் உண்டு.…

  19. குடல் அழற்சி நோய்க்குரிய சிகிச்சை குழந்தைகளின் வளர்ச்சியில் ஆறாவது மாதம் தொடங்கியதும் அவர்களை பெற்றோர்கள்அதிகளவில் கண்காணிக்கவேண்டும். ஏனெனில் அவர்கள் புரண்டு படுத்து எழுந்து தவழ்வதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். இந்த சமயத்தில் அவர்களின் வயிற்றுப்பகுதி தரையில் அழுந்தத் தொடங்கும். ஒரு சில குழந்தைகளுக்கு இந்த நேரத்தில் வயிற்றுப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு குடல் அழற்சி நோய் என்கிற அப்பெண்டிசிட்டிஸ் வரக்கூடும். இது 6 மாத குழந்தைத் தொடங்கி 60 வயது முதியவர்களுக்கு கூட வரலாம். இதற்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனடியாக மருத்துவர்களிடம் காண்பித்து தக்க ஆலோசனையைப் பெறவேண்டும். அலட்சியப்படுத்தினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு அடிவயிறு முழுவதும் த…

  20. முதுகு வலியைக் குணப்படுத்தும் ரேடியோ ப்ரீகொன்சி நியுரோடமி சிகிச்சை எம்மில் பலருக்கும் முதுகிலோ அல்லது உடலில் வேறு எங்கேனும் வலி இருக்கிறது என்பதை உணரமுடியும். ஆனால் வலி எவ்வளவு இருக்கிறது என்பதை எம்மால் சொல்ல இயலாது. அதனால் நோயாளிகளிடம் மருத்துவர்கள் உங்களுக்கான வலி எவ்வளவு என்பதை 0 முதல் 10 என்ற எண்ணிற்குள் சொல்லுமாறு கேட்டுக்கொள்வார்கள். மருத்துவர்கள், வலியை குறித்து, நோயாளி கூறும் எண்ணை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வருவது தான் நோக்கம். வலியை மூளைக்கு கடத்தும் நரம்புகளை, துல்லியமாக கண்டறிந்து, வலிகளை கடத்தாமல் இருப்பதற்கான சிகிச்சைகளை மேற்கொள்கிறோம். இதன் மூலம் வலியை உணராமல் கட்டுப்படுத்தி, சிகிச்சையளிக்கிறோம். இதற்கு வேதியல் ப…

  21. கொலஸ்ட்ராலைக் குறைக்கும் சூப்பர் உணவுகள்! நொறுக்குத்தீனிகளை விரும்பாதவர்கள் யார்? ஒருகாலத்தில் சுண்டல், வேர்க்கடலை, முறுக்கு... என நீண்ட நொறுக்குத்தீனிப் பட்டியல், இன்றைக்கு வேறு ஒரு வடிவம் கொண்டிருக்கிறது. பானிபூரி, பேல்பூரி, பாவ்பாஜி, சிக்கன் பக்கோடா என நீளும் அந்தப் பட்டியலில் பீட்ஸா, பர்கர், சாண்ட்விச் போன்ற மேற்கத்திய உணவுகளும் அடக்கம். இவை கொலஸ்ட்ராலை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவை. இளம் வயதில் சாப்பிடும் கொழுப்புகள் உடலில் அப்படியே தங்கி, உடல்பருமனை ஏற்படுத்தும். அப்படித் தங்கும் கெட்ட கொழுப்புகள் ரத்தக் குழாய்களில் படிந்துவிடும். இது ரத்தஅழுத்தத்தை அதிகரித்து, மாரடைப்புக்கு வழிவகுக்கும். சரி.. அது என்ன கொலஸ்ட்ரால்? …

  22. சுயஇன்பம் காண்பதால் தலைமுடி உதிருமா? தலைமுடி உதிர்வதற்கு சுயஇன்பம் ஓர் காரணம் என்று சொன்னால் நம்புவீர்களா? இது உண்மை தானா என்று பலமுறை கேட்பீர்கள். ஆனால் அது உண்மை தான். ஆண்கள் தங்களுக்கு சுயஇன்பம் பற்றி அனைத்து விஷயமும் தெரியும் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் சுயஇன்பம் குறித்து ஏராளமான அதிர வைக்கும் விஷயங்கள் உள்ளன. நல்ல சுகமான உணர்வை அனுபவிக்க உதவும் இச்செயலால் நன்மைகளையும், அதே சமயம் தீமைகளையும் பெறக்கூடும். ஆனால் அதுவெல்லாம் எவ்வளவு முறை செய்கிறோம் என்பதைப் பொறுத்தது. அதில் சுய இன்பத்தால் பெறும் ஓர் பக்கவிளைவு தான் தலைமுடி உதிர்வது. பொதுவாக ஆண்கள் தங்களது தலைமுடி மீது அதிக அக்கறை கொண்டிருப்பார்கள். சமீப காலமாக உங்களுக்கு தலைமுடி அதிகமாக உதிர்கிறது என…

  23. பார்வையிழப்பை தடுக்கும் கிரீன் லேசர் சிகிச்சை.! எம்மில் பலருக்கும் தற்போது இளம் வயதிலேயே சர்க்கரை நோய்க்கு ஆளாகிறோம். இதனை சரியான முறையில் கட்டுக்குள் வைத்திருக்கவில்லை என்றால் பார்வையிழப்பு, காலிழப்பு, இதய பாதிப்பு, ஆண்மை குறைபாடு என எண்ணற்ற உடலியல் சிக்கல்களுக்கு முகம் கொடுக்கநேரிடும். அதிலும் சர்க்கரையின் கட்டுக்குள் வைக்கவில்லை என்றால் கண்ணின் உள்விழித்திரையில் பாதிப்பு ஏற்படத் தொடங்கி பார்வையிழப்பைத் தோற்றவித்துவிடும். இதனை சரியான தருணத்தில் கண்டறிந்து சிசிக்சை பெறவேண்டும் இதற்காக தற்போது கிரீன் லேசர் என்ற சிகிச்சை முறை பலனை அளித்து வருகிறது. அதிலும் ஐந்தாண்டுகளாகவோ அல்லது பத்தாண்டுகளாகவோ ஒருவருக்கு சர்க்கரை வியாதி இருக்கி…

  24. பார்வையை இழந்தவர்களுக்கு மீளவும் பார்வை ஆற்றலைப் பெற்றுத் தரும் புரட்சிகர சிகிச்சை பார்வை ஆற்­றலைத் தூண்டும் கணினி சிப் உப­க­ர­ணத்தை மூளையில் உள்­ளீடு செய்­வதன் மூலம் பார்வையை இழந்­த­வர்­க­ளுக்கு பார்வை ஆற்­றலை மீளப் பெற்றுத் தரும் புரட்­சி­கர சிகிச்­சையை அமெ­ரிக்க மருத்­துவ நிபு­ணர்கள் மேற்­கொண்­டுள்­ளனர். தனிப்­பட்ட இர­க­சியம் பேணும் கார­ணங்­க­ளுக்­காக பெயர் வெளி­யி­டப்­ப­டாத 30 வயது பெண்­ணொ­ரு­வ­ருக்கு அந்தக் கணினி சிப் அந்த நிபுணர் களால் வெற்­றி­க­ர­மாக பொருத்­தப்­பட்­டுள்­ளது. மேற்­படி சிகிச்சை மேற்­கொள்­ளப்­ப­டு­வது உலகில் இதுவே முதல் தட­வை­யாகும். 7 வருட கால­மாக முழு­மை­யாக பார்வை ஆற்­றலை இழந்து வாழ்ந்த அந்தப் பெண…

  25. குடலிறக்கத்தை குணப்படுத்தும் சத்திர சிகிச்சை எம்மில் பலருக்கும் அவர்களின் வயிற்று தசைகள் மேல் அளவுக்கு அதிகமான கொழுப்பு படிவதால் இது மெதுவாக அந்த தசைகளை பலவீனப்படுத்தும். இவ்வாறு தசைகள் பலவீனமடைவதால் தான் ஹெர்னியா எனப்படும் குடலிறக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும். அதே சமயத்தில் ஒரு சிலருக்கு தசை பலவீனம் என்பது பாரம்பரியமாகக் கூட வரக்கூடியது தான். அதேபோல் யாருக்கேனும் நீண்ட நாளாக மலச்சிக்கல் இருந்து வந்தாலோ அல்லது மலம் கழிக்கும் போது கஷ்டப்பட்டு கழித்தாலோ இதன் காரணமாகக்கூட கடுமையான அழுத்தம் ஏற்பட்டு மென்மையான வயிற்றுத் திசுக்கள் பலவீனமடைவதற்கும், கிழிந்து போவதற்கும் வாய்ப்பு உண்டு. இதன் காரணமாகவும் குடலிறக்கம் ஏற்படலாம். அதே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.