நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
கொழுப்பை அகற்றும் நவீன சிகிச்சை எம்மில் பலரும் சுவைக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட உணவு பதார்த்தத்திற்கோ அடிமையாகி மூன்று வேளையும் அதையே சாப்பிட்டிருப்போம். அளவிற்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு தானே அதனால் நாம் உடற்பருமனுக்கு ஆளாகி வருத்தப்பட்டுக் கொண்டிருப்போம். இந்நிலையில் எம்மைப் போன்றவர்களுக்காகவே ஒரு நவீன சிகிச்சை கண்டறியப்பட்டிருக்கிறது. BTL Vanquish MEஎன்று பெயரிடப்பட்டுள்ள அந்த சிகிச்சையைப் பற்றி காண்போம். இது சத்திர சிகிச்சையற்ற வலியற்ற ஒரு சிகிச்சை ஆகும். இதன் போது, உடலில் எங்கு அதிகப்படியான கொழுப்பு உள்ளதோ அப்பகுதியில் உள்ள சதையை 42 டிகிரி செல்ஷியஸ் வரை சூடு படுத்தியும், அதன் அடியில் இருக்கும் கொழுப்பை 46 டிகிரி வரையிலும் வெப்பமா…
-
- 0 replies
- 416 views
-
-
உலக இதய நாள் செப்டம்பர் 29, 2016 உங்கள் வாழ்வுக்குச் சக்தி கொடுங்கள்! நமது உடலை இயக்கச் சக்தி தரும் இதயத்துக்கு சக்தி தருவதன் மூலம் நம் வாழ்வை மேம்படுத்த முடியும் என்பதை உணர்த்தும் வகையில் ‘உங்கள் வாழ்வுக்குச் சக்தி கொடுங்கள்’ (Power your life) என்பதை, இந்த ஆண்டுக்கான உலக இதய நாளின் மைய நோக்கமாக வைத்திருக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் இதய நோய்களாலும், வாதம் உள்ளிட்ட நரம்புப் பிரச்னைகளாலும் மட்டுமே 17.3 மில்லியன் பேர் மரணத்தைத் தழுவுகிறார்கள். புகையிலை, முறையற்ற உணவுப்பழக்கம், உடல் உழைப்புஇன்மை, மதுப்பழக்கம் ஆகியவை இந்தப் பிரச்னைகளுக்கு மிக முக்கியமான காரணம். எனவே, ஆரோக்கியமான உணவை உண்பது, புகைபிடிப்பதை, மதுவைத் தவிர்ப்பது என்பன போன்ற எளிய நடவடிக்கைகள் மூலம் இ…
-
- 1 reply
- 2.1k views
-
-
பெண்களில் கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் தோன்றுவதற்கான காரணங்கள் பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் முதல் இடத்தைப் பிடிப்பது மார்பகப்புற்றுநோய். அடுத்ததாக கர்ப்பப்பை வாசல்புற்றுநோய் உள்ளது. வெளிநாடுகளில் இக்கர்ப்பப்பை வாசல்புற்று நோயின் தீவிரம் ஒழுங்கான பரிசோதனைகள் மற்றும் தடுப்புமுறைகளால் கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் எமது நாட்டைப் பொறுத்தவரையில் தொடர்ந்தும் இந் நோயின் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. இதற்குப் பிரதான காரணம் மக்கள் மத்தியில் இப்புற்றுநோய் தொடர்பான பொது அறிவும் பரிசோதனைகள் மற்றும் தடுப்பு முறைகள் தொடர்பான ஆலோசனைகள் ஏனைய வெளிநாடுகளுடன் ஒப்பிடும்போது குறைவாக உள்ளமையே ஆகும். எனவே இப்புற்றுநோய்…
-
- 0 replies
- 529 views
-
-
முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, பி, சி, புரதம், இரும்புச் சத்து உள்ளது. 1. முருங்கை இலையை எடுத்த பின் மிஞ்சிய காம்புகளை மட்டும் நறுக்கி சேர்த்து ரசம் வைத்து உட்கொள்ள கை, கால், அசதி நீங்கும். 2. முருங்கைக் கீரையை வெள்ளரி விதையுடன் அரைத்து வயிற்றின் மேல் கனமாகப் பூச நீர்க்கட்டை உடைத்து சிறுநீரை பெருக்கும். 3. முருங்கைக் கீரையை உணவுடன் அதிகம் வேகவிடாத பொறியலாக சமைத்து உண்ண கழுத்து வலி படிப்படியாக நிவாரணம் கிடைக்கும். 4. முருங்கைப் பூ ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுத்தப்படுத்தி, அதை 250 மி.லி. பசும்பாலில் கொதிக்க வைத்து அதனுடன் கற்கண்டு சேர்த்து, ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் குடித்து வர ஆண்மை பெருகும். நரம்புத் தளர்ச்சி நீங்கும். 5. …
-
- 3 replies
- 998 views
-
-
உடலில் உள்ள திசுக்களுக்குத் தேவையான உணவும், பிராண வாயுவும் எப்பொழுதும் கிடைக்கச் செய்யவும், அந்த திசுக்கள் உண்டாக்கும் கழிவுப் பொருட்களை வெளியேறச் செய்யவும் ஒரு அமைப்பு நம் உடலுக்குத் தேவைப்படுகிறது. இந்த அமைப்புதான் இரத்த ஓட்டம் என்பது. இந்த இரத்த ஓட்டம் ஒருவித அழுத்தத்தினால்தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதற்கு இரத்த அழுத்தம் என்று பெயர். 90 சதவீதம் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ேஹார்மோன்களின் அளவு மாறுதல், சிறுநீரகக் கோளாறுகள், இரத்தம் சிறுநீரகத்துக்குக் குறைவாகச் செல்லுதல், இருதய தமணி சுருங்குதல் போன்றன ஏற்படும். கர்ப்பத்தடை மாத்திரை உட்கொள்ளுதல் வேண்டாத தீய பழக்கங்களாலும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. கவலை, பதற்றம், பயம், மன இறுக்கம் போன்றவைகளால் இரத்த அழு…
-
- 0 replies
- 299 views
-
-
இதய நோய் Heart Attack வராமல் தடுக்கும் சிறந்த வழிகள்! 2020-ம் ஆண்டில், இதயநோய் ஒரு கொள்ளை நோய் போலப் பரவும் என்று ஒரு மருத்துவ ஆய்வு கூறியிருக்கிறது. அந்த அபாயத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள, இப்போதிலிருந்தே உணவு, உடற் பயிற்சி, வாழ்க்கைமுறை இதிலெல்லாம் கவனம் செலுத்தவேண்டும். உணவுக் கட்டுப்பாடு: முதலாவதாக, உடல் எடையைக் குறைப்பதற்காக. அடுத்து, ரத்தத்தில் கொழுப்பு சத்தைக் குறைக்க, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க, பாதுகாப்பான சத்துகளைப் பெற… என்று மேலும் பலவித காரணங்களுக்காக உணவுக் கட்டுப்பாடு அவசியமாகிறது. கட்டுப்பாடான உணவால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய் களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். கட்டுப்பாடான உணவும் அதன் அளவுகோலும்: …
-
- 7 replies
- 19.7k views
-
-
கோலா பானங்கள் புற்றுநோயைத் தூண்டுமா? சில வருடங்களுக்கு முன்பு பிரபல கார்பனேட்டட் குளிர்பானம் ஒன்றின் நூற்றாண்டு கால ரகசியம் வெளிப்பட்டது. அதில், சுவையைக் கூட்ட, திரும்பத் திரும்ப குடிக்கத் தூண்ட ஆல்கஹால் கலக்கப்படுகிறது எனத் தெரியவந்தது. தற்போது, மற்றொரு பிரபல குளிர்பானம் ஒன்றில் புற்றுநோய்க்குக் காரணமான ரசாயனம் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் விரும்புவது குளிர்பானங்களைத்தான். பல்வேறு நிறங்களில், சுவைகளில் கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்கள், காண்போரை சுலபமாக ஈர்க்கும் தன்மை உடையவை. இந்திய உணவுத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு, குளிர்பானங்கள் தயாரிக்க எவ்வளவுதான் வரைமு…
-
- 0 replies
- 519 views
-
-
ஏன்... மூக்கில், உள்ள முடியை அகற்றக் கூடாது என உங்களுக்கு தெரியுமா? ஆரோக்கியம் சார்ந்து நாம் தினமும் காட்டும் அக்கறையை விட, அழகு சார்ந்து நாம் அன்றாடம் காட்டும் அக்கறை தான் அதிகமாக இருக்கிறது. அழகாக உடை உடுத்த வேண்டும், மிடுக்காக இருக்க வேண்டும், ஷூ பாலிஷ் செய்ய வேண்டும், முடிக்கு க்ரீம் பயன்படுத்துவது, தாடி ட்ரிம் செய்வது, மூக்கின் முடியை கூட மொத்தமாக அகற்றுவது என நாம் இவற்றை தினமும் செய்கிறோம். சமீபத்திய ஆய்வில், தாடியை கிளீன் ஷேவ் செய்வதே தவறு, தாடி இருப்பதால் நல்ல கிருமிகள் வளர்கின்றன.இவை, முகத்தின் சருமத்திற்கு நன்மை விளைவிக்கின்றன என கண்டறியப்பட்டது. அதே போல மூக்கின் முடியை முழுமையாக தினமும் அகற்றுவதும் தவறு என கூறுகின்றனர். உண்மையில் மூக்கின் முடி பாக…
-
- 0 replies
- 594 views
-
-
வாழைப்பழத்தோல் தரும் மருத்துவம் வாழைப்பழத்தோல் தரும் மருத்துவம் Posted By: online3@uthayan.comPosted date: July 28, 2016in: மருத்துவம் வாழைப்பழம் எல்லாருக்கும் விருப்பமான பழம்தான். ஆனால் வாழைப்பழத் தோலின் பலன்களை நீங்கள் தெரிந்து கொண்டால், அதனை வீசி எறிய கொஞ்சம் யோசிப்பீர்கள். முள்ளை எடுக்க வேண்டுமா? முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டுமென்பதில்லை. வாழைப் பழத் தோல் இருந்தா போதும் அன்பர்களே! கைகளிலோ, பாதத்திலோ, மரச்சில்லுகள் அல்லது முள் குத்தினால், வலியில் சுருக்கென்று உயிரே போகும்படி இருக்கும். இதனை எடுக்க முடியாமல் டாக்டரிடம் சென்று , கத்தி காயங்கள் வாங்கியவர்களும் உண்டு. இந்த அவஸ்தை எல்லாம் இனி வ…
-
- 3 replies
- 530 views
-
-
மறதி நோயை (அல்சீமர் நோய்) தடுக்கக்கூடிய காய்கறிகள்! உடல் ஆரோக்கியத்திற்காக உட்கொள்ளப்படும் காய்கறிகள் மறதிநோய் எனப்படும் அல்சீமர் நோய் ஏற்படாமல் தடுக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் உள்ள சத்தான கொழுப்புகளும், காய்கறிகளில் உள்ள தாவர எண்ணெய்களும்தான் அல்சீமரை தடுக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். சிகாகோவில் உள்ள ஆய்வாளர்கள் 65 வயதிற்கு மேற்பட்ட 815 நபர்களிடம் இந்த ஆய்வினை மேற்கொண்டனர். அவர்களுக்கு உயர்தர சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பால் பொருட்களை கொடுத்து சோதனை செய்தனர். அதில் வியப்பூட்டும் மாற்றம் ஏற்பட்டது. 80 சதவிகிதம் வரை அல்சீமர் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. காய்கறிகளில் உள்ள நல்ல கொழுப்புகள் ரத்த நாளங்களில் உள்ள கெட்ட …
-
- 0 replies
- 900 views
-
-
பகல் பொழுதில் ஒரு மணி நேரம் உறங்குவீர்களா? ஆய்வில் அதிர்ச்சி தகவல் பகல் பொழுதில் ஒரு மணி நேரம் உறங்குவது நீரிழிவு பாதிப்பு ஏற்படும் அபாயத்தை 45 சதவீதத்தால் அதிகரிப்பதாக ஜப்பானிய ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த ஆய்வின் பெறுபேறுகள் உலகமெங்குமுள்ள 307,237 பேரை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட 21 ஆய்வுகளை அடிப்படை யாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பகல் பொழுதில் சுமார் 60 நிமிடங்கள் உறக்கத்தில் ஆழ்பவர்களுக்கு அவ்வாறு உறங்காதவர்களுடன் ஒப்பிடுகையில் நீரிழிவு ஏற்படும் அபாயம் 45 சதவீதம் அதிகமாகவுள்ளதாக டோக்கியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் யமடா த…
-
- 0 replies
- 337 views
-
-
குறுந்தொடர்- 1: புரதச் சுரங்கம் நீயென்ன பெரிய பருப்பா?‘ என்று உதிரியாகத் திரிபவர்கள், சிறுரவுடி களைப் பார்த்துச் சினிமாவில் கேட்பதைப் பார்த்திருக்கலாம். மனிதர்கள் எப்படியோ தெரியாது, நிச்சயமாகச் சாப்பிடப்படும் ‘பருப்பு’, பார்க்கச் சிறிதாக இருந்தாலும் பெரிதுதான். காரணம் அதில் இருக்கும் அபரிமிதச் சத்து, அதிலும் தசைகளையும் உடலையும் ஊட்டி வளர்க்கும் புரதச் சத்து. பருப்பு வகைத் தாவரங்களின் காய்களையும் விதைகளையும் மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சாப்பிட்டு வருகிறார்கள். குழந்தைக்குச் செரிமானத் திறன் மேம்பட்டவுடன், முதலில் தரப்படுவது சோறும் மசிக்கப்பட்ட பருப்பும் சேர்ந்த பருப்புச்சோறுதான் (கொங்கு பகுதி அரிசி பருப்பு சாதம் கதை தனி). அதேபோலத் …
-
- 7 replies
- 8k views
-
-
நாற்பது வயதைக் கடந்துவிட்டாலோ அல்லது உயர் குருதி அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தவில்லை என்றாலோ இதயம் பாதிக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்து இருக்கிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் இதய பாதிப்பிற்காக சிகிச்சை எடுக்கும் போது சத்திர சிகிச்சையை தெரிவு செய்வதில்லை. மருத்துவர்கள் நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசினாலும் இதயத்தில் சத்திர சிகிச்சையை மனமுவந்து செய்துக்கொள்வதில்லை. இதனை கருத்தில் கொண்டே மருத்துவ உலகம் இதய பாதிப்பிற்கு தற்போது சத்திர சிகிச்சையில்லாமல் பல புதிய சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறர்கள். அதில் ஒன்று தான் கீலேசன் தெரபி. எம்முடைய உடல்நலம் பாதிக்கப்பட்டால் மருத்துவமனைகளில் குளுக்கோஸ் ஏற்றுவார்களே அதே போன்றது தான் இந்த கீலேசன் தெரப…
-
- 0 replies
- 669 views
-
-
மத்தியத்தரைக்கடல் பகுதி உணவு வகைகள் இதய நோயாளிகளின் ஆயுட்காலத்தை இது நீட்டிக்கிறது என இத்தாலியில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு கூறுகிறது. பழங்கள், காய்கறிகள், மீன், கடலை வகைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய்யை ஆகியவை இவற்றில் அடங்கும்.சிவப்பு இறைச்சி மற்றும் வெண்ணையை உண்பவர்களை விட இவற்றை உட்கொள்பவர்கள் 37 சதவீதம் கூடுதலாக உயிர்வாழும் வாய்ப்பு உள்ளதாம். BBC
-
- 1 reply
- 455 views
-
-
ஆரோக்கியம் காக்கும் 6 உணவுகள் ஃபேஷன், டிரெண்ட் எனக் கருதி, தெருவோரக் கடைகளிலும் ஃபாஸ்ட்ஃபுட் கடைகளிலும் கிடைப்பதை உண்டு, உடலை நோய்க்காடாக மாற்றி இருக்கிறோம். பாரம்பரிய உணவுகளில்தான் ஆரோக்கியம் நிறைந்திருக்கிறது. அவற்றை உண்டுதான் நம் முன்னோர் உடல் வளர்த்து; உயிர் வளர்த்து இன்புற்று வாழ்ந்தனர். அப்படி, ஆரோக்கியம் காக்கும் ஆறு உணவுகள் பற்றி இங்கே பார்ப்போம்... சோளம்: சோளத்தில் புரதம்,கொழுப்புச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, தயமின், நியாசின் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. வயிற்றுப்புண்ணுக்கு மிகவும் உகந்தது. சர்க்கரை நோய் , ரத்தச்சோகை உள்ளவர்களுக்கு சோ…
-
- 0 replies
- 739 views
-
-
அதீத நோய் எதிர்ப்பு சக்தியை சமநிலைப்படுத்தும் மருந்துக்கு மன அழுத்தத்தை போக்கும் சக்தி மனித உடலில், அதீதமாக செயல்படும் நோய் எதிர்ப்பு சக்தியை சமநிலைப்படுத்தும் மருந்துகளுக்கு, மன அழுத்தத்தைக் குணப்படுத்தும் சக்தி உள்ளதாக மூத்த விஞ்ஞானிகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 350 மில்லியன் மக்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள்; அதில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் அதீத நோய் எதிர்ப்பு செயல்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி மற்றும்மூளையின் செயல்பாடுஆகியவற்றின் ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்தியிருப்பது அந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான புரட்சியின் தொடக்கம் எனக் கூறுகிறார் லண்டன் கிங்ஸ் கல்லூரியின் பேராசிரியர் கார்மன் பாரிய…
-
- 0 replies
- 277 views
-
-
http://img.vikatan.com/news/2016/08/20/images/பற்கள் 2.jpg டூத் பேஸ்ட் விளம்பரங்களில் ஒரு பிரஷ் முழுக்க பேஸ்ட்டைப் பிதுக்கிப் பல் துலக்குவதைப் பார்த்திருப்போம். உண்மையில் அவ்வளவு பேஸ்ட்டைப் பயன்படுத்தக் கூடாது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? டூத் பேஸ்ட்டில் ஃபுளோரைடு உட்பட பல்வேறு ரசயானப் பொருட்கள் உள்ளன. எனவே, ஒரு பட்டாணி அளவு எடுத்துத் பல் துலக்கினாலே போதும்; அதற்கு மேல் சேர்ப்பதால், அளவுக்கு அதிகமான ஃபுளோரைடு உடலில் சேரும். 'அப்ப, ஃபுளோரைடு பல்லுக்கு நல்லது இல்லையா ?' என்று கேட்கலாம். எதுவும் அளவுக்கு மிஞ்சினால்தான் ஆபத்துதான்! ஃபுளோரைடு கலந்த பற்பசைகளைப் பயன்படுத்துமாறு பல் மருத்துவக் கழகங்களும், பல் மருத்துவர்களும் பொதுவாக அறிவுறுத்துகிறார்கள். நாம…
-
- 2 replies
- 463 views
-
-
முக்கிய ரத்தக்குழாய் வெடிப்பை தடுக்கும் கிரீன் டீ : ஆய்வில் தகவல் கோப்புப் படம்: ஆர்.ரகு. அடிவயிறு, இடுப்பெலும்புப் பகுதி, மற்றும் கால்களுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய ரத்தக்குழாய் வெடிக்காமல் கிரீன் டீ தடுக்கும் என்று ஜப்பான், கீயோட்டோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கிரீன் டீ-யில் உள்ள பாலிபினால் ரத்தக்குழாய் வெடிப்பை தடுப்பதாக எலிகளை வைத்து மேற்கொண்ட பரிசோதனைகளில் தெரியவந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ரத்தக்குழாய் வெடிப்பு திடீரென நிகழ்வதால் சிகிச்சைக்கு நேரமின்றி உயிரிழப்பு ஏற்படுகிறது. ஆய்வாளர்களில் ஒருவரான கென்ஜி மினகட்டா தெரிவிக்கையில், “அடிவயிறு, இடுப்பெலும்பு மற்றும் கால்களுக்கு ரத்தத்த…
-
- 0 replies
- 566 views
-
-
டிமென்ஷியா எனப்படுகின்ற மறதி நோயினால் உலகெங்கும் நான்கு கோடியே அறுபது லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாயிரத்து ஐம்பதுக்குள் இந்த எண்ணிக்கை மூன்று மடங்காகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
-
- 0 replies
- 296 views
-
-
ஒராண்டுக்கு முன்னால், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த என்னுடைய தந்தையைப் பார்த்தபோது, வலியாலும் வேதனையாலும் படுக்கையில் புலம்பிக்கொண்டும் புரண்டுகொண்டும் இருந்தார். அவருடைய அரற்றல் என் காதுக்கு எட்டாத தொலைவுக்கு ஓடிவிட வேண்டும் என்றே விரும்பினேன். 84 வயதான அவர் எனக்கு உற்ற நண்பர். கையிலும் உடலின் வேறு பகுதியிலும் ஊசியாலும் ரப்பர் குழாய்களாலும் செருகப்பட்டு, தாள முடியாத வேதனையில் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். அவரால் டாக்டர்களையோ செவிலியர்களையோ எதிர்த்து எதுவும் பேச முடியவில்லை. ரப்பர் குழாய்களைப் பிய்த்துப் போடுகிறார் என்பதற்காக ஒரு கையைக் கட்டிலோடு சேர்த்துக் கட்டி வைத்திருந்தார்கள். மருத்துவமனை என்பது நோயாளிக்கு எந்தச் சுகமும் கண்ணியமும் கூடாது என்று நினைக்கிறத…
-
- 0 replies
- 506 views
-
-
மாரடைப்பு - இதய நோய் தாக்காமல் தடுக்க உலகின் மிகக் கொடிய உயிர்க் கொல்லி நோய்களில் முக்கியமானது மாரடைப்பு (Heart attack) நோய் ஆகும்! என்னங்க சற்று நேரத்திற்கு முன்தான் என்னிடம் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றோம். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு வழி யிலேயே உயிர் பிரிந்து விட்டது என்று கூறினர் என்று சொல்லி கோவென அழும் உறவினர்கள் ஏராளம்! இரவெல்லாம் எங்களிடம் நன்றாக பேசிக் கொண்டிருந்து தூங்கப் போனவர்; விடியற்காலை எழுந்து விடும் பழக்கம் உடையவர், பொழுது விடிந்தும் இவ்வளவு நேரமா தூங்குகிறார் என்று எழுப்பப் போனால், எழும்பவில்லை; தூங்கும் போதே சில மணி நேரங்கள் முன்பே அவர் இறந்து விட்டார் என்…
-
- 1 reply
- 1.1k views
-
-
உங்களை உறைய வைக்கும்... 20 "எக்ஸ்ரே" படங்கள்.
-
- 0 replies
- 350 views
-
-
பக்கவாதத்தை குணப்படுத்தும் ஆராய்ச்சியில் முக்கிய வெற்றி கோப்புப்படம் முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயத்தால் நீண்ட காலமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எட்டு பேரின் நடமாட்டம் மற்றும் உணர்வுகளை மீட்டெடுக்கும் ஆராய்ச்சியில் பாதியளவு வெற்றியடைந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இது அறிவியல் ஆய்வில் மிக முக்கிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது. செயற்கை உறுப்புக்களை இயக்க மூளைக்குப் பயிற்சி அளிப்பதற்காக, மெய்நிகர் மற்றும் உணர்வூட்டும் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சி அந்த நோயாளிகளுக்கு ஓராண்டாக அளிக்கப்பட்டது. பிரேசில் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், அந்த நோயாளிகளிடம் ஆச்சரியப்படும் வகையில் சில மாற்றங்களைக் கண்டனர். செயற்கை உறுப்புக்களைக் க…
-
- 0 replies
- 283 views
-
-
40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது. பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண்களின் உயிரணுக்களை அழிக்கிறது. ஆண்மையை அழிக்கும் பிராய்லர் குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி. “பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்”. …
-
- 2 replies
- 498 views
-
-
Image copyrightGETTY ஆஸ்துமாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வயது வந்தவர்களுக்கு உதவும் வகையில் பிரிட்டனில் உள்ள விஞ்ஞானிகள் சோதனை அடிப்படையில் ஒரு மாத்திரையை கண்டுபிடித்துள்ளனர். கட்டுப்படுத்த முடியாத ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்ட பிறகு அவர்களின் அறிகுறிகள் மேம்பட்டிருப்பது உணரப்பட்டதாக லெஸ்டர் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட சிறிய சோதனை முயற்சியில் தெரிய வந்துள்ளது. லான்செட் சுவாச மருத்துவதிற்கான இதழ் இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளன. ஆஸ்துமா யு.கே என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த மருத்துவர் சமந்தா வாக்கர் கூறுகையில், இந்த ஆராய்ச்சியை எச்சரிக்கையுடன் கூடிய நேர்மறை சிந்தனையுடன் பார்க்கப்பட வேண்டும். ஆனால், இது மருந்துக் கடைகளில் …
-
- 1 reply
- 285 views
-