யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். மேலதிக விளக்கங்களை / விதிகளை இங்கே பார்வையிடலாம்.
11 topics in this forum
-
வீதியோரம் ( சாம்பலில் பூத்த மலர்கள் ) அந்தத் தார் வீதியில் மிக வேகமாய் வந்த ஜீப் வண்டி வீதியோரத்தில் இருந்த வாகன தரிப்பிட தார் பொட்டலில் அரை வட்டமடித்து நிக்கிறது. அதில் இருந்து ஒரு இளைஞனைத் தள்ளி விட்டுவிட்டு தொடர்ந்து ஒரு பெண்ணையும் இரண்டு பிள்ளைகளையும் சப்பாத்து காலால் உதைத்து தள்ளி விழுத்தி விட்டு நிக்காமல் வந்தவழியே செல்கின்றது.அப்போது அதிகாலை நான்கு மணி இருக்கும் கருக்கல் கலைந்து பறவைகளின் ஒலியோடு விடியல் தொடங்குகின்றது. அந்த இளைஞன…
-
-
- 11 replies
- 531 views
- 1 follower
-
-
எமது சமுதாயம் சில உளநம்பிக்கைகள் அல்லது பயங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இவற்றில் இருந்து மீள்வதற்கு முயலாமல் ஒன்றின் தார்ப்பரியத்தை கேள்விக்குட்படுத்தாமல் அல்லது அதனால் ஏற்பட்டுக் கூடிய விளைவுகளை சீர்தூக்கிப் பார்க்காமல் அல்லது அதனையும் மீறிய சமுதாய பயம் காரணமாக பல தலைமுறைகளாக சிலவற்றை தலைமுழுகி விடாமல் தொடர வேண்டும் என்பதற்காகவே தாமும் வாழ்ந்து கொண்டிருப்பது மட்டுமல்லாமல் தமது அதிகாரத்தை பயன்படுத்திக்கூட தமது சந்ததியினரையும் அதனை பின்பற்றி நடக்க செய்து கொண்டு வருகிறது. அதிலும் பெண்பிள்ளைகள் சார்ந்து கேட்கவே தேவையில்லை. இதனடிப்படையில் எமது தமிழ் பெற்றோர்கள் தமது பெண்பிள்ளைகள் சார்ந்து இன்னமும் கொண்டிருக்கும் பயம் அல்லது சந்தேகம் அல்லது அடக்குமுறை சார்ந்த பதிவே இது. பெண் பி…
-
-
- 5 replies
- 299 views
-
-
2002ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவத்தை, சமீபத்தில் ஏற்பட்ட சில விவாதங்களின் பின்னணியில் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் பதிவை எழுதுகிறேன். அன்று விடுதலைப் புலிகள் வழங்கிய பட்டங்கள் குறித்தும், அவர்கள் இல்லாத இன்றைய காலத்தில் வழங்கப்படும் பட்டங்கள் குறித்தும் சமீபத்தில் யாழ் கருத்துக்களத்தில் சிலர் ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்திருந்தனர். அந்த விவாதத்தில் நான் பார்வையாளனாக அமைதியாக இருந்தேன். ஆனால் யாழ் இணையத்தில் மாமனிதர் டொக்டர் சத்தியமூர்த்தி நினைவுநாள் அறிவிப்பைப் பார்த்தபோது, அதில் குறிப்பிடப்பட்டிருந்த ‘வெண்புறா’ திட்டம் குறித்த தகவல், இந்நினைவுகளை மீண்டும் எழுப்பியது. தாயகத்தில் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், காந்தி …
-
-
- 16 replies
- 829 views
- 1 follower
-
-
இரண்டு கிழமைக்கு முன்பு... தோட்டத்தில் இருந்த ரோஜா செடிகளின் கிளைகளை வெட்டும் போது... முள் ஒன்று நடு விரலில் குத்தி விட்டது. இப்படி வேலை செய்யும் போது, வழமையாக குத்தினாலும்... அடுத்த நாளில், முள் குத்திய இடமே தெரியாமல் மாறிவிடும். இம்முறை, அது குத்திய சில மணி நேரங்களில்... விரல் பயங்கரமாக வீங்கி, சரியான குத்து வலியாக இருந்தது. நானும், இரண்டு நாள் பொறுத்து வைத்தியரிடம் செல்வோம்... அது வரை எமக்குத் தெரிந்த வீட்டு வைத்தியங்களான "ஐஸ்" ஒத்தடம் கொடுத்தல், "நோ" கிறீம் பூசுதல், நோவை குறைக்க சில குளிசைகள் என்று போட்டும், பலன் கிடைக்காததால்... குடும்ப வைத்தியரிடம் போக... அவர் இதுவரை நான் செய்த வைத்திய முறைகளை கேட்டு விட்டு, சிலவேளை கிருமி தொற்று ஏற்பட்டிருக்க சாத்தியக் கூறுகள் உள்ள…
-
-
- 7 replies
- 546 views
- 1 follower
-
-
விடுமுறையில் வாங்கிய வில்லங்கமான நகை விடுமுறைக்கு நாட்டுக்குப் போவதாக இருந்தால் பொதுவாக என் குடும்பத்தைத் தவிர வேறு யாரிடமும் அதை ப் பற்றி நான் கதைப்பதில்லை. “எதற்கு வில்லங்கத்தைச் சும்மா வாங்க வேண்டும்?” என்ற உயரிய எண்ணம்தான் அதன் காரணம். ஆனால், சில சமயம் வில்லங்கம், நாங்கள் தேடாமல் எங்களைத் தேடித் தானாக வந்து விடும். அடுத்த நாள் எனது பயணம். செய்ய வேண்டிய வேலைகள் சில இருந்தன. அப்போது அலைபேசி அழைத்தது. அழைப்பு நியூசிலாந்தில் இருந்து வந்திருந்தது. அங்கு வசிக்கும் எனது உறவினர் ஒருவர். என்னை “தம்பி” என்று உரிமையோடு அழைப்பார். நானும் அவரின் பெயரின் பின்னால் “அக்கா” சேர்த்துஅழைப்பேன். “என்ன, சிறீலங்கா போறியாம்?” “சிறீலங்காவுக்கா? யார் சொன்னது?” “விடாதை . கதை விடாதை . எனக்க…
-
-
- 2 replies
- 161 views
- 1 follower
-
-
எனது பேரனின் சில செய்கைகள் அல்லது பேச்சுக்கள் எனக்கு அதிசயமாக ஆச்சரியமாக இருக்கும். ஒரு நாள் வெளியே தோட்டத்தில் நின்று விட்டு வெயில் அதிகமாக இருந்ததால் வீட்டில் வரவேற்பு அறையில் இருந்தேன். அவன் தொலைக்காட்சியில் கார்ட்டூன் காணொளி ஒன்றை பார்த்துக் கொண்டு இருந்தான். நான் சோர்ந்து போய் இருந்தது அவனுக்கு தெரிந்து இருக்கவேண்டும். என்னைப் பார்த்து தாத்தா களைக்குதா? ஏதாவது வருத்தமா?? நித்திரை கொள்ளபோகிறீர்களா??? என்று இந்த மூன்றையும் ஒரே வசனத்தில் கேட்டான். நான் அதிர்ந்து போனேன். ஏனெனில் அவனுக்கு அப்போது இரண்டு வயது தான். அவனுக்கு பிறந்த நாள் வந்தது. பல கடைகளுக்கும் சென்று பார்த்தபோதும் அத்தனை பொருட்களும் அவனது அறையில் கண்டவையாகவே இருந்ததால் ஒன்றையும் வாங்கவில்லை. பிறந்த நாள் அன்…
-
-
- 14 replies
- 656 views
- 1 follower
-
-
காய்ந்து, ஆடையின்றி நின்ற மரங்களின் கிளைகளில் மெல்லிய பச்சைத் தளிர்கள் தலை தூக்குகின்றன. குளிர்காலத்தின்சோர்வு விலகி, வெயில் மெதுவாக பூமியைச் சூடேற்றத் தொடங்குகிறது. அதிகாலை நிசப்தத்தை பறவைகளின்கீச்சொலிகள் கிழித்து, அவற்றின் குளிர்காலப் பயணம் முடிந்ததையும் வசந்தம் பிறந்ததையும் அறிவிக்கின்றன. வசந்தம்என்பது வெறும் காலநிலை மாற்றமல்ல, அது மெதுவான, ஆனால் தெளிவான புத்துணர்ச்சியின் தொடக்கம். ஆனால் என்னால் வசந்தத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்க முடியவில்லை. இளம் சூரியஒளியில் சில நிமிடங்கள் நின்று காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால்முடியவில்லை. கொஞ்சம் நடைப்பயிற்சி செய்யலாமென்றாலே தயக்கம். காரணம், ஒவ்வாமை. கண்ணுக்குத் தெரியாத சிறு துகள்கள் என்னை ஆட்டிப்படைக்கின்றன. மக…
-
-
- 4 replies
- 341 views
-
-
ஏ எல் சோதனை முடிச்சு போட்டு, ஒரு இரெண்டு மாசம்… வெறும் இரண்டே மாசம்… அடுத்து என்ன செய்யலாம் (செகண்ட் ஷை எடுப்பதில்லை, விரும்பாத யூனி டிகிரியும் படிப்பதில்லை என தெளிவாக முடிவு எடுத்த பின்) என நினைக்கும் காலப்பகுதியில்…. வழமையாக கிரிக்கெட் அடிக்கும் கிரவுண்டில்/தெருவில்…. கடற்கரை கல்லு கும்பத்தில்…. கதிரேசன் கோவில் முற்றத்தில் என எல்லா இடத்திலும்… வழமையாக வரும் தோஸ்துகள் எண்ணிக்கை படிப்படியாக குறைய தொடங்கியது… மச்சான் ஒஸ்ரேலியா ஸ்டூடன் விசா ஓகே டா…. பவளோ ஸ்கொல் கிடைச்சிட்டுடா… கனடாவுக்கு ஏஜென்சி நாளைக்கு ஏத்திறாண்டா… யூனிக்கி போக முன் கெல்ட் கோர்ஸ் போய் இங்கிலீஸ் படிக்கோணும்டா… வாப்பா பெட்டா ஷொப்ப என்னிய பார்க்க சென்னார்டா… தினுசு தினுசான காரணங்களுடன் ஒவ்வொருவராக போய் விட……
-
-
- 26 replies
- 1.1k views
-
-
இரகுவரனும் இரவிக்கை நாடாவும். சேவல்கள் கூவ காகங்கள் கரைய இளங்காலைக் கதிர் காமத்துடன் பூமியைத் தழுவிக் கிடக்கையில் நல்லூரானின் முன் சந்நிதியில் மேளங்கள் முழங்க மாவிட்டபுரத்தழகி பூரணியின் பொன்னிறக் கழுத்தில் மங்கலநாண் பூட்டினான் நம்ம இரகுவரன் தாவணி போர்த்தி தாவி நடந்தவளை தரதரவென இழுத்து வந்து அறிவுரை தந்து ஆறுமுழம் சீலையை அழகாய் உடுத்தி விட்டு அலங்கரித்த அறைக்குள் தள்ளி விட்டனர் தோழியர் " இஞ்சேருங்கோ கொஞ்சம் வாங்கோ " கெஞ்சி கொஞ்சி அழைக்கிறாள் வஞ்சி, நம்ம இரகுவும் கண்கள் மின்ன நெஞ்சம் களித்திட கால்கள் தயங்க "என்னங்கோ " ஒற்றை வார்த்தை முனகி வருகிறது கட்டிய சேலை காலடியில் விழுந்து கிடக்க ஜாக்கட் தளர்ந்து தோள்வழி சரிய நின்றவள் கொஞ்சம் " இந்த நாடா கொக்கியை கழட்டி விடுங்க…
-
-
- 11 replies
- 477 views
- 1 follower
-
-
பெயர்: சுமந்திரன் நண்பர்களுக்கு: சுமா எதிரிகளுக்கு: ஏப்ரஹாம் அலர்ஜி: ஒற்றுமைக்கு விவசாயம்: கமெராவுக்கு முன் போராட்டம்: காணி விடுவிப்பு அறிவித்த பின் வெறுக்கப்படுவது: பெரும்பான்மை தமிழர்களால் விரும்பபடுவது: சிறுபான்மை முஸ்லிம்களால் படித்தது: நாவன்மை படிக்காதது: நாவடக்கம் எப்போதும் செய்வது: எல்லோரிடமும் சண்டை இதுவரை செய்யாதது: இனத்துக்கு நன்மை வாழ்நாள் சாதனை: தமிழரசுக்கு அந்தியேட்டி வாழ்நாள் வேதனை: கடந்த தேர்தல் அநேகம் பயன்படுத்துவது: சாணக்கியனை தேவைபட்டால் பயன்படுத்துவது: சிவஞானத்தை நீண்ட நாள் ஏக்கம் : பிரதமர் பதவி அண்மைய கடுப்பு: முன்னாள் எம்பி அண்மைய வெற்றி: பதில் செயலாளர் தந்திரம்: தமிழரிடம் மட்டும் பிரயோகிப்பது இராஜதந்திரம்: கிலோ என்ன விலை? கிள்ளு கீரை: புலம்பெயர் தமிழ…
-
-
- 3 replies
- 294 views
-
-
பெயர்: அனுர வேறு பெயர்: அரவிந்த, தமிழருக்கு சேர் பழைய தொழில்: கச்சான் விற்பது புதிய தொழில்: கஞ்சா விற்பது அல்ல அப்போது: பொதுவுடமைவாதி தற்போது: தேசியவாதி எப்போதும்: இனவாதி நம்புவது: பெளத்தாகமத்தை நம்பாதது: தமிழர்களை, முஸ்லிம்களை பழைய நண்பர்கள்: சந்திரிக்கா, மகிந்த, பசில், கோட்டா, விமல், டக்லஸ், கருணா, பிள்ளையான் புதிய நண்பர்கள்: இந்தியா, அமெரிக்கா பழைய எதிரிகள்: இந்தியா, அமெரிக்கா புதிய எதிரி: டில்வின் சில்வா எப்போதும் எதிரிகள்: தமிழர் உரிமையை கோருவோர், ரணில் பிடித்த டிவி சீரியல்: சித்தி பிடிக்காத படம்: மேட்டுக்குடி ஆர்ப்பாட்டமாய் செய்வது: யாழில் நடைபயிற்சி அமசடக்கமாய் செய்வது: வவுனியாவில் குடியேற்றம் அகற்றபடக்கூடாது: தமிழர் நிலத்தில் - புத்தர் சிலை அகற்ற பட வேண்டியது: தம…
-
-
- 4 replies
- 400 views
-