யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
நான் சுவிசில் வசிப்பவன் . நான் பல வருடங்களாக யாழ் களத்தை பார்த்து வந்ததினால் உங்களில் பலருடன் எனக்கு நீண்ட நாட்கள் பழகிய உணர்வு . இருந்தும் இப்போதுதான் உங்களுடன் நேரிடையான தொடர்பை ஏற்படுத்தும் வாய்ப்பு கிட்டியது . மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் . இன்றைய நெருக்கடியான நிலையில் நாம் ஒவ்வருவரும் கடமையாற்ற வேண்டிய வரலாற்று தருணமிது இப்போ தட்டிகளிப்போமானால் இ வரலாறு என்னை மன்னிக்காது என உணர்ந்து இ அவசரகால பயணத்தில் என்னையும் எனது நண்பர்களையும் இணைத்துள்ளேன் என்னையும் எனது நண்பர்களையும் இந்த யாழ் குடும்பத்தில் ஏற்று கொள்வீர்கள் என நம்புகிறேன் நன்றிகள்
-
- 27 replies
- 2.4k views
-
-
என்னே ஒரு இடியப்ப சிக்கல்..... துரோகம், காட்டிக்கொடுத்தல், ஒற்றுமையின்மை, கபட நாடகம், அரசியல் ஆதாயம், பிரந்திய நலன், பிராந்திய பாதுகாப்பு, பிராந்திய பொருளாதார போட்டி, நெருப்பை கக்கும் இனவாதம், போட்டி பொறான்மை அட கடவுளே!!! ஈழப்புரட்சியை போன்றதொரு இடியப்ப சிக்கலை வரலாற்றில் இதுவரை நான் அறியவில்லை....இதுவரை நடந்த உலக மகா உத்தங்களில் கூட இப்படியொரு சிக்கல் இருந்ததாக அறிய முடியவில்லை..... எம்மிடமிருப்பது இமயம் விஞ்சும் இனமானம் தரணி தெறிக்கும் தன்மானம் விண்ணை முட்டும் வீரம் தாகம்.... தணியாத சுதந்திர தாகம் எனவே எம் புலப்போராளி ஒவ்வொருவருக்கும் தேவை...... விவேகத்துடன் கூடிய வேகம் அவதானத்துடன் கூடிய நிதானம் நரிதந்திரத்தை சூறைய…
-
- 1 reply
- 617 views
-
-
-
-
hi anupu tamil neanchankaleaai vanakam i am from USA . i am 31 yrs old. i want to open up a new front in the fighting against the Sinhala governmant. we have been fighting in and publishing in Tamil(most of the time) songs and the Videos been published trgeting only tamil audiance. I Think this is the time that we have to capture world wide audiance ,explaine the current situation and OUR Unity As we all showed in all the Rallies and Protest. If anyone willing to come up with A song to explaine the situation in english ( a song Writer) i will be glade to work with to put out songs thanks We shall over come againt all the False Propaganda TamilForce-1
-
- 10 replies
- 886 views
-
-
நீண்ட நாளைக்குப் பின் களத்திற்கு வந்திருக்கிறன். எல்லாம் மாறிக்கிடக்கு பாப்பம் எல்லாருக்கும் வணக்கம்.
-
- 13 replies
- 1.6k views
-
-
அனைவருக்கும் வணக்கம் . எப்படி ஆரம்பிக்கலாம்? 1. உடன்பிறப்பே- . ஐயோ வேண்டாம் ! ! ! . ஏற்கனவே இப்படி பேசுபவர் மீது ஏக கடுப்பில் எல்லோரும் உள்ளனர். 2. ரத்தத்தின் ரத்தமே- . ஐய இது தமிழ் போல இருக்கும் தமிழற்ற வார்த்தைகள் . 3. பெரியோர்களே தாய்மார்களே - இது ? ? ? . ஊரை ஏமாற்றுபவன் என நினைப்பார்கள் . 4. என் இனிய தமிழ் மக்களே - இப்படி பேசினால் உள்ளே பிடித்து போட்டு விடுவர் . சரி விடுங்கள் . ஒரு ஓங்கு மொழியோடு ( கோஷம் ) ஆரம்பிக்கலாம் 1. தமிழ் வாழ்க - புலிகளை ஆதரிப்பவன் என்பார்களோ ? 2. தமிழ் வளர்க - புலிகளுக்கு நிதி திரட்டுபவன் என நினைப்பரோ ? 3. தமிழினம் ஓங்குக - ஓஹோ . புலிகள் வெல்லனும் . இலங்கை தோற்கணும் என்கிறான் . இந்தியா இலங்கைக்கு ராணுவ உதவி செய்வதா…
-
- 25 replies
- 2.6k views
-
-
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்றலதுவே படை! வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர் கண் பட்ட செருக்கு!
-
- 0 replies
- 506 views
-
-
-
Hi my friends, Nice to see u all here. I will be active in yarl with my critical comments. Cheers Seeman
-
- 28 replies
- 2.2k views
-
-
-
கணங்கள் போதும் மௌனச்சங்கிலிகளின் முனைகளில் அவனும் அவளும் சுவர்களுக்குள் பனிச்சித்திரங்களாக மனங்கள் மட்டும் காற்று வெளிகளில் மாறியே வீசப்பட்ட அமிலவார்த்தைகளின் அடியில் புதையண்டு கிழிக்கப்பட்ட கனவுகளினூடு சிதைகின்றனர் இருவரும் மௌனச் சுவரை உடைக்க கணங்கள் போதுமாயிருக்க நிழல் யத்தத்தில் நாம் நலிந்து நான் விசுபருபமெடுக்க பிளக்கின்ற விரிசலக்குள் எறியப்படுகிறது முதல் பிரிவுக்கல்
-
- 0 replies
- 631 views
-
-
அன்பார்ந்த தமிழ் பேசும் மக்களே!, அண்ணன் மாரே, அக்காமாரே, தம்பிமாரே தங்கைமாரே, அப்புமாரே ஆச்சிமாரே, மற்றும் யாழில கூடியிருக்குற எல்லோருக்கும் என்னுடைய யாழ் வந்தணங்கள். என்னடா வரும்போதெ இப்படி ஒரு பேச்சு என்று நீங்கள் நினைக்கலாம் காரணமிருக்கின்றது ஊரில் பட்டிமன்றங்களிலும் பேச்சரங்கிலும் பேசிய பழக்கம் அறிமுகத்திலும் பட்டுத்தெறிக்கின்றது மன்னித்துவிடுங்கள். என்னையும் ஆதரித்து அனுசரணை கொடுத்து முன்னேற உதவுங்கள். தமிழ் மொழியில் தெரிவதற்கு நிறைய இருக்கின்றன எனக்கோ ஏதும் தெரியாமல் நுழைகின்றேன். உங்களின் ஆதரவுக்கரங்களும் எனக்குக் கிடைக்கும் நானும் தமிழிழ் படிப்பேன் என்னும் நிலையில் உங்களை நாடி என் இருகரங்களையும் நீட்டுகின்றேன். தமிழ் விற்பன்னர்கள் கூடியிருப்பதையும், பேசுவதையும் பல…
-
- 21 replies
- 1.5k views
-
-
யாழ் நண்பர்களே பல காலமாய் பார்வையாளனாக இரந்து விட்டு இன்று பங்காளியாகிறேன். என்னையும் உங்களில் ஒருவனாக்கி கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுவீர்கள். இல்லையா?
-
- 10 replies
- 1k views
-
-
நான் கிறுக்கன் செயலும் அப்பிடித்தான். என்னையும் வரவேற்று உபசரியுங்கோவன் கிறுக்கன்
-
- 38 replies
- 2.2k views
-
-
எனக்கு ஒன்றும் புரிய வில்லை.. என்னை சில பேர் ப்ரித்தி எண்ணுறார்கள் சிலர் சுஜி என்றும் சிலர் எனக்கு சுசி என்றும் சொல்லுறார்கள்.. இதில் எனது பெயர் எது? ஒகே நான் சுஜி எல்லாரும் என்னை அப்படி கூப்பிடுங்கள்.. எனக்கு குழப்பம் ஏர்ப்படுது.. என்னை குழப்பாமல் இந்த புது சுஜியை வர வேற்று உங்களில் ஒருவாரக ஏற்று கொள்ளுங்கள்.. நான் சின்ன பிள்ளை தாறு மாறாய் கேள்வி கேட்க கூடாது.. இப்ப புரியுதா என் பெயர் என்ன என்று எல்லாருக்கும்..
-
- 9 replies
- 1k views
-
-
வணக்கம் புயல் ஒன்று நுழைகின்றது..வழி கொஞ்சம் தருவீரோ? நான் தென்றலாய் இருந்தேன் நம் மக்களின் நிலை கண்டு புயலாய் மாறிவிட்டேன்.. நான் பிறந்த மண் ஈழம் தான்... பிறக்க நினைப்பதும் தமிழ் ஈழம் தான்... அன்பில் நான் பணக்காரன்..ஆசீர்வாதத்தில் நான் பிச்சைக் காரன்..(வேண்டி நிற்பதால்) என்றும் தட்டிக்கேட்கும் இந்தச் சுட்டிக் கரம்,, வெட்டிப் போட்டாலும் காட்டிக் கொடேன்... தமிழனாய் பிறந்ததிற்கு தலை வண்ங்குவேன் தமிழ்த்தாய்க்கு,, மானம் உள்ள மனித இனம் தமிழ் இன்ம் ஒன்றே ....அதில் நானும் ஒருவன் என்பதால்.. தொடந்து அடிக்கும் புயல்
-
- 21 replies
- 1.5k views
-
-
வணக்கம் அன்பு நெஞ்சங்களே... உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி எனக்கும் ஒரு இடம் தாங்கோவன் நானும் கொஞ்சம் குந்தி இருக்க... காலம் கெட்டுக் கிடக்குது யாழ் பங்கர் உள்ள இருந்தா பாதுகாப்பும் தானே,,,, வெளி நடப்பும் தெரியும்... நல்ல நண்பர் என்னும் வைத்தியர்கள் இருக்கின்ற போது காயம் பட்டாலும் கவலை இல்லை... அன்பு என்னும் மருந்து ஏத்துவியல் தானே? அப்ப நானும் ஒரு வைத்தியர் தான் ஹிஹிஹிஹி ... சரி பெட்டார்களே என்ன மாதிரி எண்டு சொல்லுங்கோவன் ...ஏதும் நல்லது கெட்டது எண்டா வீட்டுப் பக்கமும் வந்து போங்கோ...புதுசா குடி வந்தன் எண்டு மூஞ்சையை விழிச்சு விழிச்சுப் பாக்காதையுங்கோ... .... இப்படித்தான் இடம் பெயர்ந்து போன போன இடமெல்லாம் என்னை முழுசி முழுசிப் பார்த்து முகம் முழுக்…
-
- 33 replies
- 3.1k views
-
-
-
வணக்கம் உறவுகளே என்னுடைய பெயர் மூர்த்தி, சென்னைவாசி, அனைத்து மனிதர்களை போல கனவுகளை நிஜமாக்க போராடும் யதார்த்த மனிதன். தமிழ் ................. என்ன சொல்ல ............... தமிழை அம்மாவை போல நேசிப்பதும் உண்டு, சினிமாவை போல ரசிப்பதும் உண்டு, பிரியாணி போல அலைவதும் உண்டு. என்னுள் கலந்து விட்ட ஒரு பிரபஞ்சம் தமிழ். உங்களை போலவே நானும் தமிழின் ரசிகன் தான். இந்த மன்றத்தில் என்னை சேர்த்துக் கொண்டதற்கு நன்றிகள், மன்ற விதிகளை மீறாமல் நடந்துக் கொள்வேன் என்று உறுதி கூறுகிறேன். நன்றி
-
- 14 replies
- 1.2k views
-
-
எல்லோருக்கும் வணக்கம். இது பாலைவனத்துக்காரனின் முதல் இடுகை. பல விடயங்களை உங்களுடன் பகிர ஆவலாக உள்ளேன்.
-
- 20 replies
- 1.3k views
-
-
-
-
அன்புடன் தலைமை ஆசிரியருக்கு! நான் கடந்தஒருவருடமாக அரிசுவடியிலேயே நிக்கிறேன் என்னால் அடுத்த கட்டத்துக்கு போகமுடியவில்லை. இது வேதனை அழிக்கிறது. என் உறவுகள் என் தாயகத்தில் துடிக்கும் இந்தனேரத்தில் கூட என்னல் என் தமிழ் உறவுகளுக்காக ஒன்றும் எழுதமுடியவில்லையே என்ற வேதனை என்னை வாட்டி வதைக்கிறது வேதனையில் என் உதிரம் கொதிக்கிறது. தயவு செய்து என்னை நாலுவரியாவது எழுத அனுமதிக்கவும். அன்புடன் யாழ் வாசகன் சூரி
-
- 5 replies
- 822 views
-