நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
801 topics in this forum
-
துயர் கவிந்த சரிதையில் அழுத்தி பதியும் நிழல் – அப்பால் ஒரு நிலம் -சி.ரமேஸ் குணா கவியழகனின் நஞ்சுண்ட காடு, விடமேறிய கனவு முதலான நாவல்களைக் கடந்து வெளிவந்த நாவலே அப்பால் ஒரு நிலம். ஈழத்தின் ஆனையிறவு, பரந்தன்,கிளிநொச்சியின் வன்னிக்களமுனை அப்பட்டமாக வெளிப்படுத்தும் இந்நாவல் வேவுகாரர்களின் வாழ்வை உணர்வின் தளத்தில் சித்திரிக்கிறது. செங்கையாழியானின் ‘சாம்பவி’ வேவு புலிகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட முதல் ஈழத்து நாவல் என்றாலும் அதில் யதார்த்தம் இருக்கவில்லை. உணர்வின் கூர்மையை விட கதை சொல்லியின் கற்பனையே அதில் விஞ்சி நின்றது. குணா கவியழகனின் இந்நாவல் சம்பவங்களின் வாயிலாக மக்களின், போராளிகளின் அனுபவங்களை உணர்வுத் தளத்தில் சித்திரிக்கிறது. வேவுப் போராளி ஏனைய போராளி…
-
- 0 replies
- 448 views
-
-
படம்: இயான் லாக்வுட் சீனாவில் 2,500 ஆண்டுகளுக்கு முன்னால் லாவோ ட்சு என்பவரால் எழுதப்பட்டது ‘தாவோ தே ஜிங்’. இந்நூலே தாவோயிசத்துக்கு அடிப்படை. கன்பூசியஸைவிட 50 வயது மூத்தவரான லாவோ ட்சு சீனத் தலைநகரில் ஆவணக் காப்பாளாராகப் பணிபுரிந்தார். அரசியல் நிலைமை மோசமானதால் பதவி விலகினார். இவர் தலைமறைவாகப் போக எண்ணி எல்லையைக் கடக்கும் முன் எல்லைப்புற அதிகாரி இவரை வற்புறுத்தி ஏதாவது எழுதித் தரச் சொன்னதால், இவர் 5,000 சித்திர எழுத்துகளில் ‘தாவோ தே ஜிங்’ எழுதியதாகத் தெரிகிறது. இவரைப் பற்றி நிலவும் பலகதைகளில் ஒன்று இது. ‘தாவோ’ என்பதற்குப் பல பொருள்கள், அவற்றுள் இந்த நூலின் தலைப்புக்குப் பொருத்தமானது ‘வழி’ என்னும் பொருள். ‘தே’வுக்கு ‘நேர்மைக்கு உந்துதல் அல்லது ஊக்கம் தேவை’ எ…
-
- 0 replies
- 2.1k views
-
-
போர் நிலத்தின் அவலங்களைச் சுமந்து, எளியமையான, வலிமையான மனிதர்களின் கதையாக விரிகிறது “ போராளியின் காதலி” நாவல். ஒரு சராசரி பெண்ணின் காதல் கதை. அவள் தன் இயல்பை மாற்றிக்கொண்டு யுத்தத்தில் உழலும் மக்களுக்காகவும், மக்களையும் மண்ணையும், நேசித்த ஒரு போராளிக்காகவும் தன் வாழ்வை ஒப்புக்கொடுத்துவிட்ட கதை. யுத்தத்தின் பின் எழுந்த ஈழத்தின் நாவல்களில் எழுத்தாளர் வெற்றிச்செல்வியின் “ போராளியின் காதலி” என்ற நாவலும் ஒன்றாகும். http://tamilleader.com/ நாவல் குறித்து DJThamilan குறிப்பு: இறுதி ஆயுதப்போராட்டம் வன்னிக்குள் உக்கிரமாகின்ற காலத்தில் (முதல் ஈழப்போரின் இறுதி நாட்களில் ENB), வைத்தியசாலையில் வேலை செய்கின்றவர்களின் மிகவும் துயராந்த வாழ்வு முறையும், காயப்ப…
-
- 0 replies
- 666 views
-
-
வீடில்லா புத்தகங்கள் 1 - புயலின் கண் சாலையோரக் கடைகளில் விற்கப்படும் பழைய புத்தகங்களை வீடில்லாத புத்தகங்கள் என்று சொல்வார் புகழ் பெற்ற பெண் எழுத்தாளர் வர்ஜீனியா வுல்ப். எந்த ஊருக்குப் போனாலும் பழைய புத்தகக் கடைகளைத் தேடிப் போகிறவன் நான். பழைய புத்தகங்களின் மீதான காதல் என்பது முடிவில்லாத தேடல். புயலின் கண் எத்தனையோ அரிய புத்தகங்களை, இலக்கிய இதழ்களைத் தற்செயலாகப் பழைய புத்தகக் கடைகளில் கண்டெடுத்திருக்கிறேன். அந்தத் தருணங்களில் நிலவில் கால் வைத்தவன் அடைந்த சந்தோஷத்தைவிடவும் கூடுதல் மகிழ்ச்சியை நான் அடைந்திருக்கிறேன். பழைய புத்தகங்களைப் பேரம் பேசி வாங்குவது ஒரு கலை. நாம் புத்தகத்தை ஆசையாகக் கையில் எடுக்கும்போதே புத்தக வியாபாரிக்கு இது முக்கியமானது எனத் தெரிந்து…
-
- 62 replies
- 27.2k views
-
-
கலகம் விளைத்து வந்த நாவல்: நீ.பி.அருளானந்தனின் ‘இந்த வனத்துக்குள்’பற்றி… ஈழத்து நாவல் இலக்கியம் தன்னளவிலான முயற்சிக்கும் சிந்தனைக்குமேற்ப இலக்கியப் பாதையில் முன்னேறிச் சென்றுகொண்டிருப்பினும் அது தன்மேல் பூட்டப்பட்ட விலங்குகளையும் சுமந்துகொண்டேதான் செல்கிறதென்று ஒரு விமர்சகனால் சொல்லமுடியும். இலகு யதார்த்தப் போக்கில் மூழ்கி கருத்துநிலையால் தன்னைச் சுற்றி முன்னேற்றத்தின் சகல சாத்தியங்களையும் சிரமமாக்கிக்கொண்டேதான் அது நடந்திருக்கிறதென்பது கசப்பானதெனினும் உண்மையானது. ஆரம்ப காலங்களில் மரபு சார்ந்து நடந்த ஈழத்து தமிழ் இலக்கியம் பின்னால் முற்போக்குப் பாதையில் திரும்பிய வேளையிலும் நவீனத்துவத்துக்கான ஒரு மொழியையும் நடையையும் பார்வையையும் கண்டடைந்து தொடர்ந்துசெல்ல முட…
-
- 0 replies
- 464 views
-
-
ஐமீல் ஹத்மலிடம் ஒரு விசித்திரமான பழக்கமிருந்தது, அவன் கண்ணாடி முன் அமர்ந்தபடி தன் பிம்பத்தின் முன்பாகப் பகடையை உருட்டி சூதாடிக்கொண்டிருப்பான். சில வேளைகளில் அவனுடன் சூதாடுவதற்கு வரும் உமர் கேட்டதுண்டு “ஜமீல் உன்னோடு நீயே ஏன் சூதாடுகிறாய்.” “ஒருவனுக்குத் தன்னைத் தவிர வேறு ஏமாற்றாத துணை ஏதிருக்கக்கூடும்.” “தன்னை ஆராதிப்பவர்களைக் கண்டிருக்கிறேன், இது என்ன பழக்கம், தன்னைத் தானே பழிவாங்கிக் கொள்வதா?” “உமர், இது சிறு வயது பழக்கம். கண்ணாடி பார்க்கத் தொடங்கிய முதல் நாளை நீ மறந்திருப்பாய், என்னால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை, நான் இப்படித்தானிருப்பேன் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது விளக்க முடியாத அதிர்ச்சி. ஆனால் மெல்ல ந…
-
- 0 replies
- 409 views
-
-
பேராசிரியர் சி.க.சிற்றம்பலத்தின் "தடம் பதித்த தமிழ்த் தேசியம்' என்னும் நூலின் அறிமுகவிழா வவுனியா நகரசபை மண்டபத்தில் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. வவுனியா தமிழ்ச்சங்கத்தின் தலைவர் எஸ்.என்.ஜி.நாதன் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து தமிழ் வாழ்த்தை திருமதி பராசக்தி ஜெகநாதன் பாட, தொடக்கவுரையை தமிழ்மணி கே.கே.அருந்தவராஜா (மேழிக்குமரன்) நிகழ்த்துவார். தலைமையுரையை அடுத்து நூல் அறிமுகத்தை தமிழருவி த.சிவகுமாரன் வழங்குவார். சிறப்புப் பிரதிகள் வழங்கலைத் தொடர்ந்து ஆய்வுரையை யாழ். பல்கலைக்கழக அரச அறிவியல்துறைத் தலைவர் கலாநிதி கே.பி.கணேசலிங்கம் நிகழ்த்த, ஏற்புரையை நூலாசிரியர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் வழங்குவார். நன்றியுரை…
-
- 0 replies
- 381 views
-
-
பாக்கியநாதன் அகிலனின் காலத்தின் விளிம்பு (யாழ்ப்பாணத்தின் மரபுரிமைகளும் அவற்றைப் பாதுகாத்ததும்) பாக்கியநாதன் அகிலனின் காலத்தின் விளிம்பு (யாழ்ப்பாணத்தின் மரபுரிமைகளும் அவற்றைப் பாதுகாத்ததும்) நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 27.03.2016 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சபாலிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வின் தலைமையுரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவர் பேராசிரியர் அ.நோ.கிருஷ்ணவேணியும் வரவேற்புரையினை அருந்தாகரனும், பிரதம விருந்தினர் உரையினை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும், வெளியீட்டுரையினை நூலாசிரியர் பாக்கியநாதன் அகிலனும் சிறப்புரையினை நிலாந்தனும் ஆற்றவுள்ளனர். அத்துடன் பாராம்பரி…
-
- 0 replies
- 365 views
-
-
கிழக்கு மாகாணப் போராளிகளுடன் மேற்கொள்ளப்பட்ட சகோதர யுத்தம் எத்தனை வலிகளை அந்த மக்களுக்கு ஏற்படுத்தியிருந்தது என்பதை நேரடியாக அவர்களிடம் கேட்டறிந்தபோது ஏற்பட்ட மனத் துயரம் நினைத்துப் பார்க்கவும் முடியாத அளவுக்குச் சோகமானது. பல வருடங்களாக எம்முடன் ஒன்றாயிருந்து போரிட்டவர்களின் வாழ்க்கை, பின்பு எமது கரங்களாலேயே முடிவு கட்டப்பட்டபோது, வஞ்சகப் பொறியினுள் அகப்பட்ட பொறுப்பாளர்களின் பலவீனம் காரணமாகவும், முதுகில் குத்திய துரோகத்தை என்றும் மன்னிக்க முடியாது எனச் சூளுரைத்து, சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் தடம் மாறிய சாதாரண கீழ்நிலைப் போராளிகளுக்குச் சிறு மன்னிப்பேனும் வழங்குவது தமது மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்ட செயல் என்பதால் அப்போராளிகள் ஈவிரக்கமின்றி இயக்கத்தால் கொன்றழிக்கப்பட்ட போது…
-
- 17 replies
- 1.9k views
-
-
ஆதிரை – கருவுற்ற பெண் நாவல். முன் குறிப்புக்கள் 01 நாடுகடத்தப்பட்ட ஆரிய குழுமத்தினரான விஜயனும் அவனுடைய எழுநூறு தோழர்களும் இலங்கைக்கு வந்தபோது , இலங்கையில் இயக்கர் நாகர் முதலான தொல்குடிகள் செழித்த இலங்கை நிலத்தில் வாழ்ந்துகொண்இருந்தனர். ஸ்பானியர்களும் பிரிடிஷ்காரர்களும் அமெரிக்க கண்டங்களின் தொல்குடிகளை வலுக்குன்றச்செய்து தங்களுடைய குடியேற்றங்களை நிறுவ அவர்களிடம் ஆயுதங்களும் நரித்தந்திரமும் இருந்தன. நேரடியான போர் மூலம் அவர்களால் அது சாத்தியமானது .ஆனால் விஜயனுக்கு அது சாத்தியமில்லை. மிலேச்சத்தனம் காரணமாக நாடுகடத்தப்பட அவர்களிடம் வெறும் எழுநூறுபேரே காணப்பட்டனர். அவர்களால் ந…
-
- 5 replies
- 2.8k views
-
-
அவுஸ்திரேலியாவில் அனைத்துலகப் பெண்கள் தின விழா! ஐந்து அரங்குகள் ஒன்றுகூடும் அமர்வுகளில் பெண்ணிய கருத்தியல்களின் சங்கமம்! தமிழினியின் ஒரு கூர்வாளின் நிழலில் நூல் அறிமுகம்! அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எதிர்வரும் 6 ஆம் திகதி (06-03-2016) ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் நடத்தவிருக்கும் அனைத்துலகப்பெண்கள் தின விழாவில் கவியரங்கு, விவாதஅரங்கு, கருத்தரங்கு, கலையரங்கு, மறைந்த பெண்ணிய படைப்பாளிகள் இருவரின் நினைவரங்கு மற்றும் தமிழினியின் சுயசரிதையான ஒரு கூர்வாளின் நிழலில் நூலின் அறிமுகம் என்பன இடம்பெறவுள்ளன. சங்கத்தின் துணைச்செயலாளர் திருமதி சாந்தினி புவனேந்திரராஜா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இயங்கும் அனைத்துலகப்பெண்கள் தின விழா, சங்…
-
- 0 replies
- 278 views
-
-
எனது பார்வையில் ஷோபாசக்தியின் BOX கதைப் புத்தகம் by கோமகன் அண்மையில் கறுப்புப் பிரதி வெளியீடான ஷோபாசக்தியின் ‘BOX கதைப் புத்தகம்’ நாவல் வாசிக்க நேர்ந்தது. பொதுவாகவே எழுத்தாளர்கள் தங்கள் கதையைச்சுற்றி வரும் சுற்றுப்புறச் சூழல்களை உவமானத்துக்காகவே பயன்படுத்துவார்கள். இந்த உவமான உவமேயங்கள் அச்சுப்பிசகாமல் சங்ககால இலக்கியத்தில் இருந்து இன்றுவரை இருந்து வந்துள்ளது. ஆனால் ஷோபாசக்தியின் BOX கதைப் புத்தகம் வாசிக்கும் பொழுது முதன் முறையாக முதலாவது கதை சொல்லியாக வானத்தில் இருக்கும் நிலாவும், இரண்டாவது கதைசொல்லியாக ஓர் குழந்தையும் நாவலினூடாக கதைசொல்லிகளாக நகர்ந்து சென்று கொண்டிருந்தன. நாவல் ஒருபக்கத்தில் இருந்து மட்டும் வாசகரை நோக்கிச் சுழலாது, கதைக்களத்திலே இருந்த பலதரப்புக் க…
-
- 2 replies
- 4.4k views
-
-
வேகமாய் வாசிப்பது எப்படி? ஆர். அபிலாஷ் நேற்று “எப்படி வாரம் ஒரு புத்தகம் படிப்பது?” என்றொரு ஆங்கிலக் கட்டுரை படித்தேன். எழுதினவர் புத்தகம் என்பது அபுனைவுகளையே. தான் ஒரு மெதுவான வாசகன் என்று கூறும் அவர் எப்படி கல்லூரியில் தன் பேராசிரியர் கூறிய அறிவுரை அவரது வாசிப்பை பன்மடங்காக்க பெருக்க உதவியது என விளக்குக்கிறார். ஒருமுறை அவர் வகுப்பில் தன் வரலாற்று பேராசிரியரிடம் பாடத்திற்கான துணை நூல்களை வாசித்து முடிப்பதற்கு தான் திணறுவதாய் கூறுகிறார். பேராசிரியர் உடனே வகுப்பை பார்த்து “எத்தனை பேருக்கு இந்த பிரச்சனை?” எனக் கேட்கிறார். கிட்டத்தட்ட அத்தனை பேரும் கையை தூக்குகிறார்கள். அடுத்து அவர் அபுனைவு நூல்களை எப்படி படிக்கலாம், எப்படி படிக்க கூடாது என விளக…
-
- 4 replies
- 919 views
- 1 follower
-
-
யாழிசை: ஒரு பெண் போராளியின் கதை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் இன்றைய சமூக வாழ்க்கையை குறியீடாக சித்தரித்திருக்கின்றார் நாவலாசிரியர்' இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 7 ஆண்டுகளாகவுள்ளன. இந்த நிலையில் போருக்குப் பின்னரான வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகள் பற்றி பேசுகின்ற இலக்கியப் படைப்புகள் பல வெளிவருகின்றன. அந்த வகையில் முன்னாள் போராளிகளான பெண்களின் வாழ்க்கை நிலைமையைச் சித்தரிக்கும் விதத்தில் யாழிசை என்ற நாவல் ஒன்று வெளிவந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட இந்த நாவல், இலக்கிய உலகில் பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நாவலை எழுதிய சிவ ஆரூரன் என்ற சிவலிங்கம் ஆரூரன் ஒரு பொறியியல் பட்டதாரி. …
-
- 0 replies
- 1.6k views
-
-
யாழ் கருத்துக்களத்தில் கனடாவில் இருந்து காவலூர் கண்மணியாக உலாவந்த திருமதி ஜெனிற்ரா மரியாம்பிள்ளை அவர்களின் இரு நூல்கள் இன்று தாயகத்தில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.. "வெள்ளைப்புறா ஒன்று" என்ற சிறுகதைத்தொகுதியும் "மலர்கள் பேசுமா" என்ற கவிதைத் தொகுப்புமாக இரு நூல்கள் அறிமுகமாகின்றன. அவருடைய இந்நூல்கள் பற்றிய மேலதிக விபரங்கள் தற்சமயம் கிடைக்கப்பெறவில்லை.. இருப்பினும் "கலாநிதி" இ. பாலசுந்தரம் அவர்கள் வழங்கிய அணிந்துரையும் , எங்கள் கருத்துக்கள நண்பர் காவலூர் கண்மணி(ஜெனிற்ரா மரியாம்பிள்ளை) எழுதிய ஜன்னல் வழியையும் அவருடைய நூலின் வடிவத்தையும் இங்கு இணைக்கிறேன். என் ஜன்னல் வழி….. என் ஜன்னலுக்கு கம்பிகளில்லை ஆனால் கனவுகள் நிறைய உண்டு. ஓடும் ரயிலை விட்டு வேகமாக ஓடிச்ச…
-
- 54 replies
- 6.6k views
-
-
http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF- அண்மையில் சென்னையிலும் கனடாவிலும் வெளியிடப்பட்ட என்னுடைய நூல்களான "வேங்கையன் பூங்கொடி" மற்றும் "காவியத்தூது" ஆகிய இரு நூல்களையும் தற்சமயம் சென்னையில் இரு விற்பனை நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
-
- 34 replies
- 8.8k views
-
-
காயங்களின் சாட்சி: ராஜன் ஹூலின் விழுந்த பனை மகேந்திரன் திருவரங்கன் மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர் ராஜன் ஹூலினால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட Palmyrah Fallen: From Rajani to War’s End (விழுந்த பனை: ராஜனியில் (ராஜனி திரணகமவில்) இருந்து போரின் முடிவு வரை) என்ற நூல் கடந்த ஆண்டில் வெளிவந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே 1985ஆம் ஆண்டில் இருந்து 1990ஆம் ஆண்டு வரை கணிதத்துறை விரிவுரையாளராக ராஜன் ஹூல் கடமையாற்றினார். மனித உரிமைப் பணிகளை யாழ்ப்பாணத்தில் இருந்து செய்ய முடியாத வகையில் அவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோது ராஜன் ஹூலும், மற்றொரு கணித விரிவுரையாளரான கோபாலசிங்கம் ஸ்ரீதரனும் தலைமறைவாக இருந்து, இலங்கையின் வடக…
-
- 0 replies
- 513 views
-
-
வல்லினம் இணைய இதழில் எனது கசகறணம் நாவல் சம்பந்தமாக ஷோபா சக்தியின் கேள்வி - பதில் வந்த நாளிலிருந்து இதுவரையிலும் முகபுத்தகத்தில் வந்துகொண்டிருக்கும் கருத்துக்களையும் கருத்து மோதல்களையும் அவதானித்துக் கொண்டிருந்த வேளையில் என்மீது பாய்ந்த மூன்று அஸ்திரங்க...ள் இவைகளென்றும், அவைகளுக்கு விளக்கம் தருகிறேன் என்று கூறிக்கொண்டு வந்திருக்கும் ஷோபா, மீண்டும் மீண்டும் என்னையும் என்நாவலையும் கேலிக்குள்ளாக்குகின்றார் என்பதனாலேயே நானும் மௌனம் கலைய வேண்டிய நிலைக்கு வந்துள்ளேன். சசீவன் சொன்னதுபோல தானே கேள்வி தானே பதில் என்றாகக்கூட இருக்கலாம். அதற்கான எதிர்வினைகளை எதிர்கொள்ள ஷோபா சொல்லுகின்ற நொண்டிச்சாட்டுகள்தான் நகைப்பூட்டுகின்றது. எத்தனை தழுவல்கள் - நழுவல்கள், எத்தனை எடுத்துக் க…
-
- 17 replies
- 2.4k views
-
-
கருணாகரனின் “இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் மற்றும் படுவான்கரைக்குறிப்புகள்“ – புதிய கவிதை நூல் வெளியீடு கருணாகரனின் புதிய கவிதை நூல் – “இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் மற்றும் படுவான்கரைக்குறிப்புகள்“ – வெளியீடும் விமர்சனமும் எதிர்வரும் 10.01.2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப.300 மணிக்கு நடைபெறவுள்ளது. சு. ஸ்ரீகுமரன் (இயல்வாணன்) தலைமையில், யாழ்ப்பாணம் புதிய உயர்கல்வி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் கவிஞர் ந. சத்தியபாலன், தாயகம் இதழின் ஆசிரியர் க. தணிகாசலம், விமர்சகர் சி. ரமேஸ், சத்தியன், ஞானசக்தி ஸ்ரீதரன், வேல் நந்தகுமார் மற்றும் கருணாகரன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இலங்கையில் 2009 இல் ஏற்பட்ட போரழிவுக்குப் பின்னான மீந்து போன மனிதர்களின் வாழ்…
-
- 0 replies
- 345 views
-
-
ஹரோ இலக்கிய சந்தியும் Post Code War உம். எஸ். வாசன் தாம் வாழும் சமூகத்திலிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்ட அல்லது மேம்படுத்திக் காட்ட, அச்சமூகத்திலிருந்து தம்மை சற்று வித்தியாசமாக அடையாளப்படுத்துவதும், பின் அந்த அடையாளம் சார்ந்த வேறு சிலரை தன்னோடு இணைத்து தம்மை ஒரு புதிய அடையாளத்துடன் வெளிப்படுத்துவதும் மனித இயல்புகளில் அல்லது பலவீனங்களில் ஒன்றாகும். இது மொழியால், கலாச்சாரத்தால், அல்லது பண்பாட்டால் ஒன்றிணைந்த மக்கட் கூட்டங்களை கூட வேறு பல காரணங்களால் பிளவு படும் சாத்தியப்பாட்டினை ஏற்படுத்திவிடுகிறது. இதில் பிரதேச வேறுபாடு முக்கிய கவனத்தினை பெறுகின்றது. தாம் வாழுகின்ற நாட்டில் வட்டாரமாக, வலயமாக, குறிச்சியாக பிரித்துப் பார்த்து தம்மைப் பெருமைப்படுத்திக் கொள்வதும…
-
- 0 replies
- 615 views
-
-
இங்கே வாசிக்க இருக்கும் இந்தக் கட்டுரையின் தலைப்புக்கேற்ப தமிழ் புதினங்கள் அதாவது நாவல்கள் கனடாவில் வெளியீடு செய்யப்பட்டதாகவும், கனடிய எழுத்தாளர்களுடையதாகவும் இருக்கவேண்டும் என்ற ஒரு வரையறைக்குள்தான் இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது. வேறு பல புதினங்கள் இங்கே பலராலும் வெளியிடப் பட்டாலும் அவை இந்த வரையறைக்குள் உட்படாததால் அவற்றை இங்கே குறிப்பிடவில்லை. எனது தேடதல் மூலம் கிடைத்த தகவல்களை மட்டுமே இங்கே தருகின்றேன். எதையாவது தவறவிட்டிருந்தால், அவற்றை எனக்குத் தெரியப்படுத்தினால் அவற்றை எனது முழுமையான கட்டுரையில் இணைத்து கொள்ள முடியும் என்பதையும் அதன் மூலம் கட்டுரை முழுமை பெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 1983 ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் அநேகமான ஈழத்து தமிழ் எழுத்தாளர்கள…
-
- 0 replies
- 1.1k views
-
-
'போர்ச்சூழலில் இடம்பெற்ற முக்கிய விடயங்கள் போர் இலக்கியங்கள் மூலமே வெளிக்கொணரப்படுகின்றன. போர் இலக்கியத்தின் முக்கிய பரிமாணம் அவை போரின் சாட்சியங்களாக அமைவதுடன் போரின் நிலைமைகளை, கள நிலவரங்களை வெளி உலகிற்குத் தெரியப்படுத்தி உலகின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்புவதுதான். 'ஞானம்" சஞ்சிகையின் 150 -வது இதழை, போர் இலக்கியச் சிறப்பிதழாக 600 பக்கங்களில் வெளிக்கொணர்ந்தோம். ஒவ்வொரு காலகட்டத்திலும் எழுதப்படும் இலக்கியங்கள் தொகுக்கப்படல் வேண்டும். சங்க கால புறநானூறுப் பாடல்கள் தொகுக்கப்பட்டதால்தான் நாம் அன்றைய தமிழரின் போர்பற்றி அறிய முடிகிறது. இத்தகைய பாரம்பரியத்தில் தொகுக்கப்பட்டதுதான் 'ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்" என்ற தொகுப்பாகும்." இவ்வாறு 'ஞானம்" சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் தி. …
-
- 1 reply
- 537 views
-
-
லண்டன்காரரும் BMM புரட்சியும். சேனன் எழுதிய ‘லண்டன்காரர்’ நாவல் குறித்த ஒரு பார்வை. எஸ்.வாசன் - நூல் அறிமுகம் நவீன தமிழ் இலக்கிய மரபானது புலம்பெயர் இலக்கியப் படைப்புக்களினால் இன்னொரு பரிமாணத்திற்கு நகர்த்திச் செல்லப் பட்ட போதிலும் இதுவரை வெளிவந்த அநேகமான புலம்பெயர் இலக்கியப் படைப்புக்கள் யாவும் தாயகம் நோக்கிய எண்ணங்களையும் ஏக்கங்களையும் பிரதிபலிப்பவையாக அல்லது புலப்பெயர்ந்த ஒரு நிலத்தில் அவர்கள் எதிர்நோக்கிய புதிய நெருக்கடிகளின் வெளிபாடுகளாகவும் மட்டுமே அமைந்திருந்தன. இவற்றிட்கு மாறாக இப்புலம்பெயர் மண்ணில் தாம் எதிர் நோக்குகின்ற நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் எதிர் கொள்கின்ற மற்றைய சமூகங்களையும் கதை மாந்தர்களாக கொண்டு அம்மண்ணின் மைய அரசியல…
-
- 0 replies
- 754 views
-
-
விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையிலான போரில் கட்டாயமாக உட்படுத்தப்பட்டு, பிறகு மீட்கப்பட்டு மறுவாழ்வு முகாம்களில் உள்ள சிறார்கள் பலரின் கவிதைகள், ஓவியங்களைத் தொகுத்து ஒரு புத்தகமாகச் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டார் இலங்கையைச் சேர்ந்த மனநல மருத்துவர் எஸ். சிவதாஸ். சிறார்களின் எதிர்கால நம்பிக்கை இந்தக் கவிதைகளையும் ஓவியங்களையும் பார்க்கும் போது எல்லா சோகங்களையும் இழப்புகளையும் மீறி அந்தச் சிறார்களின் நம்பிக்கை துலக்கமாகத் தெரிகிறது. அந்த முகாம்களில் வாழும் சிறார்களில் அனைவரும் தங்கள் குடும்பத்தினரில் ஒருவரையாவது இழந்தவர்கள்; வீடிழந்து, உறவிழந்து, வாழ்விழந்து தங்களுக்கு எந்தவிதத்திலும் பொறுப்பில்லாத பெரும் தவறுக்கு பலியாகி இன்று நிற…
-
- 0 replies
- 472 views
-
-
வன்னி நாவல் பற்றிய என்பார்வை - எம். ஜெயராமசர்மா … அவுஸ்த்திரேலியா வன்னி நாவல் ஒரு வரலாற்றுப் பதிவு என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. பொதுவாகக் கதைகள் எழுதப்படும்பொழுது அது சுவைக்காக மட்டுமே எழுதப் படுவதையே காண்கின்றோம்.அந்தச்சுவையானது ஒரு குறிப்பிட்ட நிலையுடன் நின்றுவிடும்.பின்னர் அது பற்றி யாருமே பேசமாட்டார்கள். ஆனால்” வன்னி ‘ நாவல் அப்படியானதன்று.தமிழன் உள்ளகாலம் வரை பேசப்படும் நாவலாக இருக்கும் என்பது எனது எண்ணமாகும். மஹாவம்சத்தை தூக்கிப் பிடிக்கிறார்கள். அது வரலாறு அல்ல. அது ஒரு இனத்தின் சுயபுராணக் கதையாகும். அதில் பல புனைவுகள் புகுத்தப் பட்டிருக் கின்றன. அதில் சொல்லப்படும் சம்பவங்கள் ஒருபக்கச் சார்பானதாகும். வன்னி நாவலையும் தமிழரின் …
-
- 0 replies
- 535 views
-