Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூற்றோட்டம்

நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு

பதிவாளர் கவனத்திற்கு!

நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.

  1. குற்றமும் தண்டனையும் sudumanal இந்நூல் எம். சுசீலா அவர்களால் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வாசிப்பின் ஓட்டத்தை இடையூறு செய்யாதபடி நகர்கிறது மொழிக் கையாள்கை. தமிழில் 1072 பக்கம் விரிந்துள்ள இந் நூலில் அவரது பெரும் உழைப்பு தெரிகிறது. “குற்றமும் தண்டனையும்” என்ற இந் நாவல் தஸ்தவெஸ்கி அவர்களால் எழுதப்பட்ட பெரும் நாவல். 1866 இல் ரஸ்ய மாதப் பத்திரிகை ஒன்றில் தொடர்ச்சியாக எழுதப்பட்ட இத் தொடர் பின்னர் நாவலாக தொகுக்கப்பட்டு உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. கதை சொல்லல் என்பதையும் தாண்டி தனிமனிதர்களின் மனவமைப்பு, மனச்சாட்சி, ஒழுங்கு, அறம், அன்பு என்பவற்றை தாங்கி நிற்கும் அக வாழ்வின் மீதான விசாரணைகளையும் சட்டம், நீதி, அதிகாரம…

  2. ஈழ எழுத்தாளர் கவிஞர் தீபச்செல்வன் அவர்களின் சயனைட் நாவல் சென்னையில் வெளியீடு காண்கிறது. நாள் : சனவரி 03 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6 மணிக்கு. இடம்.: சென்னை, வடபழனி, பிரசாத் லாப்பில். வெளியீடு : Discovery Book Palace

    • 0 replies
    • 393 views
  3. உறவுகளுக்கு வணக்கம்🙏 Discovery Book Palace வெளியீடாக வரவுள்ள எனது அடுத்த நூலின் (சிறுகதை) அட்டையை வெளியிடுவதில் மகிழ்கிறேன்❤ சிறந்த அட்டைப்படத்தை வடிவமைத்த பாலாஜி அவர்களுக்கு நன்றி! தியா - காண்டீபன்

      • Thanks
      • Like
    • 8 replies
    • 1.5k views
  4. ன்பானவர்களே! “பகிரப்படாதபக்கங்கள்” என்ற நூல் தமிழீழ மண்ணின் பல லட்சம் தியாகங்களின் உச்சங்களில் ஒரு சில உச்சங்களை தன் உள்ளத்தில் சுமந்து வெளி வருகிறது. இது மாவீரங்களின் அதி உச்ச தியாகம் என்பதில் எக்கருத்து வேறுபாடுகளும் இருக்க முடியாது. கண்ணீர்களை வர வைக்கும் வரலாற்று வலிகளை சுமந்து கார்த்திகை வேங்கைகளுக்காக அவர்களுக்குச் சொந்தமான கார்த்திகை மாதத்திலையே காந்தள் பூவாக பூக்க இருக்கிறது. வரும் கார்த்திகை மாதம் இப்புத்தக வெளியீட்டு நிகழ்வை நடாத்த மாவீரர் நினைவுகளைச் சுமந்து பயணிக்கும் ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளார்கள். விரைவில் இது தொடர்பான மேலதிக செய்திகளை உங்களுடன் பகிர்வேன். என்றும் எம் தியாகச் செம்மல்களின் பாதம் பணிந்து அவர்களின் நினைவுகளோடு நிமிர்ந்து நிற்கும் அ…

  5. நூல் அறிமுகம் : கி.இளம்பிறை அவர்களின் 'வழித்துணை நினைவுகள்' - சுப.சோமசுந்தரம் 03-11-2024 அன்று எழுத்தாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் பாசத்திற்குரிய திருமதி கி.இளம்பிறை என்ற பிரபா அவர்கள் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா நெல்லை தியாகராஜநகரில் அமைந்திருக்கும் மின் ஊழியர் சிஐடியு சங்கக் கட்டிடத்தில் இனிதே நடைபெற்றது. 'வழித்துணை நினைவுகள்' மற்றும் 'திருவாசகம் - ஒரு தேடல்' என்பன அந்நூல்கள். இவற்றுள் 'வழித்துணை நினைவுகள்' எனும் கவிதை நூல் மீது பேசுமாறு இளம்பிறை அம்மா அவர்கள் முன்னரே எனக்கு அன்புக் கட்டளையிட்டிருந்தார்கள். புத்தகத்தை மின்னஞ்சலில் எனக்கு அனுப்பியும் தந்திருந்தார்கள். நான் பேசியது நன்றாக அமைந்ததாக விழாவி…

  6. பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் சிந்துச் சமவெளி நாகரிகம் குறித்த சமீபத்திய புத்தகமான அஹிம்சா (Ahimsa), அந்த நாகரிகம் வணிகத்தை மையப்படுத்திய, வன்முறையை நாடாத ஒரு சமூகமாக இருக்கலாம் என்கிறது. வேறு பல சுவாரஸ்யமான தகவல்களையும் கருத்தாக்கங்களையும் இந்தப் புத்தகம் முன்வைக்கிறது. அது 4,500 ஆண்டுகளுக்கு முன்பாக எகிப்தியர்கள் பிரமிடுகளைக் கட்டிக்கொண்டிருந்த காலகட்டம். அவர்கள் 'லாபிஸ் லாஸுலி' எனப்படும் நீல நிற கற்களை வாங்கிக் குவித்தார்கள். இந்தக் கற்கள், அந்த காலகட்டத்தில் தற்போதைய ஆஃப்கானிஸ்தானில் மட்டுமே கிடைத்தன. அங்கிருந்து தோண்டியெடுக்கப்பட்ட இந்தக் கற்கள் ஐயாயிரம் கிலோ …

  7. வெண்முரசு நாவல் 16: “குருதிச்சாரல்” ஆசான் ஜெயமோகனின் மகாபாரத காப்பிய மறு ஆக்கமான வெண்முரசு நாவல் வரிசையில் உள்ள 26 நாவல்களில் 16 ஆவது நாவல் “குருதிச்சாரல்” வரை வாசித்துவிட்டேன். குருஷேத்திரப் போருக்கு முன்னரான களநிலையில், போரினை தவிர்ப்பதற்காக கிருஷ்ணன் துரியோதனனிடம் மூன்று முறை செல்லும் தூதுகளையும், தம் மைந்தரையும், கொடிவழியினரையும் போரின் மூலமாக இழக்காமல் பாதுகாக்க முயலும் பாண்டவ, கெளரவ தரப்பு அரசியர்களின் முயற்சிகளையும் “குருதிச்சாரல்” நாவல் விரித்துச் செல்கின்றது. முன்னர் வெறும் பெயர்களாக அறியப்பட்ட அரசியர்களின் - தேவிகை (தருமர்), விஜயை (சகாதேவன்), பிந்துமதி (பீமன்), கரேணுமதி (நகுலன்), பலந்தரை (பீமன்), துச்சளை (கெளரவர்களின் ச…

  8. Tuesday, October 15, 2024 காமேச்வரன் தன்னுடைய சிறு வயதிலேயே அன்னையை இழந்து, பின்னர் தந்தை கல்யாணம் செய்துகொண்ட சித்தியின் கொடுமையால் வீட்டை விட்டு வெளியேறுகிறான். ரயிலில் அவனை சந்திக்கும் வத்சன் என்பவர் அவனைக் கூட்டிச்செல்கிறார. அவருக்கு சமையல் கலை தெரியும் என்பதால் ஒரு கோவிலில் சமைக்கும் வேலை அவருக்கு. அவருடனேயே தங்கி கொள்ளும் காமேச்வரன், சமையலைக் கற்றுகொண்டு அவரையே குருவாக எண்ணிக் கொள்கிறான். அவரின் இறப்புக்கு பின்னர் அவனுடைய நினைவுகளில் அவர் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறார். காமேச்வரன் இப்பொழுது காசி, பத்ரிநாத் எனச் செல்லும் யாத்ரிகர்களுக்கு சமைப்பவனாக தனி ரயிலில் வேலைக்கு இருக்கிறான். அவன் சமையலை அனைவரும் புகழ்கிறார்கள். அப்படி ஒரு பயணத்தில்தான் …

  9. நிலம் எனும் நல்லாள் - சு.வேணுகோபால் Monday, September 16, 2024 மனிதர்களுக்கு எங்கே சுற்றினாலும், எங்கே இருந்தாலும் அவர்களுக்கு சொந்த ஊரைப் பற்றிய ஏக்கம் மனதை விட்டுப் போகாத ஒன்று. அவர்களின் சிறு வயதில் சுற்றித் திரிந்த இடங்கள், பழகிய மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என அதுவொரு திரும்பிப் போக முடியாத காலம். சொந்த ஊரின் நினைவுகள் இருந்தாலும், தம் பிள்ளைகளுக்கு அந்த பொக்கிஷங்கள் கிடைக்கவில்லையே என கழிவிரக்கம் கொண்டாலும், கடைசியில் யாதும் ஊரே யாவரும் கேளிரே என இந்த நாவலில் நாயகன் பழனிக்குமார் உணர்கிறான். விவசாயம் செய்த தனது கிராமத்தில் இருந்து மதுரைக்கு வேலைக்குப் போனவன் பழனிக்குமார். அவனுடைய மனைவி ராதாவின் ஊர் கோ…

  10. வெண்முரசு நாவல் 17: இமைக்கணம் வெண்முரசு மகாபாரத 26 நாவல் வரிசையில் 17 ஆவது நாவலாகிய “இமைக்கணம்” வாசிப்பை நிறைவுசெய்துவிட்டேன். பகவத்கீதையின் யோகதத்துவங்களை விரிவாகச் சொல்லும் நாவல். மகாபாரதப்போரின் நடுவே கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசம் செய்ததாகவே அறிந்திருக்கின்றேன். எப்படிப் போர் நடுவே அர்ஜுனனின் கேள்விகளுக்கான பதில்களை தத்துவ விளக்கங்களோடு கிருஷ்ணர் சொல்லியிருக்கமுடியும் என்ற கேள்வி இருந்ததால், கீதை ஒரு இடைச்செருகல் என்றே நினைத்திருந்தேன். மகாபாரதப் போரில் கீதை உரைக்கப்படவில்லை எனவும் நால்வேதத்தின் தொடர்ச்சியும் எதிர்நிலையுமான நாராயணவேதம் எனும் கீதைக்காகவே மகாபாரதப் போர் நிகழ்ந்தது என்றும…

  11. முன்பெல்லாம் முதலில் யாழில் பதிவேற்றிய பின்னரே அதன் இணைப்பை ஏனைய வலைத்தளங்களில் பதிவு செய்வது என் வழக்கம். தற்சமயம் நிழற்படம் அல்லது வீடியோவுடன் பதிவிட வேண்டி சிலவற்றை முகநூலில் ஏற்றி, பின்னர் மீள்பதிவாக யாழில் பதிவேற்றுகிறேன். கீழ்க்காணும் நூல் அறிமுகமும் எனது முகநூல் பதிவு. புத்தக அட்டை இறுதியில் உள்ள இணைப்பில் : என் நண்பரும் குருநாதருமான ஆங்கிலப் பேராசிரியர் முனைவர் ச.தில்லைநாயகம் அவர்கள், தந்தை பெரியாரின் 'பொருள் முதல்வாதம்' எனும் நூலினைத் தமக்கே உரித்தான எளிய, தரமான ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்கள். அஃதாவது பாமரர்க்கான எளிமையும் சான்றோர்க்கான தரமும் என இரு நோக்கு அன்னாரது மொழிச் சிறப்பு. இம்மொழி பெயர்ப்பு 'கலப்பை பதிப்பக'த்தால் வெளியிடப் பட்டுள…

  12. சிட்னியில் வாங்கிய கத்தி Sydney Macquarie அங்காடியின் முதல் தளத்திலுள்ள மின்னூட்டும் தரிப்பிடத்தில் வாகனத்தை கொழுவிவிட்டு அங்காடிக்குள் நுழைந்தேன். வார விடுமுறைக்கு ஏற்ற வளமான கூட்டம். சிட்னியில் அண்மையில் இடம்பெற்ற கொடூரமான கத்திக்குத்து சம்பவங்களால், அங்காடிக்குப் போவதில் அதிகம்பேருக்கு அச்சமிருக்கலாம் என்று எண்ணினேன். ஆனால், அப்படித் தெரியவில்லை. Dymocks புத்தக் கடைக்குள் சென்று, நான் வாங்கவிருந்த புத்தகத்தை எவ்வாறு கேட்பது என்பதை ஓரளவுக்கு மனதுக்குள் தயார் படுத்திக்கொண்டேன். புத்தக விற்பனை நிலையத்திலும் நல்ல கூட்டம். வரிசையில் நின்று எனது முறை வந்ததும், "சல்மா…

      • Haha
    • 3 replies
    • 863 views
  13. ஒரு மூடன் கதை சொன்னால்; கோத்தாவின் ‘சதி’ - ஆதிரன் மார்ச் மாதம் ஆறாம் திகதி புதன்கிழமை முன்னாள் இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சே தனது எக்ஸ் தளத்தில் பின்வருமாறு பதிவிட்டிருந்தார். ‘‘நாளை வியாழன் 07 மார்ச் 2024 முதல் ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி என்ற எனது புத்தகம் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் முன்னணிப் புத்தகக் கடைகளில் கிடைக்கும். இது சர்வதேச ரீதியில் அனுசரணை வழங்கப்பட்ட ஆட்சிமாற்ற நடவடிக்கையின் ஒரு நேரடி அனுபவம்’’ நூல் வெளியீட்டு விழாவென எந்தக் கொண்டாட்டமுமில்லை. ‘கோத்தா இப்போது ஜனாதிபதியாயிருந்தால் இந்தப் புத்தக வௌியீட்டு விழாவை வெகுவிமரிசையாகக் கோலாகலமாக ஒரு பெருந்திருவிழாவாகக் கொண்டாடிக் கழித்திருப்பார்’ என ஒரு நண்பர் எனக்கு…

  14. புனைகதைக்கான கரோல் ஷீல்ட்ஸ் பரிசை வென்ற இலங்கைத் தமிழ்ப் பெண் எழுத்தாளா் May 18, 2024 அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை தமிழ்ப் பெண் எழுத்தாளரான வி.வி.சுகி கணேசானந்தன் எழுதிய பிரதர்லெஸ் நைட் (Brotherless Night) என்ற நாவல், புனைகதைக்கான 2024 கரோல் ஷீல்ட்ஸ் (Carol Shields) பரிசை வென்றுள்ளது. இதற்காக அவருக்கு 150,000 அமெரிக்க டொலர் (இலங்கை நாணயத்தின் பெறுமதி 4 கோடியே 51 இலட்சத்து 5,064 ரூபா) பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டியலிடப்பட்ட ஏனைய 4 எழுத்தாளர்களுக்கும் 12,500 டொலர் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் வன்முறையில் சிக்கித் தவிக்கும் தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களுக்கு உதவும் முகமாக கதை அமையப்…

    • 1 reply
    • 344 views
  15. வாசிப்புக் குதிரைகளும் மறதி மலையும் காந்தப் புலம் நாவலை முன்வைத்து நிரூபா ஆழமான கருவைக்கூடச் சுருக்கமாகவும், துல்லியமாகவும். குறைந்த பாத்திரங்களுடனும் சொல்லக்குடியன என்பதால் சிறுகதை எனக்கு எப்போதுமே பிடித்தமான இலக்கிய வடிவம் என்றாலும், மனித வாழ்வோடு பிணைந்திருக்கும் மரபுகள், பண்பாடுகள். கலைகள், அரசியல், உளவியல் தொடர்பாக நுன்னிப்பாகவும் விரிவாகவும் சொல்வதற்கு நாவல்களே சிறந்த வடிவம் என்று தோன்றுகின்றது. நீண்ட கால எனது வாசிப்புப் பயணத்தில், கதைகளை மட்டுமே வாசிப்பதில் ஒரு போதாமையை அண்மைக் காலமாக உணரத்தொடங்கியபோது எனது தேடல்களும் புதிய சிந்தனைத் தளத்தை நோக்கி நகரத்தொடங்கியுள்ளன. வாழ்வியற் கூறுகளை உணர்வுரீதியாகவும், கதையாகவும் திறம்படச் சொல்லும் நாவல்கள்…

  16. இமிழ் ; கதை மலர் April 20, 2024 — அகரன் — இமிழ் என்றால் ‘இனிதான முழக்கம்’ என்ற பொருள்‌. ‘முழக்கம்’ எப்படி இனிதாகும்? என்ற கேள்வி எழும். ஒருசொல்லை உருவாக்குவது அப்படி ஒன்றும் இலகுவானதல்ல. பழந்தமிழரின் பாடல்களில் எங்கெங்கு‘இழிழ்’ பயன்படுத்தப்பட்டது என்பதில் இருந்து இனிய முழக்கத்தை புரிந்துகொள்ளலாம். கடற்கரையை பலரும் விரும்புவர். நாம் எவ்வளவு சிறியவர் என்று அறிவித்தபடி கடல் இருக்கும். கடலை பார்க்க முதலே அதன் ஓசை காதுக்கு வந்துவிடும். அந்த அலைகளின் இசையை ‘இழிழ்’ என்கிறது ‘பாடு தமிழ் பனி கடல் பருகி…’என்ற பழந்தமிழ்ப் பாடல். உலகமெல்லாம் சூரியனை பூமி தொலைக்கும் நேரத்தில் சில பறவை இனங்கள் கூட்டமாக இருந்து அன்றைய…

  17. Chai Time at Cinnamon Gardens - தெய்வீகன் ஈழத்தமிழ் பின்னணிகொண்ட எழுத்தாளர் சங்கரி சந்திரன் எழுதிய "Chai Time at Cinnamon Gardens" நாவல் ஆஸ்திரேலியாவின் இலக்கியத்துக்கான Miles Franklin அதி உயர் விருதினை வென்றிருக்கிறது. சிட்னியில் சற்று முன்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சங்கரி எழுதிய மூன்றாவது நாவல் இதுவாகும். Miles Franklin விருதுக்குழுவின் சார்பில் சங்கரியை அழைத்து இந்த வெற்றிச் செய்தியை அறிவித்தபோது, நான்கு தடவைகள் திரும்பத் திரும்பக் கூறிய பின்னரே, சங்கரி தனது வெற்றியை உணர்ந்துகொண்டார் என்று தெரிவிக்கப்பட்டது. Miles Franklin விருதினை வெற்றிகொண்டுள்ள சங்கரிக்கு 60 ஆயிரம் டொலர் பணப்பொதி கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (தமிழ் இந்துவின…

  18. ‘கடைசிக் கட்டில்’ (நூல் அறிமுகம்) — அகரன் — அவன், அவளது கண்களை தின்றுகொண்டிருந்தபோது, அவள் அவன் இதயத்தை சுவைத்துக் கொண்டிருந்தாள். அப்போது நான் அந்த உணவகத்தின் தலமைச் சமையலாளனாக இருந்தேன். அவர்களின் உணவை என் கையாலேயே பெறவேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருந்தார்கள். இருவரும் மேற்படிப்பிற்கான இடைக்காலத்தில் அந்த உணவகத்திற்கு காசு சம்பாதிக்க வந்தவர்கள். தமக்கு உணவு தருபவன் என்று என்மீது நேசம்கொண்டவர்கள். அந்த இளம் காதலர்களை பார்த்தே என் இளமையை கடத்திக்கொட்டிருந்தேன். அந்த ஆண்டு கடந்து போக இருந்தபோதுதான் அவளுக்கு மூளையில் புற்றுநோய் என்று அறிந்துகொண்டார்கள். பின்பு ஓர் ஆண்டு‌க்குள் அவள் இறந்து போனாள்‌. அவளின் இறப்பு வரை எங்கும் நகராமல்…

    • 1 reply
    • 858 views
  19. உலகில் எல்லோருடைய தலைகளுக்குள்ளும் நிறையக் கதைகள் தேங்கிக் கிடக்கின்றன, சிலர் அவற்றை அவ்வப்போது மற்றவர்களுடன் பகிர்ந்து தங்கள் தலைப் பாரத்தைக் குறைத்துக்கொள்கின்றனர், இன்னும் பலர் அதை வெளியில் சொல்லத் தெரியாமல் அப்படியே தலைக்குள் குப்பையாகத் தேக்கி வைத்து தம்முடனேயே அதையும் புதைத்து விடுகின்றனர். இதில் நான் சொன்ன முதல்ரகம்தான் இந்த ‘வனநாயகன்’ நாவல், 2016 இல் கிழக்கு பதிப்பகம் மூலம் வெளிவந்த இந்த நாவலை இன்றுதான் வாசிக்கும் வாய்ப்பு பெற்றேன். இதை எழுதியவர் ஆரூர் பாஸ்கர், இவர் அமெரிக்காவின் கிழக்கில் உள்ள புளோரிடா மாநிலத்தில் வசிக்கிறார். “வனநாயகன் என்றால் என்ன?” என்று இப்போது நீங்கள் உங்கள் தலைக்குள் கேட்பது எனக்குப் புரிகிறது. மலேசியாவில் அதிகமாக இருக்கும் ‘உராங்…

    • 0 replies
    • 443 views
  20. தடங்களில் அலைதல் sudumanalMay 8, 2023 நூல் அறிமுகம் “உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகளே அல்ல. அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள். ஆனால் உங்களிடமிருந்து அல்ல. அவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல” என்ற கலீல் ஜிப்ரானின் புகழ்பெற்ற கவிதையுடன் ஆரம்பித்து, வளரும் குழந்தைகளின் முதல் கண்டுபிடிப்பு “என் தந்தை என்பவர் எவ்வளவு முட்டாள் என்பதே” என பேச்சின் நடுவில் எடுத்துவிட்டேன். என் பேச்சு முடிய கீழே இறங்கினேன். வாட்டசாட்டமான ஒருவர் “நான் உம்மோடு பேச வேண்டும். வாரும் வெளியே பேசுவோம்” என்றார். “எங்கடை பிள்ளையள் எங்களுக்குப் பிறக்காம என்னடா வம்பிலா பிறந்தவங்கள்” என தொடங்கி சிங்கள இராணுவத்தின் தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் வழியாக தனது …

  21. தீபச்செல்வனின் "பயங்கரவாதி" நாவல், கதையல்ல காவியம். ஈழத்தைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ள "பயங்கரவாதி" நாவல் இன்னும் புத்தக வடிவில் எனக்குக் கிடைக்கவில்லை, ஆனாலும் அமேசான் கிண்டல் தளத்தில் வாங்கிப் படிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். ஈழ மண்ணிலிருந்து இப்படி ஒரு படைப்பை, உள்ளிருந்த படைப்பாக எழுதுவது அவ்வளவு இலகுவான காரியமல்ல, அது கத்தி முனையில் நடப்பதற்குச் சமமானது. இருந்தும், தான் கொண்ட கொள்கையில் எந்த சமரசமும் செய்யாமல் 2005 - 2009 வரையான 4 ஆண்டுகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நடந்த நிகழ்வுகளை மிகவும் நேர்த்தியான முறையில் கதையாகச் சொல்லியுள்ளார். தீபச்செல்வன் ஒரு சிறந்த கவிஞர் என்பதைத் தாண்டி ஒரு சிறந்த யதார்த்த எழுத்தாள…

    • 0 replies
    • 720 views
  22. எனது மூன்றாவது சிறுகதைத் தொகுதி தயாராகிறது. அட்டைப்படத்தை வடிவமைத்துத் தந்தவர் மூணா அண்ணா. அவருக்கு நன்றி. நிறம் தான் சிறிது மாறிவிட்டது. என்னுரை பத்து ஆண்டுகளின் முன்னர் என் முதலாவது சிறுகதைத்தொகுதியும் நான்கு ஆண்டுகளின் முன் என் இரண்டாவது சிறுகதைத்தொகுதியும் வெளிவந்தபின் ஐந்து ஆண்டு ஆண்டுகால இடைவெளியில் மூன்றாவது தொகுதி வெளிவருகிறது. பெண்களால் தொடர்ந்து எழுத முடியாதவாறு பல தடைகள் குடும்பச் சூழலில் இருந்தாலும் அதையும் தாண்டி நான் காண்பவற்றை, கேட்பவற்றை எழுதும் ஆற்றல் எனக்குள்ளும் இருக்கின்றது. யாரின் புக…

  23. இன்று (24-12-2023) என் குருநாதர் பேரா.தொ.பரமசிவன் அவர்கள் நினைவு நாள். "பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே" எனும் கொள்கை வழி நின்றவர் தொ.ப. எனவேதான் தமிழூரில் என்னைப் போன்ற சாமானியரும் அவர் அருகில் செல்ல முடிந்தது; எங்கள் அறிவுக்கு எட்டிய வரை அவரிடம் திரட்ட முடிந்தது; என் குருநாதர் என்று அவரைச் சொல்லிக் கொள்ளும் அளவு தைரியம் வந்தது; ஏன், எழுத்தாணி பிடிக்கும் அளவு மனத்திடமே வந்தது ! எனது முதல் முயற்சி 'என் வானம் என் பூமி' என முகிழ்த்தது. இரண்டாம் முயற்சி 'அதே வானம் அதே பூமி' என விரிந்து நிற்கிறது; என் மனம் கவர்ந்த அதே காவ்யா பதிப்பகத்தில் - வாசகர் வட்டம் அதே என்றில்லாமல் மேலும் விரிந்து அமையும் எனும் ஆவலுடன். தம் சீடன் ஒருவன் தா…

  24. கணவனின் படுகொலைக்கு மதுரையை அழிக்கும் கண்ணகி பற்றிய கதை சிலப்பதிகாரம். நீதி மறுக்கப்பட்ட கோவலனுக்காக ஒரு சிலம்பை கையிலேந்தி நீதி கேட்கிறாள் கண்ணகி. 'வண்ணச் சீரடி மண்மகள் அறியா' குணத்தவளான கண்ணகி எப்படி அவ்வாறு கோபம் கொண்டாள் என்று விளக்குகிறது கொற்றவை காவியம். திருமணத்துக்கு முன்னர் எங்கேயும் வெளியே செல்லாதவளான கண்ணகி, கோவலனை நம்பி மதுரை நோக்கிச் செல்கிறாள். தமிழ் கூறும் ஐவகை நிலங்களூடாக அவர்களின் பயணம் நடக்கிறது. கூடவே துறவியான கவுந்தியடிகளும் அவர்களுடன் துணைக்குச் செல்கிறார். கண்ணகியுடன் கூடவே செல்லும் நீலி என்னும் அணங்கு அவளுக்கு போகும் பாதைகளை விளக்குகிறது. அவள் கனவுகளுக்குள் புகுந்து வேறு உலகை காட்டுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவளை தாய் தெய்…

  25. முடிவிலாத வெளியில் இரை தேடும் பறவைகள் January 18, 2024 — கருணாகரன் — புலம்பெயர்தோர் வாழ்வைக் குறித்த வேறுபாட்டதொரு புரிதல் மந்தாகினி குமரேஷின் ‘இரை தேடும் பறவைகள்’ கவிதைகளைப் படிக்கும்போது தோன்றுகிறது. புலம்பெயர்தலின் வலியையும் புதிய (பனித்) திணையில் (நிலத்தில்) ஒட்டிக் கொள்ள முடியாத அந்தரிப்பையும் இந்தத் தொகுதியிலுள்ள முதற் கவிதை தொடக்கம் பலவும் சொல்கின்றன. புலம்பெயர் தமிழ்ப்பரப்பின் பெரும்பாலான உணர்வலை இதுதான். கூடவே தாய்நிலம் மீதான நினைவுகளாகவும். ஆனாலது வெறுமனே நினைந்துருகுதல் என்றில்லாமல் விடுதலை வேட்கையாக. இவ்வாறான புலம்பெயர்தல் அல்லது புதிய திணையில் வாழ நேர்தல் இன்று உலகளாவிய ரீதியில் ஏற்படும் ஒன்று. ஈழத்தமிழர்களுக்கு மட்டுமன்றி, பலஸ்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.