Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. "தமிழர் சமயமும் அதன் வரலாறும் [ஒரு அலசல்]" / "An analysis of history of Tamil religion" - PART / பகுதி: 01 எப்படி முதலாவது சமயம் அல்லது மதம் உருவானது என்று ஒருவருக்கும் இன்னும் சரியாக தெரியாது. உலகில் எழுத்து உருவாகிய போது, பல சமயங்கள், பல ஆயிரம் ஆண்டுகளாக, ஏற்கனவே மக்களிடம் புழக்கத்தில் இருந்தன. என்றாலும், அவை எப்படி உருவாகியது என்பதை அவர்கள் மறந்தே விட்டார்கள். ஆகவே ஒரு ஊகத்தின் அடிப்படையில் தான் இதற்கு விடை தேட வேண்டியுள்ளது. கற்கால மனிதன் எவனுக்கும் மதம் என்ற ஒன்று இருக்கவில்லை. அந்த ஆதிகால மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தார்கள். அன்றைய காலத்தில் உலகம் மிகவும் பயம் நிறைந்ததாக இருந்திருக்கும். காடுகள், கொடிய மிருகங்கள், இடி, மின்னல், …

  2. நவராத்திரியின் 9 ஆம் நாள் வழிபாடு! நவராத்திரியின் ஒன்பதாவது நாளான இந்த நாளில் அம்பிகையை பரமேஸ்வரி திருக்கோலத்தில் வழிபட வேண்டும். இந்த நாளில் அம்பிகையை பரமேஸ்வரி திருக்கோலத்தில் வழிபட வேண்டும். கையில் வில், அம்புகள், அங்குசம், சூலத்துடன் போருக்கு புறப்படும் கோலத்தில் இந்த அம்பிகை காட்சி தருகிறாள். இந்த அம்பிகைக்கு வாசனைப் பொடிகளால் கோலமிட்டு வழிபட்டு தேவியின் மனதை மகிழ செய்யும் வகையில் வழிபடுவதால் ஆயுள், ஆரோக்கியம் பெருகும். நம்முடைய பல தலைமுறைகள் சுகமாக, எந்த குறையும் இல்லாமல் இருப்பார்கள் என்பது ஐதீகம். https://athavannews.com/2024/1403649

  3. "கிறிஸ்மஸ் பற்றிய உண்மைகள் [The Truth About Christmas!]" நாம் கிறிஸ்மஸ் பற்றி சிந்திக்கும் பொழுது எம் மனதில் எழும் முதல் கேள்வி, நாம் எங்கிருந்து கிறிஸ்மஸ் விழாவை பெற்றோம் ... பைபிளில் [Bible] இருந்தா? அல்லது தொன்ம ஐரோப்பிய நம்பிக்கையில் [பாகால் வழிபாடு / paganism] இருந்தா ? என்பதே ஆகும். குழந்தை இயேசு .. மூன்று ஞானிகள் .. நட்சத்திரத்தை பின்தொடரல் .. கிறிஸ்மஸ்ஸின் உண்மை கருத்தா அல்லது ஒருவேளை அது பண்டிகை ஜம்பர்கள் [festive jumpers], உற்சாகத்தால் உந்தப்பட்ட செலவினங்கள், அதிகமாக குடிப்பது போன்றவையா? அல்லது கிறிஸ்மஸ் இவைக்கு அப்பாற்பட்டதா ? ஏனென்றால், அதன் வேர்கள், உண்மையில் கிருஸ்துக்கு [இயேசுக்கு] முந்தைய பண்டைய கால வரலாற்றில், …

  4. "மதமும் மரணமும்" [ சைவ மதம் / இந்து மதம்] உலகின் மிக பழமையான மதமான, சைவ / இந்து மதத்தின் படி, மரணம் என்பது இயற்கையானது. முற் பிறப்பிலே செய்த பாவ, புண்ணியத்தின் படி அல்லது அதன் கர்மாவின் படி, தொடர்ந்து உயிர் வாழ பல பிறப்புக்களை அல்லது மறுபிறப்புகளை ஒரு ஆன்மா [soul] எடுக்கும். ஒரு மனிதனை அவனுக்குள் இருந்து இயங்க வைப்பது ஆன்மா என்கிற இந்த இறைசக்தி (அல்லது சக்தி / ஆற்றல்) ஆகும். சக்தி கொள்கை என்ன சொல்கிறது தெரியுமா ? சக்தியாகிய ஆற்றல் என்பது அழிவற்றது. அது வேறு ஒரு ஆற்றலாக உருமாறுமே அன்றி அழிவு என்பது ஆற்றலுக்கு என்றுமே கிடையாது என்கிறது ["Energy can neither be created nor destroyed"]. உடலினின்று செயல் பட முடியாத ஒரு நிலைக்கு நோயினால் உடல் மிகவும் தளர்ந்து விட…

  5. "உண்மையில் கிருஷ்ணா ஒரு கடவுளா ? அல்லது அவர் மிகவும் தீய மற்றும் ஏமாற்றும் நபரா?" / "Was Krishna really a god or he was a very evil and deceiving person?" கிருஷ்ணர் பாண்டவர்களின் வெற்றியை பல தடவைகளில் நம்பிக்கை மோசம் அல்லது கௌரவர்களை வேண்டும் என்றே ஏமாற்றுதல் மூலமே பெற்றுக் கொடுத்துள்ளார். இவரின் செயல்கள் தர்மத்தின் நேரடி மீறலாக காணப் படுகின்றன. கண்ணனின் போர்த் தந்திர ஏமாற்று ஆலோசனையின் பேரில், குருச்சேத்திரப் போரில் வீழ்த்த முடியாத பீஷ்மர், துரோணர், ஜயத்திரதன், கர்ணன், சல்லியன் மற்றும் துரியோதனாதிகளை, அருச்சுனனும், வீமனும் வீழ்த்தியதால் பாண்டவர் அணி வெற்றி கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது. உதாரணமாக, பெண்களிடமும்,…

      • Like
    • 2 replies
    • 413 views
  6. "சைவ சித்தாந்தம்" [ஒரு விளக்கம் ] &“எரிச்சலை ஊட்டுகிறது” [ஒரு கவிதை] சைவ சித்தாந்தம் பண்டைய தமிழர்களுடைய மதமும் தத்துவமும் ஆகும். டாக்டர் போப்"சைவம் தென் இந்தியாவில், சரித்திரத்திற்கு முற்பட்ட மதமாக, முக்கியமாக ஆரியர் வருகைக்கு முன் இருந்து, தமிழ் மக்களின் மனதை கவர்ந்த ஒன்றாக காணப் பட்டது என்று கூறியுள்ளார். என்றாலும் சைவ சித்தாந்தம் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டள விலேயே என்று கருதப்படுகின்றது. நான் யார்? கடவுள் இருக்கிறாரா? கடவுள், உயிர், அண்டம், இவைகளின் இயல்பு என்ன ? உலகத்துடனும், கடவுளுடனும் எனது தொடர்பு என்ன ?ஒருவரால் கட்டுப் படுத்த முடியாத ஒரு சம்பவம், எம் வாழ்வில் நிகழ்வதற்கு காரணம் என்ன ? எந்த…

  7. "தோஷமும் விரதமும்" / பகுதி 01 மனதிற்கு ஒரு நிம்மதி கிடைக்கவும் உடலை கட்டுப்படுத்தவும் உண்மையில் உதவும் விரதம் அல்லது நோன்பு அல்லது உபவாசம் என்ற சடங்கை, பொதுவாக எல்லா சமயங்களும் இறைவனை வேண்டி, தாம் நினைத்த காரியங்கள் சரிவர செய்யும் ஒரு சடங்காக மக்களுக்கு அறிமுகப் படுத்துகிறது. விரதம் என்பது உண்ணாமல் இருத்தல் அல்லது உணவை குறைத்தல் என்று பொருள் கொள்ளலாம். இங்கு புலன்களின் அடக்கம் மிக முக்கியமாகிறது. அல்ல விட்டால் விரதம் முழுமையாக நிறைவேறாமல் போய் விடலாம். இங்கு புலனடக்கம் என்று கூறும் பொழுது மன அடக்கம் மிக முக்கியமாகிறது. அந்த மன அடக்கம் தனிய உணவின் மேல் எழும் ஆசையை, தூண்டலை அடக்குவது அல்ல, மனதை ஒரு நிலை படுத்தி பக்குவப் படுத்துவதைய…

  8. இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது. ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம். எனக்கு மதங்களைப் பற்றிய அறிவிருக்கிறதா என்ற கேள்வியும் சந்தேகமும் யாருக்காவது எழுந்தால் அவர்கள் என்மேலான தீர்ப்பை எழுதுவதற்கு நான் உதவத் தயாராய் இருக்கிறேன். எனது கேள்விகள் உறுத்தாமல் இருக்கவேண்டுமானால் என்னைப் பற்றிய தீர்ப்பை எழுதி, ஒரு அடையாளமிட்டு வைத்துவிடுவது அவர்களுக்கு நல்லது. எனக்கு மதங்களைப்பற்றிய அறிவு எவ்வளவு என்பதை எந்த அளவைய…

  9. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சென்னையில் மகா சிவராத்திரி நிகழ்வில் காளி வேடமணிந்து சாமியாடும் பெண் (கோப்புப்படம்) கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மதுரை தமுக்கம் மைதானத்தில் சமீபத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் பள்ளி மாணவிகள் சிலர் ‘சாமியாடிய’ நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபோன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டில் ஒன்றும் புதிதல்ல. கோவில் திருவிழாக்கள் அல்லது வழிபாட்டு நிகழ்வுகளின் போதோ, தீ மிதித்தல் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்தும் போதோ பலரும் ‘சாமியாடுவார்கள்’. வழக்கமாக அதிர்ந்து பேசாதவர்கள் கூட, ‘சாமியாடும் போது’ வேறொரு நபர…

  10. ஆண்டவனை [சமயத்தை] கொஞ்சம் மறவுங்கள், மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் சிந்தியுங்கள்! / FORGET GOD [RELIGION] FOR THE TIME BEING; AND THINK HUMAN [HUMANITY] FROM TODAY!” பகுதி / Part : 01 நாம் தவழ தொடங்கும் போதே, ஆண்டவனைப் பற்றிய கருத்து, அல்லது சமயம், அல்லது அதனுடன் சேர்ந்த சமய சம்பந்தமான சந்தேகமான நடைமுறைகள் எல்லாம் எமக்கு அல்லது எம்மில் பலருக்கு, எம்மை சூழ்ந்து இருப்பவர்களால் திணிக்கப் படுகின்றன. நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும், ஆண்டவனும் நாத்திகமும், சாதியும் சமத்துவமும், போன்ற அனைத்துமே ஒன்றாக பிறந்த இரட்டை எதிரிகள் ஆகும். இதில் எது ஒன்றாயினும் தலை காட்டும் போது, மற்றது அதை எதிர்க்க தலை காட்டும். எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்…

  11. "புண்ணியம்" "புண்ணியம் என்று ஒன்றும் இல்லை புரிந்த உணர்வுடன் உலகை அணுகு பசித்த வயிறுக்கு உணவு கொடு புலுடா மத கொள்கை நம்பாதே!" "தவறு செய்யாதே பாவம் வரும் தடுமாறி நீ நரகம் போவாய் தருமம் செய் புண்ணியம் வரும் தடை இன்றி சொர்க்கம் செல்வாய்!" "புளுகிவிட்டான் சொர்க்கம் நரகம் என்று புராண கதையும் ஏமாற்ற இயற்றிவிட்டான் புற்றுநோய் போல் அது பரவி புவியில் உள்ளோரை வலைக்குள் வீழ்த்திவிட்டது!" "நீச செயல்களை என்றும் செய்யாது நீதி செய்தால் உலகம் வரவேற்கும் நீங்காமல் உன்புகழ் இங்கு நிலைக்கும் நீர்க்குமிழி வாழ்க்கைக்கும் பெருமை சே…

  12. வாக்குண்டாம், பாட்டின் முதல் தொடரால் இந்நூல் இப்பெயரைப் பெற்றது. இதில் கடவுள் வாழ்த்து உட்பட 31 வெண்பாக்கள் உள்ளன. கடவுள் வாழ்த்து வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள் நோக்கு உண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு. பொருள்: பூக்களைக் கொண்டு சிவந்த மேனியுடைய விநாயகரது பாதங்களைத் துதிப்பவர்க்கு வாக்குத் திறமையும், நல்ல மனமும், பெருமலரை உடைய லக்ஷ்மியின் கடாக்ஷமும், நோயற்ற வாழ்வும் கிடைக்கும் நூல் நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி 'என்று தருங்கொல்?' என வேண்டா - நின்று தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத் தலையாலே தான் தருதலால். பொருள்: ஒருவர்க்கு உதவி செய…

  13. "உயிரே போனாலும் பெண்களை விட மாட்டோம் என்னும் சபரிமலை பக்தர்களுக்கு... " எல்லா சமயங்களும் மக்களுக்கு உண்மையை யும், நேர்மையையுமே போதிப்பதாகவும் அவை சகோதரத்துவத்தை வலியுறுத்துவதாகவும் ஆனால் மனித ர்கள் தான் தங்களுக்குள் சாதி, வர்க்க, பாலின பிரிவுகளை ஏற்படுத்திக் கொள்வதாகவும் கூசாமல் பொய் சொல்லும் மதவாதிகளை, நீதியின் தீர்ப்பின் பின்பும், சபரிமலை ஐயப்பன் கோவில் சுற்றாடலில், பெண்களை போகவிடாமல் தடுத்து நடைபெறும் அடாவடித்தனமும், அறிக்கைகளும், எச்சரிக்கைகளும், வன்முறைகளும் அம்பலப்படுத்தி இருக்கின்றது. இதற்கு திருவாங்கூர் தேவஸ்தானம் மற்றும் கேரள அரசின் நடவடிக்கைகள் உடந்தையாகவும் உள்ளன. பத்து அகவைக்கும் ஐம்பது அகவைக்கும் இடைப் பட்ட காலத்தில்…

  14. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஒருவர் பிரார்த்தனை செய்யும் போது அவரது மூளைக்குள் என்ன நடக்கிறது என்பது குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டன. கட்டுரை தகவல் எழுதியவர், ரேடாக்சியான் பதவி, பிபிசி நியூஸ் முண்டோ 9 மணி நேரங்களுக்கு முன்னர் நார்னியாவின் இலக்கியப் பிரபஞ்சத்தை உருவாக்கிய, புகழ்பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் சி.எஸ். லூயி, 'பிரார்த்தனை என்றால் என்ன’ என்பதை நன்கு விவரிக்கும் ஒரு சொற்றொடரையும் உருவாக்கியதாக சொல்லப்படுகிறது. “எனக்கு வேறு வழி இல்லாததால் நான் பிரார்த்தனை செய்கிறேன். என் இதயம் நொறுங்கியிருப்பதால், நான் பிரார்த்தனை செய்கிறேன். நான் விழித்திருந்தாலும் அல்லது தூங்கினாலும், அவ்வாறு செ…

  15. "உன்னைப் பழி தீர்த்த ஒருவனை , நீ பழிவாங்க முயன்றால். இறை தர்மத்தின் தண்டனை இருவருக்கும் சமமாகவே இருக்கும்??" கொல்ல வரும் பசுவையும் கொல்லலாமென்று சொன்னதே ஒரு பெரிய ஆத்மாதான். எறும்புக்கும் தீங்கு நினைக்காத குணம் போற்றுதலுக்குரியதுதான். ஆனால், என் தாயின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கூட்டத்தினரிடமும், என் சகோதரியின் கற்புக்கு களங்கம் விளைவிக்க வரும் வெறிக் கூட்டத்தினரிடமும் நான் கருணை காட்டினால்? ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்று சொல்லியதையும்.... அன்பு செய்ய சொல்லியதையும் நாம் தவறாக புரிந்து கொண்டிருக்கி றோமோ... ???? எவன் ஒருவன் கோபத்தில் அறைந்து செல்வானாயில், அவனிடம் மறு கன்னத்தையும் காட்டு... அவன் அதை நினைத்து வருந்தாவி…

  16. ஒரு மனிதரின் வெளிப்புறத் தோற்றத்தை வைத்து நாம் அவரை எடைபோடுகிறோம். அவருடைய ஞானம், தகுதிகள் ஆகியவற்றை அறியாமல் இத்தவறைப் பெரும்பாலோர் செய்கிறார்கள். மெய்மையைப் போதித்ததால் தந்தையின் சாபம் பெற்று எட்டுக் கோணல்களுடன் பிறந்து ஜனக மன்னருக்கு விழிப்புணர்வைப் போதித்துத் தந்தையையும் காப்பாற்றி சாபவிமோசனம் பெற்ற ஒரு முனிவர் பற்றி அறிந்து கொள்வோம். உத்தாலக ஆருணி என்ற வேத முனிவருக்கு சுவேதகேது என்ற மகனும் சுஜாதா என்ற மகளும் இருந்தார்கள். வேதம் கற்பிக்கும் பள்ளியை நடத்தி வந்தார் உத்தாலகர். இப்பள்ளியில் பயின்று வந்தார் கஹோடர். இவருக்குத் தன் மகள் சுஜாதாவை மணம் முடித்துக் கொடுத்தார் உத்தாலகர். திருமணமானது கர்ப்பமுற்றாள் சுஜாதா. அவளும் வேதப் பயிற்சியில் சிறந்தவள் என்பதால் கருவ…

  17. இராத்திரி உறக்கங் கொள்ள இயலாமல் போனது. நீலகண்டன் கடிதம் போட்டிருந்தான். குழந்தைக்கு அரையாண்டு விடுமுறை. கிளம்பி வருகிறோம், தன் பிள்ளைக்காக, அவனைப் பார்க்க அவரே விடுமுறை நாளுக்குக் காத்திருத்தல் என்றாச்சு. நகரத்தில் அவன் ஒரு நடமாடும் காந்தம். உயர்ந்த கட்டிடத்தில் உயர்ந்த உத்தியோகம். சட்டை காணாத தன் வாழ்க்கை போல இல்லை இது. நேரமின்றித் தவிக்கிற அவனது கணங்கள். பொற்கணங்கள். கார் வைத்திருக்கிறான். தொலைபேசி எப்போதும் கூடவே. குரைக்கிற நாயைக் கூடக் கூட்டிப் போகிறாப்போல. கிராப் எடுப்பும் உடைகளும், எல்லாமே மாறிவிட்டன. அழுத மூக்கை அவர்தான் சிந்திவிட வேண்டும் என்றிருந்த பிள்ளை. டென்னிஸ் விளையாடுகிறதைப் போல, முன்மடிந்த வாக்கில் ஓடியோடி பந்தடிப்பது போலக் காசு வேட்டையாடுகிறான். சொந்த ஜாக…

  18. "வேதம் & புராணம்" இந்து சமயத்துப் புராணகதைகள் பெரும்பாலனவைகளை படிக்கும் போது கடவுள்மார்கள் மக்களுக்கு ஏற்ற வழிகாட்டிகள் அல்லாதவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் செய்யும் விபரீதமான செயல்கள் எல்லாம் மனிதரே செய்ய அஞ்சும் விலக்கப் பட்ட செயல்களாக இருக்கும். இக்கதைகளை பக்தர்கள் கேள்வியே கேட்காது கேட்டு ரசிக்க வேண்டும் என்று எதிர்பார்கிறார்கள். இவைகள் வெறுமனே எழுதப் பட்ட கதைகள் தான் என்றாலும் ஏன் தான் கடவுள்மாரைக் நல்ல கடவுள்தனம் உள்ளவராகச் சித்தரித்து மக்களுக்கு ஒரு இறை பக்தி வரும் படியான சிந்தனைகளை ஏற்படுத்தும் கதைகளை எழுதாமல் விட்டார்கள் என்று கண்டு பிடிக்க முடியாமல் இருக்கிறது. இந்து மதத்தில், வேதம் என்ற சொல் 'வித்' என்…

  19. மார்க்சின் கம்யூனிசம், கற்பனை அல்ல! - என்.குணசேகரன் மே 5: கார்ல் மார்க்ஸ் பிறந்ததினம் மனித சமூக வளர்ச்சி பற்றிய காரல் மார்க்சின் பார்வை மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தது. சமத்துவம் நிலைப்பெற்று, மனிதம் மாபெரும் வளர்ச்சி கண்டு சிகரம் தொடும் நிலையை காரல் மார்க்ஸ் சிந்தித்தார். மற்ற ஞானிகள் மேலான சமூகம் பற்றி மாபெரும் கனவுகள் கண்டனர். ஆனால், மார்க்ஸ் அறிவியல் நடைமுறையுடன் இணைத்து தனது சிந்தனைகளை பதிவு செய்தார். ஒரு தனிநபரின் சுதந்திரமான வளர்ச்சி மட்டுமல்ல; சமூக மாந்தர்கள் அனைவரின் சுதந்திரமான வளர்ச்சி எட்டப்பட வேண்டும் என்று “கம்யூனிஸ்ட் அறிக்கை”யில் மார்க்ஸ் எழுதினார்.சோசலிச சமூகத்தின் கோட்பாடாக மார்க்ஸ் இதனை கருதினார். மார்க்ஸின் சமூக சித்திரம் …

  20. "தெரியாது" ஆனால் “தெரியும்” புத்தர் தன் சீடர்களுடன் அமர்ந்திருந்தார். அப்போது ஒரு சிறுமி வந்து அவரை வணங்கினாள். – புத்தர் கேட்டார்: “எங்கிருந்து வருகிறாய் அம்மா?” – ”தெரியாது” – ”எங்கே போகிறாய்?” – ”தெரியாது” – சிறுமியின் பதிலைக் கேட்டு சீடர்களுக்குச் சிரிப்பு வந்து விட்டது. – “இப்படித் தெரியாது தெரியாது என்று சொல்கிறாயே… உனக்கு எதுவுமே தெரியாதா?” என்று புத்தர் கேட்டார். அதற்குச் சிறுமி, “தெரியும்” என்றாள். – உடனே புத்தர், “”என்ன தெரியும்?” என்று ஆவலாகக் கேட்டார். – அதற்கு அவள், “”தெரியாது” என்றாள். புத்தருக்கு குழப்பமான மனநிலை. “”என்னம்மா இப்படிக் குழப்புகிறாய்?” அந்தச் சிறுமி சொன்னாள்: – “குருவே…

  21. "வாழ்வைப் பற்றிய சைவ நோக்கம்" சைவசமயம் [தற்காலத்தில் இது இந்து சமயத்துக்குள் உள்வாங்கப் பட்டு இருந்தாலும், உண்மையில் இவை இரண்டு வேறுபட்டவை. எனவே இதை இந்து சமயத்துடன் குழப்பவேண்டாம்] "அன்பே சிவம்", "தென்னாடுடைய சிவனே போற்றி; என்னாட்டவர்க்கும் இறைவ போற்றி" என்று அது எங்களுக்கு போதிக்கிறது. அதாவது ஆண்டவனும் அன்பும் வேறு வேறு இல்லை. இரண்டும் ஒன்றே! இந்த முதுமொழி, தமிழ் இலக்கியத்திலும் சமுதாய எண்ணங்களிலும் பொசிந்து புகுந்து எல்லா இடங்களிலும் பரவி இருப்பதுடன் இது அன்பே கடவுளை அடையும் மார்க்கம் என்ற தற்கால சிந்தனையில் இருந்து வேறுபடுகிறது. அதாவது அன்பு தான் கடவுள் என்று இது போதிக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்ப…

  22. "எனது பார்வையில் சிவன் உறையும் கைலாய மலை" [படம் 1 & 2: சிந்து வெளியில் கண்டு எடுக்கப் பட்ட பசுபதி [சிவனின் முன்னைய வடிவம்] யும் சிவலிங்கமும். படம் 3 : சீனாவில் குவன்சௌ (Quanzhou) என்னும் துறைமுக நகரில் உள்ள இந்து ஆலய செதுக்கப்பட்ட சிவன் சிற்பம்] சிவனின் மூலத்தை அறிய வேண்டின் நாம் சிந்து வெளிக்கு போக வேண்டியுள்ளது. மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய சிந்து வெளி நாகரிகத்தில் மேற்கொள்ளப் பட்ட தொல்பொருள் ஆராய்ச்சிகள் சிவ வழிபாட்டின் மூலத்தை அல்லது ஆரம்பத்தை அங்கு கண்ட சிவலிங்கம் மற்றும் பசுபதி முத்திரை [Shiva Lingam.& The Pashupati Seal] போன்ற சாட்சிகளுடன் நிறுவியுள்ளனர். இந்த நாகரிகம் சிந்து நதியின் கரையோரம் காணப்படுகிறது. இந்த…

  23. களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்

  24. "எனது பார்வையில் 'ஓம்' [ௐ]" வேத மதத்தின் [vedic religion] - ஆரிய அல்லது பிராமண இந்து சமயத்தினரின் -ஆதார நூல்களான வேதங்களில் இறுதியாக வந்த உபநிடதங்கள் அல்லது உபநிஷத்துக்களில் (Upanaishads) முதன் முதலில் 'ஓம்' என்ற மந்திரம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. உபநிடதங்கள் கி.மு. 700 ஆம் ஆண்டில் இருந்து கி.மு. 100 ஆம் ஆண்டுவரை படிப் படியாக உருவாக்கப் பட்டவை. உதாரணமாக, முன்பு என்ன நடந்தது, இப்ப என்ன நடக்கிறது, இனி என்ன நடக்கும் - எல்லாம் 'ஓம்' தான் [What had happened before, What is now and What will be later - Everything is just 'OM'] என்கிறது மாண்டூக்கிய உபநிடதம் [”மாண்டூகம்” என்பதற்கு சமற்கிருத மொழியில் தவளை என்று பொருள்]. இந்த 'ஓம்' என்ற சத்தம் [ஒலி], இ…

  25. "பலன் தரும் பழக்கங்கள்" "நீ எதை விதைக்கிராயோ அதையே அறுவடை செய்வாய்" "வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் " ஆகவே மற்றவர்களை மரியாதையாக நடத்தினால் நியுட்டன் விதி சொல்வது போல- "எந்த ஒரு தாக்குதலுக்கும் ஒரு எதிர் தாக்குதல் உண்டு" -நீ அதையே பெருவாய். "நம் செயல்களுக்கு நாமே காரணம்!" "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" -ஔவையார். "ஒருவன் எப்படி நடக்கிறானோ, அவனும் அது போலவேயாகிறான்" என்கிறது யஜுர் வேதம். "எனைப் பகை உற்றாரும் உய்வர்; வினைப் பகை வீயாது, பின் சென்று, அடும்."- திருக்குறள் [ஒருவர் செய்த தீ வினைப் பகைமைப் பலனிலிருந்து ஒருபோதும் தப்பிக்கவே …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.