Jump to content

"தெரியாது" ஆனால் “தெரியும்”


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"தெரியாது" ஆனால் “தெரியும்”

 

புத்தர் தன் சீடர்களுடன் அமர்ந்திருந்தார். அப்போது ஒரு சிறுமி வந்து அவரை வணங்கினாள்.

புத்தர் கேட்டார்: “எங்கிருந்து வருகிறாய் அம்மா?”

”தெரியாது”

”எங்கே போகிறாய்?”

”தெரியாது”

சிறுமியின் பதிலைக் கேட்டு சீடர்களுக்குச் சிரிப்பு வந்து விட்டது.

“இப்படித் தெரியாது தெரியாது என்று சொல்கிறாயே…
உனக்கு எதுவுமே தெரியாதா?” என்று புத்தர் கேட்டார்.


அதற்குச் சிறுமி, “தெரியும்” என்றாள்.

உடனே புத்தர், “”என்ன தெரியும்?” என்று ஆவலாகக் கேட்டார்.

அதற்கு அவள், “”தெரியாது” என்றாள்.


புத்தருக்கு குழப்பமான மனநிலை.


“”என்னம்மா இப்படிக் குழப்புகிறாய்?”
அந்தச் சிறுமி சொன்னாள்:

“குருவே, உண்மையைத்தான் சொன்னேன். 
எங்கிருந்து வருகிறாய் என்ற கேள்விக்கு என் ஊரின் பெயரைத்தான் கூறியிருக்க வேண்டும். ஆனால் அந்த ஊரில் பிறப்பதற்கு முன்பு நான் எங்கிருந்தேன் என்று எனக்குத் தெரியாது அல்லவா? அதனால் தெரியாது என்றேன்.

எங்கே போகிறாய்? என்ற கேள்விக்கு நான் போகும்
ஊரைச் சொல்ல வேண்டும். ஆனால் நான் இறந்த பின்பு எங்கே போகிறேன் என்று எனக்குத் தெரியாது. அது எப்போது நிகழும் என்றும் எனக்குத் தெரியாது” என்றாள்.

புத்தர் சொன்னார்: “”இந்தச் சிறுவயதில் நீ இவ்வளவு
அறிவாகப் பேசுவாய் என்று எனக்குத் தெரியவே தெரியாது’..!” 

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

No photo description available. 18192643_10209147330623152_1968969289908769449_o.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ScyvjF-j9SYAb7Yvnqv&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfA75uxNN7DULzAFUPY__wWgGEmTC1-goCieD589eQIZ3w&oe=665712C7 

 

 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.