உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26599 topics in this forum
-
சோமாலியாவில் இரட்டை குண்டுத் தாக்குதல் : ஐ.நா.வின் 9 பாதுகாவலர்கள் பலி : அல் ஷபாப் பொறுப்பேற்பு சோமாலியா தலைநகர் மொகடிசுவில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே இடம்பெற்று இரட்டை இரண்டு தற்கொலைப்படை தாக்குதலில் ஐக்கிய நாடுகளின் 9 பாதுகாவலர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அல் ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மொகடிசுவில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு மேற்கொள்வதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு தாக்குதல் விமான நிலையத்தின் வாயில் அருகில் உள்ள சோதனைச்சாவடி பகுதியிலும் மற்றுமொரு தாக்குதல் விமான நிலையத்திற்கு சற்று அப்பால் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. …
-
- 0 replies
- 218 views
-
-
சுதந்திர தினம் வருகின்ற 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தேசியச் சின்னங்கள் முன் செல்ஃபி எடுக்க, ஒரு வார காலத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.வருகின்ற 15-ம் தேதி, நாடு முழுவதும் சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக விமான நிலையம் உள்பட முக்கியமான பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி மத்திய உள்துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், தேசியச் சின்னங்கள் முன் செல்ஃபி எடுக்க, ஒரு வார காலத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில சுற்றுலாத் துறைக்கும், மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் சுற்றறிக…
-
- 0 replies
- 322 views
-
-
ஆந்திர பிரதேச மாநிலத்தில் 10 ரூபாய் தர மறுத்த தாயை அவரது மகனே தீயிட்டு எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் உள்ள கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் துர்காபாய் (50), இவருக்கு அம்பேத்கர் (25) என்ற மகன் உள்ளான். எப்போதும் தாயிடம் செலவுக்கு பணம் வாங்கி செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்த அம்பேத்கர், நேற்று செலவுக்காக அவரது தாயிடம் 10 ரூபாய் கேட்டுள்ளார். மகன் கேட்ட 10 ரூபாயை கொடுக்க துர்காபாய் மறுத்ததால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அம்பேத்கர், துர்காபாயின் மீது கேரோசினை ஊற்றி தீயிட்டு எரித்தார். துர்காபாயின் அலறல் சத்தம் கேட்டு அவரது வீட்டிற்கு விரைந்த அக்கம் பக்கத்தினர், அவரை உடனடியாக மருத்துவமனையில் …
-
- 0 replies
- 419 views
-
-
சீனாவின் ‘இரு குழந்தைகள்’ சட்டத்தையடுத்து மக்கள் தொகையில் சடுதியான உயர்வு சீனாவில் அமலில் இருந்த ‘ஒரு குழந்தை’ சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து பிறப்பு வீதம் அதிகரித்துள்ளது. இதன்படி, 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு சுமார் பதின்மூன்று இலட்சம் குழந்தைகள் மேலதிகமாகப் பிறந்துள்ளன என்று தெரியவந்துள்ளது. சனத்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக 1979ஆம் ஆண்டு முதல் ‘குடும்பத்துக்கு ஒரு குழந்தை’ என்ற சட்டத்தை அமல் படுத்தியது சீன அரசாங்கம். இதனால் பிறப்பு விகிதம் குறைவடையத் தொடங்கியது. எனினும், இந்தச் சட்டத்தால் வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், மத்திய வயதுடையவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், வேலைக்குச் செல்வோரின் எண்ணிக்கை க…
-
- 0 replies
- 233 views
-
-
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில், போலீஸ் சீருடையில் சென்று, சிறைக் காவலர்களுடன் சண்டையிட்டு டிரான்ஸ்பார்மர்களைத் தகர்த்து சிறையில் இருந்த 300 கைதிகளை அதிரடியாக விடுவித்துள்ளனர் தாலிபன் தீவிரவாதிகள். பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள தேரா இஸ்மாயில் கான் என்ற பகுதி பாகிஸ்தானின் பழங்குடியினர் வாழும் தெற்கு வரிசிஸ்தான் எல்லையில் உள்ளது. இங்குள்ள சிறைச்சாலை ஒன்றில் சுமார் 5000 கைதிகள் உள்ளனர். அவர்களுள் 250 பேர் கொடூரமான தீவிரவாதிகள். நேற்று மாலை அச்சிறைக்கு போலீஸ் சீருடையில் வந்த 150க்கும் மேற்பட்ட தாலிபன் தீவிரவதிகள் உள்ளே வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். அவர்களின் அதிரடித் தாக்குதலால் சிறையின் வெளிப்புறத் தடுப்புச் சுவர் சுக்கு நூறானது. தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக…
-
- 0 replies
- 230 views
-
-
மணிலா: தமிழக மழையை உள்வாங்கிக் கொள்கிறது தென்சீனக் கடல் புயல் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியிருந்தார். அவர் சொன்ன புயல் தற்போது தென் சீனாவையும் பிலிப்பைன்ஸையும் பதம் பார்த்து வருகிறது. தென் சீனக் கடலில் மையம் கொண்டுள்ள புயலால் இதுவரை இல்லாத அளவு மழை தென் சீனப் பகுதியிலும் பிலிப்பைன்ஸிலும் பதிவாகி இருக்கிறதாம். கொட்டும் கனமழையால் ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்ஸில் மரங்கள் வேரோடு சாய்ந்து வீழ்ந்துள்ளன. கடல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விமானப் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. ஹாங்காங் பங்குச் சந்தை வர்த்தகம் மூடப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வைக்கப்பட்டுள்ளனர். அண்மையில்தான் பிலிப்பைன்ஸை பெரும் புயல் …
-
- 0 replies
- 307 views
-
-
டெல்லி: சீனாவுக்கு செல்ல இருந்த இந்திய விமானப் படைத் தளபதி ஏர் சீப் மார்ஷல் என்.ஏ.கே. பிரவுனியின் பயணத்தை மத்திய அரசு திடீரென ரத்து செய்துவிட்டது. எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தின் ஊடுருவல்கள் அதிகரித்து வரும் நிலையில், அந்த நாட்டுக்கு நமது விமானப் படைத் தலைவர் நல்லெண்ணப் பயணம் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று இந்தியா கருதுவதாகத் தெரிகிறது. முன்னதாக பிரவுனியை தனது நாட்டுக்கு வருமாறு சீன அரசு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், பிரவுனி அங்கு செல்வதற்கு முன் சீனாவில் இருந்து முப்படைத் தலைவர்களில் ஒருவர் இந்தியாவுக்கு வரட்டும் என்று மத்திய அரசு கருதுவதாகத் தெரிகிறது. அதே போல இந்திய ராணுவத் தளபதி பிக்ரம் சிங் வரும் நவம்பரில் சீனா செல்ல உள்ளார். சீனா-இந்தியா கூட்டு ராணுவப் பயிற…
-
- 0 replies
- 326 views
-
-
ஜெர்மனி ஜி20 உச்சி மாநாட்டில் டிரம்ப் - புதின் ரகசிய உரையாடல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்யா அதிபர் புதின் இந்த மாதம் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் முன்பு வெளியில் அறிவிக்கப்படாத கூட்டம் ஒன்றில் இரண்டாவது முறையாக சந்தித்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு அதிகாரபூர்வ அமர்விற்கு பிறகு இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்பது குறித்து வெள்ளை மாளிகை எதையும் வெளியிடவில்லை. இந்த ரகசிய பேச்சுவார்த்தை குறித்த தகவல்களை ''போலியான செய்தி'' என்று கூறி மறுக்கிறார் அதிபர் டொனால்ட் டிரம்ப். கடந்த ஆண்டு நடைபெற்…
-
- 0 replies
- 329 views
-
-
உலகிலேயே "நீளமான" தொங்கும் பாலம் ஸ்விட்சர்லாந்தில் திறப்பு படத்தின் காப்புரிமைEPA Image captionஇதற்கு முன்னதாக இங்கு இருந்த பாலம் பாறைகள் விழுந்து சேதமாகிவிட்டது ஸ்விட்சர்லாந்தின் ஸெர்மாத் நகருக்கு அருகில் சுமார் 500 மீட்டர் (1,640 அடி) நீளத்தில், உலகிலேயே நீளமான தொங்கும் நடைபாதை திறக்கப்பட்டுள்ளது. காற்று வாங்க அல்லது உடற்பயிற்சிக்காக இயற்கையான சூழலில் சென்றுவர உகந்த அளவில் இந்த தொங்கும் நடைபாதை பாலம் உள்ளது. படத்தின் காப்புரிமைEPA "ஐரோப்பிய பாலம்" என்று பெயரிடப்பட்டுள்ள 494 மீட்டர் நீளமான இந்த பாலம் கிராபென்குஃபர் செங்குத்து குறுகிய பள்ளதாக்கிற்கு இடையில் அமைக்கப்பட்டுள்ளது. நிலத்திற்கு மேலே 110 …
-
- 0 replies
- 632 views
-
-
நளினி உட்பட 4 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!! 27 பெப்ரவரி 2014 நளினி உட்பட 4 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!! ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உட்பட 4 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்தது. ராஜிவ் வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கை ரத்துச்செய்து ஆயுள் தண்டனையாக்கியது உச்சநீதிமன்றம். இதனைத் தொடர்ந்து இந்த மூவர் உட்பட ராஜிவ் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இந்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தது. பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரது விடுதலைக்கு எதிராகவே அம்மனுத்தாக்கல் செய்யப்பட்டது…
-
- 0 replies
- 398 views
-
-
செல்வமும் செல்வாக்கும் மிக்கவர்கள் வரியிலிருந்து தப்ப உதவும் வெளிநாடுகளில், தம் பெருஞ்செல்வத்தை எப்படி முதலீடு செய்கிறார்கள்? பாரடைஸ் பேப்பர்ஸ் எனப்படும் புலனாய்வின் ஆவணங்கள் வெளிப்படுத்தும் பிரத்யேகத் தகவல்கள்!! மற்றும் சிசுக்கள் தொடர்பான நவீன விஞ்ஞான வளர்ச்சி கருக்கலைப்புகளை அதிகரிக்கக்கூடுமென எச்சரிக்கை! கருக்கலைப்புகள் அதிகம் நடக்கும் ஐஸ்லாந்திலிருந்து பிபிசி தரும் பிரத்யேக செய்தித்தொகுப்பு!! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 303 views
-
-
அகதிகள் தமிழகம் வருகை அதிகரிப்பு முகாமிலுள்ளவர்களுக்கு கட்டுப்பாடு திண்டுக்கல் : இலங்கையிலிருந்து அகதிகளாக வந்தவர்கள் தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது இலங்கையில் நடக்கும் கலவரத்தால் அகதிகளாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அகதிகள் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மறுவாழ்வு சிறப்பு ஆணையர் ராஜ்குமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள இனக்கலவரத்தினால் நிவாரணம் கோரி இந்தியாவில் தஞ்சம் புகுந்த அகதிகளுக்கு தற்காலிக தங்குமிடம், பணிக்கொடை, மான்ய விலையில் அரிசி, 2 ஆண்டிற்கு ஒரு முறை பாத்திரங்கள், பிளஸ் 2 வரை இலவசக்கல்வி, கல்லுõரி படிக்க பணிக்கொடை ஆகியவை வழங்கப்படுகிறது. …
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழகத்தில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்ட படங்களும் கட்டுரையும். http://www.eelampage.com/?cn=26904
-
- 0 replies
- 955 views
-
-
“இங்கிலாந்து நாட்டை உருவாக்கியது யார்?”- நூற்றாண்டுகள் சந்தேகத்தை தீர்த்த ஆய்வு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES இங்கிலாந்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய வைக்கிங் ராணுவ படைகளுக்கு என்ன நிகழ்ந்தது என்று தெரியாமல் இருந்தது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்த மர்மத்தின் முடிச்சுகளை அவிழ்த்துள்ளதாகத் தெரிகிறது. டெர்பிஷைரின், ரெப…
-
- 0 replies
- 468 views
-
-
உக்ரேன் போர்க்களத்தில் அவுஸ்திரேலியர் பலி By RAJEEBAN 06 SEP, 2022 | 11:59 AM உக்ரேன் போர்க்களத்தில் மருத்துவபணிகளில் ஈடுபட்டிருந்த அவுஸ்திரேலியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குயின்ஸ்லாந்தின் தென்பகுதி நகரான நனாங்கோவை சேர்ந்த ஜெட் வில்லியம் டனகே என்ற 27 வயது நபர் உக்ரேனின் இசியம் பகுதியில் கொல்லப்பட்டுள்ளார். ஜெட் வில்லியம் டனகே செலுத்திக்கொண்டிருந்த மருத்துவ வாகனத்தை ரஸ்ய படையினர் இலக்குவைத்தனர் என கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஜெட் தனது வாழ்நாளில் ஏனையவர்களிற்கு உதவ முயன்றார் நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும் செய்யக்கூடியதை விட அதிக உதவிகளை அவர் குறுகிய காலத்தில் செய்தார் என குடும்பத்…
-
- 0 replies
- 242 views
- 1 follower
-
-
அமெரிக்க தளபதியை சுட்டுக்கொன்ற ஆப்கன் ராணுவ வீரர் ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள பிரிட்டன் நாட்டு ராணுவச்சாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்க ராணுவத்தின் மிகப்பெரிய பொறுப்பில் உள்ள தளபதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆப்கன் ராணுவத்தினருக்கான உடையில் வந்த வீரர் ஒருவர் அவரை கொன்றதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஜெர்மன் நாட்டு தளபதி ஒருவர் உள்பட 15 படையினரும் அந்த வீரரின் தாக்குதலால் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் இரு-நட்சத்திரங்களை அணிந்துள்ள அந்த அதிகாரியின் பெயர் வெளியிடப்படவில்லை. 13 வருட போரில் தற்போது தான் அமெரிக்காவின் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கன் பாதுகாப்பு துற…
-
- 0 replies
- 480 views
-
-
கருங்கடல் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்திலிருந்து தற்காலிகமாக விலகுவதாக புடின் அறிவிப்பு! உக்ரைனிய தானிய ஏற்றுமதிகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களை பாதுகாப்பான பாதையில் செல்ல அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் தற்காலிகமாக விலகுவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் அறிவித்துள்ளார். எனினும், இந்த ஒப்பந்தத்திலிருந்து முழுமையாக விலகவில்லை என்று அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். உக்ரைன் தனது கடற்படையைத் தாக்க கருங்கடலில் ஒரு பாதுகாப்பு வழித்தடத்தை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி, ஐ.நா-வின் தரகு ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா சனிக்கிழமை வெளியேறியது. ஆனால், இந்த தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்கவில்லை. உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, இந்த ஒப்பந்தம்…
-
- 0 replies
- 238 views
-
-
உக்ரைனில் மின்கட்டமைப்பை சீரமைக்க 800 மில்லியன் யூரோ தேவை! ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டு வரும் உக்ரைனில் சேதமடைந்த மின்கட்டமைப்பை சீரமைக்க 800 மில்லியன் யூரோ தேவைப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைனுக்கு உதவுவதற்காக பரிஸில் நடந்த சர்வதேச மாநாட்டில் இக்கோரிக்கையை முன்வைத்த ஜெலன்ஸ்கி, நிதியாக மட்டுமின்றி மின்மாற்றிகள், உயரழுத்த மின்கம்பிகள், ஜெனரேட்டர்கள் போன்றவற்றையும் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மின்சார கட்டமைப்புகள் சேதப்படுத்தப்பட்டதால் வரும் குளிர் காலத்தை சமாளிக்கும் வகையில் சுமார் இரண்டு பில்லியன் கன மீட்டர் கூடுதல் எரிவாயுவை வழங்க வேண்டுமென ஜி7 நாடுகளுக்க…
-
- 0 replies
- 290 views
-
-
ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைன் தூக்கிலிடப்படும் வேளை அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் அதனை படம் பிடித்தமை மற்றும் அவரை நிந்தித்தமை குறித்து ஈராக்கிய அரசாங்கம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இவை தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டமை மத வன்முறையை மேலும் தூண்டும் அபாயம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்தே விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சதாம் ஹுசைன் தூக்கிலிடப்பட்டதையும் அவர் அதிகாரிகளினால் நடத்தப்பட்டதையும் அறிந்த பின்னர் மொசுல் நகர சிறைச்சாலையொன்றில் சுன்னி முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். சில மெய்ப்பாதுகாவலர்கள் சதாமை நோக்கி கோஷமெழுப்பியுள்ளனர். இது பொருத்தமற்றது, இது குறித்த அரசாங்க விசாரணைகள் இடம்பெறுகின்றன என ஈராக்கிய பிரதமர் நூறி அல் - மலிக்கிய…
-
- 0 replies
- 878 views
-
-
* தூக்கிலிடும் ஒருவர் பேசுகிறார் கொல்கத்தாவின் தென்பகுதியில் ஒரு சிறிய குடிசையில் வாசம் செய்யும் 87 வயதான நாட்ட முல்லிக் பெருமையுடனும் அமைதியாகவும் தூக்குத்தண்டனை நிறைவேற்றும் தனது நடுக்கத்தை ஏற்படுத்தும் தனது வாழ்க்கையையும் 2 வருடங்களுக்கு முன்னர் தனது புகழை சர்வதேச ரீதியில் உயர்த்திய கடைசி கடமையையும் நினைவு கூருகிறார். உலகளாவிய ரீதியில் ஊடகங்கள் தமது கவனத்தை முல்லிக்மீது செலுத்தி அவர் கொலைக்குற்றமும் பாலியல் வல்லுறவும் சாட்டப்பட்ட டனொன் ஜேசட்டர் ஜீயின் தூக்குத்தண்டனையை நிறைவேற்ற அசாதாரண தூக்குத்தண்டனை நிறைவேற்றுபவர் என்ற ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தூக்குத்தண்டனை சம்பந்தமான உணர்ச்சிபூர்வமான வாதப்பிரதிவாதங்கள் முல்லிக்கை புகழின் உச…
-
- 0 replies
- 901 views
-
-
பாக்தாத்தில் 9 அமெரிக்கப் படையினர் பலி ஈராக்கின் வீதியோரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பொன்றில் 6 அமெரிக்க படையினர் பலியாகியுள்ளதுடன் பிறிதொரு சம்பவமொன்றில் 3 படையினர் பலியாகியுள்ளனர். ஸுன்னி முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் பாக்தாத்தின் வடபகுதியிலுள்ள சலஹட்டின் மாகாணத்தில் அமெரிக்கப் படையினரின் வாகனத்திற்கருகிலேயே இச் சம்பவம் இடம்பெற்றதாகவும் இதில் மேலும் மூவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. தியலா மாகாணத்திலும் மூன்று அமெரிக்கப் படையினர் பலியாகியுள்ளதோடு ஒருவர் காயமடைந்துள்ளார். வீதியோர குண்டுகள் கிளர்ச்சியாளர்களால் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளதாகவும் இவை ஈரானில் தயாரிக்கப்பட்டவை எனவும் அமெரிக்க தளபதிகள் இவ் விடயம் தொடர்பாக அக்கறை செல…
-
- 0 replies
- 596 views
-
-
பலபொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு; 9 பேர் உயிரிழப்பு பிரபல பல்பொருள் அங்காடி மீது மர்ம நபர்கள் சிலர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், 9 பேர் உயிரிழந்த சம்பவம் மெக்சிகோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவின் டொலுகா நகரில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றிலேயேநேற்று முன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று விற்பனை நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர். இத்தாக்குதலில் 9 பேர்உயிரிழந்துள்ளனர் எனவும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவி…
-
- 0 replies
- 278 views
-
-
ரஷ்யாவுடனான அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேற்றம்! பனிப்போர் காலத்தில் ரஷ்யாவுடன் அமெரிக்கா மேற்கொண்ட அணுவாயு வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை விலக்கிக்கொள்ளப் போவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஊடகங்களுடனான சந்திப்பில் நேற்று (சனிக்கிழமை) கருத்துத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த 1987ஆம் ஆண்டு இடைப்பட்ட தூரத்திற்குள் செயற்படும் அணுவாயுதங்களுக்கான வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா-ரஷ்யா கைச்சாத்திட்டதற்கு இணங்க, ரஷ்யா முறையாக செயற்படவில்லையென ட்ரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளார். குறித்த ஒப்பந்தமானது, 500 தொடக்கம் 5,500 வரையான கிலோ மீற்றர் பரப்பிற்குள் செயற்படும் அணுவாயுதங்க…
-
- 0 replies
- 386 views
-
-
துவாலு நாட்டின் கரையோர வீடுகள் பல ஏற்கெனவே கடலால் சூழப்பட்டுவிட்டன.| கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் உலகின் 4-வது மிகச் சிறிய நாடான துவாலு, புவி வெப்பமயமாதலினால் முதலில் அழிந்துவிடும் அபாயத்தில் உள்ளதென்று அந்நாட்டு பிரதமர் தனது உருக்கமான வேண்டுகோளை உலக நாடுகளிடம் பதவி செய்துள்ளார். பாரீஸில் வரும் டிசம்பர் மாதம் நடக்க இருக்கும் ஐ.நா. பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களை ஒன்றிணைக்கும் நோக்கத்திலான பயணத்தை உலகின் 4-வது மிகச் சிறிய நாடான துவாலுவின் பிரதமர் எனிலே ஸ்போகா மேற்கொண்டுள்ளார். பசபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியா மற்றும் ஹவாலிக்கு நடுவே குட்டித் தீவுகளை கொண்ட நாடு தான் துவாலு. வெறும் 10 ஆயிரம் பேருக்கான தேசமாக உள்ள துவாலு, பருவ…
-
- 0 replies
- 833 views
-
-
டிரம்ப் அதிபராக ரஷ்யா உதவியதா - விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionடொனால்ட் டிரம்பு 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், ரஷ்யாவுக்கு இடையில் இருந்ததாக கூறப்படும் தொடர்பு பற்றி நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட…
-
- 0 replies
- 762 views
- 1 follower
-