உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
ஈரான் அணுவாயுத நடவடிக்கைகளை இரகசியமான முறையில் முன்னெடுக்கிறது [27 - February - 2008] * ஐ.நா.வின் அணு கண்காணிப்பு பிரிவு ஈரான் அணுவாயுத நடவடிக்கைகளை இரகசியமான முறையில் முன்னெடுப்பதாக ஐ.நா.வின் அணு விவகார கண்காணிப்பு அமைப்பு தெரிவிக்கின்றது. ஈரான் தனது அணு நிகழ்ச்சித் திட்டத்தை 2003 இலேயே நிறுத்தி விட்டதாக கடந்த டிசெம்பரில் வெளியான அமெரிக்க புலனாய்வு அமைப்பொன்றின் அறிக்கை தெரிவித்திருந்த நிலையிலேயே ஐ.நா.வின் அணுக் கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சர்வதேச அணுச்சக்தி முகவர் அமைப்பிற்கு (ஐ.ஏ.ஈ.ஏ) வழங்கப்பட்ட அறிக்கையிலேயே ஈரான் தனது அணு நிகழ்ச்சித் திட்டத்தை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் அறிக்கையை நிராகரித்துள்ள ஐ.ஏ.ஈ.ஏ.க்கான ஈரானியத் தூதுவர…
-
- 0 replies
- 628 views
-
-
தயாநிதி மாறானால் மக்களவையில் பரபரப்பு 2/26/2008 6:38:11 PM வீரகேசரி இணையம் - முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் மக்களவையில் மத்திய அமைச்சர்கள் பகுதியில் அமர்ந்திருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வர் கருணாநிதி குடும்பத்திற்கும் மாறன் குடும்பத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்ட பிறகு மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் மத்திய அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விளம்பரங்களை தினகரன் மற்றும் தமிழ்முரசு வெளியிடப்பட்டதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் தயாநிதி மாறன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் அவரது மகன் ராகுல் காந்தியையும் சந்தித்…
-
- 1 reply
- 1.1k views
-
-
ரஷ்யா-செர்பியா இடையில் எரிபொருள் குழாய்பாதை ஒப்பந்தம் 26.02.2008 / நிருபர் குளக்கோட்டன் ரஷ்யாவிலிருந்து மேற்கு ஐரோப்பாவுக்குச் செல்லும் எரிபொருள் குழாய்ப்பாதை அமைப்பது தொடர்பில் ரஷ்யாவும் செர்பியாவும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. அடுத்த ரஷ்ய அதிபர் என்று கருதப்படும் திமித்ரி மெத்வதெவ் உள்ளிட்டவர்கள் அடங்கிய ஒரு உயர்மட்ட ரஷ்ய பிரதிநிதிகள் குழ பெல்கிரேட் வந்த நேரத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ரஷ்யாவின் எரிசக்தித்துறை பெருநிறுவனம் காஸ்ப்ரோமின் தலைவராக இருக்கும் மெத்வதெவ், கொசோவோ செர்பியாவிலிருந்து பிரிந்து சுதந்திரப் பிரகடனம் செய்திருப்பதை ரஷ்யா வலுவாக எதிர்க்கிறது என்றும் கூறியிருக்கிறார். sankathi.com
-
- 2 replies
- 1k views
-
-
துருக்கி ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது [26 - February - 2008] * குர்திஸ் போராளிகள் ஈராக்கின் வடபகுதியில் இடம்பெறும் மோதல்களின் போது துருக்கியின் தாக்குதல் ஹெலிகொப்டர் ஒன்றை தாங்கள் சுட்டு வீழ்த்தியிருப்பதாக குர்திஸ் போராளிகள் தெரிவிக்கின்றனர். ஈராக்கின் வடபகுதியிலுள்ள குர்திஸ் போராளிகளை இலக்கு வைத்து கடந்த வியாழக்கிழமை துருக்கிப் படையினர் படை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். பி.கே.கே. என அழைக்கப்படும் குர்திஸ் போராளிகளின் வெளியுறவு விவகாரங்களுக்கான தலைமையதிகாரியே தங்கள் போராளிகள் ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்தியிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், இத் தகவல் சுயாதீன அமைப்புகளால் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லையென
-
- 0 replies
- 746 views
-
-
இன்னும் 760 கோடி ஆண்டுகளில் பூமியை சூரியன் விழுங்கும் அபாயம் [26 - February - 2008] இன்னும் 760 கோடி ஆண்டுகளில் பூமியை சூரியன் விழுங்கிவிடுமென வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; சூரியன் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே வருவதால் ஏற்படும் அதிக வெப்பத்தின் காரணமாக பூமியிலுள்ள புல், பூண்டுகள் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிடுவதுடன், கடல்கள் முற்றாக வற்றிப் போய்விடும். எனினும், அடுத்த நூற்றாண்டுகளில் ஏற்படும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஒரு, சிறு கிரகத்தை புவி ஈர்ப்பு எல்லைக்குள் கொண்டுவந்து மோதவைத்து பூமியின் சுற்றுவட்டப் பாதையை மாற்றுவதன் மூலம் அழிவிலிருந்து பூமியையும் மனித இனத்தையும் காப்பாற…
-
- 4 replies
- 1.4k views
-
-
ஈரான் மீது மூன்றாவது சுற்று பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு ஐ.நா.பாதுகாப்புச் சபையிடம் வலியுறுத்தல் [25 - February - 2008] ஈரானுக்கெதிராக மூன்றாவது சுற்று பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையிடம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன. சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், சர்ச்சைக்குரிய வகையில் ஈரான் யுரேனியத்தை செறிவூட்டுவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அதன் சமீபத்திய அறிக்கையில் யுரேனியம் செறிவூட்டல் திறனை ஈரான் வலுப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையே தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு ஈரானின் மீது சர்வதேச தடையை விதிக்கும் தீர்மானத்தைக் கொண்டு வரும்படி அமெரிக்கா உள்…
-
- 0 replies
- 623 views
-
-
சுமத்ராவில் கடும் பூகம்பம் Monday, 25 February, 2008 09:45 AM . ஜகார்த்தா, பிப். 25: இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் நேற்றிரவு கடும் பூகம்பம் தாக்கியது. இதனால் மக்கள் பீதியடைந்து, வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் ஓட்டம் பிடித்தனர். . இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவில் பெங்க்குலு மாகாணத்தில் நேற்றிரவு தாக்கிய இந்த பூகம்பம் ரிக்டர் அளவு கோலில் 6.6 என்ற அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பூகம்பம் காரணமாக வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால், பீதியடைந்த மக்கள் உயிருக்கு பயந்து கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி, சாலைகளில் ஓட்டம் பிடித்தனர். எனினும் இந்த பூகம்பம் காரணமாக உயிரிழப்போ, பொருட்சேதமோ ஏற்பட்ட…
-
- 0 replies
- 583 views
-
-
அமெரிக்க உளவு செய்மதி வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டது ! அண்டவெளியில் தொங்கும் செய்மதிகளுக்கு வருகிறது ஆபத்து ! திசை மாறுகிறது உலகப் போர் ! கடந்த 2006ம் ஆண்டு ஏவப்பட்ட பழுதடைந்த உளவு சற்லைற்றை விண்வெளியில் வைத்து சுட்டு வீழ்த்தியதன் மூலம் அமெரிக்கா புதிய போரியல் சரித்திரம் ஒன்றை நேற்றிரவு எழுதி முடித்துள்ளது. தரையில் இருந்து 210 கி.மீ தூரத்தில் அண்ட வெளியில் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு செய்மதியை மணிக்கு 25.000 கி.மீ வேகத்தில் பறந்து சென்று குறி தவறாமல் சுட்டு வீழ்த்துவது போரியல் வரலாற்றில் புதிய சாதனை என்று வர்ணிக்கப்படுகிறது. சுமார் 60 மில்லியன் டாலர்களை பாவித்து இதை சுட்டு வீழ்த்தியுள்ளது அமெரிக்கா. இந்தச் சாகசச் செயல் பலருக்கு அச்சத்தை ஊட்டியுள்ளது. சென்ற…
-
- 1 reply
- 837 views
-
-
ஈராக்கில் துருக்கி தாக்குதல் குகுர்கா, பிப்.24: வடக்கு ஈராக்கின் மலைப் பகுதியில் குர்திஷ் இன தீவிரவாதிகள் பதுங்கி உள்ள இடங்களில் துருக்கி நாட்டின் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் கடும் குண்டுமழை பொழிந்தன. . இந்த தாக்குதலில் குர்திஷ் தீவிரவாதிகள் 35 பேரும் துருக்கி படையை சேர்ந்த 2 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டதாக துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை ஈராக்கின் துருக்கிப்படைகள் தாக்குதல் நடத்த தொடங்கிய பின்னர் தங்களது 7 வீரர்கள் பலியானதாகவும், 79 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் துருக்கி ராணுவம் கூறியுள்ளது. ஆனால் துருக்கியின் 15 வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக குர்திஸ்தான் உழைப்பாளர் கட்சி தெரிவித்துள்ளது. ஈராக்கில் கடந்த 20…
-
- 0 replies
- 709 views
-
-
பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாஹிம் தெரிவு உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் மார்ச்சில் அரசாங்க முக்கியஸ்த்தர் தெரிவிப்பு 2/24/2008 5:38:40 PM வீரகேசரி நாளேடு - இஸ்லாமாபாத், பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ள பெனாஸிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சியானது அந்நாட்டின் அடுத்த பிரதமரைத் தெரிவு செய்துள்ளதாகவும் அடுத்தமாத ஆரம்பத்தில் புதிய பாõளுமன்றம் பதவியேற்கும் சமயத்தில் இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு செய்யப்படும் எனவும் மேற்படி கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஸ்தாபக அங்கத்தவரும் உப தலைவருமான மக்தூம் அமீன் பாஹிம் (68 வயது) பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என தனது பெயரை வெளியிடவிரும்பாத அக்கட்சி…
-
- 1 reply
- 763 views
-
-
நான் மகாத்மா காந்தியால் மிகவும் கவரப்பட்டேன் பாரக் ஒபமா தெரிவிப்பு வீரகேசரி நாளேடு - அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான தெரிவில் ஜனநாயக கட்சியின் முன்னணி போட்டியாளராக விளங்கும் ஒபமா தான் மகாத்மா காந்தியின்பால் மிகவும் கவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சாதாரண மக்களால் அசாத்தியமான காரியங்கள் செய்ய முடியும் என்பதை ஞாபகப்படுத்தும் வகையில் மகாத்மா காந்தியின் உருவப்படத்தை தனது அலுவலகத்தில் வைத்துள்ளதாக ஒபமா கூறினார். ""நான் எனது வாழ்க்கையில் மகாத்மா காந்தியை ஒரு முன்னுதாரணமாகவே எப்போதும் காண்கிறேன். சாதாரண மக்கள் இணைந்து அசாத்திய காரியங்களைச் செய்யவும் மாற்றத்தைக் கொண்டுவரவும் முடியும் என்பதை அவர் செய்து காட்டியவர்'' என "இன்டியா அப்ரோட்'' பத்திரிகைக்கு எழுதிய கட்…
-
- 9 replies
- 2.2k views
-
-
பிரிட்டனுக்கு இனிமேல் திருமண விசாபெற்று வருவோருக்கு ஆங்கில மொழி தெரிந்திருக்க வேண்டுமெனவும் அதற்கான மொழியறிவுப் பரீட்சை நடத்தப்படுமெனவும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளன. நிச்சயிக்கப்பட்ட திருமணத்தின் மூலம் விசா பெற்று பிரிட்டனுக்கு வருபவர்கள் குறிப்பாக இந்திய உபகண்டத்தைச் சேர்ந்த பெண்கள் கணவன்மார், மாமியார், மச்சாள்மாரின் கொடுமைக்கு ஆளாகும் போது தமது அவல நிலையை ஆங்கில மொழி தெரியாததால் முறையிட முடியாமல் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே திருமண விசாப் பெற விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்ர் மொழிப் பரீட்சையில் சித்தியடைய வேண்டுமென பிரிட்டிஷ் அரசு இப்போது வலியுறுத்துகிறது. …
-
- 6 replies
- 2.5k views
-
-
சோனியாவை கொல்ல சதி Friday, 22 February, 2008 12:15 PM . பதேர்வா, பிப். 22: ஜம்முவில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை கொலை செய்யும் சதி திட்டத்துடன் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீடு ஒன்றிலிருந்து 4 கிலோ ஆர்டிஎக்ஸ் உள்ளிட்ட பயங்கர வெடிபொருட்களை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பறிமுதல் செய்தனர். . ஜம்மு காஷ்மீரில் இம்மாத துவக்கத்தில் கடும் பனிப்பொழிவு பெய்ததைத் தொடர்ந்து, பனிப்புயல் வீசியதில் ராணுவத்தினர் உள்ளிட்ட சுமார் 30 பேர் பலியாகினர். இதில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற காஷ்மீருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா இன்று பயணம் மேற்கொள்கிறார். அவருடன் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலும் வருகிறார். இரு தலைவர்களும் முதலில் ஜம்முவுக்கும், ப…
-
- 0 replies
- 926 views
-
-
இஸ்ரேலுடனான பேச்சுகள் தோல்வியடைந்தால் பாலஸ்தீனம் ஒருதலைப்பட்சமான சுதந்திர பிரகடனம்? [22 - February - 2008] [Font Size - A - A - A] இஸ்ரேலுடனான அமைதிப் பேச்சுகள் தொடர்ந்து தோல்வியடைந்தால் பாலஸ்தீனர்கள் தனிநாட்டுக்கான சுதந்திரப் பிரகடனத்தை ஒருதலைப்பட்சமான முறையில் மேற்கொள்வார்களென பாலஸ்தீனத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் குடியேற்ற நடவடிக்கைகள் நிறுத்தப்படாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் பட்சத்திலும் முரண்பாட்டிற்கு தீர்வு காண்பதற்குரிய பேச்சுகள் பற்றுறுதியுடன் முன்னெடுக்கப்படாத பட்சத்திலும் நாம் எமது ஒருதலை பட்சமான சுதந்திரப் பிரகடனத்தை அறிவிக்க நேரிடுமென பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸின் உயர்மட்ட உதவியாளர்களில் ஒருவரும் இஸ்ரேலிய அதிகாரிகளுட…
-
- 5 replies
- 1.3k views
-
-
வெனிசுவேலாவில் விமான விபத்து- 46 பேர் பலி வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 22, 2008 காரகஸ் (வெனிசுவேலா): வெனிசுவேலா நாட்டில் ஏற்பட்ட விமான விபத்தில் 46 பயணிகள் பலியாயினர். நேற்றிரவு வெனிசுவேலாவின் மெரிடா நகரில் தலைநகர் காரகஸ்சுக்கு புறப்பட்ட சாண்டா பார்பரா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் திடீரென மாயமானது. இதையடுத்து விமானத்தைத் தேடும் பணி தொடங்கியது. இந் நிலையில் அந்த விமானம் ஆண்டஸ் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது உறுதியாகியுள்ளது. இந்த ஏடிஆர்-42 ரக விமானத்தில் மொத்தம் 43 பயணிகளும், 3 விமான சிப்பந்திகளும் இருந்தனர். விபத்தில் அனைவரும் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது. விபத்து நடந்துள்ள பகுதி கடும் குளிர் பிரதேசம் என்பது குறி்ப்பிடத்தக்கது.…
-
- 0 replies
- 716 views
-
-
திருக்கடையூர் ஆலயத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் மாலை மாற்றிக் கொண்டனர் தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா நாகை மாவட்டத்தில் உள்ள பிரபல ஆலயம் ஒன்றில் தனது தோழி சசிகலாவுடன் மாலை மாற்றிக்கொண்டுள்ளார். இன்றுதான் ஜெயலலிதா அறுபதாவது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். அதை முன்னிட்டே நேற்றைய வழிபாடுகள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலயத்தில்தான் அறுபதை வயதை அடையும் தம்பதியர் அத்தகைய ஆராதனைகளை நடத்துவர் என்பதாலும், பெண்கள் இருவர் மாலை மாற்றிக்கொண்டதாலும், இது குறித்து தமிழக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டுள்ளது. http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml
-
- 46 replies
- 12.5k views
-
-
சிங்கப்பூரின் முன்னுதாரணம் உலகமெங்கும் சிறுவர்களை பாலியற் தொழிலில் ஈடுபடுத்துவது அதிகரித்து வருகிறது.தென்கிழக்காசிய வட்டாரம் இதில் முன்னணியில் இருக்கிறது. சிங்கப்பூரில் சட்டபூர்வ வயதுக்கு குறைந்தோரை பாலியல் தொழில் ஈடுபடுத்துவதோ அவர்களுடன் உறவு வைத்துக்கொள்வதோ கடும் தண்டனைக்குரிய குற்றமாகும்.வயது குறைந்த ஒருவரின் விருப்பதுடன் உறவு கொண்டால் கூட அது தண்டனைக்குரிய குற்றமாகும். அதனால் வயதுகுறைந்த பெண்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள விரும்பும் சிங்கப்பூர் ஆண்கள் தாய்லாந்திற்கும் இந்தோனேசியாவின் பாத்தாம் நகருக்கும் விடுமுறையைக் கழிக்கப் போவது வழமையாக உள்ளது. கருத்துக் கணிப்பொன்றின் மூலம் அண்மைக்காலங்களில் சிங்கப்பூர் ஆண்கள் வயது குறைந்தோருடனான உறவை மேற்கொள்…
-
- 0 replies
- 820 views
-
-
பிரபாகரனின் ராணுவ உடையில் காட்சியளிக்கும் அழகிரி மீது நடவடிக்கை : ஜெயலலிதா வலியுறுத்தல் சென்னை : விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் ராணுவ உடையில் காட்சியளிக்கும் தனது மகன் அழகிரி மீது முதலமைச்சர் கருணாநிதி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டதாகவும், அப்போது மதுரை மற்றும் தென்மாவட்டங்களில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் ராணுவ உடையில் அழகிரியின் தலையை ஒட்டி விளம்பரப்படுத்தி இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக செயல்படுவது சட்டப்படி குற்றம் என்பத…
-
- 0 replies
- 1.5k views
-
-
திருக்கடையூர் கோவில் பயணம் ரத்து; ஜெயலலிதா சென்ற விமானத்தில் கோளாறு- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் சென்னை, பிப். 20- நாகை மாவட்டம் திருக் கடைïரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நீண்ட ஆயுள் வேண்டி பக்தர்கள் தங்கள் 60 மற்றும் 80-வது பிறந்தநாளில் சிறப்பு பூஜைகள் செய்து அமிர்தகடேசுவரரை வழிபடுவது வழக்கம். அ.தி.மு.க. பொதுச் செய லாளர் ஜெயலலிதாவுக்கு வருகிற 24-ந்தேதி 60-வது பிறந்த நாள் . மாசி மகத்தன்று ஜெயலலிதா பிறந்தவர் என்? தால் நாளை மாசிமகம் வருவதால் திருக்கடைïர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடத்த முடிவு செய்து இருந்தார். இன்று காலை சென்னையில் இருந்து குட்டி விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி சென்று அங்கிருந்து தஞ்சை செல்ல முடிவு செய்து இருந்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
அவுஸ்திரேலியா ஈராக்கில் இருந்து 2008ன் மத்திய பகுதியில் வெளியேறுகிறது.தமது பொறுப்புக்களை ஈராக்கிய படைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தமது நோக்கம் நிறைவேற்றப்பட்டதாகவும் கூறினார். Australia troops 'can leave Iraq' 2/20/2008 1:06:01 PM BBC - The time has come for Australian combat troops to leave Iraq, the head of the country's armed forces has said. Troops had turned over responsibility for security in two provinces to Iraqi forces and were no longer needed, Air Chief Marshal Angus Houston said. "We have achieved our objectives in southern Iraq," he told a Senate committee. "It's time to leave." New Prime Minister Kevin Rudd has p…
-
- 3 replies
- 1k views
-
-
2004 ஆசிய சுனாமிக்குக் காரணமான பூமி அதிர்ச்சி ஏற்பட்ட இடத்தில் மிகப் பலமான பூமி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தோனிசியா உட்பட ஆசிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. The Hawaii-based Pacific Tsunami Warning Centre issued a tsunami watch for Indonesia, but said "a destructive widespread tsunami threat does not exist based on historical earthquake and tsunami data". http://news.bbc.co.uk/1/hi/world/7254325.stm
-
- 1 reply
- 2.2k views
-
-
உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மிக மோசமான 10 சர்வதிகாரிகள் பட்டியலில் பாகிஸ்தான் ஜனாதிபதி பெர்வேஷ் முஷாரப் எட்டாவது இடத்தில் உள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலிருந்து வெளிவரும் பத்திரிகையொன்றே இத் தகவலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் முதலாவது இடத்தில் தென்கொரிய ஜனாதிபதி - கிம் கொங்கும் இரண்டாம் இடத்தில் சூடான் ஜனாதிபதி - உமர்-அல்-பஷீரும் பெற்றுள்ளனர். அடுத்து வரும் இடங்கள் முறையே மியான்மார் இராணுவ ஆட்சியாளர், சவூதி மன்னர் அப்துல்லா, சீன ஜனாதிபதி ஹஜீந்தோ, சிம்பாப்வே ஜனாதிபதி ரொபேட் முகாவே, ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமத் நிஜாத், முஷாரப் , உஸ்-பெஸ்கிஸ்த்தான் ஜனாதிபதி கரிமோ மற்றும் எரித்திரியா ஜனாதிபதி அபெவெர்கி ஆகியோர் பெற்றுள்ளனர். முஷாரப்பை மிக மோசமா…
-
- 2 replies
- 1.9k views
-
-
தமிழக முதல்வர் கலைஞர் ஒரு திருமணவிழாவில் மணமகனுக்கு பெயர் மாற்றம் செய்ய விரும்பி தமிழ் பெயராக அன்புச்செல்வன் என்று மாற்றம் செய்து அழைத்தார். இதனை எங்கள் மறைந்த அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் நினைவாக அவர் மனதில் நீங்காத உணர்வுகளின் பாதிப்பாக இப்பெயரை வைத்தார் என்று எடுத்து கொள்ளலாமா? மேடையில் திருமணம்-பெயர் மாற்றம்: முன்னதாக மாநாட்டு மேடையில் செங்கல்பட்டு நகர திமுக செயலாளர் சதீஷ்பாபு-ரேவதியின் திருமணத்தை சுயமரியாதை திருமணமாக கருணாநிதி நடத்தி வைத்தார். அப்போது பேசிய கருணாநிதி. நான் இங்கே மணமகனுக்கு ஒரு வேண்டுகோளை வைத்து வாழ்த்துகிறேன். சதீஷ்குமார் என்ற அவர் பெயரை மாற்றி தமிழ் பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார…
-
- 0 replies
- 967 views
-
-
ஐ.நா. அமைதிப்படைகள் எதியோப்பியாவுக்குள் நுழைவதற்கு எரித்திரியா தடை விதித்தது [19 - February - 2008] [Font Size - A - A - A] * ஐ.நா. கடும் ஆட்சேபம் எரித்திரியாவிலுள்ள ஐ.நா.வின் நூற்றுக் கணக்கான அமைதிப் படைகளை எதியோப்பியாவுக்குள் நுழைவதற்கு எரித்திரியா தடை விதித்துள்ளமைக்கு ஐ.நா. தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. எரித்திரியா அரசாங்கம் ஐ.நா.வின் அமைதிப் படைகளுக்கான எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியதைத் தொடர்ந்து தனது படைகளை எதியோப்பியாவுக்கு செல்லுமாறு ஐ.நா. உத்தரவிட்டிருந்தது. ஆனால் ஆறு வாகனங்கள் மட்டுமே எரித்திரியாவை விட்டு வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டதாகவும் தமது படைகளுக்கான விநியோகங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சில படையினர் துப்பாக்கி முனையில் அ…
-
- 0 replies
- 666 views
-
-
முஷாரப் கதி என்ன? Tuesday, 19 February, 2008 01:50 PM . இஸ்லாமாபாத், பிப்.19: பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெனாசிர் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் நவாஸ் ஷெரீப் கட்சி அதிக இடங்களை வென்றுள்ளன. . எதிர்க்கட்சிகளுக்கு கூட்டாக பெரும்பான்மை பலம் கிடைத்திருப்ப தால் முஷாரப் கதி என்னவாகும் எனும் கேள்வி எழுந்துள்ளது. புதிய பிரதமராக யார் பொறுப்பேற்க கூடும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முஷாரப் ஆதரவு பெற்ற ஆளும் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்புக்கு இடையே பாகிஸ்தானில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. வன்முறை அச்சத்தால் பலர் வாக்களிக்க வரவில்லை. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று…
-
- 1 reply
- 1.1k views
-