உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26602 topics in this forum
-
மாட்டுத்தாவணி – கோயம்பேடு தன் வயிற்றில் பிள்ளைகளைச் சுமந்த மாதிரி தாய்ச்சுமையொடு பக்குவமாக மூச்சிரைத்து மெல்ல முன்னகர்ந்து தேசிய நெடுஞ்சாலையை பிடித்தது பேருந்து. இயங்குவது எந்திரம் மட்டுமா? அதனொரு பாகமாய் ஓட்டுநரின் கையும், காலும் தசையும், நரம்பும் அசையும். வேகமெடுக்கும் சக்கரத்தின் சுழற்சியொடு வெகுதூரம் சரிபார்த்து விழிகள் சுழன்று இசையும். அவியும் எஞ்சின் சூடும் இரையும் அரசுப் பேருந்தின் ஒலியினூடே பேருந்தின் ஒரு தகடின் ஓசையும் வேறுபட்டால் உடனே அறியும் ஓட்டுநரின் செவிப்புலம். கும்மிருட்டில் விரியும் அவர் பார்வை நரம்புகள் மேல் பத்திரமாய் நம் பயணங்கள். எத்தனை பேர் அறிவோம் அவரிதயம் நமக்கும் சேர்த்துத் துடிக்கும்…
-
- 0 replies
- 380 views
-
-
தாலிபான் முன்னாள் தலைவர் முல்லா ஒமரின் மகனுக்கு புதிய தளபதி பதவி ஆஃப்கன் தாலிபான் அமைப்பின் முன்னாள் தலைவர் முல்லா ஒமரின் மூத்த மகன் மொஹ்மத் யாகூப்புக்கு அந்த அமைப்பில் புதிய உயர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு முல்லா ஒமாரின் மரணம் அறிவிக்கப்பட்டதை அடுத்து ஒமார் குடும்பத்தாருக்கும், புதிய தாலிபான் தலைவர் முல்லா அக்தர் மன்சூருக்கும் இடையில்அதிகாரத்துக்கான சண்டை நிலவி வந்தது ஆப்கானிஸ்தானின் கிட்டத்தட்ட பாதி பிராந்தியங்களின் இராணுவ நடவடிக்கைகளின் புதிய தளபதியாக யாகூப் நியமிக்கப்பட்டுள்ளார். தாலிபானின் உயர்மட்ட அரசியல் குழுவான் ரெஹ்பாரி ஷுராவும், முல்லா ஒமரின் சகோதரரும்தான் இவரை இந்த பதவிக்கு நியம…
-
- 0 replies
- 536 views
-
-
25 Nov, 2025 | 01:38 PM அவோராகி அல்லது மவுண்ட் குக் என அழைக்கப்படும் நியூசிலாந்தின் மிக உயரமான மலையில் இருந்து விழுந்து இரண்டு மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 3,724 மீட்டர் உயரமுள்ள மலையில் ஏறிய நான்கு பேரில் இருவர் உயிரிழந்தனர். திங்கட்கிழமை இரவு அவசர சேவைகளைத் தொடர்பு கொண்ட பின்னர் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஹெலிகாப்டர் மூலம் மற்றைய இருவரும் காயங்கள் ஏற்படாமல் மீட்கப்பட்டனர். பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு, உயிரிழந்த மலை வீரர்களின் சடலங்கள் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டன. சடலங்கள் மீட்கும் பணி தற்போது “கடினமான ஆல்பைன் சூழலில்” நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நியூசிலாந்தின் தென் தீவு வரை நீண்டு இருக்கும் தெற்கு ஆல்ப்ஸின் மீது உயர்ந்து நிற்கும் …
-
- 0 replies
- 122 views
- 1 follower
-
-
கிருமிநாசினியை ஊசி வழியாக உட்செலுத்துவதா? ட்ரம்பின் கருத்தால் மருத்துவர்கள் அதிருப்தி! கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சையாக கிருமிநாசினியை, ஊசி வழியாக உடலுக்குள் செலுத்தலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்துக்கு எதிராக, ரெக்கிட் பென்கிசர் நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. கிருமி நாசினிகளுக்கு பெயர்போன டெட்டால், லைசால் ஆகியவற்றை தயாரிக்கிற ரெக்கிட் பென்கிசர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எந்தவொரு சூழ்நிலையிலும், எங்கள் கிருமி நாசினிகளை மனித உடலுக்குள் ஊசி வழியாகவோ பிற விதங்களிலோ செலுத்தக்கூடாது. இதில் தெளிவாக இருக்க வேண்டும். எங்களது எல்லா தயாரிப்புகளையும் போல கிருமிநாசினிகளையும், சுகாதார தயரிப்புகளையும் அவற்றை என்ன நோக்கத்திற்காக…
-
- 0 replies
- 336 views
-
-
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலைநாடுகளில் கோர்ட்டுகளில் அவ்வப்போது வினோத வழக்குகள் வரும். இதுபோல அமெரிக்காவில் ஒஹியோ பகுதியில் சின்சினாதி என்ற இடத்திலுள்ள பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஆப்ரே(21) என்பவர் தனது பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அதில் நான் கல்லூரிக்கு செல்லும் போது பெற்றோர் பின் தொடர்ந்து வருகிறார்கள். கம்ப்யூட்டர், செல்போனில் கண்காணிப்பு சாப்ட்வேரை பொருத்தி உளவு பார்க்கிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கை நீதிபதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, மாணவியை விட்டு 500 அடி தள்ளியே இருக்க வேண்டும், தொடர்பு வைப்பதை நிறுத்த வேண்டும் என பெற்றோருக்கு உத்தரவிட்டார். பெற்றோர் மீது வழக்கு தொடுத்த கல்லூரி மாணவியின் படம் பார்க்க....
-
- 0 replies
- 722 views
-
-
ஆஃப்கானிஸ்தான்: ஐ.எஸ் பிடியில் அமெரிக்க ராணுவ வீரர்? ஆஃப்கானிஸ்தானில் தங்கள் படையை சேர்ந்த அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரை ஐ.எஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ளதாக வெளியான தகவலை அமெரிக்க தலைமையிலான நேட்டோ படையினர் மறுத்துள்ளனர். ஐ.எஸ் இணைய தளத்தில் ரையன் ஜே லார்சன் என்ற ராணுவ அதிகாரியின் அடையாள அட்டை வெளிப்படையாக பதிவு செய்யப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு நேட்டோ படையினரின் இந்த மறுப்பு வந்துள்ளது. கிழக்கு ஆஃப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளிடம் இருந்து கைப்பற்றியதாக சொல்லப்படும் ஆயுதங்கள், வெடிப்பெருட்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. நங்கர்ஹார் மாகாணத்தில் ஆஃப்கன் படைகளுக்கு உதவியாக அமெரிக்க சிறப்பு …
-
- 0 replies
- 342 views
-
-
கோத்தகரி: தமிழகத்தின் உரிமைகளை நீதியின் துணை கொண்டு மீட்டெடுப்போம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா 'சபதம்' எடுத்திருக்கிறார். நீலகிரி அருகே கோத்தகிரியில் எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: ஏழை, எளிய மக்களின் இதயங்களில் என்றென்றும் நிறைந்து விளங்கும், மாசில்லா மாணிக்கம்; வருடங்கள் கரைந்தாலும் முழு நிலவாய் நிலைத்த புகழ்கொண்ட நிகரில்லா வள்ளல்; மதங்கள் உலவும் மனங்களில் மனிதாபிமானங்களை வளர்த்த மனிதநேயப் பண்பாளர்; எனது அரசியல் ஆசான், கழக நிறுவனத் தலைவர், இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் 96-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு இன்று கோத்தகிரியில் நிறுவப்பட்டிருக்கும் அவரது திருவுருவச் சிலையை திறந்து வைத்ததில் எல்லையில்லா ஆனந்தமும் ப…
-
- 0 replies
- 593 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்.. *மோசுல் புறநகர்ப்பகுதில் ஐ எஸ் அமைப்பு உருவாக்கிய சுரங்க பதுங்கு குழிகள். *அமெரிக்கத் தேர்தலில் ஆசிய வாக்காளர்களின் நிலைப்பாடு குறித்த காணொளி. *மூன்று நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரமான விக்டோரியா ஏரி அதே மீனவர்களை பலி கொள்வதன் மர்மத்தை விளக்கும் செய்தித் தொகுப்பு ஆகியவை குறித்த தகவல்கள் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 198 views
-
-
கொவிட்-19: ரஷ்யாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 இலட்சத்தை அண்மிக்கின்றது! by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/07/Gvosdev_CovidDestabalizeRussia_040620-720x450.jpg ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15 இலட்சத்தை அண்மிக்கின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கு இதுவரை மொத்தமாக 14 இலட்சத்து 97ஆயிரத்து 167பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் ரஷ்யாவில், இதுவரை மொத்தமாக 25ஆயிரத்து 821பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ரஷ்யாவி…
-
- 0 replies
- 356 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * சிரிய அரச எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள அலெப்போ மீதான தாக்குதல் மீண்டும் துவக்கம்; அமெரிக்காவின் அடுத்த அதிபர் சிரியாவின் நண்பராக அமையக்கூடும் என்கிறார் சிரிய அதிபர் அசாத். * உலகின் மிகப்பெரிய அகதி முகாமை மூட கென்யா முடிவு; ஆனால் தபாப் முகாமிலிருக்கும் அகதிகளில் பலர் சொமாலியா திரும்ப அச்சம். * போலிச் செய்திகளின் பரவலைத் தடுப்பதில் கூகுள் நிறுவனம் தீவிரம்; கூகுள் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை பிபிசிக்கு பிரத்யேக பேட்டி.
-
- 0 replies
- 314 views
-
-
பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் புதிய கார்கள்- வேன்களுக்கு 2030ஆம் ஆண்டு முதல் தடை! பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயங்கும் புதிய கார்கள் மற்றும் வேன்கள் 2030ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் விற்பனை செய்யப்படாது என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். ஆனால், சில hybrids இன்னும் அனுமதிக்கப்படும், அவர் உறுதிப்படுத்தினார். புதிய பசுமை தொழில்துறை புரட்சிக்கான திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியாகியாகியுள்ளன. இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘இந்த ஆண்டு நாங்கள் எதிர்பார்த்த பாதைக்கு மிகவும் மாறுபட்ட பாதையை எடுத்து இருந்தாலும் பிரித்தானியா, எதிர்காலத்தை நோக்கி பசுமையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறது. நமது பொர…
-
- 0 replies
- 615 views
-
-
டச்சு நிறுவன திருவிளையாடல்.. ஸ்பேம் ஊடுறுவல் - உலகின் பல பகுதிகளில் இன்டர்நெட் மகா மந்தம்! லண்டன்: நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு வெப் ஹோஸ்ட் நிறுவனம் செய்த சேட்டையால் உலகம் முழுவதும் பல பகுதிகளில் இன்டர்நெட் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. மிகவும் மந்த கதியில் இன்டர்நெட் இயங்குவதால் பலரும் முடங்கிப் போகும் நிலை ஏற்பட்டது. நேற்று தொடங்கிய இந்த மந்த நிலை இன்றும் பல பகுதிகளில் நீடித்து வருகிறது. இணையத்தில் ஏற்படுத்தப்பட்ட ஸ்பேம் ஊடுறுவலே இந்த மந்த நிலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் கோடிக்கணக்கானோர் உலகம் முழுவதும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் சுத்தமாக இணையதள இணைப்பே கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டுள்ளனர். ஸ்பேம்களுக்கு எதிராக போராடி வரும் ஜெனி…
-
- 0 replies
- 602 views
-
-
ட்ரம்ப் கையெழுத்திட மறுப்பது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் – ஜோ பைடன் In அமொிக்கா December 27, 2020 12:02 pm GMT by : Benitlas http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/dss-1.jpg கொரோனா நிவாரண சட்டமூலத்தில் ட்ரம்ப் கையெழுத்திட மறுப்பது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா நிவாரணத்துக்காக 900 பில்லியன் அமெரிக்க டொலரை ஒதுக்கீடு செய்ய அந்நாட்டு நாடாளுமன்றம் அண்மையில் ஒப்புதல் வழங்கியிருந்தது. இதையடுத்து, இது தொடர்பான கொரோனா நிவாரண சட்டமூலம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்டமூலம் டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதலுக்காக …
-
- 0 replies
- 646 views
-
-
ஜூன் மாதம் நடைபெறும் ஐரோப்பிய கவுன்சில் கூட்டத்தில், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பைப் பெருக்குவது தொடர்பான ஆலோசனைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என இத்தலிப் பிரதமர் என்ரிகோ லெட்டா தெரிவித்துள்ளார். பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் செய்தியாளர்களுடன் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். ஐரோப்பிய கவுன்சில் மாநாடு தொடர்பாக இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், இறுதியாக பெல்ஜியம் சென்றடைந்தார். அங்கு ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஜோஸ் மேனுவல் பரோஸோவைச் சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லெட்டா, வேலைவாய்ப்பின்மைப் பிரச்சனை ஐரோப்பிய நாடுகளின் மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து வருவதாகக் கூறினார். ஜூன்மாதம் நடைபெற உள்ள மாநாட…
-
- 0 replies
- 331 views
-
-
இந்தியா லடாக் பகுதியில் பதுங்கு குழிகள் அமைக்காது என்று வாக்குறுதி அளித்ததன் அடிப்படையிலேயே சீன ராணுவம் வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எல்லையில் சமாதானம் நிலவுவதால் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் சீன சுற்றுப்பயணம் உறுதியாகியுள்ளது. லடாக் எல்லையில் அத்துமீறி நுழைந்த சீனா ராணுவம் முகாமிட்டு கடந்த 20 நாட்களாக மிரட்டல் விடுத்து வந்ததையடுத்து இந்தியாவும், வெளியுறவு அமைச்சரின் சீன சுற்றுப்பயணத்தை ரத்து செய்வோம், சீனாவுடனான உறவுகளை குறைத்து கொள்வோம் என்று அறிவித்தது. இதனால், இருநாடுகளிடையேயான 100 பில்லியன் டாலர் வர்த்தகம் பாதிக்கப்படும் என்று அஞ்சப்பட்ட நிலையில் சீன ராணுவம் அங்கிருந்து வெளியேறியுள்ளது. இதன் பின்னணியில், என்ன நடந்தது என்பதில் சந்தேகம…
-
- 0 replies
- 625 views
-
-
இதுதான் இன்றைய நிலை நாமெல்லாம் துடிக்க இவர்கள் குடிக்கின்றார்கள். ரசித்து ருசித்து
-
- 0 replies
- 1.2k views
-
-
வெள்ளை மாளிகையின் உயர் விருது பெற்ற சாதனைத் தமிழன் பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தனுடன் நேர்முகம் தன்னம்பிக்கை + முயற்சி = சாதனை வெள்ளை மாளிகையின் உயர் விருது பெற்ற சாதனைத் தமிழன் பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தனுடன் நேர்முகம் செவ்வி கண்டவர் : ஆதிரையன் பேராசிரியர் சிவநாதனைப் பற்றி ஒன்பது பேர் அடங்கிய குடும்பத்தில் ஆறாவது பிள்ளை பிறப்பிடம்: மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி தந்தையார்: தமிழ்ப் பண்டிதர் – ஓய்வுபெற்ற அதிபர் (ஊரிக்காடு, வல்வெட்டித்துறை), தாயார்: ஆசிரியர் ஆரம்பக்கல்வி: மட்டுவில் சரஸ்வதி மகாவித்தியாலயம் இரண்டாம் நிலைக் கல்வி: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1967-1975) உயர்கல்வி: பேராதனைப் பல்கலைக்கழகம் (1976-1980) முதல் தொழில்: விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம…
-
- 0 replies
- 841 views
-
-
சீனாவில் இரு பெரும் நில அதிர்வுகள்: 3 பேர் பலி, 70 ஆயிரம் பேர் பாதிப்பு ! சீனாவில் நேற்று இரவு இடம்பெற்ற இரு பெரும் நில அதிர்வுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை, 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. சீனாவின் குயிங்காய் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.34 மணியளவில் சக்தி வாய்ந்த நில அதிர்வொன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 7.4 ரிச்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் நகரின் பல பகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டன. இதனால் ஏற்…
-
- 0 replies
- 483 views
-
-
மும்பை: மும்பை கடற்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐஎன்எஸ் சிந்துரக்சக் நீர்மூழிகிக் கப்பலில் நடந்தது தீ விபத்தா அல்லது வெடி விபத்தா அல்லது சதிச் செயலா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த நீர்மூழ்கியின் பேட்டரிகள் வைக்கும் பகுதியில் வெடிவிபத்து ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து ஏவுகணைகள் இருந்த பகுதியிலும் வெடி விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் ஏவுகணைகள் வெடித்துச் சிதறியதாகவும் தகவல்கள் வருகின்றன. ஆனால், இதை கடற்படை உறுதி செய்யவில்லை. இந்த நீர்மூழ்கியில் இருந்த 3 அதிகாரிகள் உள்ளிட்ட 18 வீரர்களில் 5 பேரின் உடல்கள் மட்டுமே இன்று காலை வரை மீட்கப்பட்டுள்ளன. இதனால் மற்ற 13 பேரும் கூட உயிரிழந்திருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது. இந்த வெடிவிபத்தைத் தொடர்ந்து நீர…
-
- 0 replies
- 336 views
-
-
தேவாலயம் வாங்க பிரிட்டன் கிராம மக்களுக்கு உதவிய துபாய் ஷேக் பிரிட்டனின் கோன்வாலிலுள்ள சிறிதொரு கிராமம், மேத்தோடிஸ்ட் சிற்றாலயத்தை வாங்குவதற்கு துபாயை ஆட்சி செய்கின்ற ஷேக் முகமுது பின் ரஷீத் அல் மக்டோம் உதவி செய்துள்ளார். இந்த தேவாலயத்தை வாங்குவதற்காக நிதி திரட்டும் கடைசி முயற்சியாக ஹெல்ஸ்டனுக்கு அருகிலுள்ள கோடால்பின்வாசிகள் துபாய் ஷேக்கிற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். உலகப் புகழ்பெற்ற கோடால்பின் ஸ்டேபிள்ஸூடன் ஷேக்கின் நிதி ஆதரவு என்ற பெயரையும் இந்த கிராமம் பகிர்ந்துள்ளது. "இந்த செயலை மிகவும் பாராட்டுகின்றோம்" என்று கோடால்பின் சிலுவை சமூக கூட்டமைப்பின் ரிச்சர்ட் மைக்கி தெரிவித்திருக்கிறார். சமூ…
-
- 0 replies
- 289 views
-
-
ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க சிரியாவுக்கு ஐ.நா. கெடு விதித்துள்ள நிலையில், அந்த ஆயுதங்களை கொண்டு வந்து நோர்வேயில் அழிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் வேண்டுகோளை நோர்வே அரசு ஏற்க மறுத்துள்ளது. இதுகுறித்து நோர்வே வெளியுறவுத்துறை அமைச்சர் போர்கே பிராண்டா செய்தியாளர்களிடம் கூறுகையில், "சிரியாவின் ரசாயன ஆயுதங்களை அழிக்கும் அமெரிக்காவின் எண்ணத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம். இதுதொடர்பாக, மிகத் தீவிரமாக ஆராய்ந்தோம். இதில் பல தொழில்நுட்ப மற்றும் சட்டச் சிக்கல்கள் உள்ளன. அதற்கு ஏற்ப வல்லுநர்கள் குழுவை அமைக்காதது மற்றும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாத நிலையில் ரசாயன ஆயுதங்களை அழிப்பது என்பது ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என்று தெரிவித்தார். …
-
- 0 replies
- 296 views
-
-
கடும்போக்குக் குழுக்களிடம் சிக்கி இளைஞர்கள் கடும்போக்காளர்களாக மாறுவதைத் தடுக்க, நோர்வே அரசானது புதிய திட்டமொன்றை அமுல்படுத்தவுள்ளது. இத்திட்டத்துக்காக பத்து அமைச்சுக்கள் இணைந்து செயலாற்றவுள்ளன. "கடும்போக்கு வாதம் அதிகரித்துவருகிறது." என்று கூறிய நீதியமைச்சர் அண்டர்ஸ் அனண்ட்சன் (Anders Anundsen) தீவிரவாதம் சர்வதேச அளவில் வலுப்பெறும் போது, வித்தியாசமாகச் சிந்திப்பதும், முன்பிருந்ததை விட விதிமுறைகளை வலுவாக்குவதும் அவசியமான ஒன்றாகிறது என்றார். ஐந்து அமைச்சர்களும் அரச செயலாளர்களும், கடந்த செவ்வாய்க்கிழமை ஒன்றுகூடி, கடும்போக்குவாதத்தை இல்லாமற் செய்வதற்கான செயற்றிட்டமொன்றை ஆரம்பிப்பது பற்றி கலந்துரையாடினர். வேறுபட்ட அமைச்சுக்கள் இச்செயலாக்கத்தில் ஈடுபடுத்தப்படும். "நாம்…
-
- 0 replies
- 525 views
-
-
ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் பிறந்தது "2022" புத்தாண்டு EPACopyright: EPA சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் ஹார்பர் பிரிட்ஜ் ஆகியவற்றின் பின்னணியில் வருடாந்திர புத்தாண்டு வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன.Image caption: சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் ஹார்பர் பிரிட்ஜ் ஆகியவற்றின் பின்னணியில் வருடாந்திர புத்தாண்டு வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் வாண வேடிக்கையுடன் 2022 புத்தாண்டு வரவேற்கப்பட்டது. ஆனால், பொது இடங்களில் மக்கள் பெருமளவில் இல்லாத வகையில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் இந்த புத்தாண்டை மக்கள் வரவேற்றனர். உலக நாடுகள் புத்தாண்டை வரவேற்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலியா …
-
- 0 replies
- 234 views
- 1 follower
-
-
விண்வெளி ஆய்வு வரலாற்றில் மிகவும் பேரார்வம் மிக்க ஒரு திட்டம் என்று தம்மால் வர்ணிக்கப்படும் திட்டத்தை ஐரோப்பிய விண் ஆய்வு நிறுவனம் ஆரம்பித்துள்ளது. பிரன்ஞ் கியானாவில் இருந்து கயா என்னும் விண் தொலைநோக்கி வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. இது சுற்றுவட்டப்பாதையை அடைந்தபின்னர், அங்கிருந்து எமது பால்வெளிப் நட்சத்திரக் கூட்டத்தை முப்பரிமாணத்தில் படம்பிடித்து முன்னெப்போதும் இல்லாத வகையில் அதன் வரைபடங்களைத் தரும். கோடிக்கணக்கான நட்சத்திரங்களின் நகர்வை அளந்து, அது அந்த வரைபடத்தை தயாரிக்கும். நட்சத்தரங்களில் இருந்து மிகவும் தூரத்தில் இருக்கும் அவற்றின் துணைக்கோள்கள் உட்பட விண்வெளியில் உள்ள லட்சக்கணக்கான புதிய விசயங்களையும் இது கண்டுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால…
-
- 0 replies
- 493 views
-
-
ரஷ்யாவில், அதிக வயதாகுவற்கு முன்னரே பலர் இறப்பதற்கு அளவுக்கதிமாக மதுபானம் அருந்துவது காரணமாக உள்ளதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக ரஷ்யாவின் பிரபல வொட்கா மதுபானத்தை அதிகமாக அருந்துவது இத்தகைய மரணங்களுக்கு காரணமாகின்றனவாம். மொஸ்கோவிலுள்ள ரஷ்ய புற்றுநோய் நிலையம் மற்றும் பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். ரஷ்ய ஆண்களில் 25 சதவீதமானோர் 55 வயதுக்கு முன்னர் மரணமடைவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இவர்களில் பெரும்பாலானோரின் மரணங்களுக்கு மதுபானம் காரணமாம். ஈரல் நோய்கள், மதுபானம் நஞ்சாதல் முதலியவற்றின் காரணமாக மரணங்கள் ஏற்படுவதுடன் மதுபோதையில் சண்டையிடுவதாலும் பலர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது…
-
- 0 replies
- 720 views
-