உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26600 topics in this forum
-
அடுத்த தேர்தலில் ஆட்சியமைக்கக்கூடீய கனடாவின் மூன்று கட்சிகளின் தலைவர்களும் ரொறன்ரோவில் முகாமிட்டு தமது பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர். வீட்டு உரிமையாளரின் தேனீர்க் கோப்பையில் சிறுநீர் கழித்த விவகாரத்தில் சிக்கியிருந்த தமிழர்கள் அதிகம் வாழும் தொகுதியின் வேட்பாளர் கட்சியிலிருந்தும் வேட்பாளர் பட்டியலிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், கண்சவேட்டிவ் கட்சிக்கான ஆதரவுத் தளத்தை பேணவேண்டிய அவசியம் கனடியப் பிரதமரிக்கு ஏற்பட்டுள்ளது.மற்றைய இரு தலைவர்களிற்கும் பாரிய ரொறன்ரோவின் வாக்குவங்கியின் பலத்தை அதிகரிக்கும் ஏதுவான நிலை பல்கலாச்சார சமூகம் என்றரீதியல் ஏற்பட்டுள்ளதால், அந்த வாக்குப் பலத்தை மேலும் அதிகரிக்கும் விதமான பிரச்சாரத்தில் மற்றைய இரு தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடு…
-
- 0 replies
- 320 views
-
-
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையைத் தகர்ப்பதுடன் பிரிட்டனையும் அழிப்போம் [04 - February - 2008] *தலிபான்கள் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையைத் தகர்த்தளிப்போம் என பாகிஸ்தானின் தலிபான் அமைப்பின் தலைவர் பையத்துல்லா மசூத் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் பிரிட்டனையும் அழிப்போமெனத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் பழங்குடி இன மக்கள் அதிகம் வசிக்கும் வசீரிஸ்தான் பகுதியில் வசிக்கும் மதகுரு பையத்துல்லா மசூத். இவர் தான் பாகிஸ்தான் தலிபான் தலைவர் ஆவார். இவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். பெனாசிர் கொலைக்கு இவர்தான் காரணம் என்று பாகிஸ்தான் அரசாங்கம் குற்றச்சாட்டியது. இதை அவர் மறுத்த போதிலும் பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதல்கள்…
-
- 0 replies
- 883 views
-
-
பெங்களூரில் சுற்றுச்சூழல் மாசு அதிகரிப்பு முகத்தில் கவசம் அணிந்தபடி வாக்கிங் செல்லும் மக்கள். 10.02.2008 / நிருபர் எல்லாளன் பெங்களூர் நகரில் சுற்றுச்சூழல் மாசு வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கப்பன் பூங்கா, லால்பாக் பகுதியில் காலையில் வாக்கிங் செல்பவர்கள்கூட முகத்தில் கவசம் அணிந்து செல்லும் நிலை உள்ளது. ஆண்டு முழுவதும் இதமான தட்ப வெப்பநிலை, மாசுபடாத காற்று, கோடையில்கூட சுட்டெரிக்காத வெயில் கொண்ட நகரம் பெங்களூர். இதனால், பெங்களூரில் வசிக்க விரும்புபவர்கள் ஏராளம். ஆனால், மாசற்ற நகரம் என்ற அடைமொழி இன்றைய பெங்களூருக்கு பொருந்தாது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பெங்களூர் மக்கள்தொகை பலமடங்கு அதிகமாகிவிட்டது. இதனால், வ…
-
- 0 replies
- 641 views
-
-
தீவிரவாதம் பாதித்த நாடுகளில் அமெரிக்க படைகள் குவிப்பு : அதிபர் ஒபாமா தகவல் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த 12-க்கும் மேற்பட்ட நாடுகளில் அமெரிக்கா தன் ராணுவத்தை குவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலிபான், ஐஎஸ், அல்-காய்தா ஆகிய தீவிரவாத அமைப் புகளை ஒழித்துக் கட்டுவதற்காக ஆப்கானிஸ்தான், இராக், சிரியா, துருக்கி, சோமாலியா, ஏமன், லிபியா, நைஜர், கேம்ரூன், மத்திய ஆப்ரிக்க குடியரசு, எகிப்து, ஜோர் டான், கொஸோவோ ஆகிய நாடு களில் நவீன ஆயுதம் ஏந்திய ராணுவ வீரர்களை அமெரிக்கா குவித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் ஒபாமா தாக்கல் செய்த அறிக் கையில் இந்த தகவல் தெரிவிக் கப்பட்டுள்ளது. இது கு…
-
- 0 replies
- 488 views
-
-
அல்கைதாவின் 'இந்திய கிளை உறுப்பினர்கள்' இருவர் கைது அல்கைதா இயக்கத்தின் இந்தியக் கிளையின் இரண்டு முக்கிய உறுப்பினர்களை கைதுசெய்துள்ளதாக டில்லி பொலிஸார் கூறுகின்றனர். இந்தக் கைதுகள் மூலம் அந்தப் பிராந்தியத்தில் அல்கைதாவின் நடவடிக்கைகளுக்கு கணிசமான பின்னடைவுகள் ஏற்படும் என்று டில்லியின் காவல்துறை கூறுகின்றது. கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் முஹம்மட் ஆசிஃப் என்றும் அவர் இந்திய துணைக் கண்டத்தில் அல்கைதாவின் ஸ்தாபக உறுப்பினர் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆப்கானிஸ்தான்- இந்திய எல்லையில் உள்ள ஆயுததாரிகளின் முகாம்களில் பயிற்சிபெற்றவர் என்றும் செய்திகள் கூறுகின்றன. அல்கைதா இயக்கத்தின் உலகளாவிய தலைவர், இந்தியாவில் ஜிஹாதிய போருக்கு அழைப்புவிடுத்த…
-
- 0 replies
- 475 views
-
-
மலேசியாவில், அடுத்தடுத்து இரண்டு திருப்பங்கள் ஏற்பட்டுள் ளன. இதுநாள் வரை, பிளவுப்பட்டு இருந்த மூன்று முக்கிய எதிர்க்கட்சிகள், ஓர் அணியில் நின்று செயல்பட முடிவு செய்துள்ளன. மலேசியாவில், `ஐக்கிய மலாய் தேசிய கழகம்’ என்ற கூட்டணி ஆட்சி, 50 ஆண்டுகளாக நடந்து வருகிறது. பிரதமராக, அப்துல்லா படாவி உள்ளார். சம உரிமை கேட்டு, இந்திய வம்சாவளியினர் போராட்டத்தில் ஈடுபட்டது, பொருளாதார சிக்கல் ஆகியவை, மலேசிய அரசுக்கு கடும் நெருக்கட........................ தொடர்ந்து வாசிக்க............................................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_7003.html
-
- 0 replies
- 659 views
-
-
நவாஸ் ஷெரீப் தாயார் காலை தொட்டு ஆசி பெற்ற பிரதமர் மோடி! லாகூர்: பாகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி, அங்கு நவாஸ் ஷெரீப்பின் தாயார் காலை தொட்டு வணங்கி ஆசி பெற்றார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்ப இருந்த நிலையில் நேற்று, திடீர் பயணமாக பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்றார். லாகூர் விமான நிலையம் சென்றடைந்த அவரை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கட்டித்தழுவி வரவேற்றார். நவாஸ் ஷெரீப்க்கு நேற்று பிறந்த நாள் என்பதால், அவருக்கு பிரதமர் மோடி, பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதன் பின் நவாஸ் ஷெரீப், தனி ஹெலிகாப்டர் மூலம் மோடியை லாகூரின் புறநகர் பகுதியில் உள்ள தனது ரைவிண்ட் மாளிகைக்கு அழைத்துச் சென்றார். அங்…
-
- 0 replies
- 775 views
-
-
'எல்நின்யோ காலநிலையின் தாக்கத்தால் 2016இல் பசியும் நோயும் ஏற்படும்' எல்நின்யோ காலநிலை சுற்று கடுமையாவதன் காரணமாக 2016ஆம் ஆண்டில் பல லட்சக்கணக்கான மக்கள் பசி மற்றும் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து அதிகமாகியிருப்பதாக உதவி நிறுவனங்கள் கூறுகின்றன. 'எல்நின்யோ காலநிலை சுற்றால் பல இடங்களில் பசியும் நோயும் உருவாகும்' இந்த விநோதமான காலநிலை சில இடங்களில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் அதேநேரம், வேறு சில இடங்களில் பெரும் வறட்சியை ஏற்படுத்தும். அதில் ஆப்பிரிக்காவில் சில இடங்களில் பெப்ரவரியிலேயே பெரும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும். அடுத்த ஆறு மாதங்களில் கரீபியன், மத்திய மற்றும் தெற்கு அமெரிக்க பிராந்தியங்களும் இதனால் பாதிக்கப்படும். …
-
- 0 replies
- 696 views
-
-
கலகம் பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, நடிகர் ரஜினிக்கு கனக்கச்சிதமாக பொருந்தும். ஒகேனக்கல் கலகம் உருவாகியதால், ரஜினி அரசியலுக்கு வருகிறார்;........................ தொடர்ந்து வாசிக்க................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_1303.html
-
- 0 replies
- 851 views
-
-
Published By: DIGITAL DESK 3 26 FEB, 2025 | 10:21 AM இந்தோனேசியாவில் 6.1 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்களில் நிலநடுக்கம் காரணமாக எந்த சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 6:55 மணிக்கு (2255 GMT) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது வடக்கு சுலவேசி மாகாணத்திற்கு அருகில் கடலோரத்தில் 10 கிலோமீட்டர் (6.2 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளின் படி நிலநடுக்கம் 6.0 ரிச்டர் அளவில் பதிவாகி இருப்பாகவும், சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறியுள்ளது.…
-
- 0 replies
- 221 views
- 1 follower
-
-
நாடுகடத்தப்படவுள்ள குழந்தையை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற மறுக்கும் டாக்டர்கள் ஆஸ்திரேலியாவில் நாடு கடத்தப்படுவதற்கான ஆபத்தை எதிர்நோக்கும் ஒரு பெண் குழந்தையை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற அனுமதிக்க மறுக்கும் மருத்துவர்களுக்கு ஆதரவாக அந்த மருத்துவமனையில் நூற்றுக்கணக்கானோர் கூடியுள்ளனர். நாடுகடத்தப்படவுள்ள குழந்தையை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற மறுக்கும் டாக்டர்கள் அந்தக் குழந்தைக்கு ஏதுவான ஒரு வீடு கிடைக்கும் வரை அதனை மருத்துவமனையில் இருந்து விடுவிக்கமாட்டோம் என்று அந்த மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு வெளியே பசுபிக் தீவான நவுருவில் அமைக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் கடுமையான தீக்காயங்…
-
- 0 replies
- 451 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - லிபியாவில் பெரும் குழப்ப நிலையை ஏற்படுத்தியதாக அதிபர் ஒபாமா பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். - சிரியா உள்நாட்டு போர் ஆரம்பித்து ஐந்து வருடங்களின் பின்னர், கிளர்ச்சி முதன் முதல் வெடித்த டெர்ரா நகருக்கு பிபிசி சென்றது. - ஆளில்லாமல் ஓடும் கார். ஓட்டுனர் இல்லாத தமது காரை சுவீடனின் வொல்வோ நிறுவனம் சோதிக்கிறது.
-
- 0 replies
- 275 views
-
-
ஜெர்மனியில் கலைநிகழ்வில் நடந்த துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்! ஜெர்மனியின் தலைநகரமான பெர்லினில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பேர்லின் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரைத் தேட பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பேர்லின் பொலிஸார் டுவிற்றர் பக்கத்தில் இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளனர். ஜேர்மனிய தலைநகரின் க்ரூஸ்பேர்க் (Kreuzberg) மாவட்டத்தில் உள்ள ரெம்பொட்ரோம் மண்டபத்தில் (Tempodrom hall) துருக்கிய கலை நிகழ்ச்சியின்போது மக்கள் அதிகளவாக கூடியிருந்த சமயத்தில் நேற்று இரவு இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. …
-
- 0 replies
- 390 views
-
-
துருக்கியை சீண்டிப்பார்த்த சிரியா, கடுமையான பின்னடைவுகளை எதிர்கொள்ள தொடங்கியிருக்கிறது. இருநாடுகளுடனும் நட்பு பாராட்டும் ரஷ்யா, யாருக்கு துணை நிற்பது எனத் தெரியாமல் திண்டாடி வருகிறது. சிரியாவின் உள்நாட்டுப் போரில் அரசு படைகளுக்கு ரஷ்யா துணை நிற்கிறது. போராளிக் குழுக்களுக்கு துருக்கி உதவுகிறது. இட்லிப் மாகாணத்தை, போராளிக் குழுக்களிடம் இருந்து கைப்பற்ற சிரியா யுத்தத்தை உக்கிரப்படுத்தியிருக்கிறது. போராளி குழுக்களுக்கு எதிரான தாக்குதலில், துருக்கி வீரர்கள் 34 பேர் கொல்லப்பட்டனர். ஆத்திரமடைந்த துருக்கி "ஸ்பிரிங் ஷீல்டு" என்று தலைப்பிட்டு, சிரியாவுக்கு எதிரான தாக்குதல் நடத்துகிறது. இதில், சிரியாவின் 2 போர் விமானங்கள், 100 பீரங்கிகள் அழிக்கப்பட்டுள்ளன. இதனால், உள்நாட்ட…
-
- 0 replies
- 359 views
-
-
பெங்களூருவில் தமிழ் நூலகம் சூறை: 20 ஆயிரம் நூல்கள் வீதியில் வீசப்பட்டன நூலக கட்டிடம் வீதியில் வீசியெறியப்பட்ட புத்தகங்கள் பெங்களூருவில் உள்ள திருக்குறள் மன்ற நூலகம் சூறையாடப்பட்டு அங்கிருந்த 20 ஆயிரம் நூல்கள் வீதியில் வீசப்பட்டன. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அல்சூரில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 1964-ம் ஆண்டு தமிழ் ஆர்வலர் நல்ல பெருமாள் என்பவரால் திருக்குறள் மன்றம் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் நூலகம் அங்குள்ள தாமோதர் முதலியார் தெருவில் 1976-ம் ஆண்டு முதல் ச…
-
- 0 replies
- 388 views
-
-
[size=4]பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தெக்ரிக் இ இன்சாப் என்ற அரசியல் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், அமெரிக்க குடிவரவு அதிகாரிகளால் சுமார் ஒரு மணித்தியாலம் வரை தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கனடா தலைநகர் டொரண்டோவில் இருந்து நியூயோர்க் நகருக்கு விமானத்தில் புறப்படவிருந்த போதே இம்ரான் கான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தனது கட்சி வளர்ச்சிக்கான நிதி திரட்ட லாங் ஐலன்ட்சிட்டி நகரில் நடைபெறும் விருந்துபசாரம் மற்றும் சொற்பொழிவு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதே இம்ரான் கானிடம் விசாரணை நடத்தப்பட்டதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. டொரண்டோவில், நியூயோர்க் விமானத்தில் ஏ…
-
- 0 replies
- 471 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - போர் முற்றுகையில் உள்ள சிரியாவின் அலெப்போ நகரில் அகப்பட்டுள்ள மக்களின் அவதிகளை காண்பிக்கும் புதிய படங்கள் பிபிசிக்கு கிடைத்துள்ளன. - கலாச்சார இடைவெளிகளை களையும் முயற்சியாக மேற்குலக மனித உறவுகள் குறித்து நோர்வேயில் ஆண் குடியேறிகளுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. - ஆளில்லா விமானங்கள்தான் எதிர்காலம் என்கிறார்கள். ஆனால், ட்ரோன்களுக்கு வரும் ஒழுங்குவிதிகள் அவற்றின் வளர்ச்சியை பாதிக்குமா? என்பது குறித்த ஒரு பார்வை.
-
- 0 replies
- 384 views
-
-
பாக்தாத் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடூர தாக்குதல் : 75 பேர் பலி (Video) ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இன்று நடத்திய இரட்டை கார் குண்டு தாக்குதலில் 75 பேர் உயிரிழந்தனர். பாக்தாத் நகரில் உள்ள கர்ராடா பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு முன்பாக இன்று அதிகாலை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சுமார் 75 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த தாக்குதலுக்கு ஈராக்கில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த 130 இற்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று…
-
- 0 replies
- 213 views
-
-
சீனாவின் ஹூவாவி நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்பத்திற்கு பிரித்தானிய அரசாங்கம் தடை சீனாவின் ஹூவாவி நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்பத்திற்கு பிரித்தானிய அரசாங்கம் தடை விதித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஹூவாவி நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்பத்திற்கு அனுமதியளிப்பதற்கு பிரித்தானிய பிரதமர் தீர்மானித்திருந்தார். எனினும், கொரோனா வைரஸ் குறித்த விபரங்களை மூடி மறைத்ததாகவும் ஹொங் கொங் மீது தனது அதிகாரத்தை வரம்பு மீறி செலுத்தியதாகவும் சீன அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையிலேயே தற்போது 5ஜி தொழிநுட்பத்திற்கு பிரித்தானிய அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதேவேளை, பிரித்தானிய பாதுகாப்பு சபை கூட்டம் இன்று நடைபெ…
-
- 0 replies
- 250 views
-
-
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு, கடந்த மார்ச் மாதம் யமுனை நதிக்கரையில், 'உலகக் கலாசாரத் திருவிழா' என்ற 3 நாட்கள் நிகழ்ச்சியை நடத்தியது. "இது யமுனை ஆற்றங்கரையை மாசுபடுத்தும் செயல்" என அப்போதே, எதிர்ப்பு தெரிவித்தது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். இதை ஆராய மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் செயலாளர் சசி சேகர் தலைமையில், 7 பேர் கொண்ட குழுவையும் அமைத்திருந்தது. தற்போது இந்தக் குழு, நிகழ்ச்சி நடந்த இடத்தை ஆராய்ந்து தந்துள்ள அறிக்கைதான் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் மத்தியில், பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது. "நிகழ்ச்சி நடந்த யமுனையின் மொத்த நதிக்கரையும், முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. சேதம் என்பது சிறிய அளவில் கிடையாது. அந்த இடத்தில் இருந்த தாவரங்களான, மரங்கள், ச…
-
- 0 replies
- 549 views
-
-
ஆசிய குடியேறிகள் மீதான தாக்குதல்: பாரிஸில் சீன மக்கள் போராட்டம் ஆசிய குடியேறிகள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிஸ் நகரில் நூற்றுக்கணக்கான சீன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறந்த போலிஸ் பாதுகாப்பு வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த போராட்டக்காரர்கள், ''அனைவருக்கும் பாதுகாப்பு'' என்ற வாசகம் அடங்கிய டி ஷர்ட்டுகளை அணிந்திருந்தனர். கடந்த மாதம் ஸாங் சோலின் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த போராட்டம் அதிகரித்துள்ளது. மூன்று திருடர்கள் அவரை தாக்கியதை தொடர்ந்து சோலின் உயிரிழந்தார். கடந்த காலங்களைக் காட்டிலும், ஆசிய வம்சாவளியை சேர்ந்தவர்கள் மீது நடத்தப்படும் வன்முறையானது அதிகரித்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 531 views
-
-
மனித உரிமை பேரவையின் 33 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகிறது (லியோ நிரோஷ தர்ஷன்) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 33 ஆவது கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. இதன் போது மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசேனின் ஆரம்ப உரையில் இலங்கையின் மனித உரிமைகளின் நிலவரம் குறித்து விளக்கமளிக்க உள்ளார். இந்தக் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலில் இலங்கையின் விவகாரங்கள் எதுவும் உள்ளடக்கப்படவில்லை. எனினும் இலங்கையின் மனித உரிமைகள் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் கருத்துக்களை வெளியிட்டு கேள்விகளை எழுப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.…
-
- 0 replies
- 434 views
-
-
புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக்கியது சரிதான்- பசுமை தீர்ப்பாயம் Read more at: http://tamil.oneindia.in/news/2013/02/20/tamilnadu-green-tribunal-gives-green-signal-tn-govt-170158.html டெல்லி: தமிழக அரசின் புதிய தலைமைச் செயலகத்தை பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றியது செல்லும் என்று பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.இந்தத் தீர்ப்பை முதல்வர் ஜெயலலிதா வரவேற்றுள்ளார். சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள, புதிய தலைமை செயலக கட்டடத்தை, பல்நோக்கு மருத்துவ மனையாக மாற்ற, மாநில அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து, டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், புதிய தலைமை செயலக கட்டடத்தில், கடந்த, 30ம் தேதி…
-
- 0 replies
- 286 views
-
-
அதிகரித்தது கொரோனா தொற்றுக்கள் - கட்டுப்பாடுகளை இறுக்கும் இத்தாலி கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதற்கான புதிய நடவடிக்கைகளை இத்தாலி அறிவித்துள்ளது. அந்நாட்டு பிரதமர் கியுசெப்பே கொன்டே ஞாயிற்றுக்கிழமை மாலை தொலைக்காட்சி உரையில் தெரிவித்துள்ளதாவது, "நாங்கள் நேரத்தை வீணடிக்க முடியாது, ஒரு பொது முடக்கல் நிலையை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க வேண்டும், இது பொருளாதாரத்தை கடுமையாக சமரசம் செய்யலாம். கியுசெப்பே கொன்டே "அரசாங்கம் இங்கே உள்ளது, ஆனால் எல்லோரும் தங்கள் பங்கைச் செய்ய வேண்டும்." என தெரிவித்துள்ளார். அவர் மேலும், "மிகவும் பயனுள்ள நடவடிக்கைகள் அடிப்படை முன்னெச்சரிக்கை நடவ…
-
- 0 replies
- 439 views
-
-
வெள்ளை மாளிகை மட்டுமல்ல, நாடாளுமன்ற இரு அவைகளும் குடியரசுக் கட்சியின் வசமானது அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுக் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது. இதன் மூலம், நாடாளுமன்றத்தில் டிரம்ப் நிர்வாகம் எளிதாக செயல்பட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி, தற்போதைய நாடாளுமன்றத்தில், பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை பெற முடியாமல் இருந்த வருகிறது. இதனால், நிர்வாக ரீதியாக ஒபாமா நிர்வாகம் பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. பல சட்டங்களை நிறைவேற்றுவதற்கும், பல முடிவுகளுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறுவதற்கும் அவர்கள் கடுமையாகப் போராடும் நிலை இருந்தது. தற்போது, இரு அவைகளிலும் குடியரசுக் கட்சி பெற்றுள்ள வெற்றியை இந்த…
-
- 0 replies
- 360 views
-