உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26626 topics in this forum
-
ஆப்கானில் தீவிரவாதிகளுக்கெதிராக பிரிட்டன் படையினரால் பாரிய படை நடவடிக்கை [11 - December - 2007] [Font Size - A - A - A] ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் பலத்த கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை மீட்கும் நோக்குடன் பிரிட்டன் படையினர் பாரிய படை நகர்வொன்றை முன்னெடுத்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு ஆரம்பிக்கப்பட்ட இப்படை நடவடிக்கையில் ஆயிரக் கணக்கான பிரிட்டன் படையினர் ஈடுபட்டிருப்பதுடன் இது போன்ற பாரிய அளவிலான படை நகர்வு முன்னெப்போதும் ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்படவில்லை. இம் மோதல் நடவடிக்கைகளில் இதுவரை இரு பிரிட்டன் துருப்புகள் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனரென பிரிட்டன் படைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும் தரைப் படைக்கு உதவியாக ஹெலிகொப்டர்கள் மற்றும் ஜெ…
-
- 0 replies
- 575 views
-
-
அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் குர்திய அமைப்பு ஒன்றின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் அமெரிக்காவில் 1996ஆம் ஆண்டு இயற்றப்பட்ட 2004ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட "பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்"களின் சில பகுதிகள் மொன்னையாக இருப்பதாகவும் அவற்றை நீக்கும்படியும் கோரப்பட்டது. அந்த அமைப்புகளுக்குப் பொருளுதவியும் மற்ற வளங்களும் வழங்கி அமைதியான தீர்வுக்கும், ஐ.நா சபையில் தங்கள் தரப்பினை எடுத்துச் சொல்லவும் உதவ நினைப்பவர்களும் இச்சட்டப்படி குற்றவாளிகளாகக் கருதப்படுவார்கள் என்ற நிலை இருந்தது. நேற்றைய தீர்ப்பின்படி, இத்தகைய பொருளுதவிகளும், வளங்களை வழங்குதலும் ("material support or resources") குற்றம் என்பதான பகுதிகள் இச்சட்டத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கின்…
-
- 0 replies
- 941 views
-
-
இந்திய அளவில் தற்கொலை சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதில் முதல் இடத்தை மேற்கு வங்காளம் பெறுகிறது; ஆய்வில் வெளியான தகவல் பெங்களூர், டிச. 11- இந்திய அளவில் தற்கொலை சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதில் முதல் இடத்தை மேற்கு வங்காளம் பெறுகிறது; கர்நாடகம் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் முதல் இடத்தை மேற்கு வங்காளம் பெறுகிறது. அதற்கு அடுத்த 3 இடங்களை மராட்டியம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பெறுகின்றன.அதிகம் 2006-ம் ஆண்டு இந்தியாவில் மொத்தம் 1 லட்சத்து 18 ஆயிரத்து 112 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இது கடந்த 2005-ம் ஆண்டை ஒப்பிடும் போது 4,198 பேர் அதிகமாகும். 2005-ம் ஆண்டை ஒப்பிடும்போது 2006-ம் ஆண்டில் மொத்த தற்கொலை சம்ப…
-
- 0 replies
- 686 views
-
-
மருதாணி வைத்ததால் சஸ்பென்ட் : சென்னையில் கிறிஸ்தவப் பள்ளி அட்டகாசம்! More with Pictures-http://puduvaisaravanan.blogspot.com/2007/12/blog-post.html சென்னை புரசைவாக்கம் தாண்டவன் தெருவில் வசிப்பவர் கணேஷ்ராம். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரபாவதியும் வழக்கறிஞர்தான். செஷன்ஸ் கோர்ட்டில் கூடுதல் அரசு வழக்கறிஞராக இருக்கிறார். இவர்களது மகன் கவுசிக் டவுட்டன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 3-ம் வகுப்பில் படித்து வருகிறான். கடந்த 19-11-2007 தேதி வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற கவுசிக்கிடம் உன்னை சஸ்பென்ட் செய்திருக்கிறோம் என்றுச் சொல்லி வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த கவுசிக்கின் பெற்றோர் பள்ளிக்குச் சென்று…
-
- 4 replies
- 2.1k views
-
-
அமெரிக்க ஜனாதிபதியும் அம்பலமாகும் பொய்களும் [08 - December - 2007] [Font Size - A - A - A] சதாம் ஹுசெய்ன் குவித்து வைத்திருந்த பேரழிவு தரும் ஆயுதங்கள் உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கியதாகக் காரணம் கூறிக் கொண்டு சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா இன்றுவரை அந்த ஆயுதங்களில் எந்தவொன்றையுமே கண்டுபிடிக்கவில்லை. சுயாதிபத்தியம் கொண்ட நாடொன்றை ஆக்கிரமிப்பதற்காக முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளயருடன் சேர்ந்து முழு உலகிற்குமே படுபொய்யைக் கூறிய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் ஈரான் அணுவாயுதங்களைத் தயாரிப்பதற்கான திட்டங்களை முன்னெடுக்கிறது என்று குற்றஞ்சாட்டி அந்த நாட்டுக்கு எதிராகவும் கடந்த இரு வருடங்களாகப் போர் முரசு கொட்டி வ…
-
- 0 replies
- 679 views
-
-
இராமர் மற்றும் அனுமரை வழிபடும் கோயில்கள் இருக்கும் நிலம் மற்றும் அந்தக் கோயில்களின் சொத்துரிமை தொடர்பான வழக்கு ஒன்றின் படி இராமருக்கும் அனுமருக்கும் அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு அவர்கள் மதிப்பளிக்கத் தவறியதால் அவர்கள் இருவரையும் தனித்து நீதிமன்றத்துக்கு சமூகமளிக்க பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. நவ பாரத தேசத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் இந்த அதிசய நீதித்துறை அணுகுமுறை நடந்தேறியுள்ளது..! இதுதான் இராமருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய நிலத்தில் கட்டப்பட்டிருக்கும் இராமர் குடியிருக்கும் கோயில். You failed to appear in court despite notices sent by a peon and later through registered post. You are herby directed t…
-
- 10 replies
- 2k views
-
-
பெற்றோர்களை உதாசீன படுத்தும் பிள்ளைகளுக்கு சிறை தண்டனை வழங்கும் மசோதா நேற்று பார்லிமென்ட்டில் நிறைவேறியது. வயதான பெற்றோர்கள் பெரும்பாலும் ஆதரவற்ற நிலையில் உள்ளனர். பிள்ளைகள் வளர்ந்த உடன் தங்கள் பெற்றோரை உதாசீன படுத்தி அவர்களது தேவைகளை மதிப்பதில்லை. இதற்கு வழி செய்யும் வகையில் நேற்று பார்லிமென்ட்டில் பெற்றோரை தவிக்க விடும் பிள்ளைகளுக்கு 3 மாத ஜாமீன் மற்றும் மேல்முறையீடு செய்ய முடியாத சிறை தண்டனை வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதை மத்திய அமைச்சர் மீரா குமார் தாக்கல் செய்தார். News by SNS news service and thanks to dinamalar.com
-
- 1 reply
- 1.1k views
-
-
குறைந்த தராதரமுள்ள வேலைகளுக்கு ஆசியா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து (அதாவது ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் அமையாத நாடுகளில் இருந்து) ஆட்களை பிரித்தானியாவுக்குள் குடிபெயர தடை விதிக்கப்பட இருக்கிறது. அதேபோல் பிரித்தானிய வதிவுரிமை பெற்றவர்கள் திருமணம் செய்து அழைத்து வருபவர்களும் எனிமேல் ஆங்கிலப் பரீட்சைக்குத் தோற்றிய பின்னரே விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும். இவ்வாறு திருமணம் செய்து அழைத்து வரும் வயதெல்லையும் 18 இல் இருந்து 21 ஆக உயர்த்தப்படுகிறது. அதுமட்டுமன்றி திறமை அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அப்பாலான நாடுகளில் இருந்து குடிபெயர விரும்புவர்கள் அவர்களின் வயது கல்வித்தரம் அனுபவம் ஆண்டு வருமானம் என்பவற்றின் அடிப்படையில் வழங்கப்படும் புள்ளிகளைப் பொறுத்தே (அவுஸ…
-
- 9 replies
- 2.4k views
-
-
ஜேக்குவார், லேண்ட்ரோவர் கார் தொழிற்சாலைகளை டாடா வாங்கிக்கொள்ளட்டும் : தொழிலாளர்கள் விருப்பம் லண்டன் : இங்கிலாந்தில் தயாரிக்கப்படுபவை புகழ் பெற்ற கார்களான ஜேக்குவார் மற்றும் லேண்ட்ரோவர். இப்போது அமெரிக்காவை சேர்ந்த பிரபல கார் நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்திற்கு சொந்தமாக இருக்கிறது. இந்த இரண்டு கார் நிறுவனங்களையும் விற்று விட ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்திருந்தது. இதனை வாங்கிக்கொள்ள இந்தியாவின் டாடா நிறுவனமும், மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனமும் போட்டி போடுகின்றன. இந்நிலையில் ஜாக்குவார் மற்றும் லேண்ட்ரோவர் கார் கம்பெனிகளின் தொழிலாளர்கள் யூனியனின் கூட்டமைப்பு, எங்கள் நிறுவனத்தை ஃபோர்டு நிறுவனம் விற்பதானால் அதை டாடா நிறுவனத்திற்கு விற்கட்டும் என்று விருப்பம் தெரிவித்துள…
-
- 0 replies
- 1.1k views
-
-
`தமிழர்களுக்காக தமிழக முதல்வர் குரல் கொடுக்காமல் தன்சானியா பிரதமரா குரல்கொடுப்பார்'? [04 - December - 2007] `மலேசியத் தமிழர் பிரச்சினை பற்றி தமிழக முதல்வர் கருணாநிதி கவலைப்படத் தேவையில்லை. அவருடைய மாநிலத்திலேயே ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. அதைப்பற்றித்தான் அவர் கவலைப்பட வேண்டுமே தவிர மலேசியப் பிரச்சினையில் கருணாநிதி கருத்துத் தெரிவித்துப் பேசாமல் இருந்தால் போதும்' இப்படிக் கூறியிருப்பது மலேசிய அமைச்சர் நஸ்ரி அஜீஸ். தகவலை வெளியிட்டிருப்பது கோலாலம்பூரிலிருந்து வெளிவரும் `நியு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ். அப்படி என்னதான் தவறாகப் பேசியிருப்பார் தமிழக முதல்வர்? மலேசியாவில் வாழும் தமிழர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக அந்தத் தமிழர்களை பாதுகாக்க இந்திய அரசு உரிய ந…
-
- 1 reply
- 1.4k views
-
-
இந்தியாவும், இஸ்ரேலும் சேர்ந்து மிக நவீன உளவு செயற்கைக் கோள் ஒன்றை உருவாக்கியுள்ளன. இதில் பூமியில் உள்ளவற்றைத் துல்லியமாக படம்பிடிக்கும் காமிராக்கள் பெர்றுத்தப்பட்டுள்ளன. இவை தவிர தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க ராடார் கருவிகளும் உள்ளன. கடந்த மாதம் இந்த உளவு செயற்கைக் கோளை விண்ணில் ஏவத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்த தயார் நிலையில் இருந்தது. இது ஏவப்படுவதற்கு ஒரு நாளைக்கு முன்பு உளவு செயற்கைக் கோளை பறக்க விடுவது திடீரென நிறுத்தப்பட்டது. தொழில் நுட்பக் காரணங்களால் அந்த செயற்கைக் கோள் பறக்கவிடப்படவில்லை என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், அமெரிக்காவின் நிர்ப்பந்தம் காரணமாக அந்தச் செயற்கைக் கோள் ஏவப்படவில்லை என்று இப்போது தெரிய வந்துள்ளது. இந…
-
- 9 replies
- 2.3k views
-
-
பாகிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து காய்கறிகள் ஏற்றுமதி செய்வது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு செய்யப்படும் உலர் பழங்களின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு வாகா எல்லை ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்பு இரு புறமும் எல்லையின் நுழைவு வாயிலில் இருந்து 1 கிலோ முன்பு சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டுவிடும். லாரியில் உள்ள சரக்குகளை தலைச்சுமையாக அடுத்த பகுதிக்கு கொண்டு சேர்த்தனர். இதனால் கால விரையம் ஏற்பட்டதுடன், செலவும் அதிகரித்தது. கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து நேரடியாக சரக்கு லாரிகள் எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றன. இதுவே காய்கறி ஏற்றுமதி அதிகரித்து இருப்பதற்கு முக்கிய க…
-
- 0 replies
- 1k views
-
-
சதாம் ஹுசைனின் சமையற்காரர்-ஒரு தமிழர்! தூக்கிலிடப்பட்ட சர்வாதிகாரி சதாம் ஹுசைனிடம் சமையற்காரராகப் பணிபுரிந்த ஒரு தமிழரின் பேட்டியை இவ்வார குமுதம் வெளியிட்டுள்ளது::: அதிலிருந்து..... ‘‘மிகச் சிறந்த மனிதரை அநியாயமா கொன்னுட்டாங்க...’’ கண்கலங்குகிறார் கீழக்கரையைச் சேர்ந்த காஜாமொய்தீன். மிகச் சிறந்த மனிதர் என்று அவர் குறிப்பிடுவது யாரைத் தெரியுமா? சதாம் உசேனைத்தான்! சதாம் உசேனுக்கு பல வருடங்கள் சமையல்காரராய் பணியாற்றியவர் இவர். தற்போது திருவல்லிக்கேணியில் ஃபாஸ்ட்புட் ஹோட்டல் வைத்திருக்கிறார். காஜா மொய்தீனை புதுப்பேட்டையிலுள்ள அவரது வீட்டில் சந்தித்தோம். சதாம் அரண்மனையில் தனது சமையல் அனுபவங்களைக் கூறத் தொடங்கினார். ‘‘நான் சதாம் மாளிகையில் சமையல்காரராகச் சேர்ந்த முதல…
-
- 1 reply
- 1.6k views
-
-
குஜராத்தில பாரதியஜனதா கட்சிக்கு இருக்கும் செல்வாக்கை விட மோடிக்கு தான் செல்வாக்கு அதிகமா இருக்கின்றது. இதனால் அவர் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் கூட்டம் அலைமோதுகின்றது குறிப்பாக இளையர்கள் அதிகம் பேர் எழுச்சியுடன் கூடுகின்றனர். குஜராத்தில் முன்பு அத்வானிக்கு தான் அதிகம் செல்வாக்கு இருந்தது இப்பொழுது மோடிக்கே அதிக செல்வாக்கு இருக்கின்றது. எனவே வேட்பாளர்கள் அனைவரும் தமது தொகுதியில் மோடி அதிகம் பேசவேண்டும் என்று கேட்டுவருகினறனர். மோடி ஒரு தடவை தங்கள் தொகுதியில் பேசிவிட்டாளே தாங்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுவிடுவோம் என்று பாரதியஜனதா வேட்பாளர்கள் கருதுகின்றனர். மோடி தனது பேச்சில் காங்கிரஸையும் சோனியாவையும் கடுமையாக தாக்கி பிரச்சாரம் …
-
- 6 replies
- 1.2k views
-
-
சேது சமுத்திரம் கப்பல் கால்வாய்த் திட்டம் யாருக்காக? [03 - December - 2007] - டி.எஸ்.எஸ்.மணி- கடந்த செப்ரெம்பர் 18.2007 அன்று `வாஷிங்டன் போஸ்ட்' டில் ஒரு கட்டுரை. `கடல் கால்வாய்த் திட்டம் இந்தியாவில் ஒரு மத உணர்வுத் தடங்கலால் தடைப்பட்டுள்ளது' என்ற ராமலட்சுமியின் கட்டுரை. அதில் `சுற்றுச் சூழல் மற்றும் மீனவர் வாழ்வுரிமைக்கான ஒரு போராட்டம் மத முத்திரையுடன் கெடும் வாய்ப்பாக திசை திரும்பிவிட்டது' என முடிக்கப்பட்டிருந்தது. `சுற்றுச்சூழலை அழிக்கும் ஆபத்துகளை, இந்தச் சேதுக் கால்வாய்த் திட்டம் எப்படியெல்லாம் தன்னகத்தே கொண்டுள்ளது எனத் திட்ட ஏற்பாட்டாளர்கள் முன்வைத்த `சுற்றுச் சூழல் தாக்கல் பற்றி மதிப்பீடு' மீதே நாம் காணமுடியும். * இந்த வங்காள விரிகுட…
-
- 0 replies
- 763 views
-
-
சென்னை: நலிந்த தேயிலை தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோத்தகிரியில் நாளை அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பச்சைத் தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யாமலும், நலிந்த தேயிலை தொழிலாளர்கள் மீது அரசு ஜப்தி நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள மோசமான சாலைகளை மேம்படுத்தாத ஊராட்சி, பேரூராட்சி வார்டுகளில் வளர்ச்சி பணிகள் நடைபெறாதது; கெரடா மட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையை சீர்படுத்தாதது, சமூக வனப்பகுதிகளில் காட்டு மரங்களை வெட்டிக் கடத்துவது, சாலை அமைக்கும் பணிகளை பாதியிலேயே நிறுத்திவிட்டது; இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை …
-
- 0 replies
- 673 views
-
-
கோலாலம்பூர்: மலேசியத் தமிழர்களின் இனப்படுகொலை குறித்த புகார் அடிப்படையற்றது, பொய்யானது. அதை நிரூபித்தால் பிரதமர் பதவியிலிருந்து விலகத் தயார் என அந்நாட்டு பிரதமர் அப்துல்லா அகமது படாவி தெரிவித்துள்ளார். மலேசியாவில் தமிழர்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பில் சம உரிமை வழங்கப்பட வேண்டும், பாரபட்சப் போக்கு களையப்பட வேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர். இதுதொடர்பாக இங்கிலாந்து தூதரகத்தில் அமைதியான முறையில் மனு கொடுக்கச் சென்ற தமிழர்கள் மீது மலேசிய காவல்துறை நடத்திய அடக்குமுறைத் தாக்குதல் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த நிலையில், இலங்கையில் நடைபெறுவதைப் போல, மலேசிய அரசும், தமிழர்களை அழித்தொழிக்கும் இனப் படுகொல…
-
- 1 reply
- 974 views
-
-
மலேசியர்கள் குறித்து இந்தியா கவலைப்படத் தேவையில்லை - மலேசிய அமைச்சர் கோலாலம்பூர்: இந்தியர்களைப் பற்றி மட்டுமே இந்தியா கவலைப்பட வேண்டும். மலேசியர்கள் குறித்து அது கவலைப்படக் கூடாது, அது தேவையற்றது என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் சையத் ஹமீத் அல்பார் கூறியுள்ளார். மலேசியத் தமிழர்கள் நிலை குறித்து முதல்வர் கருணாநிதி சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதியிருந்தார். இதைக் கண்டித்து மலேசிய அமைச்சர் ஒருவர் முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இந்த நிலையில், மலேசிய தமிழர் விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்திருந்தார். இதுகுறித்து மலேசிய அரசுடன் பேசப்படும் என வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார். …
-
- 35 replies
- 6.1k views
-
-
மலேசியத் தமிழர்கள் இந்துத்துவா, மதவாதம் ஆகியவைகளைப் பரப்பும் ஆர்.எஸ்.எஸ்., போன்ற அமைப்புக்களின் கண்ணிவெடியில் சிக்காமல், தங்களது வாழ்வுரிமையைக் காக்க முயல்வது முக்கியம் என்று தமிழகத்தின் திராவிடர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
மலேசியா இன்னொரு இலங்கையாக மாறும் என்று மலேசிய தமிழர் உரிமைச் செயற்பாட்டாளரான வேதமூர்த்தி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
கரடி பொம்மைக்கு 'முகமது' பெயரிட்ட சர்ச்சை: ஆசிரியருக்கு தண்டனை போதாது என்று கூறி கார்டூமில் ஆர்ப்பாட்டம் பிரிட்டிஷ் பள்ளிக்கூட ஆசிரியை கிலியன் ஜிப்பொன்ஸ்ஸுக்கு வழங்கப்பட்ட தண்டனை போதாது என்று கூறி அதனைக் கண்டித்து, சுடானின் தலைநகர் கார்ட்டூமின் ஊடாக நூற்றுக்கணக்கானோர் ஊர்வலம் ஒன்றை நடத்தியுள்ளனர். தனது வகுப்புக் குழுந்தைகளை கரடிப் பொம்மைக்கு 'முகமது' எனப் பெயரிட அனுமதித்ததை அடுத்து, மத நிந்தனைக் குற்றத்துக்காக கிப்பொன்ஸ் அவர்களுக்கு நேற்று வியாழக்கிழமை 15 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு நீண்டகால சிறைத்தண்டனையும், கடுமையான அபராதம் அல்லது 40 சவுக்கடிகளும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த ஊர்வலம் மிகுந்த இரைச்சலுடன் காணப்பட்டது எ…
-
- 0 replies
- 883 views
-
-
மலேசியாவில் ஏறக்குறைய 150 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழர்கள் தங்களை மலேசிய அரசு ஒதுக்குவதாகக் கூறி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். மலேசியாவில் தமிழர்கள் மட்டும் ஒதுக்கப்படவில்லை. முஸ்லீம்கள் அல்லாத அனைவருமே ஒதுக்கப்பட்டுத்தான் வருகின்றனர். மலேசியா ஒரு இஸ்லாமிய நாடு. அந்த நாட்டின் மக்கள் தொகையில் 60 வீதமானவர்கள் இஸ்லாமிய மக்களாக இருக்கின்றனர். இஸ்லாம் மதத்தை அரசுமதமாக மலேசியா பிரகடனப்படுத்தியிருக்கிறது. இஸ்லாமியர்களுக்கு அனைத்துத் துறைகளிலும் முன்னுரிமை வழங்கக்கூடியவாறு ஏற்பாடுகளை மலேசிய அரசு செய்துள்ளது. மலேசிய அரசு இயற்றியுள்ள பல சட்டங்கள் மனித உரிமையை மீறுகின்ற சட்டங்களாக இருக்கின்றன. மலேய இனத்தவர் அனைவரும் பிறப்பால் இஸ்லாமியர்கள் என்ற சட்டத்தை மலேசிய அ…
-
- 10 replies
- 2.3k views
-
-
அதிநவீன விமானப்படை விமானங்களைக் கொண்டுள்ள அமெரிக்க தலைமையிலான நேட்டோ கூட்டுப்படைகள் ஆப்கானிஸ்தானில் தலிபான் போராளிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துகிறோம் என்று அப்பாவி ஆப்கான் மக்களை தினமும் கொன்று குவிக்கின்றன. அப்படி கொன்று குவிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பல நூறாகும். ஆனால் நேட்டோவின் ஆதிக்கத்துள் இருக்கும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் ஐநாவும் இதையெல்லாம் கண்டுக்கிறதே இல்லை. ஏனெனில் மனித உரிமைகளை மீறிறவர்கள் அமெரிக்க தலைமையிலான ஜனநாயக முதலாளிமார். அண்மையில் ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் நடத்திய அகோர விமானத் தாக்குதலில் வீதிப்புனரமைப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 12 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இதை அம்மாகாணத்துக்கான கவர்னர் உறுதிப்படுத்தி இருந்தார். …
-
- 1 reply
- 941 views
-
-
துருக்கியில் 56 பயணிகளுடன் சென்ற விமானம் நொறுங்கி விழுந்தது அங்காரா : துருக்கியில் உள்ள இஸ்பார்டா என்ற மாகாணத்தில் 56 பயணிகளுடன் சென்ற விமானம் நொறுங்கி விழுந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் செய்தி வெளியீட்டுள்ளது.மீட்புக்குழ
-
- 1 reply
- 938 views
-
-
பிரான்ஸ் நகரில் தொடரும் கலவரங்களில் இதுவரை 120 இற்கும் அதிகமான பொலிஸார் காயம்' [29 - November - 2007] [Font Size - A - A - A] *நிலைமை குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு பாரிஸ்: பிரான்ஸின் நகரப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் கலவரங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர்களுடனான அவசர சந்திப்பொன்றை அந்நாட்டு ஜனாதிபதி நிக்கலஸ் சார்கோஸி ஏற்பாடு செய்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரின் காரொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதினால் இரு சிறுவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கோபமடைந்த இளைஞர்கள் அங்கு கலவரங்களில் ஈடுபட்டு வருவதனால் இதுவரைக்கும் 120 இற்கும் அதிகமான பொலிஸார் காயமடைந்துள்ளனர்.நேற்று முன்தினம் கலவரங்கள் சற்று தணிந்துள்ள போதும் ம…
-
- 0 replies
- 805 views
-