உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26856 topics in this forum
-
நைஜீரியா தேவாலயத்தில்.... துப்பாக்கி சூடு: குறைந்தது 50பேர் உயிரிழப்பு! நைஜீரியாவின் ஒண்டோ மாநிலத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆராதனையின் போது துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இறந்தவர்களில் ஏராளமான குழந்தைகள் உள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் ஒகுன்மோலாசுயி ஒலுவோல் கூறினார். நைஜீரியாவின் தென்மேற்கில் உள்ள ஒரு நகரமான ஓவோவில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் வழிபாட்டாளர்கள் மீது துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். எனினும், இந்த தாக்குதல் யாரால் நடத்தப்பட்டது என்பது குறித்து எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை. …
-
- 0 replies
- 202 views
-
-
அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியிலும் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் வடகிழக்கு நகரமான கார்கிவ் ஆகியவற்றை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் நான்கு ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளின் இரண்டாவது நாளுக்காக ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பேச்சுவார்த்தையாளர்கள் சனிக்கிழமை அபுதாபியில் சந்திக்கவுள்ள நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த முன்மொழிவு தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்…
-
- 3 replies
- 202 views
-
-
ரசாயன ஆயுதங்களால் தாக்கப்படும் சிரியா, தென் சீன கடல் பகுதியில் போர்க்கப்பல்களை குவிக்கும் சீனா, வன உயிரினங்களை கட்டுப்படுத்தும் பணியாளர் உள்ளிட்ட செய்திகளை இங்கு காணலாம்.
-
- 0 replies
- 202 views
-
-
மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றபோது மாயமான கேரள இளைஞர்கள் 20 பேர் ஐஎஸ்ஸில் இணைந்தது உறுதியானது: மாநில உளவுத் துறை அறிக்கை ஐஎஸ் இயக்கத்துக்கு எதிரான போராட்டம். | கோப்புப் படம் கேரளாவில் இருந்து மாயமான 20 இளைஞர்களும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்துவிட்டதாக உளவுத் துறை உறுதி செய்துள்ளது. அதேசமயம் அம்மாநிலத்தை சேர்ந்த மேலும் பல இளைஞர்கள் ஐஎஸ்ஸில் இணைந்திருக்க கூடும் என்ற தகவலும் வெளியாகி இருப்பதால் அச்சம் எழுந்துள்ளது. கேரளாவின் காசர்கோடு, பாலக்காடு மாவட்டங்களில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்ற ஒரு தம்பதி உட்பட 20 இளைஞர்கள் திடீரென மாயமாகினர். ஒரு மாதத்துக்கும் மேலாக அவர்களது நிலை என்னவானது என்பது குறித்து தகவ…
-
- 0 replies
- 202 views
-
-
மலேசியாவுக்கு சென்றார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 26 Oct, 2025 | 11:06 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மலேசியாவுக்கு சென்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 5 நாட்கள் பயணமாக ஆசிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இது அவருடைய முதல் ஆசிய நாடுகள் பயணமாகும். மலேசியாவில் இன்றைய தினம் முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ள ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் தலைநகர் கோலாலம்பூரை சென்றடைந்துள்ளார். அவருக்கு மலேசியா அரசு தரப்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆசியன் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். முன்னதாக கம்போடியா-தாய்லாந்து இடையேயான எல்லை பிரச்சினை…
-
- 2 replies
- 201 views
- 1 follower
-
-
மியான்மரில் ரோஹிஞ்சா பிரச்சனையை அந்நாட்டு அரசு சமாளித்த விதம் குறித்து அதிகரித்துள்ள சர்வதேச கண்காணிப்பு குறித்து தனக்கு அச்சமில்லை என்று மியான்மரின் நடைமுறை தலைவி ஆங் சான் சூச்சி தெரிவித்துள்ளார், எர்மா சூறாவளியிலிருந்து மீண்டு தற்போது மரியா சூறாவளிக்கு தயாராகிவரும் ப்யூட்டோ ரெக்கோ மக்கள் மற்றும் சமோ தீவில் மட்டுமே வாழும் அபூர்வ பறவை ஒன்றுக்கான தீவிர தேடுதல் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 201 views
-
-
200 மில்லியன் டொலர் மதிப்புள்ள வர்த்தக சாம்ராஜ்யத்தைக் கைக்குள் வைத்துள்ள கம்போடியப் பிரதமர் inShare கம்போடிய நாட்டுப் பிரதமரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் குறைந்தது 200 மில்லியன் டொலர் மதிப்புள்ள வர்த்தக சாம்ராஜ்யத்தைக் குவித்துள்ளதாக மனித உரிமைகள் அமைப்பு ஒன்று கூறியுள்ளது. ஊடகம், விவசாயம் மற்றும் எரிசக்தி போன்ற துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது பிரதமர் ஹன் சென் குடும்பத்தாருக்கு தொடர்பு இருப்பதாக கம்போடிய அரசின் சொந்தத் தகவல்களை வைத்தே குளோபல் விட்னஸ் என்ற அமைப்பு கண்டறிந்துள்ளது. 30 ஆண…
-
- 0 replies
- 201 views
-
-
சமூக இடைவெளிகள் சாத்தியமில்லாத பொது இடங்களில் முகக்கவசங்கள் அணிய வேண்டும் – உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சமூக இடைவெளிகள் சாத்தியமில்லாத பொது இடங்களில் முகக்கவசங்கள் அணிய வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸைப் பரப்பக்கூடிய நுண்ணிய உமிழ்நீரை தடுக்கும் ஒரு தடையாக முகக்கவசம் உள்ளது என்பது சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. சில நாடுகள் ஏற்கனவே பொது இடங்களில் முகக்கவசங்களை அணியுமாறு பரிந்துரைத்துள்ளன அல்லது கட்டாயப்படுத்துகின்றன. ஆரோக்கியமான மக்கள் முகக்கவசங்கள் அணிய வேண்டும் என்பதற்கு உரிய ஆதாரங்கள் இல்லை என்று உலக சுகாதார ஸ்தாபனம் முன்பு தெரிவித்திருந்தது. எவ்வாறா…
-
- 0 replies
- 201 views
-
-
தீவிரவாத தாக்குதல்களால் ஈராக்கில் 22 மாதங்களில் 18,800 பேர் பலி 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் ஈராக்கில் 18 ஆயிரத்து 800 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதேவேளை குறித்த காலப்பகுதியில் 36 ஆயிரம் பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் கடந்த வருடம் மே மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 4 ஆயிரம் பேர் பலியானதுடன் 7 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான பேச்சாளர் ரவினா ஷம்தாசனி தெரி…
-
- 0 replies
- 201 views
-
-
தனது சொந்தக்கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்கின்றார் பொறிஸ்ஜோன்சன் - இன்றுவாக்கெடுப்பு பிரிட்டிஸ் பிரதமர் பொறிஸ்ஜோன்சனை பதவியிலிருந்து நீக்குவதா என்பது குறித்த அவரது கட்சியினர் இன்று தீர்மானிக்கவுள்ளனர் இது தொடர்பான இரகசிய வாக்கெடுப்பில் கென்சவேர்ட்டிவ் கட்சியினர் இன்று வாக்களிக்கவுள்ளனர். பார்ட்டிகேட் விவகாரத்தை தொடர்ந்தே பொறிஸ்ஜோன்சனின் தலைமைத்துவத்தின் மீது கேள்வி எழுந்துள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கொரோன வைரஸ் முடக்கல் கால களியாட்ட நிகழ்வுகள் குறித்து சூ கிரே தனது அறிக்கையை வெளியிட்டதை தொடர்ந்து அரசாங்கத்தின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சீற்றம் அதிகரித்து வந்துள்ள நிலையில் பொறிஸ்ஜோன்சனை பதவி விலக்கவேண்ட…
-
- 2 replies
- 201 views
- 1 follower
-
-
உலகின் மிகப்பெரிய அணு மின் நிலையத்தை மீண்டும் ஆரம்பிக்க தயாராகிறது ஜப்பான் Published By: Digital Desk 3 22 Dec, 2025 | 12:02 PM உலகின் மிகப்பெரிய அணு மின் நிலையத்தை மீண்டும் இயங்க ஜப்பானின் நீகாட்டா மாநிலம் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டு ஜப்பானில் நிலநடுக்கமும் சுனாமியும் ஏற்பட்டதால் மூடப்பட்ட அணு மின் நிலையங்களில் டோக்கியோவிலிருந்து சுமார் 220 கிலோமீட்டர் வடமேற்கே அமைந்துள்ள கஷிவஸாகி-கரிவா (Kashiwazaki-Kariwa) அணு மின் நிலையமும் ஒன்றாகும். தற்போது செயல்படக்கூடிய 33 அணு மின் நிலையங்களில் 14 மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கின்றன. புகுஷிமா மின் நிலையத்தை இயக்கிய டோக்கியோ எலக்ட்ரிக் பவர் நிறுவனம் (TEPCO) மீண்டும் காஷிவசாகி–கரிவா அணு மின் நிலையத்தை…
-
- 1 reply
- 201 views
- 1 follower
-
-
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு புதிய வர்த்தகப் போர் அச்சத்துக்கு மத்தியில் தங்கத்தின் விலையானது வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. சீனப் பொருட்கள் மீதான புதிய அமெரிக்க வரிகளுக்கு பதிலடியாக பீஜிங் அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை விதித்ததை அடுத்து இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஸ்பாட் தங்கம் 02.53 GMT மணியளவில் அவுன்ஸ் ஒன்றுக்கு 0.2 சதவீதம் உயர்ந்து 2,848.69 அமெரிக்க டொலர்களாக இருந்தது. முந்தைய நாள் அமர்வில் 2,853.97 அமெரிக்க டொலர்களை எட்டிய பின்னர் தங்கத்தின் விலையானது புதனன்று உச்சத்தை அடைந்தது. அதேநேரம், அமெரிக்க தங்க எதிர்காலம் 0.2 சதவீதம் அதிகரித்து 2,879.70 டொலர்களாக இருந்தது. உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயா…
-
-
- 1 reply
- 201 views
- 1 follower
-
-
கனடா- ஒன்ராறியோவின் மிகவும் செல்வாக்கு மிக்கவர்களில் ஒருவரும் நீண்ட காலம் மேயராக பணிபுரிந்தவருமான ஹேசல் மக்கெலியன் ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தில் பணி ஒன்றை ஏற்றுள்ளார். 94-வயதுடைய இவர் 36-வருடங்கள் மிசிசாகா மேயராக பதவி வகித்து கடந்த நவம்பர் மாதம் இளைப்பாறினார். கல்லூரியின் மூலோபாய வளர்ச்சி தொடர்பான விடயங்களில் பல்கலைக்கழகத்தின் மிசிசாகா பிரிவு அதிபரின் விசேட ஆலொசகராக பணி ஏற்றுள்ளார். இவரது நியமனம் இந்த மாத முற்பகுதியில் ஆரம்பித்து ஒரு வருடங்களிற்கு நீடிக்கும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இவர் புதிய பாடநெறிகளை உருவாக்க உதவுவதோடு பல்கலைக்கழகத்தின் மேலாண்மை மற்றும் கண்டுபிடிப்புக்கள் நிறுவனத்தோடு சேர்ந்து நகர்ப்புற கண்டுபிடிப்பு மற்றும் மேம்பாட்டில் முதுகலை பட்டம் உருவாக…
-
- 0 replies
- 201 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரிட்டன் பிரதமர் கீயர் ஸ்டார்மர் மற்றும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் 16 பிப்ரவரி 2025, 14:32 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். மறுபுறம், ஐரோப்பிய தலைவர்கள் நாளை பாரிஸில் அவசர உச்சி மாநாட்டில் ஒன்றுகூடி இதுகுறித்து விவாதித்து முடிவெடுக்கத் திட்டமிட்டுள்ளனர். யுக்ரேன் மீதான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் உலகளாவிய ராஜ தந்திரத்தில் அதிகார சமநிலையை மாற்றக்கூடும் என்ற அச்சம் ஐரோப்பாவில் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பின்றி அமை…
-
- 0 replies
- 201 views
- 1 follower
-
-
ஐக்கிய அரபு இராச்சியத்திற்குச் செல்லும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 டிரில்லியன் டொலர்களை அமெரிக்க நிறுவனங்களில் முதலீடு செய்ய உள்ளதாக சவுதி அரேபிய அரசு தெரிவித்திருந்த நிலையிலேயே டொனால் ட்ரம்பின் பயண அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் நடந்த நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திடும் விழாவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) மற்றும் சவுதி அரேபியாவுக்குச் செல்லும் திட்டத்தை தெரிவித்தார். ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டபடி மே மாதத்தில் இப் பயணம் நடக்குமா என்று கேட்டபோது, அது அடுத…
-
- 0 replies
- 201 views
-
-
ஆக்கிரமிக்கப்பட்டுவரும் பாலஸ்தீனத்தில் உணவின்றி உயிருக்காகப் போராடிவரும் காசா பகுதி மக்களுக்கு ஐ.நா. முயற்சியால் உலக உணவுத் திட்ட உதவி வழங்கப்படுகிறது. இதில், இஸ்ரேல், அமெரிக்கா வழியாக வழங்கப்படும் உணவுப்பைகளில் போதை மருந்துகளும் சேர்த்து அனுப்பப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் பணியாற்றிவரும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் இதைக் கண்டுபிடித்து வெளி உலகத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். காசா அரசு ஊடகமும் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது. காசா முனைப் பகுதியில் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட நான்கு உணவுப் பைகளில் மாவுக்குள் இந்த போதை மாத்திரைகளை மறைத்துவைத்து அனுப்பியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு, அரசு நிர்வாகத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போரால் பாலஸ்தீனத்தை…
-
-
- 1 reply
- 201 views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு ஆதரவாக முகத்தை மூடி செய்தி வாசித்த ஆண்கள் ஆப்கானிஸ்தானில் வீட்டைவிட்டு பெண்கள் வெளியே வரும்போது உடலை முழுவதும் மூடக்கூடிய வகையில் புர்கா அணிந்தே வரவேண்டும். அவ்வாறு முகத்தை மறைக்காமல் வரும் பெண்களின் தந்தை அல்லது நெருங்கிய ஆண் உறவினர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். அரசாங்க வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என தலிபான் அரசின் தலைவரான ஹிபத்துல்லா அகுந்த்ஸாடா உத்தரவிட்டார். தலிபான்களின் இந்த உத்தரவுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபையும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்து. பலத்த எதிர்ப்புகளுக்கிடையே ஆப்கானில் இந்த பிற்போக்குத்தனமான உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சனிக்கி…
-
- 0 replies
- 201 views
-
-
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 10 மாதங்களில் 13,149 பேர் உயிரிழப்பு அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் கடந்த 10 மாதங்களில் இடம்பெற்ற சிறிய மற்றும் பெரிய துப்பாக்கிச்சசூட்டு சம்பவங்களில் 13,149 பேர் உயிர் இழந்துள்ளனர் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. நேற்றையதினம் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் தேவாலயத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் இந்த புள்ளிவிபர தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 52,385 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் அதில் 13,149 பேர் உயிர் இழந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மக்கள் தமத…
-
- 0 replies
- 201 views
-
-
அமெரிக்க துணை அதிபருடன் ஒலிம்பிக்ஸ் விழாவில் கலந்துகொள்வாரா வட கொரிய அதிகாரி? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP Image captionகிம் யோங்-நாம் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் போது இரு நாடுகள் இடையிலான பதற்றங்களை குறைக்கும் விதமாக, பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது உயர்மட்ட அதிகாரியை தென் கொரியாவுக்கு அனுப்ப உள்ளது வட கொரியா. வட கொரியாவின் விழ…
-
- 1 reply
- 201 views
-
-
நேற்று வெள்ளிக்கிழமை ஈத் தொழுகையின் பின்னர் மோதல்கள் வெடித்துள்ளன இந்திய நிர்வாக காஷ்மீர் பிராந்தியத்தில் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்ட நகரமொன்றில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதற்காக இராணுவத்தினர் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்து எச்சரித்துள்ளனர். பிராந்தியத்தின் முக்கிய நகரான ஸ்ரீநகரிலிருந்து தென்கிழக்காக சுமார் 200 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிஷ்ட்வார் நகரில் இரண்டு சமூகங்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலையடுத்து கிஷ்ட்வார் நகரமெங்கிலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை மூண்ட இந்த மோதல்களில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஈத் தொழுகைக்கு பின்னர் முஸ்லிம்கள்…
-
- 0 replies
- 201 views
-
-
சீனாவின் மெக்னீசியம் கிடைப்பதில் நெருக்கடி – ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கவலை கார்கள், விமானங்கள் மற்றும் இலத்திரனியல் உள்ளிட்ட உற்பத்திகளுக்கு முக்கியமான மூலப்பொருட்களில் ஒன்றான மெக்னீசியத்தினை ஐரோப்பிய நாடுகளுக்கு சீனாவே வழங்கி வருகின்றது. தற்போது சீனாவின் மெக்னீசிய விநியோகப் பற்றாக்குறையால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தொழில்துறைகள் ஆபயகரமான கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக, கொரோனா தொற்றுநோயினால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தொழில்துறை மீட்சியைக் வெகுவாக பாதிக்கும் என்ற அச்சம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தொழிற்துறைக்கு தேவையான மெக்னீசியததில் 95சதவீதமானவற்றை …
-
- 0 replies
- 201 views
-
-
20 நாடுகளில்... 200 பேருக்கு, குரங்கு காய்ச்சல் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு தகவல்! 20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பிரித்தானியா, ஸ்பெயின், போர்துக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்த குரங்கு காய்ச்சலால் ஓரினச்சேர்க்கையாளர்கள், இரு பாலின சேர்க்கையாளர்கள்தான் அதிகளவில் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் பெருந்தொற்று, தொற்று நோய்கள் பிரிவின் இயக்குனர் சில்வி பிரையண்ட் இதுகுறித்து கூறுகையில், ‘எதிர்காலத்தில் இந்த குரங்கு காய்ச்சல் இன்னும் அதி…
-
- 0 replies
- 201 views
-
-
3 ஆவது நாளாக தொடரும் போர் ! உக்ரைனின் தலைநகரை முற்றுகையிட்டது ரஷ்யப் படை மூன்றாவது நாளாக உக்ரைனின் தலைநகரைக் கைப்பற்ற ரஷ்யப் படைகள் போரில் ஈடுபட்டுவருகின்றன. இந்த யுத்தத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துவிட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் பெரும் படைகள் உக்ரைனை முற்றுகையிட்டுள்ளது. ரஷ்ய வீரர்கள் உக்ரைனை மூன்று திசைகளிலும் சுற்றி வளைத்து தலைநகர் கீவ்வை கைப்பற்ற கடுமையான யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாவது நாளான இன்றும் போர் நீடிக்கிறது. பல இடங்களில் குண்டுகள் வெடிக்கின்றன. வானில் இருந்து குண்டு மழை பொழிவதாகவும் தொடர்ந்து துப்பாக்கி மற்றும் பீரங்கிகள் வெடிப்பதாகவும் யுத்தக்களத்தில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்…
-
- 0 replies
- 200 views
-
-
பாலிவுட் நடிகர் சல்மான் கான் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் வரும் மே 6-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று மும்பை விசாரணை நீதிமன்றம் அறிவித்துள்ளது. மதுபோதையில் கார் ஓட்டி, ஒருவர் இறக்கவும், நான்கு பேர் காயமடையவும் காரணமாக இருந்தார் என்று சல்மான் கான் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு மும்பை விசாரணை நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் நேற்றுடன் (திங்கள்கிழமை) வாதங்கள் முடிவடைந்தன. எனினும், ‘இந்த வழக்கில் நேரில் பார்த்த சாட்சியாக இருக்கும் ரவீந்தர் பாட்டீலின் சாட்சியத்தை ஏற்றுக்கொள்ளக் கூடாது. காரணம் அவர் குறுக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை' என்று சல்மானின் வழக்கறிஞர் கூறினார். ஆனால் குறுக்கு விசாரணை செய்வதற்க…
-
- 0 replies
- 200 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். சுதந்திர தேவி சிலை திறந்திருக்கும் படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்காவில் குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் புதிய வரவு செலவுத் திட்டம் குறித்து உடன்பட முடியாததால் அமெரிக்க அரசுத் த…
-
- 0 replies
- 200 views
-