உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26591 topics in this forum
-
//கள்ளச் சாராயம் குடித்த யானை சாவு! அக்டோபர் 05, 2006 கோயம்பத்தூர்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கள்ளச்சாராயத்தை சாப்பிட்ட யானை பரிதாபமாக உயிரிழந்தது. மேட்டுப்பாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி உள்ள கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழை மற்றும் பச்சைப் பயிர்களை சாப்பிட காட்டு யானைகள் வருவது வழக்கம். கோலம்பாளையம் அருகே காலனிப்புதூர் என்ற கிராமத்தில் இதுபோல 13 வயது காட்டு ஆண் யானை புகுந்து வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து சாப்பிட்டது. பின்னர் தண்ணீர் தேடி அலைந்த யானை, அப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராய ஊறல்களை உடைத்து சாராயத்தை குடித்தது. மேலும் சாராயம் காய்ச்ச வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் அது சாப்பிட்டது. …
-
- 35 replies
- 4.7k views
-
-
புகை மூட்டத்தால் மலேசியாவில் இயற்கை வாழ்வு பாதிப்பு கோலாலம்பூர். இந்தோனீசியாவின் போர்னியோ தீவின் காட்டுப் பகுதிகளில் பரவி வரும் காட்டுத் தீ மலேசியாவின் இயற்கை வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு மோசமாகியுள்ளது. மலேசியாவிவ் தற்போது 5 மாநிலங்களில் புகை மூட்டம் போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடமாட்டத்தை பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மலேசியாவின் சரவா மாநிலத்தில் மிதமிஞ்சிய புகை மூட்டத்தால் ஹெலிகாப்டர் சேவை நிறுத்தப் பட்டுள்ளது. அத்துடன், மலேசிய ஏர்லைன்ஸ¬ன் விமானச் சேவையும் தற்காலிகமாக ஒத்திப் போடப்பட்டுள்ளது. சரவாவின் பல இடங்களில் புகை மூட்டத்தின் அளவு 106லிருந்து 188 வரை உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகை மூட்டம் சிங்கப்பூரில், சும…
-
- 0 replies
- 752 views
-
-
இஸ்லாமாபாத்: மத குருமார்களின் உத்தரவை மீறி பட்டப்படிப்பை முடித்த 'குற்றத்திற்காக' பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் பெண்ணையும், அவரது தாயாரையும் 12 நாட்கள் அடைத்து வைத்து மாறி மாறி கற்பழித்த கொடுமை அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் முல்தான் மாவட்டம் கபீர்வாலா என்ற நகருக்கு அருகே உள்ள சக் ஷெர் கான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முகம்மது உசேன். முன்னாள் ராணுவ வீரரான இவரது மனைவி பெயர் மும்தாஜ் மய். இவர்களது மகள் கஜாலா ஷாஹீன் பதி. இவர்கள் மிராலி என்ற பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள். இந்த வகுப்பைச் சேர்ந்த பெண்கள் கல்வி அறிவு பெறக் கூடாது என பழங்குடியின மத குருமார்கள் கட்டுப்பாடு விதித்துள்ளனர். ஆனால் இதை மீறி ரகசியமாக படித்து வந்தார் கஜா…
-
- 9 replies
- 4k views
-
-
புதுடில்லி, ஒக்டோபர் 02 இலங்கையில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்கு இந்தியா தீவிரமான பங்களிப்பைக் கூடுதலாகச் செய்ய முன்வராமல் தவறு இழைத்திருப்பது இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைக்கு நேர்ந்த இமாலயத் தவறாக இருக்கப் போகிறது என்று இந்தியாவின் புலனாய்வு முகவர் நிறுவனமான "றோ'வின் முன்னாள் தலைவரான ஜே.கே. சின்ஹா எச்சரித்திருக்கிறார். இலங்கை விவகாரத்தில் ஒதுங்கியிருந்ததன் மூலம் பெரும் இராஜதந்திரத் தவறை இந்தியா செய்து விட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருக்கிறார். ""இலங்கையின் சமாதான முயற்சிகளில் இந்தியா ஓரமாக ஒதுங்கியிருந்து பார்வை யாளனாக இருப்பதோடு திருப்தியடைந்து விட்டது. இதற்கு விடுதலைப் புலிகள் பற் றிய ஐயமும், அவநம்பிக்கையும் காரணமாக இருக்கலாம்'' என்றும் சின்ஹா குறிப்பிடு கி…
-
- 12 replies
- 2k views
-
-
சத்தியாக்கிரகம் என்ற அகிம்சைக் கோட்பாட்டையும் போராட்ட வடிவத்தையும் மோகனதாஸ் கரம்சந் காந்தி உலகிற்கு அறிமுகம் செய்து நூறு வருடங்கள் கடந்து விட்டன. தென்னாபிரிக்காவில் வாழ்ந்த சகல இந்தியர்களையும் தனியான ஒரு இனக்குழுவாக வகைப்படுத்தி அவர்கள் பதிவு செய்ய வேண்டியதைக் கட்டாயமாக்குவதற்காக இன ஒதுக்கல் வெள்ளையர் ஆட்சியாளர்களினால் கொண்டுவரப்பட்ட சட்டத்தைக் கண்டித்து குரலெழுப்புவதற்காக ஜோஹன்னஸ்பேர்க்கில் 1906 செப்டம்பர் 11 இல் காந்தி நடத்திய எதிர்ப்புக் கூட்டமே சத்தியாக்கிரகத்தின் பிறப்பாக அமைந்தது. பின்னர் அந்த அகிம்சை ஆயுதத்தையே இந்தியாவில் காலனித்துவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான விடுதலைப் போராட்டத்திலும் காந்தி பயன்படுத்தினார். சத்தியாக்கிரகத்தின் நூற்றாண்டு நிறைவை முன்னி…
-
- 0 replies
- 705 views
-
-
இந்திய அணுகுமுறையின் அடிப்படைகளில் மாற்றம்தேவை இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்புக்காக புதுடில்லியில் கடந்த சில தினங்களாகக் காத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழு அவரிடம் கையளிப்பதற்கென்று வைத்திருந்த மகஜரை இந்திய அரசாங்கத்தின் உயரதிகாரிகளிடம் கையளித்து விட்டு நேற்று சனிக்கிழமை ஏமாற்றத்துடன் சென்னை திரும்பியிருக்கிறது. அணிசேரா இயக்க நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு ஹவானாவிலிருந்து நாடு திரும்பியதும் கலாநிதி சிங், இரா. சம்பந்தன் தலைமையிலான ஐவர் கொண்ட தூதுக்குழுவைச் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது என்று நம்பிக்கை கொடுக்கப்படாதிருந்திருந்தா
-
- 80 replies
- 9.2k views
-
-
இந்தியாவைச் சூழும் பேரபாயம், சீனா-பாக்-சிங்களர் கூட்டுச்சதி இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளைப் புதிய வேகத்துடன் தொடர்வதற்காக சீனாவும் பாகிஸ்தானும் இலங்கையுடன் கைகோர்த்து:க் கொண்டு களத்தில் இறங்கியுள்ளன. இந்தியாவுடன் பலவகையிலும் பகைமை பாராட்டி வரும் பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் இணைந்து இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளை சிங்கள அரசு பகிரங்கமாக முடுக்கி விட்டுள்ளது. சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடமிருந்து ஏராளமான ஆயுதங்களையும் இராணுவ ரீதியான உதவிகளையும் சிங்கள அரசு பெற்று வருகிறது. இதற்குக் கைமாறாக அவை இலங்கையைத் தளமாகக் கொண்டு இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட சிங்கள அரசு ஒப்புதல் தந்துள்ளது. பாகிஸ்தான் இந்தியாவில் உள்ள பல்வேறு நாடுகளின் தூதரகங…
-
- 0 replies
- 711 views
-
-
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கடைசி நேரத்தில் கலைஞரின் காலை வாரிவிட்டு "தவிர்க்க முடியாத" காரணத்தால் போகாத இடம் சென்றீர்களே! நீங்கள் நினைத்த மரியாதை கிடைத்ததா? கறுவேப்பிலை மாதிரி தானே உங்களையும் உங்கள் தொண்டர்களையும் நீங்கள் நாடிச்சென்றவர்கள் பயன்படுத்துகிறார்கள்? தோழர் திருமாவளவனுக்கு இருக்கும் சுயமரியாதையில் கிஞ்சித்தும் உங்களுக்கு கிடையாதா? நீங்கள் கூட்டணியில் இருக்கும் இயக்கத்துக்கும், உங்கள் இயக்கத்துக்கும் எந்தெந்த கொள்கைகளில் ஒத்தக் கருத்து உண்டு என்று விளக்க முடியுமா? பொடா சட்டம் ஆகட்டும், ஈழத்தமிழர் பிரச்சினை ஆகட்டும் எதில் நீங்கள் ஒத்துப் போகிறீர்கள் என்று சொல்ல முடியுமா? உங்கள் இயக்கத்தின் கருத்துக்களை ஒத்தக் கருத்துக் கொண்டவர்கள் ஓரணியில் திமுக கூட்டணிய…
-
- 46 replies
- 6.8k views
-
-
இலங்கையில் பேச்சுவார்த்தை தொடர வேண்டும்: தமிழக முதல்வரை சந்தித்த பிறகு அமெரிக்க தூதுவர் கருத்து சென்னை: இலங்கை பிரச்னை குறித்து முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்திய அமெரிக்க தூதுவர் டேவிட் முல்போர்டு, இலங்கையில் அமைதி பேச்சுவார்த்தை தொடர வேண்டுமென்று வலியுறுத்தினார். இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவர் டேவிட் முல்போர்டு, சென்னை துணை தூதரகத்தின் கான்சல் ஜெனரல் டேவிட் ஹூப்பர் ஆகியோர் முதல்வர் கருணாநிதியை அவரது வீட்டில் நேற்று காலை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது தலைமைச் செயலர் திரிபாதியும் உடன் இருந்தார். சந்திப்புக்கு பின் டேவிட் முல்போர்டு நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவின் மூத்த தலைவர் என்பதாலும், மதிப்புக்குரியவர் என்பதாலும் நட்புணர்வோடு ம…
-
- 1 reply
- 901 views
-
-
பிரேசில் நாட்டில் 2 விமானங்கள் நடுவானில் மோதல்: பிரேசில் நாட்டின் கோல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஜெட்விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு மனாஸ் நகரில் இருந்து புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 140 பயணிகள் இருந்தனர். அந்த விமானம் பரா மாநிலத்தில் உள்ள சீரா டி.கேக்சிம்போ பகுதிக்கு மேலே சென்று கொண்டிருந்த போது வானிலை மிகவும் மோசமாக இருந்தது. அப்போது அந்த ஜெட் விமானம் இன்னொரு விமானம் மீது மோதியது. இதில் இன்னொரு விமானம் நிலை தடுமாறியது. அந்த விமானத்தை விமானி அருகில் உள்ள வயல் வெளியில் அவசரமாக தரை இறக்கி விட்டார். இதனால் அந்த விமானம் தப்பியது. 140 பயணிகளுடன் சென்ற ஜெட் விமானம் என்ன ஆனது என்பது தெரியாமல் இருந்தது. அமேசான் காட்டுப்பகுதியில் அந்த வ…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஸ்ரீவித்யாவுக்கு புற்றுநோய்: உயிருக்குப் போராடுகிறார்! நடிகை ஸ்ரீவித்யா புற்று நோயால் பாதிக்கப்பட்டு கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது. ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் கொடி கட்டிப் பறந்தவர் ஸ்ரீவித்யா. சிவாஜி கணேசன், ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ஏராளமான படங்களில் நடித்துள்ள ஸ்ரீவித்யா, மறைந்த கர்நாடக இசைப் பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் மகள் ஆவார். ஸ்ரீவித்யா கடந்த 2 ஆண்டுகளாகவே வெளியில் எங்கும் காண முடியவில்லை. படங்களிலும் அவர் நடிக்கவில்லை. மலையாள டிவி தொடர் ஒன்றில் நடித்து வந்த அவர் அதிலிருந்தும் விலகி விட்டார். அத்தொடரும் நி…
-
- 1 reply
- 915 views
-
-
பாண்டிச்சேரி புதுச்சேரி ஆனது பாண்டிச்சேரியின் பெயரை அதன் பழைய பெயரான புதுச்சேரி என்று இன்று மாற்ற்ம் அடைந்துள்ளது
-
- 0 replies
- 795 views
-
-
பாதுகாப்பான உபகரணங்களைக் கோரும் பாகிஸ்தானிய சுத்திகரிப்பு ஊழியர்கள் இஃபான் அஹமட் பாகிஸ்தானின் வடிகால் சுத்திகரிப்பு கடமையின் போது பலர் மரணமடைவதால் அப்பணி அந்நாட்டில் மிக்க அபாயகரமான தொழிலாக மாறிவருகிறது. லாஹூர் நகரின் கவல்மண்டி பகுதியில் நீர், சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் மே மாதம் 18 ஆம் திகதி வடிகாலுக்குள் சுத்திகரிப்பு கடமையில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்தார்கள். மூன்று பேரையும் வடிகாலுக்குள் இறங்குமாறு அவர்களது மேற்பார்வையாளர் கேட்டபோது அவர்களிடம் அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் இருக்கவில்லை. முதலில் வடிகாலுக்குள் இறங்கிய 42 வயதான பேர்வேஸ் மாஸிஹ் நச்சுக் காற்றை சுவாசித்ததால் மயக்கமுற்று வீழ்ந்தார். 26 வயதான அடில் மஸீஹ், 30 வயதா…
-
- 1 reply
- 806 views
-
-
அதிமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் விலகி உள்ளார். இன்று மாலை கருணாநிதியை சந்தித்து திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். திருமாவளவன் விலகி விடுவார் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. தற்பொழுது உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் ஜெயலலிதா விடுதலை சிறுத்தைகளுக்கு 4 வீதம் மட்டுமே ஒதுக்கியதால் கடும் அதிருப்தி அடைந்த திருமாவளவன் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி உள்ளார்
-
- 7 replies
- 1.7k views
-
-
புதிய உலக ஒழுங்கு பற்றி இப்போது அதிகம் பேசப்படுகின்றது. சோவியத் சிதைந்து, வல்லாதிக்கப் பனிப்போர் முடிவுற்ற இந்தச் சூழ்நிலைப் பின்னணியில், உலக ஒழுங்கு இனி எப்படி அமையப் போகின்றது என்பது இன்றைய கேள்வியாக உள்ளது. இரண்டாவது உலகப் போர் முடிவுக்கு வந்தபோது ஒரு புதிய உலக ஒழுங்கு உருவானது. உலகத்து மனிதர்கள் நாடுகள் தமக்குள் பேரழிவு தரும் கொடூரப் போரை இரண்டாவது தடவையாகப் புரிந்து, நினைத்துப் பார்க்க முடியாத நாசங்களைப் பூமிக்கோளத்துக்கு ஏற்படுத்தி, அடங்கியபோது அந்தச் சிதைவுகளிலிருந்து சிதிலங்களிலிருந்து மற்றொரு உலக ஒழுங்கு உருவெடுத்தது. பூமியையே கட்டுப்பாட்டில் கொண்டு வரும் அதீத அவாவுடனும், ஆசையுடனும், ஆவலுடனும் போர் வெறியில் குதித்த நாஸி அரக்கன் அந்த இரண்டாம் உலகப்போருடன் களத்த…
-
- 0 replies
- 4.7k views
-
-
அல் கைடா தலைவர் ஒசாமா பின் லேடன் சுகவீனம் காரணமாக கடந்த மூன்று கிழமைகளுக்கு முன் மரணமடைந்தார் என உறுதிப்படுத்தபடாத செய்திகள் வெளியாகி இருக்கின்றன மேலதிக செய்திகளை எதிர்பார்க்கிறேன்.
-
- 4 replies
- 1.5k views
-
-
பிரதமருடன் இலங்கை தமிழ் எம்.பிக்கள் சந்திப்பு செப்டம்பர் 21, 2006 டெல்லி: இலங்கையிலிருந்து வந்துள்ள தமிழ் எம்.பிக்கள் குழுவினர் இன்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்துப் பேசுகின்றனர். இலங்கையிலிருந்து தமிழ் தேசிய கூட்டணியைச் சேர்ந்த எம்.பிக்கள் சம்பந்தம், சேனாதி ராஜா, கஜேந்திர குமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் அடங்கிய எம்.பிக்கள் குழு இந்தியா வந்துள்ளது. டெல்லி வந்துள்ள இந்த எம்.பிக்கள் வெளியுறவுத்துறை இணையமைச்சர் அகமது, வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சிவசங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் ஆகியோரை சந்தித்துப் பேசினர். பின்னர் செய்தியாளர…
-
- 19 replies
- 3.8k views
-
-
பாலை ஊற்றி பாம்பை வளர்த்தாலும் அது பாய்ந்து கொத்தும்" என்பது ஆன்றோர் வாக்காகும். சிங்கள அரசைப் பொறுத்தவரை இது முழுக்க முழுக்க உண்மையாகிவிட்டது. சிங்கள அரசுக்கு இந்தியா எத்தனையோ உதவிகளைச் செய்திருக்கிறது. இராணுவ ரீதியான உதவிகள் வளர்ச்சித்திட்டங்களுக்கான நிதிஉதவிகள் வணிக ரீதியான சலுகைகள் இன்னும் எத்தனையோ வகையில் சிங்கள அரசைத் திருப்திப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு இந்திய அரசு செயல்பட்டுவந்திருக்கிறது. இலங்கை சுதந்திரம்பெற்றவுடன் 1949ம் ஆண்டில் இந்திய வம்சா வழியில் வந்த மலையகத் தமிழர்களின் குடியுரிமையை சிங்கள அரசு பறித்தது. பல தலைமுறைகளாக உழைத்து இலங்கையில் ரப்பர் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கியவர்களை விரட்டியடித்தது. ஆனால் இந்தியா எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை…
-
- 0 replies
- 890 views
-
-
ஈழப்பிரச்சினையும் தமிழக ஊடகங்களும் மாற்றத்துக்குக் காரணம் ஆட்சி மாற்றமா? -பொ.ஐங்கரநேசன்- ஈழப்போராட்டத்துக்குத் தமிழ்நாட்டு மக்களிடையே பெருகி வரும் ஆதரவு தமிழ்நாட்டு ஊடகங்களையும் தவிர்க்க இயலாமல் ஆதரவு நிலைப்பாட்டுக்கு மாற்றி வருகிறது ! பேராசிரியர் கு.அரசேந்திரன் (சென்னை கிறித்துவக் கல்லூரி) தமிழ்த்தேசியக் கொள்கை பேசிய திராவிட இயக்கங்கள் இந்திய அரசியலில் கரைந்துபோன காரணத்தால் தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவாகத் தமிழ்நாட்டில் போராட்டம் நடத்த முன்வரவில்லை. பார்ப்பனர்கள் கைகளில் சிக்கியுள்ள ஊடகங்களும் ஈழப்பிரச்சினையை இருட்டடிப்புச் செய்யவே விரும்புகின்றன. இந்த இரு நிலைகளையும் தாண்டித் தமிழீழ மக்களின் துன்பங்கள,விடுதலைப் போராட்ட வெடிப்புகள். தமிழ்நாட்டு ஊடகங்களில் சில …
-
- 31 replies
- 4.7k views
-
-
குண்டு வீச்சினை எதிர்கொள்ள தயாராயிருங்கள், கற்காலத்திற்கு செல்வதற்கு தயாராகயிருங்கள் என ரிச்சட் ஆர்மிட்டேஜ் குறிப்பிட்டதாக புலனாய்வு அதிகாரியொருவர் தெரிவித்தார் என முஷாரவ் குறிப்பிட்டுள்ளார். நான் இதனை மிகவும் கடுமையான வார்த்தை பிரயோகமாக கருதுகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தலிபானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மறுத்தால் பாகிஸ்தானை தாக்குவோமென அமெரிக்கா எச்சரித்தது [23 - September - 2006] முஷாரவ் கூறுகிறார் செப்டெம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் தலிபானிற்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் ஒத்துழைக்க மறுத்தால் அந்த நாட்டின் மீது விமானத் தாக்குதலை மேற்கொள்ளப் போவதாக அமெரிக்கா எச்சரித்ததாக ஜனாதிபதி பெர்வெஸ் முஷாரவ் குறிப்பிட்டுள்ளார். சி.பி.எ…
-
- 0 replies
- 768 views
-
-
ஈரக் காற்று வீசுகிற நீலாங்கரை இல்லம்! இந்தியில்'சினிமா' என்தலைப்பிலேயே ஒரு சினிமா இயக்கிக்கொண்டு இருக்கிறார் பாரதிராஜா. ''என்னோட 28 வருஷசினிமா வாழ்க்கையில், இப்படி சாத்விகமாக உட்கார்ந்து ஒரு படம் நான் செய்ததில்லை. 'பதினாறு வயதினிலே', 'சிகப்பு ரோஜாக்கள்' ரெண்டுக்குப் பிறகு, இது நானே எழுதின கதை. ஒரு சினிமா டைரக்டரின் வாழ்க்கையில் நடக்கிற கதை. இதில் நானே நடிச்சிரலாம்னு முதல்ல நினைச்சேன். இது என் சொந்தக் கதைன்னு நினைச்சுடுவாங்க. அது ஒரு பிரச்னை. அதனால்,மனசில் பட்டவர்நானா படேகர். பெரிய ஞானஸ்தன். விதையைப் போட்டால், விருட்சமா வெளிச் சமா வெளியே வருவான். எனக்கே வித்தை காட்டுவான். தெரிஞ்சு கையாண்டால், மகா நடிகன். ரஜினி,கமல், சிவாஜி வரைக்கும்சகஜமா கொண்டுவந்திருக்கேன். இப்ப…
-
- 25 replies
- 6.1k views
-
-
நியூயார்க்: ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பங்கேற்க வந்த இரான் அதிபர் அஹமதிநிஜாதும், வெனிசுவேலா அதிபர் சாவேசும் அமெரிக்காவை மிகக் கடுமையாக விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை சாத்தான் என்று வர்ணித்துள்ளார் ஹூயுகோ சாவேஸ். மேலும் ஐ.நா. சபை இப்போது அமெரிக்காவின் முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதால் அதனால் ஒரு பயனும் இல்லையென்றும், ஒரு வெட்டியான அமைப்பாக ஐ.நா. இருப்பதாகவும் தாக்கியுள்ளார். அதே போல இரான் அதிபர் அஹமதிநிஜாதும் அமெரிக்காவை வாரிவிட்டுச் சென்றுள்ளார். நியூயார்க் வந்துள்ள அகமதிநிஜாத் ஐ.நா. தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். பேட்டி தொடங்குவதற்கு முன்பு திருக்குரானிலிருந்து சில வாசகங்கள் வாசிக்கப்பட…
-
- 2 replies
- 1.2k views
-
-
வாணியம்பாடி: மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன், ஆத்திரத்தில் அவரது உதட்டைக் கடித்து துப்பிய சம்பவம் வாணியம்பாடியில் நடந்தது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள வன்னியநாதபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி ஜானகி. இவர்களுக்கு கல்யாணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. இந் நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்தார் வெங்கடேசன். இதுதொடர்பாக இருவரும் அடிக்கடி சண்டை போட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவும் சண்டை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன், தனது மனைவியின் உதட்டை ஆவேசமாக கடித்து துப்பினார். வலியால் துடித்த ஜானகி பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீஸார் வெங்கடேசனை கைது செய்துள்ளனர். அன்பில் மனைவியின் உதட்டைக் …
-
- 8 replies
- 2.1k views
-
-
கிளின்டன் உலகளாவிய முன் முயற்சியின் இரண்டாவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று நியூயோர்க் செல்கிறார். கிளின்டன் உலகளாவிய முன் முயற்சி'யின் மாநாடு இன்று 20 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நியூயோர்க் நகரில் இடம்பெறுகிறது. இம் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு திருமதி குமாரதுங்க உட்பட தனித்துவமும் அர்ப்பணிப்புணர்வும் உடைய உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அரசாங்கத் தலைவர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், கல்விமான்கள் ஆகியோர் மாநாட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பிரத்தியேகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக இந்த மாநாட்டில் கருத்துப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படும…
-
- 3 replies
- 1.4k views
-
-