Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பட மூலாதாரம்,BBC/ HOSU LEE கட்டுரை தகவல் எழுதியவர்,ஜீன் மெக்கன்ஸி பதவி,பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆற்றை கடக்க முயற்சி செய்த சோங்மி பார்க், கரையின் விளிம்பில் தனது கால் மூலம் குழியை தோண்டினார். அந்த ஆறு மிக ஆழமானது, நீரோட்டமும் வேகமாக இருந்தது. ஒருவேளை அவர் பிடிபட்டால் நிச்சயம் அவருக்கு தண்டனை விதிக்கப்படும். சொல்ல முடியாது, அவர் சுட்டுக் கொல்லப்படவும் வாய்ப்பு உள்ளது. அவரிடம் பயம் இருந்தது. ஆனால், பயத்தை போக்கும் வலிமையையும் அவர் தனக்குள் உணர்ந்தார். தன்னை சிறுவயதிலேயே விட்டுச் சென்ற தாயை தேடி வட கொரியாவை விட்டு செல்ல அவர் முயற்சி செய்துகொண்டிருந்தார். அந்தி சாயும் நேரத்தில் பனிக்கட…

  2. Published By: SETHU 06 APR, 2023 | 04:57 PM அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் எவ் கென்னடியின் சகோதரரின் மகனான ரொபர்ட் எவ் கென்னடி ஜூனியர் எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார். 1963 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஜனாதிபதி ஜோன் எவ் கென்னடியின் சகோதரர்களில் ஒருவர் ரொபர்ட் எவ் கென்னடி. அமெரிக்க சட்ட மா அதிபராகவும் செனட்டராகவும் பதவி வகித்த ரொபர்ட் எவ் கென்னடியும் 1968 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக்க கட்சியின் வேட்பாளராகுவதற்கான போட்டியிடுவதற்கான உட்கட்சித் தேர்தலில் பங்குபற்றிய வேளையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், ரொபர்ட் எவ் கென்னடியின் மகனான ரொபர்ட் எவ் கென்னடி ஜூனியர் அடுத்த …

  3. கொவிட்19 மூலத்தை வெளிப்படுத்தக்கூடிய மேலும் தரவுகள் சீனாவிடம் உள்ளன: WHO Published By: Sethu 07 Apr, 2023 | 09:52 AM கொவிட் 19 நோயின் மூலம் குறித்த விபரங்களை வெளிப்படுத்தக்கூடிய மேலும் தரவுகள் சீனாவிடம் உள்ளது என தான் நம்புவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசுஸ் ஜெனீவா நகரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில்இவ்வாறு கூறியுள்ளார். 'சம்பந்தப்பட்ட தகவல்களை சீன உடனடியாக பகிர்ந்துகொள்ள வேண்டும். சீனாவிடம் உள்ள அனைத்து தகவல்களையும் முழுமையாக அணுக முடியாவிட்டால் அனைத்து அனுமானங்களும் தொட…

  4. Published By: SETHU 06 APR, 2023 | 03:25 PM தாய்வானைச் சுற்றியுள்ள கடல்பகுதிகளுக்கு தனது போர்க் கப்பல்களை சீனா இன்று அனுப்பியுள்ளது. அமெரிக்காவின் பாராளுமன்ற சபாநாயகரை தாய்வான் ஜனாதிபதி சந்தித்தமைக்கு வலிமையான உறுதியான பதில் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக சீனா கூறியுள்ள நிலையில் இப்போர்க்கப்பல்கள் தாய்வானுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தாய்வான் ஜனாதிபதி சான் இங் வென், அமெரிக்காவின் பாராளுமன்ற சபாநாயகர் கெவின் மெக்கர்த்தியை லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார். இதுபோன்ற சந்திப்புகளுக்கு சீனா கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கரின் அப்போதைய சபாநாயகர் நான்சி …

  5. அரேபியா நாடுகள், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளாலேயே மசகு எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகின்றன. மசகு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் அரேபிய நாடுகள் ஒபெக் என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் மசகு எண்ணெய் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்த கூட்டமைப்பு மசகு எண்ணெய் உற்பத்தி செய்யும் அளவையும் நிர்ணயிக்கின்றன. இந்நிலையில்,மசகு எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க உள்ளதாக ஒபெக் நாடுகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதன்படி, மசகு எண்ணெய் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ள சவுதி அரேபியா நாளாந்த மசகு எண்ணெய் உற்பத்தியை 5 இலட்சம் பீப்பாய்களாக குறைக்க உள்ளது. வரும் மே மாதம் முதல் இந்த ஆண்டு இறுதி வரை நாளாந்தம் 5 இலட்சம் பீப்பாய்கள் மாத்திரமே மசகு எண்ணெய் உற்பத்தி செய்யவுள்ள…

  6. Published By: RAJEEBAN 06 APR, 2023 | 11:05 AM நியுசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் எழுச்சியூட்டும் உரையுடன் அரசியலில் இருந்து விடைபெற்றுள்ளார். மேதாவிகள் கூக்குரலிடுபவர்கள் மற்றும் கட்டியணைப்பவர்களும் ஒரு நாள் தலைமை தாங்க முடியும் என அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார். நீங்கள் கவலையடைந்தவராக உணர்வுபூர்வமானவராக இரக்கமுள்ளவராக காணப்படலாம்,நீங்கள் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துபவராக இருக்கலாம்,நீங்கள் ஒரு தாயாகயிருக்கலாம் அல்லது அவ்வாறு இல்லாமல் இருக்கலாம்,நீங்கள் ஒரு மேதாவியாக கட்டித்தழுவுபவராக அழுபவராகயிருக்கலாம் ஆனால் நீங்களும் ஒரு நாள் தலைமை தாங்க முடியும் என கண்ணீருடன் அ…

  7. டொனால்ட் டிரம்ப் மன்ஹாட்டன் கிராண்ட் ஜூரியால் குற்றம் சாட்டப்பட்டார், இந்த விஷயத்தை நன்கு அறிந்த பல ஆதாரங்களின்படி - அமெரிக்க வரலாற்றில் தற்போதைய அல்லது முன்னாள் ஜனாதிபதி கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது இதுவே முதல் முறை. முத்திரையுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வரும் நாட்களில் அறிவிக்கப்படும். இந்த நேரத்தில் குற்றச்சாட்டுகள் பகிரங்கமாக அறியப்படவில்லை, ஒரு ஆதாரம் CNN இடம் கூறினார். மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் ஆல்வின் பிராக்கின் அலுவலகம் டிரம்பின் வழக்கறிஞர்களை அணுகி, அவர் சரணடைவதைப் பற்றி விவாதிக்கும். https://www.cnn.com/2023/03/30/politics/donald-trump-indictment/index.html

  8. உலகம் முழுவதும் 30 கோடி பேரின் தொழில் ஆபத்தில்! தொடர்ந்து வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் 300 மில்லியன் மனிதர்களுக்கு வேலை இழப்பை ஏற்படுத்தும் என என்று சமீபத்திய ஆய்வு காட்டுகிறது. உலகப் பொருளாதார மன்றத்தின் அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டுக்குள், வாகனத் துறையில் 85 மில்லியன் வேலைகள் செயற்கை நுண்ணறிவால் இல்லாமலாக்கப்படும். எதிர்காலத்தில், செயற்கை நுண்ணறிவு ஆரோக்கியம், இசை மற்றும் மருத்துவத் துறைகளிலும் பயன்படுத்தப்படும். இதனால் பெரும்பாலோர் வேலை இழப்பார்கள் என ஆய்வு அறிக்கை கூறுகிறது. செயற்கை நுண்ணறிவு காரணமாக சுமார் 300 மில்லியன் பேர் வேலைகள் இழக்கும் அபாயம் இருந்தாலும், செயற்கை நுண்ணறிவு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் சாத்தியம் உள்ளதாகவும…

  9. ஆபாசப்பட நடிகை தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது. இதற்கான குற்றப்பத்திரிகையில் குறைந்தது ஒரு டஜன் குற்றச்சாட்டுகள் இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக ட்ரம்ப் மீது 30க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக "வழக்கு குறித்து நன்கு அறிந்த" இரண்டு நபர்கள் தெரிவித்ததாக அமெரிக்கா செய்தி தொலைக்காட்சியான சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது. நியூயார்க் டைம்ஸ் ட்ரம்ப் மீது இரண்டு டஜனுக்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக, மேலும் இரண்டு பெயரை குறிப்பிட விரும்பாத…

  10. சீனா – ரஸ்யா உறவு அமெரிக்காவின் வியூகங்களின் தோல்வி – பொம்பியோ March 26, 2023 சீனாவுக்கும் ரஸ்யாவுக்குமிடையில் ஏற்பட்டுவரும் நெருக்கமான உறவுகள் அமெரிக்காவின் படைத்துறை மற்றும் அரசியல் வியூகங்களுக்கு கிடைத்த மிகப்பெரும் தோல்வியாகும் என அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். இந்த தோல்வியை மறைப்பதற்கே வெள்ளை மாளிகை இந்த விடயத்தை அடக்கி வாசிக்கின்றது என சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் ரஸ்யாவுக்கான 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்ட கடந்த புதன்கிழமை (22) பொம்பியோ இந்த கருத்தை அமெரிக்காவின் ஊடகத்திற்கு தெரிவித்திருந்தார். இந்த பயணத்தின் போது சீனாவும் ரஸ்யாவும் பெருமளவான வர்த்தக உடன்பாடுகளை மேற்கொண்டதுடன்…

    • 64 replies
    • 4.5k views
  11. நேட்டோவில் புதிய அங்கத்தவராகிறது பின்லாந்து ; துருக்கி அங்கீகாரம் Published By: Sethu 31 Mar, 2023 | 05:11 PM நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைவதற்கு துருக்கியின் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்மூலம் நேட்டோவின் 31 ஆவது அங்கத்தவராக பின்லாந்து விரைவில் இணையவுள்ளது. ரஷ்யாவின் எல்லையில் பின்லாந்து அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நேட்டோவில் புதிய அங்கத்தவர்கள் இணைவதற்கு அதன் 30 அங்கத்துவ நாடுகளும் இணக்கம் தெரிவிக்க வேண்டும். பின்லாந்தும் அதன் அயல் நாடான சுவீடனும் கடந்த மே மாதம் நேட்டோவில் இணைவதற்கு விண்ணப்பித்தன. அணிசேரா கொள்கையை கொள்கைய…

  12. நேட்டோ நட்பு நாடுகளின் எல்லைகளுக்கு அருகில் தந்திரோபாய அணு ஆயுதங்களை நிலைநிறுத்த ரஷ்யா தீர்மானம்! நேட்டோ நட்பு நாடுகளின் எல்லைகளுக்கு அருகில் தந்திரோபாய அணு ஆயுதங்களை நிலைநிறுத்த ரஷ்யா தீர்மானித்துள்ளது. மேற்கு நாடுகளுடன் தொடர்ந்து பதற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், பெலாரஸ் நாட்டின் ரஷ்ய தூதர் போரிஸ் கிரிஸ்லோவ் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த அறிவிப்பை வெளியிட்டார். பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நாட்டின் மேற்கு எல்லைக்கு ஆயுதங்கள் நகர்த்தப்படும் என போரிஸ் கிரிஸ்லோவ் தெரிவித்தார். ஆயுதங்கள் எங்கு நிலைநிறுத்தப்படும் என்பதை சரியாகக் குறிப்பிடாமல், ஜூலை 1 ஆம் திகதிக்குள் இதற்கான பணிகள் நிறைவடையும் என கிரிஸ்லோவ் மேலும் தெரிவித…

  13. பின்லாந்து நாடாளுமன்றத் தேர்தல்: மத்திய வலதுசாரி தேசிய கூட்டணி கட்சி வெற்றி! பின்லாந்தில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், முக்கிய கன்சர்வேடிவ் கட்சியான மத்திய வலதுசாரி தேசிய கூட்டணி கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் வெற்றிபெற்றுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், மத்திய வலதுசாரி தேசிய கூட்டணி கட்சி (என்சிபி) 20.8 சதவீத வாக்குகளுடன் முதலிடம் பிடித்தது. அவர்களைத் தொடர்ந்து வலதுசாரி ஜனரஞ்சகக் கட்சியான தி ஃபின்ஸ் 20.1 சதவீதத்துடன், பிரதமர் சன்னா மரின் சமூக ஜனநாயகக் கட்சியினர் 19.9 சதவீதத்தைப் பெற்றனர். முதல் மூன்று கட்சிகளும் தலா 20 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், எந்தக் கட்சியும் தனித்து ஆட்…

  14. உத்தியோகபூர்வ சாதனங்களில் இருந்து டிக்டொக் செயலி நீக்கம் - கனடா அறிவிப்பு Published By: T. SARANYA 28 FEB, 2023 | 09:49 AM உத்தியோகபூர்வ சாதனங்களில் இருந்து டிக்டொக் செயலி நீக்கப்படுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. இணையப் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளதால் குறுகிய வடிவ வீடியோ பயன்பாடான டிக்டொக் செயலியை உத்தியோகபூர்வ மின்னணு சாதனங்களிலிருந்து நீக்கப்படுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியாகி உள்ள சி.என்.என். அறிக்கையின்படி, "டிக்டொக் செயலியை அதிகாரப்பூர்வ மின்னணு சாதனங்களிலிருந்து நீக்கப்படுவதாகவும், டிக்டொக் செயலிக்கான தடை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமுலுக்கு வருகிறது" என…

  15. உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் புதிய வெளியுறவுக்கொள்கையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ளார். மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தை குறைக்கும் வகையில் விளாடிமிர் புடின் இந்த புதிய வெளியுறவுக்கொள்கையை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி, எதிர்காலத்தில் சீனாவும், இந்தியாவும் ரஷ்யாவின் முக்கிய கூட்டணி நாடுகளாக இணைத்து ரஷ்ய கூட்டமைப்பை திட்டமிடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்கு அழைப்பு ஐரோப்பிய சந்தைகளில் இருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ள இந்தியாவுக்கும், சீனாவுக்கும் ரஷ்யா எரிசக்தி விநியோகத்தை வழங்கி வருகின்றது. இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கைக்கு இந்தியாவும், சீனாவ…

    • 38 replies
    • 1.9k views
  16. பக்முட் ரஷ்யா வசம்? உக்ரைன் மறுப்பு! உக்ரைனில் உள்ள பக்முட்டின் நகர மண்டபத்தின் மீது ரஷ்யக் கொடியை உயர்த்தியதாகக் ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் அறிவித்துள்ளார். இருப்பினும், உக்ரைனியப் படைகள் இன்னும் மேற்கு மாவட்டங்களில் குவிக்கப்பட்டிருப்பதாக அவர் ஒப்புக்கொண்டார். உக்ரைன் இந்த காணொளியை ஒரு சோடிக்கப்பட்டது என்று நிராகரித்தது மற்றும் அதன் இராணுவம் இன்னும் பக்முட்டை தன்னகத்தே வைத்திருப்பதாக தெரிவித்துள்ளது. பல மாதங்களாக ரஷ்யா கைப்பற்ற முயற்சித்துவரும் கிழக்கு நகரமான பக்முட் மீதான தாக்குதலை நிறுத்தவில்லை என உக்ரைனின் ஆயுதப் படைகளின் பொதுப் பணியாளர்கள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, ரஷ்ய …

  17. உக்ரேனிற்கு எதிரான யுத்தத்தில் ரஷ்யாவை ஆதரித்த பிரபல புளொக்கர் குண்டுவெடிப்பில் பலி Published By: Rajeeban 03 Apr, 2023 | 11:23 AM ரஷ்யாவின் சென்பீட்டர்ஸ்பேர்க் சதுக்கத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ரஷ்யாவின் பிரபலமான யுத்தபுளொக்கர் விளாட்லன் டார்டட்ஸ்கி கொல்லப்பட்டுள்ளார். உக்ரேன் யுத்தத்துடன் தொடர்புபட்ட நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட இரண்டாவது சம்பவம் இது என தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த குண்டுவெடிப்பில் 25 பேர் காயமடைந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் 25 பேர் காயமடைந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பிற்கு யார் காரணம் என்ற விபரங்கள் இதுவரை வெ…

  18. Published By: T. SARANYA 03 APR, 2023 | 09:52 AM கடுமையான காய்ச்சல், தலைவலி, இரத்தக் கசிவை ஏற்படுத்தி உயிரைக் கொல்லும் தீவிர தன்மை உடைய, 'மார்பர்க் வைரஸ்' ஆபிரிக்காவில் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆபிரிக்க நாடுகளுக்கு செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி, அமெரிக்காவின் சி.டி.சி., எனப்படும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எச்சரித்துள்ளது. மேற்கு ஆபிரிக்க நாடான கினியில், மார்பர்க் வைரஸ் பரவல் இருப்பது கடந்த பெப்ரவரி மாதம் கண்டறியப்பட்டது. இதுவரை ஒன்பது பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதை உலக சுகாதார ஸ்தாபனம் உறுதி செய்துள்ளது. மேலும், 20 பேருக்கு அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆபிரி…

  19. பட மூலாதாரம்,SPUTNIK/PAVEL BEDNYAKOV/POOL VIA REUTERS 2 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேன் போர்க்குற்றம் தொடர்பான வழக்கில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த மார்ச் 17-ம் தேதியன்று பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. சர்வதேச அரசியலில் இது முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. யுக்ரேனில் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள பிராந்தியத்தில் இருந்து குழந்தைகளை வலுக்கட்டாயமாக ரஷ்யாவுக்கு அனுப்பினார் என்பது புதின் மீதான குற்றச்சாட்டு. ரஷ்யாவின் குழந்தைகள் நல ஆணைய தலைவர் மரியா லோவா-பெலோவாவுக்கும் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. யுக்ரேனில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்…

  20. வடகொரியாவுக்கு உணவு வழங்கி ஆயுதங்களை ஈடாக பெறும் ரஷ்யா- அமெரிக்கா குற்றச்சாட்டு உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவுக்கு அதன் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான வடகொரியா ஆயுதங்களை வழங்கி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் வடகொரியா அதை திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் சர்வதேச நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் காரணமாக வடகொரியாவில் கடுமையான உணவு பஞ்சம் நிலவி வரும் சூழலில், ரஷ்யா வடகொரியாவுக்கு உணவு பொருட்களை வழங்கி அதற்கு ஈடாக ஆயுதங்களை பெற முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கொள்கையின் செய்தி தொடர்பாளர் ஜோன் கெர்பி கூறுகையில், “வடகொரியாவுக்கு ஒரு பிரதிநிதிகள் குழு அனுப்ப ரஷ்ய…

  21. மகாராஷ்டிராவில் நடந்த வங்கிக் கொள்ளையின் பின்னணியில் வட கொரியா? ஹேக்கர்கள் செயல்படுவது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ஜீன் லீ, ஜெஃப் ஒயிட், விவ் ஜோன்ஸ் பதவி,பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் 21 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவில் கூலித்தொழிலாளியாக இருக்கும் உங்களுக்கு பாலிவுட்டில் தலை காட்டும் வாய்ப்பு கிடைப்பதாக வைத்துக் கொள்வோம். உங்களது கதாபாத்திரம் என்ன? நேராக ஏடிஎம் சென்று பணத்தை எடுப்பது மட்டுமே அது. 2018-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் பலரும் இப்படித்தான் பாலிவுட்டில் தலை காட்டப் போவதாக நம்பினார்கள். ஆனால், உண்மையில் வங்கிக் கொள்ளையின் ஒர…

  22. உக்ரைனின் எதிர்ப்பையும் மீறி ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைவர் பதவியை ஏற்றது ரஷ்யா! உக்ரைனின் எதிர்ப்பையும் கோபத்தையும் மீறி ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைவர் பதவியை ரஷ்யா ஏற்றுக்கொண்டது. ஐ.நா. பாதுகாப்பு சபையின் 15 உறுப்பினர்களில் ஒவ்வொருவரும் சுழற்சி முறையில் ஒரு மாதத்திற்கு தலைவர் பதவியை வகிக்கின்றனர். கடந்த பெப்ரவரி 2022ஆம் ஆண்டு உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கிய இறுதியாக ரஷ்யா தலைமையில் பதவியில் இருந்தது. போர்க் குற்றங்களுக்காக சர்வதேச கைது பிடியாணைக்கு உட்பட்ட ஜனாதிபதியின் ஒரு நாட்டினால் பாதுகாப்பு சபை வழிநடத்தப்படுகிறது. உக்ரைனின் புகார்கள் இருந்தபோதிலும், நிரந்தர சபையில் உறுப்பினரான ரஷ்யாவை ஜனாதிபதி பதவிக்கு…

  23. வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க தயார் – அமெரிக்காவிற்கு ஈரான் ஆதரவுப் படைகள் எச்சரிக்கை தங்கள் நிலைகளில் அமெரிக்கா மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக சிரியாவில் உள்ள ஈரானிய சார்புப் படைகள் தெரிவித்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் சிரியாவில் நடந்த ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் போராளிகள் பலர் உயிரிழந்துள்ளதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிரியாவில் உள்ள தமது இருப்புக்கள் மற்றும் படைகள் குறிவைக்கப்பட்டால் பதிலடி கொடுக்கும் திறமை தம்மிடம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளது. சிரியாவில் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக வெள்ளிக்கிழமை ஒரே நேரத்தில் இரண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக …

  24. யாழ்.ஊடகவியலாளர்நிமலராஜன் மயில்வகனம் கொலை தொடர்பாக சந்தேகநபர் ஒருவரை பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவின் North Hampton shire பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 49 வயதுடைய யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. சந்தேகநபர் தொடர்பான விபரம் பிரித்தானிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் நிமலராஜன் கொலையுடன் தொடர்புடைய யாப்பாணத்தை சேர்ந்த சந்தேகநபர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. யாழ்.ஊடகவியலாளர் நிமலராஜன் மயில்வாகனம் 2000ஆம் ஆண்டு ஒ…

  25. இத்தாலியில் ChatGPTக்கு தடை Published By: T. SARANYA 01 APR, 2023 | 02:41 PM புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமான சட் ஜிபிடியைத் தடை செய்யும் முதல் மேற்கத்திய நாடாக இத்தாலி மாறியுள்ளது. சட் ஜிபிடி (Chat GPT) அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ‘ஓபன் ஏஐ’ (OpenAI) என்ற நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது. மற்றும் மைக்ரோசாப்ட் ஆதரிக்கும் மொடல் ஆகும். இதனை மற்றொரு தேடு பொறி என்றும் சொல்லலாம். இந்நிலையில், சட் ஜிபிடியில் தனியுரிமை பாதுகாப்பு குறித்து கவலைகள் இருப்பதாக இத்தாலிய தரவு-பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் ஓபன்ஏஐயின் சட் ஜிபிடியை உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை செய்து விசா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.