உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26655 topics in this forum
-
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இராணுவ அணி திரட்டலுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், அந்நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்துள்ளன. ரஷ்யா முழுவதும் 37 நகரங்களில் போராட்டம் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 800க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தலைநகர் மொஸ்கோவில் 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சுதந்திர OVD-Info எதிர்ப்பு கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. உக்ரைன் போர்க்களத்தில் ரஷ்யா பின்னடைவு உக்ரைன் போர்க்களத்தில் பின்னடைவைச் சந்தித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இராணுவ அணி திரட்டலுக்கு உத்தரவிட்டுள்ளார். ரஷ்ய …
-
- 82 replies
- 4.4k views
- 2 followers
-
-
டொனால்ட் டிரம்ப் மீது அடுத்தடுத்து பாயும் வழக்குகள்: புதிதாக மோசடி வழக்கு தாக்கல்! டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது வாரிசுகள் மீது நியூயார்க்கில் மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது. தினத்தந்தி நியூயார்க், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது வாரிசுகள் மீது நியூயார்க்கில் மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது. அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் என்பவர், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மூன்று வாரிசுகளுக்கு எதிராக 250 மில்லியன் டாலர்கள் மோசடி வழக்கு ஒன்றை பதிவு செய்தார். டிரம்ப் மற்றும் அவரது வாரிசுகள் மோசடி செய்ததற்காக நியூயார்க் அட்டர்னி ஜெனரல் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த மோசடி வழக்கு தொடர்பாக சுமர் 200 …
-
- 1 reply
- 688 views
-
-
ரஷியாவிற்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்: உலகத் தலைவர்களுடனான ஐ.நா.சபை கூட்டத்தில் உக்ரைன் அதிபர் உரை! ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தில் உலகத் தலைவர்கள் மத்தியில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி காணொலி மூலம் உரையாற்றினார். தினத்தந்தி நியூயார்க், ஐ.நா.பொதுச் சபையில் உலகத் தலைவர்களின் வருடாந்திர கூட்டம் செப்டம்பர் 21ம் தேதி (நேற்று) நடைபெற்றது. இந்த உயர்மட்ட ஐ.நா. கூட்டத்தில் உலகத் தலைவர்கள் மத்தியில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி காணொலி மூலம் உரையாற்றினார். முன்னதாக, ஐ.நா.பொதுச் சபையில் 2 ஆண்டுகளுக்கு பின் உலகத் தலைவர்கள் நேரடியாக கலந்துகொண்டனர். ரஷியாவின் படையெடுப்பால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனின் அதிபர் ஜெலென்ஸ்கி காணொலி மூலம் தோன்றியதும், அவர் சபையில் இருந்தவர்…
-
- 2 replies
- 333 views
-
-
உக்ரேனியர்கள்... காட்டு மிராண்டித்தனத்திற்கு, ஆளாகிறார்கள் – பாப்பரசர். உக்ரேனியர்கள் காட்டுமிராண்டித்தனம், அரக்கத்தனம் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாகின்றனர் என பாப்பரசர் பிரான்சிஸ், உக்ரைன் போர் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் பேசிய பாப்பரசர், உக்ரேனியர்கள் ஒரு “உன்னதமான” மக்கள் தியாகிகள் என்று கூறினார். உக்ரைனில் உதவிகளை வழங்கி வரும் தனது தொண்டு நிறுவனத் தலைவர் கார்டினல் கொன்ராட் கிராஜெவ்ஸ்கியுடன் செவ்வாயன்று அவர் நடத்திய உரையாடலையும் அவர் கூட்டத்தில் கூறினார். https://athavannews.com/2022/1300339
-
- 7 replies
- 548 views
-
-
புடினின் அச்சுறுத்தல்கள்... தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் – பெரிய பிரித்தானியா. ரஷ்ய ஜனாதிபதி புடினின் இன்று புதன்கிழமை காலை ஆற்றிய உரை உக்ரைனில் போர் தீவிரமடைந்ததை எடுத்து காட்டுவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. மேலும் அவரது அச்சுறுத்தல்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தெளிவாக இது மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று என்றும் நாங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் வெளிவிவகார அமைச்சர் கீகன் தெரிவித்தார். https://athavannews.com/2022/1300364
-
- 4 replies
- 396 views
-
-
புடின் இராணுவ அணிதிரட்டலை அறிவித்தார், மேற்கு ரஷ்யாவை அழிக்க விரும்புகிறது என்று கூறுகிறார் September 21, 2022 Admin 0 லண்டன்: ஆக்கிரமிக்கப்பட்ட சில பகுதிகளை மீட்டெடுத்த உக்ரேனிய எதிர்த்தாக்குதலில் ரஷ்யப் படைகள் போரிடுகையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புதன்கிழமை (செப். 21) ஒரு பகுதி இராணுவ அணிதிரட்டலை அறிவித்தார். தேசத்திற்கு தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், புடின் அதன் 2 மில்லியன் வலிமையான இராணுவ இருப்புக்களை ஓரளவு அணிதிரட்டுவது ரஷ்யாவையும் அதன் பிரதேசங்களையும் பாதுகாப்பதாகும், மேற்கு நாடுகள் ரஷ்யாவை அழிக்க விரும்புவதாகவும் உக்ரேனில் அமைதியை விரும்பவில்லை என்றும் கூறினார். “எங்கள் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளானால், எங்கள…
-
- 37 replies
- 1.5k views
- 1 follower
-
-
ரஷ்யாவுடன் இணையும் உக்ரைன் பிராந்தியங்கள் ரஷ்ய ஆதரவு பெற்றுள்ள பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் நான்கு பிராந்தியங்கள், அந்நாட்டுடன் இணைய உள்ளன. இதற்காக மக்களிடம் கருத்து கேட்கும் ஓட்டெடுப்பு விரைவில் துவங்க உள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த, பிப்., 25ல் போர் தொடுத்தது. ஏழு மாதங்களை கடந்து போர் நீடித்து வருகிறது. ரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் கடும் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், போரை தீவிரப்படுத்தும் வகையில், உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே உள்ள நான்கு பிராந்தியங்களை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ரஷ்யா திட்டமிட்டுள்ளது. டோனெட்ஸ்க், லுஹான்க்ஸ், கெர்சான் மற்றும் ஜபோரிஸ்சியா ஆகிய இந்த நான…
-
- 0 replies
- 236 views
-
-
எகிப்தியர்களுக்கு முன்பே 'மம்மி' செய்த தென்னமெரிக்காவின் பழங்கால சின்சோர்ரோ கலாசாரத்தினர் ஜுவான் ஃபிரான்சிஸ்கோ ரியுமல்லோ பிபிசி ஃப்யூச்சர் 36 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SERGIO DONOSO/EYEEM/GETTY IMAGES எகிப்தியர்களின் மம்மிகள் மிகவும் பிரபலமானவையாக இருக்கலாம். ஆனால், அவைதான் பழைமையானவை என்று கூறமுடியாது. சிலியின் அட்டகாமா பாலைவனத்தில் வாழ்ந்த சின்சோர்ரோ மக்கள்தான் முதன்முதலாக, 7,000 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் உடலை மம்மியாக செய்துள்ளனர். பூமியின் வறண்ட பகுதியான சிலியின் அட்டகாமா பாலைவனத்தில், எகிப்தியர்களின் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மிகளை விடப் …
-
- 0 replies
- 177 views
- 1 follower
-
-
உக்ரைனுக்கு, 2023ஆம் ஆண்டும்... குறைந்தபட்சம் "2.3 பில்லியன் பவுண்டுகள்" ஆதரவு வழங்க பிரித்தானியா திட்டம்! உக்ரைனுக்கு 2023ஆம் ஆண்டும் குறைந்தபட்சம் 2.3 பில்லியன் பவுண்டுகள் ஆதரவு வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. அடுத்த ஆண்டுக்கான ஆதரவு தொகை, இந்த ஆண்டு ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் போருக்கு பிரித்தானியா வழங்கிய 2.3 பில்லியன் பவுண்டுகள் உடன் ஒத்துப்போகும் அல்லது அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நியூயோர்க் நகரத்தில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உரையாற்றத் திட்டமிடப்பட்டிருக்கும் பிரதமர் லிஸ் ட்ரஸ், அமெரிக்காவிற்கு விஜயம் செய்யும் போது, உக்ரைனுக்கு தொடர்ச்சியான மற்றும் கணிசமான இராணுவ உதவி பற்றிய செய்தியை வழங்குவார…
-
- 1 reply
- 299 views
-
-
புதிய முகக்கவசத்தை உருவாக்கியுள்ள சீன ஆராய்ச்சியாளர்கள் By T YUWARAJ 20 SEP, 2022 | 09:59 PM சீன ஆராய்ச்சியாளர்கள், மக்கள் கொவிட்-19 அல்லது காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளதா என்பதை அறிய உதவும் வகையில் முகக்கவசம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது கொரோனா தொற்றால் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவக்கூடியதாக அமையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவின் ஷாங்காயில் உள்ள டோங்ஜி பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆறு விஞ்ஞானிகள் தலைமையிலான ஆய்வின்படி, முகக்கவசத்தில் உள்ள ஒரு சென்சார் காற்றில் உள்ள COVID-19, H5N1 மற்றும் H1N1 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களை 10 நிமிடங்களுக்குள் கண்டறிந்து ஒரு சாதனத்திற்கு அறிவிப்புகளை அனுப்பும் வகையில் …
-
- 0 replies
- 244 views
- 1 follower
-
-
அமெரிக்காவில்... கொவிட் தொற்றுநோய், முடிவுக்கு வந்துவிட்டதாக... பைடன் அறிவிப்பு! கொவிட் தொற்று நோயால் உயிரிழந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவில் கொவிட் தொற்றுநோய் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். சிபிஎஸ் தொலைக்காட்சியில் ஜோ பைடன், 60 நிமிடங்களுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘எங்களுக்கு இன்னும் சிக்கல் உள்ளது. நிலைமை வேகமாக முன்னேறி வருகிறது. வைரஸைக் கட்டுப்படுத்த அமெரிக்கா இன்னும் நிறைய வேலைகளை செய்து வருகின்றது. நீங்கள் கவனித்தால், யாரும் முகக்கவசம் அணியவில்லை. எல்லோரும் நல்ல நிலையில் இருப்பதாகத் தெ…
-
- 1 reply
- 312 views
-
-
ஜப்பானை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல் By T. SARANYA 20 SEP, 2022 | 12:25 PM ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள கியாஷூ தீவை நேற்று 'நான்மடோல்' என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. இதன்போது மணிக்கு 162 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. புயல் காற்றில் சிக்கி நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. கட்டிடங்களின் மேற்கூரைகள் பல மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. வீதிகளில் சென்ற வாகனங்கள் கவிழ்ந்து உருண்டன. கடலில் பல அடி உயரத்துக்கு இராட்சத அலைகள் எழும்பின. புயலின் காரணமாக சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் உடனடியாக வெள்ளம் சூழந்தது. இடைவிடாமல…
-
- 0 replies
- 269 views
- 1 follower
-
-
பிரிட்டனின் லெஸ்டரில் நகரில் இந்து முஸ்லிம் இளைஞர்களிடையே பதற்றம் - நடந்தது என்ன? 18 நிமிடங்களுக்கு முன்னர் காணொளிக் குறிப்பு, பிரிட்டனில் இந்து - முஸ்லிம் இளைஞர்களிடையே அமைதியின்மை பிரிட்டன் நகரமான லெஸ்டரில், இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தினரிடையே நடைபெற்ற மோதலால் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது நாளாக போலீஸ் கண்காணிப்பும் தொடர்ந்து வருகிறது. ஆகஸ்ட் 28ஆம் தேதி நடந்த சிறிய மோதலின் தொடர்ச்சியாக இந்த சம்பவம் நடந்துள்ளது. கடைசியாக, கடந்த சனிக்கிழமையன்று (செப்.17) இந்து மற்றும் முஸ்லிம் மதங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இடையே லெஸ்டர் நகரில் நடந்த இந…
-
- 2 replies
- 391 views
- 1 follower
-
-
இரான் பெண்கள் ஹிஜாப் போராட்டம்: மாசா அமினி மரணத்தால் முடியை வெட்டி எதிர்ப்பு தெரிவிப்பு 34 நிமிடங்களுக்கு முன்னர் காணொளிக் குறிப்பு, கூந்தலை வெட்டி, ஹிஜாபை கொளுத்தி போராடும் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிதல் உள்ளிட்ட ஆடைக் கட்டுப்பாடுகளை பின்பற்றாததால் இரான் கலாசார காவல்துறையால் கைது செய்யப்பட்ட ஓர் 22 வயது இளம் பெண்ணின் மரணம் அந்நாட்டில் கடுமையான போராட்டங்களைத் தூண்டியுள்ளது. மாசா அமினி என்ற 22 வயது இரானிய பெண், இஸ்லாமிய அடிப்படைவாத காவல் குழுவால் கைது செய்யப்பட்டார். இரானில் இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக இயங்கி வரும் காவல் அமைப்பு அது. அதாவது அடிப்படைவாத அமலாக்கக் காவல்துறை என்று புரிந…
-
-
- 17 replies
- 1.8k views
- 1 follower
-
-
அரச பாரம்பரிய முறைப்படி பிரித்தானிய மகாராணி 2 ஆம் எலிசபெத்தின் பூதவுடல் நல்லடக்கம் 19 Sep, 2022 | 10:48 PM பிரித்தானிய மகாராணி 2 ஆம் எலிசபெத்தின் பூதவுடல் அரச பாரம்பரிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. பிரித்தானியாவில் நீண்ட காலம் ஆட்சி செய்த மகாராணி இரண்டாம் எலிசபெத் (வயது 96) உடல் நலக்குறைவு காரணமாகவும், வயது மூப்பினாலும் கடந்த 8 ஆம் திகதி மரணம் அடைந்தார். அவரது உடல் லண்டன் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இலட்சக்கணக்கான பொதுமக்கள் பல மணி நேரம் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ராணி மேல் வைத்திருந்த அன்பால் நீண்ட வரிசைய…
-
- 0 replies
- 393 views
-
-
2 ஆம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு - நேரலை By T. Saranya 19 Sep, 2022 | 04:22 PM 2 ஆம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், 2 ஆம் எலிசபெத் மகாராணியின் பூதவுடல் தாங்கிய பேழை வெஸ்மினிஸ்டர் தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ரோயல் கடற்படையின் பீரங்கி வண்டியில் வைத்து மகாராணியின் பூதவுடல் கொண்டு செல்லப்பட்டது. 142 மாலுமிகள் அதை இழுத்துச் சென்றனர். மறைந்த இளவரசர் பிலிப்பின் மாமா மவுண்ட்பேட்டன் பிரபு இறுதிச் சடங்குக்காக இந்த வண்டி கடைசியாக 1979 இல் பயன்படுத்தப்பட்டது. அதற்கு…
-
- 1 reply
- 304 views
-
-
கிர்கிஸ்தான்- தஜிகிஸ்தான் எல்லை மோதலில்... 94பேர் உயிரிழப்பு: ரஷ்யாவின்... தலையீட்டால், போர் நிறுத்தம்! கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் எல்லையில் நடந்த மோதலில் குறைந்தது 94 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை இரண்டு மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையேயான வெடித்த சண்டை, ரஷ்யாவின் தலையீட்டால் வெள்ளிக்கிழமை போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை அமைதியான முறையில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில், இரு தரப்பினரும் வெள்ளிக்கிழமை போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இரு த…
-
- 3 replies
- 323 views
-
-
சீனா, முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தினால்... அமெரிக்கா, தாய்வானை பாதுகாக்கும்: ஜோ பைடன்! தாய்வான் மீது சீனா முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தினால், அமெரிக்கா தாய்வானை பாதுகாக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் கூறியுள்ளார். சி.பி.எஸ். தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘உக்ரைனில் இருப்பதைப் போல இல்லாமல், தைவான் மீது சீனப் படையெடுப்பு ஏற்பட்டால், அமெரிக்கப் படை வீரர்கள், தாய்வானை பாதுகாப்பார்கள்’ என கூறினார். இந்த நேர்காணல் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட்டது, அமெரிக்க கொள்கை மாறவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்த வெள்ளை மாளிகை தூண்டியது. வொஷிங்டனின் கொள்க…
-
- 2 replies
- 419 views
-
-
இங்கிலாந்து ராணியின் இறுதிச் சடங்கு: பங்கேற்க அழைக்கப்படாத நாடுகள் எவை தெரியுமா? இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சில நாடுகளுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. பிரிட்டனின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த இங்கிலாந்தின் முன்னாள் அரசத் தலைவரும், கொமன்வெல்த் நாடுகளின் தலைவருமான இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது 96வது வயதில் செப்டம்பர் 8 ஆம் திகதி ஸ்கொட்லாந்தில் உள்ள பல்மோரல் கோட்டையின் கோடைகால இல்லத்தில் காலமானார். அவரது உடல் செப்டம்பர் 19ஆம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் அடக்கம் செய்யப…
-
- 7 replies
- 936 views
-
-
தாய்வானில் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை தாய்வானின் தென்கிழக்கு கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது, இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இந்த நிலநடுக்கம் மதியம் 2:44 மணிக்கு (06:44 GMT) டைடுங் நகருக்கு வடக்கே 50 கிமீ (30 மைல்) தொலைவில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் இரண்டு மாடி குடியிருப்பு கட்டிடம் மற்றும் ஒரு கடை இடிந்து விழுந்தது . மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக உள்ளூர் ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது. கிழக்கு தாய்வானில் உள்ள டோங்லி ரயில் நிலையத்தின் ஒரு பகுதி இடி…
-
- 0 replies
- 206 views
-
-
போர் தொடுப்பதற்கான காலம் அல்ல இது’ - அதிபர் புதினிடம் கூறிய பிரதமர் மோடிக்கு அமெரிக்க பத்திரிகைகள் பாராட்டு By Rajeeban 18 Sep, 2022 | 11:29 AM போர் தொடுப்பதற்கான காலம் அல்ல இது ’ என ரஷ்ய அதிபர் புதினிடம் நேரடியாக தனது கருத்தை நாசுக்காக தெரிவித்த பிரதமர் மோடியை அமெரிக்க பத்திரிகைகள் பாராட்டியுள்ளன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகருக்கு சென்றிருந்தார். இதில் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜீ ஜின்பிங் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, கரோனா தொற்று காலத்துக்குப்பின், உல…
-
- 1 reply
- 221 views
-
-
வறுமையில் வாடும் வடகொரியா By DIGITAL DESK 5 16 SEP, 2022 | 01:58 PM ஐங்கரன் விக்கினேஸ்வரா “அமெரிக்காவுக்கு எதிராக அணுவாயுத தாக்குதலை நடத்த வடகொரியா முழுஅளவில் தயாராக இருக்கிறது” என்று அந்நாட்டின் ஜனாதிபதி கிம் ஜொங் உன் தலைநகர் பியோங்யாங்கில் அதிரடியாக கூறினார். கொரிய போரின் 69ஆவது ஆண்டு தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் உரையாற்றியபோதே அவர் இந்தக் கூற்றை பகிரங்கமாக வெளிப்படுத்தினார். “போர் நடைபெற்று 70ஆண்டுகளுக்கு பின்னரும் தென்கொரியாவுடன் இணைந்து வடகொரியாவுக்கு எதிராக ஆபத்து நிறைந்த, சட்டவிரோத பகைமை விளைவிக்கும் செயல்களில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. அமெரிக்கா தனது செயல்களுக்கு ஆதரவு சேர்க்கும் வகைய…
-
- 0 replies
- 362 views
- 1 follower
-
-
எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு – உலகத் தலைவர்கள் உட்பட 2,000க்கும் மேற்பட்ட முக்கிய நபர்கள் லண்டன் வருகை! http://www.samakalam.com/wp-content/uploads/2022/09/download-9.jpg ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர். லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல், ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது. ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியை கண்டு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்கள் வெள்ளமென திரண்டு வருகின்றனர். இரவிலும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் ராணியின் மீதுள்ள அன்பை வெளிக்காட்ட அஞ்சலி செ…
-
- 0 replies
- 217 views
-
-
உக்ரைனுக்கு மேலும் 600 மில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுத உதவி -அமெரிக்கா அறிவிப்பு -சி.எல்.சிசில்- உக்ரைன் மீது கடந்த பெப்ரவரி மாத இறுதியில் இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தொடங்கிய போர் 6 மாதங்களைக் கடந்துள்ளது. போரினால் பாதிப்படைந்துள்ள உக்ரைனுக்கு இராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 600 மில்லியன் டொலர் இராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரேனிய இராணுவத்துக்கு உதவுவதற்கான இந்த நடவடிக்கை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். ரொக்கெட் ஏவுகணை ஆயுதங்கள் உள்ளிட்ட பல ஆயுத…
-
- 14 replies
- 523 views
- 1 follower
-
-
உக்ரைனின்... சமீபத்திய எதிர்த்தாக்குதல், ரஷ்யாவின் திட்டங்களை... மாற்றாது: புடின் கேலி! உக்ரைனின் சமீபத்திய எதிர்த்தாக்குதல் ரஷ்யாவின் திட்டங்களை மாற்றாது என்று விளாடிமிர் புடின் தனது முதல் பொதுக் கருத்தை கூறியுள்ளார். ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக, வடகிழக்கு கார்கிவ் பகுதியில் ஆறு நாட்களில் 8,000 சதுர கிமீ (3,088 சதுர மைல்கள்)க்கு மேல் கைப்பற்றியதாக உக்ரைனியப் படைகள் கூறுகின்றன. ஆனால், தான் அவசரப்படவில்லை என்றும், உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் தாக்குதல் தொடர்ந்து நடந்து வருவதாகவும் புடின் கூறினார். ரஷ்யா இதுவரை தனது முழுப் படைகளையும் அனுப்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ‘டான்பாஸில் எங்கள் தாக்குதல் நடவடிக்கை நிற்கவில்லை. அ…
-
- 0 replies
- 264 views
-