Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் – 11 பேர் உயிரிழப்பு. வெனிசுலா கடற்கரையை அண்டிய கடற்பரப்பில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கப்பல் மீது அமெரிக்க இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவின் ஜனாதிபதியாக நிக்கோலஸ் மதுரோ மூன்றாவது முறையாக பதவி வகித்து வருகிறார். அவர், உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக செயல்படுவதாகவும், போதைப்பொருள் கும்பல்களுடன் இணைந்து அமெரிக்காவிற்குள் போதைப் பொருட்களை விநியோகம் செய்வதாகவும் கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில் வெனிசுலா கடற்கரையில் ஒரு கப்பலின் மீது அமெரிக்கப் படைகள் இராணுவத் தாக்குதல் நடத…

  2. அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டவர்களின் குடியேற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ! 01 Sep, 2025 | 10:20 AM அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் குடியேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து "மார்ச் ஃபார் அவுஸ்திரேலியா" (March for Australia) என்ற அமைப்பு நாடு முழுவதும் ஆர்ப்பாட்ட பேரணிகளை முன்னெடுத்துள்ள நிலையில், இந்தியர்கள் குடியேறுவதை எதிர்த்து இந்த அமைப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். அவுஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையில் தொழிலாளர் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.இந்நிலையில், வெளிநாட்டினர் குடியேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து "மார்ச் ஃபார் ஆஸ்திரேலியா" (March for Australia) என்ற அமைப்பு நாடு முழுவதும் ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் தலைநகர் கான்பெ…

  3. சீன இராணுவ அணிவகுப்பில் புட்டின், பிற தலைவர்களுடன் கிம்மும் இணைகிறார்! வட கொரிய ஜனாதிபதி கிம் யொங் உன் அடுத்த வாரம் பெய்ஜிங்கில் நடைபெறும் இராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்வார் என்று சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது அவரது முதல் சர்வதேச அளவிலான தலைவர்கள் கூட்டம் என்றும் நம்பப்படுகிறது. “வெற்றி நாள்” என்று அழைக்கப்படும் இந்த அணிவகுப்பு, சீனாவின் ஜப்பானுக்கு எதிரான போரின் 80 ஆவது ஆண்டு நிறைவையும், இரண்டாம் உலகப் போரின் முடிவையும் குறிக்கும். இந்த நிகழ்வில் கலந்து கொள்ள எதிர்பார்க்கப்படும் 26 நாட்டுத் தலைவர்களில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் ஒருவர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கிம்மை சந்திக்க விரும்புவதாகக் கூறிய சில நாட்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்ப…

  4. சூடானில் கிராமத்தை அழித்த நிலச்சரிவு - 1000க்கும் மேற்பட்டோர் பலி 02 September 2025 மேற்கு சூடானின் மர்ரா மலை பகுதியில் ஒரு கிராமத்தையே அழித்த நிலச்சரிவில், குறைந்தது 1000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலச்சரிவில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. கனமழையைத் தொடர்ந்து,கடந்த ஆகஸ்ட் 31 அன்று, இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக சூடான் விடுதலை இராணுவம் தெரிவித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு, இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையிலேயே இந்த நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்ற பலியானவர்களின் உடலங்களை மீட்க உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச உதவி நிறுவனங்களுக்கு…

  5. 'பிரஸ்ஸல்ஸ் அமைதிக்கு அல்ல, நீண்ட போருக்குத் தயாராகிறது' என்று கூறி, உக்ரைன் உதவி தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தை ஹங்கேரி கடுமையாக சாடியுள்ளது. உக்ரைனுக்கு பில்லியன் கணக்கான ஐரோப்பிய ஒன்றிய இராணுவ உதவி மற்றும் ரஷ்யா மீதான தடைகளை ஹங்கேரி எதிர்க்கிறது, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் மீதான தாக்கத்தை காரணம் காட்டி. ஐசு பைசர் |30.08.2025 - புதுப்பிப்பு : 30.08.2025 லண்டன் உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய ஆதரவை ஹங்கேரி எதிர்த்துள்ளது, பிரஸ்ஸல்ஸ் "சமாதானத்திற்கு அல்ல, நீண்ட போருக்கு" தயாராகி வருவதாகக் கூறி, ஹங்கேரிய வெளியுறவு அமைச்சர் பீட்டர் சிஜ்ஜார்டோ சனிக்கிழமை தெரிவித்தார். டென்மார்க்கின் தலைநகரான கோபன்ஹேகனில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்களின் …

      • Like
    • 2 replies
    • 148 views
  6. 'அமெரிக்காவை விட 200 மடங்கு அதிகம்': அதிவேகமாக கப்பல் கட்டும் சீனா பெருங்கடல்களை ஆள தயாராகிறதா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீனாவின் விமானந்தாங்கி போர்க்கப்பல் லியோனிங் கட்டுரை தகவல் Laura Bicker China correspondent Dalian, China 2 மணி நேரங்களுக்கு முன்னர் "சோசலிசம் நல்லது..." என்று மைக்கைப் பிடித்து ஓய்வூதியதாரர் ஒருவர் பேசுகிறார். அவரது குரல், அவரது நண்பர்களின் அரட்டை சத்தத்தில் குறைவாக கேட்கிறது. ஆனால் அவர்களும், அவருடன் சேர்ந்து, "கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரம் மற்றும் செல்வத்திற்கான பாதையில் சீனாவை வழிநடத்துகிறது!" என்று முழங்குகிறார்கள். இது பிரபலமான பாடல் அல்ல. ஆனால் அவர்கள் நின்று கொண்டிருக்கும் டாலியனின் சுயோயுவான் பூங்காவிலிருந்து பாடுவதற்கு பொருத்தமான…

  7. உக்ரைன் மோதலுக்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம்! - புடின். உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இடம்பெற்று வரும் மோதலுக்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம் என ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். சீனாவின் தியான்ஜின் நகரில் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”உக்ரைனை நேட்டோ அமைப்பில் இணைக்க மேற்கு நாடுகள் தொடர்ந்து முயற்சிப்பது உக்ரைன் மோதலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியபடி, இது ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாக அமைகிறது. 2014ம் ஆண்டு உக்ரைனில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு, மேற்கத்திய நாடுகளில் த…

  8. கட்டுரை தகவல் ஹஃபிசுல்லா மரூஃப் பிபிசி ஆப்கன் சேவை 31 நிமிடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக உள்ளூர் அதிகாரிகள் பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளனர். காயமடைந்த 115 க்கும் மேற்பட்டோர் நங்கர்ஹார் மற்றும் குனார் மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 8 கி.மீ (6 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.0 அளவிலானதாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 23:47 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போதிருந்து, குறைந்தது மூன்று பிந்தைய நில அதிர்வுகள் - 4.5 மற்றும் 5.2 வரையில…

  9. பட மூலாதாரம், EPA/Shutterstock 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவது குறித்து அமெரிக்க அதிபரின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ மீண்டும் ஒரு பேசியுள்ளார். 'பிராமணர்கள்' இந்திய மக்களின் இழப்பில் லாபம் ஈட்டுகிறார்கள் என்றும், இதை 'நிறுத்த வேண்டும்' என்றும் அந்த பேச்சில் நவரோ குறிப்பிட்டுள்ளார். டிரம்ப் நிர்வாகத்தில் வர்த்தகம் மற்றும் உற்பத்தி விவகாரங்களுக்கான மூத்த ஆலோசகரான நவரோ கடந்த ஞாயிற்றுக்கிழமை ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், "பிரதமர் மோதி ஒரு சிறந்த தலைவர். இந்தியத் தலைவர்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் எவ்வாறு ஒத்துழைக்கிறார்கள் என்பது புரியவில்லை? அதேசமயம் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம்" என்று க…

  10. இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸின் ஆயுதப் பிரிவின் பேச்சாளர் பலி 01 September 2025 காசா நகரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் ஆயுதப் பிரிவின் பேச்சாளரான அபு ஒபைடா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், இதனைத் தெரிவித்துள்ளார். எனினும் ஹமாஸ் அவரது மரணத்தை உறுதிப்படுத்தவில்லை. இந்தநிலையில் காசாவில் ஒரு குடியிருப்பு கட்டடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் காயமடைந்ததாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. காசா நகரத்தின் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட அல்-ரிமல் சுற்றுப்புறத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காசா நகரத்தை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேலிய திட்டத்தின் ஒரு பகுதியாகவே இ…

  11. ஸ்கூப்: உக்ரைன் போரின் முடிவை ஐரோப்பா ரகசியமாக செயல்தவிர்ப்பதாக வெள்ளை மாளிகை நம்புகிறது. மைக் ஆலன், பராக் ராவிட் facebook (புதிய சாளரத்தில் திறக்கும்) ட்விட்டர் (புதிய சாளரத்தில் திறக்கும்) லிங்க்டின் (புதிய சாளரத்தில் திறக்கும்) மின்னஞ்சல் (புதிய சாளரத்தில் திறக்கும்) கடந்த வாரம் ஓவல் அலுவலகத்தில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனக்கு அனுப்பியதாகக் கூறும் புகைப்படத்தை அதிபர் டிரம்ப் காட்டுகிறார். புகைப்படம்: ஜாக்குலின் மார்ட்டின்/ஏபி. உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஜனாதிபதி டிரம்பின் முயற்சியை சில ஐரோப்பிய தலைவர்கள் பகிரங்கமாக ஆதரிப்பதாகவும், அலாஸ்கா உச்சிமாநாட்டிற்குப் பிறகு திரைக்குப் பின்னால் இருந்த முன்னேற்றத்தை அமைதியாக செயல்தவிர்க்க முயற்சிப்பதாகவ…

  12. முன்னாள் இராணுவத் தலைவர் ஜலுஷ்னி அதிக நம்பிக்கையைப் பெறுகிறார், ஆனால் ஜெலென்ஸ்கி முதல் சுற்று ஜனாதிபதி வாக்கெடுப்பில் வெற்றி பெறுவார் - கணக்கெடுப்பு கேடரினா டிஷ்செங்கோ — ஞாயிறு, 31 ஆகஸ்ட் 2025, 17:01 20149 Volodymyr Zelenskyy மற்றும் Valerii Zaluzhnyi. புகைப்படம்: உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம் உக்ரைனின் ஆயுதப் படைகளின் முன்னாள் தளபதி வலேரி ஜலுஷ்னியின் மீதான நம்பிக்கையின் அளவு, ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை விட அதிகமாக இருப்பதாக ஒரு புதிய கருத்துக் கணிப்பு கண்டறிந்துள்ளது, ஆனால் ஜனாதிபதித் தேர்தலில், பதிலளித்தவர்களில் சுமார் 35% பேர் ஜெலென்ஸ்கிக்கும், சுமார் 25% பேர் ஜலுஷ்னிக்கும் வாக்களிப்பார்கள். மூலம்: மதிப்பீடு சமூகவியல் குழுவால் ஆகஸ்ட் 21-23, 2025 அன்று நடத்தப்பட்ட ஒ…

    • 0 replies
    • 125 views
  13. உக்ரைன் போர் நீண்ட காலத்திற்கு தொடரக்கூடும் என்று ஜெர்மனியின் மெர்ஸ் எச்சரிக்கிறார் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் விரைவில் போர்நிறுத்தம் எட்டப்படலாம் என்ற மாயையில் தான் இருப்பதாகவும், ஆனால் நம்பிக்கையை கைவிடவில்லை என்றும் அதிபர் மெர்ஸ் கூறுகிறார். அனடோலு ஊழியர்கள் |31.08.2025 - புதுப்பிப்பு : 31.08.2025 பெர்லின் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் இராஜதந்திர முன்னேற்றத்தை அடைவது குறித்து சந்தேகம் இருப்பதாக ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார், மோதல் நீண்ட காலத்திற்கு தொடரக்கூடும் என்று எச்சரித்தார். பொது ஒளிபரப்பாளரான ZDF-க்கு அளித்த பேட்டியில், உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சித்த போதிலும், ர…

    • 0 replies
    • 77 views
  14. பட மூலாதாரம், GETTY IMAGES/SKYNESHER படக்குறிப்பு, நான்கு நாள் வேலை வாரம் என்பது உற்பத்தித்திறனை பாதிக்காமல் நல்வாழ்வை மேம்படுத்துவது புதிய ஆய்வில் நிரூபணமாகியுள்ளது கட்டுரை தகவல் சோஃபியா பெட்டிஸா, பிபிசி உலக சேவை 20 ஆகஸ்ட் 2025 வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை செய்து, வார இறுதியை கொண்டாடுவோம். அதன் பின் மீண்டும் வேலைக்குத் திரும்பும் சோகத்திற்கு தயாராவோம். ஆனால் இந்த நடைமுறை இனியும் அவ்வாறு இருக்க வேண்டியதில்லை என்றால் எப்படி உணர்வீர்கள்? நேட்ஷர் ஹியூமன் பிஹேவியர் இதழில் வெளியான பெரிய அளவிலான ஆய்வு ஒன்று வேலை நாட்களை ஐந்திலிருந்து நான்காக குறைத்தால் மனிதர்களில் நல்வாழ்வு கணிசமாக மேம்படுவதாகக் கூறுகிறது. பாஸ்டன் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அமெரிக்க, பிரிட்டன், ஆஸ்திரேலியா…

  15. 3 கண்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எஸ்சிஓ உச்சி மாநாடு - சீனா உலகுக்கு சொல்லவரும் செய்தி என்ன? பட மூலாதாரம், Getty Images 28 நிமிடங்களுக்கு முன்னர் நடந்து வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாடு முந்தைய மாநாடுகளைவிட அதிக பங்கேற்பாளர்களை ஒன்றிணைக்கும். சீனாவின் வடக்கு கடலோர நகரமான தியான்ஜினில் செப்டம்பர் 31 முதல் செப்டம்பர் 1 வரை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டை நடத்தும். 23 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 10 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், சீன அதிபர் ஷி ஜின்பிங் தலைமையில் நடக்கும் பல்வேறு தூதரக நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். இது எஸ்சிஓவின் வரலாற்றில் 'இதுவரை இல்லாத மிகப்பெரிய' உச்சி மாநாடு என்று விவரிக்கப்பட்டுள்ளது. எஸ்சிஓ உச்சி மாநாட்டை …

  16. மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உக்ரைனின் முன்னாள் சபாநாயகர் உயிரிழப்பு. உக்ரைனின் முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் ஆண்ட்ரி பருபி (Andriy Parubiy )மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார். ஆண்ட்ரி பருபி (54) மீது மேற்கு நகரமான லிவிவ்வில் வைத்து இனந்தெரியாத நபர் ஒருவரினால் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த நபர் துப்பாக்கிச் சூட்டினை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், அவரை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. இந்த தாக்குதல் மிகக் கொடூரமான சம்பவமாகும் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி தெரிவித்ததுடன், பருபியின் குடும்பத…

  17. ஹவுதி அரசின் பிரதமர் வான்வழித் தாக்குதலில் பலி செய்திகள் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் பகுதியின் பிரதமர் அஹமட் அல்-ரஹாவி கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சனாவில் நடந்த தாக்குதலில் அவரும் சில அமைச்சர்களும் கொல்லப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று (30) அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்னர். 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் ஹவுதி தலைமையிலான அரசாங்கத்தின் பிரதமராக அஹமட் அல்-ரஹாவி பணியாற்றி வந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்தன. https://adaderanatamil.lk/news/cmeyg4k0r004co29neegq34bb

  18. 30 Aug, 2025 | 11:29 AM மொரிடேனியா நாட்டின் ஹிஜிரட் நகர் அருகே கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த புகலிடக்கோரிக்கையாளர்களின் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 49 பேர் உயிரிழந்துள்ள நிலையில, 100 பேர் காணாமல்போயுள்ளனர். பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆபிரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் புகலிடக்கோரிக்கையாளர்களாக கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகின்றன. இந்நிலையில், மேற்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள காம்பியா, செனகல் நாடுகளை சேர்ந்த 150 க்கும் மேற்பட்டோர் ஐரோப்ப…

  19. பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் மேட் வில்சன் 8 மணி நேரங்களுக்கு முன்னர் 1945ஆம் ஆண்டு ஒரு மர சிற்பத்தில் மறைத்து வைக்கப்பட்ட ஒரு ஒட்டு கேட்கும் கருவி, ஏழு ஆண்டுகள் அமெரிக்க பாதுகாப்பு அமைப்பால் கண்டறியப்படாமல் இருந்தது. உளவு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்ட கலைப் படைப்பு இது ஒன்று மட்டும் அல்ல. எண்பது ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டாம் உலகப் போரின் இறுதி வாரங்களில், மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரின் அதிகாரப்பூர்வ இல்லமான ஸ்பாசோ ஹவுஸில், ரஷ்ய சிறுவர் சாரணர் படையினர் (Boy Scouts) அமெரிக்க தூதருக்கு கையால் செதுக்கப்பட்ட அமெரிக்காவின் பெரிய முத்திரை பதித்த மரச் சிற்பத்தை பரிசாக அளித்தனர். இந்த பரிசு, போரின்போது ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை குறிக்கும…

  20. ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட உக்ரேனிய கடற்படை கப்பல்! உக்ரேன் கடற்படையால் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இயக்கப்பட்ட மிகப்பெரிய கப்பலான சிம்ஃபெரோபோல் (Simferopol), கடற்படையின் ட்ரோன் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு வியாழக்கிழமை (28) அறிவித்தது. உளவுத்துறை நடவடிக்கைக்காக வடிவமைக்கப்பட்ட குறித்த கப்பல், டானூப் நதியில் வைத்து தாக்குதலுக்கு இலக்கானது. இதன் ஒரு பகுதி உக்ரைனின் ஒடெசா பிராந்தியத்தில் அமைந்துள்ளது என்று பாதுகாப்பு அமைச்சக அறிக்கை தெரிவித்ததாக ஆர்டி தெரிவித்துள்ளது. உக்ரேனிய கடற்படைக் கப்பலை அழிக்க கடல் ஆளில்லா விமானம் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்ட முதல் நிகழ்வு இதுவாகும் என்று ரஷ்யாவின் TASS செய்தி அறிக்கை சுட்டிக்காட்டுகின்…

      • Like
    • 1 reply
    • 184 views
  21. ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்! உக்ரேனின் 34வது சுதந்திர தினம் நேற்றையதினம் கொண்டாடப்பட்ட நிலையில் ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இதேவேளை இதற்கு முன்பு உக்ரேன் இராணுவம், தெற்கு ரஷ்யாவிலுள்ள எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையம் மீது தாக்குதல் நடத்தியிருந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தீயானது தொடர்ந்து எரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முன்னெடுக்கப்படுகின்ற உக்ரேன்-ரஷ்யப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்காவின் முயற்சிகள் தொடர் தோல்வியை சந்தித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை நேற்றையதினம் உக்ரேனின் 34வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையிலேயே ரஷ்ய அணு மின…

  22. ட்ரம்பின் கட்டண வரிகள் சட்ட விரோதமானவை – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பானது அமெரிக்க ஜனாதிபதியின் வெளிவிவகாரக் கொள்கை நிகழ்ச்சி நிரலை மாற்றக்கூடிய சாத்தியமான சட்ட மோதலாக தற்சமயம் மாறியுள்ளது. இந்தத் தீர்ப்பு, உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளின் மீது விதிக்கப்பட்ட ட்ரம்பின் “பரஸ்பர” வரிகளையும், சீனா, மெக்சிகோ மற்றும் கனடா மீது விதிக்கப்பட்ட பிற வரிகளையும் பாதிக்கிறது. குறித்த தீர்ப்பில், அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ் வரிகள் அனுமதிக்கப்பட்டன என்ற ட்ரம்பின் வாதத்தை அமெரிக்க ஃபெடரல் சர்க்யூட் மேல்முறையீட்டு …

  23. பாலஸ்தீன ஜனாதிபதி, 80 பாலஸ்தீன அதிகாரிகளின் விசாக்களை ரத்து செய்தது அமெரிக்கா 30 August 2025 பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் மற்றும் 80 பாலஸ்தீன அதிகாரிகளின் விசாக்களை அமெரிக்கா ரத்துச் செய்துள்ளது. இந்த நிலையில், அடுத்த மாதம் நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தடை செய்யப்பட்டுள்ளார் என்பதை அமெரிக்க ராஜாங்க திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், விசாக்களை மறுப்பது அல்லது ரத்து செய்வது என்ற அமெரிக்காவின் நடவடிக்கை அந்தந்த அரசாங்கங்களுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான "உறவுகளைப் பொருட்படுத்தாமல்", நியூயோர்க்கில் வெளிநாட்டு அதிகாரிகள் வருகை அமெரிக்காவால் தடைபடாது என்று கோடிட்டுக் காட்ட…

  24. 01 JUL, 2025 | 12:34 PM தாய்லாந்தின் பிரதமராக பேடோங்டார்ன் ஷினாவத்ரா பதவி வகிப்பதற்கு அந்த நாட்டின் அரசமைப்பு நீதிமன்றம் இடைக்காலதடைவிதித்துள்ளது. கம்போடியாவின் முன்னாள் தலைவருடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் குறித்த விடயங்கள் அம்பலமாகியதை தொடர்ந்தே நீதிமன்றம் இந்த தடையை விதித்துள்ளது. பிரதமர் நெறிமுறையை மீறினார் என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் அவரை பதவியிலிருந்து இடைநீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். https://www.virakesari.lk/article/218921

  25. உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் - 23 பேர் பலி 29 Aug, 2025 | 08:48 AM உக்ரேன், ரஷ்யா இடையேயான போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். ஆனாலும், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரேன் மீது ரஷ்யா நேற்று தாக்குதல் நடத்தியது. உக்ரேன் தலைநகர் கீவ் உள்பட பல்வேறு பகுதிகள் மீது ரஷ்யா ட்ரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும், 48 பேர் படுகாயமடைந்தனர். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டிஷ் அலுவலகங்கள் சேதமடைந்தன. https://www.virakesari.lk/article/223650

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.