உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26600 topics in this forum
-
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! 06 Sep, 2025 | 01:23 PM காசா நகரத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களின் போது நேற்று வெள்ளிக்கிழமை (05) ஏழு குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடக்கு நகர்ப்புற மையத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் சனிக்கிழமை(இன்று) அதிகாலை வரை தொடர்ந்தது. பாலஸ்தீனிய வீடுகள் மீது பாரிய தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. கசா நகரத்தில் அதிகளவான மக்கள் தொகை கொண்ட பகுதியில் ஒரு உயரமான கோபுரத்தை இராணுவம் அழித்ததால், காசாவில் "நரகத்தின் வாயில்கள்" திறக்கப்படுவதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.…
-
- 0 replies
- 103 views
-
-
பிரித்தானிய துணைப் பிரதமர் இராஜினாமா! பிரித்தானிய துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர்(Angela Rayner) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது சொத்துக்களுக்கான வரிகளைக் குறைவாகச் செலுத்திய குற்றச்சாட்டை அவர் ஏற்றுக்கொண்ட நிலையில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் தனது பொருளாதார ஆலோசனையை வலுப்படுத்த பிரதமரின் அலுவலகத்தில் பணிபுரியும் ஆலோசகர்கள் குழு மறுவடிவமைக்கப்பட்டது. இந்நிலையில், ஒரு ஆலோசகரின் மறுசீரமைப்பு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரித்தானியாவின் சுயாதீன ஆலோசகர் ரெய்னர் சரியான வரி செலுத்தத் தவறியதன் மூலம் விதிமுறைகளை மீறியதாக தீர்ப்பளித்த பின்னர் , அவர் தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்க…
-
- 0 replies
- 141 views
-
-
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் டெஸ்ஸா வாங் பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பிரம்மாண்ட அணிவகுப்பில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள புதிய ஆயுதங்கள் சீனாவின் ராணுவ வலிமையைப் பற்றி என்ன சொல்கின்றன? சீனா ஒரு பெரிய அணிவகுப்பில் பல புதிய ஆயுதங்கள், ட்ரோன்கள் மற்றும் பிற ராணுவ தளவாடங்களை காட்சிப்படுத்தியது. இதை அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் தெரிவிக்கப்படும் ஒரு தெளிவான செய்தியாக பலர் பார்க்கின்றனர். இந்த நிகழ்வில் ரஷ்யாவின் விளாடிமிர் புதின் மற்றும் வட கொரியாவின் கிம் ஜாங் உன் உட்பட 20 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு அரசுத் தலைவர்களுக்கு ஷி ஜின்பிங் வரவேற்பு அளித்தார். ரஷ்யாவும் வட கொரியாவும் பொருளாதார ஆதரவு மற்றும் பலவற்றிற்காக சீனாவை நம்பியுள்ளனர். இது உல…
-
- 2 replies
- 275 views
- 1 follower
-
-
சீனாவில் பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு 03 Sep, 2025 | 11:24 AM சீனாவில் இரண்டாம் உலகப்போர் வெற்றி மற்றும் ஜப்பான் சரணடைந்ததன் 80-ஆண்டு நிறைவையொட்டி பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. பீஜிங் நகரில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பை சீன ஜனாதிபதி ஜின்பிங்குடன், ரஷ்ய ஜனாதிபதி புட்டின், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உட்பட பலநாட்டு தலைவர்கள் பார்வையிட்டனர். இந்த அணிவகுப்பில் அதிநவீன போர் விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுஆயுத ஏவுகணைகள், புதிய நீர்மூழ்கி ட்ரோன்கள் உட்பட சீனாவின் இராணுவ வலிமையை உலகிற்கு பறைசாற்றும் ஆயுதங்களும் இராணுவ தளவாடங்களும் இடம்பெற்றிருந்தன. https://www.virakesari.lk/article/224075
-
- 4 replies
- 489 views
- 1 follower
-
-
பென்டகனை போர்த் திணைக்களமாக மாற்றுவதற்கு தீர்மானம் - ட்ரம்ப் 05 Sep, 2025 | 09:25 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாதுகாப்புத் திணைக்களமான பென்டகனின் பெயரை போர் திணைக்களம் என மாற்ற தீர்மானித்துள்ளார். மேலும், அந்நாட்டின் பாதுகாப்பு செயலாளர் பதவியை போர் செயலாளராக மாற்றும் நிறைவேற்று ஆணையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன அமெரிக்க ஆயுதப்படைகளை மேற்பார்வையிடும் பென்டகன், போர்த் திணைக்களத்தின் வாரிசு ஆகும், இது முதன்முதலில் 1789 இல் அமைச்சரவை அளவிலான நிறுவனமாக நிறுவப்பட்டு 1947 வரை நீடித்தது. நிர்வாகத் திணைக்களத்தை உருவாக்கும் பொறுப்பு அமெரிக்க காங்கிரஸிடம் உள்ளது. அதாவது திணைக்களத்தின் பெயரை உத்தியோக…
-
- 0 replies
- 112 views
-
-
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் : உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! 05 Sep, 2025 | 09:47 AM ஆப்கானிஸ்தானின் தொலைதூர தென்கிழக்கு பகுதியில் வியாழக்கிழமை(நேற்று) இரவு 5.6 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆறு நாட்களில் மூன்றாவது நிலநடுக்கமாக இது ஏற்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. குறித்த நிலநடுக்கம் அந்த நாட்டு நேரப்படி 20.56 அளவில் பதிவாகியுள்ளது. இதனால் நங்கர்ஹார் மற்றும் குனார் மாகாணங்களில் உள்ள மக்கள் அச்சத்தில் இருப்பதுடன், அந்த பகுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர். வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து அதி…
-
- 0 replies
- 82 views
-
-
படகு மூழ்கியதில் 60 பேர் உயிரிழப்பு ; நைஜீரியாவில் சோகம்! வட மத்திய நைஜீரியாவில் 80 பேரை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் 60 பேர் உயிரிழந்தனர். நைஜீரியாவின் வட-மத்திய நைஜர் மாநிலத்தில் பயணிகள் 80 பேரை ஏற்றிச் சென்ற படகே இவ்வாறு விபத்துக்குள்ளானது. மலாலே மாவட்டத்தில் உள்ள துங்கன் சுலேவிலிருந்து துக்காவுக்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளதுடன் பத்து பேர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் இன்னும் தேடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த படகு அதிக சுமையுடன் பயணித்தமையே இவ் விபத்திற்கான காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது. நைஜீரியாவில்,அண்மைக்காலமாக படகு விபத்துக்கள் அதிகளவில் இடம்பெ…
-
- 0 replies
- 100 views
-
-
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 150 ஆண்டுகள் வாழலாம் ; புதின் – ஷி ஜின்பிங் பேசிக்கொண்ட உரையாடல் கசிவு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் பிற அறுவை சிகிச்சைகள் மூலம் அதிக நாட்கள் வாழ முடியுமா? இதுகுறித்து சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கும் ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதினும் பேசிக்கொண்டது வைரலாகி வருகிறது. சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள தியனன்மென் சதுக்கத்தில் இராணுவ அணிவகுப்புக்கு நடந்து செல்லும்போது இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட உரையாடல் மைக் திடீரென ஆன் ஆனதால் கசிந்தது. அவர்கள் பேசியதாவது, ஷி ஜின் பிங்: கடந்த காலத்தில், மக்கள் 70 வயதைத் தாண்டி வாழ்வது அரிது என்று கூறினோம். ஆனால் இன்று உங்கள் 70 களில் கூட, (நீங்கள்) இன்னும் ஒரு குழந்தையாகவே இருக்கிறீர்கள். புதின்: ஆம்…
-
-
- 13 replies
- 488 views
- 1 follower
-
-
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க பெல்ஜியம் முடிவு! பெல்ஜியம் அரசு பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸா மீதான இஸ்ரேல் போரில், தற்போது வரை 60,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் தாக்குதல்களை,இனப்படுகொலை எனக் குறிப்பிட்டு ஏராளமான நாடுகளின் அரசுகள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. ஏற்கெனவே,140-க்கும் அதிகமான சர்வதேச நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ள நிலையில், அப் பட்டியலில் தற்போது பெல்ஜியமும் இணைவதாக, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மாக்ஸிமே ப்ரேவோட் அறிவித்துள்ளார். பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது குறித்த பெல்ஜியமின் திட்டங்கள், வரும் செப்.9 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் அறிவிக்கப…
-
- 0 replies
- 85 views
-
-
போர்த்துக்கல் - லிஸ்பனில் ரயில் கேபிள் கார் விபத்து ; 15 பேர் பலி! 04 Sep, 2025 | 09:30 AM போர்த்துக்கல்லின் தலைநகரான லிஸ்பனில் உள்ள 140 ஆண்டுகள் பழமையான குளோரியா ஃபுனிகுலர் எனும் ரயில் கேபிள் கார் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தில் பாதிக்கப்பட்ட மேலும் 18 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் உயிரிழந்தவர்களில் வெளிநாட்டவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர…
-
- 1 reply
- 93 views
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 25வது கூட்டம் நடைபெற்றது. கட்டுரை தகவல் ஜுபைர் அகமது பிபிசி செய்தியாளர் 1 செப்டெம்பர் 2025, 14:31 GMT புதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் நரேந்தி மோதி மற்றும் சீன அதிபர் ஷீ ஜின்பிங் இடையே கடந்த ஆண்டு காசான் நகரில் நடந்த சந்திப்பை விட, தியான்ஜினில் ஆகஸ்ட் மாத இறுதியில் நடந்த இந்த சந்திப்பு இன்னும் உறுதியானதாகவும், வலுவான கைக்குலுக்கலும் கொண்டதாகவும் இருந்தது. SCO உச்சி மாநாட்டின் இடையே இரு தலைவர்களும் சந்தித்தது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகக் கருதப்படாவிட்டாலும், அது அபூர்வமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இரு தலைவர்களும் அமெரிக்க அதிபர…
-
-
- 8 replies
- 421 views
- 2 followers
-
-
பாலஸ்தீனம் ஒரு நாடாக அங்கீகரிக்கப்படும் : பெல்ஜியம் அறிவிப்பு ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கவிருப்பதாக பெல்ஜியம் அறிவித்துள்ளது. “ஐக்கிய நாட்டுக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தை பெல்ஜியம் ஒரு நாடாக அடையாளப்படுத்தப்படும். அத்துடன் இஸ்ரேலிய அரசாங்கத்துக்கு எதிராகக் கடுமையான தடைகள் விதிக்கப்படும்,” என்று பெல்ஜிய வெளியுறவு அமைச்சர் மெக்ஸிம் பிரிவோட் அறிவித்துள்ளார். ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பாஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கப்போவதாகப் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் கடந்த ஜுலை மாதம் அறிவித்திருந்தார். இந்த நிலையில் பெல்ஜியம் உட்பட பல நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல்கொடுக்க தொடங்கியுள்ளன. நியூயார்க்கில் எதிர்வரும் 9ஆம் திகத…
-
- 1 reply
- 150 views
-
-
மார்ச் 2026க்குள் மருத்துவமனைகள் போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று பிரான்ஸ் கூறுகிறது ஃபரா மோக்ரானி • புதுப்பிக்கப்பட்டது: 27 ஆகஸ்ட் 2025 • 21:23 • 2 நிமிடங்கள் படிக்கப்பட்டது பிரான்ஸ் மருத்துவமனை தயார்நிலை: மார்ச் 2026 க்குள் ஏற்படக்கூடிய பெருமளவிலான உயிரிழப்புகளுக்கு பிராந்திய மருத்துவமனைகள் தயாராக இருக்க வேண்டும் என்று கசிந்த சுகாதார அமைச்சகக் குறிப்பு வலியுறுத்துகிறது, இதில் துறைமுகங்கள்/விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள மையங்கள் மற்றும் கூடுதல் அதிர்ச்சி/PTSD பயிற்சி ஆகியவை அடங்கும். நன்றி: DBrownPhotos, Shutterstock பிரான்சின் சுகாதார அமைச்சகம், மார்ச் 2026 க்குள் முழு தயார்நிலையுடன், ஐரோப்பாவில் ஒரு 'பெரிய இராணுவ ஈடுபாட்டிற்கு' தயாராகுமாறு நாட்டின் மருத்துவமனை…
-
- 0 replies
- 139 views
-
-
வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் – 11 பேர் உயிரிழப்பு. வெனிசுலா கடற்கரையை அண்டிய கடற்பரப்பில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கப்பல் மீது அமெரிக்க இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவின் ஜனாதிபதியாக நிக்கோலஸ் மதுரோ மூன்றாவது முறையாக பதவி வகித்து வருகிறார். அவர், உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக செயல்படுவதாகவும், போதைப்பொருள் கும்பல்களுடன் இணைந்து அமெரிக்காவிற்குள் போதைப் பொருட்களை விநியோகம் செய்வதாகவும் கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில் வெனிசுலா கடற்கரையில் ஒரு கப்பலின் மீது அமெரிக்கப் படைகள் இராணுவத் தாக்குதல் நடத…
-
- 0 replies
- 147 views
-
-
அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டவர்களின் குடியேற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ! 01 Sep, 2025 | 10:20 AM அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் குடியேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து "மார்ச் ஃபார் அவுஸ்திரேலியா" (March for Australia) என்ற அமைப்பு நாடு முழுவதும் ஆர்ப்பாட்ட பேரணிகளை முன்னெடுத்துள்ள நிலையில், இந்தியர்கள் குடியேறுவதை எதிர்த்து இந்த அமைப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். அவுஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையில் தொழிலாளர் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.இந்நிலையில், வெளிநாட்டினர் குடியேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து "மார்ச் ஃபார் ஆஸ்திரேலியா" (March for Australia) என்ற அமைப்பு நாடு முழுவதும் ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் தலைநகர் கான்பெ…
-
- 2 replies
- 247 views
- 1 follower
-
-
சீன இராணுவ அணிவகுப்பில் புட்டின், பிற தலைவர்களுடன் கிம்மும் இணைகிறார்! வட கொரிய ஜனாதிபதி கிம் யொங் உன் அடுத்த வாரம் பெய்ஜிங்கில் நடைபெறும் இராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்வார் என்று சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது அவரது முதல் சர்வதேச அளவிலான தலைவர்கள் கூட்டம் என்றும் நம்பப்படுகிறது. “வெற்றி நாள்” என்று அழைக்கப்படும் இந்த அணிவகுப்பு, சீனாவின் ஜப்பானுக்கு எதிரான போரின் 80 ஆவது ஆண்டு நிறைவையும், இரண்டாம் உலகப் போரின் முடிவையும் குறிக்கும். இந்த நிகழ்வில் கலந்து கொள்ள எதிர்பார்க்கப்படும் 26 நாட்டுத் தலைவர்களில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் ஒருவர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கிம்மை சந்திக்க விரும்புவதாகக் கூறிய சில நாட்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்ப…
-
- 6 replies
- 426 views
- 1 follower
-
-
சூடானில் கிராமத்தை அழித்த நிலச்சரிவு - 1000க்கும் மேற்பட்டோர் பலி 02 September 2025 மேற்கு சூடானின் மர்ரா மலை பகுதியில் ஒரு கிராமத்தையே அழித்த நிலச்சரிவில், குறைந்தது 1000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலச்சரிவில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. கனமழையைத் தொடர்ந்து,கடந்த ஆகஸ்ட் 31 அன்று, இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக சூடான் விடுதலை இராணுவம் தெரிவித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு, இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையிலேயே இந்த நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்ற பலியானவர்களின் உடலங்களை மீட்க உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச உதவி நிறுவனங்களுக்கு…
-
- 1 reply
- 128 views
- 1 follower
-
-
'பிரஸ்ஸல்ஸ் அமைதிக்கு அல்ல, நீண்ட போருக்குத் தயாராகிறது' என்று கூறி, உக்ரைன் உதவி தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தை ஹங்கேரி கடுமையாக சாடியுள்ளது. உக்ரைனுக்கு பில்லியன் கணக்கான ஐரோப்பிய ஒன்றிய இராணுவ உதவி மற்றும் ரஷ்யா மீதான தடைகளை ஹங்கேரி எதிர்க்கிறது, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் மீதான தாக்கத்தை காரணம் காட்டி. ஐசு பைசர் |30.08.2025 - புதுப்பிப்பு : 30.08.2025 லண்டன் உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய ஆதரவை ஹங்கேரி எதிர்த்துள்ளது, பிரஸ்ஸல்ஸ் "சமாதானத்திற்கு அல்ல, நீண்ட போருக்கு" தயாராகி வருவதாகக் கூறி, ஹங்கேரிய வெளியுறவு அமைச்சர் பீட்டர் சிஜ்ஜார்டோ சனிக்கிழமை தெரிவித்தார். டென்மார்க்கின் தலைநகரான கோபன்ஹேகனில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்களின் …
-
-
- 2 replies
- 149 views
-
-
'அமெரிக்காவை விட 200 மடங்கு அதிகம்': அதிவேகமாக கப்பல் கட்டும் சீனா பெருங்கடல்களை ஆள தயாராகிறதா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீனாவின் விமானந்தாங்கி போர்க்கப்பல் லியோனிங் கட்டுரை தகவல் Laura Bicker China correspondent Dalian, China 2 மணி நேரங்களுக்கு முன்னர் "சோசலிசம் நல்லது..." என்று மைக்கைப் பிடித்து ஓய்வூதியதாரர் ஒருவர் பேசுகிறார். அவரது குரல், அவரது நண்பர்களின் அரட்டை சத்தத்தில் குறைவாக கேட்கிறது. ஆனால் அவர்களும், அவருடன் சேர்ந்து, "கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரம் மற்றும் செல்வத்திற்கான பாதையில் சீனாவை வழிநடத்துகிறது!" என்று முழங்குகிறார்கள். இது பிரபலமான பாடல் அல்ல. ஆனால் அவர்கள் நின்று கொண்டிருக்கும் டாலியனின் சுயோயுவான் பூங்காவிலிருந்து பாடுவதற்கு பொருத்தமான…
-
-
- 1 reply
- 325 views
- 1 follower
-
-
உக்ரைன் மோதலுக்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம்! - புடின். உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இடம்பெற்று வரும் மோதலுக்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம் என ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். சீனாவின் தியான்ஜின் நகரில் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”உக்ரைனை நேட்டோ அமைப்பில் இணைக்க மேற்கு நாடுகள் தொடர்ந்து முயற்சிப்பது உக்ரைன் மோதலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியபடி, இது ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாக அமைகிறது. 2014ம் ஆண்டு உக்ரைனில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு, மேற்கத்திய நாடுகளில் த…
-
-
- 1 reply
- 216 views
-
-
கட்டுரை தகவல் ஹஃபிசுல்லா மரூஃப் பிபிசி ஆப்கன் சேவை 31 நிமிடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக உள்ளூர் அதிகாரிகள் பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளனர். காயமடைந்த 115 க்கும் மேற்பட்டோர் நங்கர்ஹார் மற்றும் குனார் மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 8 கி.மீ (6 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.0 அளவிலானதாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 23:47 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போதிருந்து, குறைந்தது மூன்று பிந்தைய நில அதிர்வுகள் - 4.5 மற்றும் 5.2 வரையில…
-
- 4 replies
- 269 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், EPA/Shutterstock 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவது குறித்து அமெரிக்க அதிபரின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ மீண்டும் ஒரு பேசியுள்ளார். 'பிராமணர்கள்' இந்திய மக்களின் இழப்பில் லாபம் ஈட்டுகிறார்கள் என்றும், இதை 'நிறுத்த வேண்டும்' என்றும் அந்த பேச்சில் நவரோ குறிப்பிட்டுள்ளார். டிரம்ப் நிர்வாகத்தில் வர்த்தகம் மற்றும் உற்பத்தி விவகாரங்களுக்கான மூத்த ஆலோசகரான நவரோ கடந்த ஞாயிற்றுக்கிழமை ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், "பிரதமர் மோதி ஒரு சிறந்த தலைவர். இந்தியத் தலைவர்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் எவ்வாறு ஒத்துழைக்கிறார்கள் என்பது புரியவில்லை? அதேசமயம் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம்" என்று க…
-
- 0 replies
- 175 views
- 1 follower
-
-
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸின் ஆயுதப் பிரிவின் பேச்சாளர் பலி 01 September 2025 காசா நகரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் ஆயுதப் பிரிவின் பேச்சாளரான அபு ஒபைடா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், இதனைத் தெரிவித்துள்ளார். எனினும் ஹமாஸ் அவரது மரணத்தை உறுதிப்படுத்தவில்லை. இந்தநிலையில் காசாவில் ஒரு குடியிருப்பு கட்டடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் காயமடைந்ததாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. காசா நகரத்தின் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட அல்-ரிமல் சுற்றுப்புறத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காசா நகரத்தை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேலிய திட்டத்தின் ஒரு பகுதியாகவே இ…
-
- 0 replies
- 111 views
-
-
ஸ்கூப்: உக்ரைன் போரின் முடிவை ஐரோப்பா ரகசியமாக செயல்தவிர்ப்பதாக வெள்ளை மாளிகை நம்புகிறது. மைக் ஆலன், பராக் ராவிட் facebook (புதிய சாளரத்தில் திறக்கும்) ட்விட்டர் (புதிய சாளரத்தில் திறக்கும்) லிங்க்டின் (புதிய சாளரத்தில் திறக்கும்) மின்னஞ்சல் (புதிய சாளரத்தில் திறக்கும்) கடந்த வாரம் ஓவல் அலுவலகத்தில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனக்கு அனுப்பியதாகக் கூறும் புகைப்படத்தை அதிபர் டிரம்ப் காட்டுகிறார். புகைப்படம்: ஜாக்குலின் மார்ட்டின்/ஏபி. உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஜனாதிபதி டிரம்பின் முயற்சியை சில ஐரோப்பிய தலைவர்கள் பகிரங்கமாக ஆதரிப்பதாகவும், அலாஸ்கா உச்சிமாநாட்டிற்குப் பிறகு திரைக்குப் பின்னால் இருந்த முன்னேற்றத்தை அமைதியாக செயல்தவிர்க்க முயற்சிப்பதாகவ…
-
- 1 reply
- 150 views
-
-
முன்னாள் இராணுவத் தலைவர் ஜலுஷ்னி அதிக நம்பிக்கையைப் பெறுகிறார், ஆனால் ஜெலென்ஸ்கி முதல் சுற்று ஜனாதிபதி வாக்கெடுப்பில் வெற்றி பெறுவார் - கணக்கெடுப்பு கேடரினா டிஷ்செங்கோ — ஞாயிறு, 31 ஆகஸ்ட் 2025, 17:01 20149 Volodymyr Zelenskyy மற்றும் Valerii Zaluzhnyi. புகைப்படம்: உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம் உக்ரைனின் ஆயுதப் படைகளின் முன்னாள் தளபதி வலேரி ஜலுஷ்னியின் மீதான நம்பிக்கையின் அளவு, ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை விட அதிகமாக இருப்பதாக ஒரு புதிய கருத்துக் கணிப்பு கண்டறிந்துள்ளது, ஆனால் ஜனாதிபதித் தேர்தலில், பதிலளித்தவர்களில் சுமார் 35% பேர் ஜெலென்ஸ்கிக்கும், சுமார் 25% பேர் ஜலுஷ்னிக்கும் வாக்களிப்பார்கள். மூலம்: மதிப்பீடு சமூகவியல் குழுவால் ஆகஸ்ட் 21-23, 2025 அன்று நடத்தப்பட்ட ஒ…
-
- 0 replies
- 126 views
-