உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26662 topics in this forum
-
பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலுக்குள் பல சிரமங்களை எதிர்கொள்கிறார். கட்டுரை தகவல் பால் ஆடம்ஸ் பிபிசி 4 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் போர் தொடர்கிறது. மறுபுறம், இஸ்ரேல் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படும் நிலையை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதாகத் தெரிகிறது. இஸ்ரேல், நிறவெறி கொள்கை காரணமாக உலகளவில் புறக்கணிக்கப்பட்ட 'தென்னாப்ரிக்கா' காலத்திற்கு மீண்டும் செல்கிறதா? அந்நேரத்தில் அரசியல் அழுத்தமும், பொருளாதாரம், விளையாட்டு, கலாசார தளங்களில் தென்னாப்ரிக்காவுக்கு விதிக்கப்பட்ட புறக்கணிப்பும், அந்தக் கொள்கையை கைவிட நிர்பந்தித்தன. அல்லது, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி அரசாங்கத்தால் தனது நாட்டின் சர்வதேச நிலையை நிரந்தரமாக சேதப்பட…
-
- 0 replies
- 174 views
- 1 follower
-
-
Published By: Digital Desk 3 17 Sep, 2025 | 11:36 AM பாகிஸ்தானின் பிரபல குழந்தை நட்சத்திரமான உமர் ஷா ( Umar Shah) தனது 15 வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் அந்நாட்டு ரசிகர்களையும், பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபல 'ஜீதோ பாகிஸ்தான்' (Jeeto Pakistan) தொலைக்காட்சி தொடர் உட்பட பல நிகழ்ச்சிகளில் நடித்து வந்த உமர் ஷா, தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 25 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது என்பது மிகவும் அரிதானது. இந்நிலையில், சிறு வயதிலேயே உமர் ஷா உயிரிழந்தது பாகிஸ்தானில் உள்ள ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உமர் ஷாவின் சகோதரரும், பிரபல டிக்டொக் நட்சத்திரமுமான அகமது ஷா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் …
-
- 0 replies
- 148 views
- 1 follower
-
-
குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மிகப்பெரிய போராட்டம்! மத்திய லண்டன் சனிக்கிழமையன்று (14) அண்மைய பிரித்தானிய வரலாற்றில் மிகப்பெரிய வலதுசாரி ஆர்ப்பாட்டங்களில் ஒன்றைக் கண்டது. குடியேற்ற எதிர்ப்பு ஆர்வலர் டோமி ரொபின்சனின் பதாகையின் கீழ் 100,000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்றனர். ஆர்ப்பாட்டங்களின் போது பல அதிகாரிகள் தாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். “Unite the Kingdom” அணிவகுப்பு என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வில் சுமார் 110,000 பேர் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், போராட்டத்தின் வான்வழி காட்சிகள் மத்திய லண்டன் வீதிகளின் சில கிலோ மீட்டர்கள் போராட்டக்காரர்களால் நிரம்பி வழிவதைக் காட்டியது. இது அதிகாரிகளால் எண்ணிக்கையை குறைத்த…
-
- 9 replies
- 692 views
- 1 follower
-
-
இங்கிலாந்து சென்றடைந்தார் டெனால்ட் ட்ரம்ப்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது வரலாற்று சிறப்புமிக்க இரண்டாவது அரசு பயணமாக செவ்வாய்க்கிழமை (16) இங்கிலாந்து சென்றடைந்துள்ளார். அரச கொண்டாட்டங்கள், வர்த்தக பேச்சுவார்த்தைகள் மற்றும் சர்வதேச அரசியல் ஆகியவற்றின் கலவையாக இந்த விஜயம் அமைகிறது. செவ்வாய்க்கிழமை மாலை அமெரிக்க ஜனாதிபதி லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் தரையிறங்கினார். அங்கு அவர் விமானத்தில் இருந்து இறங்கும் போது, அவரை இங்கிலாந்தின் புதிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோர் வரவேற்றனர். மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா புதன்கிழமை (17) லண்டனுக்கு அருகிலுள்ள வின்ட்சர் கோட்டைக்கு ஜனாதிபதி ட்ரம்ப்பையும், முதல் பெண்மணியையும் வரவேற்பார்கள். அங்கு அவர்கள் வி…
-
- 0 replies
- 108 views
-
-
அவுஸ்திரேலியாவின் கான்பெராவில் உள்ள ஒரு வீட்டின் வாகனம் பழுது பார்க்கும் இடத்தில் இயங்கும் ஒரு இந்திய கடைக்கு எதிராக இலங்கையர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். குறித்த கடை 2023ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மேலும் உறைந்த உணவுகள் உட்பட பல்வேறு பொருட்கள் அங்கு விற்பனை செய்யப்படுகின்றன. கடையில் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இருப்பதும், அவர்களின் கவனக்குறைவான வாகன நிறுத்துமிடமும் அந்தப் பகுதியில் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். ஆபத்தான சூழ்நிலை கடைக்கு பொருட்களை கொண்டு செல்லும் லொறிகள் வீதியில் பயனாளர்களுக்கு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியுள்ளன. காலை 6:30 மணி முதல் இரவு 11:00 மணி வரை கடை இயங்குகிறது, மேலும் பொருட்கள…
-
-
- 5 replies
- 505 views
-
-
பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, உச்சிமாநாட்டிற்கு முன்பாக கத்தார் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினர். கட்டுரை தகவல் சந்தீப் ராய் பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அரபு நாடுகளிடையே நேட்டோ போன்ற ஒரு ராணுவ கூட்டணியை உருவாக்கும் முயற்சி வேகமெடுத்து வருவதாகத் தெரிகிறது. கத்தாரில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் குறித்து விவாதிக்க அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் தோஹாவில் இன்று அவசர உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக நேற்று நடந்த கூட்டத்தில் அந்தந்த நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்தநிலையில் இன்று நடக…
-
-
- 3 replies
- 398 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, எஸ்சிஓ உச்சிமாநாட்டில் புதின், மோதி, ஜின்பிங் கட்டுரை தகவல் டாம் லேம் பிபிசி மானிட்டரிங் 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உச்சிமாநாட்டிற்காக தலைவர்கள் சீனாவின் தியான்ஜினில் சந்தித்தபோது புதிய வளர்ச்சி வங்கி தொடங்குவதற்கான திட்டம் இறுதி செய்யப்பட்டது. சீனா நீண்ட காலமாக இதனை முன்னிறுத்தி வருகிறது. எஸ்சிஓவின் இந்த வளர்ச்சி வங்கிக்கான சாத்தியங்களை சீன ஊடகங்கள் புகழ்ந்துள்ளன. இந்த வங்கி இயற்கை வளம் மிக்க எஸ்சிஓ உறுப்புநாடுகளில் உள் கட்டமைப்பு வளர்ச்சிக்கு நிதியுதவி வழங்க முடியும் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த வங்கி சீனாவுக்கும் மத்திய ஆசியாவுக்குமான பொருளாதார இணைப்பை வலுப்படுத்தி, யூரேசியாவில் (ஆசியா மற…
-
-
- 3 replies
- 364 views
- 1 follower
-
-
வெளிநாட்டு தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்தாலோ, பகிர்ந்தாலோ மரண தண்டனை: வட கொரியா குறித்து ஐ.நா. அறிக்கை 13 Sep, 2025 | 01:08 PM வட கொரியாவில், தென் கொரியா உள்ளிட்ட வெளிநாட்டுத் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பது அல்லது பகிர்வது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. இதுகுறித்து வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. வட கொரிய அரசு, புதிய தொழில்நுட்பங்களின் உதவியுடன் மக்களின் அன்றாட நடவடிக்கைகளை மிகவும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இதன் விளைவாக, தண்டனைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைமுறைக்கு வந்த புதிய சட்டங்கள், அந்நாட்டுக் குடிமக்களின் வாழ்க்…
-
- 3 replies
- 269 views
- 1 follower
-
-
டிரோன்கள் நவீன போர் சூழலை எவ்வாறு மாற்றுகின்றன என்பது குறித்து விவரிக்கிறது இந்த காணொளி.
-
- 0 replies
- 184 views
- 1 follower
-
-
மியன்மாரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 18 மாணவர்கள் பலி! 14 Sep, 2025 | 10:37 AM மியன்மார் ராணுவம் நாட்டின் மேற்கு ரக்கைன் மாநிலத்தில் உள்ள பாடசாலையொன்றின் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் சுமார் 18 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள் என ஆயுதக் குழு மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் 17 முதல் 18 வயதுடைய மாணவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. துற்போதைய நிலை குறித்து முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை. குறித்த பகுதியில் இணையம் மற்றும் தொலைபேசி சேவைக்கான அணுகல் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. AA என்ற சிறுபான்மை இயக்கத்தின் இராணுவப் பிரிவொன்றினால் குறித்த…
-
- 0 replies
- 129 views
-
-
பாலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வை ஏற்படுத்தும் "நியூயோர்க் பிரகடனம்": இலங்கை உள்ளிட்ட 142 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு 13 Sep, 2025 | 12:06 PM பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண்பது மற்றும் இரு-நாடுகள் தீர்வை செயல்படுத்துவது குறித்த நியூயோர்க் பிரகடனத்தை ஆதரிக்கும் தீர்மானத்தை ஐ.நா. பொதுச் சபை ஏற்றுக்கொண்டுள்ளது. நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில், காசா போருக்கு அமைதியான தீர்வை ஏற்படுத்தும் "நியூயோர்க் பிரகடனம்" மீது வெள்ளிக்கிழமை (13) வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பின் முடிவுகளின் படி, தீர்மானத்திற்கு ஆதரவாக 142 நாடுகள் வாக்களித்திருந்தன. எதிராக 10 நாடுகள் வாக்களித்திருந்தன. 12 நாடுகள் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தன. பிரான்ஸ…
-
- 1 reply
- 255 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Zona Arqueológica Caral படக்குறிப்பு, பெருவின் பாலைவன மலைப்பகுதிகளில் தொல்பொருள் ஆய்வாளர்கள் 3,800 ஆண்டுகள் பழமையான ஒரு நகரத்தை கண்டுபிடித்துள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர்,ஹீதர் ஜாஸ்பர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பெருவின் பாலைவன மலைப்பகுதிகளில் தொல்பொருள் ஆய்வாளர்கள் 3,800 ஆண்டுகள் பழமையான ஒரு நகரத்தை கண்டுபிடித்துள்ளனர். இது அமெரிக்க நாகரிகத்தின் தொடக்கத்தைப் பற்றிய நம்முடைய புரிதலை மாற்றக்கூடும். லிமாவிலிருந்து நான்கு மணி நேர வடக்கில் உள்ள சூப் பள்ளத்தாக்கு, காற்று வீசும் வெறிச்சோடிய சமவெளி, இடிந்து போன அடோப் சுவர்கள், வெப்பம் மிளிரும் வறண்ட மலைச்சரிவுகள் போன்ற அனைத்தும் அங்கு வாழ்வதற்கே பொருத்தமில்லாத சூழலை உருவாக்குகின்றன. ஆனால், இவ்வளவு வறட்சியான நிலத்…
-
- 0 replies
- 232 views
- 1 follower
-
-
இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி : அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை சந்தித்தார் கட்டார் பிரதமர் 13 Sep, 2025 | 09:48 AM இஸ்ரேல் அண்மையில் கட்டாரின் தலைநகரான டோஹாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரின் சந்திப்பு ஒன்றை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலுக்குப், கட்டார் பிரதமர் ஷேக் முஹம்மது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை நியூயார்க்கில் சந்தித்துப் பேசினார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முன்மொழிந்த புதிய ஒப்பந்தம் குறித்து விவாதிப்பதற்காக, டோஹாவில் நடைபெற்ற ஹமாஸ் சந்திப்பைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், காசாவில் போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளைப் பாதிக்கும் என அமெரிக்கா கவலை தெரிவித்தது. இந்த வார தொடக்கத்தில…
-
- 0 replies
- 106 views
-
-
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை! இராணுவப் புரட்சிக்கு சதி செய்த குற்றச்சாட்டில் பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் மற்றும் மூன்று மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி குற்றவாளி என்று தீர்ப்பளித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர், ஐந்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழு மேற்கண்ட தண்டனையை வழங்கியது. 2022 தேர்தலில் இடதுசாரி போட்டியாளரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிடம் தோல்வியடைந்த பின்னர், ஆட்சியில் தொடர்ந்தும் இருப்பதை நோக்காக் கொண்டு ஒரு சதித்திட்டத்தை வழிநடத்தியதற்காக அவர் குற்றவாளி என்று அவர்கள் தீர்ப்பளித்தனர். நான்கு நீதிபதிகள் அவரை குற்றவாளி எனக் கண்டறிந்தனர், ஒருவர் அவரை விடுவிக்க வாக…
-
- 2 replies
- 179 views
- 1 follower
-
-
இனி பாலஸ்தீன நாடு கிடையாது : அந்த நிலம் எங்களுடையது - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு 12 Sep, 2025 | 11:05 AM மேற்குக் கரையில் சர்ச்சைக்குரிய குடியேற்றத் திட்டமான “E1” விரிவாக்கத்திற்கான ஒப்பந்தத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, இனி பாலஸ்தீன நாடு என்ற ஒன்று இல்லை என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார். "இந்த இடம் எங்களுக்கு மட்டுமே சொந்தமானது" என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேற்கு கரையில் உள்ள மாலே அடுமிம் குடியேற்றப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் பேசிய நெதன்யாகு, "நமது வாக்குறுதிகள் நிறைவேறி வருகின்றன. இனி பாலஸ்தீன நாடு என்ற ஒன்று இருக்காது. இந்த நிலம் எங்களுடையது மட்டுமே. இங்கு இன்னும் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்படும். நமது க…
-
-
- 3 replies
- 344 views
-
-
டிரம்ப் வர்த்தக ஒப்பந்தத்திற்காக வான் டெர் லேயனை கடுமையாக விமர்சிக்க நாடாளுமன்றத் தலைவர்கள் தருணத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஐரோப்பிய ஆணையத் தலைவர் தனது டிரான்ஸ் அட்லாண்டிக் ஒப்பந்தத்தை ஆதரித்த பிறகு ஐரோப்பிய சட்டமியற்றுபவர்களிடமிருந்து கடுமையான சவாலைச் சந்திக்கிறார். பகிர் இலவச கட்டுரை பொதுவாக சந்தாதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 10, 2025 அன்று பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் 'ஸ்டேட் ஆஃப் தி யூனியன்' விவாதத்தில் உர்சுலா வான் டெர் லேயன் உரையாற்றுகிறார். | ரொனால்ட் விட்டெக்/EPA செப்டம்பர் 10, 2025 12:34 pm CET அன்டோனியா ஜிம்மர்மேன் மற்றும் கோயன் வெர்ஹெல்ஸ்ட் மூலம் புதன்கிழமை தனது வருடாந்திர யூனியன் உரையில் இந்த ஒப்பந்தத்தை ஆ…
-
- 0 replies
- 98 views
-
-
உலகின் மிகப் பெரும் செல்வந்தர் பட்டத்தை இழந்தார் ஈலோன் மஸ்க். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான ஈலோன் மஸ்க், உலகின் மிகப் பெரும் செல்வந்தர் என்ற பட்டத்தை இழந்துள்ளார். ஒரக்கிள் மென்பொருள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன், அவரை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இது குறித்து ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டு எண் தெரிவித்ததாவது, புதன்கிழமை காலை நிலவரப்படி எலிசனின் சொத்து மதிப்பு 393 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. இதேவேளை மஸ்க்கின் சொத்து மதிப்பு 385 பில்லியன் டொலர்களாகக் குறைந்துள்ளது. ஒரக்கிள் பங்குகள் 40 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்ததே எலிசன் 1 ஆவது இடத்தைப் பிடிப்பதற்குக் காரணமாகும். இவ்வாண்டு டெஸ்லா பங்குகள் சரிவு கண்டுள்ளமையும…
-
- 4 replies
- 299 views
- 1 follower
-
-
இஸ்ரேல் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது. மேலும்..... Israel carries out strike on senior Hamas leaders in Qatari capital Israel has carried out a strike on senior Hamas leaders in Qatar's capital Doha A Hamas official says its negotiating team was targeted during a meeting Explosions are heard and smoke is rising above Doha Israel carries out strike on senior Hamas leaders in Qatari capital - BBC News
-
-
- 13 replies
- 785 views
- 2 followers
-
-
பிரான்சில் மக்கள் போராட்டம் : 250 பேர் கைது, 80 ஆயிரம் பொலிஸார் குவிப்பு 11 Sep, 2025 | 10:19 AM பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தலைமையிலான அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதன்கிழமை (10), பிரான்ஸின் தலைநகர் பாரிஸ் உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் மக்கள் வீதிகளில் இறங்கி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் வாகனங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு தீ வைத்துள்ளனர். பொது விடுமுறை நாட்களைக் குறைத்தல், ஓய்வூதியத் தொகையை உயர்த்தாமை மற்றும் கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசியத் துறைகளுக்கான நிதியைக் குறைப்பது போன்ற கடுமையான விடயங்கள் அடங்கிய வரவு - செலவுத்திட்டத்தை பிரான்ஸ் அரசு நிறைவேற்ற முயற்சிப்பது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மெக்ரோ…
-
- 0 replies
- 176 views
-
-
செப்டம்பர் 11 தாக்குதல்களின் 24வது ஆண்டு நிறைவு 11 September 2025 அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் மீதான பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்து இன்றுடன் 24 ஆண்டுகள் நிறைவடைகின்றன. செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 11, 2001 அன்று, தற்கொலை குண்டுதாரிகள் அமெரிக்க பயணிகள் ஜெட் விமானங்களைக் கடத்திச் சென்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அமெரிக்கா மீது பறந்து கொண்டிருந்த நான்கு விமானங்கள் ஒரே நேரத்தில் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டன. பின்னர் இரண்டு விமானங்கள் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் மீது மோதியது, முதல் தாக்குதல் நடந்த 17 நிமிடங்களுக்குப் பிறகு இரண்டாவது தாக்குதல் நடந்தது. கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்தன, ம…
-
- 0 replies
- 157 views
-
-
பிரான்சின் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெகோர்னு நியமனம் 10 Sep, 2025 | 09:52 AM பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன், பிரதமர் பிரான்சுவா பய்ரூ அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த 24 மணி நேரத்துக்குள், தனது நெருங்கிய கூட்டாளி செபாஸ்டியன் லெகோர்னுவை (39) புதிய பிரதமராக நியமித்துள்ளார். மூன்று ஆண்டுகளாக பாதுகாப்புத் துறையை கவனித்த லெகோர்னு, மக்ரோனின் ஏழாவது பிரதமர் ஆவார். அவருக்கு அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்து அடுத்த வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பய்ரூ முன்வைத்த 44 பில்லியன் யூரோ செலவு குறைப்புத் திட்டம் நம்பிக்கை வாக்கெடுப்பில் 364–194 வாக்குகள் வித்தியாசத்தில் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் இராஜினாமா செய்தார். லெகோர்னுவின்…
-
- 1 reply
- 210 views
-
-
'அரை முழம் மல்லிகைப் பூவுக்கு ரூ. 1 லட்சம்'; விமான நிலையத்தில் நடிகை நவ்யா நாயருக்கு அபராதம் Navya nair/Facebook நடிகை நவ்யா நாயர் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் மல்லிகைப் பூவை கொண்டு சென்றதற்காக கேரள நடிகை நவ்யா நாயருக்கு அந்நாட்டு விமான நிலைய அதிகாரிகள் 1.14 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அபராதத்தைச் செலுத்துவதற்கு 28 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் நடிகை நவ்யா நாயர் தெரிவித்துள்ளார். விமானத்தில் மல்லிகைப் பூவை அணிந்து செல்வதில் என்ன சிக்கல்? ஆஸ்திரேலிய நாட்டின் சட்டம் என்ன சொல்கிறது? ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் வசிக்கும் மலையாளிகள் கூட்டமைப்பு சார்பில் கடந்த 6 ஆம் தேதி ஓணம் …
-
- 2 replies
- 411 views
- 1 follower
-
-
பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு. பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி, பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளது. சமீபத்தில் ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியின் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்திருந்தார். பல ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சியின் முடிவுகள் கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவ பரிசோதனையில் இருந்தது எனவும் தற்போது இந்த ஊசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாகவும் விரைவில் அரசின் ஒப்புதலுக்கு பின்னர் பயன்பாட்டுக்கு வரும் எனவும் ரஷ்ய மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பின் தலைவர் வெர…
-
-
- 35 replies
- 1.6k views
- 2 followers
-
-
இந்தியா, சீனாவுக்கு அதிக வரியை விதிக்குமாறு ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்கா வலியுறுத்தல்! இந்தியா, சீனாவுக்கு அதிக வரியை விதிக்குமாறு ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்தது. இந்தியா எண்ணெய் வாங்குவதன் மூலம் அந்த நிதியை உக்ரேன் போரில், ரஷ்யா பயன்படுத்துவதாக, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு அடிபணியாத இந்தியா தொடர்ந்து…
-
- 1 reply
- 128 views
-
-
ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதி தொடர்பாக டெல்லி மீது டிரம்ப் தண்டனை வரிகளை விதித்ததால், ஜூலை மாதத்தில் இந்தியா உக்ரைனின் முன்னணி டீசல் சப்ளையராக மாறியது. இந்திய வம்சாவளி டீசல் பல வழிகள் வழியாக உக்ரைனை அடைகிறது. கணிசமான பகுதி ருமேனியாவிலிருந்து டானூப் நதியில் டேங்கர் டெலிவரி மூலம் வருகிறது. சுத்தந்த பத்ரா எழுதியது புதுப்பிக்கப்பட்டது:ஆகஸ்ட் 30, 2025 11:39 IST எங்களை பின்தொடரவும் ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதி தொடர்பாக டெல்லி மீது டிரம்ப் தண்டனை வரிகளை விதித்ததால், ஜூலை மாதத்தில் இந்தியா உக்ரைனின் முன்னணி டீசல் சப்ளையராக மாறியது. ஜூலை 2025 இல், இந்தியா மற்ற சப்ளையர்களை முந்தி உக்ரைனின் மிகப்பெரிய டீசல் மூலமாக மாறியுள்ளது , இது இறக்குமதியில் 15.5 சதவீதமாகும். உக்ரைனிய எண்ணெய் சந்த…
-
-
- 9 replies
- 573 views
-