Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உக்ரைன் அகதிகளை,,, வேலைக்கு அமர்த்த, பிரித்தானிய நிறுவனங்கள் முயற்சி! உக்ரைனிய அகதிகள் பிரித்தானியாவிற்கு வரத் தொடங்கும் போது, முக்கிய பிரித்தானிய வணிக நிறுவனங்கள் அவர்களுக்கு வேலைகளை வழங்க வரிசையில் காத்து நிற்கின்றன. ரஷ்யாவின் படையெடுப்பால் வெளியேற்றப்பட்டவர்கள் பிரித்தானியாவிற்கு வருவதை எளிதாக்க 45க்கும் மேற்பட்ட பெரிய வணிகங்களின் குழு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கிறது. மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர், அசோஸ், லஷ் மற்றும் ஆட்சேர்ப்பு நிறுவனமான ரொபர்ட் வால்டர்ஸ் ஆகியவை இதில் ஈடுபட்டுள்ள சில நிறுவனங்கள் ஆகும். உக்ரைன் அகதிகள் நெருக்கடிக்கு அதன் பிரதிபலிப்பின் வேகம் மற்றும் அளவு குறித்து அரசாங்கம் விமர்சிக்கப்பட்டுள்ளது. எண்டர்பிரை…

  2. மரியண்ணா ஸ்ப்ரிங் பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, 2020 இல் எடுக்கப்பட்ட யுக்ரேனிய குறும்படம் ஒன்றின் காட்சி, போர்சூழலில் எடுக்கப்பட்டதாக பரப்பப்பட்டது. யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 19 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அதுதொடர்பான பொய்ச்செய்திகளும் பலவிதமாகப் பரவி வருகின்றன. இந்த நிலையில் இதுபோன்ற பொய்ச்செய்திகளைத் தவிர்ப்பது எப்படி என்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. போர் தொடங்கியதிலிருந்து, போலியான செய்திகளும், தவறான தகவல்களுடன் கூடிய வீடியோக்களும் சமூக வலைதளங்களில் ஏராளமாக பரவி நம் செல்பேசிக…

  3. யுக்ரேன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக குதிக்கிறதா சீனா? அமெரிக்கா புது எச்சரிக்கை 14 மார்ச் 2022, 09:52 GMT புதுப்பிக்கப்பட்டது 55 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் சீனா உதவினால், கடுமையான "விளைவுகளை" சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா கூறுகிறது, என்று அமெரிக்க ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி, படையெடுப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்யா சீனாவிடம் உதவி கோரியுள்ளதாக பல அமெரிக்க செய்தி நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. ஆனால் வாஷிங்டனில் உள்ள சீன தூதரகம், ரஷ்யாவின் இந்த கோரிக்கை குறித்து தங்களு…

  4. உக்ரேன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த சீனாவிடம் இராணுவ உதவியை கோரியது ரஷ்யா ! சீனாவிடம் முதன்முறையாக இராணுவ உபகரணங்கள் மற்றும் உதவிகளை ரஷ்யா கோரியுள்ளது. உக்ரேன் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு முதன்முறையாக சீனாவிடம் இருந்து டிரோன்கள் உள்ளிட்ட இராணுவ உபகரணங்கள் மற்றும் உதவிகளை ரஷ்யா கோரியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து, வொஷிங்டனில் இருக்கும் சீன தூதரக செய்தித்தொடர்பாளர் பதில் அளிக்கையில், “ரஷ்யாவுக்கு சீனா உதவுவது குறித்த எந்த தகவலையும் நான் இதுவரை கேள்விப்படவில்லை” என்று மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் திங்கட்கிழமையன்று ரோம் சென்று சீனாவின் உயர்மட்ட தூதரக அதிகாரி யாங் ஜீச்சியை ச…

  5. உக்ரைனின்... நகர மேயர்கள், கடத்தப்பட்ட விவகாரம்: ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்! உக்ரைனின் நகர மேயர்கள் கடத்தப்பட்ட விவகாரம் குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல் ஃபோன்டெல்லெஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். தென்கிழக்கு நகரமான டினிப்ரோ நகர மேயரான யேவென் மட்வியேவ் என்பவரை, ஆயுதமேந்திய நபர்கள் கடத்திச் சென்றதாக உக்ரைனிய அதிகாரிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தனர். அதேபோல் கடந்த வெள்ளிக்கிழமையன்று மெலிடோபோலின் மேயர் இவான் ஃபெடோரோவ் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல் ஃபோன்டெல்ல…

  6. ரஷ்யா- உக்ரைனுக்கு இடையேயான நான்காவது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை இன்று! ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நான்காவது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. ரஷ்யாவின் பேச்சுவார்த்தையாளரும், ஜனாதிபதி புடினின் செய்தித் தொடர்பாளருமான டிமிட்ரி பெஸ்கோவ், காணொளி அழைப்பு மூலம் பேச்சுவார்த்தை நடைபெறும் என உறுதிப்படுத்தினார். உக்ரைனின் பேச்சுவார்த்தையாளரும், ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியின் ஆலோசகருமான மைகைலோ பொடோலியாக் ரஷ்யாவின் இந்த தகவலை உறுதிப்படுத்தினார். மைகைலோ பொடோலியாக் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட காணொளியில், ‘ரஷ்யா ஆக்கப்பூர்வமாக ஈடுபடத் தொடங்கியுள்ளது. ரஷ்யா இப்போது தன்னைச் சுற்றி நடப்பதை போதுமான அளவு உணரத் தொடங்கியுள…

  7. உக்ரேனில் ஊடகவியலாளர் சுட்டுக்கொலை உக்ரேனின் கீவ் நகரின் ரஷ்ய படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அமெரிக்க ஊடகவியலாளர் என கீவ் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலைநகர் கீவின் வடமேற்கு புறநகர் பகுதியான இர்பினில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறித்த ஊடகவியலாளர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/124093

  8. சேகுவேராவை சுட்டுக்கொன்ற இராணுவ வீரர் மரணம் சேகுவேராவை கொல்ல முயன்றபோது அவர், நீங்கள் ஒரு மனிதரை கொல்ல போகிறீர்கள். எனவே பதட்டமின்றி செயல்படுங்கள் என ஆறுதல் கூறியதாக அவரை சுட்டுக்கொன்ற மரியோ தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் புரட்சியாளர் சேகுவேரா. இவர் ஆர்ஜென்டினாவில் பிறந்தவர். பனிப்போர் காலத்தின்போது பொலிவியா நாடுகளில் அந்த நாட்டு இராணுவத்துக்கு எதிராக கொரில்லா போரில் ஈடுபட்டு வந்தார். அவரை அமெரிக்க சி.ஐ.ஏ. அமைப்பினரின் உதவியுடன் பொலிவியா இராணுவம் கடந்த 1967 ஆம் ஆண்டு கைது செய்தது. காயத்துடன் பிடிபட்ட சேகுவேரா, லா ஷிகுவேரா என்ற கிராமத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இரவு முழுவதும் தங்க வைக்கப்பட்டிருந்தார். கம்யூனிஸ்ட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை…

    • 3 replies
    • 594 views
  9. ரஷ்யாவுடனான மோதலில்... இதுவரையில் 1,300 படையினர், கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு! ரஷ்யாவுடனான மோதலில் இதுவரையில் 1,300 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் சுமார் 600 ரஷ்ய படையினர் உக்ரைனிடம் சரணடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் உக்ரனின் கியிவ் பகுதியிலுள்ள இராணுவ விமான நிலையத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் சுமார் 13 ஆயிரம் பேர் நேற்று மனிதாபிமான அடிப்படையில் வெளியேற்றப்பட்டதாக உக்ரைன் துணை பிரதமர் அறிவித்துள்ளார். இதேவேளை, உக்ரைன் வான் பரப்பில் விமானங்கள் பறப்பதற்கு தடைவிதிக்க நேட்டோ நடவடிக்கை எ…

  10. தாம்... களமிறங்கினால், மூன்றாம் உலகப்போர் நிகழும் என... அமெரிக்கா எச்சரிக்கை உக்ரைன் போரில், ரஷ்ய படைகளுக்கு எதிராக அமெரிக்க படைகள் போரிடுமாயின், அது மூன்றாம் உலகப் போரைக் குறிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். ஆகவே உக்ரைனில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் தமது நாடு நேரடியாக தலையிடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனில் அமெரிக்காவின் உயிரியல் ஆயுதங்கள் கையாளப்படுவதாக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் ரஷ்யா குற்றம் சாட்டிய நிலையில், ஜோ பைடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நேட்டோ பிரதேசத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஒன்றுபட்ட நேட்டோவின் முழு பலத்துடன் பாதுகாப்போம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார். ஆகவே உக்ரைனில் இருந…

  11. 25 இலட்சம் பேர் உக்ரேனிலிருந்து அகதிகளாக வெளியேற்றம்..! ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்குப் பின்னர் உக்ரேனில் இருந்து இதுவரை 25 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐக்கியநாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையம் தெரிவித்துள்ளது. உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரேன் நாட்டையே சீர்குலையச் செய்துள்ளது. அந்த நாட்டின் குடிமக்கள், தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக நாட்டை விட்டு வெளியேறி அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைகின்ற அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போரால் உக்ரேனை விட்டு இதுவரை 25 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளனர். இது இரண்டாவ…

  12. ரஷ்யாவில் இன்ஸ்டாகிராம் சேவை முடக்கம் இன்ஸ்டாகிராம் சேவையை முடக்குவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரேனில் தொடர்ந்து 17-வது நாளாக ரஷ்யப் படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன. உக்ரேனின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய ரஷ்யா தற்போது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைக் கண்டிக்கும் வகையில் ரஷ்ய இராணுவத்தினருக்கு எதிராக பதிவு செய்யப்படும் வன்முறைக் கருத்துக்களை அனுமதித்த இன்ஸ்டாகிராம் செயலியின் சேவையை முடக்குவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மார்ச் 14 ஆம் திகதி முதல் ரஷ்யாவின் சில பகுதிகளில் இந்த முடக்கம் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராம் செயலியின் முக்கிய நிர்வாகியான ஆடம் மோசரி,’…

  13. செல்சியின் உரிமையாளர்... அப்ரமோவிச் உள்ளிட்ட, 7 பேரின் "£150 பில்லியன்" சொத்துக்கள் முடக்கப்பட்டன! அவர்களின் கைகளில் ”உக்ரேனிய மக்களின் இரத்தம்” என்ற வரையறைக்குள் குற்றம் சாட்டப்பட்ட கிரெம்ளின் சார்பு வர்த்தக குழாமின் தனிநபர்கள் மீதான தடையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான நெருங்கிய தொடர்பை பேணும் பிரிட்டனின் புகழ் பெற்ற உதைப்பந்தாட்ட கழகமான செல்சி (Chelsea FC) அணியின் உரிமையாளரான ரோமன் அப்ரமோவிச்சும் இணைக்கப்பட்டுள்ளார்.பிரித்தானிய அமைச்சரவையால் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட தடைகள் பட்டியலில் கிரெம்ளின் சார்பு வர்த்தக குழாமின் பிரதான பில்லியனர் என வர்ணிக்கப்படும், Chelsea FC உரிமையாளரின் சொத்துக்கள் முடக்கப்பட்டதோடு பயணத் தடையும் விதிக்கப்…

  14. தொடரும் மோதல் - ரஷ்யாவிற்கு பலத்த பாதிப்பு உக்ரேன் மற்றும் ரஷ்யா இடையேயான மோதல் 16-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. ரஷ்ய படைகள் உக்ரேனின் முக்கிய நகரங்களில் ஏவுகணை, மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதேநேரத்தில் ரஷ்யாவிற்கு உக்ரேனும் ஈடுகொடுத்து வருகிறது. இந்த போரில் இரு நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். அதே சமயம் உக்ரேனிலிருந்து அண்டை நாடுகளுக்கு இதுவரை 20 இலட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். உக்ரேன்-ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 2,800-க்கு மேற்பட்ட உக்ரேன் இராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா இராணுவ அமைச்சகம் தெரிவித்துள்…

    • 7 replies
    • 627 views
  15. 107 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட கப்பல் நீரில் மூழ்கி காணாமல்போன 'எண்டூரன்ஸ்' என்ற கப்பலின் சிதைவுகள் 107 ஆண்டுகளுக்கு பின்னர் ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1915 பெப்ரவரியில் ஆண்டு தென்னாபிரிக்காவின் நகரில் இருந்து புறப்பட்ட இந்த மரக்கப்பல் வெடல் கடலில் மூழ்கியதிலிருந்து, கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் தென்முனைப் பெருங்கடலின் ஒரு பகுதியான வெடல் கடலின் 9,868 அடி (3,008 மீட்டர்) ஆழத்தில் கப்பல் இவ்வாரம் கண்டுபிடிக்கப்பட்டதாக போக்லாந்து கடல்சார் பாரம்பரிய அறக்கட்டளை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/123849

  16. உக்ரைனில்... இரசாயன அல்லது உயிரியல் ஆயுத தாக்குதலுக்கு, ரஷ்யா திட்டமிடுகிறது? அமெரிக்கா எச்சரிக்கை! உக்ரைனில் இரசாயன அல்லது உயிரியல் ஆயுத தாக்குதலுக்கு ரஷ்யா திட்டமிட்டுக் கொண்டிருக்கலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஆகையால், நாம் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வெள்ளை மாளிகை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் ஜென் சாகி கூறுகையில், ‘அமெரிக்க உயிரியல் ஆயுத ஆய்வகங்கள் மற்றும் உக்ரைனில் ரசாயன ஆயுத மேம்பாடு பற்றிய ரஷ்யாவின் கூற்றுகள் அபத்தமானவை. இந்த பொய்யான கூற்றுகள், மேற்கொண்டு அவர்கள் நடத்தவிருக்கும் காரணமற்ற தாக்குதல்களை நியாயப்படுத்த கூறும் வெளிப்படையான தந்திரம்’ என கூறினார். உயிரியல…

  17. ரஷ்யா- உக்ரைனுக்கிடையிலான மூன்றாவது கட்ட அமைதிப் பேச்சுவார்தையும் தோல்வியில் முடிந்தது! ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் நடைபெற்ற மூன்றாவது கட்டப் அமைதிப் பேச்சுவார்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவுக்கும் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபாவுக்கும் இடையே துருக்கியின் துறைமுக நகரான ஆன்டால்யாவில் நேற்று (வியாழக்கிழமை) பேச்சுவார்த்தை நடைபெற்றது. உக்ரைனில் போர் நடைபெற்று வரும் பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான பாதுகாப்பு வழித்தடங்கள் அமைப்பது, அங்கு போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக விவாதிப்பதற்காக அந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. எனினும், முக்கிய விவகாரங்க…

  18. அமெரிக்கா, பிரிட்டன் உள்பட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியது ரஷியா உக்ரைன், ரஷியா இடையிலான போர் 12 நாட்களை எட்டியுள்ளது. இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. உக்ரைனில் உள்ள ராணுவ தளங்களை அழிக்கும் முயற்சியில் ரஷியா ஈடுபட்டு வருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.இந்நிலையில், ரஷியா 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ரஷிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் உக்ரைன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், சுவிட்சர்லாந்து, அல்பேனியா, ஐஸ்லாந்து, மொனாக்கோ, நார்வே உள்ளிட்ட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட…

  19. உக்ரைனுக்கு... போர் விமானங்களை அனுப்ப போலந்து திட்டம் – அமெரிக்கா மறுப்பு ! ஜேர்மனியில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் ஊடக உக்ரைனுக்கு சோவியத் தயாரிப்பான Mig-29 போர் விமானங்கள் அனைத்தையும் அனுப்பும் போலந்தின் யோசனையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யாவுடன் போட்டியிடும் வான்வெளியில் பறப்பது முழு நேட்டோ கூட்டணிக்கும் கடுமையான கவலையை ஏற்படுத்தும் என கூறி பென்டகன் அதனை மறுத்துள்ளது. ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதற்கு இராணுவ ஜெட் விமானங்களை வழங்குமாறு மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு போலந்து அழைப்பு விடுத்தது. உக்ரேனிய விமானிகள் உண்மையில் போலந்திற்குள் எல்லையைத் தாண்டி அவர்களை மீண்டும் உக்ரைனுக்குள் பறக்கவிட முடியும் என அரசியல் …

  20. ரஷ்யா மற்றும் உக்ரைன் வெளிவிவகார அமைச்சர்கள் துருக்கியில் சந்திப்பு ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் டிமிட்ரோ குலேபா ஆகியோர் துருக்கியில் சந்திப்பார்கள் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு பெப்ரவரி 24 ஆம் திகதி தொடங்கிய பின்னர் இருவருக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாக அமையவுள்ளது. இந்த சந்திப்பு மார்ச் 10 ஆம் திகதி நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இராஜதந்திர மட்ட தகவல்கள் மார்ச் 11 ஆம் திகதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்கள் இதுவரை சாதகமாக முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.…

  21. உக்ரைனில், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான... பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம்: ரஷ்யா தகவல்! உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையில், சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மரியா ஸகாரோவா கூறுகையில், ‘பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதற்கு பாதுகாப்பு வழித்தடம் அமைப்பது குறித்து உக்ரைன் பிரதிநிதிகளுடன் மேலும் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும். உக்ரைனின் தற்போதைய அரசைக் கவிழ்க்கும் நோக்கில் அங்கு இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இந்தப் போர் உக்ரைனின் இறையாண்மைக்கோ, அந்த நாட்டு மக்களுக்கோ எதிரானது அல்ல…

  22. டொன்பாஸ் மீது உக்ரைன் தாக்குதல் நடத்த திட்டம் – இரகசிய ஆவணத்தை வெளியிட்ட ரஷ்யா கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு இடங்கள் மீது தாக்குதல் நடத்த கியூவ் திட்டமிட்டுள்ளதாக இரகசிய ஆவணங்களை மேற்கோளிட்டு ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. டொன்பாஸில் உள்ள ரஷ்ய ஆதரவு பகுதிகள் மீது இராணுவத் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்ட ஆறு பக்கங்களை கொண்ட ஆவணங்களை அமைச்சு வெளியிட்டுள்ளது. இருப்பினும் உக்ரேனிய மொழியில் எழுதப்பட்ட குறித்த ஆவணங்களை மொழிபெயர்க்க முடியவில்லை என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு ஆகியவற்றை சுதந்திர நாடுகளாக கடந்த மாதம், ஜனாதிபதி புடின் அறிவித்தார். …

  23. ரஷ்ய விமானத்தை தடுத்து வைக்கலாம் – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு ! ரஷ்ய விமானங்கள், விண்வெளி மற்றும் விமான தொழில்நுட்ப ஏற்றுமதியை பாதிக்கும் புதிய தடைகளை பிரித்தானியா அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள், ரஷ்ய விமானங்களை பிரித்தானியாவில் தடுத்து வைப்பதற்கும், அவற்றை நாட்டில் பறக்கவிடுவது அல்லது தரையிறக்குவது சட்டப்படி குற்றம் என கூறப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் ரஷ்யாவிற்கும் கிரெம்ளினுக்கு நெருக்கமானவர்களுக்கும் மேலும் பொருளாதார வலியை ஏற்படுத்தும் என வெளிவிவகார செயலாளர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார். மேலும் தாம் ஒருபடி மேலே சென்று பிரித்தானியாவின் வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் செயல்படுவதை கிரிமினல் குற்றமாக ஆக்கியுள்ளது. https://athavannews.co…

  24. அவுஸ்திரேலியாவில் கன மழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு அவுஸ்திரேலியாவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் 2 மாகாணங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வடைந்துள்ளதுடன் மேலும் பலர் மாயமாகி உள்ளதாகவும் அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லையெனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடலோர பகுதியில் அமைந்துள்ள குயின்ஸ்லாந்து மற்றும் நியூசவுத்வேல்ஸ் ஆகிய மாகாணங்களில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்துவருகின்றது. அத்துடன் அங்கு அதிக மக்கள் தொகை கொண்ட 3 ஆவது நகரமும், குயின்ஸ்லாந்தின் தலைநகருமான பிரிஸ்போன் மற்றும் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தின் தலைநகர் சிட்டினி ஆகிய இரு நகரங்களும் கனமழையால…

  25. உக்ரேனின் மகப்பேறு வைத்தியசாலை மீது ரஷ்ய படைகள் தாக்குதல் உக்ரேனின் தெற்கு நகரமான மரியுபோலில் அமைந்துள்ள சிறுவர்கள் மற்றும் மகப்பேறு வைத்தியசாலை மீது ரஷ்ய படைகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரேன் குற்றம்சாட்டியுள்ளது. இதனால் வைத்தியசாலையின் கட்டிம் முழுமையாக சேதடைந்துள்ளதுள்ள நிலையில் உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் ரஷ்ய தாக்குதலின் விளைவாக, தாய்மார்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட குறைந்தது 17 பேர் காயமடைந்ததாக டொனெட்ஸ்க் பிராந்திய பொஸார் கூறியுள்ளனர். இந் நிலையில் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மரியுபோலில் உள்ள வைத்தியசாலை மீதான வான்வழித் தாக்குதலைக் கண்டித்துள்ளார். https://www.virakesari.lk/ar…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.