உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26678 topics in this forum
-
தைவான் தீவிபத்து - குறைந்தது 46 பேர் பலி தைவானில் உள்ள கௌஷியாங் நகரில் இருக்கும் 13 மாடி கட்டடம் ஒன்றில் நடந்த தீ விபத்தில் குறைந்தது 46 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். வியாழக்கிழமை அதிகாலை தீ விபத்து நடந்த இந்த கட்டடம் அடுக்குமாடி குடியிருப்பாகவும் வர்த்தக வளாகமாகவும் இயங்கியது என்று உள்ளூர் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை நேரத்தில் உண்டான தீயை அணைக்க 4 மணி நேரத்திற்கும் மேல் ஆனது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 79 பேரில் 14 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. த…
-
- 0 replies
- 548 views
-
-
நோர்வேயில்... வில் மற்றும் அம்புகளை எய்து, மக்கள் மீது தாக்குதல் -5 பேர் வரையில் உயிரிழப்பு! நோர்வேயில் வில் அம்புகளை எய்து மக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 5 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, சம்பவத்தோடு தொடர்படைய 37 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோர்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் தென்மேற்கில் காங்ஸ்பெர்க் நகரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் விம், அம்புடன் வந்த மர்ப நபர் மக்களை அம்புகள் எய்தி தாக்கியுள்ளார். மேலும் துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் 5 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
-
- 23 replies
- 1.4k views
-
-
பிரித்தானியாவில்... வேலை வாய்ப்பு காலியிடங்களின் எண்ணிக்கை, சாதனை அளவை எட்டியுள்ளது! பிரித்தானியாவில் வேலை வாய்ப்பு காலியிடங்களின் எண்ணிக்கை சாதனை அளவை எட்டியுள்ளதாக, சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஜூலை முதல் செப்டம்பர் வரை காலியிடங்கள் 1.1 மில்லியனை எட்டியுள்ளதாக, தேசிய புள்ளிவிபர அலுவலகம் தெரிவித்துள்ளது. இது 2001ஆம் ஆண்டு பதிவுகள் தொடங்கியதிலிருந்து மிக உயர்ந்த நிலை ஆகும். காலியிடங்களில் மிகப்பெரிய அதிகரிப்பு சில்லறை வணிகம் மற்றும் மோட்டார் வாகன பழுது ஆகியவற்றில் உள்ளது. தொற்றுநோய்க்கு முந்தைய 4 சதவீதத்துடன் ஒப்பிடும்போது பிரித்தானியாவின் வேலையின்மை வீதம் 4.5 சதவீதம் என மதிப்பிடப்பட்டது. ஓ.என்.எஸ். சம்பளப் பட்டியலில் உள்…
-
- 0 replies
- 366 views
-
-
ஆயுதங்களைப் அதிகரிப்பது... தற்காப்புக்காக மட்டுமே, போரைத் தொடங்குவதற்கு அல்ல: வடகொரிய தலைவர்! ஆயுதங்களைப் அதிகரிப்பது தற்காப்புக்காக மட்டுமே போரைத் தொடங்குவதற்கு அல்ல என வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் படி கேசிஎன்ஏ, ‘சுய பாதுகாப்பு 2021’ என்ற பெயரில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற பாதுகாப்பு கண்காட்சியைத் தொடங்கிவைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘தென் கொரியாவின் ஆயுதக் குவிப்பும், அமெரிக்காவின் விரோதக் கொள்கைகளுமே வடகொரியாவின் ஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகளுக்குக் காரணம்’ என கூறினார். பைடன் நிர்வாகம் பியோங்யாங்கிற்கு எந்தவிதமான விரோத நோக்கமும் இல்லை எ…
-
- 0 replies
- 253 views
-
-
ஆப்கானில் ஐ.எஸ்.கே. பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில்... தற்போது 17 சதவீத மாவட்டங்கள் உள்ளன! ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு சிம்ப சொப்பனமாக விளங்கும் ஐ.எஸ்.கே. பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் தற்போது 17 சதவீத மாவட்டங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே ஏற்படவிருந்த அரசியல் உடன்பாடு நோக்கி உலகின் கவனம் திரும்பிய நிலையில், தனது பலத்தைப் பெருக்கிக் கொண்டது ஐஎஸ்கே. இப்போது ஆப்கானிஸ்தானின் 17 சதவீத மாவட்டங்கள் ஐ.எஸ்.கே. கட்டுப்பாட்டில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஐ.எஸ்.கே. அமைப்பு குண்டுஸில் உள்ள மசூதியில் அண்மையில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் சுமார் 50 பேர் உயிரிழந்தனர். அதேபோல இந்த அமைப்புதான் ஒகஸ்ட்…
-
- 0 replies
- 210 views
-
-
வடகொரியாவின் கிம் ஜோங் உன்: 'அமெரிக்காவின் அச்சுறுத்தலை முறியடிக்க வீழ்த்த முடியாத ராணுவத்தை உருவாக்குவோம்' 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS எந்த நாட்டாலும் வீழ்த்த முடியாத ராணுவத்தை உருவாக்கப் போவதாக வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் கூறியுள்ளார். தென் கொரியாவின் ஆயுதக் குவிப்பும், அமெரிக்காவின் விரோதக் கொள்கைகளுமே வடகொரியாவின் ஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகளுக்குக் காரணம் என்றும் அந்நாட்டு அவர் தெரிவித்துள்ளார். தற்காப்புக்காக மட்டுமே ஆயுதங்களைப் பெருக்குவதாகவும் போரைத் தொடங்குவது வடகொரியாவின் நோக்கம் அல்ல எனவும் கிம் ஜோங் உன் கூறியுள்ளார். திங்கள்கிழமையன்று ஏவுகணைகள் உள்ளிட்டவ…
-
- 0 replies
- 355 views
- 1 follower
-
-
மூன்று அமெரிக்கர்களுக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2021ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு டேவிட் கார்ட் (David Card), ஜோஸ்வா ஆங்கிரிஸ்ட் (Joshua D Angrist), கியூடோ இம்பென்ஸ் (Guido W Imbens) ஆகிய மூன்று அமெரிக்க பொருளாதார வல்லுநர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் பொருளாதாரத்துக்காக டேவிட் கார்டு ஆற்றிய சிறப்பான பங்களிப்புக்கு விருது வழங்கப்படுகிறது. Analysis of Causal Relationships-க்கு அளித்த முறையான பங்களிப்புக்கு ஜோஸ்வா ஆங்கிரிஸ்ட் மற்றும் கியூடோ இம்பென்ஸ் ஆகியோருக்கு விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/115120
-
- 0 replies
- 308 views
-
-
தலிபான்களின் பிடியிலிருந்து... தப்பிய, ஆப்கான் பெண்கள் கால்பந்து அணிக்கு பிரித்தானியா அடைக்கலம்! ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம் இருந்து தப்பித்த பெண்கள் கால்பந்து அணியின் வீராங்கனை மற்றும் அவர்களது குடும்பம் தங்கள் நாட்டில் குடியேறலாம் என பிரித்தானியா அறிவித்துள்ளது. இதுகுறித்து பிரித்தானிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘நாங்கள் ஆப்கானிஸ்தான் மகளிர் மேம்பாட்டுக் குழுவுடன் பேசி விசாக்களை இறுதி செய்து, விரைவில் பிரித்தானியாவுக்கு அவர்களை வரவேற்க காத்திருக்கிறோம்’ என கூறினார். 13 முதல் 19 வயதுடைய 35 பெண்களைக் கொண்ட குழு கடந்த மாதம் காபூலை விட்டு வெளியேறி பாகிஸ்தானில் உள்ள ஒரு ஹோட்டலில் கடந்த சில வாரங்களாகத் தங்கியிருந்தனர். அவர்களது தற்காலிக விசா இன்று…
-
- 0 replies
- 482 views
-
-
சீனாவில் கடும் வெள்ளம்: 1.76 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிப்பு- 300க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! சீனாவின் வடக்கு ஷாங்க்சி மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 1.76 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் 70க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது. ஹெனான் மாகாணத்தில் தீவிர மழை பெய்து மூன்று மாதங்களுக்குள் வெள்ளம் வந்து 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கனமழை மற்றும் நீடித்த மழை மற்றும் புயல்கள், மீட்புப் பணிகளுக்கு இடையூறாக உள்ளதாக சீனாவின் வானிலை நிர்வாகம் உள்ளூர் ஊடகங்களிடம் கூறியுள்ளது. 120,000க்கும் அ…
-
- 0 replies
- 151 views
-
-
ஐ.எஸ். அமைப்பின் மறைந்த தலைவர் அல்-பாக்தாதியின் துணை அதிகாரி கைது - ஈராக் பிரதமர் தெரிவிப்பு 2021-10-11 ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதியின் துணை அதிகாரியை கைதுசெய்துள்ளதாக ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி திங்களன்று தெரிவித்துள்ளார். அபு பக்கர் அல்-பாக்தாதி 2019 இல் சிரியாவில் நடந்த சிறப்பு அமெரிக்க நடவடிக்கையின் போது கொல்லப்பட்டார். இறுதியில் அல் பாக்தாதியின் மரணத்தை இஸ்லாமிய அரசான ஐ.எஸ்.ஐ.எஸ். உறுதிபடுத்தியது. இந் நிலையில் தற்சமயம் கைதுசெய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ள சாமி ஜாசிம் முஹம்மது அல்-ஜபுரி என்று நம்பப்படும் நபர், முன்பு இஸ்லாமிய அரசின் நிதி விவகாரங்களுக்குப் பொறுப்பாக இருந்தமை தெரியவந்துள்ளது. …
-
- 0 replies
- 280 views
-
-
லெபனான் மின் தடை பல நாட்கள் நீடிக்கும் – அரச அதிகாரிகள் லெபனானில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அங்கு முழுமையாக மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் இரண்டு மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையங்களும் எரிபொருள் இன்மையால் செயலிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுமுதல் இந்த மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதோடு மின்சாரத்தை மீள வழங்குவதற்குப் பல நாட்கள் செல்லும் என அந்நாட்டு அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 18 மாதங்களாக லெபனானில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாரிய எரிபொருள் தட்டுப்பாடும் நிலவுகின்றது. இதன்காரணமாக லெபனானின் மொத்த சனத்தொகையில் பெரும்பாலானோர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் அரசாங்…
-
- 0 replies
- 230 views
-
-
பிரித்தானியாவில் தினசரி இறைச்சி நுகர்வு... 17 சதவீதம் குறைந்துள்ளது: ஆய்வில் தகவல்! கடந்த தசாப்தத்தில் பிரித்தானியாவில் தினசரி இறைச்சி நுகர்வு 17 சதவீதம் குறைந்துள்ளது என்று ஒரு ஆய்வு காட்டுகிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, அந்த குறைப்பு ஒரு முக்கிய தேசிய இலக்கை அடைய போதுமானதாக இல்லை. நமது உணவின் சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைப்பதே இதன் நோக்கம். தேசிய உணவு மூலோபாயத்தால் நிர்ணயிக்கப்பட்ட இந்த குறிக்கோள், முழு பிரித்தானியாவின் உணவு முறையின் மதிப்பாய்வை அடிப்படையாகக் கொண்டது . விவசாயம் மற்றும் உற்பத்தி முதல் பசி மற்றும் நிலைத்தன்மை வரை. இது, அடுத்த 10 ஆண்டுகளில் பிரித்தானியாவில் இறைச்சி நுகர்வு 30 சதவீதம் குறைய பரிந்துரைக்கிறது. லான்செட் பிளானட்டரி ஹெல்…
-
- 3 replies
- 366 views
-
-
சவுதி அரேபியாவின்... ஜசான் விமான நிலையம் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்: குறைந்தது 10பேர் காயம்! ஏமன் எல்லைக்கு அருகில் உள்ள சவுதி அரேபியாவின் ஜசான் நகரில் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடந்த தாக்குதல்கள் கிங் அப்துல்லா விமான நிலையத்தை குறிவைத்ததாக சவுதி ஊகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தது ஐந்து பேருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டன, மற்ற ஐந்து பேரின் நிலை உடனடியாக தெரியவில்லை. முதல் ஏவுகணை ஆளில்லா விமானத்திலிருந்து வீசப்பட்டது. இது விமான நிலையத்தின் முகப்பு ஜன்னல்களை உடைத்தது. இதில் காயமடைந்தவர்களில் ஆறு சவுதிகள், மூன்று பங்களாதேஷ் பிரஜைகள்…
-
- 0 replies
- 192 views
-
-
ஆட்சியை சீர்குலைக்க எண்ண வேண்டாம் – தலிபான்கள் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை சீர்குலைக்க எண்ண வேண்டாம் என தலிபான்கள் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கத்தார் தலைநகரான தோஹாவில் முதன் முறையாக நேற்று அமெரிக்க அதிகாரிகளுக்கும் தலிபான்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்போதே, ஆப்கானில் தற்போதுள்ள ஆட்சியை சீர்குலைக்க நினைத்தால் அனைவருக்கும் பிரச்சினைதான் என தலிபான் வெளிவிவகார அமைச்சர் அமீர்கான் முத்தாக்கி தெரிவித்தார். மேலும் கொரொனா நோய்க்கு எதிராக ஆப்கான் மக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கு அமெரிக்கா போன்ற நாடுகள் உதவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதேவேளை, இரண்டாவது நாளாக இன்றும் தோஹாவில் அம…
-
- 0 replies
- 184 views
-
-
ஆப்கனில் இருந்து வெளியேறியபின் தாலிபன்களுடன் அமெரிக்கா நடத்திய முதல் சந்திப்பு பட மூலாதாரம், TWITTER / MUJAHID படக்குறிப்பு, தோஹாவில் தாலிபன் பிரதிநிதிகள் கத்தார் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்டவர்களையும் சந்தித்தனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பின்பு அமெரிக்க அரசு அதிகாரிகள் மற்றும் தாலிபன்கள் இடையே முதல்முறையாக நேருக்குநேர் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. கத்தாரில் நடந்துள்ள இந்த பேச்சுவார்த்தையில் தீவிரவாத அமைப்புகளை கட்டுப்படுத்துவது, ஆப்கானிஸ்தானில் இன்னும் இருக்கும் அமெரிக்க குடிமக்களை வெளியேற்றுவது, ஆப்கனில் மனிதாபிமான உதவிகளை வழங்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்…
-
- 1 reply
- 443 views
-
-
''சீனாவுடன் தைவான் இணைக்கப்படும்'' - பதற்றத்தைக் கூட்டும் ஷி ஜின்பிங் 10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஷி ஜின்பிங் சீனா மற்றும் தைவான் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலில் தைவான் - சீனா மறு இணைப்பு நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இந்த மறு இணைப்பு அமைதியாக சாத்தியப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள ஜின்பிங், பிரிவினைவாதத்தை எதிர்க்கும் ''பெருமைமிகு பாரம்பரியத்தை'' சீன மக்கள் கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்துள்ள தைவான் அரசு தங்களது எதிர்காலம் நாட்டு ம…
-
- 1 reply
- 619 views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தான் மசூதி மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 50 பேர் பலி ஆப்கானிஸ்தான் குண்டுஸ் நகரில் உள்ள மசூதியில் இன்று பிற்பகல் தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதில் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வடக்கு ஆப்கானிஸ்தானில் குண்டுஸ் நகரில் உள்ள வெள்ளிக்கிழமை தொழுகைக்கு சிறுபான்மை ஷியா முஸ்லீம் சமூகத்தால் பயன்படுத்தப்படும் மசூதியில் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இஸ்லாமிய மத சிறுபான்மை குழு பயன்படுத்தும் மசூதியில் நிகழ்த்திய சக்திவாய்ந்த வெடிப்பு பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாக சாட்சிகள் உள்ளது என்று தலிபானின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்…
-
- 2 replies
- 497 views
-
-
தென் சீனக் கடலில் மர்ம பொருள் மீது மோதிய அமெரிக்க அணுசக்தி நீர் மூழ்கி கப்பல் 8 அக்டோபர் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுஎஸ்எஸ் கனெக்டிகட் நீர்மூழ்கிக் கப்பல் - கோப்புப் படம். அமெரிக்காவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று தென் சீனக் கடலில் நீரில் மூழ்கியிருந்தபோது மர்மப் பொருள் ஒன்றின் மீது மோதியதாகவும், அதில் பல மாலுமிகள் காயமடைந்ததாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். சனிக்கிழமை நடந்த இந்த சம்பவத்துக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்று கூறும் அவர்கள், கப்பல் முழுவதும் செயல்படுவதாகவும் கூறுகின்றனர். தென் சீனக் கடலில் சர்வதேச கடற்பரப்பில்…
-
- 0 replies
- 315 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 481 views
-
-
சமாதானத்திற்கான நோபல் பரிசு இரு ஊடகவியலாளருக்கு அறிவிப்பு இவ்வாண்டுக்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு இரண்டு ஊடகவியலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய ரீதியில் பங்களிப்பு செய்கிற சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், வேதியல் மற்றும் இலக்கியம் ஆகியவற்றுக்கான நோபல் பரிசுகள் சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று நோர்வேயில் சமாதானத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு ஊடகவியலாளர்கள் மரியா ரெசா மற்றும் டிமிட்ரி முராட்டோவ் ஆகியோரு…
-
- 0 replies
- 311 views
-
-
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார் தான்சானியா எழுத்தாளர் அப்துல்ரசாக் குர்னா October 8, 2021 ஆப்பிரிக்காவின் டான்சானியாவைப் பூர்வீகமாகக் கொண்டு சான்ஸிபாரில் வளர்ந்து பின்னர் 1960களில் இங்கிலாந்துக்கு அகதியாக வந்து சேர்ந்த அப்துல்ரசாக் குர்னா இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனது படைப்புகளில் வெவ்வேறு கண்டங்கள், கலாச்சாரங்களுக்கு இடையே சிக்கிக் கொள்ளும் அகதிகளின் வாழ்க்கையை தத்ரூபமாக கொண்டுவந்ததற்காக அவருக்கு நோபல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.ilakku.org/tanzanian-born-novelist-abdulrazak-gurnah-gets-nobel-prize-in-literature/
-
- 1 reply
- 302 views
-
-
சீனாவுடன்... அமெரிக்கா, நிச்சயம் போர் புரியும்: ட்ரம்ப் எச்சரிக்கை! சீனாவுடன் அமெரிக்கா நிச்சயம் போர் புரியும் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சி தலைமையில் சீனாவுடனான உறவு குறித்து ட்ரம்ப் கூறுகையில், ‘தேர்தல் மோசடி செய்யப்பட்டதால், அமெரிக்கா இப்போது பலவீனமான மற்றும் ஊழல் நிறைந்த தலைமையைக் கொண்டிருக்கிறது. இதனால் சீனா அமெரிக்காவை மதிப்பதில்லை. சீனாவுடன் அமெரிக்கா நிச்சயம் போர் புரியும்’ என கூறினார். தாய்வான் அருகே, சீன விமானப்படை எண்ணற்ற போர் பயிற்சிகளை மேற்கொண்டது. இதனால், அந்த பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனை தணிக்கும் வகையில், அமெரிக்கா மற்றும் சீன நாடுகளின் உயரதிகாரிகள் இடையே சுவிஸ்லாந்தில் பே…
-
- 0 replies
- 308 views
-
-
ஜேம்ஸ் கல்லஹர் சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர் ஒரு நூற்றாண்டு ஆய்வுகள், போராட்டங்களுக்குப் பிறகு முதல் முறையாக ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு மலேரியாவுக்கான தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தைகளையும் சிசுக்களையும் கொல்லும், மனித குலத்தை அச்சுறுத்தும் நோயாக மலேரியா இருந்து வருகிறது. நூறு ஆண்டுகால ஆராய்ச்சிகளுக்குப் பிறகு மலேரியாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்திருப்பது மருத்துவ உலகின் குறிப்பிடத் தகுந்த சாதனையாகும். RTS, S என்று அழைக்கப்படும் இந்தத் தடுப்பூசி மலேரியாவுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படுவதாக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நிரூபிக்கப்பட்டது. கானா, கென்யா மற்றும் மலாவி ஆகி…
-
- 0 replies
- 209 views
-
-
பப்புவா நியூ கினியாவுடனான... சர்ச்சைக்குரிய புகலிடம் தடுப்பு ஒப்பந்தத்தை, அவுஸ்ரேலியா முடிவுக்குக் கொண்டுவந்தது சர்ச்சைக்குரிய புகலிடம் தடுப்பு ஒப்பந்தத் நிறைவுக்கு வரும் நிலையில் புகலிடம் கோருவோரை பப்புவா நியூ கினியாவுக்கு அனுப்புவதை நிறுத்த அவுஸ்ரேலியா நடவடிக்கை எடுத்துள்ளது. படகு மூலம் அவுஸ்ரேலியா வை அடைய முயற்சிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளைத் தடுத்து நிறுத்துவதற்காக கான்பெர்ராவால் வழங்கப்பட்ட இரண்டு பசிபிக் நாடுகளில் பப்புவா நியூ கினியாவும் ஒன்றாகும். இந்நிலையில் குறித்த நாட்டுடனான ஏற்பாடு இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என அவுஸ்ரேலியா கூறியுள்ளது. இருப்பினும் அவுஸ்ரேலியாவின் வலுவான எல்லை பாதுகாப்பு கொள்கைகள் மாறவில்லை என உள்து…
-
- 0 replies
- 237 views
-
-
ஊழியர்கள் அனைவரும்... அலுவலகம் சென்று, வேலை செய்யுமாறு பிரிட்டிஷ் பிரதமர் கோரிக்கை பிரித்தானியாவில் உள்ள ஊழியர்கள் அலுவலகம் சென்று வேலை செய்ய வேண்டும் என அந்நாட்டுப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வலியுறுத்தியுள்ளார். உற்பத்தியைப் பெருக்கவும், இளம் ஊழியர்கள் வேலைத் திறன்களைக் கற்றுக்கொள்ளவும் அது முக்கியம் என அவர் கூறினார். பிரித்தானியாவில் நாள்தோறும் புதிதாக பலருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்படுகிறது. என்றாலும், கொரோனா தொற்று பரவல் பிரித்தானியாவில் பெரிய அச்சுறுத்தலாக இல்லை என பொரிஸ் ஜோன்சன் கூறினார். ஊழியர்களின் போட்டித்தன்மையை உறுதிசெய்ய நேரடியான தகவல் பரிமாற்றம் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனாலும், தமது அலுவலக ஊழியர்கள், முழுமையாகப் …
-
- 0 replies
- 282 views
-