Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. துருக்கியில் காட்டுத் தீ! 10 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு. துருக்கியின் மத்திய பகுதியில் உள்ள எஸ்கிசெஹிர் மாகாணத்தின் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 14 வீரர்கள் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துருக்கி வனத்துறை அமைச்சர் இப்ராஹிம் யுமக்லி இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் “தீ அணைக்கும் பணியின் போது திடீரென காற்றின் திசை மாற்றமடைந்தது. இதனால் மொத்தம் 24 வீரர்கள் தீயில் சிக்கிக்கொண்டனர். அதில் 10 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ளவர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்” எனத் தெரிவித்தார். தற்போது மத்திய மற்றும் மேற்…

  2. மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினியால் பெரும் துன்பத்தில் காசா - உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் Published By: Rajeeban 24 Jul, 2025 | 10:54 AM மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினி நிலையால் காசா துன்பத்தில் சிக்குண்டுள்ளது என உலக சுகாதாரஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோல் அதனோம் கெப்ரயேசஸ் தெரிவித்துள்ளார். காசாவிற்குள் உணவுப்பொருட்கள் செல்வதை தடுக்கும் மனித செயலால் உருவாக்கப்பட்ட பட்டினியால் காசா துன்பத்தில் சிக்குண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். பெரும்பட்டினி நிலை என இதனை அழைப்பதை தவிர வேறு எப்படி இதனை அழைப்பீர்கள் என எனக்கு தெரியாது,ஆனால் இது மனிதனால் உருவாக்கப்பட்டது அது மிகத்தெளிவான விடயம் என அவர் தெரிவித்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கான உணவுவிநியோகம் மக்கள் உயிர்வாழ…

  3. காசாவில் மேலும் 10 பேர் பட்டினியால் மரணம் - உதவிக்காக காத்திருந்த 31 பலஸ்தீனர்கள் பலி sachinthaJuly 24, 2025 காசாவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் தொடர்புபட்டு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு உதவிக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேலியப் படை நேற்று நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வடக்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல்களை அதிகரித்திருக்கும் நிலையில், அங்கு குண்டு வீச்சுகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளுக்கு அப்பால் பட்டினியால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. காசாவுக்காக உதவி விநியோகங்களை இஸ்ரேல் முற்றாக கட்டுப்படுத்தி வருவதோடு கடந்த மார்…

  4. 23 ஜூலை 2025 விண்வெளியின் விளிம்பில் இருந்து குதித்து ஸ்கை டைவிங் சாகசம் செய்து உலக சாதனை படைத்த இத்தாலியைச் சேர்ந்த ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னர் என்பவர் உயிரிழந்தார். 56 வயதான இவர், கிழக்கு மார்ச்சே பகுதியில் உள்ள போர்டோ சாண்ட் எல்பிடியா என்ற கிராமத்தின் அருகே பாரா-கிளைடிங் செய்து கொண்டிருந்த போது திடீரென விபத்து ஏற்பட்டு, உணவகம் ஒன்றின் நீச்சல் குளத்தில் விழுந்து உயிரிழந்தார். இது குறித்து, போர்டோ சாண்ட் எல்பிடியா கிராமத்தின் மேயர் மிஸிமில்லியானோ சியார்பெல்லா, வானில் பறக்கும் போது இவருக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றார். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கூட விபத்து ஏற்பட்டிருக்கலாம் என விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2012ம் ஆண்டு 1,28,000 அடி உயரத்தி…

  5. "ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரே கேள்வி மீண்டும் மீண்டும் காசாவில் எதிரொலிக்கின்றது; இன்று எனக்கு உணவு கிடைக்குமா ?; உணவுக்காக சொர்க்கத்திற்கு செல்ல விரும்பும் குழந்தைகள்" - பரவும் பட்டினிநிலை குறித்து மனிதாபிமான அமைப்புகள் எச்சரிக்கை Published By: RAJEEBAN 23 JUL, 2025 | 12:54 PM காசாவின் பல பகுதிகளிற்கு பட்டினிநிலை பரவ ஆரம்பித்துள்ளது என நூற்றிற்கும் மேற்பட்ட மனிதாபிமான அமைப்புகள் கூட்டாக எச்சரித்துள்ளன. சேவ் த சில்ரன் எல்லைகள் அற்ற மருத்துவர்கள் அமைப்பு உட்பட பல சர்வதேச அமைப்புகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன. பாலஸ்தீனியர்கள் நம்பிக்கை மற்றும் மனவேதனையின் பிடியில் சிக்குண்டுள்ளனர். அவர்கள் யுத்தநிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகளிற்காக காத்திருக்கின்றனர். ஆனால் அவர்கள்…

  6. "என்னிடம் இனிமேலும் ஊடக பணியில் ஈடுபடுவதற்கான வலு இல்லை, எனது உடல் மெலிந்து விட்டது ; காசாவிலிருந்து ஒரு ஊடகவியலாளர் " - உடனடி தலையீடு இல்லாவிட்டால் காசாவில் இறுதியாக உள்ள ஊடகவியலாளர்கள் உயிரிழப்பார்கள் ஏஎவ்பி Published By: RAJEEBAN 23 JUL, 2025 | 11:17 AM காசாவில் எஞ்சியுள்ள ஊடகவியலாளர்கள் மரணிக்கும் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர் என ஏஎவ்பி ஊடகவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உடனடிதலையீடு இல்லாவிட்டால் காசாவில் இறுதியாக உள்ள ஊடகவியலாளர்கள் உயிரிழப்பார்கள் என அவர்கள் எச்சரித்துள்ளனர். யுத்தத்தின் கோரபிடியில் சிக்குண்டுள்ள காசாவிற்கு வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் செல்வதற்கு இஸ்ரேல் அனுமதி மறுத்து வரும் நிலையில் ரொய்ட்டர்ஸ் ஏஎவ்பி போன்ற நிறுவனங்கள் காசாவில் உள்ள உள்ளுர…

  7. 22 JUL, 2025 | 01:26 PM இஸ்ரேலிய படையினர் தனது பணியாளர்களை ஆடைகளை களைந்து சோதனையிட்டதுடன் கைதுசெய்துள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் குற்றம்சாட்டியுள்ளது. இஸ்ரேல் தனது பண்டகசாலை மீது விமானதாக்குதலை மேற்கொண்டது என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் தனது பணியாளர்களின் வீடுகளையும் இலக்குவைத்தது, இதனால் பெரும் சேதமேற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது. பெண்களும் குழந்தைகளும் மோதல் இடம்பெறும் பகுதியை நோக்கி கால்நடையாக வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். டெய்ர் அல்பலாவில் இஸ்ரேல் மேற்கொண்ட உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆண்பணியாளர்கள் அவர்களது குடும்பத்தவர்களை கைதுசெய்து அவர்களிற்கு கைவிலங்கிட்ட இஸ்ரேலிய படையினர் அந்த இடத்தில…

  8. Published By: DIGITAL DESK 3 15 JUN, 2025 | 12:49 PM இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சனிக்கிழமை (14) இரவு பிரித்தானியாவுக்குச் சொந்தமான F-35 என்ற போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் தாங்கி போர்க் கப்பலில் இருந்து புறப்பட்டதாக நம்பப்படும் இந்த ஜெட் விமானத்தில் எரிபொருள் தீர்ந்ததால் இரவு 9.30 மணியளவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. சீராகவும் பாதுகாப்பாகவும் தரையிறங்குவதை உறுதி செய்வதற்காக விமான நிலைய அதிகாரிகள் அவசரநிலையை அறிவித்தனர். "விமானத்தில் குறைந்தளவில் எரிபொருள் இருப்பதாக அறிவித்து விமானி தரையிறங்க அனுமதி கேட்டார். தரையிறக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் விரைவாகவும் முறையாகவும் கையாளப்பட்டது என விமான …

  9. அமெரிக்காவை சமாளிக்க கைகோர்க்கும் இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா. ரஷ்யா -இந்தியா – சீனா இடையிலான முத்தரப்பு உறவை புதுப்பிக்கும் முன்னெடுப்பை ரஷ்யா எடுத்துள்ளது. அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போர், உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால்,அமெரிக்காவை சமாளிக்க, ரஷ்யாவுடன் சீனா நெருக்கம் காட்டி வருகிறது. மேலும் பழைய கசப்புணர்வுகளை மறந்து இந்தியாவுடனும் நட்பு பாராட்டுவதற்கான தருணத்தை சீனா எதிர்பார்த்துள்ளது. அதற்கேற்ப கடந்த 2002ல் நிறுவப்பட்ட ஆர்.ஐ.சி., எனப்படும் ரஷ்யா- இந்தியா- சீனா முத்தரப்பு மன்றத்திற்கு புத்துயிர் அளிக்க, ரஷ்யா முனைப்பு காட்டி வருகிறது. இந்த முத்தரப்பு மன்றம் தான் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா நாடுகளின் ‘பிரிக்ஸ்’ அமைப்ப…

  10. காசா விவகாரம்: இஸ்ரேலுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த உலக நாடுகள் ! காசா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் கனடா போன்ற முக்கிய நாடுகள் போரை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக காசாவின் முக்கிய நட்பு நாடுகளாகக் கருதப்படும் ஐக்கிய இராச்சியம்,பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகள், இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள் குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. நிலைமை சீராகாவிட்டால் ‘தக்க நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இந்த நாடுகள் எச்சரித்துள்ளதாகத் தெரிகிறது. அதேசமயம் அமெரிக்கா, இஸ்ரேலின் முக்கிய நட்பு நாடாக …

  11. காசாவில் உணவு குடிநீர் போன்றவற்றை பெற முயலும் சிறுவர்கள் கூட கொல்லப்படுகின்றனர் - உலக நாடுகள் கடும் கண்டனம் - யுத்தத்தை நிறுத்துமாறு வேண்டுகோள் 22 Jul, 2025 | 11:25 AM காசா யுத்தம் தொடர்பில் இஸ்ரேலை கடுமையாக சாடியுள்ள 25 நாடுகள் யுத்தத்தை உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரிட்டன் ஜப்பான் கனடா அவுஸ்திரேலியா உட்பட 25 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். காசா மக்களின் துயரங்கள் முன்னர் இல்லாத அழவிற்கு தீவிரமடைந்துள்ளன என தெரிவித்துள்ள அவர்கள்அடிப்படை தேவைகளான உணவு குடிநீர் போன்றவற்றை பெற முயலும் சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்படுவதையும்,மிகச்சிறிய அளவில் மனிதாபிமான உதவிகள் வழங்கப்ப…

  12. டிரம்ப் நிர்வாகத்தின் சமீபத்தில் இயற்றப்பட்ட உள்நாட்டு கொள்கை மசோதாவில் உள்ள ஒரு விதியின்படி, சர்வதேச பார்வையாளர்கள் தற்போதுள்ள விசா விண்ணப்ப செலவுகளுடன் சேர்த்து குறைந்தபட்சம் $250 புதிய "விசா நேர்மை கட்டணம்" செலுத்த வேண்டும் என்று அமெரிக்கா கோரும். அமெரிக்காவிற்குள் நுழைய குடியேறாத விசாக்களைப் பெற வேண்டிய அனைத்து பார்வையாளர்களுக்கும் இந்தக் கட்டணம் பொருந்தும். இதில் பல ஓய்வு மற்றும் வணிகப் பயணிகள், சர்வதேச மாணவர்கள் மற்றும் பிற தற்காலிக பார்வையாளர்கள் அடங்குவர். 2024 நிதியாண்டில், வெளியுறவுத்துறை புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்கா கிட்டத்தட்ட 11 மில்லியன் குடியேறாத விசாக்களை வழங்கியது. https://www.cnn.com/2025/07/21/travel/visa-integrity-fee-usa-international-travelers இத…

  13. Published By: RAJEEBAN 21 JUL, 2025 | 02:26 PM இஸ்ரேல் உணவு விநியோகத்தினை முடக்கியுள்ள நிலையில் காசாவில் பட்டினியால் நான்குவயது சிறுமி உயிரிழந்த பரிதாபம் இடம்பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நான்கு வயது ரஜான் அபு ஜகெர் உயிர்வாழ்வதற்கான தனது போராட்டத்தினை முடித்துக்கொண்டுள்ளாள். பட்டினி மற்றும் மந்தபோசாக்கினால் ஏற்பட்ட பாதிப்புகளால் இந்த சிறுமி மத்திய காசாவில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2023 ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் காசாவில் 76 சிறுவர்கள் மந்தபோசாக்கினால் உயிரிழந்துள்ளனர் என காசாவின் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மார்ச் மாதம் இஸ்ரேல் உணவுவிநியோகத்தை தடை செய்த பின்னரே மந்தபோசாக்கு பட்டினியால் அனேக மரணங்கள் இடம்ப…

  14. ஜப்பான் மேற்சபை தேர்தல் - பெரும்பான்மையை இழந்தது ஆளும் கட்சி 21 Jul, 2025 | 10:57 AM ஜப்பானின் மேற்சபையில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது அந்த நாட்டு அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் பிரதமர் சிகேரு இசிபா பதவி விலகும் எண்ணம் எதுவுமில்லை என தெரிவித்துள்ளார். அதிகரிக்கும் விலைகள் அமெரிக்காவின் வரி அதிகரிப்பு குறித்த அச்சுறுத்தல் போன்றவற்றினால் ஆளும்கட்சி மீது அதிருப்தியில் உள்ள மக்கள் ஞாயிற்றுக்கிழமை மிகவும் கடுமையான போட்டி நிலவிய தேர்தலில் வாக்களித்தனர். 248 உறுப்பினர்கள் கொண்ட மேற்சபையில் தனது கட்டுப்பாட்டை தக்கவைப்பதற்கு ஆளும் கட்சிக்கு 50 ஆசனங்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த கட்சி 47 ஆசனங்களை மாத்திரம் பெற்றுள்ளது. பிரதான எதிர்க்கட்சியா…

  15. Published By: DIGITAL DESK 3 20 JUL, 2025 | 05:24 PM அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் இருந்து அட்லாண்டா நோக்கி புறப்பட்ட டெல்டா ஏர்லைன்ஸின் போயிங் 767-400 ரக பயணிகள் விமானத்தின் இயந்திரத்தில் தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானம் புறப்பட்ட பின் அதன் இடதுப்புற இயந்திரத்தில் தீப்பிடித்ததால் அவ்விமானம் மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸிலேயே அவசரமாகத் தரையிறங்கியது. விமானி அவசரநிலையை அறிவித்ததையடுத்து, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அறை, விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கு திரும்ப வழிகாட்டியது. தரையிறங்கியதும் தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இவ்வா…

  16. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஜூலை 13 அன்று சீனாவிற்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டார். 20 ஜூலை 2025, 04:53 GMT புதுப்பிக்கப்பட்டது 20 ஜூலை 2025, 04:58 GMT இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடந்த வாரம் சீனா சென்றார். அங்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உள்பட உயர்மட்ட அதிகாரிகளையும் ஜெய்சங்கர் சந்தித்தார். கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவிவரும் நிலையில், இருநாட்டு உறவுகளை மீண்டும் வலுப்படுத்த முயற்சிக்கும் காலகட்டத்தில் ஜெய்சங்கரின் சீன பயணம் அமைந்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்தது குறித்து பெரும் விவாதம் நடைபெற்று வரும…

  17. வியட்நாமில் சுற்றுலாப் பயணிகள் படகு விபத்துக்குள்ளானதில் இதுவரை 37 பேர் உயிரிழப்பு! வியட்நாமில் சுற்றுலாப்பயணிகள் படகு ஒன்று புயலில் சிக்கி விபத்துக்குள்ளானதில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். 53பேருடன் பயணித்துக்கொண்டிருந்த வொன்டர் சீ என்ற படகே இவ்வாறு அனர்தத்திற்குள்ளாகியுள்ளது. ஹா லாங் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களை காண தினமும் ஆயிரக்கண சுற்றுலா பயணிகள் வருகை தருகின்ற நிலையில் தலைநகர் ஹனோயில் இருந்து 53 சுற்றுலா பயணிகள் நேற்று பிற்பகல் படகு மூலம் ஹா லாங் வளைகுடா பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதன்போது, தென் சீன கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட புயல்காற்றினால் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, படகில் பயணித்…

  18. 'இதுபடுகொலை" காசாவில் உணவுவிநியோகம் இடம்பெறும் பகுதிகளை நோக்கி சென்றுகொண்டிருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் - 35 பேர் பலி Published By: RAJEEBAN 20 JUL, 2025 | 12:25 PM காசாவில் உணவுவிநியோகம் இடம்பெறும் இரண்டு பகுதிகளில் காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 38 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். அந்த பகுதியி;ல் படுகொலை இடம்பெற்றதாக சம்பவங்களை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளதுடன் மனிதாபிமான பொருட்கள் வழங்கப்படும் பகுதிகளை நோக்கி சென்றுகொண்டிருந்தவர்கள் மீது - அனேகமாக இளையவர்கள் மீது இஸ்ரேலிய படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ளனர். கான்யூனிசிற்கு கிழக்கே உள்ள உணவு விநியோக மையங்…

  19. அரசியலில் நுழைவதை நான் ஒருபோதும் விரும்பவில்லை - எலான் மஸ்க் தெரிவிப்பு! அரசியலில் நுழைவதை தான் ஒருபோதும் விரும்பவில்லை. ஆனால், வருங்காலத்தில் ஆபத்துகள் அதிகமாக இருப்பதால் வேறு வழியே இல்லாமல், இந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலை உருவானது என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எலான் மஸ்க், எனக்கு அரசியலில் நுழைவது என்பதில் சற்றும் விருப்பமில்லை. நான் ரொக்கெட் தயாரிக்கிறேன், கார்களை, கருவிகளை உருவாக்குகிறேன். என் நிறுவனம் தயாரிக்கும் பொருட்களை மக்கள் பயன்படுத்துவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். அதைத் தவிர வேறு எனக்கு எதிலும் ஆர்வமில்லை. ஆனால், எப்போது, இந்த நாட்டின் அமைப்பு மிக மோசமாக உடைந்து போயிருக்கிறதோ, அப்போது என்னால…

  20. பள்ளிகளுக்கு பதில் தந்தையின் கல்லறைகளுக்கு அருகில்; காசா சிறுமிக்கு ஏற்பட்டுள்ள சோக முடிவு காசா மக்களின் யதார்த்த வாழ்வை ஆவணப்படுத்தும் விருப்பத்தில், Palestine Chronicle எனும் ஊடகத்திற்கு செய்திகளை வழங்கி வந்த 11 வயது சிறுமி Lama Nasser இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தார். கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் தொடங்கிய இஸ்ரேல் காஸா மோதலில் தற்போதுவரை 58,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். தொடர் மோதலால் காஸாவில் 2.3 மில்லியன் குடியிருப்பாளர்கள் பட்டியின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். இந்தப்போரில் காஸாவில் நடக்கும் நிகழ்வுகளை உலகுக்குத் தெரிவித்த பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் …

  21. காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே 'ஒரு விளையாட்டு போல' காயப்படுத்துகிறார்கள் என்று பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார் ரிச்சர்ட் கில்சீன் சனி, ஜூலை 19, 2025 காலை 8:01 IDF வீரர்கள் வேண்டுமென்றே காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே 'ஒரு விளையாட்டு போல' காயப்படுத்துகிறார்கள் என்று பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார் காசாவில் உள்ள ஒரு பிரிட்டிஷ் அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவ ஊழியர்கள் "தெளிவான காய வடிவங்களைக்" காண்கிறார்கள் என்றும், IDF வீரர்கள் வாரத்தின் நாளைப் பொறுத்து காசாவில் உள்ள குழந்தைகளை வெவ்வேறு உடல் பாகங்களில் வேண்டுமென்றே சுட்டுக் கொன்று வருவதாகவும் கூறுகிறார். பேராசிரியர் நிக் மேனார்ட் பிபிசி ரேடியோ 4 இடம், தானும் தனது சகாக்களும் உதவி விநியோக தளங்களை - முக்கியமாக டீனேஜ்…

  22. உக்ரைனின் புதிய பிரதமராக யூலியா நியமனம் ! 19 JUL, 2025 | 11:25 AM உக்ரைனின் புதிய பிரதமராக அந்நாட்டின் துணைப் பிரதமரும் பொருளாதார அமைச்சருமான யூலியா ஸ்விரிடென்கோ நியமிக்கப்பட்டுள்ளார். உக்ரைன் - ரஷ்வுக்கிடையிலான யுத்தம் தொடர்ந்து இடம்பெற்றுவரும் நிலையில், உக்ரைனின் பிரதமராக இருந்த டெனிஸ் ஷிம்ஹால் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் டெனிஸ் ஷிம்ஹால் பிரதமராக உக்ரைன் வரலாற்றில் மிக நீண்ட காலம் பணியாற்றியவர் ஆவார். இந்நிலையில் உக்ரைனின் 19 ஆவது புதிய பிரதமராக, துணைப் பிரதமரும் பொருளாதார அமைச்சருமான யூலியா ஸ்விரிடென்கோ நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோ, உக்ரைனின் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கி…

    • 1 reply
    • 223 views
  23. படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய மாகாணமான மத்திய குயின்ஸ்லாந்து கட்டுரை தகவல் மோனிகா கார்ன்சி & பிபிசி ஐ புலனாய்வுப் பிரிவு‎ 17 ஜூலை 2025 ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய மாகாணமான மத்திய குயின்ஸ்லாந்தில் வாங்கன் மற்றும் ஜகலிங்கோ பழங்குடி நிலத்தின் தூசி நிறைந்த பகுதியில், 1,300 நாட்களுக்கும் மேலாக, பாரம்பரிய சடங்கு முறைப்படி நெருப்பு எரிந்து வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போராட்டத்தின் தளத்தை இந்தச் சுடர் குறிக்கிறது. உள்ளூர்ப் பழங்குடி சமூகத்தின் ஒரு பகுதிக்கும், நாட்டின் சர்ச்சைக்குரிய சுரங்கத் திட்டங்களில் ஒன்றான கார்மைக்கேல் நிலக்கரிச் சுரங்கத்திற்கும் இடையிலான நீண்டகால மோதலின் மையமாக இந்தப் போராட்டம் அமைந்துள்ளது. உள்ளூரில் பிராவஸ் …

  24. பிரித்தானியாவில் வாக்களிக்கும் வயதில் மாற்றம்! பிரித்தானியாவில் 2029 ஆம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வாக்களிக்கும் வயதை 18லிருந்து 16 ஆகக் குறைக்கவுள்ளதாக அந்நாட்டு அரசு நேற்று அறிவித்தது. ஐரோப்பிய நாடான பிரித்தானியாவில் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் தலைமையில் தொழிலாளர் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த கட்சி ஜூலை 2024 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பே, வாக்களிக்கும் வயது குறைக்கப்படும் என உறுதியளித்தது. இந்நிலையில், வாக்களிப்பதற்கான வயது வரம்பை 16 ஆக குறைத்து நாடு முழுதும் அமுல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அந்தவகையில் 16 வயது பூர்த்தியடைபவர்களின் பெயர் தானாகவே வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் வசதியையும் அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள…

  25. ட்ரம்பின் உடல் நிலை குறித்த வெள்ளை மாளிகையின் அறிவிப்பு! அமெரிக்க ஜனாதிபதி ‍டெனால்ட் ட்ரம்புக்கு நாள்பட்ட சிரை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வியாழக்கிழமை (17) தெரிவித்துள்ளது. ட்ரம்பின் கைகளில் ஏற்பட்ட காயம் குறித்த ஊகங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. அண்மையில் அவரது கால்களில் வீக்கம் ஏற்பட்ட பின்னர் ட்ரம்ப், விரிவான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார். எனினும், பரிசோதனை எப்போது நடந்தது என்பது தெளிவாகக் கூறப்படவில்லை. இந்த மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர் அவருக்கு நாள்பட்ட சிரை பற்றாக்குறை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 79 வயதான அமெரிக்க ஜனாதிபதி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.