உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
இளம் பெண்களை கடத்தி வலுக்கட்டாயமாக திருமணம் செய்யும் தலிபான்கள் தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதிகளை கைப்பற்றியுள்ள நிலையில் இளம் பெண்கள் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்வதாக “த மெயில்” பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தலிபான்கள் புதிய நகரம் அல்லது மாவட்டத்தைக் கைப்பற்றும் போதெல்லாம், உள்ளூர் மசூதிகளின் பேச்சாளர்கள் மூலம் அனைத்து உள்ளூர் பெண்கள் மற்றும் விதவைகளின் பெயர்களை ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தலிபான்களுக்கு அஞ்சும் மக்கள் தங்கள் குடும்பங்கள், பெண்கள் மற்றும் சிறுமிகளை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உட்பட பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்புகின்றனர். …
-
- 7 replies
- 843 views
-
-
இங்கிலாந்தில்... இதய அறுவை சிகிச்சை காத்திருப்பு, 40 சதவீதம் அதிகரிக்கலாம்! அடுத்த வசந்த காலத்தில் இங்கிலாந்தில் இதய அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்துக்கும் அதிகமாக உயரும் என்று ஒரு தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது. இதற்காக அதிக அரசாங்க பணம் தேவை என பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷன் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதய சேவைகள் கொவிட் தொற்றுக்கு முந்தைய நிலைக்கு திரும்ப ஐந்து ஆண்டுகள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் தொடங்குவதற்கு முன்பே, முக்கிய இதய பராமரிப்புக்கான காத்திருப்பு பட்டியல்கள் மிக நீளமாக இருந்தன என பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷன் தொண்டு நிறுவனம் கூறியது. காத்திருப்பு பட்டியலைக் குறைப்பதற்காக இந்த ஆண்டு 1…
-
- 0 replies
- 347 views
-
-
போர் நிறுத்தத்திற்கான... சர்வதேச அழைப்புகளை, நிராகரித்து தலிபான்கள் அமைப்பு! ஆப்கானிஸ்தானில் போர்நிறுத்தத்திற்கான சர்வதேச அழைப்புகளை தலிபான்கள் நிராகரித்துள்ளனர். முக்கிய வடக்கு நகரமான குண்டூஸையும், சர்-இ-புல் மற்றும் டலோகானையும் தலிபான்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. ஐந்து பிராந்திய தலைநகரங்கள் தலிபான்களிடம் வீழ்ந்துள்ளன. இதனிடையே தீவிரவாதிகள் மீது அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் விமானங்கள் மீண்டும் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன. சமீபத்திய தாக்குதல்களில் டஸன் கணக்கான தலிபான் போராளிகள் கொல்லப்பட்டதாக ஆப்கான் அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும், தலிபானின் செய்தித் தொடர்பாளர் ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்காவின் தலையீடுக்கு எதிராக எச்சரித்தார். ஆ…
-
- 0 replies
- 309 views
-
-
கிரேக்க தீவான... ஈவியாவில், காட்டுத்தீ: குடியிருப்புவாசிகள் கடல் வழியாக பாதுகாப்பாக வெளியேற்றம்! கிரேக்க தீவான ஈவியாவில் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருவதால், குடியிருப்புவாசிகள் கடல் வழியாக பாதுகாப்பாக வெளியேறி வருகின்றனர். 2,000க்கும் மேற்பட்ட மக்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது வயதானவர்கள் படகுகளில் வெளியேறியுள்ளனர். தீயை அணைக்க போதுமான உதவி அனுப்பப்படவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். தீவின் பல பகுதிகள் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டன. கிரேக்கத்தில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் 45சி (113எஃப்) ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக நாட்டில் பல காட்டுத் தீ பதிவாகியுள்ளது. ஏதென்ஸின் வடக்கு புறநகர்ப் பகுதியில் ஏற்பட்ட தீ தற…
-
- 0 replies
- 206 views
-
-
வடகொரியாவில் வெள்ளத்தால் கடும் உணவுப் பஞ்சம்-நிவாரணப் பணிகளை மேற்கொள்ள இராணுவத்துக்கு உத்தரவு வடகொரியாவில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு இராணுவத்துக்கு அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்துக்குப் பின் 1,000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து சுமார் 5,000 பேர் வெளியேற்றப்பட்டனர் என்று அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் நாட்டில் உணவு தொடர்பாக “பதற்றமான” சூழல் ஏற்பட்டதாக கிம் ஜோங் உன் கூறியிருந்தார். கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக வடகொரியாவில் தானிய உற்பத்தி இலக்குகள் தவறிப்போயின. அதனால் இந்த ஆண்டு அறுவடையை…
-
- 0 replies
- 204 views
-
-
சிங்கப்பூர் தேசிய நாள்: கேலி செய்யப்பட்ட சின்னஞ்சிறு தீவு பணக்கார நாடாக உருவெடுத்தது எப்படி? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிங்கப்பூர் தனது 56-ஆவது விடுதலை நாளைக் கொண்டாடுகிறது. இன்று சிங்கப்பூரின் தேசிய நாள். 1965-ஆம் ஆண்டு மலேசியாவில் இருந்து பிரிந்து தனி நாடாக சிங்கப்பூர் உருவெடுத்தது இந்த நாளில்தான். சமீப தசாப்தங்களாக உலக அளவில் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள நாடுகளின் வருடாந்திரப் பட்டியலில் தொடர்ந்து முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கிறது சிங்கப்பூர். ஆனால் அது தனி நாடாக உருவான போது கட்டமைப்புகள் ஏதும் இல்லாத, உணவுப் பொருள் உற்பத்தி …
-
- 0 replies
- 328 views
- 1 follower
-
-
இனவழிப்பை மறுக்கும் போக்கு-Srebrenica Genocide பாரிய மனிதப் புதைகுழிகளில் ஏற்கனவே புதைக்க ப்பட்டிருந்த 19 பொஸ்னிய முஸ்லிம்களின் எச்சங்கள், தோண்டியெடுக்கப்பட்டு, டீஎன்ஏ சோதனைகள் மூலம் அவை அடையாளங் காணப்பட்டு, பிரேதப் பெட்டிகளில் வைக்கப்பட்டு, அந்தக் கிழக்கு பொஸ்னிய நகரத்தின் ஓரத்தில் கொல்லப் பட்டவர்களுக்காகக் கட்டப்பட்ட துயிலும் இல்லத்தில் புதைக்கப் பட்டிருக்கின்றன. படுகொலை நடைபெற்ற அந்தக் காலப் பகுதியில் அருகிருந்த வொல்யாவிற்சா (Voljavica) என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஒன்பது வயது நிரம்பிய வாஹிட் சுல்ஜிச் (Vahid Suljic) தனது குடும்பத் தாருடன் ஸ்றபிறெனிற்சாவில் அடைக்கலம் தேடியிருந்தார். இனவழிப்பிலிருந்து அவரால் உயிர் பிழைக்க முடிந்தது. ஆனா…
-
- 0 replies
- 470 views
-
-
இஸ்ரேல் நிலைகளை நோக்கி லெபனானின் ஹிஸ்புல்லா படை ஏவுகணை தாக்குதல்! இஸ்ரேல் நிலைகளை நோக்கி ஈரான் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா படையினர், ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனானில் தங்கள் நிலைகள் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக இந்த ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா படையினர் தெரிவித்துள்ளனர். எனினும், தெற்கு லெபனானில் இருந்து முன்னதாக வீசப்பட்ட ஏவுகணை குண்டுகளுக்குப் பதிலடி கொடுப்பதற்காகவே தாங்கள் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தது. இதுகுறித்து இஸ்ரேல் இராணுவ துணைத் தளபதி அம்னான் ஷெஃப்ளர் கூறுகையில், ‘லெபனானிலிருந்து தங்கள் பகுதிகளை நோக்கி 19 ஏவுகணை குண்டுகள் வீசப்பட்டத…
-
- 0 replies
- 199 views
-
-
டோக்கியோ ரயிலில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதல்: 10 பேர் படுகாயம் - சந்தேக நபர் கைது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32ஆவது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வரும் நிலையில், ஜப்பானின் மேற்கு நகரிலுள்ள செடாகயா வார்டு பகுதியில் புகையிரதத்தில் பயணித்துக் கொண்டிருந்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் திடீரென சக பயணிகள் மீது கத்தியால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளார். இத்தாக்குதலில் 20 வயது இளம் பெண் ஒருவர் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தகவல் அறிந்த அந்நாட்டு பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அதற்கிடையில், தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அத்தோடு, தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்து…
-
- 0 replies
- 214 views
-
-
உலக சுகாதார நிறுவனத்தின், கோரிக்கையை... பிரான்ஸ்- ஜேர்மனி நிராகரித்தது! தடுப்பூசி வழங்கலில் நிலவும் ஏற்றத்தாழ்வை சீராக்கும் வகையில், டெல்டா வைரஸுக்கு எதிராக மூன்றாவது டோஸ் வழங்குவதை நிறுத்துங்கள் என உலக சுகாதார நிறுவனம் முன்வைத்திருந்த கோரிக்கையை பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் நிராகரித்துள்ளன. மாறுபாடு அடைந்துள்ள டெல்டா, டெல்டா பிளஸ் வைரஸ்களாக ஜேர்மனி, பிரான்ஸ் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மூன்றாவது டோஸ் செலுத்த தயாராகி வருகின்ற நிலையில், உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனோம் கேப்ரியேஸஸ் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார். ஆனால், இந்த கோரிக்கையை ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிராகரித்துள்ளன. செப்டம்பர் மாதம் முதல் முதியவர்கள் …
-
- 0 replies
- 236 views
-
-
ஈரான் மீது... இராணுவ நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக, இஸ்ரேல் எச்சரிக்கை! தங்கள் நாட்டு எண்ணெய்க் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இஸ்ரேல் பாதுகாப்புத் துறை பெஞ்சமின் கான்ட்ஸ், ‘எம்வி மெர்சிர் ஸ்ட்ரீட் எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்க இஸ்ரேல் தயாராக உள்ளது. ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை கட்டாயம் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இனி உலகின் மற்ற நாடுகளும் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என கூறினார். பெஞ்சமின் கான்ட்ஸின் இந்த எச்சரிக்கை குறித்து ஈரான்…
-
- 0 replies
- 224 views
-
-
"டெல்டா கொவிட்" மாறுபாடு... 135 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல்! மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட டெல்டா கொவிட்-19 மாறுபாடு, 135 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி, ஆல்ஃபா வகை கொரோனா உலகின் 132 நாடுகளிலும் பீட்டா வகை கொரோனா 81 நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. ஆல்ஃபா வகை கொரோனா 182 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை கொரோனா இதுவரை 135 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் புதிதாக கொரோனா…
-
- 0 replies
- 167 views
-
-
ஆப்கானின் முக்கிய மாகாண தலைநகரை கைப்பற்றியது தலிபான்: அரசாங்க ஊடகப்பிரிவு பணிப்பாளர் கொலை! ஆப்கானிஸ்தானின் நிம்ரூஸ் மாகாணத்தில் உள்ள சராஞ்ச் நகரை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிம்ரூஸின் தெற்கு மாகாணத்தின் தலைநகரான ஜரஞ்ச், நேற்று (வெள்ளிக்கிழமை) தலிபான்களிடம் வீழ்ந்ததாக பல ஆதாரங்கள் இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தீவிரவாதிகள் பெரும் தாக்குதலைத் தொடங்கிய பின்னர் தலிபான்களிடம் வீழ்ந்த முதல் மாகாண தலைநகராக இது மாறியுள்ளது. வெளிநாட்டு துருப்புக்கள் வெளியேறுவதால் கிளர்ச்சியாளர்கள் நாடு முழுவதும் வேகமாக முன்னேறி வருகின்றனர். அவர்கள் கிராமப்புறங்களை கைப்பற்றி இப்போது முக்கிய நகரங்…
-
- 0 replies
- 185 views
-
-
இரண்டு தடுப்பூசி அளவுகளை... செலுத்திய மாணவர்களுக்கு, குழுக்கள் முறையில் பணப் பரிசு! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று எதிராக இரண்டு தடுப்பூசி அளவுகளை செலுத்திய மாணவர்களுக்கு, பணப் பரிசு வழங்கும் திட்டமொன்றை ஆங்கில பல்கலைக்கழகங்கள் அறிமுகப்படுத்தியள்ளது. இதன்படி தடுப்பூசி போடப்பட்ட மாணவர்கள், இந்தப் போட்டியில் 5,000 பவுண்டுகள் பணப் பரிசை வெல்ல முடியும். இளைஞர்களிடையே தடுப்பூசி வீதங்களை உயர்த்துவதற்கான சமீபத்திய ஊக்கமாக, இந்த அறிவிப்பை சசெக்ஸ் பல்கலைக்கழகத் திட்டம் வெளியிட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் குழுக்கள் முறையில் சேர்க்கப்படுகிறார்கள், ஐந்து வெற்றியாளர்கள் தங்களுக்கான 5,000 பவுண்டுகள் பணப் பரிசை வெல்ல முடியும். குறிப்பாக மாணவர்கள் இரண்டு தடுப்பூ…
-
- 0 replies
- 352 views
-
-
துருக்கி நாட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற 300 ஆப்கான் அகதிகள் தடுத்து நிறுத்தம்! துருக்கி நாட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற 300 ஆப்கான் அகதிகளை இராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். ஆப்கானிஸ்தானில் இடம்பெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக வீடுகளை இழந்த இலட்சக்கணக்கானோர் அண்டைய நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். இந்த நிலையில், ஈரான் எல்லை வழியாகத் துருக்கி வந்தடைந்த சரக்கு லொரியை பாதுகாப்பு படையினர் சோதனையிட்டபோது சிறுவர்கள், பெண்கள் என 300இற்கும் மேற்பட்டோர் பதுங்கியிருந்தமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் அவர்களைத் தற்காலிக முகாம்களில் தங்கவைத்துள்ளனர். ஆப்கான் அகதிகளைக் கையாளத் துருக்கி அரசு தெளிவான நெறிமுறைகளை இன்னும் வகுக்காதத…
-
- 0 replies
- 309 views
-
-
கொவிட்-19: இங்கிலாந்தில் 18- 34 வயதுக்குட்பட்ட ஐந்தில் ஒருவர் மருத்துவமனையில் இருப்பதாக தகவல்! இங்கிலாந்தில் கொவிட்-19 தொற்றுடன் மருத்துவமனையில் உள்ளவர்களில் ஐந்தில் ஒருவர், 18 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள் என இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையின் புதிய தலைமை நிர்வாகி அமண்டா பிரிட்சார்ட் தெரிவித்துள்ளார். சுமார் 1,000 இளைஞர்கள் தற்போது மருத்துவமனையில் உண்மையில் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அவர் மேலும் கூறினார். தடுப்பூசி போட மக்கள் முன்வந்தது மிகவும் முக்கியமானது எனவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளைஞர்களின் அளவு கடந்த குளிர்காலத்தில் உச்சத்தை விட நான்கு மடங்கு அதிகம் எனவும் அவர் கூறினார். குளிர்கால எழுச்சியின் போது மருத்துவமனையில் இருந்தவர்களில் ச…
-
- 0 replies
- 320 views
-
-
சீனா Vs அமெரிக்கா: அடுத்த தலைமுறை போர் விமானங்களில் யாருடையது ஆதிக்கம் செலுத்தும்? உமர் ஃபாரூக் பாதுகாப்பு ஆய்வாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சண்டை விமானம். விமானப்படைக்கு ஆறாவது தலைமுறை 'ஸ்டெல்த்' போர் விமானத்தை தயாரிப்பது தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனா இடையே ஒரு புதிய ஆயுதப் போட்டி தொடங்கியிருக்கிறதா? கிடைக்கும் சமிக்ஞைகளைப் பார்த்தால் இந்த கேள்விக்கான பதில் 'ஆம்' என்றே தோன்றுகிறது. 'ஆறாவது தலைமுறை' போர் விமானங்கள் மூலம் 'அடுத்த தலைமுறை வான்வெளி ஆதிக்கம்' (NGAD) என்ற திட்டம், அடுத்த 10 ஆண்…
-
- 0 replies
- 416 views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின்... வீட்டில், குண்டு தாக்குதல் ! காபூலில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டை தீவிரவாதிகள் தாக்கியதில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். பாதுகாப்பு அமைச்சர் பிஸ்மில்லா கான் மொஹமட் வீட்டில் இல்லாத நேரத்தில் கார் குண்டு தாக்குதல் இடம்பெற்றதுடன் துப்பாக்கி பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பாதுகாப்பு அமைச்சரின் குடும்பத்தினர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்றும் தீவிரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நகரங்களில் மோதல் அதிகரித்து வரும் நிலையில் வன்முறையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. பாதுகாப்பு சபை அழைப்பு விடுத்துள்ளது. …
-
- 0 replies
- 205 views
-
-
மாலியில்... இடம்பெற்ற, பேருந்து விபத்தில் 41 பேர் உயிரிழப்பு! மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. வேகக்கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தியொன்று அதன் எதிர்த்திசையில் பயணித்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது, பேருந்தில் பயணித்த 41 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 33 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக ஆபத்தான வீதிகளை கொண்டுள்ள மாலியில் ஒரு இலட்சம் மக்கள் தொகையில் 26 இறப்புகள் பதிவாவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கின்றது. https://athavannews.c…
-
- 0 replies
- 216 views
-
-
எம்.வி. அஸ்ஃபால்ட் பிரின்சஸ் கப்பல்... கடத்தற்காரர்களால் விடுவிப்பு ஓமான் வளைகுடாவில் எம்.வி. அஸ்ஃபால்ட் பிரின்சஸ் கப்பலை பறிமுதல் செய்தவர்கள் கப்பலை விட்டு வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் எம்.வி. அஸ்ஃபால்ட் பிரின்சஸ் கப்பலில் சென்ற அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பனாமா-கொடியுடன் சென்ற எம்.வி. அஸ்ஃபால்ட் பிரின்சஸ் கடத்தல் முடிவடைந்துவிட்டதாக இபிரித்தானிய கடல் பாதுகாப்பு நிறுவனம் கூறியுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி அருகே குறித்த டேங்கர் கப்பல் சென்ற போது, 9 ஆயுதமேந்திய நபர்களால் நேற்று செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்டது. கப்பலை யார் கைப்பற்றினார்கள் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகாத நிலையில் ஈரானியப் படைகளே கடத்…
-
- 0 replies
- 313 views
-
-
அமெரிக்க படைகள் வெளியேறியதே... ஆப்கானில் வன்முறை அதிகரித்திருப்பதற்கு காரணம்: ஆப்கான் ஜனாதிபதி ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் அவசர அவசரமாக வெளியேறியதே நாட்டில் வன்முறை அதிகரித்திருப்பதற்கு காரணம் என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரஃப் கனி தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அவசர கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஆப்கான் அரசாங்கத்துக்கும் தலிபான்களுக்கும் இடையே பேச்சுவார்த்தையை நடத்த அவசரமாக (அமெரிக்காவால்) முன்வைக்கப்பட்ட திட்டமானது அமைதியை ஏற்படுத்தத் தவறியதுடன், ஆப்கான் மக்களிடையே சந்தேகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாகாண தலைநகரங்கள் மற்றும் பெரிய நகர்ப்புற ப…
-
- 0 replies
- 238 views
-
-
சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா: வூஹானில் 1.1 கோடி பேருக்கு பரிசோதனை 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சிறிய எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளதால் சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் கோவிட்-19 பரிசோதனை நடத்த அந்நாட்டு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 2019ஆம் ஆண்டின் இறுதியில் உலகிலேயே முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்று இங்குதான் கண்டறியப்பட்டது. அதன் பின்பு சுமார் 1.1 கோடி மக்கள்தொகை கொண்ட இந்த நகரம் உலகெங்கும் பேசுபொருள் ஆனது. வூஹானில் ஓராண்டு காலத்துக்கும் மேலாக கொரோனா வைரஸ் தொற்றால் யாரும் பாதிக்கப்பட்டது கண்டறியப்படாத சூழல…
-
- 0 replies
- 358 views
- 1 follower
-
-
"வூஹான்" ஆய்வகத்திலிருந்துதான்... கொவிட் வைரஸ் கசிந்தது: அமெரிக்க ஆய்வறிக்கையில் தகவல்! சீனாவின் வூஹான் நகரத்தில் உள்ள ஆய்வகத்திலிருந்துதான், கொரோனா வைரஸ் (கொவிட்-19) கசிந்தது என அமெரிக்க குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மைக் மெக்கால் தலைமையிலான குழு நேற்று (திங்கட்கிழமை) ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டனர். இதில் ‘வூஹான் ஆய்வகத்திலிருந்து கொரோனா தீநுண்மி கசிந்ததற்கான ஏராளமான சான்றுகள் உள்ளன. 2019, செப்டம்பர் 12ஆம் திகதிக்கு முன்னரே இது நிகழ்ந்திருக்க வேண்டும். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் மனித அழிவுகளை ஏற்படுத்த…
-
- 1 reply
- 504 views
-
-
ஆப்கானிஸ்தானின்... மூன்று முக்கிய நகரங்களில், தலிபான்கள் உக்கிர தாக்குதல்! ஆப்கானிஸ்தானின் ஹெராத், லஷ்கர் கா, காந்தஹார் ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் தலிபான்கள் உக்கிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அரசப் படைகளால் எவ்வளவு நேரம் தலிபான்களின் தாக்குதல்களுக்கு தாக்குபிடிக்க முடியும் எனத் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான காந்தஹாரில் உள்ள விமான நிலையத்தை, குறைந்தபட்சம் மூன்று ஏவுகணைகள் தாக்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. காந்தஹார் மாகாணம் தலிபான்களின் பிடியில் செல்லும் அபாயம் இருப்பதாக, அம்மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். இந்நகரத்தை தங்களின் தற்கால…
-
- 1 reply
- 441 views
-
-
இஸ்ரேல் எண்ணெய் கப்பல் மீதான தாக்குதல்: உண்மைகளை அறிய முயற்சிப்பதாக பிரித்தானியா தெரிவிப்பு உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இஸ்ரேல் நாட்டின் எண்ணெய் கப்பல் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக, உண்மைகளை அறிய முயற்சிப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இருந்து 300 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு பகுதியில் உள்ள மாசிரா தீவுக்கு அருகே அரேபியன் கடலில் சென்று கொண்டிருந்த இஸ்ரேல் எண்ணெய் கப்பல் மீது நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பிரித்தானிய மற்றும் ரோமேனியாவைச் சேர்ந்த இரண்டு கப்பல் ஊழியர்கள் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர். இந்தநிலையில் இத்தாக்குதலுக்கு பின்னணியில் ஈரான் இருப்…
-
- 1 reply
- 387 views
-