உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26623 topics in this forum
-
அமேசான் நிறுவனத்தின்... தலைமை செயல் அதிகாரி, ஜெஃப் பெசோஸ் தனது பதவியிலிருந்து விலகல்! அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ், தனது பதவியில் இருந்து முறைப்படி விலகியுள்ளார். 27 ஆண்டுகளுக்கு முன்பு அமேசான் நிறுவனத்தை நிறுவிய அதே திகதியில், அதாவது நேற்று (திங்கட்கிழமை) தனது பதவியை துறந்தார். இதன்பிறகு கனவு இலக்கான ப்ளூ ஆரிஜின் விண்ணூர்தி பயண நிறுவனத்தில் முழு நேரமும் கவனம் செலுத்தவுள்ளார். இவரது பதவி விலகலைத் தொடர்ந்து அமேசான் புதிய தலைமை செயல் அதிகாரியாக ஜெஃப் பெசோஸுடன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஆண்டி ஜாஸே பொறுப்பேற்கிறார். உச்சம் தொட்ட ஒன்லைன் வர்த்தகம் ஆரம்ப காலத்தில் ஒன்லைனில் புத்தகங்களை விற்பனை செய்வதற்காக தொடங்கப்பட்ட அம…
-
- 0 replies
- 299 views
-
-
காலக்கெடுவிற்குப் பின்னர் ஆப்கானிலிருக்கும் படையினர் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவாரகள்: தலிபான் ஆப்கானிஸ்தானில் நிலைக்கொண்டுள்ள வெளிநாட்டுப் படையினர் தாங்களே அளித்த செப்டம்பர் மாத கால கெடுவுக்குள் முழுவதாக வெளியேறிவிடாவிட்டால், அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவார்கள் என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. தூதரகங்களையும், காபூல் சர்வதேச விமான நிலையத்தையும் பாதுகாக்க முக்கியமாக அமெரிக்கத் துருப்புகளைக் கொண்ட 1000 படையினர் மட்டும் கெடுவுக்குப் பிறகும் ஆப்கானிஸ்தானில் தங்கியிருப்பார்கள் என்று கூறப்படும் பின்னணியில் தலிபனின் இந்த கருத்து வெளிவந்துள்ளது. இதுதொடர்பாக தலிபன் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷஹீன் கூறுகையில், ‘சுமார் 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் உள்ள நே…
-
- 0 replies
- 405 views
-
-
கண்டம் விட்டு கண்டம் பாயும்... ஏவுகணைகளை, செலுத்தவல்ல சைலோ தளங்களை நிறுவும் சீனா! கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை செலுத்தவல்ல சைலோ எனப்படும் தளங்களை தன் பாலைவனப் பகுதியில் சீனா நிறுவி வருவதாக வொஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன. செலுத்துவதற்காக பேலிஸ்டிக் ஏவுகணைகள் போன்றவை தயாராக வைக்கப்படும் குழி போன்ற தளங்களான 119 சைலோக்களை, சீனா, கன்சு மாகாணத்தில் இருக்கும் பாலைவனப் பகுதிகளில் நிறுவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தால், சீனாவின் அணு ஆயுத கொள்கையில் வரலாறு காணாத மாறுதல்கள் ஏற்படலாம் என கூறப்படுகின்றது. இந்த சைலோக்களில் சீனாவின் DF41 ஏவுகனைகள் வைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், சீனாவின்…
-
- 0 replies
- 223 views
-
-
விக்டோரியா மகாராணி, எலிசபெத் II சிலைகள் கவிழ்ப்புக்கு பிரிட்டன் கண்டனம் கனேடிய நகரமான வின்னிபெக்கில் விக்டோரியா மகாராணி மற்றும் இரண்டாம் எலிசபெத்தின் சிலைகள் எதிர்ப்பாளர்களினால் கவிழ்க்கப்பட்டுள்ளமைக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அலுவலகம் கண்டனம் வெளியிட்டுள்ளது. கனடாவின் முன்னாள் பழங்குடிப் பள்ளிகளில் குறிக்கப்படாத கல்லறைகளில் நூற்றுக்கணக்கான குழந்தைகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை எதிர்ப்பாளர்களிடையே கோபத்தை அதிகரித்தது. இதனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த வியாழக்கிழமை கனடா தினத்தன்று வின்னிபெக்கில் உள்ள விக்டோரியா மகாராணி மற்றும் இரண்டாம் எலிசபெத் சிலைகளின் சிலைகளை கவிழ்த்தனர். வின்னிபெக்கில் விக்டோரியா மகாராணியின் சிலை மனிட…
-
- 0 replies
- 508 views
-
-
ஈராக் மற்றும் சிரியா மீது பைடெனின் குண்டுவீச்சு: போரினை வழமையான ஒரு நிகழ்வாக்கல் Bill Van Auken மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரே நேரத்தில் இரு நாடுகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்த வாஷிங்டன் உத்தரவிட்டது. F-15 மற்றும் F-16 போர் விமானங்களை பயன்படுத்தி சிரியாவில் இரண்டு இலக்குகளிலும் ஈராக்கில் ஒரு இலக்கிலும் துல்லியமாக வழிநடத்தப்பட்ட ஆயுதங்களால் குண்டு மழை பொழியப்பட்டது. ஜூன் 27 அன்று ஈராக்-சிரியா எல்லைக்கு அருகே “ஈரான் ஆதரவுடைய ஆயுதக்குழுக்கள்” பயன்படுத்திய நிலையங்கள் என்று க…
-
- 0 replies
- 314 views
-
-
போர் குற்றவாளி ரம்ஸ்ஃபெல்ட் காலமானார், ஆனால் அவரின் இராணுவவாத மரபு உயிர் வாழ்கிறது Bill Van Auken மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் ஆபிரிக்காவின் குற்றகரமான ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களின் ஒரு பிரதான வடிவமைப்பாளரும் ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் கீழ் பாதுகாப்பு செயலராக இருந்த டொனால்ட் ரம்ம்ஃபெல்ட், நியூ மெக்சிகோவின் அவரது பண்ணையில் 'அவரது குடும்பம் சூழ்ந்திருக்க' காலமானதாக புதன்கிழமை மாலை வெளியிடப்பட்ட ஓர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் யு.எஸ். பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ரம்ம்ஃபெல்ட் பிப்ரவரி 9, 201…
-
- 0 replies
- 642 views
-
-
தூனிசியாவில் புலம்பெயர்ந்தோர் சென்ற படகு கவிழ்ந்ததில் 43 பேர் பலி, 84 பேர் மீட்பு வட ஆப்பிரிக்க நாடான தூனிசியா கடற் பரப்பில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 43 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் படகு கவிழந்த பின்னர் ஒரே இரவில் 84 பேர் மீட்கப்பட்டுள்ளதாக துனிசிய ரெட் கிரசண்ட் தெரிவித்துள்ளது. எகிப்து, சூடான், எரிட்ரியா மற்றும் பங்களாதேஷில் இருந்து 120 க்கும் மேற்பட்ட குடியேறியவர்களை ஏற்றிக்கொண்டு லிபியாவின் கடலோர நகரமான ஜுவாராவிலிருந்து வெள்ளிக்கிழமை மத்தியதரைக் கடலைக் வாயிலாக இத்தாலி நோக்கி புறப்பட்ட படகே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக மனிதாபிமான அமைப்பு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மெ…
-
- 0 replies
- 399 views
-
-
பிலிப்பைன்ஸ் விமான விபத்து ; 17 பேர் பலி, 40 பேர் மீட்பு பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற விமானப் படை விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இதுவரை 40 பேர் மீட்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் டெல்ஃபின் லோரென்சானா, இந்த விமானத்தில் மூன்று விமானிகள் மற்றும் 84 இராணுவத்தினர் உள்ளடங்கலாக 92 பேர் இருந்ததாகவும் அவர் உறுதிபடுத்தினார். சி -130 என்ற குறித்த விமானம், தலைநகர் மணிலாவிற்கு தெற்கே 1,000 கி.மீ (621 மைல்) தொலைவில் உள்ள ஜோலோ தீவில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளான…
-
- 0 replies
- 425 views
-
-
சீனாவை சீண்ட நினைப்பவர்கள் பெருஞ்சுவரில் மோதி அழிக்கப்படுவார்கள்!’ -அதிபர் ஜின் பிங் ஆவேசம் அதியமான் ப ஜின்பிங் ( Ng Han Guan ) மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற இவ்விழாவில் சுமார் 70 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அதில் எவரும் முக்கவசமோ, சமூக இடைவெளியோ கடைபிடிக்கவில்லை என்பது குறிப்பிப்டத்தக்கது விகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...! எக்ஸ்க்ளுசிவ் நியூஸ் கட்டுரைகள் தினமும் உங்களை தேடி…! Get Our Newsletter “சீனாவையும், சீன நாட்டினரையும் சீ…
-
- 7 replies
- 1.1k views
-
-
ஆப்கானிலிருந்து அமெரிக்க துருப்புக்கள் ஒகஸ்ட் மாத இறுதிக்கும் வெளியேறும்: வெள்ளை மாளிகை! ஆப்கானிஸ்தானில் இருந்து, அமெரிக்க படைகள் ஒகஸ்ட் மாத இறுதிக்குள் வெளியேறும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. தலிபான் மற்றும் அல்கொய்தாவுக்கு எதிரான போரின் மையமாக 20 ஆண்டுகளாக உள்ள பாக்ராம் விமான நிலையத்தை விட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள், வெளியேறிய நிலையில் இந்த கருத்து வெளிவந்துள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் ஜென் சாகி கூறுகையில்,’ஒகஸ்ட் இறுதிக்குள் துருப்புக்கள் நாட்டை விட்டு வெளியேறும். ஜனாதிபதி நீண்ட காலமாக உணர்ந்தார்… ஆப்கானிஸ்தானில் போர் இராணுவ ரீதியாக வெல்லக்கூடிய ஒன்றல்ல என்று. எனினும், ஆப்கானிஸ்தானுக்கு, எ…
-
- 0 replies
- 233 views
-
-
சிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண் 24 பிப்ரவரி 2021 பட மூலாதாரம்,TODAYONLINE,COM படக்குறிப்பு, காயத்ரி தனது மூன்று வயது மகனை நன்றாக வளர்க்க வேண்டும் எனும் கனவோடு சிங்கப்பூரில் பணிப்பெண் வேலைக்கு வந்த 24 வயது மியான்மர் பெண் தொடர்ச்சியாக சித்ரவதைக்கு உள்ளாகி கொல்லப்பட்ட சம்பவத்தில் அவரை பணியமர்த்தி இந்திய வம்சாவளி பெண்மணி தன் மீதான குற்றச்சாட்டை கடந்த செவ்வாயக்கிழமை ஒப்புக் கொண்டார். இந்த வழக்கில் விரைவில் அந்நாட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவிருக்கிறது. சிங்கப்பூரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய 2015 முதல் 2016ஆம் ஆண்டு …
-
- 30 replies
- 2.5k views
- 1 follower
-
-
தலிபான் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கு பாக்கிஸ்தானே காரணம் – அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலிபான் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றும் நிலைக்கு பாக்கிஸ்தானே காரணம் என அமெரிக்காவின்முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் பொல்டன் தெரிவித்துள்ளார். தலிபான் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கு பாக்கிஸ்தானே நேரடி காரணம் என அமெரிக்காவின்முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் பொல்டன் தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தான் பல பயங்கரவாத அமைப்புகளிற்கு இரகசிய ஆதரவை வழங்கியுள்ளது. பாக்கிஸ்தான் இரண்டு தசாப்தகாலமாக தலிபானிற்கு ஆதரவு வழங்கிவருவதுடன் அவர்களிற்கு அடைக்கலமும் கொடுத்துவருகின்றது என அவர் குற்றம்சாட்டியுள்ளார். தலிபான் …
-
- 1 reply
- 303 views
-
-
ஆப்கானின் முக்கிய விமான நிலையத்தை விட்டு அமெரிக்க- நேட்டோ படைகள் வெளியேறின! அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள், ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்ராம் விமான நிலையத்தை விட்டு வெளியேறிவிட்டன. ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டு சக்திகளை முழுமையாக வெளியேற்றும் முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகின்றது. தலிபான் மற்றும் அல்கொய்தாவுக்கு எதிரான போரின் மையமாக 20 ஆண்டுகளாக உள்ள பாக்ராம் விமான நிலையத்தை விட்டு துருப்புக்கள் வெளியேறியிருப்பது அரசாங்கத்துக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதிக்குள் அமெரிக்கப் படைகள் போய்விடும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் தெரி…
-
- 1 reply
- 455 views
-
-
பூர்வீகக் குடிகளைச் சேர்ந்த 751 சிறுவர்கள் புதைக்கப்பட்ட பெயரற்ற புதைகுழிகள் கனடாவைத் தொடர்ந்து உலுக்கி வருகின்ற வதிவிடப் பாடசாலை விவகாரம் (பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை கனடாவில் பூர்வீகக் குடிகளைச் சேர்ந்த சிறுவர்கள் அவர்களது குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு வதிவிடப் பாடசாலைகளில் சேர்க்கப் பட்டார்கள். இவ்வாறான ஒரு வதிவிடப் பாடசாலை அமைந்திருந்த காம்லூப்ஸ் என்னும் இடத்தில் கடந்த மே மாதத்தின் இறுதியில் 215 பூர்வீகக் குடிகளைச் சேர்ந்த சிறுவர்கள் ஒன்றாகப் புதைக்கப்பட்ட ஒரு பொதுப் புதைகுழி றேடார் கருவிகளின் உதவியோடு இனங் காணப்பட்டது. கனடா அரசின் நிதி உதவியோடும் கத்தோலிக்க திருச் சபையின் நிர்வா…
-
- 0 replies
- 327 views
-
-
‘யூரோ 2020’: ஸ்கொட்லாந்தில் 2,000 கொவிட் தொற்றுகள்! ஸ்கொட்லாந்தில் கிட்டத்தட்ட 2,000 கொவிட் தொற்றுகள், ‘யூரோ 2020’ கால்பந்து போட்டிகளைப் பார்க்கும் மக்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. 1,991 தொற்றுகளில் மூன்றில் இரண்டு பங்கு ஜூன் 18ஆம் திகதி, இங்கிலாந்து – ஸ்கொட்லாந்து போட்டியை காண லண்டனுக்குச் சென்றவர்கள் என ஸ்கொட்லாந்து பொது சுகாதார துறை தெரிவித்துள்ளது. இந்த போட்டியை வெம்ப்லி விளையாட்டரங்கினுள் இருந்து 397 இரசிகர்கள் பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கிளாஸ்கோவில் உள்ள ஃபான்சோன் அல்லது ஹாம்ப்டனில் நடந்த இரு போட்டிகளை காண கலந்துகொண்டவர்களுடன் ஒப்பிடுகையில், இது குறைந்த எண்ணிக்கையிலான தொற்றாகும். கொவிட் கட்டுப்பாடுகள் காரணமாக வெம்ப்லியில் நடந்த போட…
-
- 0 replies
- 328 views
-
-
வேல்ஸ் இளவரசி... டயானாவின் 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் உருவச்சிலை திறப்பு! கேம்பிரிட்ஜ் மற்றும் சசெக்ஸ் இளவரசர்கள், அவர்களின் தாய் வேல்ஸ் இளவரசி டயானாவின் 60ஆவது பிறந்தநாளில் சிலை ஒன்றை திறந்து வைக்கவுள்ளனர். 2017ஆம் ஆண்டில் சகோதரர்களால் ஆணையிடப்பட்ட இந்த சிலை, கென்சிங்டன் அரண்மனையின் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சுங்கன் கார்டனில் நிறுவப்படவுள்ளது. இந்த நேரத்தில், அரண்மனைக்கு வருபவர்களுக்கு ‘அவருடைய வாழ்க்கையையும் அவருடைய மரபையும் பிரதிபலிக்க’ இது உதவும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்த நிகழ்வின் மூலம், கடந்த ஏப்ரல் மாதம் எடின்பர்க் இளவரசரின் இறுதிச் சடங்கிற்குப் பிறகு வில்லியம் மற்றும் ஹரி ஆகியோர் சந்தித்துக் கொள்கின்றனர். இன்று (வியாழக்கிழ…
-
- 0 replies
- 352 views
-
-
ரஷ்யா எந்த அளவு பொறுமையுடன் நடந்துகொள்கிறது என பிரித்தானியா சோதிக்கின்றது: புடின்! பதற்றத்தை ஏற்படுத்தினால் ரஷ்யா எந்த அளவு பொறுமையுடன் நடந்துகொள்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவே பிரித்தானியா போர்க்கப்பல், ரஷ்யாவின் ஒரு பகுதியான கிரீமியாவுக்குள் அத்துமீறியதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார். கிரிமீயா அருகே கருங்கடல் பகுதியில் பிரித்தானிய கடற்படைக்குச் சொந்தமான ஹெச்.எம்.எஸ் டிஃபண்டர் கப்பல் கடந்த 23ஆம் திகதி அத்துமீறி நுழைந்ததாக ரஷ்யா குற்றம் சாட்டியது. இதையடுத்து, …
-
- 1 reply
- 518 views
-
-
சீன அரசு தமிழை ஊக்குவிக்கிறது! கடந்த சில மாதங்களாக சீனாவை சேர்ந்த சிலர் வகுப்பறையில் தமிழை பேசுவது, படிப்பது, எழுதுவது, நாடகத்தில் நடிப்பது, தமிழர்களின் பாரம்பரிய உடைகளை உடுத்தி கொண்டு பொங்கல் கொண்டாடுவது போன்ற காணொளிகளும், புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இவற்றை பார்க்கும் இணைய பயன்பாட்டாளர்களுக்கு ஆச்சர்யம் மட்டுமின்றி, அவர்களது பின்னணி குறித்த பல்வேறு கேள்விகளும் எழுகின்றன.சீனாவிலுள்ள யுனான் மாநிலத்திலுள்ள யுனான் மின்சு பல்கலைக்கழகத்தின் தெற்காசிய மொழிகள் மற்றும் கலாசார கல்லூரியில் வங்காளம், நேபாளி, சிங்களம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளுக்கான துறைகள் தனித்தனியே செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அங்கு 2017ஆம் ஆண்டு தமிழ் துறை அதிகாரப்ப…
-
- 4 replies
- 998 views
-
-
கனடாவில்... நூற்றுக் கணக்கான, மனித புதைகுழிகள் கண்டுபிடிப்பு! கனடாவின் சஸ்கட்செவான் மாகாணத்தில் உள்ள ஒரு முன்னாள் உறைவிடப் பாடசாலை அமைந்திருந்த இடத்தில், நூற்றுக்கணக்கான மனித புதைக்குழிகளை கண்டுபிடித்துள்ளதாக ‘தி கவொசெஸ் ஒஃப் ஃபஸ்ட் நேஷன்ஸ்’ எனும் பூர்வகுடிகள் உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. இதுநாள் வரை கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழிகளிலேயே இதுதான் மிகவும் முக்கியத்துவம் பெறும் அளவுக்குக் கணிசமான எண்ணிக்கை உடைய கண்டுபிடிப்பு என குறித்த பூர்வகுடிகள் உரிமை அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஆனால், அந்த உறைவிடப் பாடசாலை அமைந்திருந்த இடத்தில் எத்தனை மனித புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டன என்பதை அந்த அமைப்பு தெரிவிக்கவில்லை. கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண…
-
- 0 replies
- 491 views
-
-
போர்... மண்டலம் போல காட்சியளிக்கும் செக் குடியரசின் பல கிராமங்கள்! செக் குடியரசின் பல கிராமங்களில் வீசிய கடும் சூறாவளியினால், இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதோடு 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு வீசிய இந்த சூறாவளி, தென்கிழக்கு ப்ரெக்லாவ் மற்றும் ஹோடோனின் மாவட்டங்களில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதிகளில் உள்ள கூரைகள் தூக்கி வீசப்பட்டதோடு, மரங்கள் வேர்களோடு சாய்ந்தது. கார்கள் கவிழ்ந்தது. குறைந்த பட்சம் மணிக்கு 219 கிமீ (136 மைல்) வேகத்தில் காற்று வீசியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மோசமான பாதிப்புக்குள்ளான பகுதிகள் ஒரு போர் மண்டலம் போல இருப்பதாகக் கூறப்படுகின்றது. அத்துடன் ஆலங்கட்டி கற்கள் டென்னிஸ் …
-
- 0 replies
- 499 views
-
-
அமெரிக்காவில்12 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து – பலர் காணாமல் போயுள்ளதாக தகவல் 3 Views அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 12 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். பலரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை 102 பேரை அடையாளம் கண்டு மீட்டுள்ளனர். 99 பேர் எங்குள்ளனர் என்பது தெரியவில்லை என்றும் கூறப்படுகின்றது. கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் தெரியவில்லை. இதில் சில இலத்தின் அமெரிக்க குடியேறிகளும் சிக்கியுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது. பராகுவே நாட்டின் அதிபரின் மனைவி சில்வான லோபெஸ் மொரெய்ராவின் சகோதர…
-
- 20 replies
- 1k views
-
-
பிரித்தானிய இராணுவ இரகசிய ஆவணங்கள் பேருந்து நிறுத்தத்தில் கண்டுபிடிப்பு: விசாரணைகள் ஆரம்பம்! பிரித்தானிய இராணுவ இரகசிய ஆவணங்கள் இங்கிலாந்தின் தெற்கில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆவணங்கள், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகும் அங்கு பிரித்தனிய படையினர் இருந்தால் என்னவாகும்; கிரைமியா கடல் பகுதியில் போர்க் கப்பலை செலுத்தினால் ரஷ்யா எவ்வாறு எதிர்வினையாற்றும் என்பது போன்ற பல்வேறு இரகசிய திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை கென்டில் ஒரு பேருந்து நிறுத்தத்தின் பின்னால், மழை நனைத்த குவியலில் 50 பக்க ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பிபிசி தெரிவித்துள்ளது. பாதுகாப்புத் துறை ஊழியர் ஒருவரால் தவ…
-
- 0 replies
- 348 views
-
-
அணுசக்தி மையங்களின் படங்களை ஐ.ஏ.இ.ஏ.விடம் ஒப்படைக்க முடியாது: ஈரான் அறிவிப்பு! தங்களது அணுசக்தி மையங்களின் படங்களை ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பிடம் (ஐ.ஏ.இ.ஏ.) ஒப்படைக்க முடியாது என்று ஈரான் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பக்கீர் காலிபாஃப் கூறுகையில், ‘அணுசக்தி மையங்களின் உள்ளே எடுக்கப்படும் படங்களை ஐ.ஏ.இ.ஏ-வுடன் பகிர்ந்துகொள்வதற்கான ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. எனவே, இனி அத்தகைய படங்கள் எதுவும் அந்த அமைப்பிடம் வழங்கப்படாது. அந்தப் படங்களை ஈரானே கைவசம் வைத்திருக்கும்’ என கூறினார். இதற்கிடையே, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தளர்த்தாவிட்டால் தங்களது அணுசக்தி மையங்களுக்குள் ஐ.ஏ.இ.ஏ. பொருத்தியுள…
-
- 0 replies
- 627 views
-
-
ஈராக்- சிரியாவில் ஈரான் ஆதரவு தீவிரவாத குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா வான் தாக்குதல்! ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு தீவிரவாத குழுக்களை இலக்கு வைத்து, அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தி வருவதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. சமீபத்திய மாதங்களில் ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க படையினரின் தளங்களை இலக்கு வைத்து பல்வேறு ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக பென்டகன் தெரிவித்துள்ளது. இதற்கமைய அந்த நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்காக பயன்படுத்தப்படும் வளாகங்கள், ஆயுத கிடங்குகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக பென்டகன…
-
- 0 replies
- 336 views
-
-
ஈராக் - சிரியாவில் ஈரான் ஆதரவுடைய போராளிகளுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் ஈராக் மற்றும் சிரியாவில் ஈரான் ஆதரவுடைய போராளிகளுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை மற்றொரு சுற்று வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்கா கூறியுள்ளது. ஈராக்கில் அமெரிக்க பணியாளர்கள் மற்றும் நிலையங்களுக்கு எதிராக போராளிகள் முன்னெடுத்த ட்ரோன் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்க இராணுவம் சிரியாவில் இரு இடங்களிலும், ஈராக்கில் ஒரு இடத்திலும் செயற்பட்டு வந்த போராளிகளின் ஆயுத சேமிப்பு நிலையங்கள் குறிவைத்ததாக அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது. எனினும் தாக்குதல் காரணமாக யாரா…
-
- 0 replies
- 478 views
-