உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
ஆப்கானில்... நிலை கொண்டிருந்த, அமெரிக்க- நேட்டோ படைகளின் உயர் தளபதி பதவி விலகல்! ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளின் உயர் தளபதி ஜெனரல் ஆஸ்டின் ஸ்கொட் மில்லர், தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். அவர் பதவியில் இருந்து விலகி, அவரது பொறுப்புக்களை பிராந்தியக் கட்டுப்பாடுகளை நிர்வகிக்கும் கீழ்நிலை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடந்த எளிமையான நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய பொறுப்புகளை இரு அமெரிக்க ஜெனரல்களிடம் ஒப்படைத்தார். அவர்களில் ஒருவர் புளோரிடாவில் இருந்தபடி வெளிநாட்டில் அமெரிக்கப் படைகளை வழிநடத்துபவர். மற்றொருவர் படை விலக்கலுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் இருக்கப்போகும் சுமார் 650 வீரர்களுக்கு தளபதியாக இருப்பவர். …
-
- 1 reply
- 645 views
-
-
பெர்லின் பேரணி: மேற்குலக நாடுகளின் அரசியல்வாதிகளின் ஆதரவுக்கு ஈரான் கண்டனம்! ஈரான் ஆட்சியாளர்களுக்கெதிரான பேரணியில், மேற்குலக நாடுகளின் அரசியல்வாதிகளின் ஆதரவு அளித்தமைக்கு ஈரான் கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்தப் பேரணியில் காணொளி வாயிலாக ஸ்லோவேனியா பிரதமர் பங்கேற்றதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஸ்லோவேனியா தூதருக்கு ஈரான் அழைப்பாணை அனுப்பியுள்ளது. இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘ஒரு காலத்தில் சதாம் ஆதரவுடன் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட அமைப்பு ஏற்பாடு செய்திருந்த சர்க்கஸுக்கு அவர்கள் தங்களை மலிவான விலைக்கு விற்றுவிட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஸ்லோவேனியா பிரதமர் பேசியது ஏற்றுக்கொள்ள முடியாதது. இருதரப்பு தூதரக உறவுக்கு…
-
- 0 replies
- 250 views
-
-
அடுத்த வியாழக்கிழமை ஜோ பைடன் – அங்கலா மேர்க்கல் சந்திப்பு : வெள்ளை மாளிகை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எதிர்வரும் வியாழக்கிழமை ஜேர்மன் அதிபர் அங்கலா மேர்க்கலுடன் ஒரு சந்திப்பை நடத்துவார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. நேட்டோ நட்பு நாடுகளுக்கிடையேயான ஆழமான மற்றும் நீண்டகாலம் உறவுகளை வலுப்படுத்தும் முகமாக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களைத் தாக்கிய ரம்சம்வார் தாக்குதல் மற்றும் ரஷ்யா- ஜேர்மனிக்கு இடையிலான நோர்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாய் இணைப்பு திட்டம் குறித்து இதன்போது பேச்சு நடைபெறவுள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான உறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் குறித்த உத்தியோகபூர்வ விஜயம் இடம்பெறும் என வெ…
-
- 0 replies
- 512 views
-
-
தீ விபத்தில் 52 பேர் பலி : பலர் காயம் - பங்களாதேஷில் சம்பவம் ! பங்களாதேஷில் இடம்பெற்ற பாரிய தீ விபத்தொன்றில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் உள்ள 6 மாடி குளிர்பான தொழிற்சாலையொன்றிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளுது. தீ விபத்து இடம்பெற்ற தொழிற்சாலையில், இரசாயனப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் போத்தல்கள் இருந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தீயையடுத்து குறித்த தொழிற்சாலையின் ஊழியர்களில் 44 பேர் காணாமல்போயுள்ளதாகவும் அவர்களை தேடும் நடவடிக்கையில் மீட்புப் பணியினர் ஈடுபட்டுள்ளனர். தீயை கட்டுப்படுத்த 18 தீயணைப்பு இயந்…
-
- 0 replies
- 601 views
-
-
அந்தாட்டிக்காவில் புதிய தாவர இனம் இந்தியா விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு அந்தாட்டிக்காவில் ஒரு புதிய தாவர இனத்தை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்தாட்டிக்கா புவியின் தென் முனையில் உள்ள ஒரு உறைந்த கண்டம். இங்கு சூரிய வெளிச்சம் படுவது குறைவாகவே இருக்கும், இதன் காரணமாக மொத்த கண்டமும் பனிக்கட்டிகளால் சூழ்ந்து காணப்படும். இங்கு நிரந்தர மக்கள் குடியிருப்பு என எதுவும் கிடையாது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வுக்கூடங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்நிலையிலே புதிய தாவர இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். விஞ்ஞானிகள் 2017 ஆம் ஆண்டில் பனியால் மூடப்பட்ட கண்டத்தில் பயணத்தின் போது ஒரு வகை பாசி தாவரத்தை கண்டனர். அடையாளம் காண்பது கடினமான இந்த இனம…
-
- 0 replies
- 446 views
-
-
ஆப்கானில் அமெரிக்க இராணுவப் பணி ஆகஸ்ட் 31 உடன் முடிவைடையும் - பைடன் உறுதி ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவப் பணி எதிர்வரும் ஆகஸ்ட் 31 க்குள் முடிவடையும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் வியாழனன்று கூறியுள்ளார். மேலும் உள்நாட்டுப் போரைத் தடுக்கு ஒன்றிணையுமாறு நாட்டின் தலைவர்களையும் அவர் கேட்டுக் கொண்டார். 20 ஆண்டுகால யுத்தத்தின் பின்னர், படைகளைத் திரும்பப் பெறுவதற்கு முன்னர் அமெரிக்க ஒரு காலத்தில் கொண்டு வர விரும்பிய சிறந்த நிலைமைகள் ஆப்கானிஸ்தானில் ஒருபோதும் நிறைவேறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். உலகை உலுக்கிய அமெரிக்கவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமான அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு அடைக்கலம் கொடுத்து வந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா கடந்த 200…
-
- 5 replies
- 531 views
-
-
ஆஃப்கானில்... தலிபான்களுக்கு, எதிராக போராட ஆயுதமேந்தும் பெண்கள்! ஆஃப்காஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க மற்றும் நேட்டோ படையினர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்ற நிலையில், தலிபான்களுக்கு எதிராக போராட அங்குள்ள பெண்கள் ஆயுதமேந்த தொடங்கியுள்ளனர். பெரும்பாலான பெண்கள் கலாஷ்னிகோவ் துப்பாக்கிகளையும் ஆப்கானிஸ்தானின் கொடியையும் சுமந்து நிற்கும் படங்கள் கடந்த சில நாட்களாக வெளியாகின. தலிபான்களுடன் அரசாங்கத்தால் தனியாகப் போராட முடியாது என்ற காரணத்தால், ஜாஸ்ஜான் மற்றும் கௌர் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் ஆப்கானிஸ்தான் தேசிய இராணுவத்திற்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர். தற்போது ஆப்கானிஸ்தானில் பெண்களின் இந்த முன்னெடுப்பு, காபூல், ஃபார்யாப், ஹெராத் மற்றும் பிற நகரங்களிலும் க…
-
- 0 replies
- 396 views
-
-
மூன்று மாதங்களுக்கு பிறகு... "எவர்கிவன்" சரக்கு கப்பலை, விடுவித்தது சூயஸ் கால்வாய் ஆணையம்! சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு எவர்கிவன் சரக்கு கப்பலை, சூயஸ் கால்வாய் ஆணையம் விடுவித்துள்ளது. இதையடுத்து எவர்கிவன் சரக்கு கப்பல், நேற்று (புதன்கிழமை) நெதர்லாந்து நோக்கிய தனது பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளது. சர்வதேச அளவில் உலகின் மிக முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடமாக விளங்கும் சூயஸ் கால்வாயில், கடந்த மார்ச் மாதம் எவர்கிவன் சரக்கு கப்பல் குறுக்கு பக்கமாக தரை தட்டி நின்றது. இதன் காரணமாக சர்வதேச சரக்கு கப்பல் போக்குவரத்து தடைப்பட்டு, உலக வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஒரு வார கால முயற்சிக்கு பிறகு எவர்கிவன் கப்பல் மீண்டும் மிதக்கும் நிலைக்கு கொ…
-
- 0 replies
- 461 views
-
-
கொரோனா தடுப்பூசி போட்டால் வாழ்நாள் முழுவதும் நோய்த் தொற்று வராதா? - நிபுணர்கள் கூறுவது என்ன பட மூலாதாரம், Getty Images கொரோனாவுக்கான தடுப்பூசிபோட்டவருக்கு எழும் முக்கியமான கேள்வி, இனி எனக்கு வாழ்நாளில் கொரோனா தொற்றே வராதா என்பதுதான். அமெரிக்காவில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் முகக் கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதனால் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு வராதா, அவர்கள் மூலமாக நோய் பரவாதா என்ற கேள்விகள் எழுந்தன. இப்போதும் பலர் கொரோனாவுக்கான தடுப்பூசி போட்ட பிறகு தமக்கு கொரோனா வருவதற்கான வாய்ப்பே இல்லை என்று கூறுவதைக் கேட்க முடிகிறது. ஆனால் உண்மை …
-
- 1 reply
- 475 views
-
-
முகக்கவசம் அணிவதற்கான... சட்டபூர்வமான கடமையை, முடிவுக்கு கொண்டுவர தீர்மானம்: பிரதமர் பொரிஸ்! முகக்கவசம் அணிவதற்கான சட்டபூர்வமான கடமையை, அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவரும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். முகக்கவசம் தொடர்பான அனைத்து சட்டங்களும் அரசாங்கத்தின் தளர்வு வரைபடத்தின் நான்காவது கட்டத்தில் இரத்து செய்யப்படும் என்றும், மீதமுள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட வேண்டும் என்றும், இந்த கட்டத்தில் இருந்து முகக்கவசம் அணிவது தனிப்பட்ட தேர்வாக மாறும் என்றும் பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார். கடைகளில் அல்லது ஒரு மதுபானசாலை அல்லது உணவகத்திற்குள் நுழையும்போது தனிநபர்கள் முகக்கவசம் அணிவது இனி கட்டாயமாக இருக்காது என்பதே இதன் பொருள். இதுகுறித்து அவர…
-
- 0 replies
- 418 views
-
-
அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறை: நியூயோர்க்கில் பேரிடர் அவசர நிலைமை பிரகடனம் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறைகளுக்கு தீர்வு காணும் வகையில் நியூயோர்க்கில் பேரிடர் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த உத்தரவில் கையெழுத்திட்டு கருத்து தெரிவித்த ஆளுநர் அண்ட்ரூ கியூமோ, ஜூலை 4 ஆம் திகதி விடுமுறை வார இறுதியில் மாநிலத்தில் 51 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றதாக கூறினார். கடந்த வார இறுதியில் கிட்டத்தட்ட 200 பேர் உட்பட, நாடு முழுவதும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் கியூமோவின் பேரிடர் அவசர நிலைமை அறிவிப்பு துப்பாக்கி வன்முறையை ஒ…
-
- 0 replies
- 315 views
-
-
கரீபியன் நாட்டின் தலைநகருக்கு வெளியே தனது தனியார் இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது ஹைட்டிய ஜனாதிபதி ஜோவெனல் மோஸ் ஒரு ஆயுதமேந்திய தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டார் என்று நாட்டின் செயல் பிரதமர் புதன்கிழமை தெரிவித்தார். முதல் பெண்மணி மார்ட்டின் மோஸும் அதிகாலை வன்முறையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் தெரிவித்துள்ளார். https://www.nydailynews.com/news/world/ny-haitian-president-jovenel-moise-killed-attack-home-20210707-q4dxxwwmnvfftp5atncwsterzm-story.html#nt=pf-double%20chain~top-version1~flex%20feature~curated~haiti-703a~Q4DXXWWMNVFFTP5ATNCWSTERZM~1~1~3~7~art%20yes ஹைட்டிய ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் புத…
-
- 11 replies
- 1.5k views
- 1 follower
-
-
ரஷ்யாவில்... 29 பேருடன், பயணித்த விமானம் மாயம்: தேடுதல் நடவடிக்கைகள் தீவிரம்! ரஷ்யாவில் 29 பேருடன் பயணித்த பயணிகள் விமானம், மாயமாகிள்ளதாக அந்நாட்டின் அவசர அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) பிராந்திய தலைநகரான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்- கம்சாட்ச்கியிலிருந்து பழனா கிராமத்திற்கு செல்லும் வழியில் குறித்த விமானம், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் தொடர்பை இழந்தது என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. ரஷ்யாவின் தூர கிழக்கில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் 28 பேருடன் ரஷ்ய ஏ.என்-26 விமானமே இவ்வாறு காணாமல் போயுள்ளது. தேடல் மற்றும் மீட்பு குழுக்கள், தியா ரியாவுக்கு சென்று கொண்டிருப்பதாக அவசர அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமானத்தில் 22 பயணிகள் மற்றும் …
-
- 0 replies
- 330 views
-
-
நாடு கடத்தப்பட்ட... திபெத்தியர்களுடன், தொடர்பு கொண்டமைக்காக பல திபெத்தியர்கள் தடுப்பு காவலில்! சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.சி.பி) நூற்றாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னரே நாடு கடத்தப்பட்ட திபெத்தியர்களுடன் தொடர்பு கொண்டதற்காக நாகு மாகாணத்தின் டிரிரு கவுண்டியிலுள்ள பல திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்பட்ட திபெத்தியர்களைத் தொடர்பு கொண்ட ஒரே குற்றச்சாட்டுக்காக 44 வயதான கியாஜின், அவரது தந்தை உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மனித உரிமைகள் குழு, திபெத் வாட்சை மேற்கோள் காட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. திபெத்தில் பல உள்ளூர் ஆதாரங்கள் கடும் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜூலை 1ஆம் திகதி, சி.சி.பி நூற்றாண்டுக…
-
- 0 replies
- 299 views
-
-
தலிபான் தீவிரவாதிகளுக்கு அஞ்சி... 1,000 ஆஃப்கான் படை வீரர்கள் தஜிகிஸ்தானில் தஞ்சம்! ஆஃப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுடன் மோதலில் ஈடுபட்ட அந்நாட்டு வீரர்கள் 1,000பேர், தங்களின் உயிரை காப்பாற்றிக் கொள்ள அருகாமை நாடான தஜிகிஸ்தானில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஆஃப்கானிஸ்தான் எல்லையில் கண்காணிப்பை கவனித்து வரும் தஜிகிஸ்தான் தேசிய பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) காலையில் தங்கள் எல்லைக்குள் ஆஃப்கானிஸ்தான் படையினர் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் இரவு முழுவதும் அவர்கள் தலிபான் ஆயுதமேந்திய தீவிரவாதிகளுடன் சண்டையிட்ட பிறகு தங்கள் பகுதிக்குள் வந்ததாகவும் தஜிகிஸ்தான் தேசிய பாதுகாப்பு குழு விளக்கம் அளித்துள்ளது. ஆஃப்கானிஸ்தான் படையினர் தஜிகிஸ்தான் எல்லைக்குள…
-
- 1 reply
- 424 views
-
-
அமேசான் நிறுவனத்தின்... தலைமை செயல் அதிகாரி, ஜெஃப் பெசோஸ் தனது பதவியிலிருந்து விலகல்! அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ், தனது பதவியில் இருந்து முறைப்படி விலகியுள்ளார். 27 ஆண்டுகளுக்கு முன்பு அமேசான் நிறுவனத்தை நிறுவிய அதே திகதியில், அதாவது நேற்று (திங்கட்கிழமை) தனது பதவியை துறந்தார். இதன்பிறகு கனவு இலக்கான ப்ளூ ஆரிஜின் விண்ணூர்தி பயண நிறுவனத்தில் முழு நேரமும் கவனம் செலுத்தவுள்ளார். இவரது பதவி விலகலைத் தொடர்ந்து அமேசான் புதிய தலைமை செயல் அதிகாரியாக ஜெஃப் பெசோஸுடன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஆண்டி ஜாஸே பொறுப்பேற்கிறார். உச்சம் தொட்ட ஒன்லைன் வர்த்தகம் ஆரம்ப காலத்தில் ஒன்லைனில் புத்தகங்களை விற்பனை செய்வதற்காக தொடங்கப்பட்ட அம…
-
- 0 replies
- 303 views
-
-
காலக்கெடுவிற்குப் பின்னர் ஆப்கானிலிருக்கும் படையினர் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவாரகள்: தலிபான் ஆப்கானிஸ்தானில் நிலைக்கொண்டுள்ள வெளிநாட்டுப் படையினர் தாங்களே அளித்த செப்டம்பர் மாத கால கெடுவுக்குள் முழுவதாக வெளியேறிவிடாவிட்டால், அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவார்கள் என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. தூதரகங்களையும், காபூல் சர்வதேச விமான நிலையத்தையும் பாதுகாக்க முக்கியமாக அமெரிக்கத் துருப்புகளைக் கொண்ட 1000 படையினர் மட்டும் கெடுவுக்குப் பிறகும் ஆப்கானிஸ்தானில் தங்கியிருப்பார்கள் என்று கூறப்படும் பின்னணியில் தலிபனின் இந்த கருத்து வெளிவந்துள்ளது. இதுதொடர்பாக தலிபன் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷஹீன் கூறுகையில், ‘சுமார் 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் உள்ள நே…
-
- 0 replies
- 422 views
-
-
கண்டம் விட்டு கண்டம் பாயும்... ஏவுகணைகளை, செலுத்தவல்ல சைலோ தளங்களை நிறுவும் சீனா! கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை செலுத்தவல்ல சைலோ எனப்படும் தளங்களை தன் பாலைவனப் பகுதியில் சீனா நிறுவி வருவதாக வொஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன. செலுத்துவதற்காக பேலிஸ்டிக் ஏவுகணைகள் போன்றவை தயாராக வைக்கப்படும் குழி போன்ற தளங்களான 119 சைலோக்களை, சீனா, கன்சு மாகாணத்தில் இருக்கும் பாலைவனப் பகுதிகளில் நிறுவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தால், சீனாவின் அணு ஆயுத கொள்கையில் வரலாறு காணாத மாறுதல்கள் ஏற்படலாம் என கூறப்படுகின்றது. இந்த சைலோக்களில் சீனாவின் DF41 ஏவுகனைகள் வைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், சீனாவின்…
-
- 0 replies
- 228 views
-
-
விக்டோரியா மகாராணி, எலிசபெத் II சிலைகள் கவிழ்ப்புக்கு பிரிட்டன் கண்டனம் கனேடிய நகரமான வின்னிபெக்கில் விக்டோரியா மகாராணி மற்றும் இரண்டாம் எலிசபெத்தின் சிலைகள் எதிர்ப்பாளர்களினால் கவிழ்க்கப்பட்டுள்ளமைக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அலுவலகம் கண்டனம் வெளியிட்டுள்ளது. கனடாவின் முன்னாள் பழங்குடிப் பள்ளிகளில் குறிக்கப்படாத கல்லறைகளில் நூற்றுக்கணக்கான குழந்தைகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை எதிர்ப்பாளர்களிடையே கோபத்தை அதிகரித்தது. இதனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த வியாழக்கிழமை கனடா தினத்தன்று வின்னிபெக்கில் உள்ள விக்டோரியா மகாராணி மற்றும் இரண்டாம் எலிசபெத் சிலைகளின் சிலைகளை கவிழ்த்தனர். வின்னிபெக்கில் விக்டோரியா மகாராணியின் சிலை மனிட…
-
- 0 replies
- 511 views
-
-
ஈராக் மற்றும் சிரியா மீது பைடெனின் குண்டுவீச்சு: போரினை வழமையான ஒரு நிகழ்வாக்கல் Bill Van Auken மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரே நேரத்தில் இரு நாடுகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்த வாஷிங்டன் உத்தரவிட்டது. F-15 மற்றும் F-16 போர் விமானங்களை பயன்படுத்தி சிரியாவில் இரண்டு இலக்குகளிலும் ஈராக்கில் ஒரு இலக்கிலும் துல்லியமாக வழிநடத்தப்பட்ட ஆயுதங்களால் குண்டு மழை பொழியப்பட்டது. ஜூன் 27 அன்று ஈராக்-சிரியா எல்லைக்கு அருகே “ஈரான் ஆதரவுடைய ஆயுதக்குழுக்கள்” பயன்படுத்திய நிலையங்கள் என்று க…
-
- 0 replies
- 319 views
-
-
போர் குற்றவாளி ரம்ஸ்ஃபெல்ட் காலமானார், ஆனால் அவரின் இராணுவவாத மரபு உயிர் வாழ்கிறது Bill Van Auken மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் ஆபிரிக்காவின் குற்றகரமான ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களின் ஒரு பிரதான வடிவமைப்பாளரும் ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் கீழ் பாதுகாப்பு செயலராக இருந்த டொனால்ட் ரம்ம்ஃபெல்ட், நியூ மெக்சிகோவின் அவரது பண்ணையில் 'அவரது குடும்பம் சூழ்ந்திருக்க' காலமானதாக புதன்கிழமை மாலை வெளியிடப்பட்ட ஓர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் யு.எஸ். பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ரம்ம்ஃபெல்ட் பிப்ரவரி 9, 201…
-
- 0 replies
- 653 views
-
-
தூனிசியாவில் புலம்பெயர்ந்தோர் சென்ற படகு கவிழ்ந்ததில் 43 பேர் பலி, 84 பேர் மீட்பு வட ஆப்பிரிக்க நாடான தூனிசியா கடற் பரப்பில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 43 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் படகு கவிழந்த பின்னர் ஒரே இரவில் 84 பேர் மீட்கப்பட்டுள்ளதாக துனிசிய ரெட் கிரசண்ட் தெரிவித்துள்ளது. எகிப்து, சூடான், எரிட்ரியா மற்றும் பங்களாதேஷில் இருந்து 120 க்கும் மேற்பட்ட குடியேறியவர்களை ஏற்றிக்கொண்டு லிபியாவின் கடலோர நகரமான ஜுவாராவிலிருந்து வெள்ளிக்கிழமை மத்தியதரைக் கடலைக் வாயிலாக இத்தாலி நோக்கி புறப்பட்ட படகே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக மனிதாபிமான அமைப்பு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மெ…
-
- 0 replies
- 404 views
-
-
பிலிப்பைன்ஸ் விமான விபத்து ; 17 பேர் பலி, 40 பேர் மீட்பு பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற விமானப் படை விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இதுவரை 40 பேர் மீட்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் டெல்ஃபின் லோரென்சானா, இந்த விமானத்தில் மூன்று விமானிகள் மற்றும் 84 இராணுவத்தினர் உள்ளடங்கலாக 92 பேர் இருந்ததாகவும் அவர் உறுதிபடுத்தினார். சி -130 என்ற குறித்த விமானம், தலைநகர் மணிலாவிற்கு தெற்கே 1,000 கி.மீ (621 மைல்) தொலைவில் உள்ள ஜோலோ தீவில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளான…
-
- 0 replies
- 431 views
-
-
ஆப்கானிலிருந்து அமெரிக்க துருப்புக்கள் ஒகஸ்ட் மாத இறுதிக்கும் வெளியேறும்: வெள்ளை மாளிகை! ஆப்கானிஸ்தானில் இருந்து, அமெரிக்க படைகள் ஒகஸ்ட் மாத இறுதிக்குள் வெளியேறும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. தலிபான் மற்றும் அல்கொய்தாவுக்கு எதிரான போரின் மையமாக 20 ஆண்டுகளாக உள்ள பாக்ராம் விமான நிலையத்தை விட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள், வெளியேறிய நிலையில் இந்த கருத்து வெளிவந்துள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் ஜென் சாகி கூறுகையில்,’ஒகஸ்ட் இறுதிக்குள் துருப்புக்கள் நாட்டை விட்டு வெளியேறும். ஜனாதிபதி நீண்ட காலமாக உணர்ந்தார்… ஆப்கானிஸ்தானில் போர் இராணுவ ரீதியாக வெல்லக்கூடிய ஒன்றல்ல என்று. எனினும், ஆப்கானிஸ்தானுக்கு, எ…
-
- 0 replies
- 237 views
-
-
ஆப்கானின் முக்கிய விமான நிலையத்தை விட்டு அமெரிக்க- நேட்டோ படைகள் வெளியேறின! அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள், ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்ராம் விமான நிலையத்தை விட்டு வெளியேறிவிட்டன. ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டு சக்திகளை முழுமையாக வெளியேற்றும் முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகின்றது. தலிபான் மற்றும் அல்கொய்தாவுக்கு எதிரான போரின் மையமாக 20 ஆண்டுகளாக உள்ள பாக்ராம் விமான நிலையத்தை விட்டு துருப்புக்கள் வெளியேறியிருப்பது அரசாங்கத்துக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதிக்குள் அமெரிக்கப் படைகள் போய்விடும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் தெரி…
-
- 1 reply
- 459 views
-