Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கொரோனாவால் பட்டினிச்சாவுகள் நிகழும் – ஐ.நா எச்சரிக்கை உள்நாட்டுக் குழப்பங்கள் மற்றும் வறுமைகளால் பாதிக்கப்பட்ட நாடுகள் கொரோனாவினால் மேலும் கடுமையாகப் பாதிப்படையும் என ஐ.நா எச்சரித்துள்ளது. உலக உணவு அமைப்பின் இயக்குனர் (WFP) David Beasley கூறும் பொழுது, உலகளவில் பட்டினிச்சாவுகள் அதிகரிக்கும் எனக் கவலை தெரிவித்துள்ளார். மேலும் இந் நிலையினை சரி செய்ய 17 டிரில்லியன் டொலர் அளவிற்கு செலவுகள் பல நாடுகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலக உணவுத்திட்டத்தின் மூலமாக இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு 138 மில்லியன் மக்களுக்கு உணவு வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை 85 மில்லியன் மக்களுக்கு மட்டுமே இது சாத்தியமாகியுள்ளது. கையிருப்…

  2. உச்சநீதிமன்ற நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பர்க் மெட்டாஸ்டேடிக் கணைய புற்றுநோயின் சிக்கல்களால் வெள்ளிக்கிழமை இறந்தார் என்று நீதிமன்றம் அறிவித்தது. அவருக்கு வயது 87. கின்ஸ்பர்க் 1993 இல் ஜனாதிபதி பில் கிளிண்டனால் நியமிக்கப்பட்டார் மற்றும் சமீபத்திய ஆண்டுகளில் நீதிமன்றத்தின் தாராளவாத பிரிவின் மிக மூத்த உறுப்பினராக பணியாற்றினார், கருக்கலைப்பு உரிமைகள், ஒரே பாலின திருமணம், வாக்களிக்கும் உரிமைகள் உள்ளிட்ட அன்றைய மிகவும் பிளவுபட்ட சமூக பிரச்சினைகள் குறித்து முற்போக்கான வாக்குகளை தொடர்ந்து வழங்கினார். குடியேற்றம், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் உறுதிப்படுத்தும் நடவடிக்கை. வழியில், அவர் ஒரு ராக் ஸ்டார் வகை அந்தஸ்தை உருவாக்கி, "மோசமான R.B.G." தாராளவாத பார்வையாளர்களுக்கு முன்பாக…

  3. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மீது முன்னாள் மொடல் அழகி பாலியல் குற்றச்சாட்டு! Ilango BharathySeptember 18, 2020 அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. குறித்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மீண்டும் போட்டியிடவுள்ளதோடு அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோய் பிடன்(Joe Biden) களமிறங்கியுள்ளார். மேலும் தேர்தல் நெருங்குவதால் இரு கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் மும்முரம் காட்டி வருகின்றன. இந் நிலையில் மொடல் அழகியான எமி டோரிஸ் (Amy Dorris) என்பவர் டொனால்ட் ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார். இது குறித்து புகழ்பெற்ற கார்டியன் பத்திரிகைக்குச் ச…

  4. டெக் நிறுவனங்கள் vs செய்தி நிறுவனங்கள்... ஆஸ்திரேலியாவில் என்ன நடக்கிறது?! செய்தி நிறுவனங்களின் செய்திகளை வைத்துதான் தனிப்பெரும் நிறுவனங்களாக இந்த டெக் நிறுவனங்கள் வளர்ந்துள்ளன என்கிறது ஆஸ்திரேலிய அரசு. கூகுள், ஃபேஸ்புக் தங்கள் சேவைகளில் இடம்பெறும் செய்திகளுக்குக் குறிப்பிட்ட தொகையைச் செய்தி நிறுவனங்களுக்குச் செலுத்தும் வகையில் புதிய வரையறைகளைக் கொண்டு வர ஆஸ்திரேலியா அரசு திட்டம் ஒன்றை வகுத்துக் கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியா அரசாங்கத்தின் இந்தக் கொள்கைக்கு டெக் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. டெக் உலகில் சில வாரங்களாகவே இந்தப் பஞ்சாயத்துதான் முக்கிய பேசுபொருளாக இருந்து வருகிறது. …

  5. ட்றம்பிற்கு நோபல் பரிசு? | மத்திய கிழக்கின் இரகசிய நகர்வுகள் சிவதாசன் ‘ஆபிரஹாம் ஒப்பந்தம்’ தயார், நோபல் பரிசு தயாரா? ட்றம்ப் பற்றி என்ன செய்தி வந்தாலும் அதை உண்மை பார்க்குமளவுக்கு (fact check) அவர் தன்னைத் தானே ஒரு நகைச்சுவை நாயகனாக்கியிருக்கிறார். அவரது பேச்சுக்களும், நடவடிக்கைகளும் அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் முக்காடு போட வைத்தாலும் உலகம் அதனால் ஏகப்பட்ட நன்மைகளை அனுபவித்து வருகிறது என்பது ஒரு கணிப்பு. இக் காரணங்களுக்காக, ட்றம்ப் ஒரு ‘தற்செயல் ராஜதந்திரி’ (accidental diplomat) என அரசியல் ஞானிகள் அழைக்கவாரம்பித்திருக்கிறார்கள். தனக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படவேண்டும் என அவர் எதிர்பார்ப்பதாகவும் செய்திகள் வருகின்றன. அது ஒரு கோமாள…

  6. ஜேர்மனியில் ஹிட்லரின் படங்களைப் பகிர்ந்து கொண்ட 29 பொலிஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்! ஜேர்மனியில் வலதுசாரி கருத்துக்களைப் பரப்பிய, 29 பொலிஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அடோல்ஃப் ஹிட்லரின் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டதற்காகவும், கறுப்பின மக்கள் சுட்டுக் கொல்லப்படுவது மற்றும் எரிவாயு அறைகளில் அகதிகளைக் காட்டும் வன்முறை நவ-நாஜி பிரச்சாரங்களுக்காகவும் இவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். என்.ஆர்.டபிள்யூ உட்துறை அமைச்சர் ஹெர்பர்ட் ரியால் ஒரு விசாரணையைத் தொடங்கி, இந்த சம்பவத்தை ‘என்.ஆர்.டபிள்யூ பொலிஸாருக்கு அவமானம்’ என்று முத்திரை குத்தியுள்ளார். 34 பொலிஸ் நிலையங்கள் மற்றும் தனியார் வீடுகளில் 200க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் ச…

  7. பரம எதிரியான இஸ்ரேலுடன் உறவு: ஐக்கிய இராச்சியம், பஹ்ரைனுக்கு ஈரான் விடுத்துள்ள அறிவிப்பு பரம எதிரியான இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டதன் மூலம் உண்டாகும் விளைவுகளுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளே பொறுப்பாகும் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் வெள்ளை மாளிகையில் இஸ்ரேலுடன் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில் ஈரான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் தினமும் குற்றங்களைச் செய்து வருகிறது எனவும் இஸ்ரேலுக்கு உங்கள் கைகளை எவ்வாறு கொடுக்க முடியும் எனவும் ஈரான் ஜனாதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். மத்திய கிழக்குப் பகு…

  8. எலிசபெத் மகாராணியை அரச தலைவர் பதவியிலிருந்து நீக்க பார்படோஸ் திட்டம்! எலிசபெத் மகாராணியை அரச தலைவர் பதவியிலிருந்து நீக்கி, பார்படோஸ் குடியரசாக மாற விரும்புகிறது என கரீபியன் நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது. 1966ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற முன்னாள் பிரித்தானிய காலனியான பார்படோஸ், ஒரு காலத்தில் பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்த, வேறு சில நாடுகளைப் போலவே முடியாட்சியுடன் முறையான தொடர்பைப் பேணி வருகின்றது. இந்தநிலையில் பார்படோஸ் ஆனுனர் ஜெனரல் சாண்ட்ரா மேசன் நாட்டின் பிரதமர் மியா மோட்லி சார்பில் நிகழ்த்திய உரையில், ‘எங்கள் காலனித்துவ கடந்த காலத்தை முற்றிலுமாக விட்டுவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது. பார்படியர்கள் ஒரு பார்பேடிய நாட்டுத் தலைவரை விரும்புக…

  9. ‘கொரோனா பரவலை தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை’: ஐ.நா. ”கொரோனா பரவலை தடுக்க, சமூக இடைவெளி தீர்வாகாது ” எனக் குறிப்பிட்ட ஐ.நா.,வின், 75வது பொதுச்சபை கூட்டத்தின் தலைவர், வோல்கன் போஸ்கிர், (Volkan Bozkir) “உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே, கொரோனாவிற்குத் தீர்வு காண முடியும்,” எனத் தெரிவித்துள்ளார். நேற்று, அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா., பொதுச் சபையின், 75வது ஆண்டு பொதுக் கூட்டம் துவங்கியது. இதில், முக கவசத்துடன் வந்த, உறுப்பு நாடுகளின் துாதர்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து தமது இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். இந்நிலையில், இக்கூட்டத்தில் உரையாற்றிய வோல்கன் போஸ்கிர், “ஐ.நா.,வின், 75வது ஆண்டு திட்டங்கள் அனைத்தும், கடந்த ஆறு ம…

  10. வெனிசுலா அரசாங்கம் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக ஐ.நா. குற்றச்சாட்டு வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலா மதுரோவின் அரசாங்கம் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், கொலைகள் மற்றும் சித்திரவதை உள்ளிட்ட மனித உரிமை மீறல்களை செய்துள்ளதாக ஐ.நா.வின் உயர்மட்ட மனித உரிமைகள் அமைப்பின் சுயாதீன வல்லுநர்கள் புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மின்சார தாக்குதல்கள் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற நுட்பங்களைப் பயன்படுத்திய வெனிசுலாவின் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சித்திரவதை மற்றும் கொலைகளின் சம்பவங்களையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள், முன்னாள் அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களுடனான 270 க்கும் மேற்பட…

  11. இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கையில்லை; இணை அனுசரணை நாடுகள் இலங்கையின் உள்நாட்டு நல்லிணக்க செயல்பாடுகளில் நம்பிக்கையில்லை என ஜெனீவா தீர்மானத்துக்கு பிரதான அனுசரனை வழங்கிய நாடுகள் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 45அமர்வில் ஜெனீவா தீர்மானத்துக்கு பிரதான அனுசரனை வழங்கிய நாடுகள் இதனை தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது உரையில் இலங்கை குறித்து வெளியிட்ட கரிசனைகளை கருத்தில் எடுத்துள்ளதாக அந்த நாடுகள் தெரிவித்துள்ளன. கனடா ஜேர்மனி பிரித்தானியா வடக்கு மசெடோனியா மற்றும் மொன்டிநீக்ரோ ஆகிய நாடுகளின் சார்பில் உரையாற்றிய பிரிட்டனின் மனித உரிமை விவகாரங்களுக்கான தூதுவர் ரீட்டா பிரென்ஞ் இதனை தெரிவித்துள்…

  12. ஐ.நாவில் அதிகாரம் செலுத்தும் அமெரிக்கா-அச்சத்தில் உலக நாடுகள்? உலகளாவிய தொற்று நோயான கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கும் இந்தக்கால கட்டத்தில், அனைத்து நாடுகளும் இதனைக் கட்டுப்படுத்த கடுமையாகப் போராடி வருகின்றன. ஐ.நாவும் அதன் துணை அமைப்புக்களும் அனைத்து நாடுகளுடன் சேர்ந்து இந்த தொற்று நோயைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் வேளையில், அமெரிக்காவோ ஐ.நாவின் மீது ஆதிக்கம் செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதர் ஹெல்லி கிராஃப்ட் , அமெரிக்க குடியரசின் செனட்டர் மார்ஸாவுடனான(Marsha Blackburn) உரையாடலின் போது ஐ.நாவின் தலைமைச் செயலகத்தை போர்க்கலமாகவும் அதில் பிற நாடுகளை அமெரிக்கா வெற்றி கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்…

  13. நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images எகிப்து, ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்குப் பிறகு, மத்திய கிழக்கில் இஸ்ரேலுடன் நல்லுறவுகளை ஏற்படுத்திய நான்காவது நாடாக பஹ்ரைன் திகழ்கிறது. சமீபத்தில், இஸ்ரேலும் பஹ்ரைனும் தங்கள் உறவுகளை முழுமையாக இயல்பாக்குவதற்கான வரலாற்று உடன்படிக்கைக்கு இணக்கம் தெரிவித்துள்ளன. முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான சமாதான ஒப்பந்தம், முதல் அதிகாரப்பூர்வ விமான சேவையுடன் முறையாக தொடங்கப்பட்டது. இந்த விமானம் இஸ்ரேலில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்றது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ…

  14. பார்படோஸ் அடுத்த வருடம் குடியரசு நாடாகப் பிரகடனம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் அரச தலைவர் பதவியிலிருந்தும் இரண்டாம் எலிசபெத் மகாராணி விலகவுள்ளதாகவும் பார்படோஸ் அரசு அறிவித்துள்ளது. இதன் மூல் சுமார் மூன்று தசாப்தங்கள் பிரித்தானிய முடியாட்சியின் கீழிலிருந்து விடுதலை பெறும் நாடாக தற்போது பார்படோஸ் உள்ளது. 'காலனித்துவ ஆட்சியிலிருந்து முழுமையாக விடுதலை பெறும் நேரம் வந்து விட்டது' என கரீபியன் நாட்டின் ஆளுனர் நாயகம் செவ்வாயன்று ஆற்றிய உரையொன்றில் கூறியுள்ளார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலிருந்து சுதந்திரம் பெற்று 55 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பார்படோஸ் குடியரசாக மாறும் என்று ஆளுனர் ஜெனரல் சா…

  15. கனேடிய மாகாணங்களுக்குள் பரவிய அமெரிக்க காட்டுத் தீ அமெரிக்க மேற்கு கடற்கரையில் பரவி வரும் கடுமையான காட்டுத்தீயில் இருந்து வரும் புகை, மத்திய மேற்கு, கனடா மற்றும் வடக்கு நியூயோர்க்கின் சில பகுதிகளுக்கு கிழக்கு நோக்கி ஆயிரக்கணக்கான மைல்கள் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கலிபோர்னியாவில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காட்டுத் தீ பரவி வருகிறது. இதன் காரணமாக இதுவரையில், 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் கலிபோர்னியாவில் மட்டும் 3 மில்லியனுக்கும் அதிகமான ஏக்கர் எரிந்துள்ளது. இந்த நிலையில், அந்த நெருப்பிலிருந்து வரும் புகை இரண்டு பெரிய சதுப்பு நிலங்களில் கிழக்கு நோக்கிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, அவற்றில் ஒன்று மேற்கு அமெரிக்கா முழுவ…

  16. தாய்வானுக்கு அருகே நடைபெறும் இராணுவ பயிற்சிகள் ஒரு ‘தேவையான நடவடிக்கை’ – சீனா கடந்த வாரம் தாய்வானின் தென்மேற்கு கடற்கரையில் சீன இராணுவம் மேற்கொண்ட பயிற்சிகள் சீனாவின் இறையாண்மையைப் பாதுகாக்க ஒரு தேவையான நடவடிக்கை என பெய்ஜிங் நேற்று (புதன்கிழமை) கூறியுள்ளது. சீனாவின் பெரிய அளவிலான வான் மற்றும் கடற்படைப் பயிற்சிகள் கடுமையான ஆத்திரமூட்டல் நடவடிக்கை என தாய்வான் குற்றம் சாட்டியிருந்த நிலையில் சீனா இவ்வாறு பதிலளித்துள்ளது. ஜனநாயக தாய்வானை தனது சொந்தமாகக் கூறும் சீனா, தீவின் அருகே இராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது, அத்தோடு சீன ஆட்சியை ஏற்பதை கட்டாயப்படுத்துவதற்கே இவ்வாறான மிரட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தாய்வான் கருதுகிறது. தாய்வானின் பிரதான நிலப்பரப்…

  17. உலக அமைதிக்கானத் தினத்தில், ஐ.நாவின் வலியுறுத்தல் ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் 21ம் திகதி அன்று உலக அமைதிக்கான தினம் அனுசரிக்கப்படுகின்ற நிலையில், இந்த நாளில் போர் நிறுத்தம் மற்றும் அகிம்சையினைப் பின் பற்றுமாறும் ஐ.நா சபை கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து ஐ.நா விடுத்துள்ள அறிவித்தலில், இந்த வருடம் நம்முடைய பொதுவான எதிரியாக உருவெடுத்திருப்பது கோவிட் 19 என்னும் வைரஸே. இது உலக அமைதி பாதுகாப்பு மக்கள் நலன்களைப் பாதித்துள்ளது. இந்த கொரோனா வைரஸ் பிரச்சனை உலகத்தையே குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரசு(António Guterres), உலக நாடுகளை தங்களுடைய பகைமையை மறந்து இந்த உலகளாவியத் தொற்றை எதிர்த்துப் போரிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளா…

  18. சர்வதேச போற்க்குற்றங்களை விசாரிக்க ஐ.நாவிற்கு அழுத்தம் கொடுக்குமா கனடா? சர்வதேச போற்க்குற்றங்களை விசாரிக்க, சட்ட திருத்தங்களை மேற்கொள்ள உதவுமாறு புலம்பெயர் தமிழர்கள் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைச் சந்தித்துக் கோரிக்கை முன்வைத்துள்ளனர். சிறீலங்காவில் 1983 முதல் 2009 வரை நடைபெற்ற உள் நாட்டுப் போரின் காரணமாக, குறைந்தபட்சம் 60,000ம் மேற்பட்ட மக்கள் காணாமல் போயிருப்பதாகச் சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. அவர்களின் நிலை பற்றி இன்று வரையில் எந்த தகவலும் இல்லை. இந்நிலையில், கனடாவாழ் தமிழர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர். வெளிநாட்டு நீதி மன்றங்களில் நடத்தப்படும் வழக்கு…

  19. சீனாவில் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அன்று தொடக்கம் இன்று வரை உலகளவில் பாரிய உயிர் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகளவில் கொரோனா வைரஸ் அதிகம் பரவிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பெற்றுள்ளது. அத்தோடு, கடந்த பெப்ரவரி, மார்ச் மாதங்களில் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையில், ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக பிரான்ஸ் நாட்டில் தினமும் சராசரியாக 5 ஆயிரம் பேர், இங்கிலாந்தில் 2 ஆயிரம் பேர், ஸ்பெயினில் 3 ஆயிரம் பேர், ஜெர்மனியில் 2 ஆயிரம் பேர், என்ற அளவில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடதக்க…

  20. இலங்கை அரசாங்கம் அமுல்படுத்த முனைப்பு காட்டி வரும் 20வது திருத்தம் தொடர்பில், ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் அம்மையார் தனது கவலைகளை வெளியிட்டுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 45 வது அமர்வின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட முக்கிய சுயாதீன குழுக்களின் எதிர்காலம் 20வது திருத்தத்தில் தங்கியுள்ளதை சுட்டிக்காட்டினார். அத்துடன், மனித உரிமைகள் பேரவையில் தனது இலங்கை மாற்றி வருவதாக தனது கவலைகளையும் பச்லெட் குறிப்பிட்டார். “இலங்கையில், புதிய அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையில் தனது கடமைகளை விரைவாக மறுத்து வருவதால் நான் கவலைப்படுகிறேன். ஏனெனில் அது 30/1 தீர்மானத்திற்கான …

  21. பூர்வீகக் குடிகளை இனவழிப்பு செய்ததை ஏற்றுக்கொள்கிறது கனேடிய அரசு – தமிழில் ஜெயந்திரன் ஒழுங்கு முறையான, கட்டமைப்பு ரீதியிலான வன்முறை தொடர்பாக, ஆயிரக்கணக்கான கதைகளை மூன்று ஆண்டுகளாகக் கேட்டபின்னா், கனடாவில் காணாமல் போன மற்றும் கொல்லப்பட்ட பூர்வீக குடிகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகள் தொடர்பாக, கனடா ஒரு அரசு என்ற வகையில் பூர்வீகக் குடிகளின் இனவழிப்புக்கு பொறுப்பை ஏற்க வேண்டும் என்று காணாமல் போன மற்றும் கொல்லப்பட்ட பூர்வீகக் குடிகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கான நாடளாவிய விசாரணை மிகவும் உறுதியான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து கனேடியச் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் காலனீய விடு…

  22. ஓப்பந்தமில்லா பிரெக்ஸிற் ஐரோப்பிய ஒன்றியத்தை விட அதிகம் பிரிட்டனை பாதிக்கும் – ஜேர்மனி நிதி அமைச்சர் ஒப்பந்தம் இல்லாத பிரெக்சிற் ஐரோப்பிய ஒன்றியத்தை விட பிரித்தானியாவின் பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கும் என்று ஜேர்மனிய நிதி அமைச்சர் ஓலாஃப் ஷோல்ஸ் நேற்று சனிக்கிழமை தெரிவித்தார். பேர்லினில் ஐரோப்பிய ஒன்றிய நிதி அமைச்சர்களுடனான கூட்டத்திற்குப் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். ஒரு கட்டுப்பாடற்ற நிலைமை பிரிட்டிஷ் பொருளாதாரத்திற்கு மிகவும் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே தனது மதிப்பீடு என ஜேர்மனிய நிதி அமைச்சர் ஓலாஃப் ஷோல்ஸ் குறிப்பிட்டார். மேலும் ஐரோப்பாவால் அதைச் சமாளிக்க முடியும் என்றும் ஏற்கனவே தங்கள் செ…

  23. நாட்டை விட்டு வெளியேற அவுஸ்ரேலியர்களுக்கு டிசம்பர் மாதம் வரை தடை! கொரோனா வைரஸ் தொற்றுநோயால் நாட்டை விட்டு வெளியேற குடியிருப்பாளர்களுக்கு டிசம்பர் 17ஆம் திகதி வரை தடையை நீடிப்பதாக அவுஸ்ரேலியாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மார்ச் 18ஆம் திகதி முதல் நடைமுறையில் இருந்த இந்த உத்தரவு இப்போது எதிர்வரும் டிசம்பர் 17ஆம் திகதி வரை தொடரும் என்று சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் அறிவித்துள்ளார். ‘அவசர காலத்தின் நீடிப்பு அவுஸ்ரேலிய சுகாதார பாதுகாப்பு முதன்மைக் குழு வழங்கிய சிறப்பு மருத்துவ மற்றும் தொற்றுநோயியல் ஆலோசனைகளால் தெரிவிக்கப்பட்டது’ ஹன்ட் கூறினார். இந்த காலத்தில், மற்ற நாடுகளில் வசிப்பவர்கள், கடல் சரக்கு மற்றும் படகுகள், அத்தியாவசிய தொழிலாளர்கள் மற்றும…

  24. ஐரோப்பாவின், மிகப்பெரிய அகதிகள் முகாமில்... பேரழிவு! ஐரோப்பாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில், 13ஆயிரம் பேர் நிர்க்கதியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிரேக்க தீவான லெஸ்போஸில் அமைந்துள்ள மோரியா முகாம், ஆயிரக்கணக்கான அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான ஒரு தற்காலிக இல்லமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு, முகாமின் பெரும்பகுதியை தீ அழித்தது. இதனால் 13,000 குடியிருப்பாளர்கள் வீடற்றவர்களாக மாறியுள்ளனர். எனினும், இந்த தீ விபத்தினால் எவ்வித உயிரிழப்பும் பதிவாகவில்லை. ஆனால் முகாமின் பரந்த பகுதிகளும், அருகிலுள்ள தளமும் தீயில் அழிந்தன. மருத்துவ வசதி மற்றும் கூடாரங்களின் சிறிய இடங்கள் மட்டுமே தீண்டப்படாமல் இருந்…

  25. தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 50 பேர் பலி ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 50 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர். தெற்கு கிவு மாகாணத்தின் தலைநகரான புகாவுக்கு மேற்கே கிட்டத்தட்ட 200 கிலோமீட்டர் (124 மைல்) தொலைவில் உள்ள கமிட்டுகா நகரில் இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் நிகழ்ந்துள்ளது. இதனால் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாக சனிக்கிழமையன்று ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டிய தெற்கு கிவு மாகாணத்தின் ஆளுனர் தியோ காசி, அவர்களின் விபரங்கள் எதையும் வெளியிடவில்லை. எனினும் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையும் மீட்பு நட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.