Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்கப் பொலிஸாரின் காட்டு மிராண்டித்தனம்! மற்றொரு கறுப்பின இளைஞர் சுட்டுக்கொலை! காணொளியால் மீண்டும் பதற்றம் அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் கருப்பின இளைஞர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் பொதுமக்களின் கொந்தளிப்பை அடுத்து, அட்லாண்டா காவல்துறைத் தலைவர் சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்குள் ராஜினாமா செய்துள்ளார். காவல்துறைத் தலைவரின் ராஜினாமா தகவலை நகர மேயர் Keisha Lance Bottoms உறுதி செய்துள்ளார். தற்போது இந்த விவகாரம் தொடர்பில் மாகாண விசாரணை குழு பகீர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் வரிசையில் காத்திருப்பதாகவும், கடந்து செல்லும் பாதையைத் தடுக்கும் வகையில் காரில் ஒருவர்…

  2. சர்வதேச கோர்ட்டு அதிகாரிகள் மீது தடை: அமெரிக்காவுக்கு சுவிட்சர்லாந்து கண்டனம் அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு பின்லேடன் ஆதரவு அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி கொடூர தாக்குதல்களை நடத்தி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர். இந்த பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அங்கு தலிபான்களை ஆட்சியில் இருந்து அகற்றியது. இந்த போரின்போது அமெரிக்காவின் சி.ஐ.ஏ.வால் நடத்தப்பட்டு வந்த தடுப்பு காவல் மையங்களில், போர் கைதிகளை அமெரிக்க ராணுவம் சித்ரவதைகள் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நெதர்லாந்து நாட்டின் திஹேக் நகரில் உள்ள சர்வதேச கோர்ட்டு விசாரணை நடத்துகிறது. இந்ந நிலையில் இந்த விசாரணை நடத்துகிற…

  3. அமெரிக்காவில் கொரோனா நோயாளிக்கு ஆஸ்பத்திரி செலவு இவ்வளவா?- வாய் பிளக்க வைக்கும் பில் அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் உள்ள டென்வர் நகரில் ராபர்ட் டென்னிஸ் என்ற உயர்நிலைப்பள்ளி ஆசிரியருக்கு கொரோனா வைரஸ் பாதித்தது. இதையடுத்து அவர் அங்குள்ள ஸ்கை ரிட்ஜ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 வாரம் செயற்கை சுவாச கருவி பொருத்தி இருந்தனர். குணம் அடைந்த பின்னர் அவருக்கு அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கான பில்லை நீட்டினர். அதைப் பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார். சிகிச்சை கட்டணமாக 8 லட்சத்து 40 ஆயிரத்து 386 டாலர் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.இந்த பில்லில் ராபர்ட் டென்னிஸ் ஸ்பால்டிங் புனர்வாழ்வு ஆஸ்பத…

  4. இந்தியா - சீனா மோதல்: ஒரு வரலாற்றுப் பார்வை! இந்தியா தன்னுடைய வடக்கு எல்லையில் சீனாவுடன் மூன்று பெரிய பகுதிகளில் நில எல்லைகளைப் பகிர்ந்துகொள்கிறது. நேபாளம், சிக்கிம், பூடான் ஆகிய பகுதிகளை ஒட்டிய எல்லைப் பகுதிகள்தான் எப்போதும் பூசலுக்கும் மோதல்களுக்கும் காரணங்களாக இருக்கின்றன. பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை ஆண்டபோது, இயற்கை வளங்களைச் சுரண்டி தங்களுடைய நாட்டுக்குக் கொண்டுசெல்ல கடல், நில மார்க்கங்களைப் பயன்படுத்தினர். மேலும் மேலும் நிலப்பரப்புகளைப் போரில் கைப்பற்றினர். அவர்களால் உருவானதுதான் இந்திய-சீன எல்லைப் பிரச்சினையும். பூசல்கள் தொடங்கிய இடம் 1834-ல் டோக்ரா இனத்தைச் சேர்ந்த குலாப் சிங் என்ற சீக்கிய மன்னர் ஜம்மு-காஷ்மீருடன் லடாக்கையும…

  5. கானாவின் தலைநகரான அக்ராவில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து புகழ்பெற்ற இந்திய சுதந்திரத் தலைவரான மகாத்மா காந்தியின் சிலை அகற்றப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவர். இந்தியாவில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான அகிம்சை எதிர்ப்பை முன்னெடுப்பதில் அவர் மிகவும் பிரபலமானவர். இருப்பினும், ஒரு இளைஞனாக அவர் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்து பணிபுரிந்தார், மேலும் அவர் உலகெங்கிலும் உள்ள மக்களை ஊக்கப்படுத்தியிருந்தாலும், கறுப்பின ஆபிரிக்கர்கள் குறித்த அவரது கருத்துக்கள் சர்ச்சைக்குரியவை. தனது ஆரம்பகால எழுத்துக்களில் அவர் கறுப்பின தென்னாப்பிரிக்கர்களை "kaffirs" என்று குறிப்பிட்டார் - இது மிகவும் ஆபத்தான இனவெறி. க…

  6. உலக ஒழுங்கின் மீது பெரும் தாக்குதலாக மாறும் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை ஜார்ஜ் ஃபிளாய்டின் கொலை ஒரு பெரும் காட்டுத் தீயாய் உலகமெங்கும் பற்றிப் பரவி வருகின்றது. உலகெங்கும் 2000க்கும் மேற்பட்ட நகரங்கள், சிறு நகரங்களில் போராட்டங்கள் நடந்துள்ளன. இலண்டன், பெர்லின், ரோம், வியன்னா, பாரீஸ் போன்ற இடங்களில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் பட்டுள்ளன. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், துனிசியா, மெக்சிகோ, நியூசிலாந்து போன்றவற்றிலும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதே கொலை நான்கு மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் நடந்திருந்தால் நிச்சயம் இவ்வளவு பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்காது. காரணம் அமெரிக்காவில் போலீசாரால் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்படுவது ஒன்றும் புதிய செய்தியல்ல. இந்த ஆண்டு …

  7. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் காய்ச்சல் -இருமலுக்கு முன் நரம்பியல் அறிகுறிகள் தோன்றக்கூடும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் காய்ச்சல் அல்லது இருமலுக்கு முன் நரம்பியல் அறிகுறிகள் தோன்றக்கூடும் என ஆய்வில் தெரியவந்து உள்ளது. பதிவு: ஜூன் 13, 2020 15:47 PM வாஷிங்டன் நாளுக்கு நாள் உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் பதிவாகி வருகிறது. இதனால கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 76 லட்சத்தை தாண்டியுள்ளது. இதேபோல் உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் 4.24 லட்சத்தை கடந்து உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 33 லட்சத்து 36 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நி…

  8. உலக அளவில் 100 கோடி மக்கள் ஏழ்மை நிலைக்குச் செல்வார்கள்; தெற்கு, கிழக்கு ஆசியாவில் வறுமை அதிகரிக்கும்: கரோனா குறித்த ஆய்வில் அதிர்ச்சித் தகவல் கரோனா வைரஸ் ஏற்படுத்திய உடல்ரீதியான மற்றும் பொருளாதார ரீதியான பாதிப்பால் உலக அளவில் 100 கோடி மக்கள் ஏழ்மை நிலைக்குச் செல்வார்கள். தெற்காசியாவில் ஏற்கெனவே ஏழ்மையில் இருக்கும் மக்களில் 39.5 கோடி பேர் இன்னும் மோசமான நிலைக்குச் செல்வார்கள் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்பு குறித்து லண்டன் கிங்ஸ் காலேஜ் மற்றும் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் ஆகியவை யுஎன்யு-டபிள்யுஐடிஇஆர் (UNU-WIDER) எனும் அமைப்புடன் சேர்ந்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையில் கூறப்ப…

  9. கலவரங்களில் அதிகம் உயிரிழந்தோர் போலீஸ் அதிகாரிகளே: போலீஸ் துறையில் சீர்த்திருத்தம்- ட்ரம்ப் முடிவு ஜார்ஜ் பிளாய்ட் நிறவெறி காரணத்தினால் போலீஸ் காவலில் கொல்லப்பட அமெரிக்காவில் கரோன காலத்தையும் சமூக இடைவெளியையும் மறந்து பலரும் போராட்டத்தில் குதித்தனர், போராட்டம் பெரும் பகுதி அமைதிவழியில் நடைபெற்றாலும் சில இடங்களில் வன்முறை, கலவரம் வெடித்தது. போலீஸார் பல இடங்களில் தாக்கப்பட்டனர். இதனையடுத்து போலீஸ் துறையில் சீர்த்திருத்தம் செய்ய நிர்வாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். போலீஸாருக்கு எதிரான போராட்டங்களில் பல மாகாணங்களில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போய்விட்டது. போலீஸார்களுக்கு ஆங்காங்கே அடி உதை விழுந்து கொண்டிருக்க…

  10. நாட்டை நிர்வகிக்கும் அனைத்து அமைப்புகளிலும் அமைப்புவடிவ இனவெறி உள்ளது: பிரதமர் ஜஸ்டின்! கனடாவின் தேசிய பொலிஸ் படை உட்பட நாட்டை நிர்வகிக்கும் அனைத்து அமைப்புகளிலும் அமைப்புவடிவ இனவெறி உள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்ட்டின் மரணத்துக்கு பின் நிலவிவரும் அமைதியின்மை கனடாவிலும் எதிரொலித்துள்ள நிலையில், இனவெறி எதிர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘வேண்டுமென்றே அல்லது ஆக்கிரமிப்பு செயல்களின் மூலம் வெளிப்படுத்தப்படாவிட்டாலும், அமைப்புவடிவ இனவெறி நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் நுட்பமாக உள்ளது. அமைப்புவடிவ இனவெறி என்பது நாடு…

  11. ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் சீனாவின் மிரட்டல்: அடிபணிய போவதில்லையென அவுஸ்ரேலிய பிரதமர் பதில் சீனாவின் அச்சுறுத்தலுக்காக ஒருபோதும் எங்கள் மதிப்பை விற்க தயாராக இல்லை என அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிசன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் (கொவிட்-19) விவகாரத்தினால், சீனாவுக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடையே வர்த்தக போர் மூண்டுள்ளது. இதுகுறித்து வானொலி நேர்காணலொன்றின்போது பிரதமர் ஸ்கொட் மோரிசனிடம் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘இது ஒரு அபத்தமான கூற்று அதை நான் நிராகரிக்கின்றேன். சீனாவுடன் எங்களுக்கு ஒரு முக்கியமான வர்த்தக உறவு உள்ளது, அது தொடர நான் விரும்புகிறேன் ஆனால், நாங்கள் வெளிப்படையாக வர்த்தகம் மேற்கொள்ளும் நாட்டைச் ச…

  12. ஹெச்1பி விசா வழங்குவதை நிறுத்த ட்ரம்ப் ஆலோசனை: இந்திய ஐடி ஊழியர்களுக்குப் பாதிப்பு? அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: கோப்புப்படம் வாஷிங்டன் கரோனா வைரஸ் லாக்டவுனால் அமெரிக்காவில் அதிகரித்து வரும் வேலையின்மையைக் குறைக்கும் வகையில் வெளிநாட்டினர் பணிபுரிவதற்காக வழங்கப்படும் ஹெச்1பி விசாக்களை வழங்குவதை குறிப்பிட்ட எண்ணிக்கையில் நிறுத்தி வைக்க அதிபர் ட்ரம்ப் ஆலோசித்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஹெச்1பி விசா மூலம் இந்தியா, சீனாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப மென்பொறியாளர்கள்தான் அதிகமாக அமெரிக்க நிறுவனங்களுக்குப் பணிக்குச் செல்கின்றனர். இந்த விசா வழங்குவதை அமெரிக்கா குறைத்தால், இந்திய ஐடி பொறியாளர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும். …

  13. சவுதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,921 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிகப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,19,942 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து சவுதி அரேபியாவின் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ சவுதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,921 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,19,942 ஆக அதிகரித்துள்ளது. 81,029 பேர் கரோனா பாதிப்பிலிருந்து விடுப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர். சவுதியில் அதிகபட்சமாக ரியாத்தில் அதிகம் பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சவுதியில் இம்மாதம் முதல் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப…

  14. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 76 லட்சத்தை தாண்டியது வாஷிங்டன் நாளுக்கு நாள் உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் பதிவாகி வருகிறது. இதனால கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 76 லட்சத்தை தாண்டியுள்ளது. இதேபோல் உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் 4 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 33 லட்சத்து 36 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலையில், 38 லட்சத்து 52 ஆயிரம் பேர் இதுவரை குணமாகியுள்ளனர். உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் அத்தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 20 லட்சத்தையும், உயிரிழந்தோரின் எண…

  15. மசூதியில் தாக்குதல் நடத்தியவருக்கு 21 ஆண்டு சிறை நோர்வேயில் தனது சகோதரியை சுட்டுக் கொன்று விட்டு, மசூதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய பிலிப் மான்ஷாஸுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: நோர்வே தலைநகா் ஒஸ்லோவின் புகா்ப் பகுதியில் அமைந்துள்ள மசூதியில் பிலிப் மான்ஷாஸ் (21) என்பவா் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தினாா். இதில் யாருக்கும் ஆபத்தான காயம் ஏற்படவில்லை. அப்போது அந்த மசூதியில் தொழுகை முடிந்து 3 போ் மட்டுமே இருந்தனா். அவா்களில் 65 வயதான பாகிஸ்தான் முன்னாள் விமானப் படை வீரா், பிலிப் மான்ஷாஸை மடக்கிப் பிடித்தாா். மசூதி தாக்குதலுக்கு முன்னதாக, சீனா…

    • 1 reply
    • 566 views
  16. வரலாற்றில் முதல் முறை தலைவா்கள் இல்லாத ஐ.நா. கூட்டம்! ஐ.நா.வின் 75 ஆண்டு கால வரலாற்றில், முதல் முறையாக உலகத் தலைவா்கள் நேரில் பங்கேற்காத பொதுச் சபைக் கூட்டம் வரும் செப்டம்பா் மாதம் நடைபெறவிருக்கிறது. கொரோனா நோய்த்தொற்று பரவல் அபாயம் காரணமாக, உலகத் தலைவா்கள் காணொளி முறையில் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதுகுறித்து நியூயாா்க்கில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் ஐ.நா. பொதுச் சபைத் தலைவா் திஜானி முகமது-பண்டே கூறியதாவது: வரும் செப்டம்பா் மாதத்தில் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதற்குள், அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக உலகத் தலைவா்கள் நியூயாா்க் வரும் சூழல் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.…

    • 0 replies
    • 454 views
  17. ஜேர்மனியின் முன்னணி விமான நிறுவனமான லுஃப்தான்சா 22,000பேரை ஆட்குறைப்பு செய்கிறது! கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்படும் விமான பயணத்தின் சரிவை சமாளிக்க போராடுவதால் ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக, ஜேர்மனியின் முன்னணி விமான நிறுவனமான லுஃப்தான்சா (Lufthansa) தெரிவித்துள்ளது. இதற்மைய நிறுவனத்தில் பணிபுரியும் 22,000பேரை பணியிலிருந்து நீக்குவதற்கு லுஃப்தான்சா விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் 50 சதவீதமானோர் ஜேர்மனியில் உள்ளவர்கள் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், நெருக்கடிக்குப் பிறகு சுமார் 100இற்கும் குறைவான விமானங்களே சேவையில் ஈடுபடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லுஃப்தான்சா குழுமத்தில் முடிந்தவரை பல வேலைகளைப் பாதுகாக்க வழி வகுப்பதே இதன் நோக்கம் என நிறு…

    • 1 reply
    • 462 views
  18. ஸ்பெயினில் முடக்க நிலை விதியை மீறிய பெல்ஜிய இளவரசருக்கு 10,400 யூரோக்கள் அபராதம்! ஸ்பெயினில் முடக்க நிலையின்போது விருந்தில் கலந்து கொண்ட பின்னர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பெல்ஜிய இளவரசருக்கு 10,400 யூரோக்கள் (11,800 அமெரிக்க டொலர்கள்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கு வந்த பின்னர் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை கடைபிடிக்க தவறியதற்காக இளவரசர் ஜோச்சிமிற்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஸ்பெயின் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அபராதம் செலுத்த இளவரசர் ஜோச்சிமிற்கு 15 நாட்கள் உள்ளன. இந்த வழக்கில் அபராதத் தொகை பாதியாகக் குறைக்கப்படும். கடந்த மே மாதம் 26ஆம் திகதி ஸ்பெயின் நாட்டுக்கு சென்ற 28 வயதான இளவரசர் ஜோச்சிம், இரண்டு நாட்களுக்குப் பிறக…

  19. பிரிஸ்டலில் நிறுவப்பட்டிருந்த எட்வர்ட் கோல்ஸ்டனின் சிலை நீரில் தூக்கி வீசப்பட்டது! தென்மேற்கு இங்கிலாந்து துறைமுக நகரமான பிரிஸ்டலில் இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள், 17ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஒரு முக்கிய வணிகரின் சிலையை கவிழ்த்து, துறைமுக நீரிணை பகுதியில் வீசியுள்ளனர். அடிமை வர்த்தகத்தில் ஈடுபட்ட எட்வர்ட் கோல்ஸ்டனின் வெண்கல சிலையையே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்ப்பாட்டக்காரர்கள், கயிற்றால் கட்டி, அதைச் சுற்றியுள்ள கூட்டத்தினரின் ஆரவாரங்களுக்கு மத்தியில் கவிழ்த்தனர். 1636இல் பிறந்த கோல்ஸ்டன், பிரிஸ்டலில் ஒரு சர்ச்சைக்குரிய நபராக இருந்து வருகிறார். ஜான் காசிடி வடிவமைத்த கோல்ஸ்டனின் சிலை, 1895ஆம் ஆண்டில் பிரிஸ்டலின் மையத்தில் அமைக்கப்பட்டது. சமீப…

  20. கொரோனா வைரஸின் தோற்றம் குறித்த உலக சுகாதார நிறுவனத்தின் விசாரணைக்கு சீனா ஆதரவு கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் குறித்த உலக சுகாதார நிறுவனத்தின் சுதந்திரமான விசாரணைக்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று, கடந்த ஆண்டு சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் தோற்றம் பெற்றது. தற்போது இந்த வைரஸ் 215இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனிதப் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்று குறித்து தகவல்களை பரவ விடாமல் சீனா ஆரம்பத்தில் தடுத்து விட்டது என அமெரிக்கா தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வந்தது. எனினும் அமெரிக்காவின் குற்றச்சாட்டை சீனா திட்டவட்டமாக மறுத்திருந்தது. இந்த விவகாரம் கடந்த மாதம் உலக சுகாதார நிறுவனத்தின் தீர்…

  21. அமெரிக்காவில் அடிமைத்தனம்- காலனித்துவத்துடன் தொடர்புடைய நினைவுச்சின்னங்கள் அழிப்பு! அமெரிக்காவில் நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்ட்டின் மரணத்துக்கு பின் நிலவிவரும் அமைதியின்மையால், அடிமைத்தனம் மற்றும் காலனித்துவத்துடன் தொடர்புடைய நினைவுச்சிலைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. வர்ஜீனியாவின் ரிச்மண்டில் நேற்று (புதன்கிழமை) இரவு கூட்டமைப்புத் தலைவர் ஜெபர்சன் டேவிஸின் சிலை கவிழ்க்கப்பட்டது. இதேபோன்று மினசோட்டாவில் செயிண்ட் பாலில் உள்ள கிறிஸ்தோபர் கொலம்பஸின் 10 அடி உயர வெண்கலச் சிலை வீழ்த்தப்பட்டு தரையில் சாய்க்கப்பட்டது. மினசோட்டாவில் உள்ள இத்தாலிய-அமெரிக்கர்கள் இந்த வெண்கலச் சிலையை பரிசாக அளித்தனர். இந்த சிலையை வடிவமைத்தவர் கார்லோ பிரியோஷி என்ற சிற…

  22. முடக்கநிலை விதிகளை மீறியதற்காக உக்ரேனிய ஜனாதிபதிக்கு அபராதம்! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கநிலை விதிகளை மீறியதற்காக உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமைர் ஜெலென்ஸ்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 3ஆம் திகதி முடக்கநிலை விதிகளை மீறி, மத்திய நகரமான க்மெல்னிட்ஸ்கியில் உள்ள ஒரு ஓட்டலுக்குச் சென்றதற்காக அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வோலோடிமைர் ஜெலென்ஸ்கியின் அலுவலகம், ஜெலென்ஸ்கி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் காபி அருந்திய புகைப்படத்தை வெளியிட்டது. இதில், ஜனாதிபதியும் முகக்கவசம் இன்றி இருந்தார். இதில் ஜனாதிபதித் தலைமைத் தளபதி ஆண்ட்ரி யெர்மக், ஜனாதிபதி அலுவலகத்தின் முதல் துணைத் தலைவர…

  23. ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்தது! by : Anojkiyan ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்துள்ளது. இதன்படி, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 5 இலட்சத்து இரண்டு ஆயிரத்து 436பேர் பாதிப்படைந்துள்ளதாக புள்ளிவிரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, கடந்த 24 மணித்தியாலத்தில் 8,779பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 174பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது. அத்துடன், ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,532ஆக உள்ளது. …

    • 0 replies
    • 513 views
  24. அமெரிக்காவில் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா வைரஸால் பாதிப்பு அமெரிக்காவில் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான் ஹாப்கின்ஸ் கூறும்போது, ''அமெரிக்காவில் 20,00,464 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 1,12,924 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். நியூயார்க் தொடர்ந்து கரோனாவின் மையமாக இருந்து வருகிறது. நியூயார்க்கில் இதுவரை 3,80,156 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30,542 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நியூ ஜெர்சி, கலிபோர்னியா, டெக்சாஸ் ஆகிய மாகாணங்களில் கரோனா தொற்று ஜூன் …

  25. கொலம்பஸ் சிலையை சாய்த்து வீழ்த்திய பூர்வக்குடி அமெரிக்க போராட்டக்காரர்கள்: இவரால்தான் தங்கள் மூதாதையர்கள் அழிந்தனர் என ஆத்திரம் வெள்ளை குடியேற்றவாதிகளினால் அழித்தொழிக்கப்பட்ட பூர்வக்குடி அமெரிக்கர்கள் எப்போதுமே பெரிய கண்டுபிடிப்பாளரான கொலம்பஸை மரியாதைக்குரியவராக ஏற்றுக் கொண்டதில்லை. இவரது பயணக் கண்டுப்பிடிப்புகளினால்தான் அமெரிக்க நாடுகள் காலனியாதிக்கக் கொடுமைகளை அனுபவித்ததாகவும் தங்கள் மூதாதையர்கள் பலர் கொல்லப்பட்டதாகவும் பூர்வக்குடி அமெரிக்கர்கள் கருதுகின்றனர். இத்தாலியரான கொலம்பஸின் கடல்பயணங்களை ஆதரித்து நிதி உள்ளிட்ட உதவிகளைச் செய்தது ஸ்பானிய முடியாட்சி. கரீபியன், மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்காவில் கால்பதித்த முதல் ஐரோப்பிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.