உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26640 topics in this forum
-
123 நாடுகள் சீனாவுக்கு எதிராக கையெழுத்துப் போட்டது...!! குற்றவாளிக் கூண்டில் ஜி ஜின் பிங்..? கொரோனா வைரஸ் பரவியதற்கு சீனாதான் காரணமென பல்வேறு உலக நாடுகள் சீனா மீது குற்றம் சாட்டி வருகின்றன . இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் 73வது கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், கொரோனா விவகாரத்தில் சீனா மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்நாட்டுக்கு எதிராக ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய யூனியன் சார்பில் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தை இதுவரை 123 நாடுகள் ஆதரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன . இது சீனாவை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது . இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சீனா இது கொரோனா வைரஸ் குறித்து விசாரிப்பதற்கான நேரமல்ல எ…
-
- 3 replies
- 689 views
-
-
உலக நாடுகள் அவசரப்பட்டு முடக்கநிலையை தளர்த்துவதை தவிர்க்க வேண்டும்: WHO வேண்டுகோள் by : Anojkiyan உலக நாடுகள் அவசரப்பட்டு முடக்கநிலையை தளர்த்துவதை தவிர்க்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானன் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஜெனீவாவில் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமான ஐ.நா.வின் முக்கிய அமைப்பான உலக சுகாதார அமைப்பின் 73ஆவது கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “உலக நாடுகளிடம் நான் கேட்டுகொள்வதெல்லாம், கொரோனா வைரஸால் எளிதில் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அந்த வைரஸின் ஆபத்தை எதிர்த்து நாம் நீண்டகாலம் பயணிக்க வேண்டியுள்ளது. ஆதலால் உலக நாடுக…
-
- 0 replies
- 435 views
-
-
இஸ்ரேலுக்கான சீனத் தூதர் உயிரிழந்ததற்கான காரணத்தை வெளியிட்டது சீனா! இஸ்ரேலுக்கான சீனத் தூதர் டு வீ, உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சீனா அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. இஸ்ரேலுக்கான சீனத் தூதர் டு வீ, டெல் அவிவ் நகரத்தின் வடக்கே ஹெர்ஸ்லியாவில் உள்ள அவரது வீட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. தூதரின் திடீர் மரணத்திற்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதுகுறித்து விசாரணை நடத்துவதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்தனர். இந்தநிலையில் இந்த மரணம் குறித்து சீனாவின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “தூதர் டு வீ உடல்நலக் குறைவு காரணங்களுக்காக எதிர்பாராத…
-
- 0 replies
- 461 views
-
-
`பிரதமராக இருந்தாலும் அதே ரூல்தான்!' -ஜெசிந்தாவுக்கு அனுமதி மறுத்த நியூஸி., உணவகம்; சுவாரஸ்ய சம்பவம் உணவு உண்ணச் சென்ற நியூஸிலாந்து பிரதமருக்கு அனுமதி மறுத்து, காக்க வைக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் நிகழ்ந்துள்ளது. தற்போது, இந்தச் செய்தி வைரலாகிவருகிறது. அனைத்து நாடுகளைப் போலவே நியூஸிலாந்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,499 - ஆக உள்ளது. அதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர், 1,433 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னும் சிலர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். அந்நாட்டு அரசால் எடுக்கப்பட்ட மிகக் கடுமையான நடவடிக்கைகளால் அங்கு வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளத…
-
- 8 replies
- 1.1k views
-
-
சிறாரிடம் பாலியல் முறைகேடு: ஆவணப்படம் வெளியானதைத் தொடர்ந்து வத்திகான் விசாரணைக்கு உத்தரவிட்ட பேராயர் Getty Images போலந்து நாட்டு கத்தோலிக்கத் திருச்சபையில் சிறார்களிடம் நிகழ்த்தப்பட்ட பாலியல் மீறல்களை பாதிரியார்கள் மூடி மறைத்ததாக எழும் புகார்களை கத்தோலிக்கத் தலைமையகமான வத்திகான் விசாரிக்க வேண்டும் என்று அந்நாட்டு கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமைப் பீடத்தில் இருக்கும் பேராயர் வோஜ்சீச் போலக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தப் புகார்கள் தொடர்பாக சனிக்கிழமை புதியதொரு ஆவணப்படம் வெளியானதைத் தொடர்ந்து, இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கும்படி திருச்சபையின் தலைமையில் உள்ளவர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார். தாங்கள் குழந்தையாக இருந்தபோது தங்களிடம் தவறாக நடந்துகொண்ட பாதிரியார் ஒ…
-
- 2 replies
- 636 views
-
-
`எளிதான வீரியமிக்க போராட்டம்’- பிரதமருக்கு நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்த பெல்ஜியம் மருத்துவர்கள் பெல்ஜியத்தில் அந்நாட்டு பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து, மருத்துவப் பணியாளர்கள் ஒன்றிணைந்து நூதனமுறையில் போராட்டம் நடத்தியுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55,280 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,052 ஆகவும் உள்ளன. அங்கு பிரதமராக இருக்கும் சோபி வில்மெஸ் சமீபத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதன்மூலம் தகுதியில்லாத பல நர்ஸிங் பணியாளர்கள் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியானது முதல் அந்நாட்டு மருத்துவர்கள் முதல் நர்ஸ்கள் வரை பலரும் தொடர்ந்து…
-
- 0 replies
- 565 views
-
-
‘முற்றிலும் திறமையற்றவர், அவ்வளவுதான் சொல்ல முடியும்’ - பகிரங்கமாக மோதிக்கொள்ளும் ட்ரம்ப் - ஒபாமா அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவும் தற்போதைய அதிபர் ட்ரம்ப்பும் ஒருவருக்கொருவர் மாறி மாறி விமர்சித்துவருகின்றனர். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் மிகப் பெரிய அளவில் வெடித்த பிறகு, அதிபர் ட்ரம்ப், பல தரப்பிலிருந்தும் மிகக் கடுமையான விமர்சனங்களை சந்தித்துவருகிறார். வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90,000-த்தைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. அங்கு, நாளுக்கு நாள் வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், தன் நாட்டில் வைரஸ் பரவலின் வீரியம்…
-
- 0 replies
- 554 views
-
-
பிரித்தானியாவின் புகழ்பெற்ற இணையத்தளங்களில் ஒன்றான த.கார்டியன் ஊடகம், இலங்கையின் மறுபெயராக ஈழம் என குறிப்பிட்டுள்ளது. பண்டைய இலங்கை ஈழம் என அழைக்கப்பட்ட வரலாற்று உண்மையை, இன்றைய சிங்கள இனவாதிகள் பலர் ஏற்பதில்லை. ஈழம் என்பது விடுதலைப் புலிகளினால் உருவாகக்ப்பட்ட இலட்சிய நிலம் என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு. ஈழம், புலம்பெயர் தமிழர்கள் என்பதற்கு விடுதலைப் புலிகள் என்ற ஒற்றை அர்த்தத்தையே இனவாதிகள் கற்பித்து வந்தனர். வடக்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அண்மையில் ஆங்கிலத்தில் ஈழம் தொடர்பான வரலாற்று தகவல்களை வெளிப்படையாக கூறியிருந்தது, சிங்கள இனவாதிகள் மத்தியில் அதிர்வை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், பிரித்தானியாவின் த கார்டியன் இதழ், சுற்றுலா …
-
- 3 replies
- 773 views
-
-
கொரோனா வைரஸ் : உலக சுகாதார அமைப்பு எடுத்த நடவடிக்கை என்ன...? இந்தியா உள்பட 62 நாடுகள் கேள்வி கொரோனா வைரஸ் நெருக்கடியில் உலக சுகாதார அமைப்பு எடுத்த நடவடிக்கை குறித்து சுயாதீன விசாரணை நடத்த இந்தியா உள்பட 62 நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. பதிவு: மே 18, 2020 08:40 AM ஜெனீவா, சுவிட்சர்லாந்து: சீனாவின் உகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் லடசக்கணக்கானவர்களை பலி கொண்டுள்ளது. சீனா உகான் நகரில் தோன்றிய கொரொனா வைரசுக்கு எதிராக சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிப்பு விவரங்களை மறைத்து உள்ளது என உலக நாடுகள் சீனாவை குற்றம் சாட்டி வந்தன. ஆனால் உலக சுகாதார அமைப்பு சீனா சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுத்து உள்ளது என பாராட்டியது. இதனால…
-
- 2 replies
- 488 views
-
-
உலக சுகாதார அமைப்பிற்கு மீண்டும் நிதி வழங்குவது தொடர்பாக அமெரிக்கா கவனம் உலக சுகாதார அமைப்பிற்கு மீண்டும் நிதி வழங்குவது தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்தியுள்ளது என்றும் அது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 17ம் திகதி முதல் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்த அமெரிக்கா தீர்மானித்தது. உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு சார்பாக செயற்படுவதாக குற்றம் சுமத்தியே அமெரிக்காவினால் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. எவ்வாறாயினும், குறித்த குற்றச்சாட்டுக்கு உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் மறுப்பை வெளியிட்டு இருந்தனர். இந்நிலையிலேயே நிதி வழங்கல் தொடர்பில் பரிசிலிக்கப்பட்டு வருவதாகவும், எனி…
-
- 0 replies
- 342 views
-
-
காலாவதியான பொருளுடன் ஏன் வேலை செய்ய வேண்டும்? - நேருக்கு நேர் அதிபரை வறுத்தெடுத்த பிரான்ஸ் செவிலியர் பிரான்ஸ் நாட்டு மருத்துவப் பணியாளருக்குத் தேவையான பாதுகாப்புக் கவசங்கள் மற்றும் சம்பளம் வழங்கப்படுவதில்லை எனச் செவிலியர் ஒருவர் அதிபரிடம் குற்றம் சுமத்தியுள்ளார். சீனாவில் முதன்முதலாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு 5 மாதங்கள் ஆகின்றன. இந்தக் காலகட்டத்தில் அனைத்து உலக நாடுகளும் வைரஸுக்கு எதிராகப் பெரும் போரை நடத்தி வருகின்றன. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் உள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 -க்கும் மேற்பட்ட பிற நாடுகளில் தலா 2 லட்சத்துக்கும் அதிக…
-
- 0 replies
- 661 views
-
-
மனிதர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பது ஆபத்து: தெருக்களில் தெளிப்பதும் பயனளிக்காது- உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி தெருக்களில் மருந்துகள் தெளிப்பதன் மூலம் வைரஸ் கிருமிகளை அழிக்க முடியாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், தெருக்கள் அல்லது மக்கள் கூடும் சந்தைகளில் கிருமிநாசினி தெளிப்பதன் மூலம் கொரோனா உள்ளிட்ட பிற நோய்க் கிருமிகளை அழிப்பது நிரூபிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும் மனிதர்கள் மீதும் கிருமி நாசினியைத் தெளிப்பது எங்கும் பரிந்துரைக்கப்படவில்லை எனவும் இது உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தீங்கு விளைவிக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. …
-
- 2 replies
- 546 views
-
-
ருவாண்டாவில் நிகழ்ந்த இனப்படுகொலையின் சூத்திரதாரியென பெயரிடப்பட்ட பெலிசியன் கபுகா 25 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கைக்கு பின்னர் நேற்று சிக்கினார். பிரான்ஸில் அடையாளத்தை மறைத்து வாழ்ந்து வந்த அவரை பொலிசார் கைது செய்தனர். 20ஆம் 20 ஆம் நூற்றாண்டில் நடந்த மிக மோசமான படுகொலைகளில் ருவாண்டாவில் நடந்த படுகொலைகளும் அடங்கும். 84 வயதான அவர், அடையாளத்தை மறைத்து, வேறொரு நபரின் அடையாளத்துடன் அஸ்னியர்ஸ்-சுர்-சீன் பகுதியில் ஒரு பிளாட்டில் வசித்து வந்ததாக பிரெஞ்சு நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ருவாண்டாவில் தேடப்படும் மிக முக்கிய மனிதரான அவரது தலைக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர் அறிவிக்கப்பட்டிருந்தது. தனது பிள்ளைகளுடன் அவர் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார். “உலகில் அத…
-
- 3 replies
- 846 views
-
-
தமிழகம் முதல் அமெரிக்கா வரை. கொரோனா வைரஸ் பரவலின் சமீபத்திய நிலவரம் என்ன? - பிபிசி தமிழின் சிறப்பு நேரலை
-
- 0 replies
- 427 views
-
-
இந்தியாவுக்கு வென்றிலேற்றர்கள் இலவசமாக வழங்கப்படும் - டிரம்ப்.! இந்தியாவுக்கு வென்றிலேற்றர்கள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு இந்திய பிரதமர் மோடி மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார், கொரோனா போரில் இந்தியாவுடன் இணைந்து செயல்படப் போவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில் , இந்த இக்கட்டான காலகட்டத்தில் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் நமது உலகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க வேண்டியது அவசியம் என மோடி பதிலளித்துள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது , இந்நிலையில் உலக அளவில் 46 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் நோய் தொற்று ஆளாகியுள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது . …
-
- 1 reply
- 570 views
-
-
கொரோனா பொதுமுடக்கத்திலிருந்து வெற்றிகரமாக வெளிவர ஆரம்பித்திருக்கிறது வியட்நாம். பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படுகின்றன. மோசமான பொருளாதார அழிவுகளிலிருந்து நாடு வெளியேறிவிடும் எனும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. பாடசாலைகள் திறக்கப்பட்டுவிட்டன. பாடசாலைக்கு வரும் குழந்தைகளுக்குக் காய்ச்சல் இருக்கிறதா என்று வாசலிலேயே பரிசோதிக்கிறார்கள் சுகாதார அதிகாரிகள். வியட்நாமில் இதுவரை 288 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுளது. இதுவரை உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இவ்விஷயத்தில் வியட்நாம் அரசின் நடவடிக்கைகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் விரிவாகவும் வெளிப்படையாகவும் செய்திகளை வெளியிடுகின்றன. அமெரிக்கா, இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகளால்கூட சாதிக்க முடியாததை வியட்நாம் …
-
- 1 reply
- 606 views
-
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 2 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு! by : Anojkiyan ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதன்படி, தற்போதைய நிலவரப்படி, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 252,245பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 9,974பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 93பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த தொடர்ச்சியான பதினொரு நாட்களுக்கு பிறகு 10 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். அத்துடன், இதுவரையான காலப்பகுதியில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு மொத்தமாக 2,305பே…
-
- 1 reply
- 509 views
-
-
`அதிபரின் அழுத்தம்; அதிகரித்த உயிரிழப்புகள்!’ - ஒரே மாதத்தில் ராஜினாமா செய்த பிரேசில் அமைச்சர் பிரேசிலில் அதிகரித்து வரும் வைரஸ் பரவல் காரணமாக அங்குள்ள தேசிய சுகாதாரத்துறை அமைச்சர் நெல்சன் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கொரோனா வைரஸ் முதன்முறையாக சீனாவில் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டு கிட்டத்தட்ட 5 மாதங்கள் ஆகிவிட்டன. இந்தக் காலகட்டத்துக்குள் உலக நாடுகள் முழுமைக்கும் பரவிய வைரஸ் மனிதர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறி பல லட்சக்கணக்கான மக்களின் உயிரையும் பறித்துவிட்டது. கடந்த சில மாதங்களாக மொத்த உலகமும் கொரோனா என்ற பெயரை முன்வைத்துத்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. மக்களின் உடல்நலம், சுகாதாரம், வாழ்வு, பொருளாத…
-
- 0 replies
- 1k views
-
-
மறைக்கப்பட்ட உண்மை: சீனாவில் கொரோனா பாதித்தவர்கள் 6 லட்சத்திற்கு மேல்- அதிர்ச்சி தகவல் சீனாவில் கொரோனா பாதித்தவர்கள் 6 லட்ட்ச்த்திற்கு மேல் என உண்மையான விவரம் வெளியாகி உள்ளது இதனால் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது. பதிவு: மே 16, 2020 09:24 AM பெய்ஜிங் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள உகான் நகரில்தான் முதன் முதலில் கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டது. அங்கு வேகமாக பரவியதால், அந்த நகரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை முடக்கப்பட்டது. அங்கு கொரோனா தாக்கி ஏராளமானோர் பலி ஆனார்கள். என்றாலும் சீன அரசு எடுத்த கடுமையான நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும் அந்த நாட்டில…
-
- 0 replies
- 538 views
-
-
ஊரடங்கு தளர்வால் ஏற்பட்ட விளைவு!' - எழுந்த வேகத்தில் மீண்டும் வீழ்ந்த தென் கொரியா? தென் கொரியாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு மீண்டும் வைரஸ் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸை மிகவும் சாதூர்யமாகக் கையாண்டு தங்கள் நாட்டையும் மக்களையும் காப்பாற்றிய நாடாக சர்வதேச அளவில் புகழப்பட்டு வந்தது தென் கொரியா. வைரஸ் கட்டுப்படுத்துதலில் அவர்களிடமிருந்து பிற நாடுகள் பாடம் கற்க வேண்டும் என ஐ.நாவும், உலக சுகாதார அமைப்பும் வெளிப்படையாக அறிவித்தன. இந்த அனைத்துப் புகழுக்கும் சவால் விடுக்கும் வகையில் தென் கொரியாவில் மீண்டும் கொரோனா வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. …
-
- 0 replies
- 468 views
-
-
சீனா மீது நடவடிக்கை தொடங்கியது?- சீனா முதலீட்டிலிருந்து பலநூறு கோடி டாலர்கள் பென்ஷன் நிதியை அமெரிக்கா வாபஸ் ஏற்கெனவே அமெரிக்கா-சீனா இடையே இருந்து வந்த வர்த்தகப் போர் பேச்சு வார்த்தைகள் மூலம் சரியாகாமல் இழுபறியில் உள்ள நிலையில் கரோனா பாதிப்பினால் இருநாடுகளின் உறவுகளில் பெரிய அளவில் விரிசல் விழுந்துள்ளது. இந்நிலையில் சீனாவில் அமெரிக்க பென்ஷன் நிதி முதலீடுகளாக உள்ள பலநூறுகோடி டாலர்கள் நிதியை வாபஸ் பெற ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. “பில்லியன்கள் அளவில் டாலர்கள், ஆம் பில்லியன்கள் ஆம் நான் திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளேன்.” என்று உறுதிபடத் தெரிவித்தா அதே போல் அமெரிக்க பங்குச் சந்தை மற்றும் நாஸ்டாக்கில் சீன நிறுவனங்கள் லிஸ்ட் செய்யப்படுவதற்கு அனைத்து…
-
- 0 replies
- 631 views
-
-
உங்கள் எச்சரிக்கையை ஏற்க முடியாது!’ -மருத்துவ ஆலோசகருடன் நேரடியாக மோதும் ட்ரம்ப் அமெரிக்காவில் ஊரடங்கு தளர்வு அறிவிப்பது தொடர்பாக அதிபருக்கும் அந்நாட்டின் மருத்துவ ஆலோசகர் ஃபாஸிக்கும் இடையே வெளிப்படையான மோதல் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 4.4 மில்லியன் மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டு சுமார் 85,000-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். மற்றொருபுறம் கொரோனாவைத் தடுக்க விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் மில்லியன் கணக்கான மக்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இதனால் நாட்டின் பொருளாதாரமும் அதலபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. …
-
- 1 reply
- 816 views
-
-
சமூக இடைவெளி விதிமுறைகளை அமுல்படுத்தும் எண்ணம் இல்லை: தென்கொரியா 0 by : Anojkiyan கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை சிறப்பான முறையில் கட்டுப்படுத்திய நாடு என பெயர் பெற்ற தென்கொரியா, மீண்டும் வைரஸ் தொற்றால் மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. தென்கொரியாவின் சியோலில் இரவு விடுதிகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72ஆக உயர்வடைந்துள்ளது. இதனால், தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் அமுல்படுத்தப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தநிலையில், இதன்தொடர்பாக கருத்து தெரிவித்த தென்கொரிய துணை சுகாதார அமைச்சர் கிம் காங் லிப், ‘புதிதாக கிருமித்தொற்று கண்டோரின் எண்ணிக்கை 50இற்க்…
-
- 0 replies
- 506 views
-
-
சீனா மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்க செனட்டில் மசோதா சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கி வருகிறது. அதிக அளவாக, அமெரிக்காவில் 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் குறித்து உரிய நேரத்தில் தகவல் அளிக்காமல், பெரும் நாசத்துக்கு காரணமாகி விட்டதாக சீனா மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.இந்நிலையில், அமெரிக்க செனட் சபையில், செல்வாக்குள்ள 9 உறுப்பினர்கள், சீனா மீது பொருளாதார தடை விதிக்கக்கோரும் மசோதாவை தாக்கல் செய்துள்ளனர்.லிண்ட்சே கிரஹாம் என்ற செனட் உறுப்பினர் வடிவமைத்த ‘கொரோனா பொறுப்புடைமை சட்டம்’ என்ற இதை 8 செனட் உறுப்பினர்கள் வழிமொழிந்து கையெழுத்திட்டனர்.ம…
-
- 0 replies
- 493 views
-
-
ஜேர்மனியுடனான எல்லையை மீண்டும் திறக்க ஆஸ்திரியா திட்டம்! ஜேர்மனியுடனான எல்லையை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளதாக ஆஸ்திரிய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக மார்ச் மாத நடுப்பகுதியில் இருந்து பயணிகளுக்கு எல்லை மூடப்பட்ட பின்னர், தற்போது இரண்டு மாதங்களுக்கு பிறகு குறித்த எல்லை திறக்கப்படவுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதி ஆஸ்திரியாவும் ஜேர்மனியும் தங்கள் எல்லையைத் திறக்க திட்டமிட்டுள்ளதாக ஆஸ்திரிய சுற்றுலாத்துறை அமைச்சர் எலிசபெத் கோஸ்டிங்கர் தெரிவித்துள்ளார். மேலும், ஜேர்மனி அதிபர் அங்கலா மெர்கல் மற்றும் ஆஸ்திரிய ஜனாதிபதி செபாஸ்டியன் குர்ஸ் ஆகியோர் நேற்று (செவ்வாய்க்கிழமை) எல்லையை படிப்படியாக திறப்பதற்…
-
- 0 replies
- 433 views
-