உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
ஜேர்மனியில் நடைமுறையில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க தீர்மானம்! ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நடைமுறையில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க ஜேர்மனி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜேர்மனி அதிபர் அங்காலா மெர்கல் மற்றும் பிராந்திய முதல்வர்களுக்கும் இடையிலான வரைவு ஒப்பந்தத்தின்படி குறித்த கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளன. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க ஜேர்மனி அதிபர் அங்காலா மெர்கல், ஒரு வரைவு திட்டத்தைத் தீட்டி 16 மாகாண தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மெர்கலின் திட்டம் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், ஒரு வாரகாலத்தில் நடைமுறையில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படும். ஜேர்மனியி…
-
- 9 replies
- 1.1k views
-
-
கொரோனா தொற்று வேகமாக பரவுவதற்கு காரணம் என்ன? விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் கொரோனா தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வருகிறது. புதன்கிழமை நிலவரப்படி உலகின் 37.7 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு நோய் பரவி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 49,391 லிருந்து 52,952 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 1,694 லிருந்து 1,783 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,561 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வைரஸில் உள்ள பிறழ்வுகளைப் பார்த்து, விரைவாக பரவுவதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளனர். வைரஸ் மாறிக்கொண்டிருக்கிறது, ஆனால் இது மோசமடைந்து வருவதாக அர்த்தமல்ல என்று லண்டன் மரபியல் ந…
-
- 1 reply
- 801 views
-
-
பிரேசிலில் உள்ள அமேசான் காட்டில் வாழும் பழங்குடி இன பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அமேசானில் வாழும் பழங்குடியின மக்கள் பிரேசிலியா: உலகம் முழுவதும் 10 லட்சத்து 14 ஆயிரத்து 256 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 52 ஆயிரத்து 982 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் இதுவரை 8 ஆயிரத்து 44 பேருக்கு வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 324 பேர் பலியாகியுள்ளனர். உலகின் மழைக்காடுகள் என வர்ணிக்கப்படும் அமேசான் காடுகள்…
-
- 5 replies
- 686 views
-
-
கொரோனா தடுப்பு மருந்துக்கு உரிமை கோரும் இத்தாலி கொரோனாவுக்கு தடுப்பு மருந்தினை கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்துள்ள இத்தாலி விஞ்ஞானிகள், அதற்கு உரிமை கோரியுள்ளனர். கொரோனா தடுப்பு மருந்தினை உருவாக்கியுள்ள டாகிஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் லூகி ஆரிஷியோ இதுபற்றி தகவல் வெளியிட்டுள்ளார். “இம்மருந்து உடலில் செலுத்தப்படும் போது மனித செல்களில் உள்ள கொரோனா வைரஸை செயல் இழக்க செய்யும். இது தான் இத்தாலியில் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்துகளில் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளது. மனித உடலில் பரிசோதித்து பார்ப்பது கோடை …
-
- 1 reply
- 558 views
-
-
கொரோனா வைரஸ் இயற்கையாகவே விலங்குகளிடமிருந்து பரவத் தொடங்கியிருக்கலாம்: பிரித்தானியா நம்பிக்கை உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) இயற்கையாகவே விலங்குகளிடமிருந்து பரவத் தொடங்கியிருக்கலாம் என பிரித்தானியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், சீனாவின் வுஹான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்து கசிந்ததாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவிடம் இருந்து எவ்விதமான ஆதாரமும் தங்களுக்கு வழங்கப்படவிலை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. இவ்வாறு ஆதாரங்கள் வழங்கப்படாத நிலையில் தமது பார்வையில் குறித்த கருத்து வெறும் ஊகமாகவே கருதப்…
-
- 0 replies
- 379 views
-
-
அமெரிக்காவை புரட்டியெடுத்து வரும் கொரோனா- ஒரேநாள் உயிரிழப்பு 2500ஐத் தாண்டியது! கொரோனா வைரஸ் பெருந்தொற்று அமெரிக்காவைப் புரட்டியெடுத்துவரும் நிலையில் அங்கு நேற்று மட்டும் 2 ஆயிரத்து 500இற்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவில் மட்டும் உயிரிழப்புக்கள் 75 ஆயிரத்தை எட்டியுள்ளதுடன் மொத்த பாதிப்பு 12 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகியுள்ளது. இதனைவிட அமெரிக்க நாடான பிரேஸிலில் முதன்முறையாக நேற்று ஒரேநாளில் 600இற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் மரணித்துள்ளமை பதிவாகியுள்ளது. உலகின் 200இற்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் நேற்று மட்டும் வைரஸ் தொற்றுக்கு இலக்கான 95 ஆயிரத்து 325 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் …
-
- 0 replies
- 398 views
-
-
கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் ஊரடங்கு தளர்வால் தினமும் 3 ஆயிரம் பேர் பலியாவார்கள் எச்சரிக்கை அமெரிக்காவில் ஜுன் மாதம் முதல் கொரோனா பாதிப்பால் தினமும் 3 ஆயிரம் பேர் பலியாவார்கள் என்ற கணிப்பு வெளியாகியுள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். பதிவு: மே 07, 2020 08:27 AM வாஷிங்டன் உலகின் வல்லரசு நாடு அமெரிக்கா, தற்போது கொரோனா வைரசின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. உலகெங்கும், கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை, 37.40 லட்சத்தை தாண்டியுள்ளது. அதில், 2.58 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும், 12.37 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 72 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதாவது உலக பாதிப்பு மற்றும் பலியி…
-
- 0 replies
- 386 views
-
-
ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் 9,623 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்தனர். அந்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 53 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதுவரை மொத்தம் 1,24,054 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 1,222 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அது உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதித்த 10 நாடுகள் வரிசையில் இடம் பிடித்து விட்டது. சீனாவின் வூகானில் இருந்து உலகம் முழுவதும் பரவத் துவங்கிய கொரோனா துவக்கத்தில் ரஷ்யாவில் மெதுவாக பரவியது. ஆனால் சில நாட்களாக அங்கு பரவல் வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது. 5 மண்டலங்களில் தீவிரமாக கொரோனா பாதிப்பு உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கினை அந்நாட்டு அரசு இம்மாதம் 11ம் தேதி வரை நீட்ட…
-
- 1 reply
- 1.1k views
-
-
சீன வென்டிலேட்டர்களை பயன்படுத்தினால் மரணம் நிச்சயம்: பிரித்தானிய மருத்துவர்கள் எச்சரிக்கை! சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட செயற்கை சுவாச கருவிகளை (வென்டிலேட்டர்) பயன்படுத்தினால், ‘மரணம் உட்பட குறிப்பிடத்தக்க நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கப்படும்’ என பிரித்தானிய மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனாவின் முக்கிய வென்டிலேட்டர் உற்பத்தி நிறுவனங்களின் ஒன்றான ‘பெய்ஜிங் ஏயன்மெட் கோ லிமிடெட்’ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 250 இற்க்கும் மேற்பட்ட வென்டிலேட்டர்களை பிரித்தானியா கொள்வனவு செய்துள்ளது. இந்த நிலையில், குறித்த வென்டிலேட்டர்கள் குறித்து பிரித்தானிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மேலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சீனாவிலிருந்து பெறப்பட்ட வென்டி…
-
- 16 replies
- 1.7k views
-
-
திருப்பம்.. சீனாவிற்கு முன்பே பிரான்சில் கொரோனா வைரஸ் தாக்கிவிட்டதா.? வெளியான ஆராய்ச்சி முடிவு.! பாரிஸ்: கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றுவதற்கு முன்பாகவே பிரான்சில் சிலரை தாக்கி இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக செய்யப்பட்ட ஆராய்ச்சி ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுக்க 180 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 35 லட்சம் பேர் இந்த வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சீனாவில் முதல் நபருக்கு வுஹனில் கடந்த வருடம் டிசம்பர் 8ம் தேதி கொரோனா ஏற்பட்டது.அவருக்கு பெரும்பாலும் டிசம்பர் 1ம் தேதி கொரோனா தாக்கி இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதே போல் வுஹனில் இருக்கும் பல்வேறு நபர்கள் டிசம்…
-
- 4 replies
- 901 views
-
-
தொடர்ந்தும் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்க முடியாது: பிரான்ஸ் பிரதமர்! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால், தொடர்ந்தும் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்க முடியாது என பிரான்ஸ் பிரதமர் எதுவார் பிலிப் தெரிவித்துள்ளார். ஊரடங்கு சட்டத்தினை தளர்த்துவதற்கான திட்டவரைபை, நேற்று (திங்கட்கிழமை) செனட் சபையின் வாக்கெடுப்பிற்காக முன்வைத்த பின்னர், அவர் இந்த கருத்தை வெளியிட்டார். இதன்போது அவர் கூறுகையில், ‘இது பெரும் சிக்கலான விமர்சனத்திற்குரிய நேரம். ஆனால் நாம் தொடர்ந்தும் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்க இருக்க முடியாது. ஊரடங்கு காலத்தில், ஒவ்வொரு குடிமகனும் தனது கடமையை நிறைவேற்றிப் பொறுப்புடன் நடந்து கொண்டமையால், அதன் பலனை நாம் பெற்றோம். கொரோனாப் பரவலைத் தடுத்துள்ளளோம். …
-
- 2 replies
- 488 views
-
-
கொரோனா வைரஸ்: முடக்கநிலைக்குப் பிந்தைய வாழ்க்கை - சீன மக்கள் பணிக்கு திரும்பியது எப்படி? படத்தின் காப்புரிமைGetty Images கோவிட்-19 நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு உலக மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் சமூக அளவில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். ஆனால் சீனாவில் முடக்கநிலை முடிந்து சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், மக்கள் பணிக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். படத்தின் காப்புரிமைGetty images Image caption கோப்புப்படம் வுஹான் நகரில் இருந்து மேற்கில் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள யிச்சாங் என்…
-
- 0 replies
- 551 views
-
-
வுஹானில் மீண்டும் பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள் கொரோனா வைரஸின் மையமான சீனாவின், ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் ஆயிரக் கணக்கான மாணவர்கள் இன்று மீண்டும் பாடசாலைகளுக்கு செல் ஆரம்பித்துள்ளனர். வைரஸ் பரவுவதை தடுக்க வுஹான் நகரமானது ஜனவரி மாதம் முதல் கடுமையாக பூட்டப்பட்டிருந்தது. எவருக்கும் உள்ளேயோ அல்லது வெளியிலோ செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. மேலும் நகரத்திற்குள் இயக்கம் மட்டுப்படுத்தப்பட்டது. இந் நிலையில் சீனாவில் கொரோனா வைரஸின் பரவலானது முற்றாக குறைந்துள்ளதால் ஏப்ரல் மாதம் முதல் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு, எல்லைகள் திறத்தல், உள்நாட்டு பயணம் மீண்டும் தொடங்குதல் மற்றும் சில வணிகங்க நிலையங்களை மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 459 views
-
-
அமெரிக்காவில் கொரோனா குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட சீன பேராசிரியர் சுட்டுக்கொலை கொரோனா குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த சீனாவைச் சேர்ந்த பேராசிரியர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். பதிவு: மே 06, 2020 11:07 AM வாஷிங்டன் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சி உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் டாக்டர் பிங் லியூ(வயது 37) கொரோனா தொடர்பான மிக முக்கியமான ஆய்வில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், வார இறுதியில் அவரது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று பல்கலைக்கழகம் மற்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர். டாக்டர் பிங் லியூ அவரது வீட்டில் தலை, கழுத்து, உடல்களில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் என்று ரோஸ் காவல் து…
-
- 1 reply
- 475 views
-
-
3 ட்ரில்லயன் டொலர்கள் கடன் வாங்க தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவிப்பு! இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அமெரிக்கா 3 ட்ரில்லயன் டொலர்கள் கடன் வாங்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை நிவர்த்தி செய்ய, அமெரிக்க அரசு அறிவித்துள்ள நிதியுதவிகள் வரவு செலவு திட்டத்தில் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி காலகட்டத்தில், வாங்கப்பட்ட ஒரே காலாண்டில் அமெரிக்க அரசு வாங்கிய கடனைவிட இது ஐந்து மடங்கு அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்துடன் அமெரிக்க அரசின் மொத்தக் கடன் தொகை, சுமார் 25 லட்சம் கோடி டொலர்களாக உள்ளது. அமெர…
-
- 0 replies
- 293 views
-
-
கொவிட்-19 சிறப்பு குழுவை கலைக்க உள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால், மிகப்பெரிய அழிவை சந்தித்துள்ள அமெரிக்கா, கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக அமைத்திருந்த சிறப்பு குழுவை கலைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கவனம், பொருளாதாரத்தைத் மீள கட்டமைப்பதை நோக்கி நகர்வதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முகமூடிகள் உட்பட தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை உருவாக்கும் தொழிற்சாலைக்கு நேற்று (புதன்கிழமை) விஜயம் மேற்கொண்டிந்தபோதே, ட்ரம்ப் இந்த முடிவினை அறிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘துணை ஜனாதிபதி மற்றும் சிறப்பு நடவடிக்கை குழுவினர் மிகவும் சிறப்பாக செயற்பட்டனர். ஆனால் தற்போது நாம் வேறு …
-
- 0 replies
- 312 views
-
-
சோமாலியாவில் கொரோனா வைரஸ் நிவாரண பொருட்களை ஏற்றிச் சென்ற விமானம் விபத்து! சோமாலியாவில் கொரோனா வைரஸ் நிவாரண பொருட்கள் மற்றும் மருந்துகளை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில், 6 பேர் உயிரிழந்துள்ளதாக சோமாலியா அரசாங்கம் தெரிவித்துள்ளது. ‘ஆப்ரிக்கன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்துக்குச் சொந்தமான இ.எம்.பி- 120 (EMB-120) என்ற விமானமே நேற்று (திங்கட்கிழமை) மாலை இவ்வாறு விபத்துக்குள்ளானது. தலைநகர் மொகடிஷூவில் இருந்து பார்தேல் நகருக்குச் சென்ற குறித்த விமானம், பார்தேல் விமான நிலையத்துக்கு சற்று தொலைவில் விபத்துக்கு உள்ளானதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விமானி, துணை விமானி, விமான பொறியாளர் மற்றும் ஒரு பயிற்சி விமானி, அதே போல் விமான நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு பே…
-
- 0 replies
- 429 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியை உருவாக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம்: ஜேர்மனி கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கான தடுப்பூசியை உருவாக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம் என ஜேர்மனி தெரிவித்துள்ளது. மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் முழு வீச்சுடன் களமிறங்கியுள்ளன. இந்தநிலையில் சோதனை நடவடிக்கையில் ஐரோப்பிய நாடான ஜேர்மனியும் தனது பெயரை இணைத்துக் கொண்டுள்ளது. இதற்கமைய, ஜேர்மனிய மருந்து நிறுவனமான பயோ என்டெக் தன்னார்வலர்களுக்கு புதிய கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியை பரிசோதிக்கத் தொடங்கியுள்ளது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம் என சுகாதார அமைச்சர் ஜென…
-
- 0 replies
- 360 views
-
-
மருந்துகள், உபகரணங்களைப் பதுக்கவே சீனா அபாயத்தை மறைத்தது – அமெரிக்கா கொறோனாவைரஸ் வெகு தீவிரமாகப் பரவுகிறது என்பது தெரிந்திருந்தும் போதுமான மருந்துகள், உபகரணங்கள் பதுக்கப்படும்வரை அவ்வபாயத்தை வெளிநாடுகளுக்கு மறைத்துவிட்டது என அமெரிக்கா தெரிவித்திருக்கிறது. கடந்த ஜனவரி மாதமே சீனாவுக்கு இந் நோயின் கொடூரம் பற்றித் தெரிந்திருந்தது எனவும், போதுமான மருந்துகளும், பாதுகாப்பு உபகரணங்களும் சேமிக்கப்படும்வரை அவ் விடயத்தை வெளியில் தெரிவிக்கவில்லை எனவும் அமெரிக்க உளவு நிறுவனங்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்காவின் உள்ளகப் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட நான்கு பக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது. பொருட்களுக்கு அதிக தேவைகள் இருக்கிறது எனத் தெரியவரும்போது உலகின் …
-
- 1 reply
- 1k views
-
-
நியூயோர்க்கின், புரூக்ளினிலுள்ள மலர்ச்சாலைக்கு வெளியே நான்கு லொறிகளில் 60 சடலங்கள் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லொறிகளிலிருந்து ஒரு வித திரவம் வடிவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து அதிகாரிகளினால் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இவ்வாறு சடலங்கள் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புரூக்ளினிலுள்ள ஆண்ட்ரூ கிளெக்லி மலர்ச்சாலைக்கு வெளியிலேயே இவ்வாறு குளிரூட்டப்பட்ட லொறிகளில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சட்ட அமுலாக்க வட்டாரம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்ட சட்ட அமுலாக்க அதிகாரிகள், குறித்த உடல்கள் ஒரு வாரத்திற்கும்…
-
- 18 replies
- 2.2k views
-
-
தென்னாபிரிக்காவில் உணவுப் பொதிக்காக 4 கிலோ மீட்டர் தூரம் நின்ற மக்கள்.! உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 34 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ் வைரஸால் இதுவரை 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், கொரோனா வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு பல்வேறு நாடுகளில் பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டு மக்கள் தங்கள் தொழில்களையும், வருமானத்தையும் இழந்துள்ளனர். இதனால் வறுமையின் காரணமாக போதிய உணவு கிடைக்காமல் பலர் உயிரிழக்கும் சூழலும் உருவாகியுள்ளது. தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸின் பரவல் தீவிரமடைந்து வருவதால் March மாதம் 27ம் திகதி முதல் ஊரடங்…
-
- 0 replies
- 493 views
-
-
ஜேர்மனி மண்ணில் அமெரிக்க அணு ஆயுதங்கள் இருப்பது ஜேர்மனியின் பாதுகாப்பிற்கு ஆபத்தானது! ஜேர்மனி மண்ணில் அமெரிக்க அணு ஆயுதங்கள் இருப்பது ஜேர்மனியின் பாதுகாப்பிற்கு ஆபத்தானது என்பதால் அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) நாடாளுமன்றத் தலைவர் ரோல்ஃப் மெட்ஸெனிச் (Rolf Mützenich) கோரிக்கை விடுத்துள்ளார். அத்தகைய நடவடிக்கை நேட்டோவில் ஜேர்மனியின் உறுப்பினர் பதவியை கேள்விக்குள்ளாக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கீழ் அமெரிக்க அணுசக்தி மூலோபாயத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறிப்பிடுவதன் மூலம் அவர் தனது கோரிக்கையை நியாயப்படுத்தினார். ட்ரம்பின் நிர்வாகத்தினர், அணு ஆயுதங்களை முற்றிலும் தடுப்பதாக அல்லாமல் ப…
-
- 0 replies
- 422 views
-
-
உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத 33 நாடுகள். சல் மூலம் பகிரவும்அச்சிடுக உலகளவில் 33 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் , 33 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா , பாதிப்பு கூட பதிவாகவில்லை. ஐ.நா அங்கீகரித்துள்ள 247 நாடுகளில் 214 நாடுகளில் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது . அதில் 190 நாடுகள் உள்ளுாரில் கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ளன . 214 நாடுகளில் குறைந்தபட்சம் 166 நாடுகள் கொரோனாவால் உயிரிழப்பை சந்தித்துள்ளன . வடகொரியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு குறித்த தகவல் இல்லை.கொரோனா தொடர்பான தகவல்களை வடகொரியா ரகசியமாக வைத்திருக்கலாமென கருதப்படுகிறது. இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாத ந…
-
- 3 replies
- 752 views
-
-
கிம் ஜாங் உன் வதந்தி: வட கொரிய வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது என்ன? மைக்கேல் மேடன் வடகொரிய வல்லுநர் Reuters கடந்த வாரம் சர்வதேச ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்தான் இடம் பெற்றிருந்தார். கிம்மின் உடல்நிலை மோசமாக இருக்கிறது, கிம் இறந்துவிட்டார் என்ற பல வதந்திகள் பரவின. அதையெல்லாம் பொய்யாக்கி மிகுந்த உற்சாகத்தோடு உரத் தொழிற்சாலை ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார் கிம் ஜாங் உன். மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டு இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன. இப்படி இவர் திடீரென காணாமல் போய் திரும்பி வந்தது இது முதல் முறையல்ல. இப்படி பல முறை நடந்திருக்கிறது. கடந்த கால நிகழ்வுகளில் இருந்து நாம் என்ன…
-
- 3 replies
- 1.4k views
-
-
பீஜிங், ( சின்ஹுவா ) ; சிறுமைத்தனமான வழக்குகளை தாக்கல் செய்து சீனாவைப் பழிவாங்கவும் களங்கப்படுத்தவும் முயற்சிக்கும் சில அமெரிக்க அரசியல்வாதிகள் கொவிட் -- 19 தொற்றுநோயை அரசியல்மயப்படுத்துகிறார்கள் என்று சீனாவின் ' மக்கள் தினசரி' ஞாயிறன்று அரசியல் வர்ணனையொன்றில் சாடியிருக்கிறது. அமெரிக்க அரசியல்வாதிகளின் அத்தகைய செயல்கள் சர்வதேச சட்டங்களையும் விதிகளையும் சவாலுக்குட்படுத்துவதாக ஷொங் ஷெங் என்ற பத்திரிகையாளர் அந்த வர்ணனையில் குறிப்பிட்டிருக்கிறார். " வைரஸ் தொற்றுநோய் சர்வதேச அக்கறைக்குரிய ஒரு பொதுச்சுகாதார அவசரகால நிலையாகும்.அது சட்டரீதியாகவும் கூட தவிர்க்கமுடியாத ஒரு வலுக்கட்டாய நிலையாகும்.அமெரிக்காவில் கொவிட் --19 பெருமளவில் பரவியதற்கு அந்த தொற்றுநோயை தோற்கடி…
-
- 0 replies
- 499 views
-