உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
பொங்கோலில் உள்ள ‘எஸ்11’ தங்கும் விடுதியிலும் தோ குவானில் உள்ள ‘வெஸ்ட்லைட்’ தங்கும் விடுதியிலும் அதிகமானோருக்கு கொவிட்-19 கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து அந்த இரு வளாகங்களைத் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக சுகாதார அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது. அந்த இரு வளாகங்களில் தங்கியுள்ள கிட்டத்தட்ட 20,000 ஊழியர்கள் அடுத்த 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள். இதுவரை இல்லாத அளவிற்கு சிங்கப்பூரில் இன்று 120 பேருக்கு கொவிட்-19 கிருமித் தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. அவர்களில் நால்வர் மட்டுமே வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். மற்ற 116 பேர் உள்ளூரில் பரவிய கிருமித்தொற்று சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள். உள்ளூர் சம்பவங்களில் 39 பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிக…
-
- 0 replies
- 271 views
-
-
மலேசியாவில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,662ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக 179 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4 பேர் உயிரிழந்ததை அடுத்து, கொரோனா கிருமித் தொற்றால் இறந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளது. மலேசியாவில் கொரோனா கிருமித் தொற்று பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டவர்களின் எண்ணிக்கை 1,005 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 90 பேர் சிகிச்சைக்குப் பிறகு முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா கிருமித் தொற்று பரவியுள்ளதால் வெளிநாடுகளுக்குச் சென்று…
-
- 0 replies
- 408 views
-
-
தங்களின் வர்த்தகத்தடை பட்டியலில் உள்ள ரஷிய நிறுவனத்திடமிருந்து வெண்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அமெரிக்கா பெற்றுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் நியூயார்க்: உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமலும் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வைரஸ் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா திணறி வந்தது. இதையடுத்து, கொரோனா தொடர்பாக ரஷிய அதிபர் விளாடி…
-
- 7 replies
- 779 views
-
-
வாஷிங்டன்: கொரோனா தொற்றால் அமெரிக்காவில், 3,11,544 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். நியூயார்க்கில் மட்டும் நேற்று ஒரே நாளில், 630 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து, அந்த மாகாணத்தில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை, 3,565 ஆக உயர்ந்துள்ளது. 30.3K people are talking about this நியூயார்க் கவர்னர் ஆன்ட்ரு கோமோ தெரிவித்துள்ளதாவது: வரும் இரண்டு வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் அதிகமாகப் பரவ வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் தற்போ…
-
- 6 replies
- 970 views
-
-
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: கோப்புப்படம் நியூயார்க் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் அமெரி்க்க மக்களுக்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்பு மிக அதிகமாகும். இந்த அளவுக்கு பாதிப்பு அமெரிக்காவில் ஏற்படக் காரணம் என்ன என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு சற்று அதிகம்தான். அதிலும் அமெரி்க்காவில் புற்றீசலில் வருவதுபோல் நாள்தோறும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரும், உயிரிழப்பும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அமெரிக்காவில் மட்டும் இதுவரை 3 லட்சத்குக்கும் ம…
-
- 1 reply
- 1.8k views
-
-
தேவைப்பட்டால், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையை நானும் உட்கொள்வேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார். பதிவு: ஏப்ரல் 05, 2020 11:27 AM வாஷிங்டன்: அமெரிக்காவில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் மற்றும் 8,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு சிகிச்சையும் இல்லாத கொடிய கொரோனா வைரஸ் நோயால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது. இதுவரை உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள், 64,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்ற மற்றும் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் 12 லட்சம் பேரைபாதித்த வைரஸுக்கு ஒரு தடுப்பூசி அல்லது ஒரு சிகிச்சை முறையைக் கண்டுபிடிப்பதற்காக போரா…
-
- 2 replies
- 339 views
-
-
அமெரிக்காவில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அந்நாட்டில் நேற்று மட்டும் புதிதாக 33 ஆயிரம் பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முகமூடி அணிந்து செல்லும் பெண் நியூயார்க்: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கு பரவியுள்ள வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 12 லட்சத்து 319 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 64 ஆயிரத்து 667 பேர் உயிர…
-
- 4 replies
- 610 views
-
-
ஜெர்மனியில் கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 90,000 - ஐ கடந்துள்ளது. இதுகுறித்து ஜெர்மனியின் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “ஜெர்மனியில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 90,000 - ஐ கடந்துள்ளது. சனிக்கிழமை மட்டும் சுமார் 5,600 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 147 பேர் பலியாகி உள்ளனர். ஜெர்மனியில் இதுவரை கரோனா வைரஸ் தொற்றுக்கு 1,444 பேர் பலியாகி உள்ளனர். 26,000க்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வந்தாலும் நோயாளிகளின் உயிரிழப்பை ஜெர்மனி வெற்றிக்கரமாக தடுத்து வருகிறது. மேலும் அந்நாட்டைச் சேர்ந்…
-
- 0 replies
- 688 views
-
-
கரோனா வைரஸால் ஒருவர் கூட பாதிக்காத நாடுகள் எவை, என்ன காரணம்? கண்ணுக்குத் தெரியாத கரோனா வைரஸ், உலக நாடுகளின் மூலை முடுக்கெல்லாம் நுழைந்து ஆட்டிப் படைத்து வருகிறது. உலகம் முழுவதும் 205-க்கும் மேற்பட்ட நாடுகளில் 11.3 லட்சம் மக்களிடையே கரோனா தனது கோர முகத்தைக் காட்டியுள்ளது. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 2,36,000 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். இவை வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல, விலை மதிப்பில்லாத உயிர்கள். வல்லரசு நாடுகள், பலம் பொருந்திய பிரதேசங்கள், எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கும் நாடுகள் என மார்தட்டிக் கொண்ட அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கரோனாவின் பிடியில் சிக்கிச் சின்னாபின்னாமாகி வரு…
-
- 0 replies
- 594 views
-
-
எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை – வட கொரியா எங்கள் நாட்டில், முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை எடுத்ததால், ஒருவரைக் கூட கொரோனா வைரஸ் பாதிக்கவில்லை’ என, வட கொரியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ், உலகம் முழுதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சீனா, இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், கிழக்காசிய நாடான தென் கொரியாவிலும் பலர் உயிரிழந்து உள்ளனர்.ஆனால், மற்றொரு கிழக்காசிய நாடும், சீனாவின் அண்டை நாடுமான வட கொரியாவில், கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை என, அந்த நாட்டு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கொரோனா விஷயத்தில் வட கொரியா, தொடர்ந்து பொய் தகவல்களை கூறி வருவதாகவும், பலியானோர் பற்றிய விபரங்க…
-
- 0 replies
- 405 views
-
-
ஈரான் நாட்டில் சிறையில் இருந்து தப்பிச்சென்ற கைதிகள் கொரோனா அச்சம் காரணமாக மீண்டும் சிறைக்கே வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஈரான் சிறை கைதிகள் (கோப்பு படம்) தெஹ்ரான்: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கும் பரவியுள்ள பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 11 லட்சத்து 92 ஆயிரத்து 621 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் இதுவரை 64 ஆயிரத்து 228 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய கிழக்கு நாடான ஈரானிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது.…
-
- 0 replies
- 309 views
-
-
உலக அளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பதிவு: ஏப்ரல் 05, 2020 06:43 AM ஜெனீவா, சீனாவில் உருவாகி மற்ற நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைக்கிறது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால், அது மக்களுக்கு பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒவ்வொரு நாடும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் நோய்க்கிருமி பரவுவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியாததால் செய்வது அறியாமல் உலக நாடுகள் திகைத்து நிற்கின்றன…
-
- 0 replies
- 348 views
-
-
துணியால் ஆன முகக்கவசங்களை அணிய பரிந்துரைக்கும் அமெரிக்கா அமெரிக்காவில் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் வாழும் மக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது துணியால் ஆன முகக்கவசங்களை அணிய பரிந்துரைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமில்லை. மக்கள் அணிய வேண்டும் என்றால் அணியலாம் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் நகரத்தில் இதுவரை 1,562 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு வாழ்பவர்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பல மாநிலங்களில் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு உத்தர…
-
- 16 replies
- 1.4k views
-
-
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை அமெரிக்காவில் உள்ள பீற்றர்ஸ்பேர்க் மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாகவும், இதில் எலிக்கு நடத்திய சோதனை வெற்றி அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் வேகமாகப்பரவி வருவதையடுத்து தொற்றானவர்களைக் குணப்படுத்தும் மருந்தும், வைரஸ் தடுப்பு மருந்துகளையும் கண்டுபிடிக்க பெரும்பாலான நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் அமெரிக்காவில் பீற்றர்ஸ்பேர்க் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் ஆன்ற்ரியோ கம்போட்டா, லூயிஸ் பாலோ உள்ளிட்டவர்கள் தலைமையிலான நிபுணர்கள் குழு இந்த மருந்தை உருவாக்கியுள்ளது. இதேகுழுவினர் 2003ஆம் ஆண்டு சார்ஸ் நோய்க்கும், 2014ஆம் ஆண்டு மெர்ஸ் நோய்க்கும…
-
- 0 replies
- 926 views
-
-
பிரித்தானியாவில் தற்போது அமுலில் இருக்கும் தீவிர முடக்கத்திற்கு உட்படுத்தும் சட்டத்தை மே மாதம் இறுதியில் நீக்குவது சிரமம் என அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவது குறைந்தால் மாத்திரமே சட்டத்தை தளர்த்துவது தொடர்பாக ஆராய என தெரிவித்துள்ள அதிகாரிகள், கொரோனா வைரஸ் பரிசோதனைகளை அதிகளவில் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளனர். கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக பிரித்தானிய அரசாங்கம் நாட்டை பரவலாக மூடியுள்ளது. மதுபான நிலையங்கள், உணவகங்கள், வர்த்தக நிலையங்கள் அனைத்தும் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளன. அவசியமாக இருந்தால் மாத்திரமே வெளியில் செல்ல வேண்டும் எனவும் மக்களை வீடுகளில் இருக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. பிரித்தானியாவில் 41 ஆயிரத்து 903 கொரோ…
-
- 0 replies
- 306 views
-
-
கொரோனா எதிரொலி: ஆஸ்திரேலிய கூட்டாட்சி முறையில் மாநிலங்கள் எல்லைகளை மூட முடியுமா? ஆஸ்திரேலியாவில் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளை வெறும் சிறு அடையாளம் மூலமே கடந்த காலங்களில் காணக்கூடியதாக இருக்கும். தூசி நிறைந்த எல்லைப்புற சாலையில் பயணிக்கும் பெரும்பாலான பயணிகள் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநில எல்லைக்குள் நுழைகிறோம் என்பதை கூட அறிந்திருக்க முடியாத அளவிலேயே சூழல் இருந்திருக்கின்றது. ஆனால் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல், இதை அத்தனையையும் மாற்றி இருக்கிறது. இந்த சூழல், மாநிலங்கள் இடையே எல்லைகள் அமைத்து வேலி அமைக்கும் நிலைக்கு மாநில அரசுகளை தள்ளியிருக்கிறது. இவ்வாறு தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்த் உள்ளிட்ட பல மாநிலங்க…
-
- 0 replies
- 450 views
-
-
அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான தியோடர் ரூஸ்வெல்டில் பணியாற்றும் 114 மாலுமிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் வாஷிங்டன்: அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான தியோடர் ரூஸ்வெல்டில் பணியாற்றும் 114 மாலுமிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அமெரிக்க கடற்படை தலைவர் (பொறுப்பு) தாமஸ் மோட்லி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- இன்னும் நிறைய மாலுமிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறோம். நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா தாக்கி இருக்கக்கூடும். இருப்பினும், யாரும் ஆஸ்பத்திரியில் சேர…
-
- 3 replies
- 597 views
-
-
பிரிட்டனில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 9 நாட்களில் மிகப்பெரிய மருத்துவமனையை அந்நாட்டு அரசு கட்டியுள்ளது. நைட்டிங்கேல் மருத்துவமனை லண்டன்: உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ், பிரிட்டனையும் விட்டு வைக்கவில்லை. நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. எனவே, பல்வேறு பகுதிகளில் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன. அவ்வகையில், பிரிட்டனில் தீவிர சிகிச்சை தேவைப்படும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்காக மிகப் பெரிய மருத்துவமனையை அந்நாட்டு அரசு கட்டியுள்ளது. …
-
- 0 replies
- 293 views
-
-
பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 335 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்கள் (கோப்பு படம்) பாரிஸ்: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கு பரவியுள்ள வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உ…
-
- 6 replies
- 845 views
-
-
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு சிறந்த பங்களிப்பை ரஷ்யா வழங்கியுள்ளது- ட்ரம்ப் by : Litharsan மருத்துவ உபகரணங்களை வழங்கியதன் மூலம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சிறந்த பங்களிப்பை ரஷ்யா அளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த 30ஆம் திகதி இருநாட்டுத் தலைவர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி ஆலோசனைக்குப் பின்னர் ரஷ்யாவிடம் இருந்து வென்ரிலேற்றர் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்க அமெரிக்க ஒப்புக்கொண்டது. இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், அதிகப்படியான மருத்துவ உதவிகளைத் தருவதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்திருந்ததாகவும் அதனை தான் ஏற்றுக்கொள்வதாக பதிலளித்ததாக குறிப…
-
- 12 replies
- 794 views
-
-
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒரே நாளில் 1,480 பேர் பலியாகியுள்ளனர். பதிவு: ஏப்ரல் 04, 2020 07:08 AM வாஷிங்டன், சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடுகிறது. வல்லரசு நாடான அமெரிக்கா தான், கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக தற்போது உள்ளது. தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 277,161 ஆக உள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசுக்கு 1,480 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பெருந்தொற்று பரவிய பிறகு, அமெரிக்காவில் ஒரே நாளில் ஏற்பட்டுள்ள அதிகபட்ச உயிரிழப்பு இதுவே ஆகும். ஒட்டு மொத்தமாக அமெரிக்காவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 7,406 ஆக உள்ளது…
-
- 0 replies
- 272 views
-
-
ஈக்குவடோரில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் வீதிகளில் கைவிடப்படும் நிலை காணப்படுவதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. ஈக்குவடோரின் காயிகுயல் நகரில் வீதிகளில் உடல்கள் காணப்படுவதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. ஈக்குவடோனின் அதிக சனத்தொகையை கொண்ட இந்த நகரில் பொதுச்சேவை செயல் இழக்கும் நிலையில் உள்ளது, நோயாளிகளை ஏற்றுக்கொள்வதற்கான இடம் மருத்துவமனைகளில் இல்லை,பிரதே அறைகளும், இறுதிசடங்குகள் இடம்பெறும் பகுதிகளும் நிரம்பி வழிகின்றன என சிஎன்என் தெரிவித்துள்ளது. வேறு வழியில்லாமல் நாங்கள் இறந்தவர்களை வீடுகளிற்கு வெளியே வைக்கின்றோம் என சில குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். நாங்கள் ஐந்து நாட்களாக காத்திருக்கின்றோம் என தெரிவித்துள்ள பெர்ணான்டோ எஸ்பானா என்பவர்…
-
- 0 replies
- 581 views
-
-
பெர்லின்: உலகின் தேவை அதிகரித்ததன் காரணமாக, சீன 'மாஸ்க்' குகளை பெற பல்வேறு நாடுகளின் ஏஜென்டுகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுவருகிறார்கள். இதுஉலகின் தேவையை பிரதிபலிக்கிறது என ஜெர்மன் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் கூறினார். கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான உபகரணங்களை பெற ஒரு நிறுவனத்திற்கு சென்ற போது ஸ்பான் இவ்வாறு தெரிவித்தார். மற்ற நாடுகள் வாங்கும் 'மாஸ்க்'களை தான் அமெரிக்காவும் வாங்கிவருகிறது. இதனால் அது ஒரு வலுவான தேவையை மட்டும்தான் பிரதிபலிக்கும். ஆனால் அது நல்ல வளர்ச்சி அல்ல. இந்நிலையில் பாதுகாப்பான 'மாஸ்க்'குகளை உற்பத்தி செய்வதில் ஐரோப்பிய நாடுகளுக்கிடையே அதிக ஒத்துழைப்புக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு ஸ்பான் கூறினார். https://www.dinamalar.com/news…
-
- 1 reply
- 826 views
-
-
-
மோல்கா - spy Camera தென் கொரியாவின் அசுர தொழில் நுட்ப வளர்ச்சி புதிய பிரச்சனையினை கிளப்பி விட்டுள்ளது. அதுவும் பெண்களுக்கு. மோல்கா - (ஸ்பை கேமரா) எனப்படும் இந்த கிரிமினல் வேலையினால், பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். இந்த வகை காமெராவின் அளவு சிறிதாகி, குண்டூசியின் தலை அளவுக்கு வந்து விட்டதால், இது எங்கே வைக்கப்பட்டுள்ளது என்று அவசரத்தில், பப்ளிக் வாஷ்ரூம் போகும் பெண்களும், சிலவேளை ஆண்களும், பாதிக்கப்படுகின்றார்கள். மேலும், மணித்தியால கணக்கில் அறைகளை வாடகைக்கு விடும் மோட்டல்களில் பாலியல் நோக்கத்துடன் ஜோடிகள் வரும் போது அவர்களுக்கு, இந்த வகை கமெராக்கள் இருப்பது தெரிவதில்லை. அவர்களது நடவடிக்கைகள் லைவ்வாக, உலகின் வேறு பகுதியில் பணம் கொடுக்கும் வாட…
-
- 0 replies
- 328 views
-