Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கரிஷ்மா வாஸ்வானி ஆசிய வணிகச் செய்தியாளர், பிபிசி. சீனா தவிர்த்த பிற நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியதற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு, சிங்கப்பூர் சில விடைகளைத் தருகிறது. கடந்த புதன்கிழமை சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் வங்கி ஒன்றின் ஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த வங்கியில் பணியாற்றிய 300 ஊழியர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஒரு ஊழியருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதற்காக ஒட்டுமொத்த அலுவலகத்திற்கே விடுமுறை அளிக்கும் நிலையில்தான் சிங்கப்பூரில் கொரோனா குறித்த அச்சம் மேலோங்கி வருகிறது. ஏனெனில் சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரசால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் சிங்கப்பூரும் …

  2. சியாரா புயல் காரணமாக ஜேர்மனியில் 180 விமானச் சேவைகள் ரத்து! ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வரும் சியாரா புயல் காரணமாக ஜேர்மனியில் 180 விமானச் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவின் வடக்குப்பகுதிகளில் மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறைக்காற்று மற்றும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலும் வீதி மற்றும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று மோசமான வானிலை காரணமாக ஜேர்மனியின் பிராங்பேர்ட் விமான நிலையத்தில் 180 விமானங்களின் புறப்பாடு, வருகை ரத்துச் செய்யப்பட்டுள்ளது. ஹம்பேர்க், பேர்லின் உள்ளிட்ட இடங்களிலும் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் உள்ள…

  3. கொரோனா வைரஸ் – ஒரே நாளில் 242 பேர் உயிரிழப்பு! கொரோனா வைரஸ் (கோவிட் -19) காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 355 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம்(புதன்கிழமை) மாத்திரம் 242 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா வைரஸினால் ஏற்படும் நாளாந்த உயிரிழப்புக்கள் தினமும் அதிகரித்து வருவது சீன அதிகாரிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பின்னர் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு நாளாக நேற்றைய நாள் பதிவாகியுள்ளது. சீனாவின் மத்திய மாகாணமான ஹூபேயிலேயே 242 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், நேற்றைய 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்து 840 பேர் புதிதாக நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதேவே…

  4. அமெரிக்காவின் அமைதி திட்டத்தை ஐ.நாவில் வைத்து நிராகரித்தது பாலஸ்தீனம்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் முன்வைக்கப்பட்டுள்ள அமைதி திட்டத்தினை நிராகரிப்பதாக பாலஸ்தீனம் அறிவித்துள்ளது. நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத் தொடரில் பங்கேற்று உரையாற்றிய போதே பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘நான் இங்கு வந்திருப்பது பாலஸ்தீனம் – இஸ்ரேல் தொடர்பான அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தத்தை பாலஸ்தீனம் நிராகரித்துவிட்டது என்பதைக் கூறுவதற்குத்தான். இந்தத் திட்டம் பாலஸ்தீனியர்களின் உரிமைகளின் நியாயத்தன்மையையும், சுயநிர்ணய உரிமையையும் இரத்து செய்கிறது. இது சட்டவிரோதமான குடியேற்ற…

  5. கனடாவின் இழப்பீட்டுக் கோரிக்கையை ஈரான் நிராகரித்தது கடந்த மாதம் உக்ரேனிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் கொல்லப்பட்ட தமது குடிமக்களுக்கான கனடாவின் 1 பில்லியன் டொலர் இழப்பீட்டுக் கோரிக்கையை ஈரான் நிராகரித்துவிட்டது. உக்ரேனிய விமான விமானம் தவறாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் ஒப்புக்கொண்ட போதிலும், கனடாவின் கோரிக்கையில் சட்டபூர்வமான அடிப்படை இல்லை என அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜவாத் ஸரீஃப் கூறியுள்ளார். அத்துடன், ஈரானின் நடவடிக்கைகள் சர்வதேச விதிகளின் அடிப்படையில் அமைந்தவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த மாதம், ஈரான் புரட்சிப் படையின் மூத்த தளபதியின் படுகொலை தொடர்பாக ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஏற்பட்ட பதற்றங்களுக்கு ம…

  6. கொரோனா வைரசால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உயிரைக் குடித்த நோய்க்கு கோவிட் 19 என உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரேயேசஸ் கூறும்போது, புதிய நோய்க்கு கோவிட்-19' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்தப் பெயர் பூமியில் எந்தவொரு இடத்துக்கோ, மிருகத்துக்கோ, தனிநபருக்கோ, குழுவுக்கோ இதுவரை வைக்கப்படவில்லை என்று தெரிவித்த அவர், அதேவேளையில் உச்சரிக்கக் கூடியதாகவும், நோய்க்கு தொடர்புடையதாகவும் இந்தப் பெயர் உள்ளதாகவும் கூறினார். சி ஓ வி ஐ டீ என்ற இந்தப் பெயரில் சி ஓ என்பது கொரோனா என்ற வார்த்தையையும், வி ஐ என்பது வைரஸ் என்ற வார்த்தையையும், டீ என்பது டிசீஸ் எனப்படும் நோய் என்ற வார்த்தையை…

  7. தங்களது உளவு செயற்கைக்கோளை ரஷ்யாவின் 2 செயற்கைக்கோள் பின்தொடர்வதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து டைம்ஸ் பத்திரிகைக்கு அமெரிக்க ராணுவ விண்வெளி படைப்பிரிவு தளபதி ஜான் ரெமான்ட் அளித்துள்ள பேட்டியில், கடந்த நவம்பர் மாதம் செலுத்தப்பட்ட உளவு செயற்கைக்கோளை 2 அமெரிக்க உளவு செயற்கைக்கோளை பின்தொடரும் ரஷ்ய செயற்கைக்கோள்கள்செயற்கைக்கோள்கள் சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவு இடைவெளியில் பின்தொடர்வதாக தெரிவித்துள்ளார். ரஷ்ய செயற்கைக்கோள்களின் செயல்பாடு அசாதாரணமாகவும், இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அமெரிக்காவிடம் இருந்து தகவல்கள் வந்திருப்பதாகவும், அதை முழுவதும் படித்தபிறகு பதில் அளிக்கப்படும் என்று ரஷ்ய வெளிய…

    • 0 replies
    • 927 views
  8. 18 மாதங்களில் தயாராக இருக்கும் .sl_box{ margin-bottom: 5px !important; } .sl_box3{ padding-top: 12px !important; } 1,088 Views கொவிட்-19 என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸை தடுப்பதற்கான முதலாவது தடுப்பூசி 18 மாதங்களில் தயாராக இருக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் டெட்ரோஸ் எடனொம் கெப்ரியேஸஸ்வு இதனைத் தெரிவித்துள்ளார். எனவே, குறித்த காலப்பகுதிவரை கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளை…

  9. கொரோனா வைரஸ் – முக்கிய அதிகாரிகள் பணி நீக்கம்! சீனாவில் முக்கிய அதிகாரிகள் சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கையாண்ட விதம் குறித்த குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய அதிகாரிகளே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஹூபேய் சுகாதார ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் குறித்த ஆணைக்குழுவிற்கான கட்சியின் செயலாளர் ஆகியோரும் பதவி நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரினதும் பதவி வெற்றிடத்திற்கு, தேசிய பிரமுகர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் உள்ளூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிப் பணிப்பாளரும் பதவியிருந்து நீக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றினால் உயிர…

  10. ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் 135பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று! ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 135ஆக அதிகரித்துள்ளதாக ஜப்பான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 3,711 பேருடன் ஹொங்கொங்கிலிருந்து ஜப்பான் நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசுக் கப்பல், கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக, ஜப்பான் கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அந்தக் கப்பலில் இருந்து கடந்த மாதம் ஹொங்கொங்கில் இறங்கிய பயணிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்தக் கப்பல், கரைக்கு அப்பால் நிறுத்தி தனிமைப்படுத்தப்பட்டது. அந்தக் கப்பலில் உள்ள பயணிகளுக்கு தினந்தோறும் மருத்துவ பரிசோதனை ம…

  11. கொரோனா வைரஸ் அச்சத்தால் தலைமறைவான ஷி ஜின்பிங் மருத்துவமனையில் கள ஆய்வு! சீனாவை கதிகலங்க வைத்துள்ள கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகின்ற நிலையில், இதுவரை பொதுவெளியில் தோன்றாத சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றுக்கு சென்றுள்ளார். தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனைக்கு சென்ற அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுடன் கலந்துரையாடி தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிந்துக் கொண்டார். இதன்போது, முகமூடி அணிந்திருந்த ஷி ஜின்பிங், மருத்துவமனை மட்டுமின்றி, பெய்ஜிங்கில் உள்ள சமுதாய நலக் கூடம் ஒன்றிற்கும் சென்றார். இந்த தீடிர் விஜயத்தின் போது, கொரோனா வைரஸுக்கு எதிராக இன்னும…

  12. அவுஸ்ரேலியாவில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் மழை: காட்டுத் தீ அணைந்தது! அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் மழை பெய்துள்ளதால், வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் ஏற்பட்டிருந்த காட்டுத்தீ அணைந்துள்ளது. சிட்னி நகரில் கடந்த 4 நாட்களில் 391.6 மி.மீ. மழை பெய்துள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனால், கடந்த மாதங்களாக காட்டுத்தீயினால் கடும் இழப்புகளை சந்தித்து வந்த மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக, நியூ சௌத் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த தீயணைப்பு நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் மோரிஸ் கூறுகையில், ”அவுஸ்ரேலியாவின் 30 இடங்களில் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருகிறது. எதிர்வரும் நாட்களில் …

  13. கொரோனா வைரஸுக்கு புதிய பெயர் – உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பு! கொரோனா வைரஸுக்கு covid-19 என உலக சுகாதார ஸ்தாபனம் பெயரிட்டுள்ளது. மேலும், கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி 18 மாதங்களில் தயாரிக்கப்படும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரத்து 110 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 42 ஆயிரத்து 638 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 94 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவின் ஹுபெய் மாகாணம் வூஹானில் கடந்த ஆண்டு டிசம்பரில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களில் சீனா முழுவதும் வைரஸ் வேகமாகப் பரவி …

  14. யுத்த குற்றச்சாட்டுகளிற்குள்ளாகியுள்ள முன்னாள் சூடான் ஜனாதிபதி ஓமார் அல் பசீரை சர்வதே குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைப்பதற்கு சூடான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சூடான் அரசாங்கத்திற்கும் கிளர்ச்சிக்குழுக்களிற்கும் தலைநகரில் டார்பூரில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போதே இது குறித்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி ஓமார் அல் பசீர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும் நிலை உருவாகியுள்ளது. 2003 இல் சூடானில் வெடித்த மோதலின் போது யுத்த குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளில் ஈடுபட்டார் என முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. காயங்களை ஆற்றமுடியாவிட்டால் நீதியை நிலைநாட்…

    • 0 replies
    • 481 views
  15. ஆப்பிரிக்காவில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பை கட்டுப்படுத்தாவிடில் பேரழிவை சந்திக்க நேரிடும் என ஐநா எச்சரித்துள்ளது. நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் உரையாற்றிய உணவு மற்றும் வேளாண் அதிகாரி கீத் க்ரெஸ்மேன்(Keith Cressman), உள்நாட்டு போரால் ஏற்கனவே உணவு தட்டுப்பாட்டை சந்தித்து வரும் சூடான் நோக்கி வெட்டுக்கிளி படை நகர்ந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். பென்சில்வேனியா, நியூயார்க், நியூஜெர்சியில் உள்ள மொத்த மக்களுக்கு தேவையான ஒரு வேளை பயிர்களை இந்த வெட்டுக்கிளி கூட்டம் ஒரே நாளில் தின்று சேதப்படுத்தக்கூடியவை என்றும் இதனால் ஆப்ரிக்க நாடுகளில் உணவு தட்டுப்பாடு தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஐநா அதிகாரி கீத் தெரிவித்துள்ளார். மழைக்கு பிறகு இந்த வெட்டுக்க…

    • 0 replies
    • 363 views
  16. “பாலத்தீனம் மீதான ஒடுக்குமுறை நீடித்தால் மலேசியா அமைதி காக்காது” : மகாதீர் சீற்றம். பாலத்தீனர்கள் மீதான இஸ்ரேலின் ஒடுக்குமுறையைக் கண்டு மலேசியா இனியும் அமைதி காக்காது என பிரதமர் மகாதீர் மொஹம்மத் தெரிவித்துள்ளார். அவ்வாறு அமைதி காத்தால் இஸ்‌ரேலியர்களால் கொல்லப்படும் பாலத்தீனர்களின் ரத்தமானது நம் கைகளிலும் படிந்துவிடும் என அவர் கூறியுள்ளார். உலகெங்கிலும் பாலத்தீனத்துக்கு ஆதரவாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி கோலாலம்பூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசியபோதே மகாதீர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். “நாங்கள் (மலேசியா) கடமை உணர்வுடன் உள்ளோம். தங்களை நீதி மற்றும் சுதந்திரத்தின் காவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலம் மிக்க நாடுகள், அட்ட…

  17. கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது: சீனா தகவல் உலகையே அச்சுறுத்திவரும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சீனத் தேசிய சுகாதார அணையம் தெரிவித்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த இரு நாட்களாகக் குறைந்துள்ளதனை, சீனத் தேசிய சுகாதார ஆணையத்தின் அதிகாரி குவோ யன் ஹொங் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஹூபெய் மாநிலத்தில் வூஹான் நகரைத் தவிர பிற நகரங்களுக்கும் சீனாவின் 16 மாநிலங்களுக்கும் இடையே ஒன்றுக்கு ஒன்று என்ற ரீதியிலான உதவி முறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹூபெய் மாநில நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருத்துவச் சிகிச்சை ஆற்றல் வலுப்படுத்தப்படும்’ என கூற…

  18. கொடிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1016 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. உலகம் முழுவதும் இலங்கை, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. அதேவேளை, 40 ஆயிரத்து 640 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் சீன அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. …

  19. உலகையே அச்சுறுத்தியுள்ள நாவல் கொரோனா வைரஸ் நிமோனியா தொடர்பில் ஒரு சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட தரவுகளுக்கமைய வுஹான், ஹூபே மாகாணம் மற்றும் நாடு முழுவதும் நாவல் கொரோனா வைரஸ் நிமோனியா காரணமாக பாதிக்கப்பட நோயாளர்களில் குணமடைந்தவர்களின் விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இன்றைய தரவு பகுப்பாய்வின்படி, நாடு முழுவதும் உள்ள நாவல் கொரோனா வைரஸ் நிமோனியா நோயாளர்களில் குணமடைந்தவர்களின் விகிதம் 8.2 சதவீதமாக உள்ளதாகவும் இதுவே ஜனவரி 27 அன்று 1.3 சதவீதமாக இருந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஹூபே மாகாணத்தில் குணமடைந்தவர்களின் விகிதம் ஜனவரி 27 அன்று 1.7 சதவீதத்திலி…

    • 0 replies
    • 981 views
  20. ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கடுமையாக விமர்சித்து வந்த புளொக்கர் ஒருவர் பிரான்ஸ் ஹோட்டலொன்றில் கழுத்துவெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இம்ரான் அலைவ் என்ற நபரே நெஞ்சில் பல காயங்களுடனும் கழுத்துவெட்டப்பட்ட நிலையிலும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரான்ஸ் காவல்துறையினர் இது அரசியல் கொலையென தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டுள்ள நபர் பல வருடங்களாக ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை தனது மிகவும் பிரபலமான புளொக் மற்றும் யூடியுப்பில் கடுமையாக விமர்சித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு புனைபெயர்களில் இவர் புட்டினிற்கு எதிரான விமர்சனங்களை முன்னெடுத்துவந்தார். கொலை செய்யப்பட்ட நபருடன் ஹோட்டலில் தங்கியிருந்த நபர் ஒருவர் கா…

    • 0 replies
    • 341 views
  21. சீனாவில் கொரோனாவின் உச்சம்: ரோபோக்களைப் பயன்படுத்தும் அதிரடித் திட்டம் சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதையடுத்து, மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு மருந்து, உணவுகளைக் கொண்டுசெல்வதற்கு மனிதர்களுக்குப் பதிலாக ரோபோக்களைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். சீனாவை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை 800இற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 25 நாடுகளுக்கும் இது பரவியுள்ளது. எனவே, வைரஸ் பரவும் வேகம் அதிகமாக இருப்பதால் இனிவரும் காலத்தில் அதிகமானோர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக சீனாவில் பல மருத்துவமனைகள் ரோபோக்களை பணிக்கு அமர்த்தியுள்ளன. மருத்துவ தாதியர்கள் நோயாளிகளுக்கு மருந்து, மாத்…

  22. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் – 908 பேர் உயிரிழப்பு உலகை அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 908ஆக அதிகரித்துள்ளது. இதில் சீனாவில் மட்டும் 900 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம் 2003ல் சார்ஸ் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைவிட இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் ஹுபே மாகாணத்தில் மட்டும் 871 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகளுடன் 40,000க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஹுபே மாகாணத்தில் மட்டும் 29,631 பேரும் குறிப்பாக வூஹான் நகரில் 16,902 பேரும் பாதிக்கப்பட்டுள்ளமை கண…

  23. கருத்தடை மருந்துகளின் பற்றாக்குறை குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை கருத்தடை மருந்துகளின் பற்றாக்குறை காரணமாக திட்டமிடப்படாத கர்ப்பம் மற்றும் கருக்கலைப்பு அபாயங்கள் ஏற்படுத்துகின்றன என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த விடயம் குறித்து மருத்துவ நிபுணர்கள் அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். கருத்தடை மருந்துகளின் விநியோகப் பற்றாக்குறை நாடு முழுவதும் கடுமையான பிரச்சினைகளுக்கு வழிவகுத்துள்ளது. அன்றாடம் உள்ளெடுக்கும் மாத்திரைகள் மற்றும் நீண்டகால கருத்தடை ஊசி மருந்து ஆகியவைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கருத்தடை மருந்துகளின் பற்றாக்குறை எதனால் ஏற்பட்டது என்பது தற்போதுவரையிலும் தெளிவாகத் தெரியவில்லை. எனினும் ஒரு முக்கிய மூலப்பொருள் இப்போது மீண்…

  24. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 811ஆக அதிகரிப்பு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று ஒரே நாளில் சீனாவில் 80இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 811 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது சீனா முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. அத்தோடு 25இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி உள்ளமையால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸின் பிறப்பிடமாக கருதப்படும் வுகானில் இந்த வைரஸ் பாதிப்பால் வைத்தியசாலைகள் அனைத்தும் நோயாளிக…

  25. தாய்லாந்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழப்பு – பலர் காயம்! தாய்லாந்தின் நகோன் ரற்சசிமா (Nakhon Ratchasima) என்ற நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாய்லாந்தின் இராணுவச் சிப்பாய் ஒருவராலேயே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த இராணுவச் சிப்பாய் முதலில் தன்னுடன் வந்த இராணுவச் சிப்பாய் ஒருவரையும் மேலும் இருவரையும் சுட்டுக் கொலைசெய்த பின்னர் வணிக வளாகம் ஒன்றுக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். ரேர்மினல் 21 ஷொப்பிங் சென்றர் (Terminal 21 shopping centre) என்ற வணிக வளாகத்துக்கு காரில் வந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.