உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26682 topics in this forum
-
நோர்வே இளவரசியின் முன்னாள் கணவன் தற்கொலை! நோர்வே நாட்டின் இளவரசி மார்த்தா லூயிஸின் முன்னாள் கணவரான டென்மார்க்கை சேர்ந்த பிரபல நாவலாசிரியர் அரி பென், தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் தனியாக வாழ்ந்து வந்த அரி பென் நேற்று முன்தினம் (புதன்கிழமை) தற்கொலை செய்து கொண்டதாக அவரது செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், அரி பென் எப்படி தற்கொலை செய்து கொண்டார்? இந்த விபரீத முடிவுக்கு காரணம் என்ன என்பது உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படவில்லை. அரி பென்னின் மறைவுக்கு நோர்வே மன்னர் ஹரால்ட் மற்றும் ராணி சோன்ஜா ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரி பென், பல ஆண்டுகளாக எங்கள் குடும…
-
- 0 replies
- 443 views
-
-
-
- 2 replies
- 905 views
-
-
துருக்கி நோக்கி படையெடுக்கும் சிரிய அகதிகள்: தனியாக சமாளிக்க முடியாது என்கிறார் எர்டோகன் சிரியாவிலிருந்து வரும் அகதிகளின் புதிய அலையை எங்கள் நாட்டால் சுமக்க முடியாது என துருக்கி ஜனாதிபதி தயீப் எர்டோகன் தெரிவித்துள்ளார். இஸ்தான்புல்லில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், “சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியதிலிருந்து சுமார் 30 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் துருக்கியை நோக்கி வந்திருக்கிறார்கள். இதில் சிரியாவின் வடக்கில் இட்லிப் பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக சுமார் 80,000 பேர் துருக்கி எல்லையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். சிரிய அகதிகளின் இந்தப் புதிய அலையை துருக்கியால் மட்டும…
-
- 8 replies
- 833 views
-
-
அகதிகளுக்கு மருத்துவம் வழங்கும் சட்டம் நீக்கம்: ஆஸ்திரேலிய முகாம்களில் அகதிகள் நிலை என்ன ? ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து சென்று மருத்துவ உதவி வழங்குவதற்கு வழிசெய்த ‘மருத்துவ வெளியேற்றச் சட்டம்’ நீக்கப்பட்டுள்ளது. இந்த நீக்கம், உடல்நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட அகதிகளின் நிலைக் குறித்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பப்பு நியூ கினியா மற்றும் நவுரு ஆகிய தீவு நாடுகளில் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. நவுரு முகாம்களில் உள்ள அகதிகளை, மருத்துவ வெளியேற்றச் சட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கலாம் என ஆஸ்திரேலியா அனுமதி வழங்கியிருந்த நிலையிலும் நவுரு அரசு அகதிகளை செ…
-
- 1 reply
- 595 views
-
-
விண்வெளி படைப்பிரிவை உருவாக்கும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு புதிதாக விண்வெளி படைப்பிரிவை உருவாக்க வகை செய்யும் மசோதாவில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் கடந்த 20ம் தேதி கையெழுத்திட்டார். இதுகுறித்து பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வு குயன் ((Wu Qian)) பொது சொத்தான விண்வெளியை ஆக்கப்பூர்வ பணிகளுக்கு பயன்படுத்துவதையே சீனா ஆதரிப்பதாகவும், அங்கு ஆயுதப் போட்டி ஏற்படுவதை விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். அமெரிக்காவின் நடவடிக்கையால், விண்வெளியில் நிலவும் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், ஆதலால் அதை சீனா எதிர்க்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.…
-
- 0 replies
- 411 views
-
-
கஸகஸ்தானில் 100 பேருடன் பயணித்த விமானம் விபத்து கஸகஸ்தான் அல்மட்டி விமான நிலையத்திலிருந்து 100 பயணிகளுடன் நர்சுல்தான் நோக்கி பயணித்த விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விமான நிலையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை புறப்பட்ட விமானம் சிறிது நேரத்திலேயே அருகில் இருந்த 2 அடுக்கு மாடி கட்டடம் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் இதுவரையில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் விமானத்தில் பயணித்த பயணிகளில் பலர் உயிருடன் இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. அவசர உதவி மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர…
-
- 0 replies
- 395 views
-
-
தேவாலயத்தில் 175 குழந்தைகளிடம் 34 பாதிரியர்கள் பாலியல் வன்முறை: அதிர்ச்சித் தகவல் வெளியானது மெக்சிகோவிலுள்ள தேவாலயம் ஒன்றில் 175 குழந்தைகளிடம் 34 பாதிரியர்கள் அத்துமீறி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில், பாதிரியார்களால் குறைந்தது 175 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக சனிக்கிழமை வெளியிடப்பட்ட உள்ளக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தேவாலயத்தில் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நடந்ததாகக் கூறப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பாக விசாரிக்கப்பட்டது. இதில், 175 குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளானமை தெரியவந்துள்ளது. அந்த தேவாலயத்தை உருவாக்கிய மார்சியல் மேசியல் என…
-
- 0 replies
- 381 views
-
-
ஜப்பான் பிறப்பு விகிதம் இந்த ஆண்டு மிகவும் குறைந்து காணப்படுகிறது. மிகவும் வேகமாக வளர்ச்சியடையும் நாடுகளில் ஒன்றான ஜப்பானில் அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 8 லட்சத்து 64 ஆயிரமாகும். 1899ஆம் ஆண்டு முதலான கணக்கெடுப்பில் இதுவே குறைந்தபட்சமாகும். கடந்த ஆண்டை விட 54 ஆயிரம் குழந்தைகள் இந்த ஆண்டில் குறைந்துள்ளனர். இதே போல் கடந்த ஓராண்டில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் மக்கள் தொகையில் கணிசமான அளவுக்கு சரிவு காணப்படுகிறது. https://www.polimernews.com/dnews/94517/ஜப்பானில்-பிறப்பு-விகிதம்குறைவு--மரண-விகிதம்அதிகரிப்பு
-
- 0 replies
- 295 views
-
-
வடகொரியாவின் கிறிஸ்மஸ் பரிசு தயாரா? அதிர்ச்சியில் அமெரிக்கா சர்வதேசத்தின் கருத்துகளையும், அறிவுறுத்தல்களையும் செவிமடுக்காது செயற்பட்டுவரும் வடகொரியா, ஏவுகணைகளை உருவாக்குவதற்கான தளபாடங்களின் உற்பத்தியை விரிவுபடுத்துவதாகத் தெரிகின்றது. இந்த மாதம் 31ஆம் திகதிக்குள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா அழைப்பு விடுக்காவிட்டால், அந்த நாட்டுக்கு ‘கிறிஸ்மஸ் பரிசாக அதிர்ச்சியளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக வட கொரியா எச்சரித்துள்ள நிலையில், இந்த செய்தியானது அமெரிக்காவை சற்று அச்சமடைய வைத்துள்ளது. வட கொரியாவில் பாதுகாப்புத் தளபாடங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் கூடுதல் கட்டடங்கள் எழுப்பப்பட்டு வருவது கடந்த 19ஆம் திகதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் …
-
- 4 replies
- 839 views
-
-
பிரான்ஸ் போராட்டம்: எல் ஓபரா டி பரிஸ் அரங்கிற்கு 8 மில்லியன் வருவாய் இழப்பு! பிரான்ஸில் முன்னெடுக்கப்பட்டுவரும் அரசாங்கத்திற்கெதிரான போராட்டத்தினால், எல் ஓபரா டி பரிஸ் அரங்கிற்கு 8 மில்லியன் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வலுவடைந்துவரும் இந்த போராட்டத்தினால், எல் ஓபரா டி பரிஸ் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டுள்ளது. அத்தோடு, பல நிகழ்ச்சிகளுக்கு முன்னதாகவே நுழைவுச் சீட்டுகள் விற்பனையாகியிருந்த நிலையில், இந்த நிகழ்ச்சி இரத்து பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மொத்தமாக இதுவரை டிசம்பர் 5 ஆம் திகதியின் பின்னர் 45 நிகழ்ச்சிகளை இரத்துச் செய்துள்ளததாகவும், இதனால் எட்டு மில்லியன் யூரோக்கள் வருவாயை இழந்து…
-
- 0 replies
- 325 views
-
-
கிரிமியா மற்றும் ரஷ்யா இடையே புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாதையை திறந்து வைத்து அதில் சென்ற முதல் ரயிலில் அந்நாட்டு அதிபர் புதின் பயணித்தார். கடந்த 2014ம் ஆண்டு உக்ரைனிடம் இருந்து கிரிமியாவை ரஷ்யா கைப்பற்றியது சர்வதேச ரீதியில் விமர்சனத்துக்கு ஆளானது. இந்நிலையில் ரஷ்யாவின் தாமன் வளைகுடா பகுதியிலிருந்து கிரிமியாவின் கெர்ச் வரையிலும் 19 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ($3.60 billion) அமைக்கப்பட்ட ரயில் பாதையை திறந்து வைத்து, முதல் ரயிலில் புதின் பயணித்தார். https://www.polimernews.com/dnews/94146/கிரிமியா,-ரஷ்யா-இடையே-ரயில்பாதையை-திறந்து-வைத்தார்அதிபர்-புதின்
-
- 1 reply
- 593 views
-
-
படத்தின் காப்புரிமைGETTY IMAGES கடந்த ஆண்டில் சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேருக்கு சௌதி அரேபிய நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை வழங்கியுள்ளதாக அந்நாட்டின் அரசு வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். பிரபல பத்திரிகையாளரான கஷோக்ஜி சௌதி அரசு மீது விமர்சனங்களை வைத்து வந்தார். கடந்த ஆண்டு (2018) அக்டோபர் 2-ம் தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்தில் நுழைந்த பின்னர் உயிருடன் வெளியே வரவில்லை. சௌதிக்கு கஷோக்ஜியை திருப்பி வர வைப்பதற்காக அனுப்பப்பட்ட ஊழியர்கள் மேற்கொண்ட ஒரு முரட்டுத்தனமான நடவடிக்கையில் கஷோக்ஜி கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சௌதி தலைநகரான ரியாத்தில் 11 ப…
-
- 7 replies
- 788 views
-
-
இத்தாலியின் வெனிஸ் நகரை மீண்டும் வெள்ளப்பெருக்கு நனைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் பெரும் வெள்ளப்பெருக்க சந்தித்த வெனிஸ் நகரம் அதிலிருந்து மெல்ல மீண்டது. இந்நிலையில் வெனிஸ் நகரை வெள்ளப்பெருக்கு முற்றுகையிட்டுள்ளது. இதனால் அங்குள்ள புனித மார்க் சதுக்கம் உள்ளிட்ட இடங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாட உள்ள நிலையில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு வெனிஸ் மக்களை துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. https://www.polimernews.com/dnews/94073/வெனிஸ்-நகரில்-மீண்டும்பெருக்கெடுத்த-வெள்ளத்தால்மக்கள்-தவிப்பு https://globalnews.ca/news/6329944/venice-italy-flooding-december/
-
- 0 replies
- 437 views
-
-
(லியோ நிரோஷ தர்ஷன்) சீனாவின் 5ஜீ தொலைத்தொடர்பு கட்டுமானங்களினால் பிராந்திய நாடுககளின் உறவுகளுக்கு சுதந்திரத்திற்கும் ஏற்பட கூடிய தாக்கங்கள் மற்றும் சீனாவின் நியாயமற்ற பொருளாதார நடவடிக்கைகளினால் இந்து - பசுபிக் பிராந்தியங்களில் ஏற்பட கூடிய பாதிப்புகள் குறித்து அமெரிக்க - இந்திய உயர் மட்ட பேச்சுக்களின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கை , ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம், மற்றும் இந்து மா சமுத்திரத்தன் பிராந்திய நிலைமைகள் தொடர்பான மதிப்பீடுகளும் இதன் போது பகிர்ந்து கொள்ளப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். வொசிங்டனில் கடந்த 18 ஆம் திகதி புதன்கிழமை அமெரிக்க- இந்திய உயர் மட்ட அதிகாரிகளுக்கு இடையே இரு தரப்பு …
-
- 0 replies
- 315 views
-
-
சோமாலியாவில் பாலைவன வெட்டுகிளிகளின் படையெடுப்பு பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இந்த வெட்டுக்கிளிகளின் இனப்பெருக்கம் முன்பை விட பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையில் அவை பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் பயிர்களை தின்று முற்றிலும் சேதப்படுத்தியுள்ளன. இதனால் தங்கள் குழந்தைகளுக்கு கூட கொடுக்க உணவு எதுவுமின்றி பட்டினியால் தவிப்பதாக அந்நாட்டு மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு வெட்டுக்கிளிகளால் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை, சோமாலியாவை மட்டுமின்றி எத்தியோப்பியா உள்பட ஆப்பிரிக்காவின் மற்ற இடங்களிலும் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக குற…
-
- 0 replies
- 318 views
-
-
உக்ரைனுக்கு வெள்ளை மாளிகை வழங்கும் உதவிகளை நிறுத்தியது ஏன்? வெளியானது அதிர்ச்சி தகவல் உக்ரைனுக்கு வெள்ளை மாளிகை வழங்கும் உதவிகளை நிறுத்தியது ஏன் என, இதுவரை புரியாத புதிராக இருந்துவந்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. புதிதாக வெளியான அமெரிக்க அரசாங்கத்தின் மின்னஞ்சல் ஒன்றின் மூலம் இந்த விவகாரம் தெரியவந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உக்ரைன் ஜனாதிதி வோலோடிமிர் சேலன்ஸ்கி ஆகிய இருவருக்கும் இடையில் இடம்பெற்ற 91 நிமிடங்கள் உரையாடலுக்கு பின்னரே இந்த உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தற்போது உறுதிப்பட்டுள்ளப்பட்டுள்ளது. ஜூலை மாதம் 25ஆம் திகதி, சேலன்ஸ்கி மற்றும் ஜனாதிபதி ட்ரம்ப் இடையேயான 91 நிமிட கலந்துரையாடலுக்கு பிறகு வெள்ளை மா…
-
- 0 replies
- 299 views
-
-
சவுதியின் செயற்பாட்டிற்கு துருக்கி கடும் கண்டனம்! சவுதி அரசாங்கத்தின் செயற்பாடு காரணமாகவே பாகிஸ்தான் இஸ்லாமிக் உச்சி மாநாட்டிலிருந்து வெளியேறியது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. துருக்கி ஜனாதிபதி எர்டோகன் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். மலேசியாவில் நடைபெற்ற இஸ்லாமிக் உச்சி மாநாட்டில் மலேசியப் பிரதமர் பின் முகமத் மற்றும் துருக்கி ஜனாதிபதி எர்டோகனுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் கலந்துகொள்ள இருந்தார். எனினும் இறுதி உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் கலந்துகொள்ளமால் அதனை புறக்கணித்திருந்தது. இந்தநிலையில் சவுதியின் பொருளாதாரத் தடை மிரட்டல் காரணமாகவே பாகிஸ்தான் இஸ்லாமிக் உச்சி மாநாட்டிலிருந்து வெளியேறியதாக துருக்கி ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 438 views
-
-
உலகை மிரட்டும் இராணுவ பலம்: வடகொரியா அடுத்த கட்டத்துக்கு நகர்வு வட கொரியாவினுடைய இராணுவ பலத்தினை அதிகரிக்கும் நோக்குடன் வட கோரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன், அந்நாட்டு இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட கொரியா-அமெரிக்கா இடையே மோதல் நிலை மீண்டும் வலுப்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதனிடையே, அமெரிக்காவின் கருத்துகளையும், அறிவுறுத்தல்களையும் செவிமடுக்காது செயற்பட்டுவரும் வடகொரியாவுடன் சமரசம் செய்ய அமெரிக்கா விருப்பம் தெரிவித்திருந்தது. சிங்கப்பூரில் நடந்த வரலாற்று உச்சி மாநாட்டின் போது இரு தலைவர்களும் செய்த க…
-
- 0 replies
- 475 views
-
-
கியூபாவில் 43 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரதமர் பதவியேற்பு அமெரிக்காவின் அண்டை நாடான கியூபாவில் 43 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். 1976 ஆம் ஆண்டு வரையான பிடல் காஸ்ரோ பிரதமாராக இருந்ததற்குப் பின்னர் பிரதமர் பதவி நீக்கப்பட்டு ஜனாதிபதிக்கே பிரதமருக்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில் மீண்டுப் பிரதமர் பதிவி உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 90 ஆண்டுகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தில் இருந்த கியூபா, பிடல் காஸ்ற்ரோ, சே குவேரா ஆகியோர் தலைமையில் நடந்த மாபெரும் கியூபா புரட்சிக்குப் பின் விடுதலை ஆனது. இதனையடுத்து 1959ஆம் ஆண்டு கியூபாவின் முதல் பிரதமராக பிடல் காஸ்ற்ரோ பதவியேற்றார். 1976ஆம் ஆண்டு கியூபாவின் ஜனாதிபதியானார். 2008ஆம் ஆண்டு உடல்ந…
-
- 0 replies
- 264 views
-
-
அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்! அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் வெளியிட்டுள்ளது. ரஷ்யாவிற்கும், ஜேர்மனிக்கும் இடையிலான எரிவாயுக் குழாய் பொருத்துவதற்கான திட்டத்தை மேற்கொள்ளும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இந்தநிலையில் அமெரிக்காவின் குறித்த தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியமும், ஜேர்மனியும் கண்டனம் வெளியிட்டுள்ளன. இந்தத் தடை மூலம் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாக அவை குற்றம் சுமத்தியுள்ளன. குறித்த தடை குறித்து ரஷ்யாவும் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://athavannews.com/அமெரிக்காவின்-தீர்மானத்/ ######…
-
- 1 reply
- 729 views
-
-
ட்ரம்பிற்குச் சாதமாகிய பதவிநீக்க விசாரணை? சிவதாசன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவியிறக்க நாடகம் முடிவுக்கு வந்திருக்கிறது. அவர் பதவியிறக்கப்படத் தகுதியானவர் என, அவரது எதிர்க்கட்சி பெரும்பான்மையாகவுள்ள கீழ்ச்சபை (House of Representatives) தீர்ப்பளித்திருக்கிறது. வரலாற்றில் மூன்றாவது தடவையாக ஒரு அமெரிக்க ஜனாதிபதி பதவி நீக்கத்துக்காகச் சிபார்சு செய்யப்பட்டிருக்கிறார். இத் தீர்ப்பின் மூலம் அவரைப் பதவியிலிருந்து நீக்க முடியாது. இனி இவ் வழக்கு மேல்சபையில் ( Senate) விசாரிக்கப்படும். மேல்சபையில் பெரும்பான்மையாக இருப்பது ட்ரம்பின் குடியரசுக் கட்சி. அங்கு வழக்கு நடக்கும்போது சட்டத்தை இயற்றுபவர்களும், நீதிபதியும், ஜூரர்களும் செனட் சபை த…
-
- 0 replies
- 600 views
-
-
வாஷிங்டன்: காஷ்மீரில் கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்குமாறு வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரமிளா ஜெயபால் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு, விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பெரும்பாலும் விலக்கிக்கொள்ளப்பட்டு உள்ளன. எனினும் இணையத் தள சேவை இன்னும் வழங்கப்படாததுடன், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களும் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. இத்தகைய கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வலியுறுத்தி, அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் இந்திய-அமெரிக்க எம்.பி. பிரமிளா ஜெயபால் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஜனநாயக கட்சி எம்.பியான பிரமிளா, குடியரசு கட்சியை ச…
-
- 2 replies
- 594 views
-
-
விமானப்படை, கடற்படை வரிசையில் அமெரிக்கா புதிதாக விண்வெளிப் படையை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவில் ராணுவம், மெரைன் கார்ப்ஸ், கடற்படை, விமானப்படை, கடலோரக் காவல்படை என 5 படைப்பிரிவுகள் உள்ளன. 6வது படைப் பிரிவாக, விண்வெளிப்படையை அமெரிக்கா புதிதாக உருவாக்கியுள்ளது. இதற்காக, 738 பில்லியன் டாலர்கள் தொகையை ஒதுக்குவதற்கான சட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். புதிய படைப் பிரிவை உருவாக்கியுள்ளதன் மூலம் மிகப்பெரிய சாதனை எட்டப்பட்டுள்ளதாக அப்போது அவர் குறிப்பிட்டார். விண்வெளியில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் நலன்களை பாதுகாப்பது விண்வெளிப் படையின் முக்கிய நோக்கமாகும். விண்வெளியானது போர்க்களங்களில் ஒன்றாக மாறியிருப்பதாகவும், அதில் அமெரிக்காவின் ஆ…
-
- 4 replies
- 1.1k views
-
-
மேற்கு கரையிலும் காஸாவிலும் இடம்பெறுகின்ற யுத்த குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழ்க்கறிஞர் படு பென்சவுடா இதனை தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள மேற்கு கரை கிழக்கு ஜெரூசலேம் மற்றும் காஸா பள்ளத்தாக்கு ஆகியபகுதிகளில் யுத்த குற்றங்கள் இடம்பெறுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் யுத்த குற்ற விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான போதுமான தகவல்களை திரட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான போதிய காரணங்கள் உள்ளன என நான் த…
-
- 0 replies
- 780 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேற அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். ஜனவரி 31ம் தேதிக்குள் பிரக்ஸிட் ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில், போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிரதிநிதிகள்சபையில் பிரெக்ஸிட் மசோதாவை பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று தாக்கல் செய்தார். அப்போது, எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரிமி கோர்பின், ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கு வேறு வழிமுறைகள் உள்ளதாகவும் எனவே, இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து மசோதா மீது வாக்…
-
- 1 reply
- 447 views
-