உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26686 topics in this forum
-
விடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு அல்ல என சமஷ்டி குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சமஷ்டி உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு சமஷ்டி வழக்கு தொடுநர்களுக்கு கிடைத்த பெரிய அடி என சுவிஸர்லாந்து பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு அல்ல. சமஷ்டி உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளதுடன் இது சம்பந்தமாக குற்றம் சுமத்தப்பட்ட 12 பேர் வழக்கில் இருந்து முற்றாக விடுதலை செய்யப்பட்டுள்ளதையும் உறுதிப்படுத்தியுள்ளது. 1999ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலத்தில் சுவிஸர்லாந்தின் குற்றவியல் தண்டனை சட்டத்தின் 260 வது ஷரத்தை மீறி, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக 13 பேரில் 12 பேருக…
-
- 0 replies
- 505 views
-
-
நமீபியாவின் புதிய ஜனாதிபதியாக 2ஆவது தடவையாகவும் ஜெயிங்காப் தென்மேற்கு ஆபிரிக்க நாடான நமீபியாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஹேக் ஜெயிங்காப் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆளும் நமீபிய தென் மேற்கு ஆபிரிக்கா மக்கள் அமைப்பின் வேட்பாளரும், ஜனாதிபதியுமான 78 வயதான ஹேக் ஜெயிங்காப் 56 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனினும், இதுவரை இல்லாத வகையில் மிகக் குறைந்த வாக்கு விகிதத்திலேயே ஹேக் ஜெயிங்காப் வெற்றிபெற்றார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதல் தடவையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். முதல் தடவை தெரிவின்…
-
- 0 replies
- 421 views
-
-
ஈரானின் அறிவிப்பு: இஸ்ரேல் – அமெரிக்க தலைவர்கள் விசேட பேச்சு ஈரானின் அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். சமீபத்தில், அணு ஆயுதம் தயாரிக்கப்பயன்படும் முக்கிய மூலப்பொருளான யுரேனியம் உற்பத்தியை ஈரான் 10 மடங்காக அதிகரித்தது. அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது எனவும், எதிரிகளின் சதி முறியடிக்கப்படும் எனவும் ஈரான் தெரிவித்திருந்தது. இதனையடுத்தே இவர்களது சந்திப்பு நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. டிரம்ப் ஜெருசலமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து, கோலன் ஹைட்ஸ் பகுத…
-
- 0 replies
- 383 views
-
-
ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்காவின் மசோதாவுக்கு பதிலடி அளிக்கும் வகையில் ஹாங்காங்கில் அமெரிக்க கடற்படை பயணிப்பதற்கு சீனா தடை விதித்துள்ளதுள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சீனா மீதான அமெரிக்காவின் காரணமில்லாத சமீபத்திய நடவடிக்கைக்கு எதிராக ஹாங்காங் கடற்பகுதியில் அமெரிக்க கடற்படைகள் பயணிப்பதற்கு தடை விதிக்க சீன அரசு முடிவு எடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.மேலும் ஹாங்காங்கில் நடந்த போராட்டங்களை கண்காணித்து அறிக்கை அளித்து வரும் அமெரிக்காவின் அரசு சாரா மனித உரிமை அமைப்புகளுக்கும் சீனா பொருளாதார தடை விதிக்கும் என்றும் சீனா தெரிவித்துள்ளது. ஹாங்காங்கில் நடக்கும் போராட்டம் தொடர்பாக எந்த நாடும் தலையிட வேண்டாம் என்று சீனா தொட…
-
- 0 replies
- 313 views
-
-
உலகிலேயே விமானப் பயணம் மேற்கொள்ள ஆபத்தான நாடுகள் பட்டியலில் கொங்கோ முதலிடம்! உலகிலேயே விமானப் பயணம் மேற்கொள்ள ஆபத்தான நாடாக கொங்கோ ஜனநாயகக் குடியரசு பெயரிடப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்பட்ட இரண்டு விமான விபத்துகள் அங்கு விமானப் பாதுகாப்பு குறித்து அதிக கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இறுதியாக கடந்த நவம்பர் மாதம், கொங்கோவின் கோமா நகரத்திலுள்ள வீடுகளில் விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்தனர். இதுதவிர, 2003ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்தனர். விமானங்களின் பாதுகாப்பு குறித்த தகவல்களை நிர்வகித்து வரும் ‘ஏவியேஷன் சேப்டி நெட்ஒர்க்’ எனும் அமைப்பின் தரவுகளின்படி, 1945ஆம் ஆண்டிலிருந்து…
-
- 0 replies
- 376 views
-
-
பர்கினோ பாசோ நாட்டில் கிறிஸ்தவ ஆலயத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் பரிதாபமாக பலியாகினர். ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள அந்நாட்டின் கிழக்குப்பகுதியின் ஹண்டொகுவோரா நகரில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.‘ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். அதன் பின்னர் ஆலயத்தில் இருந்து சிறிது தொலைவில் இருந்த பாதுகாப்பு படைகளையும் தாக்கினர். இதில் 3 அதிகாரிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை’. https://www.polimernews.com/dnews/91113/கிறிஸ்தவ-ஆலயத்தில…
-
- 0 replies
- 537 views
-
-
ஜீ 20 நாடுகளின் தலைமைப் பதவி முதல் தடவையாக சவுதிக்கு ஜீ 20 நாடுகளின் தலைமைப் பதவியை ஜப்பானிடமிருந்து சவூதி அரேபியா நேற்று (01) பொறுப்பேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. அடுத்த வருடம் நவம்பர் 21, 22 ஆம் திகதிகளில் இதற்கான மாநாட்டை சவூதிஅரேபியாவின் தலைநகர் ரியாதில் நடத்தவுள்ளது. இம்மாநாட்டில் வளர்ச்சியடைந்த நாடுகள் பங்கு பற்றவுள்ளன. இந்த மாநாட்டையொட்டிய நூறு விஷேட வைபங்களையும் சவூதிஅரேபியா நடாத்தவுள்ளது. வரலாற்றில் அரபு நாடு ஒன்றுக்கு ஜீ 20 அமைப்பின் தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ளமை இதுவே முதற்தடவைாகும். பழமைபேணும் நாடான சவூதி அரேபியாவில் கடுமையான கட்டுப்பாடுகள் நிலவுவதாகவும், சவூதியின் நடத்தைகள் தொடர்பில் சர்வதேச அளவில் …
-
- 0 replies
- 375 views
-
-
பிரான்ஸ் ஜனாதிபதி குறித்து துருக்கி ஜனாதிபதி கடும் விமர்சனம்! பிரான்ஸ் ஜனாதிபதி குறித்து துருக்கி ஜனாதிபதி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரான், ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகத்தின் செயற்பாடு மற்றும் துருக்கியுடனான சிக்கலான உறவுகளை புரிந்து கொள்வதற்குள் மூளை செயலிழந்தது போல உணர்வதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், இஸ்தான்புல்லில் நிகழ்ச்சி ஒன்றில் கருத்து வெளியிட்டுள்ள எர்டோகன், மூளை செயலிழந்து விட்டதா என மெக்ரான் பரிசோதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அத்துடன், இதே கருத்தை நேட்டோ மாநாட்டிலும் கூற போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/பிரான்ஸ்-ஜனாதிபதி-குறித்…
-
- 0 replies
- 352 views
-
-
மீண்டும் வந்த 'பிரபாகரன்'..! அதிர்ந்து போன ருவிட்டர் நிர்வாகம்..! இலங்கையில் இருந்து ஈழத்தை பிரித்து தனிநாடு அமைப்பதற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக அதன் தலைவர் பிரபாகரன் தலைமையில் போராடி வந்தனர். இறுதியாக 2009 ம் ஆண்டு நடைபெற்ற நான்காம் கட்ட போரில் புலிகள் முற்றிலும் அளிக்கப்பட்டு விட்டதாகவும் அதன் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றும் இலங்கை ராணுவம் அறிவித்தது. எனினும் உலககெங்கும் வாழும் தமிழர்களில் பெரும்பாலானோர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும் நிச்சயம் அவர் திரும்பி வருவார் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 65 வது பிறந்தநாள் கடந்த 26 ம் தேதி தமிழர்களால் உற்சாகம…
-
- 1 reply
- 1.3k views
-
-
பாகிஸ்தானில் திடீரென ஒரு பகுதியில் பரவிய எச்.ஐ.வி: குழந்தைகளுக்கு பெருமளவு பாதிப்பு சுமைலா ஜாஃப்ரிபிபிசி 41 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பாகிஸ்தானில் லர்கானா மாவட்டத்தில் ராட்டோடெரோ பகுதியில் ஊரக சுகாதார மையத்தில் ஏழு வயதான ஒரு ஆண் குழந்தைக்கு டாக்டர் முஸாபர் காங்ரோ மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். சிற…
-
- 0 replies
- 662 views
- 1 follower
-
-
லண்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர். லண்டனில் பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த சம்பவத்தை பயங்கரவாத செயலாக கருதுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆயுதமேந்திய பொலிஸார் பாலத்திற்கு அருகில் நபர் ஒருவரிடமிருந்து பொதுமக்களை மீட்பதையும் பின்னர் மிக அருகிலிருந்து அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதையும் காண்பிக்கும் படங்கள் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின்றன. அருகிலுள்ள புகையிரத நிலையத்தின் பணியாளர்கள் ஐவர் காயமடைந்துள்ளதாகவும் புகையிரத நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் நபர் ஒருவர்…
-
- 26 replies
- 2.5k views
-
-
அணுக் கழிவுகளை நிரந்தரமாக புதைப்பதற்கான இடத்தை தேடும் ஜேர்மனி! ஜேர்மனியில் அனைத்து அணு உலைகளும் மூடப்பட்டு வருகின்றது. இந்தநிலையில், அணுக் கழிவுகளை நிரந்தரமாக புதைப்பதற்கான இடத்தை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 2011ஆம் ஆண்டு ஜப்பானில் புகுஷிமா அணு உலை விபத்தை அடுத்து, அனைத்து அணு உலைகளையும் மூட ஜேர்மனிய அரசாங்கம் தீர்மானித்தது. இந்தநிலையில் எஞ்சியுள்ள 7 அணு உலைகளையும் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் மூட அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளது. கதிர்வீச்சு அபாயம் நிறைந்த அணுக் கழிவுகள் தற்போது 20இற்கும் மேற்பட்ட தற்காலிக இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. சுமார் 2 ஆயிரம் கொள்கலன்கள் அளவிலான அணுக் கழிவுகளை பாதுகாப்பாக நிரந்தர இட…
-
- 0 replies
- 377 views
-
-
அரசியல் எதிரிகளை கொலை செய்த வழக்கில், சூரிநாம் அதிபர் தேசி பட்டர்ஸ்க்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசை விமர்சித்து வந்த பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் என 16 பேரை கடத்தி, அதில் 15 பேரை 1982ஆம் ஆண்டு கொலை செய்த வழக்கில் தேசி பட்டர்ஸ் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதற்கான வழக்கு விசாரணை 2007ஆம் ஆண்டில் தொடங்கி, பல்வேறு தடைகள் நீண்ட இழுபறிக்குப் பிறகு 3 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிபரின் மேற்பார்வையிலேயே இந்த கொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள நீதிமன்றம் அதிபர் தேசி பட்டர்சுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. சூரிநாம் அதிபர் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள…
-
- 0 replies
- 282 views
-
-
ஈராக்கில் தொடர்ந்து நடந்து வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து அந்நாட்டு பிரதமர் அதெல் அப்துல் மஹதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சதாம் உசேன் ஆட்சிக்குப் பின்னர் ஈராக்கில் அரசியல் நிலையற்ற தன்மை உருவானது. இதனையடுத்து அந்நாட்டின் பொருளாதாரம் சீர் குலைந்ததால், வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்தது. மேலும் அதிகரித்த ஊழலால் மக்கள் அதிருப்தியடைந்து பிரதமர் அதெல் அப்துல் மஹதிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் நடந்தன. கடந்த இரு தினங்களுக்கு முன் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 25 பேர் கொல்லப்பட்டனர். கடந்த இரு மாதங்களாக நடந்து வரும் போராட்டங்கள் விளைவாக 400க…
-
- 0 replies
- 428 views
-
-
சீனாவின் கடும் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் ஹாங்காங் ஜனநாயக போராட்டங்களுக்கு ஆதரவான மசோதாவில் கையெழுத்திட்டார். இந்த மசோதா சட்டமானால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹாங்காங்கில் மனித உரிமைகளை மீறுவோர் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் அமரிக்காவில் நுழைய தடை விதிக்கவும் இந்த மசோதா வகை செய்கிறது. சீன அதிபர் சீ ஜின்பிங் மீதுள்ள மதிப்பை கடந்து இந்த மசோதாவில் தாம் கையெழுத்திட்டதாக கூறிய அதிபர் டிரம்ப், சீன தலைவர்களும் ஹாங்காங் ஜனநாயக பிரதிநிதிகளும் தங்கள் கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதார். இதனிடையே பெய்ஜிங்கில் உள்ள அமெ…
-
- 0 replies
- 490 views
-
-
அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னறிவிப்பின்றி ஆப்கானிஸ்தான் சென்றார். அதிபராகப் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக அங்கு சென்ற அவரின் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம் பக்ராம் விமானப்படைத்தளத்தில் தரையிறங்கியது. பின்னர் அங்கு முகாமிட்டுள்ள அமெரிக்க வீரர்கள் மத்தியில் பேசும்போது அமெரிக்காவுடனான நீண்ட காலமாக போர் செய்யும் தாலிபான்கள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்வார்கள் என தாம் நம்புவதாக டிரம்ப் கூறினார். மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்து படிப்படியாக வீரர்கள் குறைக்கப்படுவார்கள் என்று கூறிய அவர், வரும் மாதங்களில் 5 ஆயிரம் வீரர்கள் திரும்ப அழைக்கப்படுவார்கள் எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியைச் சந்தித்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிப…
-
- 0 replies
- 361 views
-
-
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 5 ஆண்டுகள் சிறை மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு 5 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக அந்நாட்டு நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது முன்னாள் ஜனாதிபதி குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 5 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/former-maldives-leader-abdulla-yameen-jailed-for-money-laundering/
-
- 0 replies
- 378 views
-
-
ஜேர்மனிய அருங்காட்சியகத்தில் விலைமதிப்பற்ற பழங்கால நகைகள் கொள்ளை! ஜேர்மனியில் உள்ள அருங்காட்சியகத்தில் விலைமதிப்பற்ற பழங்கால நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜேர்மனியின் தென்மேற்கு பகுதியில் உள்ள சக்சொனி மாகாணத்தின் தலைநகர் ட்ரஸ்டனில் ‘கிரீன் வோல்ற்’ என்ற அருங்காட்சியகம் செயற்பட்டு வருகின்றது. அங்கு ஐரோப்பிய நாடுகளின் பழங்கால பொக்கிஷங்கள், அரிய கலை பொருட்கள் உள்ளிட்டவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) அதிகாலை முகமூடி அணிந்த கொள்ளையர்கள் 2 பேர் அருங்காட்சியகத்தின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் பழங்கால நகைகள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து …
-
- 2 replies
- 618 views
-
-
ஜனாதிபதி ட்ரம்பின் உல்லாச விடுதிக்குள் நுழைந்த சீனப் பெண்ணுக்கு நேர்ந்த கதி! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின், உல்லாச விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த சீனப் பெண்ணுக்கு 8 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஃபுளோரிடாவில் உள்ள Mar-a-Lago உல்லாச விடுதிக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடிக்கடி செல்வது வழக்கம். கடந்த மார்ச் மாதம், 33 வயது மதிக்கத்தக்க ஸாங் யூஜிங் (Zhang Yujing) என்ற சீனப் பெண் உல்லாசத் தலத்திற்குள் நுழைந்தார். பாதுகாப்பு அதிகாரிகளின் பார்வையில் சிக்கிய ஜாங்கிடம் பல கைத்தொலைபேசிகளும், நச்சுநிரல் கொண்ட தம்ப் டிரைவ் எனப்படும் கையட்டக்கச் சேமிப்பகமும் (thumb drive) வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட அந்தப் பெண் உளவாளி என…
-
- 0 replies
- 789 views
-
-
-
- 2 replies
- 1.5k views
- 2 followers
-
-
வோசிங்டனின் தலைநகர காவல்துறையின் கட்டளை பீடத்தின் ராடரில் மர்மபொருள் ஒன்று தென்பட்டதை தொடர்ந்து நேற்று வெள்ளை மாளிகையில் பரபரப்பு தோன்றியதுடன் உடனடியாக பாதுகாப்பு பல மடங்காக அதிகரிக்கப்பட்டது. நசனல்மோலிற்கு தெற்கு பகுதியின் வான்பரப்பில் மர்ம பொருள் ஒன்று காணப்படுவதை ராடரில் அவதானித்த அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்புகளின் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். பாதுகாப்பு தரப்பினர் உடனடியாக அந்த மர்மபொருளை இடைமறிப்பதற்காக விமானங்களையும் அனுப்பினர். ஆரம்பகட்ட மதிப்பீடுகள் அனுமதிக்கப்படாத விமானமொன்று வோசிங்டனின் வான்பரப்பில் நுழைந்துள்ளது என தெரிவித்ததை தொடர்ந்து அதிகாரிகள் உடனடியாக வெள்ளை மாளிகையின் பாதுகாப்பை அதிகரித்தனர். அமெரிக்காவின் பாத…
-
- 0 replies
- 504 views
-
-
சுதந்திர ஸ்கொட்லாந்து மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் : ஸ்ரேர்ஜன் சுதந்திர ஸ்கொட்லாந்து விரைவான காலத்தில் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையக்கூடும் என ஸ்கொட்டிஷ் முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரேர்ஜன் கூறியுள்ளார். 2020 இல் ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் குறித்த புதிய வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என வலியுறுத்திய ஸ்ரேர்ஜன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவதையும் கடுமையாக எதிர்த்துள்ளனர். பிரெக்ஸிற் நிகழ்ந்தால் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் இணைவதற்கான வழியை ஸ்கொட்லாந்து தேடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சியின் ஆதரவுடன் அமைக்கப்படும் தொழிற்கட்சி அரசாங்கம் 2020 இல் இரண்டு வாக்கெடுப்புகளுக்கு வழிவகுக்கும் என…
-
- 0 replies
- 402 views
-
-
ஹொங்கொங் உள்ளூராட்சி தேர்தலில் ஜனநாயக ஆதரவு இயக்கம் வெற்றி பெற்றுள்ளது! ஹொங்கொங்கில் அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் ஜனநாயக ஆதரவு இயக்கம் அதிக இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படும் ஹொங்கொங்கில் ஜனநாயக உரிமை கோரி கடந்த 6 மாதங்களாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த போராட்டத்தில் அரங்கேற்றப்பட்ட வன்முறை சம்பவங்களால் ஹொங்கொங்கில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் போராட்டத்துக்கு மத்தியில் ஹொங்கொங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்ளூராட்சி மன்ற தேர்தல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. 18 மாவட்டங்களில் உள்ள 452 மாவட்ட மன்றங்கள் சார்பாக 1,090 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். …
-
- 0 replies
- 421 views
-
-
இலங்கையில்.. இரு தேசக் கோட்பாட்டை வலியுறுத்தியது கொன்சர்வேற்றிவ் கட்சி கொன்சர்வேற்றிவ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையில் இரு தேசக் கோட்பாடு வலியுறுத்தப்பட்டுள்ளது. பழமைவாதக் கட்சி இன்று வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஒரு சர்வதேசப் பொறிமுறையை உருவாக்குவதற்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளது. மேலும் சைப்பிரஸ் மற்றும் பலஸ்தீனியத்துடன் ஒப்பிட்டு இலங்கையில் இரு தேசக் கோட்பாடு வலியுறுத்தப்பட்டுள்ளது. கொன்சர்வேற்றிவ் கட்சியின் பிரித்தானியத் தமிழர்களுக்கான செய்தித் தொடர்பாளர் இது பற்றிப் பேசுகையில், “இலங்கையைப் பலஸ்தீனத்துடன் ஒப்பிடுவதன் மூலம் கட்சி மேலிடம் இவ்விடயத்தில் தாம் கொண்டுள்ள எண்ணப்பாட்டை வெளிப்படுத்தியுள்…
-
- 4 replies
- 1.6k views
-
-
ஜூலியன் அசாஞ் சிறையில் இறக்கக்கூடும் : மருத்துவர்கள் எச்சரிக்கை விக்கிலீக்ஸ் இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ் மனச்சோர்வு உள்ளிட்ட உடல் மற்றும் உளவியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகுந்த உடனடி சிகிச்சை இல்லாமல் அவர் சிறையில் இறக்கக்கூடும் என 60 மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரித்தானியா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த 60 மருத்துவர்களால் பிரித்தானிய உள்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் அசாஞ் குறித்து கடுமையான கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராஜாங்க ரகசியங்களை வெளியிட்டது உட்பட 18 குற்றச்சாட்டுகளுக்காக அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவதை எதிர்த்து வரும் பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள வழக்க…
-
- 0 replies
- 549 views
-