Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஈரானுக்கு எதிரான போரிலிருந்து விலகிய இத்தாலி! Mar 14, 2026 - 10:48 AM ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி இனி ஆதரவு வழங்காது என அந்த நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார். இத்தாலி பாராமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது, மத்திய கிழக்கிலிருந்து தனது நாட்டுப் படைகளை மீளப்பெறவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். மத்திய கிழக்கிற்கு எதிரான போரில் இத்தாலி ஒருபோதும் பங்காளியாக இருக்காது எனவும், ஈரானுக்கு எதிரான போரில் இத்தாலி பங்கேற்காது எனவும் அவர் அங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். https://adaderanatamil.lk/news/cmmpv6i680004356pxu…

  2. ஈரானில் 1,000 பொதுமக்கள் உயிரிழப்பு - மனித உரிமைகள் குழு தெரிவிப்பு 04 Mar, 2026 | 09:27 AM கடந்த 28 ஆம் திகதி ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து தாக்குதலை ஆரம்பித்தன. இந்த தாக்குதலில் ஈரானில் சிறுவர்கள் உட்பட 1,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழுவின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரையான காலப்பகுதியில் 181 சிறுவர்கள் உட்பட குறைந்தது 1,097 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. அத்துடன், 100 சிறுவர்கள்உட்பட 5,400 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்துள்ளதுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்தக் குழு தனது அறிக்கை முதற்கட்டமானது எனவும், மேலும் நூற்ற…

  3. ஐ.நா பாதுகாப்பு சபையில் ஈரானுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்; வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு எச்சரிக்கை Published By: Vishnu 12 Mar, 2026 | 10:10 PM வளைகுடா நாடுகள் மீது ஈரான் முன்னெடுத்துவரும் இராணுவத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் புதன்கிழமை (11) தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 135 நாடுகளின் இணையனுசரணையுடன் பஹ்ரைனால் கொண்டுவரப்பட்ட இத்தீர்மானம், பாதுகாப்புச்சபையில் அங்கம் வகிக்கும் 13 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்தன. பாதுகாப்புச்சபையில் நிறைவேற்ற…

  4. ரஷ்யாவில் எண்ணெய் கொள்வனவு செய்ய அமெரிக்க அனுமதி Mar 13, 2026 - 06:41 AM ஈரான் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி சந்தையை நிலைப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, தற்போது கடலில் தேங்கியுள்ள ரஷ்ய எண்ணெய் மற்றும் பெற்றோலியப் பொருட்களை கொள்வனவு செய்ய பல நாடுகளுக்கு 30 நாள் உரிமத்தை அமெரிக்கா வழங்கியுள்ளது நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரான் போரைத் தொடர்ந்து அதிகரித்து வரும் எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, அமெரிக்கா தனது மூலோபாய பெற்றோலிய கையிருப்பில் இருந்து 172 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை விடுவிக்கும் என்று அமெரிக்க எரிசக்தி துறை அறிவித்த நிலையில், குறித்த அறிவிப்பு வௌியாகியுள்ளது. மசகு …

  5. இரானுக்குள் அமெரிக்காவுக்கு பதில் இந்த படை களம் இறங்குமா? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் ஓர்லா குயெரின் பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் ஒரு வாரமாக அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானில் உள்ள இலக்குகளைத் தாக்கி, வான்வழியாகப் போரை நடத்தி வருகின்றன. விரைவில் தரைப்படை இறக்கப்படுமா? இருக்கலாம். ஆனால் அவை அமெரிக்கப் படைகளாக இருக்காது. வடக்கு இராக்கில் புலம்பெயர்ந்து வாழும் இரானிய குர்திஷ் எதிர்ப்புக் குழுக்கள், எல்லையைத் தாண்டிச் செல்லும் திட்டங்கள் தங்களிடம் இருப்பதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டங்கள் பல ஆண்டுகாலமாகவே அவர்களிடம் உள்ளன. ஆனால் தங்கள் போராளிகள் ஏற்கெனவே எல்லை தாண்டிவிட்டதாகக் கூறப்படும் தகவல்களை அவர்கள் …

  6. மத்திய கிழக்கில் மோதல் : 1,100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பலி மற்றும் காயம்; பல சிறுவர்களுக்கு 'பேரழிவு' நிலை! - யுனிசெஃப் கவலை 12 Mar, 2026 | 02:38 PM அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தீவிரமடைந்து வரும் மோதல்கள், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள மில்லியன்கணக்கான சிறுவர்களின் வாழ்க்கையில் "பேரழிவு" நிலையை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் எச்சரித்துள்ளது. யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி முதல் இதுவரை 1,100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வன்முறையினால் காயமடைந்துள்ளதோடு, பலர் உயிரிழந்துள்ளனர். இதில் உள்ளடங்குபவை: ஈரான்: 200 சிறுவர்கள் உயிரிழப்பு. லெபனான்: 91 சிறுவர்கள் உயிரிழப்பு. இஸ்ரேல்: 4 சிறுவர்கள் உயிரி…

  7. 'அண்டை நாடுகள் இதை செய்ய வேண்டும்' - இரான் புதிய அதி உயர் தலைவரின் முதல் கருத்து பட மூலாதாரம்,Iranian President's Press Office / Handout /Anadolu via Getty Images மொஜ்தபா காமனெயி 12 மார்ச் 2026, 12:08 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் தற்போது 13-வது நாளில் நுழைந்துள்ள நிலையில், பிராந்தியத்தின் பல பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயியின் அறிக்கை அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்டது, 'கொல்லப்பட்ட இரானியர்களின் ரத்தத்திற்காகப் பழிவாங்க இரான் தயங்காது' என்று மொஜ்தபா காமனெயி கூறுகிறார். போருக்கு…

  8. "நிலப்பரப்பில் கப்பல்கள்" - மத்திய கிழக்கில் ஜிபிஎஸ் சிக்னல்களை இடைமறிக்கும் மறைமுகப்போர் பட மூலாதாரம்,Windward படக்குறிப்பு,ஜிபிஎஸ் ஜாமிங், இரான் கடற்கரைக்கு அருகிலுள்ள கப்பல்கள் நிலப்பரப்பில் இருப்பது போலத் தோன்றச் செய்கிறது கட்டுரை தகவல் கிறிஸ் பரானியுக் தொழில்நுட்ப செய்தியாளர் 12 மார்ச் 2026, 02:06 GMT வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் நூற்றுக்கணக்கான கப்பல்கள் உள்ளன. ஆனால், அவற்றில் பலவும் வரைபடத்தில் தவறான இடத்தில் இருப்பதாகத் தெரிகிறது. விண்ட்வார்டில் மூத்த கடல்சார் புலனாய்வு ஆய்வாளராக இருக்கும் மிஷெல் வைஸ் போக்மேன், இரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் அருகே இருந்த வணிகக் கப்பல்களின் நேரடி இருப்பிடங்களைச் சரிபார்க்கும்போது இதைக் கவனித்தார். ஹோர்முஸ் நீரிணை மற்றும் …

  9. எரிபொருள் விலை உயர்வில் அமெரிக்கா இலாபம் ஈட்ட முடியும் - ட்ரம்ப் Mar 12, 2026 - 08:34 PM ஈரானின் அதி உயர் தலைவரின் உரை ஒளிபரப்பப்பட்ட அதே நேரத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவித்துள்ளார். உலகளாவிய எரிபொருள் விலை உயர்வின் மூலம் அமெரிக்கா இலாபம் ஈட்ட முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தனது ட்ரூத் சமூக தளத்தில் அவர் தெரிவிக்கையில், அமெரிக்கா உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக உள்ளது. எனவே எண்ணெய் விலை உயரும்போது, நாங்கள் நிறைய பணம் சம்பாதிக்கிறோம். ஆனால், ஜனாதிபதி என்ற வகையில் எனக்கு மிக முக்கியமானது, ஈரான் என்ற தீய பேரரசு அணு ஆயுதங்களை வைத்திருப்பதைத் தடுப்பதும், மத்திய கிழக்கு மற்றும் உலகை அழிப்பதைத் தடுப்பது…

  10. போர் நிறுத்தத்திற்கு நிபந்தனைகளை முன்வைத்தார்: ஈரான் ஜனாதிபதி! Published By: Digital Desk 1 12 Mar, 2026 | 11:06 AM தற்போதைய போர் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். அமைதியை நிலைநாட்ட வேண்டுமானால் சர்வதேச சமூகமும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் இந்த விடயங்களில் அவசரமாக கவனம் செலுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி, ஈரானின் சட்டபூர்வமான உரிமைகள், அதாவது ஈரானிய ஆட்சியின் இறையாண்மை மற்றும் உரிமைகள் சர்வதேச மட்டத்தில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். மோதல்களினால் ஏற்பட்ட அழிவுகளுக்காக நியாயமான இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறான ஆக்கிரமிப்புக…

  11. மத்தியகிழக்கின் போர் சூழலால் ரஸ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் அதிகரிப்பு! மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் போரின் தற்போதைய நிலை கு வெளிநாட்டு எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் தனது எண்ணெய் துறைமுக செயல்பாடுகளை முற்றாக நிறுத்தியுள்ளது. இதேவேளை, மத்திய கிழக்கு போரினால் உயர்ந்து வரும் எண்ணெய் விலைகள் ரஷ்யாவிற்கு பெரும் நிதி நன்மையை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார ஆய்வாளர் (Chris Weafer) கிறிஸ் வீஃபர் தெரிவித்துள்ளார். கடந்த வாரத்தில் மட்டும் ரஷ்யாவின் ஏற்றுமதி வருவாய் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளின் த…

    • 3 replies
    • 181 views
  12. தொலைபேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல் காது கேளாதோரால் விமர்சிக்கப்படுவது ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கிரஹாம் பெல் 1847ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் பிறந்தார்; 24 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவுக்கு குடியேறினார்; மேலும், அவருக்கு 30 வயது நிறைவடைவதற்கு உள்ளாகவே, அவரைப் புகழ்பெற்றவராக்கவிருந்த தொலைபேசியை அவர் உருவாக்கியிருந்தார். கட்டுரை தகவல் டாலியா வென்ச்சுரா பிபிசி நியூஸ் முண்டோ 5 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள் பிரிட்டிஷ்-அமெரிக்க விஞ்ஞானி அலெக்சாண்டர் கிரஹாம் பெல் தொலைபேசியை கண்டுபிடித்ததற்காகப் பரவலாக அறியப்படுகிறார். இருப்பினும் உலகின் காது கேளாதோர் சமூகத்தின் பெரும்பகுதியினருக்கு அவரது பெயர் போற்றுதலில் இருந்து முற்றில…

  13. '110 குழந்தைகள் பலி'- இரானில் பள்ளிக்கு அருகில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது யார்? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் மெர்லின் தாமஸ் மற்றும் ஷயான் சர்தாரிசாதே பிபிசி வெரிஃபை 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் வீடியோவை பகுப்பாய்வு செய்த நிபுணர்களின் கூற்றுப்படி, தெற்கு இரானில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளிக்கு அருகிலுள்ள ராணுவத் தளத்தின் மீது அமெரிக்காவின் டோமாஹாக் ஏவுகணை தாக்கியுள்ளது. இதில் சுமார் 110 குழந்தைகள் உட்பட 168 பேர் கொல்லப்பட்டதாக இரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரானின் மெஹ்ர் செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்ட வீடியோ, உண்மையானது என 'பிபிசி வெரிஃபை' உறுதிப்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், மினாப்பில் உள்ள ஷஜாரே தயேபா தொடக்கப் பள்ளிக்கு அட…

  14. எண்ணெய் பீப்பாய் விலை 200 டொலரை தாண்டும் - ஈரான் எச்சரிக்கை Mar 11, 2026 - 07:16 PM ஈரான் தமது தாக்குதல் கொள்கையில் புதிய வியூகத்தை வகுத்துள்ளதாக தெஹ்ரானின் காதம் அல்-அன்பியா இராணுவ தலைமையகத்தின் ஊடகப்பேச்சாளர் இப்ராஹிம் சோல்பகாரி தெரிவித்துள்ளார். அதற்கமைய பரஸ்பர தாக்குதல் கொள்கை முடிவுக்கு வந்துவிட்டது என்றும், இனிமேல் தாக்குதலுக்குத் தாக்குதல் என்ற புதிய கொள்கையைப் ஈரான் பின்பற்றப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளுக்கு ஹோர்முஸ் நீரிணை வழியாக ஒரு லீற்றர் எண்ணெயைக் கூட கொண்டு செல்ல ஈரான் அனுமதிக்காது. அவர்களை நோக்கிச் செல்லும் எந்தவொரு கப்பலும் அல்லது தாங்கியும் ஈரானின் இலக்காக அமையும். எண்ணெய் பீப்பாய் ஒன்றின…

  15. ஈரான் திரும்பும் வீராங்கனை: ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைவு! ஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த ஈரான் மகளிர் கால்பந்து அணியின் வீராங்கனைகளில் ஒருவர், மீண்டும் ஈரான் திரும்ப முடிவு செய்துள்ளதை அடுத்து, அங்கு தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை ஆறாகக் குறைந்துள்ளது. ஆசியக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்காக ஆஸ்திரேலியா வந்திருந்த ஈரான் மகளிர் அணியினர், கடந்த மார்ச் 2-ஆம் திகதி நடைபெற்ற போட்டியின் போது ஈரான் தேசிய கீதத்தைப் பாடாமல் மௌனம் காத்தனர். ஈரானில் போர் தொடங்கியிருந்த சூழலில், அவர்களின் இந்தச் செயல் ஒரு எதிர்ப்பு நடவடிக்கையாகவோ அல்லது போரில் உயிரிழந்தவர்களுக்கான துக்கமாகவோ பார்க்கப்பட்டது. இதனால், ஈரான் திரும்பினால் தங்களுக்கு ஆபத்து நேரி…

  16. 'டைட்டானிக்' காதலர்கள் போல நிற்கும் ட்ரம்ப் - எப்ஸ்டீன்!; வைரலாகும் வொஷிங்டன் சிலை 11 Mar, 2026 | 05:36 PM டைட்டானிக் காதலர்களைப் போல, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பாலியல் குற்றவாளி என அறியப்படும் ஜெப்ரி எப்ஸ்டீன் ஆகிய இருவரும் நிற்கும் நிலையில் வடிக்கப்பட்ட சிலை வொஷிங்டனில் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வொஷிங்டனில் உள்ள நெஷனல் மாலில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. தங்க நிறத்தில் ஸ்ப்ரே பெயின்ட் பூசப்பட்டு, இந்த சிலை பளபளப்பாக மிளிர்கிறது. டொனால்ட் ட்ரம்பை கிண்டல் செய்யும் விதமாக இந்த சிலையை சீக்ரெட் ஹேண்ட்ஷேக் என்கிற கலைக் குழுவினர் வடிவமைத்துள்ளனர். எப்ஸ்டீன் கோப்பு விவகாரத்தின் பின்னர், ட்ரம்ப் மீது உரிய நடவடி…

  17. ஈரான் மீதான தாக்குதலில் 140 அமெரிக்க வீரர்கள் காயம்: பென்டகன் அறிவிப்பு Mar 11, 2026 - 09:19 AM ஈரான் மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் ஆரம்பத்திலிருந்து இதுவரை சுமார் 140 அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் எட்டு பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் பென்டகன் ஊடகப் பேச்சாளர் ஷான் பார்னெல் நேற்று (10) தெரிவித்தார். "Operation Epic Fury ஆரம்பமானது முதல் கடந்த 10 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களில் சுமார் 140 அமெரிக்க இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்" என பார்னெல் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். "காயமடைந்தவர்களில் பெரும்பான்மையானோருக்குச் சிறிய அளவிலான காயங்களே ஏற்பட்டுள்ளன. அவர்களில் 108 பேர் ஏற்கனவே பணிக்குத் திரும்பியுள்…

  18. உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம்: ஐ.நா சபை எச்சரிக்கை Mar 11, 2026 - 10:36 AM ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் உணவுப் பொருட்களின் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்றும், அது "வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை தீவிரப்படுத்தும்" என்றும் ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி அமைப்பான UNCTAD கவலை வெளியிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட புதிய அறிக்கையில் UNCTAD பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது: எரிசக்தி, உரம் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயரக்கூடும். இது குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்களின் வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை மேலும் தீவிரப்படுத்தும். UNCTAD இன் தரவுகளின்படி, உலகளாவிய கச்சா எண்ணெயில் 38 …

  19. இந்தியாவும் சீனாவும் எத்தனை நாட்களுக்குத் தேவையான எண்ணெயை சேமித்து வைத்துள்ளன? பட மூலாதாரம்,Getty Images 10 மார்ச் 2026 புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் இரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போரின் பொருளாதார தாக்கம் மிகவும் தெளிவாகத் தெரிய தொடங்கியுள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்ட தடையும், வளைகுடா எண்ணெய் நிலையங்கள் மீதான தாக்குதல்களும் கச்சா எண்ணெய் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. சனிக்கிழமை இரவு இரானிய தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஒரு பெரிய எண்ணெய் கிடங்கு தாக்கப்பட்டதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. எண்ணெய் விலையில் ஏற்படும் குறுகிய கால உயர்வு என்பது, உலக அமைதிக்கு செலுத்தப்பட வேண்டிய ஒரு சிறிய விலையே என்று அமெரிக்…

  20. அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவங்களுக்கு சவால் தர இரான் பயன்படுத்தும் 'வியூகம்' பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,பிப்ரவரி 28 முதல் மார்ச் 4 வரை வளைகுடா நாடுகள் மீது ஏவப்பட்ட ஏவுகணைகளின் எண்ணிக்கை 550-க்கும் அதிகமாகும். கட்டுரை தகவல் பிபிசி மானிட்டரிங் குழு‎ 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரானிய அதிகாரிகள் நீண்டகால மோதலுக்குத் தயாராக இருப்பதாகத் தொடர்ந்து கூறி வருகின்றனர். இரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை பயன்படுத்தி அமெரிக்க, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்புகளைப் பலவீனப்படுத்துவதாகவும் பிராந்தியத்தில் அவர்களின் நிதி மற்றும் தளவாடச் செலவுகளை அதிகரிப்பதாகவும் தெரிகிறது. இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வழக்கமான ராணுவ மேலாதிக்கத்தை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட …

  21. ஹோமுஸ் நீரிணை மூடல்: சர்வதேச ரீதியில் உணவு நெருக்கடி மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஏற்படும் – ஐநா கடும் எச்சரிக்கை 11 Mar, 2026 | 09:22 AM மத்திய கிழக்கு போரினால் ஹோமுஸ் நீரிணை மூடப்பட்டுள்ளமை, சர்வதேச ரீதியில் உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்தி, மக்களின் வாழ்க்கைச் செலவை பாரியளவில் அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி சபை (UNCTAD) எச்சரிக்கை விடுத்துள்ளது. செவ்வாய்க்கிழமை (10) வெளியிடப்பட்ட புதிய ஆய்வறிக்கையில், இந்தப் பாதிப்பு குறிப்பாக ஆசிய நாடுகளையும் வறிய மக்களையும் மிகக் கடுமையாகத் தாக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி போர் ஆரம்பித்தது முதல், ஹோமுஸ் நீரிணை ஊடாகப் பயணிக்கும் கப்பல்களின் எண்ணிக்கை 97 சதவீத…

  22. ஈரான் போர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது Mar 10, 2026 - 06:31 AM திட்டமிட்ட நேரத்தை விட விரைவாக ஈரான் போர் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். CBS News செய்தி நிறுவனத்திற்கு கருத்து தெரிவிக்கும் போது, போர் பெரும்பாலும் முடிவுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானிடம் கடற்படை, விமானப்படை அல்லது தகவல் தொடர்பு வசதிகள் எதுவும் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். தற்போது அவர்களின் ஏவுகணைகள் சிதறடிக்கப்பட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்ததாக CBS News மேலும் குறிப்பிட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmjwmasy0001356pg3l5w3zk

  23. லெபனானில் ‘வெள்ளை பாஸ்பரஸ்’ பயன்படுத்தி இஸ்ரேல் தாக்குதல்: மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு இஸ்ரேல் தாக்குதலில் சேதமடைந்த பெய்ரூட் நகரில் அமைந்துள்ள விடுதி வேட்டையன் பெய்ரூட்: லெபனான் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகள் மீது இஸ்ரேல் வெள்ளை பாஸ்பரஸை கொண்டு அண்மையில் தாக்குதல் நடத்தியதாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இயங்கி வரும் அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டுள்ள மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு (ஹெச்.ஆர்.டபிள்யூ) வைத்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம். கடந்த வாரம் 3-ம் தேதி அன்று இஸ்ரேல் தரப்பு லெபனான் மீது நடத்திய தாக்குதலில் வெடி மருந்துகளில் வெள்ளை பாஸ்பரஸை பயன்படுத்தி இருந்ததாக ஹெச்.ஆர்.டபிள்யூ தெரிவித்துள…

  24. இரு மாதங்களில் சீன வர்த்தகம் அதிகரிப்பு --- --- --- *அமெரிக்கவுக்கான ஏற்றுமதி சரிவு *ஐரோப்பிய - ஆசிய நாடுகளுக்கான ஏற்றுமதி உயர்வு --- --- --- சீனாவின் வர்த்தகம் 2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ஐந்தில் ஒரு பங்காக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் (Bloomberg) என்ற அமெரிக்க செய்தி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் விபரிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி நிறுவனம் மேற்கொண்ட இந்த ஆய்வை மக்குப்பிஸ்னஸ் (macaubusiness) என்ற சீன அரச செய்தி நிறுவனம், இன்று செவ்வாய்க்கிழமை பிரசுரித்துள்ளது. இந்த ஆய்வின் பிரகாரம், 2026 ஆம் வருடத்தின், முதல் இரண்டு மாதங்களுக்கான அதிகாரபூர்வ புள்ளி விபரங்கள், ஈரான் மீதான போர் ஆரம்பிப்பதற்கு முன் வலுவானதாக இருந்தது. இந்த மதிப்பீட்டின் படி, அமெ…

  25. உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்? பட மூலாதாரம்,US Department of Justice படக்குறிப்பு,ஜெஃப்ரி எப்ஸ்டீன் 4 பிப்ரவரி 2026 ''நான் பெண்களை பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தும் நபர் அல்ல.. குற்றம் செய்த நபர் மட்டுமே. ஒரு கொலைகாரனுக்கும், ஒர் உணவுப்பொருளை திருடுபவனுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் போன்றது இது" என்று 2011-ல் நியூயார்க் போஸ்ட் இதழிடம் ஜெஃப்ரி எப்ஸ்டீன் கூறினார். பாலியல் தேவைகளுக்காக ஆள் கடத்தல் குற்றச்சாட்டுகளில் ஜாமீன் கிடைக்காமல் காத்திருந்த நிலையில், 2019 ஆகஸ்ட் 10 அன்று நியூயார்க் சிறையில் எப்ஸ்டீன் உயிர் இழந்தார். ஒரு சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதற்காக அவர் தண்டிக்கப்பட்டு, பாலியல் குற்றவாளியாக அவர் பதிவு செய்யப்பட்ட பத்து ஆண்டு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.