உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26870 topics in this forum
-
காபூல் அமெரிக்க தூதரகம் அருகே குண்டுவெடிப்பு - 10 பேர் பலி ; 42 பேர் காயம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் படையினர் உட்பட 10 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 42 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. காபூலின் கிழக்குப் பகுதியில் அமெரிக்க தூதரத்துக்கு அருகே காரில் வைக்கப்பட்ட குண்டொன்றே இவ்வாறு வெடித்துள்ளது. சம்வத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டுள்ளது.இதில் சில நாட்களுக்கு தலிபான்களின் தாக்குதல…
-
- 0 replies
- 663 views
-
-
மிகவும் ஆபத்தான புயலாக எதிர்பார்க்கப்பட்ட டோரியன் புயல் பஹாமஸ் தீவுகளைச் சூறையாடியது. 285 கிலோ மீட்டர் வேகத்தில் புயல்காற்று வீசியதால் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கரீபியன் தீவு அருகே மையம் கொண்டிருந்த சக்திவாய்ந்த டொரியன் புயல், பஹாமாஸ் அருகே கரையைக் கடக்கும் என அமெரிக்க தேசிய புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து பஹாமஸ் தீவுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. காற்றின் வேகம் மற்றும் மழை வெள்ளத்தினால் வீடுகள் மற்றும் உடமைகள் அடித்துச் செல்லாமல் இருக்க மக்கள் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தனர். இதனிடையே அதி பயங்கரமான டொரியன் புயலை தான் கண்காணித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டிவிட்டரில் பதிவிட…
-
- 6 replies
- 956 views
-
-
அணுசக்தி ஒப்பந்தத்தை, மீறப் போவதாக.. வல்லரசு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை. கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்தால்தான் வல்லரசு நாடுகளுடன் செய்துகொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துவோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை இணையமைச்சர் அப்பாஸ் அரக்சி நேற்று (புதன்கிழமை) கருத்து வெளியிடும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், ”கடந்த 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள இரண்டு நிபந்தனைகளின் அமுலாக்கத்தை நிறுத்திவைத்துள்ளோம். அந்த ஒப்பந்தத்தை நாங்கள் மீண்டும் முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்றால், கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு …
-
- 1 reply
- 665 views
-
-
பிரான்சில் குளிர்சாதன கொள்கலனில் கடத்தப்பட்ட குடியேற்றவாசிகள் கைது! பிரான்சில் குளிர்சாதன கொள்கலன் கொண்ட வாகனம் ஒன்றில் கடத்தப்பட்ட 13 அகதிகள் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்ஸ்சில், Val-de-Marne மாவட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தச் சம்பவம் இடம்பபெற்றுள்ளது. நேற்று நண்பகல் Rungis நகரில் வைத்து குறித்த வாகனம் பொலிஸாரினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது 13 பேர் முறையாக குடிவரவு ஆவணங்கள் இன்றி அதில் பயணம் செய்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதன்போது, சாரதி கைது செய்யப்பட்டதோடு, வாகனத்தில் மறைந்திருந்த 13 அகதிகளும் மீட்கப்பட்டு குடிவரவுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட சாரதி போலந்து நாட்டு குடியுரி…
-
- 0 replies
- 318 views
-
-
லண்டனில் இந்திய தூதரகத்துக்கு முன்பாக, பாகிஸ்தானியர்கள் வன்முறை போராட்டம்! லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு எதிராக பாகிஸ்தானியர்கள் சிலர் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 ஆவது சட்டப்பிரிவை இந்திய மத்திய அரசு கடந்த மாதம் ரத்து செய்தது. அத்துடன் அந்த மாநிலம் ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இந்தநிலையில், பாகிஸ்தானியர்கள் மற்றும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு திடீரென திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய அரசாங்கத்திற்கு …
-
- 0 replies
- 286 views
-
-
பிரித்தானிய மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இளைஞரின் சடலம் : இந்திய அரசியல் தலைவர் மகனா? பிரித்தானிய மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இளைஞரின் சடலம் தெலுங்கானா மாநில பாரதீய ஜனதா கட்சியின் தலைவரின் மகனுடையதா என்ற ரீதியில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சடலம் லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைகழகத்தில் உயர்கல்வி பயின்று வந்த நிலையில் காணாமல் போன உஜ்வால் ஸ்ரீஹர்ஷா சன்னி (வயது 24) என்ற இளைஞருடையதா என சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது. இவர் தெலுங்கானா மாநிலத்தின் கம்மம் மாவட்ட பா.ஜ.க தலைவராக உள்ள ஹனி உதய் பிரதாப்பின் மகன் என தகவல்கள் வௌியாகியுள்ளன. இதனிடையே, கடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி இந்தியாவில் உள்ள பெற்றோரிடம் ஸ்ரீ ஹர்ஷா தொலைபேசி மூலம் உரையாடியுள்ள…
-
- 0 replies
- 374 views
-
-
ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்கும் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து, அங்கு போராட்டங்கள் வெடித்தன. இந்த போராட்டங்கள் ஹாங்காங்கை உலுக்கியதை தொடர்ந்து, கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும் மசோதாவை முழுமையாக கைவிட வலியுறுத்தியும், கூடுதலான ஜனநாயக உரிமைகள் கோரியும் ஹாங்காங்கில் போராட்டங்கள் தொடர்கின்றன. ஜனநாயக ஆர்வலர்கள் முன்னெடுத்த இந்த போராட்டங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என பல தரப்பினரும் கைகோர்த்ததால் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஜூன் மாதத்தில் இருந்து நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பாக இ…
-
- 1 reply
- 362 views
-
-
மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவதற்காக 3.6 பில்லியன் டொலர் ஒதுக்கீடு மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவதற்காக 3.6 பில்லியன் டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகத்தினால் நேற்றைய தினம் இந்த நிதி ஒதுக்கீ செய்யப்பட்டுள்ளது. மெக்ஸிகோ எல்லையில் 92 கி.மீ. தூரத்துக்கு 18 அடி உயரத்துக்கு தடுப்பு சுவர் அமைக்கு பணியில் அமெரிக்க மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இந்த நடவடிக்கையில் மிகவும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றார். இந்தநிலையில் இதனை திட்டமிட்ட வகையில் நிறைவேற்றுமாறு இராணுவ பொறியாளர் பிரிவுக்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற அனுமதியின்றி எல்ல…
-
- 1 reply
- 296 views
-
-
ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து விலக, சில ஆண்டுகளுக்கு முன், பிரிட்டன் முடிவு செய்தது. அதற்கு பிரெக்சிட் மசோதாவை தாக்கல் செய்து, பார்லி.,யில் ஒப்புதல் பெற ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. பலமுறை ஓட்டெடுப்பு நடந்த போதும், அப்போதைய பிரதமர் தெரசா மே அரசு தோல்வியடைந்ததால், அவர் கடந்த ஜூன் மாதம் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், பிரெக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதற்கான நம்பிக்கை ஓட்டெடுப்பு இன்று (செப்.,3) அந்நாட்டு பார்லி.,யில் நடைபெற்று வந்தநிலையில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி., பிலிப் லீ, எதிர்கட்சி எம்.பி.,க்களின் வரிசையில் அமர்ந்தார். பிலிப் லீ எதிர்கட்சியான சுதந்த…
-
- 3 replies
- 572 views
-
-
உலகில் மிகவும் பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் வெளியானது! உலகில் மிகவும் பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. த எக்கொனோமிஸ்ட் ஊடக நிறுவனத்தின் புலனாய்வுப் பிரிவினால் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 60 நகரங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வின் அடிப்படையிலேயே இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டிஜிட்டல் பாதுகாப்பு, உட்கட்டுமானம், சுகாதாரம் மற்றும் தனியாள் பாதுகாப்பு ஆகிய நான்கு காரணிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய உலகில் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை டோக்கியோவும், இரண்டாவது இடத்தினை சிங்கப்பூரும், மூன்றாவது இடத்தினை ஒசாகாவும், நான்காவது இடத்தினை ஆம்ஸ்ரடா…
-
- 1 reply
- 809 views
-
-
பிலிப்பைன்ஸ்சில் விமான விபத்து: 9 பேர் உயிரிழப்பு! பிலிப்பைன்ஸ்சில் சிறிய ரக மருத்துவ மீட்பு விமானம் ஒன்று உல்லாச விடுதியொன்றின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 9 பேரும் உயிரிழந்தனர். விமானத்தில் ஒரு நோயாளி மற்றும் அவரது மனைவி, ஒரு மருத்துவர், 2 தாதியர்கள் மற்றும் 2 விமானிகள் உள்பட 9 பேர் பயணித்துள்ளனர். இந்த விமானம் லாகுனா மாகாணத்தில் உள்ள பான்சோல் நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டு அறை உடனான தகவல் தொடர்பை இழந்தது. இதையடுத்து, விமானம் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டு, அதனைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. அப்போது குறித்த விமானம் அங்குள்ள உல்லாச விடுதியொன்றின் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளானமை கண்டுபிடிக்கப்பட்ட…
-
- 0 replies
- 324 views
-
-
Published by rajeeban on 2019-09-02 20:08:29 அமெரிக்காவின் கலிபோர்னியாவில் படகொன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 35 அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். கலிபோர்னியாவின் தென்பகுதியில் படகொன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட படகில் 35 பேர் பயணித்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சன்டா பாபர கவுண்டியின் தீயணைப்பு பிரிவினர் படகிலிருந்து தங்களிற்கு அபாய சமிக்ஞை கிடைத்தது என தெரிவித்துள்ளனர். இதேவேளை குறிப்பிட்ட படகில் ஏற்பட்ட தீயை அணைப்பது கடினமாகவுள்ளது சில நிமிடத்திற்கு தீ தணிகின்றது பின்னர் மூள்கின்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படகில் உள்…
-
- 0 replies
- 454 views
-
-
ஒரு படத்தில் வடிவேலுவிடம் “ஆளுக்கு ஐயாயிரம் ரூபாய் எடுத்து வை! இல்லன்னா எங்களை செவ்வாய் கிரகத்துக்குக் கூட்டிட்டுப் போ!” என்று போதைப்பொருளுக்குப் பணம் கேட்டு மிரட்டுவார் மயில்சாமி. வெறும் போதை மயக்கத்தின் மூலம் செவ்வாய்க் கோளுக்குப் போகவே ஐயாயிரம் ரூபாய் ஆகும் என்றால், அது கூட இல்லாமல் முழுக்க முழுக்க இலவசமாகவே உங்களை... இல்லை இல்லை... உங்கள் பெயரைச் செவ்வாய்க்கோளுக்கு அழைத்துப் போக இன்று முன்வந்திருக்கிறது நாசா. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா செவ்வாய்க் கோள் பற்றிப் பல ஆண்டுகளாகவே தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. உலாவிகளை (Rovers) அந்தக் கோளில் தரையிறக்கி நேரிடையாகவே பல சோதனைகளையும் நடத்தி வருகிறது. இவையெல்லாம் நாம் அறிந்தவையே. இதன் அட…
-
- 3 replies
- 959 views
-
-
ஏமனில் சிறைச்சாலை மீது தாக்குதல் 100க்கும் மேற்பட்டோர் பலி September 2, 2019 ஏமன் நாட்டில் ஹவுத்தி போராளிகளின் சிறைச்சாலை மீது சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச குழு தெரிவித்துள்ளது. ஏமனின் தாமர் நகரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காயமடைந்த 40க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இரவு நேரத்தின் போது, ஆறு வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட சத்தம் கேட்டதாக உள்ளூர்மக்கள் தெரிவித்துள்ளனர் அதேவேளை ஏமன் அரசபடைக்கு ஆதரவாக செயல்படும் சவூதி தலைமையிலான கூட்டுப்படை தாங்கள் நடத்திய தாக்க…
-
- 0 replies
- 328 views
-
-
கொலம்பியா | பார்க்(FARC) விடுதலை அமைப்பு மீண்டும் போராட்டத்துக்குத் திரும்பலாம்? 2016 இலிருந்து கொலம்பியா மக்கள் அனுபவித்துவந்த அமைதி மீண்டும் கலையப்போகிறது. துப்பாக்கிச் சத்தங்களும், கூக்குரல்களும், பிணங்கள் சிதறிய வீதிகளும் இனி தினச் சம்பவங்களாகப் போகின்றன. கொலம்பியாவின் ஆட்சியினருக்கும் பார்க் விடுதலை அமைப்பிற்கும் 2016 இல் எழுதப்பட்ட போர் தவிர்ப்பு ஒப்பந்தம் விரைவில் முறிக்கப்படவிருக்கிறது. இரு தரப்புகளுக்குமிடையில் பேச்சுவார்த்தையை நடத்திவைத்த ஐவான் மார்க்கேஸ் உள்ளடங்கிய பல பார்க் (Revolutionary Armed Forces of Columbia – FARC) தலைவர்கள் தாம் திரும்பவும் ஆயுதங்களைத் தூக்கப்போவதாக அறிவித்துள்ளனர். தற்போதய அதிபர் ஐவன் டுகே 2016 செய்யப்பட்ட போர்நிறு…
-
- 0 replies
- 392 views
-
-
அமெரிக்காவில் மீண்டும் பயங்கரம் ; 5 பேர் உயிரிழப்பு, 21 பேர் காயம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தின் மேற்குப்பகுதியிலுள்ள ஒடெஸ்ஸா மற்றும் மிட்லாண்ட் ஆகிய பகுதிகளில் வாகனத்தை இயக்கிக்கொண்டே துப்பாக்கியை ஏந்திய ஒருவர், இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. டெக்சாஸ் நேரப்படி நேற்று முற்பகலில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. சந்தேகத்திற்குரிய வகையில் செயல்பட்ட ஒருவர் நிகழ்விடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், மேலும் பல சந்தேக நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு…
-
- 1 reply
- 563 views
-
-
இத்தாலியில் எரிமலை வெடிப்பு – பரவும் புகை மண்டலம்! இத்தாலியில் எரிமலை வெடித்ததால் எழுந்த புகை பல அடி தூரத்துக்குப் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தாலியின் தெற்குப் பகுதியில் உள்ள சிசிலி தீவில் ஸ்ட்ரோம்போலி என்ற எரிமலை அமைந்துள்ளது. இது கடந்த 2 மாதங்களில் 2ஆவது முறையாக நேற்று முன்தினம் புதன்கிழமை முதல் நெருப்பையும் புகையையும் கக்கி வருகிறது. புவி இயற்பியல் மற்றும் எரிமலையியலுக்கான தேசிய மையம் அதன் நடவடிக்கையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அதற்கமைய இந்த எரிமலை வெடிப்பால் இதுவரையில் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என அந்த மையம் தெரிவித்துள்ளது. எனினும் மலையின் மீதுள்ள மரங்கள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாகி வருவதாகவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. …
-
- 0 replies
- 532 views
-
-
பிரித்தானிய பாராளுமன்றத்தை கலைக்கும் பிரதமரின் தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் பாராளுமன்றத்தை இடைநிறுத்தம் செய்வதற்கு எடுத்த தீர்மானம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உடன்படிக்கையின்றி விலகுவதற்கு எதிர்ப்பைக் கொண்டவர்கள் ஆகியோர் கடும் சினத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அத்துடன் பிரதமரின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும் பிரதமரின் பாராளுமன்றத்தை இடைநிறுத்துவதற்கான திட்டத்திற்கு எதிராக சட்ட ரீதியான…
-
- 1 reply
- 421 views
-
-
ஹொங்கொங்கில் சீன இராணுவம் குவிப்பால் பரபரப்பு ஹொங்கொங்கில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு சீன இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீன இராணுவத்தின் படைப்பிரிவுகள் தற்போது ஹொங்கொங் நகருக்கு அணி வகுத்துள்ளது. இந்த படைப்பிரிவில் முப்படைகளை சேர்ந்த 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான வீரர்களை உள்ளடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் வார இறுதி நாட்களில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ள நிலையில் சீன இராணுவம் குவிக்கப்பட்டுள்ளமை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டங்களை ஒருங்கமைத்து வழிநடத்திய ஜனநாயக சார்பு செயற்பாட்டாளரான ஜோஷூவா வொங் கைது செய்யப்பட்டுள்ள…
-
- 0 replies
- 533 views
-
-
வாஷிங்டன்: பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் ஆட்சியில், வெளிநாடு, பாதுகாப்பு கொள்கைகளில் ராணுவம் ஆதிக்கம் செலுத்துவதாக அமெரிக்காவின் நாடாளுமன்ற ஆராய்ச்சி சேவை ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிஆர்எஸ் எனப்படுவது நாடாளுமன்றத்தின் ஆராய்ச்சி சேவை அமைப்பாகும். இது பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கைகளை வெளியிடும். இந்நிலையில், பாகிஸ்தான் நிலவரம் குறித்த தனது ஆய்வறிக்கையை சிஆர்எஸ் வெளியிட்டுள்ளது. இதில், கூறப்பட்டுள்ளதாவது; பாகிஸ்தான் ராணுவமானது, நாட்டின் வெளிநாடு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டி வருகிறது. தேர்தலின்போது இம்ரானின் கட்சிக்கு ஆதரவாக ராணுவமும், நீதித்துறையும் செயல்பட்டுள்ளன. நாட்டின் ஜனநாயகம் கடும…
-
- 0 replies
- 318 views
-
-
ஆபிரிக்காவில் யானைகள் விற்பதற்கு தடை விதிப்பு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வன உயிரியல் பூங்காக்களுக்கு யானைகள் விற்கப்படுவதை தடுக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது உலகம் முழுவதும் அழிந்துவரும் உயிரினங்களின் விற்பனையை தடுக்க ‘சி.ஐ.டி.இ.எஸ்’ என்ற சர்வதேச அமைப்பு இயங்கி வருகின்றது. இந்த நிலையில் ‘சி.ஐ.டி.இ.எஸ்’ உறுப்பு நாடுகளின் கூட்டம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு உறுப்பு நாடுகளில் 87 நாடுகள் ஆதரவாகவும், 29 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 25 நாடுகள் வாக்களிப்பதிலிருந்து விலகிக்கொண்டது. எனினும் பெரும்பான்மை அடிப்படையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் மூலம் ஆப்பிரிக்க…
-
- 0 replies
- 351 views
-
-
ஹாங் கொங்கில் தொடர்ந்து ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றுக் கொண்டு இருக்கும் வேளையில் இந்த காணொளி இரண்டு பிரதேசங்களுக்கும் உள்ள வேற்றுகையின் அடிப்படை காரணங்கள் மற்றும் வரலாற்று பின்னணியை ஆராய்கின்றது
-
- 0 replies
- 293 views
-
-
அமேசான் காட்டில் தீயை அணைக்க உதவி கரம் நீட்டிய ஜு7 நாடுகள்.. வேண்டாம் என்ற பிரேசில் அரசு!அமேசான் காட்டின் தீயை அணைக்க ரூ 160 கோடி உதவ ஜி7 நாடுகள் தயாராக இருந்த நிலையில் அவை தேவையில்லை என பிரேசில் அரசு உதறி தள்ளிவிட்டது. அமேசான் காடானது பிரேசில், கொலம்பியா, வெனிசுலா, பொலிவியா, கயானா, பிரெஞ்ச் கயானா உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. பிரேசிலில்தான் அதிகளவில் பரவி உள்ளது.இந்த காட்டில் கடந்த சில நாட்களாக தீ பிடித்து எரிந்து வருகிறது. இந்த தீயை அணைக்க பிரேசில் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் அது முடியவில்லை. தீயை அணைக்கும் பணியில் 80000 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரேசில் அரசு அந்நாட்டு ராணுவத்தையும் இந்த பணியில் ஈடுபடுத்தியுள்ளது. விமானம்…
-
- 2 replies
- 555 views
-
-
பிரிட்டன் நாடாளுமன்றத்தை அக்டோபர் 14-ம் தேதி வரை முடக்கி வைக்க இங்கிலாந்து ராணி எலிசெபத் அனுமதி அளித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகும் நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பரிந்துரை செய்துள்ளார். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=521849 Brexit and suspending Parliament: What just happened? Parliament is to be suspended for five weeks ahead of 31 October, the day the UK is due to leave the EU. That's just nine weeks away. Politicians on both sides of the Brexit debate are calling it a coup. https://www.bbc.com/news/uk-49495757
-
- 1 reply
- 564 views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் சில நாட்களுக்கு முன்பாக லண்டனில் நடந்த கூட்டமொன்றில் பங்கேற்றபோது, அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இது தொடர்பாக சில இணையதளங்களில் வரும் செய்திகள் எந்த அளவுக்கு உண்மையானவை? திருமாவளவன் எழுதிய 'அமைப்பாய்த் திரள்வோம்' நூலின் புத்தக விமர்சனக் கூட்டத்திற்கு ‘விம்பம்‘ என்ற அமைப்பு லண்டனில் ஏற்பாடுசெய்திருந்தது. இதற்காக ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று திருமாவளவன் லண்டன் சென்றிருந்தார். இந்த புத்தக விமர்சனக் கூட்டம் ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று லண்டன் ஈஸ்ட் ஹாமில் உள்ள ட்ரினிடி சென்டரில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் துவங்கியபோது உள்ளே நுழைந்த சிலர், திருமாவளவனுக்கு எதிரா…
-
- 0 replies
- 545 views
-