Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கழிவுப் பொருட்கள் அடங்கிய 69 கொள்கலன்கள் கனடாவைச் சென்றடைந்தன! பிலிப்பீன்ஸிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட பண்டக்காவி கப்பல் ஒன்று கனடாவைச் சென்றடைந்துள்ளது. கனடாவிலிருந்து சேகரிக்கப்பட்ட கழிவுப் பொருட்களைக் கொண்ட 69 கொள்கலன்கள் அந்தக் கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்டன. பிலிப்பீன்ஸிற்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்தக் கப்பலை, பிலிப்பீன்ஸ் நிராகரித்ததை அடுத்து, அது கனடாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டது. உலகின் குப்பைக்கூளமாக, ஆசிய நாடுகள் திகழமாட்டாது என்ற எண்ணம் வலுப்பெற்று வருவதை இந்தச் சம்பவம் குறிக்கின்றது. கனடா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களின் இலத்திரனியல் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் அரைகுறை பாவனை கொண்ட பொருட்களை இவ்வாறு கொள்கலன்கள் …

  2. விமானத்தில் ஒளிந்திருந்து பயணம் செய்தவராக சந்தேகப்படும் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. July 2, 2019 விமானத்தில் ஒளிந்திருந்து பயணம் செய்தவராக சந்தேகப்படும் ஒருவரின் சடலம் லண்டனிலுள்ள தோட்டம் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. நைரோபியிலிருந்து வந்த கென்ய நாட்டு பயணிகள் விமானம் ஒன்று ஹீத்துரோ விமான நிலையத்தில் இறங்குவதற்காக சக்கரங்களை கீழே இறக்கியபோது, குறித்த நபர் கீழே விழுந்திருக்கலாம் என கருதப்படுகின்றது. குறித்த நபரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த தோட்டப்பகுதிக்கு அண்மையில் உள்ள மாடியில் நின்ற நபர் ஒருவர் சத்தம் கேட்டு கீழே பார்த்தபோது, அங்கு சடலத்தை கண்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பிரேத பரிசோதனை…

  3. சிட்னி நகரின் முக்கிய இலக்குகளை தாக்கும் ஐஎஸ் திட்டம் முறியடிப்பு அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிட்னியின் மேற்குபகுதியில் இன்று இடம்பெற்ற பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் போது மூவரை கைதுசெய்துள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட மூவரில் இசாக் எல் மத்தாரி என்ற 20 வயது நபர் சிட்னியின் காவல்நிலையங்கள் துணைதூதரங்கள், நீதிமன்றங்கள் தேவாலயங்கள் ஆகியவற்றை இலக்குவைத்து தாக்குதலை மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்தார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவருடன் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் …

  4. துபாயிலுள்ள தனது கணவரை விட்டு சென்ற இளவரசி கயா லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். துபாயை ஆளும் ஷேக் முகமது அல் மேக்டூமின் மனைவியான இளவரசி கயா பின்ட் அல்-ஹூசைன், லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாகவும், தனது கணவரை விட்டு பிரிந்து சென்ற பின்னர் உயிருக்கு பயந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது, குதிரை பந்தய திடலின் உரிமையாளரும், பில்லினியருமான 69 வயதான ஷேக் முகமது, பெயர் குறிப்பிடாத பெண்ணொருவர் "தேச துரோசம் இழைத்து விட்டதாகவும், காட்டிக் கொடுத்துவிட்டதாகவும்" குற்றஞ்சாட்டி கோபத்துடன் இன்ஸ்டாகிராமில் கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார். ஷேக் முகமது பிரிட்டனிலுள்ள அஸ்கோட்டில் எல்சபெத் அரசியோடு அடிக்கடி உரையாடியிருக்கிறார். ஜோர்டானில் பிறந்து, பிரிட்டனில் கல்…

    • 0 replies
    • 926 views
  5. இரான் உலக நாடுகளுடன் செய்துகொண்ட 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை மீறியிருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இரான், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை 500 கிலோவுக்கு மேல் வைத்திருக்கக்கூடாது எனும் விதியை தற்போது மீறியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மே மாதம், செறிவூட்டப்பட்ட யுரேனிய உற்பத்தியை மும்மடங்கு அதிகரித்துள்ளது. இச்செறிவூட்டப்பட்ட யூரேனியம் தான் அணு உலைகளுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் அணு ஆயுத தயாரிப்பிலும் பயன்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்பந்தத்தை கைவிட்டு மீண்டும் பொருளாதார தடைகளை விதித்துள்ள சூழலில் அதற்கு பதிலடியாக இரான் இந்நடவடிக்கையில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவ…

  6. வர்த்தகத்திற்காக திமிங்கிலங்களை இனி வேட்டையாடலாம் – ஜப்பானுக்கு புதிய அனுமதி! ஜப்பானிய மீனவர்கள் எதிர்வரும் காலங்களில் திமிங்கிலங்களை வர்த்தகத்திற்காக வேட்டையாடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக விதிக்கப்பட்டிருந்த தடை இன்று (திங்கட்கிழமை) நீக்கப்பட்டுள்ளது. உலகத் திமிங்கில பாதுகாப்பு ஆணையத்திலிருந்து ஜப்பான் விலகியதைத் தொடர்ந்து, புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி மூன்று தசாப்தங்களின் பின்னர் 5 ஜப்பானிய திமிங்கில வேட்டை கப்பல்கள் முதல் தடவையாக வர்த்தக நோக்கில் பயணத்தை ஆரம்பித்துள்ளன. திமிங்கில வேட்டைக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதி சுற்றுப் புறச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது…

  7. இரண்டு மரணம்... ஒரு புகைப்படம் கடந்த வாரம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எல் சால்வடார் நாட்டை சேர்ந்த ஆஸ்கர் அல்பெர்டோ அவரின் மகளும் ஆற்றங்கரையில் இறந்து கரைஒதுங்கிய புகைப்படம் அது. இந்தப் புகைப்படத்தை எடுத்தது ஜூலியா லி டக் என்ற பத்திரிகையாளர். அமெரிக்காவில் குடியேற உரிமைகோர ஆஸ்கர் அல்பெர்டோ கோரியுள்ளார். அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. எல் சால்வடாரில் இருந்து மெக்ஸிகோவுக்கு வந்தவர் சர்வதேச எல்லையில் காத்திருந்தார். அனுமதி மறுக்கப்பட்டதால் அங்கு பாயும் கிராண்ட் ஆற்றைத் தன் மனைவி மற்றும் மகளுடன் கடந்துவிடலாம் என முடிவு செய்துள்ளார். ஆற்றில் சீறிப்பாய்ந்த தண்ணீர் இவரது முயற்சிக்குத் தடையாக இருந்தது. ஆற்று நீரில் ஆஸ்கர் அல்பெர்டோ சிக்கியதைக் கண்டதும் அவரின் மனைவி …

    • 0 replies
    • 802 views
  8. யேமனில் கடந்த ஐந்தரை ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் 7,500-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழந்ததாக ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: யேமன் உள்நாட்டுப் போரில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதியிலிருந்துஇ 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி வரை சிறுவர்களுக்கு எதிராக 11,779 குற்றச் செயல்கள் நடைபெற்றுள்ளன. இந்தச் செயல்களில், 7,500-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழந்தனர். இதுதவிர, சிறுவர்களை போரில் ஈடுபடுத்துவது, எதிர்க் குழுவினருடன் தொடர்புடைய சிறுவர்களைக் கடத்திச் செல்வது போன்ற குற்றங்களும் நடைபெற்றுள்ளன. 2014-ஆம் ஆண்டு…

    • 0 replies
    • 464 views
  9. பிரிட்டனின் நிர்வாகத்திலிருந்து ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டதன் 22ஆவது ஆண்டு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், ஹாங்காங் அரசின் சமீபத்திய செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு போராட்டம் நடத்தி வரும் மக்கள் இன்று அதன் நாடாளுமன்ற அவையின் வளாகத்தை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபரை தைவான், சீனாவிடம் ஒப்படைக்கும் திட்டம் தொடர்பான மசோதாவை அரசு கைவிட வேண்டுமென்று வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் முதல் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தின் நீட்சியில் இது சமீபத்திய சம்பவமாக அமைந்துள்ளது ஹாங்காங் நாடாளுமன்ற அவை அமைந்துள்ள கட்டடத்தின் முன்புற கண்ணாடிகளை பத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் ஆயுதங்கள் மற்றும் பொருட்களை கொண்டு உடைக்க அ…

    • 0 replies
    • 482 views
  10. 2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தல்களுக்கான பிரச்சார நடவடிக்கைகளை அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆரம்பித்துள்ளார். அந்தவகையில் அவர் இன்றைய தினம் ப்ளோரிடா மாநிலத்தில் மக்கள் சந்திப்பொன்றை நடத்தினார். இதன்போது, மக்கள் உரையாற்றிய அவர், எதிர்வரும் நான்கு வருடங்களுக்காக தம்மை மீண்டும் தெரிவு செய்யுமாறு கோரியுள்ளார். எதிர்கட்சிகள் நாட்டை குழப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார். வீழ்ச்சி போக்கை சந்தித்திருந்த நாடு தமது ஆட்சிகாலத்தில் ஸ்திரதன்மையை அடைந்துள்ளதாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/218684/தேர்தல்களுக்கான-பிரச்சார-நடவடிக்க…

    • 3 replies
    • 614 views
  11. ஜெர்மனி, போலாந்து, செக் குடியரசு ஆகிய நாடுகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவு நேற்று புதன்கிழமை வெப்பம் பதிவாகி உள்ளதுடன் எதிர்வரும் நாட்களில் இன்னும் வெப்பம் உயரலாமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்த நாடுகளைத் தவிர பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று வியாழக்கிழமை 40 டிகிரிக்கும் மேல் வெப்பம் இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது. வட ஆபிரிக்காவில் வீசிய வெப்பமான காற்றே ஐரோப்பியாவில் வீசிய அனல் காற்றுக்கு காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை ஒரே ஒரு சம்பவத்தை வைத்து புவி வெப்பமயமாதல்தான் காரணமென கூற முடியாது என்ற போதிலும் தொடர்ச்சியாக வெப்பம் அதிகரிப்பது, அனல்காற்று வீசுவதற்கெல்லாம் பருவநிலை மாற்றம்தான் காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 19ஆம் நூற்றாண்டின்…

  12. அமெரிக்க மற்றும் வடகொரிய தலைவர்களுக்கு இடையிலான 3 ஆவது சந்திப்பு தற்சமயம் இடம்பெறுகின்றது. வடகொரியத் தலைவர் கிம் ஜோங்-யுன் உடனான சந்திப்பிற்காக வட மற்றும் தென் கொரிய எல்லையின் இராணுவமயமற்ற பிராந்தியத்திற்கு அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜப்பானில் கடந்த 2 தினங்கள் இடம்பெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற டொனால்ட் ட்ரம்ப், அங்கிருந்து தென்கொரிய செல்லும் வழியில், வடகொரிய தலைவரை சந்திப்பதாக அறிவித்திருந்தார். இதற்கமைய, இருவருக்கும் இடையிலான சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமானது. இதன்போது முக்கியத்துவமிக்க பல விடயங்கள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடுகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. hirunews

  13. படத்தின் காப்புரிமைAFP சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் சாலைகளில் நடத்திய போராட்டத்தில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சூடான் சுகாதார அமைச்சகத்தை மேற்கோள்காட்டி அந்நாட்டின் அரசு செய்தி முகமை வெளியிட்ட செய்தியின்படி போராட்டத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 181 பேர் காயமடைந்துள்ளனர். போராட்டக்காரர்களில் குறைந்தது 5 பேர் இறந்துள்ளதாக சூடான் அரசுக்கு எதிர்தரப்பினர் சார்பான மருத்துவர் குழு தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிபர் ஒமர் அல் பஷீர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட நிகழ்வுக்கு பிறகு சூடான் கொந்தளிப்பில் இருந்து வருகிறது. சூடானை 30 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஒமர் அ…

    • 0 replies
    • 318 views
  14. கிழக்கு லண்டனில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு! கிழக்கு லண்டனில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நியூஹாமின் ஈஸ்ட் ஹாமிலுள்ள ரொன் லெய்டன் வே மற்றும் வேக்ஃபீல்ட் வீதி பகுதியில் நேற்று(சனிக்கிழமை) இந்த கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, அண்மைக்காலமாக பிரித்தானியாவில் இவ்வாறான கத்திக்குத்து தாக்குதல்கள் அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கிழக்கு-லண்டனில்-கத்திக-2/

  15. வட மற்றும் தென் கொரியாவின் எல்லையில் இருக்கும் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வடகொரிய அதிபர் கிம்மை சந்தித்துள்ளார். ராணுவம் விலக்கப்பட்ட இந்த பகுதியில் நடைபெறும் சந்திப்புக்கு, ட்விட்டரில் திடீரென கிம்மை சந்திக்க டிரம்ப் அழைப்பு விடுத்தமையே காரணம். "அமைதிக்காக அவர்கள் இருவரும் கைக்குலுக்குவர்," என தென் கொரிய அதிபர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வடகொரியா எந்த ஒரு கருத்தும் முன்னதாக தெரிவிக்கவில்லை. வடகொரியா அணு ஆயுத பயன்பாட்டை கைவிடுத்தல் குறித்தான நின்று போன பேச்சுவார்த்தை இந்த சந்திப்பின் மூலமாக மீண்டும் தொடரும் என நம்பப்படுகிறது. ஒரே வருடத்தில் டிரம்பும் கிம்மும் மூன்றாவது முறையாக சந்தித்துக் கொள்கின்றனர். ட்விட…

    • 0 replies
    • 446 views
  16. ஜேர்மனிய குடியுரிமை சட்டத்தில் மாற்றம்! ஜேர்மனிய குடியுரிமை சட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஜேர்மனிய நாடாளுமன்றத்தில் குடியுரிமைச் சட்டத்தில் மூன்று சட்ட திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத அமைப்புகளில் சேரும் இரட்டைக் குடியுரிமை கொண்டோரின் குடியுரிமை பறிக்கப்படும். எதிர்வரும் நாட்களில் வெளிநாடுகளில் உள்ள தீவிரவாத அமைப்புகளில் சேரும் இரட்டைக் குடியுரிமை கொண்டோர் தங்கள் ஜேர்மன் குடியுரிமையை இழக்க நேரிடலாம். இந்த விதி இரட்டைக் குடியுரிமை கொண்ட வயது வந்தோருக்கு மட்டுமே, இதனால் சிறுவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள். பலதார மணம் புரிவோருக்கு ஜேர்மன் குடியுரிமை வழங்கப்ப…

  17. டுபாய் ஆட்சியாளரின் 6-வது மனைவி பிரித்தானியாவில் மாயம்? டுபாய் ஆட்சியாளரின் 6-வது மனைவி பிரித்தானியாவில் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டுபாய் ஆட்சியாளரின் 6-வது மனைவியும் ஜோர்தான் அரசரின் மகளுமான இளவரசி ஹயாவே இவ்வாறு மாயமாகியுள்ளதாக கூறப்படுகின்றது. டுபாய் ஆட்சியாளரும் பெரும் செல்வந்தருமான ஷேக் முகமது பின் ரஷீத் மக்தூம் என்பவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இளவரசி ஹயா விவாகரத்து கோரியதாக கூறப்படுகிறது. விவாகரத்து கோரிய நிலையில் அவர் ஜேர்மனியில் தஞ்சம் கோரியதாகவும், தனது பிள்ளைகள் இருவருடன் ஜேர்மனிக்கு தப்பியதாகவும், ஜேர்மன் தூதரக அதிகாரி ஒருவரே இதற்கு உதவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து இளவரசி ஹயாவின் கணவரும் செல்வாக்…

  18. அமேரிக்காவில் 2020 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் டொனல்ட் டிரம்பை எதிர்த்து யார் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுவர் என்பதை தீர்மானிக்கும் உட் கட்சிப் போட்டியில் இந்திய தமிழ்த் தாய்க்கும், ஜமைக்கா வம்சாவளி தந்தைக்கும் மகளாக பிறந்த கமலா (ஆங்கிலத்தில் கமாலா என உச்சரிப்பர்) ஹாரிஸ் போட்டியிடுகிறார். அண்மையில் நடந்த போட்டியாளர்களுக்கு இடையான இரெண்டாம் தொலைகாட்சி விவாததில் இவர் சிறப்பாக வாதாடினார் என்கிறனர் அரசியல் நோக்கர்கள். https://www.theguardian.com/commentisfree/2019/jun/27/kamala-harris-second-democratic-debate

  19. மத்திய கிழக்கிற்கு அதிநவீன போர்விமானங்களை அனுப்பியது அமெரிக்கா ஈரானுடனான பதற்ற நிலை அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்கா தனது அதிநவீன எவ்22 ஸ்டெல்த் போர் விமானங்களை கட்டாரிலுள்ள தனது தளத்திற்கு அனுப்பியுள்ளது. அமெரிக்க விமானப்படையின் மத்திய கட்டளைப்பணியகம் இதனை அறிவித்துள்ளது. கட்டாரில் உள்ள உடெய்ட் விமானப்படை தளத்திற்கு போர் விமானங்கள் சென்றுள்ளன என அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது. கட்டாரிற்கு அனுப்பபட்டுள்ள விமானங்களின் எண்ணிக்கையை அமெரிக்க விமானப்படை வெளியிடாத அதேவேளை விமானப்படையினால் வெளியிடப்பட்டுள்ள படத்தில் ஐந்து விமானங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்க படையினரையும் அமெரிக்காவின் நலன்களையும் பாதுகாப்பதற்காகவே முதல் தடவை…

  20. கொங்கோ சுரங்க விபத்தில் 43 பேர் பலி கொங்கோவிலுள்ள தாமிரச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மத்திய ஆப்பிரிக்க - கொங்கோவில் ஜாம்பியாவின் தெற்கு எல்லைப்பகுதியின் அருகாமையில் தனியாருக்கு சொந்தமான மிகப்பெரிய தாமிரம் மற்றும் கோபால்ட் கனிமம் வெட்டி எடுக்கும் சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த சுரங்கத்திலிருந்து கனிமங்களை வெட்டி எடுக்கும் பணியில் நிரந்தர அடிப்படையிலும் ஒப்பந்த அட்டிப்படையிலும் பல நூற்றுக்கணகான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று வழக்கபோல் இந்த சுரங்கத்தில் பணிகள் நடைபெற்றபோது எதிர்பாராத விதமாக சுரங்கத்துக்குள் மண்சரிவு ஏற்பட்டதில் பல தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். …

  21. ஈரான் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க தேவையில்லை - ட்ரம்ப் ஈரான் பிரச்சினைக்கு தீர்வுகான காலக்கெடு எதுவும் இல்லை. நிறைய அவகாசம் இருக்கிறது. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க தேவையில்லை என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வல்லரசு நாடுகளுடன் ஈரான் ஏற்படுத்திய அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதால் இருநாடுகளுக்கும் இடையில் மோதல் உருவானது. இந்த மோதல் நாளுக்கு நாள் முற்றி விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இரு நாடுகளும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் ஜப்பானில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், மாநாட்டுக்கு மத்தியில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவரிடம் ஈரான் பிரச்சினை குறித்த…

  22. படத்தின் காப்புரிமை BRENDAN SMIALOWSKI அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் பொருட்கள் சிலவற்றுக்கு இந்தியா விதித்துள்ள புதிய வரிகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ள அதிபர் டிரம்ப், இந்தியா அதனை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வந்த வர்த்தக முன்னுரிமையை திரும்பப் பெறுவதாக அமெரிக்கா அறிவித்ததையடுத்து, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜூன் மாதத் தொடக்கத்தில் 28 அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா புதிய வரிகளை விதித்தது. இன்று ஜப்பானின் ஒசாகாவில் ஜி20 மாநாடு தொடங்க உள்ள நிலையில்…

  23. கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளான விமானம் - இரு விமானிகள் பலி கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளான விமானம் - இரு விமானிகள் பலி ரஷ்யாவில் விமானம் அவசரமாக தரையிறங்கியபோது கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் விமானிகள் இருவரும் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தவல் வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் பிரியாத்தியா பிராந்தியத்திலுள்ள நில்நியான்கார்ஸ்க் நகர விமான நிலையத்தில் இருந்து பிராந்திய தலைநகர் யூலன்-ஊடேவுக்கு நேற்று அதிகாலை பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் 43 பயணிகளும், 2 விமானிகளும் இருந்தனர். விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் திடீரென என்ஜின் செயலிழந்தது. அதனை அறிந்த விமானிகள் உடனடியாக விமானத்தை நில்நியான்கார்ஸ்க் வி…

  24. குழந்தைகளை பாலியல் ரீதியாக சுரண்டி, அதனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றி விற்கும் சம்பவங்கள் பிலிப்பைன்ஸில் நடந்துள்ளது. அந்நாட்டில் மூன்றில் இரண்டு குழந்தைகள் இவ்வாறாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது பெரும் வணிகமாகவே அந்நாட்டில் நடந்துள்ளது. மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களிடம் இந்த காணொளிகளை விற்றுள்ளனர். பிழைப்பதற்கு பணம் வேண்டும். அதற்காகதான் இப்படி செய்கிறோம் என்கிறார்கள் அம்மக்கள். ஆறு மாத குழந்தைக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.