உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
இஸ்ரேல் எல்லையில் பாலஸ்தீனியர்களின் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி Published by Dharshini.S on 2019-03-31 14:58:27 கடந்த வருடம் ஜெருசலேம் நகருக்கு, அமெரிக்கா தனது இஸ்ரேல் தூதரகத்தினை இடம் மாற்றியது. இதற்கு பாலஸ்தீனியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக வாரந்தோறும் பாலஸ்தீனியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதில் கடந்த மே 14ஆம் திகதி 60 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதன்பின் எகிப்து தலைமையிலான பேச்சுவார்த்தையினை தொடர்ந்து பதற்றம் குறைக்கப்பட்டு, போராட்டக்காரர்கள் பலியாவது தடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தின் முதலாம் ஆண்டுதினத்தினை முன்னிட்டு பாலஸ்தீனியர்கள் ஆயிரக்கணக்கில் இன்று இஸ்ரேல் மற்றும் காசா…
-
- 0 replies
- 401 views
- 1 follower
-
-
மெக்சிகோ எல்லையை மூடுவேன் – டிரம்ப் மிரட்டல் Leftin March 31, 2019 மெக்சிகோ எல்லையை மூடுவேன் – டிரம்ப் மிரட்டல்2019-03-31T14:46:14+00:00உலகம் அண்டை நாடான மெக்சிகோவில் இருந்து சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் ஏராளமானோர் புகுந்து விடுகின்றனர். இதை நிரந்தரமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் மிகப்பெரிய எல்லைச்சுவர் கட்டுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டுள்ளார். ஆனாலும் மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் மக்கள் நுழைவது தொடர்கிறது. இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி கடந்த 28-ந் தேதி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அந்தப் பதிவில் அவர், “நமது நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைகிறவர்களை தடுத்து நிறுத்துவதற்கு மெக்சிக…
-
- 1 reply
- 683 views
- 1 follower
-
-
உக்ரைனில் ஜனாதிபதி தேர்தலுக்கான முதல்கட்ட வாக்கெடுப்பு இன்று! உக்ரைனில் ஜனாதிபதி தேர்தலுக்கான முதல்கட்ட வாக்கெடுப்பு இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது. 39 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய வாக்கெடுப்பில் வேட்பாளர் ஒருவர் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுக்கொள்ள தவறும் பட்சத்தில், இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடைபெறும் என கூறப்படுகின்றது. இந்த இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இம்முறை தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களில் ஒருவரான உக்ரைனின் முன்னாள் பிரதமர் Yulia Tymoshenko தனது தேர்தல் பிரச்சாரங்…
-
- 0 replies
- 330 views
-
-
டைனோசர்கள் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்ததற்கான ஆதாரங்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைSPL குறுங்கோள் ஒன்று 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு , பூமியில் விழுந்தபோது டையனோசர்கள் ஒட்டுமொத்தமாக அழிந்ததற்கான புதை படிமங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவின் வடக்கு டக்கோட்டா மாகாணத்தி…
-
- 0 replies
- 446 views
- 1 follower
-
-
உலகிலேயே மிகநீளமான உப்பு குகை இஸ்ரேலில் கண்டுபிடிப்பு March 29, 2019 இஸ்ரேலில் உலகிலேயே மிகநீளமான உப்பு குகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு மால்கம் என பெயரிடப்பட்டுள்ளது. சாக்கடல் எனப்படும் டெட் சீயை ஒட்டி தென் மேற்கு மூலையில் இது அமைந்துள்ள இந்த குகை சோடாம் என அழைக்கப்படும் மலையை ஒட்டி செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இது சுமார் 10 கி.மீற்றர் நீளமான இந்த குகைக்குள் உப்பு படிகங்கள் அதன் கூரைப்பகுதியான மேற்பரப்பில் தொங்குவதுடன் குகையின் சுவர்களில் படிந்து காணப்படுவதாகவும் அதில் இருந்து உப்புநீர் சொட்டு சொட்டாக கசிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஹீப்ரோ பல்கலைக்கழகத்தின் குகை ஆராய்ச்சி மைய நிறுவனரும், இயக்குனருமான அமோஸ் புரூம்கிம் தலைமையிலான …
-
- 0 replies
- 751 views
-
-
வெனிசுவேலா நெருக்கடி: அரச சேவையில் ஈடுபட கய்டோவிற்கு தடை அரசாங்க அல்லது பொது சேவைகளில் ஈடுபடுவதற்கு வெனிசுவேலா எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் கய்டோவிற்கு 15 ஆண்டுகால தடை விதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரச நிதி கட்டுப்பாட்டாளரும், ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவின் நெருங்கிய நண்பருமான எல்விஸ் அமரோசோ நேற்று (வியாழக்கிழமை) இதனை அறிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவரின் தனிப்பட்ட நிதி அறிக்கைகளில் முரண்பாடுகள் காணப்படுவதாக தெரிவித்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தேசிய சட்டமன்றத் தலைவராக விளங்கும் கய்டோ, தனது பதவிக்கால நிறைவில் மீண்டும் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தால் இத்தடை அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்து தீர்மானிக்க…
-
- 0 replies
- 472 views
-
-
பிரெக்ஸிற் கால நீடிப்பு சாத்தியமா?- நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தீர்மானம் பிரெக்ஸிற் உடன்பாட்டை எட்டும் செயற்பாட்டிற்கு வாக்களிக்குமாறு பிரதமர் தெரேசா மே அரசாங்கம் சட்டமன்ற உறுப்பினர்களை கோரவுள்ளது. இந்நிலையில், இது தொடர்பான விவாதமும் வாக்கெடுப்பும் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. பிரெக்ஸிற் உடன்பாட்டிற்கு ஒப்புக்கொள்ளப்படும் பட்சத்திலேயே பிரெக்ஸிற் தினத்தை மே 22ஆம் திகதிக்கு நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் உடன்படும் என்ற வகையிலேயே இந்நகர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மே-யின் பிரெக்ஸிற் உடன்பாடு ஏற்கனவே இருமுறை நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மீண்டும் வாக்கெடுப்பு நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பிரெக்ஸிற் ஒப்பந்தம் இவ்வ…
-
- 0 replies
- 608 views
-
-
போயிங்737 மக்ஸ் விமானங்களில் புதிய மாற்றம் போயிங் நிறுவனம், தமது 737 Max ரக விமானங்களின் கட்டுப்பாட்டு அமைப்புகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. கடந்த ஆறு மாதத்தில், 737Max ரக விமானங்கள் இரண்டு விபத்துக்குள்ளானதை அடுத்து, இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, விமானி, கட்டமைப்பின் செயற்பாட்டை முழுவதுமாக கட்டுப்படுத்தும் வகையில் மென்பொருட்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கட்டமைப்புகளில் ஏற்படும் கோளாறுகள் குறித்து எச்சரிக்க, புதிய சமிக்ஞை அமைப்பு உருவாக்கப்பட்டள்ளன. விபத்துக்குள்ளான எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் மற்றும் இந்தோனேசிய லயன் எயார் விமானங்களில், குறித்த எச்சரிக்கை சமிக்ஞை பொருத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக போயிங் ந…
-
- 2 replies
- 1.5k views
- 1 follower
-
-
சீனாவுக்கு எதிரான முன்னெடுப்பு: மசூத் அசார் மீது தடை விதிக்கும் தீர்மானம்- ஐ. நா., பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்பிய அமெரிக்கா Published : 28 Mar 2019 14:59 IST Updated : 28 Mar 2019 14:59 IST ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் மீது தடைவிதிக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது. மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா, இங்கிலாந்துடன் சேர்ந்து பிரான்ஸ் நாடும் தீர்மானம் கொண்டுவந்தது. ஆனால், இதுகுறித்து பரிசீலிக்க கூடுதல் அவகாசம் கோரி சீனா…
-
- 0 replies
- 427 views
- 1 follower
-
-
வெள்ளை தேசியவாதம், பிரிவினைவாதத்தை கொண்டாடும் பதிவுகளை நீக்க முடிவு… March 28, 2019 வெள்ளை தேசியவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை கொண்டாடும், ஆதரிக்கும் மற்றும் ஊக்குவிக்கும் பதிவுகளை முகப்புத்தகம் மற்றும் இன்ஸ்ரகிராம் ஆகிய இரண்டும் அடுத்தவாரம் முதல் தடை செய்யவுள்ளதாக முகப்புத்தக நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் பயங்கரவாத குழுக்கள் பகிரும் தகவல்களை அடையாளம் கண்டு தடை செய்யும் திறனை மேம்படுத்தவுள்ளதாகவும அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோன்று புண்படுத்தும் சொற்களை முகப்புத்தகத்தில் தேடினால் வலதுசாரி தீவிரவாதத்திற்கு எதிராக பணி புரியும் தொண்டு நிறுவனங்களின் பக்கங்களுக்கு செல்லும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது http://…
-
- 0 replies
- 420 views
-
-
ஜனாதிபதி ட்ரம்பின் நீண்டகால கோரிக்கை நிறைவேறியது – எல்லை சுவர் அமைக்க நிதி. அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் புதிதாக சுவர் அமைப்பதற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வழங்குவதற்கு பென்டகன் ஒப்புதலளித்துள்ளது. எல்லை சுவர் அமைப்பது தொடர்பாக தேர்தல் பிரசாரத்தின்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதி வழங்கியிருந்தார். ஜனாதிபதி ட்ரம்பின் நீண்டகால கோரிக்கையாக அவரது உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் முதல் முறையாக இந்த நிதி வழங்கலுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியானது 91 கிலோமீற்றருக்கு எல்லை சுவர் அமைப்பதற்காக பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பென்டகனின் இந்த அறிவிப்பிற்கு ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். எல்ல…
-
- 0 replies
- 673 views
-
-
உலகின் சிறந்த ஆசிரியருக்கான விருதை வென்ற கென்யா ஆசிரியர் கென்யாவை சேர்ந்த விஞ்ஞான ஆசிரியர் ஒருவர் இந்த ஆண்டிற்கான சர்வதேச சிறந்த ஆசிரியர் விருதினை பெற்றுள்ளார். கென்யாவின் கஷ்டப்பிரதேச ஆசிரியரான பீட்டர் (Peter Tabichi) என்பவருக்கே இந்த விருது கிடைத்துள்ளது. அத்தோடு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களும் இவருக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் (சனிக்கிழமை) 5வது முறையாக இடம்பெற்றது தமது சம்பளத்தில் 80 வீதத்தை ஏழை மாணவர்களுக்கு செலவிடும் ஆசிரியர் இவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கென்யாவில் மட்டுமன்றி ஆபிரிக்க நாடுகளிலும் விஞ்ஞான துறையை வளர்ப்பதே தமது கனவென ஆசிரியர் பீட்டர் தெரிவித்துள்ளார். h…
-
- 0 replies
- 641 views
-
-
படத்தின் காப்புரிமை MANDEL NGAN Image caption டொனால்டு டிரம்ப் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின்போது அந்நாட்டின் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷ்யாவுடன் சேர்ந்து எவ்வித சதித்திட்டத்திலும் ஈடுபடவில்லை என்று அதுகுறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை அதிகாரி ராபர்ட் முல்லரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லர் விசாரணை அறிக்கையின் முக்கிய கூறுகளை அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்…
-
- 0 replies
- 435 views
-
-
ஜேர்மனியில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ள சதித்திட்டம் – 10 பேர் கைது.. March 25, 2019 ஜேர்மனியில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ள சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் கீழ் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது காவல்துறையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலியடுத்து ஹெஸ்சி, ரைன்லேண்ட்-பாலாட்டினேட் ஆகிய மாகாணங்களில் தீவிரவாதிகளை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதே இவ்வாறு 10 பேர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கத்திகள், போதைப்பொருட்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஜேர்மனி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் http://globaltamilnews.net/2019…
-
- 0 replies
- 488 views
-
-
மாலியில் தாக்குதல்: கர்ப்பிணிகள் உட்பட 134 பேர் உயிரிழப்பு மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் உள்ள கிராம மக்கள் 134 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் 55 பேர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கூரிய ஆயுதங்களுடன் புகுந்த தோகோன் பழங்குடியினத்தவர்களே நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இவ்வாறு கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலியில் உள்ள மொப்டி பிராந்தியத்தில் உள்ள Ogossagou கிராமத்தில் வாழும் புலானி இன மக்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளும் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில், வேட்டைக்காரர்களான தோகோன் பழங்குடியினருக்கும், புலானி வ…
-
- 0 replies
- 604 views
-
-
"முற்றிலும் வீழ்ந்தது ஐ.எஸ்" - சிரிய ஜனநாயகப் படைகள் அறிவிப்பு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைDELIL SOULEIMAN சிரியாவில் தீவிரவாதிகள் வீழ்த்தப்பட்டதையடுத்து, இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் அமைப்பின் காலம் முடிந்துவிட்டதாக அமெரிக்க ஆதரவுள்ள சிரிய ஜனநாயக படைகள் தெரிவித்துள்ளது…
-
- 5 replies
- 1.2k views
- 2 followers
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption பட்டுப்பாதை புதிய பட்டுப்பாதை திட்டம் எனும் சீனாவின் கனவுத் திட்டத்தில் இத்தாலியும் இணைந்திருக்கிறது. சீன அதிபர் ஜின்பிங்கின் ரோம் பயணத்தின் போது 2.8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 29 ஒப்பந்தத்தில் இத்தாலி மற்றும் சீன தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால், அதே நேரம் இத்தாலியின் இந்த முடிவானது அதன் மேற்கத்திய கூட்டாளி நாடுகளை கவலையுற செய்துள்ளது. சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தில் இணையும் ம…
-
- 0 replies
- 695 views
-
-
சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தில் இணைந்தது இத்தாலி சீனாவின் புதிய பட்டுப்பாதை வர்த்தகத்தில் இணைவது தொடர்பான ஒப்பந்தத்தில் இத்தாலி கையெழுத்திட்டது. சீனா-இத்தாலிக்கிடையில் 5 முதல் 7 பில்லியன் யூரோ வரையிலான 29 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் இத்தாலி பிரதமர் கியூசெப் கொன்டுடன் நேற்று (சனிக்கிழமை) விசேட சந்திப்பை மேற்கொண்டுள்ள நிலையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஆசியாவில் இருந்து ஐரோப்பா வரை தடையற்ற வர்த்தகத்திற்காக சீனா பட்டுப்பாதை வகுத்து வருகிறது. இந்நிலையில் ஜி 7 அணியை சேர்ந்த முதல் நாடாக இத்தாலி சீனாவின் இத்திட்டத்தில் இணைந்துள்ளது. உலகளாவிய ரீதியில் சீனாவ…
-
- 1 reply
- 936 views
- 1 follower
-
-
பிரெக்ஸிற் விவகாரம்: கையெழுத்து சேகரிப்பு 4 மில்லியனை தாண்டியது பிரெக்ஸிற் விவகாரத்தை எதிர்த்து பிரித்தானிய மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில் பிரெக்ஸிற்றைத் திரும்ப பெறுமாறு கோரி மக்கள் கையெழுத்து சேகரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த கையெழுத்து சேகரிப்பானது நேற்று (சனிக்கிழமை) மாலை வரையில் 4.7 மில்லியனை எட்டியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ‘ஒரு மனு தொடர்பாக 10 000 கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டால் அதற்கு நாடாளுமன்றம் பதில் அளிக்க வேண்டும். அதேபோல ஒரு இலட்சம் கையெழுத்துக்கள் பெறப்படுமாயின் அது தொடர்பில் நாடாளுமன்றில் திறந்த விவாதம் நடத்தப்பட வேண்டும்’ என பிரித்தானிய சட்டம் தெரிவிக்கிறது . இந்நிலையில் பிரெக்ஸிற் தொடர்பான கையெழுத்துக்கள் …
-
- 0 replies
- 384 views
-
-
டிரம்ப் அதிபராக ரஷ்யா உதவியதா - விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionடொனால்ட் டிரம்பு 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், ரஷ்யாவுக்கு இடையில் இருந்ததாக கூறப்படும் தொடர்பு பற்றி நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட…
-
- 0 replies
- 764 views
- 1 follower
-
-
பிரெக்ஸிற்றின் விதி பிரித்தானியாவின் கைகளிலேயே உள்ளது: டொனால்ட் ரஸ்க் பிரெக்ஸிற்றின் விதி தற்போது பிரித்தானியாவின் கைகளிலேயே தங்கியுள்ளது என ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் ரஸ்க் தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ரஸ்க் கூறியதாவது; ஏப்ரல் 12 ஆம் திகதி வரை நீண்ட கால தாமதம் அல்லது பிரெக்ஸிற்றை முழுமையாக ரத்து செய்வது உட்பட அனைத்துமே சாத்தியமானது. பிரெக்ஸிற்றை பிற்போடுவதற்கான பிரித்தானியாவின் கோரிக்கையை 27 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் ஆதரவு வழங்கியுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. பிரெக்ஸிற்றின் விதி பிரித்தானியாவின் வசமே உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தை பொறுத்தவரையில் நல்லதே நடக்குமென நாங்கள் எதிர்பார்க்கிறோம் ஆனால…
-
- 3 replies
- 530 views
-
-
அல்-நூர் மசூதி திறக்கப்பட்டது: கண்ணீருடன் மக்கள் பிரார்த்தனை துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் இடம்பெற்று ஒருவாரத்தின் பின்னர் நியூஸிலாந்து அல்-நூர் மசூதி மீண்டும் இன்று சனிக்கிழமை திறக்கப்படுகிறது. நியூஸிலாந்து கிறிஸ்ட்சர்ச் அல்-நூர் மசூதி கடந்த 15 ஆம் திகதி வழமைக்கு மாறான சம்பவத்தால் அமைதியிழந்திருந்தது. வெள்ளிக்கிழமை விசேட தொழுகைக்காக நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்த நிலையில் அவுஸ்திரேலியா நபர் ஒருவர் வெறித்தனமாக மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 50 பேர் உயிரை இழந்ததோடு பலர் படுகாயமடைந்தனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அல்-நூர் மசூதி மீண்டும் இன்று திறக்கப்படுகிறது. “தாக்குதலுக்கு பின்னரான முதல் பிரார்த்தனைகளுக்காக நாம் இன்று ஒன்றுகூடியு…
-
- 0 replies
- 550 views
-
-
சுத்தமான குடிநீரின்றி உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு! சுத்தமான குடிநீரின்றி உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்களுக்கான நிதியம் யு.என்.எச்.சி.ஆர் இதனைத் தெரிவித்துள்ளது. உள்நாட்டு மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டினால் பெரும்பாலான குழந்தைகள் உயிரிழப்பதாக அந்த நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. 1993ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் உலக நீர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டதுடன், வருடாந்தம் மார்ச் 22ஆம் திகதி உலக நீர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. குடிநீர் தட்டுப்பாடு மற்றும் சுகாதார சீர்கேடுகளால் 15 வயதிற்குட்பட்ட 85,700 குழந்தைகள் வருடாந்தம் உ…
-
- 0 replies
- 334 views
-
-
வடகொரியா-தென்கொரியா பிளவு ? – கூட்டுறவு அலுவலகத்திலிருந்து வடகொரியா வெளியேற்றம் வடகொரியாவும் தென்கொரியாவும் இணக்கப்பாட்டுடன் செயற்படுவதற்காக உருவாக்கப்பட்ட கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரிய அதிகாரிகள் வெளியேறியுள்ளனர். வடகொரியாவின் உத்தரவை தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) அந்நாட்டு அதிகாரிகள் வெளியேறுவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. எதிரி நாடுகளாக செயற்பட்டு வந்த தென்கொரியாவும் வடகொரியாவும் கடந்த ஆண்டு சமாதானமடைந்த நிலையில் இருநாட்டு அதிகாரிகளும் கலந்துரையாட வடகொரிய எல்லையில் கூட்டுறவு அலுவலகம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அத்தோடு இருநாட்டு தலைவர்களும் நேரடியாக பேசுவதற்கு தொலைபேசி சேவைகளும் ஏற்படுத்தப்பட்டது. எனினும் தற்போது குறித்த அலுவலகத்தில் இருந்து …
-
- 0 replies
- 344 views
-
-
கனடா புதியவர்களை வரவேற்கிறது: பிரதமர் ட்ரூடோ புகலிடக் கோரிக்கையாளர்களின் வருகையை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்ற போதிலும், புதியவர்களை வரவேற்பதாக, கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஒன்ராறியோ மிசிசாகாவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குடியேற்றவாசிகள் பிரச்சினை அரசியல் மயமாக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களுக்கு கனேடியர்கள் தொடர்ச்சியாக ஆதரவை வெளியிட்டு வருகின்றனர் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். 2017ஆம் ஆண்டு முதல் காடுகள், வெளிகள் ஊடாக தரை மார்க்கமாக 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கனடாவிற்குள் நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கனடா-புதியவர்…
-
- 0 replies
- 529 views
-