Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. படத்தின் காப்புரிமை Getty Images நடப்பு நிதியாண்டின் இறுதி காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த அதிகாரபூர்வ தரவுகளால் சர்வதேச பொருளாதாரத்தின் மீது இது ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் குறித்த அச்சம் எழுந்துள்ளது. இதற்கு முந்தைய காலாண்டில், சீனா பொருளாதாரம் 6.4% என்ற அளவில் வளர்ந்திருந்தது. இந்த வளர்ச்சியை அதற்கு முந்தைய காலாண்டோடு ஒப்பிடுகையில் சீனா 6.5% என்ற வளர்ச்சியை எட்டியிருந்தது. இந்த முழு ஆண்டில் சீனா 6.6% என்ற அளவில் வளர்ச்சியை கண்டுள்ளது. 1990ஆம் ஆண்டு முதல் சீனாவில் பதிவான மிக குற…

  2. கொங்கோவின் எதிர்க்கட்சி வேட்பாளர், தன்னை ஜனாதிபதியாக அறிவித்துள்ளார்! கொங்கோ குடியரசின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் மார்ட்டின் ஃபயுலூ தன்னை ஜனாதிபதியாக அறிவித்துள்ளார். அத்துடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவரது எதிர்தரப்பு வேட்பாளர் வெற்றிபெற்றதாக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பையும் அவர் நிராகரித்துள்ளார். இந்தநிலையில் தற்போதுள்ள நெருக்கடிகளை மேலும் தூண்டிவிடும் விதமாக தானே ஜனாதிபதி தேர்தலில் அதிகபடியாக வாக்குகளை பெற்றுள்ளதாக ஃபயுலூ குறிப்பிட்டுள்ளார். “தவறான தேர்தல் முடிவுகளை உறுதிப்படுத்துவதன் மூலம், அரசியலமைப்பு நீதிமன்றம் ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு உதவுவதாக உறுதிப்படுத்தியுள்ளது. இது ஒரு அரசியலமைப்பு சதித்திட்டம்” என்று அவ…

  3. தாய்லாந்தில் இரு புத்த துறவிகள் சுட்டுக் கொலை January 20, 2019 தாய்லாந்தில் அடையாளம் இனந்தெரியாதேரால் இரு புத்த துறவிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தாய்லாந்தின் தென் பகுதியில் அமைந்துள்ள நாராதிவாட் மாகாணத்தில் உள்ள ரத்தனுபாப் புத்த மதம் ஆலயத்திலேயே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தி புத்த துறவிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் ஈடுபட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது என தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தாய்லாந்தில் புத்த மதம் பரவலாக காணப்…

  4. பிரெக்ஸிற் தொடர்பாக பிரித்தானியர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்! – கருத்துக்கணிப்பு பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது தொடர்பாக பிரித்தானிய மக்கள் நம்பிக்கையற்றவர்களாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது பிரதமர் தெரேசா மேயின் பிரெக்ஸிற் ஒப்பந்தம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டது. எனவே, பிரதமர் மேயின் அரசாங்கம் புதிய திட்டத்துடன் வந்து உடன்பாடுகளை நிறைவேற்றும் பட்சத்தில் அனைவரையும் திருப்திப்படுத்த முடியும் என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குறுகிய காலத்தில் பூர்த்தி செய்ய முடியாத ஒரு பணியாக இது இருக்கின்றது. இந்தநிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் மேயின…

  5. ரஷியாவின் இரு போர் விமானங்கள் மோதல் : விமானி பலி ரஷியா விமானப்படைக்கு சொந்தமான இரு Su-34 ரக போர் விமானங்கள் ஜப்பான் பெருங்கடல் பகுதியின் மீது நேற்று (பயிற்சி) கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தன.கடலோரத்தில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் வானத்தில் வட்டமிட்டு பறந்தபோது எதிர்பாராத விதமாக இரு விமானங்களும் ஒன்றோடொன்று மோதி கடலில் விழுந்தது. இந்த விபத்தில் இரு விமானிகளும் அவசர வாசல் வழியாக குதித்து உயிர் பிழைத்ததாக நேற்று தகவல் வெளியானது. 3 விமானங்கள், ஹெலிகாப்டர் மற்றும் 5 கப்பல்களில் சென்று விபத்து நிகழ்ந்த பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்ட மீட்புப்படையினர் ஒரு விமானியின் உடலை கைப்பற்றியுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட…

    • 0 replies
    • 416 views
  6. டிரம்ப் மட்டுமே அமெரிக்கா இல்லை – ஜேர்மனிய அமைச்சர் டிரம்ப் மட்டுமே அமெரிக்கா இல்லை என ஜேர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சரான Heiko Maas தெரிவித்துள்ளார். ஜேர்மனிய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கடந்த பல ஆண்டுகளாக ஜேர்மனிக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு குறிப்பிடத்தக்க விதத்தில் அதிகரித்துள்ளது. ஒரு ஜனாதிபதி மட்டுமே இரு நாடுகளுக்கிடையேயான உறவை முற்றிலுமாக அழித்து விட முடியாது. ரஷ்யாவுடனான எரிவாயு திட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக தொடர்ந்து ஜேர்மனியை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விமர்சித்து வரும் நிலையிலும் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முன்னேற்றம் காணப்படுகின…

  7. டிரம்ப் குறித்து பரபரப்பு தகவலை வெளியிட்ட மொடல் அழகி ரஸ்யாவில் கைது-வீடியோ இணைப்பு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு சார்பாக ரஸ்யா செயற்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடமுள்ளதாக தெரிவித்த மொடல் அழகியை ரஸ்ய அதிகாரிகள் கைதுசெய்யதுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன தாய்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட நஸ்டியா ரைபகா என அழைக்கப்படும் இந்த மொடல் அழகியை மொஸ்கோ விமானநிலையத்தில் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். மொடல் அழகி கைதுசெய்யப்படுவதை காண்பிக்கும் வீடியோவை அவரது சட்டத்தரணி சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். பெண்ணொருவர் போராடுவதையும் நால்வர் அவரை சக்கரநாற்காலியில் அமரச்செய்து இழுத்துச்செல்வதையும் காண்பிக்கும் வீடியோவை மொடலின் சட்டத்தரணி வெளியிட்டுள…

  8. படத்தின் காப்புரிமை Getty Images அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்பு மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையே நடைபெற சாத்தியமுள்ள இரண்டாவது உச்சி மாநாட்டுக்கு முன்பு வட கொரியாவின் அரசு தரப்பபை சேர்ந்த முக்கிய அதிகாரியொருவர் அமெரிக்கா சென்றுள்ளார். கிம் யோங்-சோல் என்ற அந்த வட கொரிய பேச்சுவார்த்தையாளர் சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கிலிருந்து கிம்மிடமிருந்து அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஒரு கடிதத்தை கொண்டு சென்றதாக தென் கொரிய ஊடக தகவல்கள் கூறுகின்றன. வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் பாம்பேயோவை கிம் யோங்-சோல் சந்திக்கவுள்ளார…

  9. கார் விபத்தில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் பிலிப் January 18, 2019 பயங்கர கார் விபத்தில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் பிலிப் காயங்களுடன் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாண்ட்ரிகம் எஸ்டேட் பகுதியில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவரான 97 வயதாக இளவரசர் பிலிப்பின் கார் நேற்று வியாழக்கிழமை சாலை வளைவின் போது கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காயம் அடைந்த இளவரசர் பிலிப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் செய்தியை பங்கிங்காம் அரண்மனையும் உறுதிப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது விபத்தில் பாதிப்படைந்த இரு கார்களினதும் சாரதிகள் மது அருந்தி காரை செலுத்தினார்களா …

  10. மோசமான நடத்தை காரணமாக நாடுகடத்தப்படும் பிரித்தானிய குடும்பம்! நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய குடும்பம் ஒன்று மோசமான நடத்தை காரணமாக நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர். பொது இடத்தில் குப்பை போட்டமை, உணவு உண்டதன் பின்னர் உணவகத்தில் பணம் செலுத்தாமை, திருட்டு ஆகிய குற்றச்சாட்டுக்கள் இவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஆக்லந்து நகர மேயர் ஃபில் கொஃப் (Phil Goff) பொலிஸாரிடம் கோரியிருந்தார். இந்தநிலையிலேயே பண்புகள் தொடர்பான விவகாரத்தினை மீறிய குறித்த பிரித்தானிய குடும்பத்தினை நாடு கடத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நியூஸிலாந்தின் குடிநுழைவுத் துறை உதவித் தல…

  11. வாக்கெடுப்பில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே வெற்றி பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயிற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்துள்ள நிலையில், பிரெக்ஸிட் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் தெரேசா மேயினால் கொண்டுவரப்பட்ட பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான வாக்கெடுப்பு பிரித்தானிய பாராளுமன்றத்தில் தோல்வியடைந்த நிலையில், தெரேசா மேயின் 2 வருட கால ஆட்சி தோல்வியடைந்துவிட்டதாகத் தெரிவித்து எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பைன், தெரேசா மீது நம்பிக்கையில்லா தீர்மானமொன்றைக் கொண்டு வந்திருந்தார். இந்நிலையில், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பாராளுமன்றத்தில் விவாதமும் வாக்கெடுப்பும் நேற்று நடைபெற்றது. …

  12. பிரெக்ஸிற் வாக்கெடுப்பில் தெரேசா மே தோல்வி! பிரெக்ஸிற் திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் தெரேசா மேயின் தரப்பு தோல்வியடைந்தது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பான பிரெக்ஸிற் மீதான வாக்கெடுப்பில் 432 பேர் பிரெக்ஸிற்றிற்கு எதிராகவும் 202 பேர் பிரெக்ஸிற்றிற்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். இதன்மூலம் மேயின் தரப்பு 230 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பாக முடிவுசெய்யும் பொதுவாக்கெடுப்பு கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் பெரும்பாலானோர் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக ஆதரவு தெரிவித்தனர். பிரிரித்தானியா…

  13. துருக்கியை அழித்துவிடுவோம்! – டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை சிரியாவில் குர்திஸ் போராளிகள் மீது தாக்குதல் நடத்தினால், பொருளாதார ரீதியில் துருக்கியை அழித்துவிடுவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள இரண்டு டுவிட்டர் பதிவுகளில் அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக சிரியாவில் குர்திஸ் போராளிகளுடன் இணைந்து அமெரிக்க துருப்புகள் சண்டையிட்டு வந்தன. எனினும், குர்திஸ் போராளிகளை பயங்கரவாதிகள் என சித்தரித்துள்ள துருக்கி, அமெரிக்கா அவர்களுக்கு உதவுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அத்தோடு, குர்திஸ் போராளிகளை ஒடுக்குவோம் என துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் கடந்த வாரம் குற…

  14. கேமரூனில் துப்பாக்கி முனையில் 36 பயணிகள் கடத்தல்- பிரிவினைவாதிகள் கைவரிசையா? கோப்புப்படம் யாவுண்டே: மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில், ஆங்கிலம் பேசும் மக்கள் அதிகம் வாழும் தென்மேற்கு மற்றும் வடமேற்கு பிராந்தியங்களை தனி சுதந்திர நாடாக அறிவிக்க வலியுறுத்தி, பிரிவினைவாத அமைப்புகள் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவர்களை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் காரணமாக அரசுப் படைகளுக்கும், பிரிவினைவாத அமைப்புகளுக்குமிடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பிராந்தியத்தில் பியூவா-கும்பா நெடுஞ்சாலையில் சென்ற பயணிகள் பேருந்தை, ஆயுதம் தாங்கிய கும்பல் நேற்று தடுத்து நிறுத்தியது. பின்ன…

    • 0 replies
    • 654 views
  15. கென்ய தலைநகரில் ஹோட்டல் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - 15 பேர் பலி கென்யாவின் தலைநகர் நைரோபியில் இஸ்லாமிய தீவிரவாதிகள் ஹோட்டலொன்றின் மீது மேற்கொண்ட தாக்குதலில் அமெரிக்க பிரஜையொருவர் உட்பட 15ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கென்யாவை உலுக்கியுள்ள இந்த தாக்குதலிற்கு அல் சகாப் அமைப்பு உரிமை கோரியுள்ளது. கென்ய தலைநகரில் உள்ள டியுசுட்டி 2 என்ற கட்டிட வளாகத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.குறிப்பிட்ட வளாகத்தில் ஹோட்டல்கள் உட்பட பல வணிகவளாகங்கள் வெளிநாட்டு நிறுவனங்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. மூன்று மணிக்கு இந்த ஹோட்டல் மீது தாக்குதல் ஆரம்பமாகியுள்ளது. குறிப்பிட்ட ஹோட்டல் அமைந்திருந்த பகுதியிலிருந்து துப்பாக்கிவேட்டுகளையும் குண்ட…

  16. இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்".. ஆஹா.. "ஹேப்பி பொங்கல்" சொன்ன தமிழர்களே இதைப் படிங்கப்பா! ஒட்டாவா: இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்ற அழகிய தமிழ் வார்த்தையை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உதிர்க்க அது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.கனடாவில் நிறைய தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். கனடா பிரதமர் ஜஸ்டினுக்கும் எப்போதுமே இந்தியர்கள் மீது தனி பாசம்.அவர் இந்திய மற்றும் தமிழ்ப் பண்டிகைகளை கொண்டாடுவதையும் வழக்கமாக வைத்திருப்பவர். மற்ற நாடுகளின் கலாசாரத்துக்கு குறிப்பாக இந்திய மக்களின் கலாச்சாரத்துக்கு மதிப்பு கொடுப்பதால் அவருக்கு நம் நாட்டில் எக்கச்சக்க ஃபேன்ஸ்கள் உண்டு. குத்து விளக்கேற்றினார் 2 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற தீபாவளிக்கு, கனடா தலைநகர் ஒட்டாவாவில…

  17. லையன் எயார் விமான விபத்தில் முக்கிய திருப்பம்! இந்தோனேசியாவில் விபத்திற்குள்ளான லையன் எயார் விமானத்தின் கறுப்புப் பெட்டி குரல்பதிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) கண்டெடுக்கப்பட்ட குறித்த கறுப்புப் பெட்டி, விபத்திற்கான காரணத்தை கண்டறியும் பிரதான தடயமாக காணப்படுகின்றது. கடந்த ஒக்டோபர் மாதம் 189 பயணிகளுடன் பயணித்த லையன் எயார் விமானம், ஜகார்த்தா தீவில் விபத்திற்குள்ளாகியது. தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட விமானி, விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கோரியிருந்தார். எனினும், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு ஒரு சில நிமிடங்களில் விமானம் விபத்திற்குள்ளானது. இந்நிலையில், ஜாவா கடல் …

  18. கனடாவை சேர்ந்தவருக்கு சீனா தூக்குத்தண்டனை விதிப்பு: இரு நாட்டு உறவில் பதற்றம் ! சீனாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கனடா நாட்டு நபரின் குடும்பம் தங்களின் மிக மோசமான அச்சம் தற்போது நடந்துவிட்டதாக ஆதங்கப்பட்டுள்ளனர். ராபர்ட் லாய்ட் ஷெல்பெர்க் என்ற அந்நபருக்கு கடந்த நவம்பரில் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், இந்த தீர்ப்புக்கு எதிராக கருத்து தெரிவித்த ஒரு நீதிமன்றம் முன்னர் விதிக்கப்பட்ட தண்டனை போதாது என்று கூறியது. தற்போதைய மரணம் தண்டனை தீர்ப்பு சீனா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜிய உறவை பாதிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ''இது மிகவும் கொடுமையானது, துரதிர்ஷ்டவசமானது. இதயத்தை நொறுக்கும் விதமாக உள்ளது'' என்று நீதிமன்ற தீ…

  19. உலக வங்கியின் புதிய தலைவராக இவாங்கா ட்ரம்ப் நியமனம்? உலக வங்கியின் புதிய தலைவராக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம், தனது பதவிக்காலம் நிறைவடைய இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில் பதவி விலகுவதாக அறிவித்தார். இதற்கமைய அவர் எதிர்வரும் 31ஆம் திகதி தமது பதவிலிருந்து உத்தியோகப்பூர்வமாக விலகவுள்ளார். இந்நிலையில் தலைவர் பதவிக்கான போட்டியில் இவாங்கா ட்ரம்ப் மற்றும் முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே ஆகியோர் முன்னணியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கருவூலத் துறையின் செய்தித் தொடர்பாளர், “குறிப்பிடத்தக்க எண்களில் தலைவர் பதவிக்கா…

  20. படத்தின் காப்புரிமை Getty Images கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக அமெரிக்க அரசாங்க துறைகள் பகுதியளவு முடங்கியுள்ள சூழலில், இவற்றில் சில பகுதிகளை தற்காலிகமாக மீண்டும் திறக்க வேண்டுமென குடியரசு கட்சியை ஓர் மூத்த செனட்டர், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கோரிக்கை வைத்துள்ளார். டிரம்புக்கு மிகவும் நெருக்கமான லிண்ட்ஸே கிரஹாம் என்ற அந்த செனட்டர், சில வாரங்களுக்கு மீண்டும் சில துறைகளை இயக்குவது குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகளுக்கு இடையே இது தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்க உதவும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசாங்க துறைகள் தற்போது பகுதியளவு…

  21. டிரம்ப் - கிம் யொங் ஆகியோருக்கிடையிலான 2 ஆவது சந்திப்பு எந்த நகரத்தில் ? அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் யொங் அன் ஆகியோர் வியட்நாமில் சந்தித்துப் பேச்சுவார்தை நடத்துவதற்கு அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வந்ததால் வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை சந்தித்தது. குறிப்பாக அமெரிக்கா வடகொரியாவை நேரடியாக எதிர்த்தது. அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்தது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் யொங் அன் இடையே வார்த்தை யுத்தம் நடந்தது. இருநாடுகளின் மோதல் போக்கு சர்வதேச நாடுகளுக்…

  22. ஈரான் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான அனுமதியை கோரியது வெள்ளை மாளிகை- வெளியானது புதிய தகவல் ஈரானிற்கு எதிராக தாக்குதல்களை மேற்கொள்வதற்கான அனுமதியை வெள்ளை மாளிகை கடந்த வருடம் கோரியிருந்தது என அமெரிக்க செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் ஈராக் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை இலக்கு வைத்து ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் மேற்கொண்ட எறிகணை தாக்குதலை தொடர்ந்தே வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு சபை ஈரான் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து பென்டகனை கோரியது என அமெரிக்க செய்தித்தாள் தெரிவித்துள்ளது முன்னாள் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அமெரிக்க தூதரகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஒரு யுத்த நடவடிக்கை என வர்ணித்ததுடன…

  23. பிரெச்ஸிற் தொடர்பில் பிரதமர் மே எச்சரிக்கை! பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாவிட்டால், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையற்ற தன்மையை வெளிக்காட்டுவதாக அமையுமென பிரதமர் தெரேசா மே கூறியுள்ளார். அத்தோடு, அது மன்னிக்கமுடியாத பேரழிவுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். பிரெக்ஸிற் ஒப்பந்த வாக்கெடுப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது. இந்நிலையில், சண்டே எக்ஸ்பிரஸிற்கு வழங்கியுள்ள செவ்வியில் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை அங்கீகரிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். உடன்பாடற்ற பிரெக்ஸிற்றால் அதிக ஆபத்து வரப்போவதில்லையென்றும் பிரதமர் கூறியுள்ளார். நாட்டின் எதிர்காலத்…

  24. குர்திஷ் போராளிகளை பாதுகாக்கும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்படலாம்! – பொம்பியோ சிரியாவை விட்டு அமெரிக்க துருப்புக்கள் வெளியேறியதன் பின்னர் குர்திஷ் போராளிகளை பாதுகாக்க துருக்கியுடன் ஒரு ஒப்பந்தம் எட்டப்படுவதற்கான வாய்ப்புள்ளதென அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். துருக்கி இராஜாங்க செயலாளருடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். வடக்கு சிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகள் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளுக்கு எதிராக குர்திஷ் போராளிகளுடன் இணைந்து போராடி வருகின்றன. இந்நிலையில் சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என்று கடந்த மாதம் ஜனாதிபதி டொனால்ட் ட…

  25. ரஷ்யாவுக்கு வேலைப்பார்த்தாரா டிரம்ப்? - விசாரணை நடத்திய எஃப்.பி.ஐ AFP/GETTY அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரகசியமாக ரஷ்யாவுக்காக பணியாற்றினாரா என்ற கோணத்தில் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ விசாரணை நடத்தியாக செய்தி வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு வெள்ளைமாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் எஃப்.பி.ஐயின் இயக்குனர் பொறுப்பிலிருந்து ஜேம்ஸ் கோமியை நீக்கிய அதிபர் டிரம்ப் செயல்பாட்டின் மீது எஃப்.பி.ஐயின் மற்ற உயரதிகாரிகள் சந்தேகமடைந்ததாக அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, டிரம்ப் தேசப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளாரா என்று விசாரணை நடத்தப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுபோன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.