Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை நிறைவேற்றம் December 14, 2024 02:01 pm தென்கொரிய ஜனாதிபதி யுன் சுக் யோலுக்கு எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த இரண்டாவது குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று காலை இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த டிசம்பர் 3 ஆம் திகதி இரவு திடீரென இராணுவச் சட்டம் அமுலாக்கப்பட்டதன் அடிப்படையில் தென் கொரிய எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி யுன் சுக் யோலுக்கு எதிராக ஒரு குற்றப்பிரேரணையை கொண்டு வந்தன. எனினும், ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் மக்கள் சக்தி கட்சியினர் வாக்கெடுப்பை புறக்கணித்து, பாராளுமன்றத்தை விட்டு வௌிநடப்பு செய்ததன் காரணமாக…

  2. அமெரிக்க மாநிலங்களான ரெனிசி,மிசூறி இன்டியானாவை சூறாவளி தாக்கியதில் 7 பேர்வரை மரணமடைந்துள்ளனர். பல கோடி டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளன. https://www.cnn.com/weather/live-news/us-tornado-flooding-04-03-25/index.html

  3. ட்ரம்பின் அறிவிப்பால் எண்ணெய் விலை சரிவு! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய வரிகளை கடுமையாக்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, வியாழக்கிழமை (03) சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் 3% வரை சரிந்தன. இது முதலீட்டாளர்கள் உலகளாவிய வர்த்தகப் போரை ஏற்படுத்தும் என்றும், இது பொருளாதார வளர்ச்சியைக் குறைக்கும் மற்றும் எரிபொருள் தேவையை மட்டுப்படுத்தும் என்றும் கவலைப்படுகிறார்கள். பிரெண்ட் மசகு எண்ணெய் (BCO) $73 க்கும் கீழே சரிந்தது, அதே நேரத்தில், அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை மசகு எண்ணெய் (WTI) $70 க்கும் கீழே சரிந்தது. மார்ச் 5 ஆம் திகதிக்குப் பின்னர், பிரெண்ட் மசகு எண்ணெய் விலை $1.82 அல்லது 2.43% குறைந்து, ஒரு பீப்பாய்க்கு 73.13 அமெரிக்க டொலர்களாக இருந்தது. அமெரிக்க மேற்கு டெ…

  4. ஜப்பானின் கியூஷுவில் நிலநடுக்கம்! ஜப்பானின் கியூஷுவில் அந் நாட்டு நேரப்படி புதன்கிழமை (02) இரவு 07.34 மணிக்கு 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. உயிர் மற்றும் சொத்து இழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. மியான்மர் மற்றும் அண்டை நாடான தாய்லாந்தில் 7.7 ரிக்டர் அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இது நிகழ்ந்துள்ளது. இந்த நிலநடுக்கம் இந்தியா, சீனா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட பல நாடுகளில் உணரப்பட்டன. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகளைப் போல இடிந்து விழுந்தன. சாலைகள் விரிசல் அடைந்தன,நிலநடுக்கத்தில் 3,000க்கும் மேற்பட்டோர் இறந்தனர்…

  5. பிரித்தானியா பயணிக்கவுள்ளோருக்கான முக்கிய செய்தி – நாளை முதல் அமுலில். நாளை புதன்கிழமை அதாவது ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முதல் பிரித்தானியா வரும் ஐரோப்பிய பயணிகள் மின்னணு பயண அனுமதி (ETA) ஒன்றை வைத்திருப்பது கட்டாயமாக்கப்படுகிறது. நாளை முதல் பிரித்தானியா வரும் ஐரோப்பிய பயணிகள் அனைவரும் The Electronic Travel Authorisation (ETA) என்னும் மின்னணு பயண அங்கீகாரம் பெற்றிருக்கவேண்டும். இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகும் இந்த மின்னணு பயண அங்கீகாரத்துக்கான கட்டணம் 10 பவுண்டுகள் ஆகும். ஆனால் 9ஆம் திகதி முதல் இந்தக் கட்டணத்தை 16 பவுண்டுகளாக உயர்த்த பிரித்தானிய உள்துறை அலுவலகம் முடிவு செய்துள்ளது. இந்த அனுமதி சீட்டை அயர்லாந்து நாட்டவர்கள் தவிர மற்றவவர்கள் ஒரு முறை பெற்றால் 2 வருடங்கள் …

  6. செயற்கை நுண்ணறிவு(ஏ ஐ) தொழில்நுட்பத்தின் மெகா வளர்ச்சி காணமாக வாரத்திற்கு இரு வேலை நாட்கள் என்கிற நடைமுறை 10 ஆண்டுகளில் வழக்கத்தில் இருக்கும் என்று பில் கேட்ஸ் கணித்துள்ளார். ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பல்வேறு துறைகளில் மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழல் உருவாகக்கூடும் என்றும், இதன் காரணமாக வேலைநாட்களும் குறையும் என்றும் பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார். இதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். பல்வேறு துறைகளில் தற்போது ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதேபோன்று, ட்ரெண்டிங்கில் உள்ள ‘ஜிப்லி’ வகை கார்ட் டூன் சித்திர படங்களும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மெகா வளர்ச்சியின் விளைவே என்று பில் கேட்ஸ் தெரிவி…

  7. 2 பில்லியன் டொலர் ஒப்பந்தம்: அமெரிக்கா-போலந்தின் புதிய மூலோபாய கூட்டணி! தொழில்நுட்ப உதவிகளுக்காக அமெரிக்காவுடன் போலந்து 2 பில்லியன் டொலர் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. நாட்டிற்கான மூலோபாய உதவிகளைப் பெற போலந்து அரசாங்கம் அமெரிக்காவுடன் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு முக்கியமான ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. குறிப்பாக போலந்து நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தவும், நேட்டோவின் கிழக்கு எல்லையில் முக்கிய பங்கு வகிக்கவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். ஏவுகணை பாதுகாப்பு மற்றும் அமெரிக்காவுடனான நெருக்கமான ஒத்துழைப்பு ஆகியவை தேசிய பாதுகாப்பிற்கு மிக முக்கியமானவை என்று இந்த ஒப்பந்தம் தொடர்பில் போலந்து பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டினார். அத்துடன் ராய்ட்டர்ஸ் செய்…

    • 0 replies
    • 212 views
  8. படக்குறிப்பு, வெள்ளிக்கிழமை மாலை மியான்மர் ராணுவம் வெடிகுண்டு வீசியதாக கூறப்படும் பகுதியில் சேதமடைந்த கட்டடங்களின் சில புகைப்படங்கள் பிபிசிக்கு அனுப்பப்பட்டுள்ளன கட்டுரை தகவல் எழுதியவர், ரெபெக்கா ஹென்ஷ்கே பதவி, பிபிசி ஐ இன்வெஸ்டிகேஷன்ஸ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் மியான்மரில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டு 1,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையிலும், ஏற்கெனவே போரால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டில் சில பகுதிகளில் ராணுவம் வெடிகுண்டு தாக்குதல்களை தொடர்ந்து வருகின்றது. இந்த தாக்குதல்கள், "அதிர்ச்சிகரமானவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை" என ஐ.நா சபை விவரித்துள்ளது. நிலநடுக்கத்துக்குப் பிறகு மக்களை மீட்பதற்கு நாம் முயற்சித்துவரும் வேளையில் ராணுவம் "வெடிகுண்டுகளை தொடர்ந்து வீசுவது…

  9. 02 APR, 2025 | 10:47 AM காசாவில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கையை விஸ்தரிக்கவுள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் அறிவித்துள்ளார். காசாவின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து இஸ்ரேலின் பாதுகாப்பு வலயங்களுடன் சேர்க்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். யுத்தம் நடைபெறும் பகுதிகளில் இருந்து பெருமளவு மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என தெரிவித்துள்ள அவர் பாலஸ்தீனியர்கள் ஹமாசினை அழிக்கவேண்டும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுதலை செய்யவேண்டும் இதுவே யுத்தத்தினை முடிவிற்கு கொண்டுவருவதற்கான ஒரே வழி என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/210895

  10. பல ஆண்டுகளின் பின் ரஷ்யாவின் மிகப்பெரிய இராணுவ அழைப்பு! ரஷ்யா தனது இராணுவத்தின் அளவை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 18-30 வயதுடைய 160,000 ஆண்களுக்கு படையில் இணைந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். இது 2011க்குப் பின்னரான ரஷ்யாவின் அதிகபட்ச எண்ணிக்கையிலான கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பு ஆகும். ரஷ்யா வசந்த காலத்திலும் இலையுதிர் காலத்திலும் கட்டாய இராணுவ சேவைக்கு அழைப்பு விடுக்கிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, அதிகபட்ச வயதை 27 இலிருந்து 30 ஆக உயர்த்துவதன் மூலம், கட்டாய இராணுவ சேவைக்கு கிடைக்கக்கூடிய இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் இளைஞர்கள் தபால் மூலம் வழங்கப்படும் அழைப்பு அறிவிப்புகளுடன், அரசு சேவை வலை…

  11. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ருஷ்டி அபௌலூஃப் & அலெக்ஸ் பாய்ட் பதவி, பிபிசி செய்திகள் 8 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேலுடனான போர் தொடங்கியதிலிருந்து காஸாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரை எதிர்த்து மிகப்பெரிய அளவில் நடந்த போரட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். ஹமாஸ் அதிகாரத்தில் இருந்து வெளியேறக் கோரி மக்கள் வீதிகளில் இறங்கினர். துப்பாக்கி, தடி போன்றவற்றை ஏந்திக்கொண்டு முகமூடி அணிந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சிலர், போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக கலைத்து, அவர்களில் பலரைத் தாக்கினர். ஹமாஸை விமர்சிக்கும் ஆர்வலர்களால் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட வீடியோ பதிவுகளில், செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) அன்று வடக்கு காஸாவில் உள்ள பெய்ட் லாஹியாவின் தெருக்கள…

  12. ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் செய்யாவிட்டால் குண்டு வீசுவோம் – ட்ரம்ப் ‍எச்சரிக்கை! ஈரான் தனது அணுசக்தி திட்டம் தொடர்பாக வொஷிங்டனுடன் ஒரு உடன்பாட்டிற்கு வரவில்லை என்றால், குண்டுவீச்சு மற்றும் இரண்டாம் நிலை வரிகளை விதிக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை (30) ஈரானை அச்சுறுத்தினார். கடந்த வாரம் வொஷிங்டனுடனான நேரடி பேச்சுவார்த்தைகளை ஈரான் நிராகரித்ததிலிருந்து ட்ரம்ப் முதல் முறையாகப் பேசியபோது, அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் பேசி வருவதாக அவர் NBC செய்தி நிறுவனத்திடம் கூறினார். ஆனால் அது குறித்து விரிவாக எதுவும் கூறவில்லை. புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுமாறு தெஹ்ரானை வலியுறுத்தி ட்ரம்ப் எழுதிய கடிதத்திற்கு ஓமன் மூலம் ஈரான் பதில் அனுப்பியது. அ…

  13. பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹெஸ்பொல்லா அதிகாரி மரணம்! பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (01) இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஒரு ஹெஸ்பொல்லா அதிகாரி உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாக லெபனான் பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது. இது இஸ்ரேலுக்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லாவிற்கும் இடையிலான ஒரு நிலையற்ற போர்நிறுத்தத்தை மேலும் சோதிக்கிறது. உயிரிழந்த அதிகாரி ஹசன் பிடெய்ர் என்றும், அவர் ஹெஸ்பொல்லா பிரிவு மற்றும் ஈரானின் குட்ஸ் படையின் உறுப்பினர் என்றும், அவர் “இஸ்ரேலிய பொதுமக்களுக்கு எதிராக குறிப்பிடத்தக்க மற்றும் உடனடி பயங்கரவாத தாக்குதலை” திட்டமிடுவதில் பாலஸ்தீனிய குழு ஹமாஸுக்கு உதவியதாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது. பிடெய்ர் தனது மகனுட…

  14. ட்ரம்ப் வரி விதிப்பு: நாளை முதல் கனடாவில் எந்தெந்த பொருட்கள் விலை உயரும்? அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றது முதலே வரி விதிப்பு என்பது பாரிய பேசுபொருளாக இருந்து வருகிறது. அதிலும் அயல் நாடான கனடா மீது வர்த்தக போரை அறிவிக்கும் வண்ணம் இரு நாடுகளும் பிரச்சனையை பெரிதாக்கி கொண்டே செல்கிறது. இந்நிலையில் டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பு மிரட்டல் வெறும் மிரட்டலாக இல்லாமல் நாளை முதல் கனேடிய மக்கள் மீது உண்மையாகவே தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்தெந்த பொருட்கள் விலை உயரும்? ட்ரம்பின் வரி விதிப்பால் உடனடியாக எந்தெந்த பொருட்கள் விலை உயரக்கூடும் என்று பார்க்கலாம். முதலில் பாதிக்கப்பட இருப்பது மளிகைப்பொருட்கள்தான். அதுவும் குறிப்பாக எளிதில் கெட்டுப்போ…

  15. 3 வது முறையாகவும் ஜனாதிபதியாக ஆசைப்படும் ட்ரம்ப் மூன்றாவது முறையாகவும் அமெரிக்க ஜனாதிபதியாக வர வேண்டும் என்ற தனது விருப்பத்தை ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார். இதேவேளை நான் கூறுவது நகைச்சுவை அல்ல என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவை பொறுத்தவரை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடக்கும். அரசியலமைப்பின் 22 வது திருத்த விதிகளின்படி எந்தவொரு நபரும் இரண்டு முறைக்கு மேல் ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படக்கூடாது. தற்போது கடந்தாண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்று, 2ஆவது முறையாக ஜனாதிபதியானார். 3ஆவது முறையாகவும் ஜனாதிபதி பதவிக்கு ட்ரம்ப் போட்டியிடுவார். ஆனால் அமெரிக்க தேர்தல் விதிப்படி போட்டியிட முடியாத சூழல் நிலவுகிறது என்ற தகவல் வெளியாகி இருந்…

  16. Published By: DIGITAL DESK 3 30 MAR, 2025 | 04:14 PM ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் புட்டினின் உத்தியோகபூர்வ பாதுகாப்பு வாகனங்களில் ஒன்றான கார் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. ரஸ்யாவைச் சேர்ந்த ஆரஸ் நிறுவனம் தயாரித்த இந்த ஆரஸ் லிமோசின் கார் மொஸ்கோ வீதியில் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கார் ரஸ்ய உளவுத்துறையான (FSB)எப்.எஸ்.பி. தலைமையகத்திற்கு அருகே நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், திடீரென அந்த கார் வெடித்துத் தீப்பிடித்தது. முதலில் கார் எஞ்சனில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், பிறகு அது மெல்ல உட்புறம் வரை பரவியதாகத் கூறப்படுகிறது. இந்த கார் ரஸ்ய ஜனாதிபதி மாளிகையின் ஜனாதிபதி சொத்து முகாம…

  17. ஜப்பானை காவு கொள்ள காத்திருக்கும் “மெகா நிலநடுக்கம்” ஜப்பானின் பசுபிக் கடற்கரையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு “மெகா நிலநடுக்கம்” ஏற்பட்டால், ஜப்பானின் பொருளாதாரம் 1.81 டிரில்லியன் டாலர்களை இழக்க நேரிடும். அதேநேரம், இது பேரழிவு தரும் சுனாமிகளைத் தூண்டக்கூடும், நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழும் மற்றும் சுமார் 300,000 மக்களைக் உயிரிழக்கக் கூடும் என்று திங்களன்று (மார்ச் 31) ஒரு புதிய மதிப்பீட்டில் ஜப்பானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் தெற்கு ஜப்பானில் ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் 14 பேர் காயமடைந்தனர். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கிட்டத்தட்ட பா…

  18. ஐக்கிய அரபு இராச்சியத்திற்குச் செல்லும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 டிரில்லியன் டொலர்களை அமெரிக்க நிறுவனங்களில் முதலீடு செய்ய உள்ளதாக சவுதி அரேபிய அரசு தெரிவித்திருந்த நிலையிலேயே டொனால் ட்ரம்பின் பயண அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் நடந்த நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திடும் விழாவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) மற்றும் சவுதி அரேபியாவுக்குச் செல்லும் திட்டத்தை தெரிவித்தார். ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டபடி மே மாதத்தில் இப் பயணம் நடக்குமா என்று கேட்டபோது, அது அடுத…

  19. 31 MAR, 2025 | 05:00 PM எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் 14 வயதுக்குட்பட்ட சிறுமி உட்பட பல பெண் நோயாளர்களை கையடக்கத் தொலைபேசி மூலம் படம்பிடித்தும், வீடியோ எடுத்தும் உள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யபட்டுள்ளார். வட மேற்கு ஜேர்மனியில் வசித்துவரும் 43 வயதுடைய ஹனோ என்னும் அறுவை சிகிச்சை நிபுணர் 190 சந்தர்ப்பங்களில் இப்படி பெண்களை படம் பிடித்துள்ளதுடன், பலரை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக ஜேர்மன் செய்தித்தாளான பைல்ட் (BILD) செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த அறுவை சிகிச்சை நபுணரிடமிருந்து சுமார் ஒரு இலட்சம் அளவிலான பெண்களின் புகைப்படங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். இவர் பல ஆண்டுகாலமாக பெண்களை படம் பிடித்ததாகவும், பலரை துஷ்பிரயோகம் செய்தாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. …

  20. இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் - ஹமாஸ் அரசியல் தலைவர் உயிரிழப்பு! தெற்கு காசாவின் கான் யூனிஸில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் சலா அல்-பர்தவீல் கொல்லப்பட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காசா பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல், இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தொடங்கி நடத்தி வருகிறது. ஜனவரி மாதம் ஆரம்பமான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாகப் பாலஸ்தீன சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் அலுவலகத்தில் உறுப்பினராக இருக்கும் பர்தவீலுடன் சேர்ந்த…

  21. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகின் மிக நீண்ட கால மரண தண்டனைக் கைதியான தனது சகோதரனை விடுவிக்கப் போராடுவதில், 91 வயதான ஹிடெகோ ஹகமாடா தனது வாழ்நாளில் பாதி நாட்களைக் கழித்தார். கட்டுரை தகவல் எழுதியவர், ஷைமா கலீல் பதவி, டோக்யோ செய்தியாளர், ஹமாமட்சுவில் இருந்து கடந்த 2024 செப்டம்பரில் இவாவோ ஹகமாடா குற்றமற்றவர் என நீதிமன்றம் அறிவித்தது. ஆனால், மரண தண்டனை விதிக்கப்பட்டு உலகின் மிக நீண்ட காலம் போராடிய ஒரு கைதியாக அவரால், அந்தத் தருணத்தில் மகிழ்ச்சிகொள்ள முடியவில்லை. "அவர் விடுவிக்கப்பட்டதாக நான் அவரிடம் சொன்னேன். அவர் அமைதியாக இருந்தார்" என்று அவரது 91 வயதான சகோதரி ஹிடெகோ ஹகமாடா, ஜப்பானின் ஹமாமட்சுவில் உள்ள அவரது…

  22. புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைய பிரான்ஸ் பொலிசார் உதவுவதாக பிரித்தானியா தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்வோருக்கு உதவும் பிரான்ஸ் பொலிசார் வடபிரான்சிலுள்ள Gravelines என்னுமிடத்துக்கு அருகிலுள்ள கடற்கரை ஒன்றிலிருந்து சுமார் 100 பேருடன் சிறுபடகொன்று புறப்பட்டுள்ளது. படகு பிரித்தானிய கடல் எல்லையைத் தொட்ட நேரத்தில், பிரெஞ்சு பொலிசார் அந்தப் படகிலிருந்த 24 பேரை தங்கள் படகில் ஏற்றிக்கொண்டு பிரெஞ்சுக் கரைக்குத் திரும்பினார்களாம். புறப்படும்போது, அந்த படகிலிருந்தவர்களிடம், ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் காத்திருங்கள், பிரித்தானிய அதிகாரிகள் உங்களை மீட்பார்கள் என்று கூறிவிட்டுச் சென்றார்களாம் பிரெஞ்சு அதிகாரிகள். திருப்பி அழைத்துக்கொள்ளப்ப…

    • 1 reply
    • 354 views
  23. Published By: DIGITAL DESK 3 28 MAR, 2025 | 12:00 PM அவுஸ்திரேலியாவில் மே மாதம் 3 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வெள்ளிக்கிழமை (28) அறிவித்துள்ளார். ஐந்து வாரங்கள் தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது. தொழிற் கட்சி சார்பாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் லிபரல் கட்சி சார்பாக பீட்டர் டட்டனும் போட்டியிடுகிறார்கள். இந்த இரு பிரதான கட்சிகளுக்கும் இடையே ஒரு சிறிய வித்தியாசம் இருக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. வெற்றி பெறும் கட்சி கடந்த தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்ற சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் அல்லது சிறு கட்சிகளுடன் இணைந்து ஆட்சி…

  24. 28 MAR, 2025 | 11:20 AM அமெரிக்காவுடனான ஆழமான உறவுகளின் யுகம்முடிவிற்கு வந்துவிட்டது என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கனடாவுடனான உறவுகளை டிரம்ப் முழுமையாக மாற்றிவிட்டார் என தெரிவித்துள்ள கனடா பிரதமர் எதிர்காலத்தில் எவ்வாறான வர்த்தக உடன்பாடுகள் ஏற்பட்டாலும் இருநாடுகளிற்கும் இடையிலான உறவுகளில் மாற்றம் ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார். நமது பொருளாதாரங்களின் ஆழமான ஓருங்கிணைப்பு, இறுக்கமான பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பை அடிப்படையாகொண்ட இரு நாடுகளிற்கும் இடையிலான உறவு பழைய உறவு முடிந்துவிட்டது என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார். டிரம்பின் கார் வரிகள் நியாயப்படுத்த முடியாதவை என தெரிவித்துள்ள அவர் அவை இரண்டு நாடுகளிற்கும் இடையில் ஏற்கனவே உள்ள உறவுகளை மீறும் …

  25. உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர தற்காலிக நிர்வாகம் – புட்டின் பரிந்துரை! புதிய தேர்தல்களை நடத்தவும், போரில் ஒரு தீர்வை எட்டுவதற்கான முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் உக்ரேனை ஒரு தற்காலிக நிர்வாகத்தின் கீழ் வைக்க வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பரிந்துரைத்ததாக மொஸ்கோ செய்தி நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை (28) அதிகாலை செய்தி வெளியிட்டன. ரஷ்யாவுடனான உறவுகளை மீண்டும் நிலைநாட்டுவதன் மூலமும், மொஸ்கோ மற்றும் கீவ் ஆகிய இரு நாடுகளுடனும் தனித்தனி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதன் மூலமும் மோதலுக்கு ஒரு தீர்வை உருவாக்க அமெரிக்கா முயற்சிக்கும் நிலையில், வடக்கு துறைமுகமான முர்மான்ஸ்க்கு விஜயம் செய்தபோது புட்டினின் மேற்கண்ட கருத்துக்கள் வந்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.