உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
அணு ஆயுத ஒழிப்பு: "ஏவுகணை தளத்தை மூட ஒப்புக்கொண்டது வடகொரியா" பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS அணு ஆயுத ஒழிப்பு பற்றிய பேச்சுவார்த்தைகளுக்காக வட கொரிய தலைநகரில் இரு நாட்டு உயர் தலைவர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது அந்த சந்திப்பின்போது, கிம் ஜாங்-உன், தனது நாட்டின் முக்கிய ஏவுகணை சோதனை மற்றும் ஏவுதளங்களை மூட ஒப்புக் கொண்டதாக தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்துள்ளார். பியாங்யாங்கில் நடைபெற்ற சந்திப்பிற்கு பிறகு, அணு ஆயுத ஒழிப்பு என்ற இலக்கை அடைவதற்கான வழிமுறைகளை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக மூன் ஜே இன் தெரிவித்தார். இந்த ஒப்பந்தமானது, கொரிய தீபகற்பத்தில் ராணுவ அமைதியை இலக்காக கொண்ட "மு…
-
- 0 replies
- 645 views
-
-
பிரதான ஏவுகணை தளத்தை மூட வடகொரிய தலைவர் ஒப்புதல், இந்தியாவில் நிற, இன வேற்றுமைகளை சுமந்தபடி தாயகம் திரும்பும் ஆஃப்ரிக்கர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 424 views
-
-
புகையில்லை, 140கி.மீ வேகம்; சூழலை பாதிக்காத உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியில் வெள்ளோட்டம் YouTube ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் - படம்: ஏஎப்பி சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாதவகையில், ஹைட்ரஜனில் ஓடும் உலகின் முதல் ரயில் ஜெர்மனியில் நேற்று சோதனை ஓட்டம் செய்து பார்க்கப்பட்டது. மின்சாரத்திலும், டீசலிலும் தற்போது ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், சூழலுக்கு விளையும் கேடுகளை குறைக்கும் வகையில் இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வழக்கமான ரயில்களைக் காட்டிலும் செலவு அதிகம் என்கிற போதிலும் எந்தவிதத்திலும் கார்பன் டை ஆக்ஸைடை வெளியாடாத ரயிலாக இருக்கும். நீலநிறத்தில் வடிவமைக்கப்பட்…
-
- 1 reply
- 932 views
-
-
நியாயப்படுத்த முடியாததை நியாயப்படுத்துவதை நிறுத்தவேண்டும் ரொஹிங்கியா அகதிகள் நெருக்கடி தொடர்பில் மியன்மார் அரசாங்கம் கடைப்பிடிக்கின்ற அணுகுமுறையை சர்வதேச சமூகம் கடுமையாகக் கண்டனம் செய்துகொண்டிருக்கிறது. அந்நாட்டின் தலைவி ஆங் சான் சூகீ மீது பாரதூரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.இறுதியாக அவர் இப்போது ரொஹங்கியா நெருக்கடியை சிறப்பாகக் கையாண்டிருக்க முடியும் என்பதை பகிரங்கமாக ஒத்துக்கொண்டிருக்கிறார்.ஆனால், அவரின் இந்த ஒப்புதல் மியன்மார் இராணுவத்தின் கொடுமைகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அயல்நாடான பங்களாதேஷுக்குத் தப்பியோடிய 7 இலட்சத்துக்கும் அதிகமான ரொஹிங்கியாக்களுக்கு போதுமான ஆறுதல் வார்த்தையாக இருக்கப்போவதில்லை. …
-
- 0 replies
- 436 views
-
-
லண்டனில் மசூதிக்கு அருகில் கார்தாக்குதல் லண்டனின் வடமேற்கு பகுதியில் உள்ள மசூதிக்கு அருகில் பொதுமக்கள் மீது காரொன்று மோதியதில் மூவர் காயமடைந்துள்ளனர். பிரென்ட் என்ற பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது . காரில் காணப்பட்ட மூன்று ஆண்களும் பெண்ணொருவரும் இஸ்லாமிய சமூகத்தவர்களிற்கு எதிராக கோசங்களை எழுப்பிய பின்னர் காரால் பொதுமக்கள் மீது மோதினர் என தகவல்கள் வெளியாகின்றன. அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து காரில் தப்பிச்சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் சிக்கிய மூவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை பயங்கரவாதம் என்ற கோணத்தில் விசாரணை செய்யவில்லை என குறிப்பிட்டுள்ள காவல்துறையினர் வெறுப்புணர்வினால் இடம்பெற்ற குற்றச்செயல் என…
-
- 0 replies
- 426 views
-
-
வர்த்தக போர்: டிரம்ப் முடிவுக்கு பதிலடி கொடுக்கும் சீனா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். அமெரிக்கப் பொருட்கள் மீது சீனா பதில் வரி படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 20 பில்லியன் மதிப்பிலான பொருட்கள் மீது…
-
- 0 replies
- 312 views
-
-
வெளிநாட்டினர் பணி ஓய்வுக்கு பிறகும் அங்கே வசிக்க நீண்டகால குடியிருப்பு விசா வழங்க அரபு எமிரேட்ஸ் நாடுகள் முடிவு செய்துள்ளது. அரபு எமிரேட்ஸ் நாடுகள் வெளிநாட்டினரை ஈர்க்க தங்களது விசா முறையில் பல்வேறு விதிமுறைகளை தளர்த்திக் கொண்டு வருகிறது. அண்மையில் குறுகிய கால விசிட்டிங் விசாவை அறிமுகம் செய்துள்ளது. இந்த விசா சுற்றுலா செல்பவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். அதேபோன்று தற்போது வெளிநாட்டினர் பணி ஓய்வுக்கு பிறகும் அங்கே வசிக்க நீண்டகால குடியிருப்பு விசா வழங்க முடிவு செய்துள்ளது. இது 2019ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கத்தார் நாடு குறிப்பிட்ட வெளிநாட்டினருக்கு நிலையான குடியுரிமை வழங்க வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட…
-
- 0 replies
- 537 views
-
-
தீவிரமாகும் இஸ்ரேல் - பாலத்தீன மோதல்கள், பிரிட்டனை உலுக்கிய காட்டு அணில்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 436 views
-
-
14 வீரர்களுடன் சென்ற ரஷ்ய போர் விமானம் சிரியாவில் மாயம் மாதிரி படம் ரஷ்யாவைச் சேர்ந்த போர் விமானம் ஒன்று சிரியாவில் மாயமாகி உள்ளதாக அந் நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில், "ரஷ்யாவின் போர் விமானமான Russian Il-20, 14 வீரர்களுடன் சிரியாவிலுள்ள ரஷ்யாவின் ராணுவ தளமான ஹிமியம் விமானப்படை தளத்திற்குத் திரும்பியது. அப்போது சிரியா கடற்கரையில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் மத்திய தரைக்கடல் பகுதியில் வந்தபோது விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமானத்தைத் தேடும் பணி நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் விமானம…
-
- 3 replies
- 1.2k views
-
-
அணு ஆயுத நீக்கப் பேச்சுவார்த்தை: வட கொரியா சென்ற தென்கொரிய அதிபர் அணு ஆயுத ஒழிப்பு பற்றிய பேச்சுவார்த்தைகளுக்காக வட கொரிய தலைநகரில் தென் மற்றும் வட கொரிய தலைவர்கள் சந்தித்துள்ளனர். படத்தின் காப்புரிமைREUTERS இந்த ஆண்டு தொடக்கம் முதல் தென் கொரியா மற்றும் அமெரிக்காவோடு இதற்கு முன்னர் மேற்கொள்ளாத வகையிலான கூட்டங்களை வட கொரியா நடத்தி வருகிறது. இருதரப்பும் பொதுவான நோக்கங்களை மட்டுமே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், வட கொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைகள் தேக்கமடைந்துள்ளன. மத்தியஸ்தராக செயல்படுவதில் தென் கொரியா முக்கிய பங்காற்றி வருகிறது. வட கொரியாவில் 3 நாட்கள் பயணம்…
-
- 0 replies
- 546 views
-
-
தாய்லாந்து குகை: எலன் மஸ்க் மீது மீட்புதவியாளர் வழக்கு கடந்த ஒரு சில மணிநேரங்களில் வெளியான உலகச் செய்திகளை சுருக்கமாகத் தொகுத்து வழங்குகின்றோம். எலன் மஸ்க் மீது தாய் குகை மீட்புதவியாளர் வழக்கு படத்தின் காப்புரிமைAFP தொழில்நுட்ப ஜாம்பாவானும், பில்லினியருமான எலன் மஸ்க் மீது தாய்லாந்திலுள்ள தாம் லூங் குகையில் சிக்கிய சிறுவர்களை காப்பாற்றிய பிரிட்டனை சேர்ந்த முக்குளிப்பாளர் ஒருவர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். பிரிட்டனை சேர்ந்த முக்குளிப்பாளரை குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்தவர் என்று எலன் மஸ்க் மீண்டும் மீண்டும் கூறி வருவதால் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் …
-
- 0 replies
- 720 views
-
-
கைமாறியது டைம் வாரஇதழ்: ரூ.1,395 கோடிக்கு வாங்கிய பெரும் கோடீஸ்வரர் YouTube 95 ஆண்டுகள் பாரம்பரியமும், உலகப்புகழ் பெற்றதுமான டைம் வாரஇதழ் மெரிடித் கார்பிடம் இருந்து பெரும் கோடீஸ்வரரான சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மார்க் பெனிஆப், அவரின் மனைவி லினியும் ரூ.1,395 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளனர். கடந்த 8 மாதங்களாக இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சு முடிவுக்குவந்ததையடுத்து, 19 கோடி அமெரிக்கடாலருக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த டைம் வார ஏடு கடந்த 1923-ம் ஆண்டு ஹென்றி லூஸ் என்பவரால் தொடங்கப்பட்டது. இதன் ஐரோப்பிய பதிப்பகம் லண்டனில் இருந்து பிரசுரமாகி வருகிறது. கடந்த 200…
-
- 0 replies
- 423 views
-
-
2,000 கோடி டாலர் மதிப்புள்ள சீன பொருள்கள் மீது கூடுதல் வரி விதித்த அமெரிக்கா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 2,000 கோடி டாலர் மதிப்புள்ள சீனப் பொருள்கள் மீது கூடுதல் வரிகளை விதித்துள்ளது அமெரிக்கா. இதன் மூலம் அமெரிக்கா-சீனா இடையே நடந்துகொண்டிருக்கும் வணிகப் போரை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES 6,000 பொருள்கள் மீது இந்த கூடுதல் இ…
-
- 0 replies
- 525 views
-
-
உலகின் தலைசிறந்த பொருளாதார மையம் நியூயார்க்: பெருமையை பறிகொடுத்தது லண்டன் நியூயார்க் கோப்புப் படம் - படம்: ராய்ட்டர்ஸ் உலகின் தலைசிறந்த பொருளாதார மையம் என்ற பெருமையை லண்டன் நகரத்திடம் இருந்து நியூயார்க் பறித்துள்ளது. உலகின் மிகச்சிறந்த பொருளாதார நிறுவனங்கள், வர்த்தக கம்பெனிகள் லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தன. உலக அளவில் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள லண்டன் வசதியான பகுதியாக இருந்ததால், உலகின் தலை சிறந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இங்கு தங்கள் தலைமையிடத்தை வைதது இருந்தன. இந்த நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக இங்கிலாந்து நாடாளுமன்றம் 2016-ம் ஆண்டு முடிவெடுத்தது. இ…
-
- 2 replies
- 717 views
-
-
தெற்கு சீனாவில் மங்கூட் சூறாவளியால் நான்கு பேர் பலி, கென்யா மலைப்பகுதிகளில் கலாசார முரண்களை கடந்து வருமானம் ஈட்டும் பழங்குடியின பெண்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 351 views
-
-
"இது நடந்தால் இனி மீம்களே இருக்காது!"- மீம் கிரியேட்டர்களுக்கு புதுசிக்கல் #CopyrightDirective அரசாங்கங்களின் கொள்கைகள் எப்படி இன்டர்நெட்டைச் சிதைக்கின்றன என்பதைச் சமீபத்தில் பார்த்தோம். தற்போது அதற்கு மற்றுமொரு உதாரணமாக வந்திருக்கிறது ஐரோப்பிய யூனியனின் புதிய முடிவு ஒன்று. 'Distracted Boyfriend' மீமின் வரலாறு உங்களுக்குத் தெரியுமா? இந்தப் பெயர் புதிதாக இருக்கலாம். ஆனால், இந்த மீம் டெம்ப்ளேட்டை நிச்சயம் எங்கேனும் பார்த்திருப்பீர்கள். இதுதான் அந்த டெம்ப்ளேட். ( இந்த மீம்தான் இந்தக் கட்டுரையின் மொத்த சாராம்சமும் கூட!) ஸ்பெயினைச் சேர்ந்த அன்டோனியோ கில்லம் என்ற புகைப்படக்கலைஞர் 2015-ல் எடுத்த போட்டோதான் இத…
-
- 1 reply
- 616 views
-
-
நெருங்குகிறது ஃபுளோரன்ஸ் சூறாவளி: பேரழிவு அச்சத்தில் அமெரிக்கா
-
- 10 replies
- 2k views
-
-
தென் சீனாவில் கரையை கடந்தது மாங்குட் சூறாவளி - 25 லட்சம் மக்கள் இடப்பெயர்வு பகிர்க பிலிப்பைன்ஸை கடுமையாக தாக்கிய அதிதீவிர மாங்குட் சூறாவளி சீனாவின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட குவாங்டாங் மாகாணத்தில் கரையை கடந்ததுடன் அங்கு கடும் சேதத்தை விளைவித்து வருகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபிலிப்பைன்ஸை தாக்கிய மாங்குட் சூறாவளியால் வெள்ளம் சூழ்ந்த ஒரு தெருவில் டயர் ஒன்றின் மூலம் செல்லும் சிறுவர்கள். அந்த மாகாணத்தில் சுமார் 162 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதுடன், கடும் மழையும் பொழிந்து வருகிறது. சுமார் 2.45 மில்லியன் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். சீ…
-
- 0 replies
- 436 views
-
-
சீனாவின் உதவி பெறும் அண்டை நாடுகளுக்கு இந்திய இராணுவத் தளபதி எச்சரிக்கை சீனாவிடம் இருந்து உதவி பெறும் நாடுகள், எதுவுமே இலவசம் அல்ல என்பதை தெரிந்து கொள்வார்கள் என்று எச்சரித்துள்ளார் இந்திய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் பிபின் ராவத். இந்தியாவின் அண்டை நாடுகள் அண்மையில் சீனாவுடனான உறவுகளை வளர்த்துக் கொள்வது குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகள் இந்தியாவின் பக்கம் சாய வேண்டும் என்றும், ஏனென்றால் அது தான் புவியியல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிம்ஸ்ரெக் அமைப்பு நாடுகளின் இராணுவத்தினர் பங்கேற்ற, ஒரு வார கால, ‘Military Exercise 18’ கூட்டுப் பயிற்சியின் நிறைவு நிகழ்வில் உரை…
-
- 0 replies
- 407 views
-
-
தொலைபேசிகளை நீண்ட நேரம் பயண்படுத்தும் பெற்றோர்களுக்கு எதிராக குழந்தைகள் போராட்டம் ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் பெற்றோர்கள் தொலைபேசிகளே கதி என இருந்ததால் 7 வயதே நிரம்பிய குழந்தைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெர்மனி நாட்டில் அமைந்துள்ள ஹம்பர்க் என்ற நகரில் ஏழு வயது நிரம்பிய குழந்தைகள் தங்களது பெற்றோர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. “போராட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்புகிறோம். ஏனென்றால் நீங்கள் எப்போதும் கையட்க்க தொலைபேசிகளை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திக்கொண்டு அவர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளன…
-
- 0 replies
- 446 views
-
-
அமெரிக்காவும் உலகமும் எதிர்நோக்கும் சவால்கள் YouTube அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை கோபப்படுத்த சின்ன விஷயமே போதும். அப்படி இருக்கும்போது, கடந்த செப்டம்பர் 5-ம் தேதி ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் பெயர் குறிப்பிடாமல் வெளியான கட்டுரையைப் பார்த்தால் சும்மா விடுவாரா.. அவரையே அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதிபராக இருக்கும் ட்ரம்ப் நல்லவர் இல்லை என்பதோடு அவர் எடுக்கும் பல முடிவுகள் நாட்டுக்கே பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என கட்டுரையில் கூறப்பட்டிருந்தது. இதில் ட்ரம்ப்புக்கு கோபம் ஏற்படுத்திய இன்னொரு விஷயம் என்னவென்றால் அந்தக் கட்டுரையை எழுதியவர் பெயர் இல்லை. வெள்ளை மாளிகையின் மூத்த நிர்வாக உறுப்பினர் என்று …
-
- 0 replies
- 507 views
-
-
புளோரன்ஸ் புயல்: வடக்கு கரோலினாவை பேரழிவு பாதித்த இடமாக அறிவித்த டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம். புளோரன்ஸ் புயல்: வடக்கு கரோலினாவை பேரழிவு பாதித்த இடமாக அறிவித்த டிரம்ப் படத்தின் காப்புரிமைEPA புளோரன்ஸ் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு கரோலினாவை பேரழிவு பாத…
-
- 0 replies
- 419 views
-
-
சட்டவிரோதமான முறையில் 4 சிங்களவர்களை இத்தாலிக்கு கூட்டிச்செல்ல முயன்ற இலங்கை ராஜதந்திரி கைது - சமகளம் சட்டவிரோதமான முறையில் 4 சிங்களவர்களை இத்தாலிக்கு கூட்டிச்செல்ல முயன்ற இலங்கை ராஜதந்திரி ஒருவரை இத்தாலிய போலீசார் கைது செய்துள்ளனர். டுபாயில் இருந்து தனது மனைவி மற்றும் இரண்டு இளைஞர்கள் மற்றும் யுவதிகளுடன் இத்தாலி விமான நிலையத்தில் இறங்கிய இந்த 50 வயது நபர், தனது ராஜதந்திர கடவுசீட்டை முதலில் காண்பித்த பின்னர் தனது மனைவியின் மனைவியின் கடவுசீட்டை காண்பித்துள்ளார். பின்னர் ஏனைய இரண்டு இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் கடவு சீட்டுக்களை காட்டி யுவதிகள் இருவரும் தனது மகள்கள் என்றும் இரண்டு இளைஞர்கள் தனது பெறா மகன்கள் என்றும் கூறி அவர்கள் இத்தா…
-
- 2 replies
- 636 views
-
-
பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய சூறாவளி கடுமையான சேதங்களை உண்டாக்கியுள்ளது. இதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிபரின் அரசியல் ஆலோசகர் பிரான்சிஸ் டோலென்சியோ தெரிவித்துள்ளார். மாங்குட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் சூறாவளி பிலிப்பைன்ஸின் முக்கியத் தீவான லூசான் தீவைத் தாக்கிவிட்டு மேற்கே சீனாவை நோக்கி நகர்ந்து வருகிறது. பிலிப்பைன்ஸ் மக்களால் 'ஒம்போங்' என்று அழைக்கப்படும் இந்த சூறாவளியின் இப்போதைய வேகம் மணிக்கு 30 கிலோ மீட்டராக உள்ளது. டூகெகரோ நகரில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து கட்டடங்களும் சேதமடைந்துள்ளன என்றும் தொலைத்தொடர்பு அமைப்புகள் முற்றிலும் செயல்படவில்லை என்றும் அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். …
-
- 1 reply
- 546 views
-
-
இந்தச் சுரண்டல், இந்தியாவுக்கு நல்லதா? YouTube உலக அரங்கில், சீனா தொடர்ந்து எதிர்மறை விளைவுகளைச் சந் தித்து வருகிறது. அதன் தொடர்ச்சி யாக இரண்டு நாடுகள், சீனாவுடன் செய்துகொண்ட பொருளாதார உடன்படிக்கையை மறுபரி சீலனை செய்யப் போவதாக அறி வித்துள்ளன. ஒன்று - மலேசியா; மற்றது - பாகிஸ்தான். தனது கனவுத் திட்டமாக சீன அரசு பிரகடனப்படுத்தும் ‘ஒரே மண் டலம், ஒரே பாதை' கீழான இரண்டு திட்டங்களை மேற்கொண்டு செயல்படுத்தப் போவதில்லை என்று மலேசிய அரசு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. ‘கிழக் குக் கடற்கரை ரயில் இணைப்பு' - தென் சீனக் கடலுடன், மலேசியா வின் மேற்குப் பகுதியில் உள்ள மிக முக்கிய துறைமுகங்களை இணைக்கும் திட்டம்…
-
- 0 replies
- 572 views
-