உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27030 topics in this forum
-
இஸ்ரேலின் விசேட படை பிரிவின் தாக்குதல்- ஹமாஸ் தளபதி பலி காஸா பள்ளத்தாக்கில் இஸ்ரேல் மேற்கொண்ட நடவடிக்கையில் ஹமாஸ் அமைப்பின் உள்ளுர் தளபதியொருவர் உட்பட ஆறு பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் இதனை உறுதி செய்துள்ளதுடன் தனது விசேட படைப்பிரிவொன்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் இதன் போது தனது படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளது. கான் யூனிஸ் என்ற பகுதியில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. ஹமாஸ் அமைப்பு இந்த தாக்குதலை கோழைத்தனமானது என வர்ணித்துள்ளது. காஸா பள்ளத்தாக்கிற்குள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரிற்குள்ளிலிருந்து இஸ்ரேலிய விசேட படைப்பிரிவினர் தாக்குதலை மேற்கொண்டனர் என ஹமாஸ் தெரிவித்துள்ளது இதன் பின்னர் இஸ்ர…
-
- 0 replies
- 406 views
-
-
பாரிஸ் நகரில் மேலாடை இல்லாமல் டிரம்ப் காரின் குறுக்கே பாய்ந்த பெண்கள் கைது உலகப் போர் நூற்றாண்டு நினைவுநாள் அஞ்சலி கூட்டத்துக்கு சென்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காரின் குறுக்கே பாய்ந்த இரு பெண்களை போலீசார் கைது செய்தனர். பாரிஸ்: பிரான்ஸ் நாட்டு தலைநகரான பாரிசில் உள்ள ‘ஆர்க் டி டிரியோம்பே’ போர் நினைவு சின்னத்தில் சுமார் உலகில் உள்ள சுமார் 70 நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் இன்று அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்க அத…
-
- 3 replies
- 966 views
-
-
உயிர்த்தியாகம் செய்தவர்களுக்காக பேரணியாக சென்று மரியாதை செலுத்திய உலகத் தலைவர்கள்! மில்லியன் கணக்கான போர் வீரர்கள் மரணித்த முதலாம் போரில் தத்தமது நாட்டு வீரர்களின் பங்களிப்பதை பறைசாற்றும் விதமாக உலகத் தலைவர்கள் பாரிஸ் நகரில் கூடியுள்ளனர். அந்த வகையில் நிகழ்வை தலைமையேற்று நடத்தும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், உலகத் தலைவர்களை ஒன்றுகூட்டி மழையையும் பாராமல் நடைபவனி ஒன்றையும் நடத்தியுள்ளார். வான் வழியில் ஜெட் விமானங்கள் பறந்து மலர்களை தூவி அஞ்சலி செலுத்த பாரிஸ் பெருந்தெரு வழியே அரச தலைவர்கள் அணிவகுத்துச் செல்கின்றனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஜேர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கல், உட்பட பல இளவரசர்கள், மு…
-
- 0 replies
- 617 views
-
-
பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து : பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர் பாகிஸ்தானில் நேற்று முன்தினம் கராச்சி நகரில் இருந்து பஞ்ச்குர் நகருக்கு பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் சென்றது. இந்த விமானத்தில் 48 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் தரை இறங்கியபோது சற்றும் எதிர்பாராத விதத்தில் அதன் இரு டயர்களிலும் காற்று இறங்கி விட்டது. இதனால் விமானம் சறுக்கியது. அது, ஓடுதளத்தை கடந்து சென்று நின்றது. இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஓடுதளத்தின் தரைப்பரப்பு மிக மிக மோசமான நிலையில் இருந்ததால் தான் விமானத்தின் டயர்களில் காற்று இறங்கிவிட்டது என தகவல்கள் கூறுகின்றன. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் …
-
- 0 replies
- 382 views
-
-
அவுஸ்ரேலியாவில் "ஸ்ட்ரோபெரி" பழங்களில் ஊசி – பெண்ணொருவர் கைது அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் ஸ்ட்ரோபெரி பழங்களில் ஊசிகள் இருந்த சம்பவம் தொடர்பாக பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு நீண்ட, கடினமான விசாரணைக்கு பின்னர் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் ஸ்ட்ரோபெரி பழங்களில் ஊசி இருப்பது கண்டறிப்பட்டமை அவுஸ்ரேலியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து நாடளாவிய ரீதியாக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டது. ஸ்ட்ரோபெரி பழங்களில் ஊசி இருப்பதாக சுமார் 100 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டன. ஆனால் அதில் சில போலியானவை என்பதுடன், சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற…
-
- 0 replies
- 684 views
-
-
கொங்கோவில் மீண்டும் அதிகரிக்கும் "எபோலா" தாக்கம்! ஆபிரிக்க நாடான கொங்கோவில் மீண்டும் எபோலா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சர் ஒலி இழுங்கா தெரிவித்துள்ளார். மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ குடியரசில் எபோலா வைரசின் தாக்கத்தினால் இதுவரை 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எபோலா வைரஸின் தாக்கத்தினால் கொங்கோவின் பெனி நகரினைச் சேர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதேவேளை இதுவரை எபோலா தாக்கத்தினால் 291 பேர் பாதிகப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், 200 பேர்வரையில் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்ட…
-
- 0 replies
- 481 views
-
-
சோமாலியா குண்டுவெடிப்பு - பலி எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு சோமாலியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள பிரபல உணவகமான சஹாபி அருகே நேற்று 3 கார்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் என மொத்தம் 20 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர் என முதல்கட்டமாக தகவல் வெளியான நிலையில் . மேலும் பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சோமாலியாவின் மொகடிஷு நகரில் நடைபெற்ற குண…
-
- 0 replies
- 359 views
-
-
வைரஸ்களினால் உலகம் அழியும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை! சில வைரஸ் கிருமிகளை கட்டுப்படுத்த தவறினால் எதிர்வரும் 2050ஆம் ஆண்டு உலகில் பல மில்லியன் மக்கள் உயிரிழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸை சேர்ந்த தி ஆர்கனைசேஷன் ஃபார் எகனாமிக் கோ ஆபரேஷன் அண்ட் டெவலப்மென்ட் (The Organisation for Economic Co-operation and Development -OECD) என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 2050ல் உலகம் மிகப்பெரிய நோய் தாக்குதலை சந்திக்கும், அப்போது பல மில்லியன் மக்கள் உயிரிழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக அவுஸ்ரேலியா, ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் மக…
-
- 0 replies
- 426 views
-
-
ஜனாதிபதி ட்ரம்பை எக்காலத்திலும் மன்னிக்கவே முடியாது – மிச்சல் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை எக்காலத்திலும் எப்போதும் மன்னிக்கவே முடியாது என முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் துணைவி மிச்சல் ஒபாமா தெரிவித்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வரலாற்றை “Becoming,” எனும் பெயரில் புத்தகம் ஒன்றினை எழுதியுள்ள மிச்சல் ஒபாமா அதிலேயே இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் இருக்கும், அடிப்படை கோட்பாடுகளும், இனவெறி தொடர்பான கருத்துகளையும், ஒருபோதும் எவரும் எளிதாக கடந்துபோக முடியாது என்றும் மிச்சல் ஒபாமா கூறியுள்ளார். தனது கணவர் ஒபாவின் பிறப்பு குறித்த ட்ரம்பின் கருத்துகள் மிக கீழ்த்தனமாக இருப்பதுடன், அது ஒரு பைத்தியகாரத்…
-
- 2 replies
- 741 views
-
-
சட்டவிரோதமாக நுழையும் குடியேறிகளுக்கு இனி அமெரிக்காவில் தஞ்சம் கோர உரிமை இல்லை November 9, 2018 குடியேறிகள் தொடர்பான ஒரு புதிய சட்டத்தின்படி சட்டவிரோதமாக நுழையும் குடியேறிகளுக்கு இனி அமெரிக்காவில் தஞ்சம் கோர உரிமை இல்லை என டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நீதி மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறைகள் வெளியிட்ட புதிய உத்தரவின்படி குடியேறிகள் தொடர்பான ஜனாதிபதியின் தடையை மீறும் நபர்களுக்கு புகலிடம் மறுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது நாட்டிற்குள் சட்டவிரோதமாக அல்லது ஆவணங்கள் இன்றி நுழையும் அனைத்து வெளிநாட்டினரின் வருகையை இடைநிறுத்துவது மற்றும் நாட்டின் குடியேற்றம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி அமெரிக்காவின் நலன்களுக்கு பாதிப…
-
- 0 replies
- 492 views
-
-
ஏமன் போரில் 58 பேர் பலி ஏமனில் அரச ஆதரவு படையினருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 58 பேர் உயிரிழந்துள்ளனர். ஏமன் நாட்டின் ஜனாதிபதி அப்துரப்பா மன்சூர் ஹாதி படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் கடந்த 2015 ஆண்டு உள்நாட்டுப்போர் ஆரம்பமாகி நீடித்து வருகின்றது. இதில் ஜனாதிபதி அப்துரப்பா படைகளுக்கு சவுதி கூட்டுப்படைகள் ஆதரவு வழங்கி வருகின்றன. அங்குள்ள 6 இலட்சம் மக்கள் வசித்து வரும் செங்கடல் துறைமுக நகரமான ஹொதய்தா, 2014 ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்து வருகிறது. அந்த நகரை மீட்பதற்காக ஜனாதிபதி ஆதரவு படைகள், சவுதி கூட்டுப்படைகள் உதவியுடன் களத்தில் குதித்து கடந்த ஒரு வாரமாக கிளர்ச்சியாளர்களுடன் போரிட்டு வ…
-
- 0 replies
- 451 views
-
-
அமெரிக்காவிற்கு பதிலடிகொடுக்க தயாராகிறது ஐரோப்பா! அமெரிக்க ஜனாதிபதியின் ஒருதலைப்பட்சமான கொள்கைகளுக்கு ஐரோப்பா பதிலளிப்பது அவசியமென ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் ஹெய்க்கோ மாஸ் தெரிவித்துள்ளார். அதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு ஒன்றித்து, ஒற்றுமையை வெளிப்படுத்துவது அவசியமென்றும், அதன்மூலம் அமெரிக்காவின் கொள்கைகளை எதிர்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். பேர்லினின் நேற்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு பதிலளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ‘America First’ என்ற நிகழ்ச்சிநிரலின் கீழான அமெரிக்க ஜனாதிபதியின் கடுமையான எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்புவாத பொருளாதார கொள்கைகள் மற்றும் ஒருதலைப்பட்ச இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு பத…
-
- 1 reply
- 730 views
-
-
நூற்றாண்டு நிறைவில் அகற்றப்படும் முதலாம் உலகப் போரின் வெடிக்காத குண்டுகள்! முதலாம் உலகப் போரின் நூற்றாண்டு நிறைவு அடுத்துவரும் மாதங்களில் நினைவுகூரப்படவுள்ள நிலையில், கிழக்கு பிரான்சின் கொலைக் களங்களில் இன்னும் அழியாத நிலையில் இருக்கின்ற வெடி குண்டுகளை, குண்டு செயலிழப்பு நிபுணர்கள் தோண்டியெடுத்து வருகின்றனர். 100 வருடங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கியமான காரியம் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. 1916 ஆம் ஆண்டில் ‘லு மோர் ஹோம்’ என்ற போர் முடிந்த பின்னர், ஜேர்மனி படையினர் தமது ஆயுதங்களை மெதுவாக நகர்த்திச் செல்லும் நோக்கில் மியூஸ் ஆற்றில் ஆயிரக்கணக்கான பீரங்கி குண்டு இட்டனர். கடந்த வாரம் இரண்டு ஸ்கூபா சுழியோழிகள் ஆற்றுப் படுக்கையில் புதைக்கப்பட்ட நூ…
-
- 0 replies
- 489 views
-
-
பெரும்பான்மையை இழந்த ட்ரம்பின் குடியரசுக் கட்சி : அமெரிக்க – மெக்சிகோ எல்லை சுவர் அமைக்கும் திட்டத்தில் நெருக்கடி! அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் ஜனாதிபதி ட்ரம்பின் குடியரசுக் கட்சி பெரும்பான்மையை இழந்திருப்பதால், மெக்சிகோ எல்லையில் சுவர் அமைக்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனாதிபதி ட்ரம்பின் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவை எனப்படும் கீழவையில் பெரும்பான்மை பெறவில்லை.ஆனால் செனட் அவையில் பெரும்பான்மை பெற்றுள்ளது. இதை பெரிய வெற்றி என ஜனாதிபதி வர்ணித்து வந்தாலும், அவர் அறிவிக்கும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து, ஜனநாயக கட்சியின் சம்மதம் அவசியமானது. மேலும…
-
- 0 replies
- 594 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption தாக்குதலை நேரில் பார்த்த பெண் அது குறித்து செய்தியாளர்களிடம் விளக்குகிறார். அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் உள்ள தௌசண்ட் ஓக்ஸ் பகுதியில் உள்ள ஒரு பாரில் ஒரு மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் தாக்குதலில் ஈடுபட்டவர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இது தவிர குறைந்தது 10 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடந்தபோது பாரில் கல்லூரி இசை விழா ஒன்று நடைபெற்றுவந்தது. அப்போது 200 பேர் பாரில் இருந்ததாகத் …
-
- 2 replies
- 721 views
-
-
CNN ஊடகத்தின் வெள்ளைமாளிகைக்கான அனுமதிப்பத்திரம் நீக்கம் – வெள்ளை மாளிகை வெள்ளை மாளிகைக்குள் செய்தி சேகரிப்பதற்காக CNN ஊடகத்திற்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் நீக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இடைத் தேர்தலுக்குப் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (புதன்கிழமை) கலந்து கொண்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், CNN ஊடகத்தை கடுமையாக தாக்கிப்பேசியுள்ளார். வெள்ளை மாளிகைக்கான CNN நிருபர் ஜிம் ஒகஸ்ரோவை நோக்கி, நீங்கள் நாகரிகமற்ற, பயங்கரமான ஒருவர் என்று ட்ரம்ப் கடும் வார்த்தைகளை பிரயோகித்துள்ளார். ட்ரம்பின் இக்கருத்திற்கு எதிர் கருத்தைத் தெரிவிக்க எத்தணித்த நிருபர் ஜிம் ஒகஸ்ரோவின் கைகளிலிருந்து அவருடைய ஒலிவாங்கியை வெள்ளை மாளிகையின் ஊடக செயற்பாட்டாளர் வலுக்க…
-
- 1 reply
- 626 views
-
-
சுற்றுப் பயணத்தை ஆரம்பிக்க தயாராகும் டைட்டானிக் – 2 டைட்டானிக் – 2 கப்பல் தனது பயணத்தை எப்போது ஆரம்பிக்கவுள்ளது என உலகமெங்கும் பலத்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இந்தநிலையில் எதிர்வரும் 2022-ல் அந்தப் பிரம்மாண்ட கப்பல் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது அவுஸ்ரேலிய நிறுவனமான ப்ளூ ஸ்டார் லைன். 1912-ல் இரண்டாயிரம் பயணிகளோடு சவுத்தாம்ப்டனிலிருந்து அட்லாண்டிக் பெருங்கடல் வழியே நியூயார்க் செல்லும் வழியில் பனிப்பாறைகளில் மோதி மூழ்கியது டைட்டானிக். பல ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அதே வடிவத்தில் கப்பல் ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியது ப்ளூ ஸ்டார் லைன். ஒன்பது அடுக்குகள், 835 அறைகள், 2,435 பயணிகளை ஏற்றிச்செல்லும் வகையில் இந்தக் கப்பல் …
-
- 1 reply
- 498 views
-
-
"ட்ரம்பின் விருப்பத்திற்கிணங்கவே இராஜினாமா செய்தேன்" - ஜெஃப் செஸ்ஸன்ஸ் அமெரிக்காவின் அரசு தலைமை வழக்கறிஞராக பதவி வகித்த ஜெஃப் செஸ்ஸன்ஸ் டொனால்ட் ட்ரம்பின் வேண்டுகோளுக்கிணங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், அட்டார்னி ஜெனரல் ஜெஃப் செஷன்ஸின் சேவைக்கு நாங்கள் அவருக்கு நான்றி கூறுகின்றோம். அவரது எதிர்காலத்துக்கு எங்களின் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். இது குறித்து தனது இராஜினாமா கடிதத்தில் செஷன்ஸ், பதவி விலகல் முடிவு எனது சொந்த முடிவு அல்ல. உங்களின் (ட்ரம்ப்பின்) வேண்டுகோளினை ஏற்றே நான் எனது இராஜினாமா கடிதத்தை கையளிக்கின்றேன். மேலும் நாட்டின் அட்டார்னி ஜெனரலாக நான் பணியாற்றிய காலத்தில் சட்…
-
- 0 replies
- 544 views
-
-
பிள்ளைகளை உணவுக்காக விற்கும் கொடுமை – எங்கு என தெரியுமா? எதிர்கால திட்டங்களின்றி முடிவுகளை எடுத்து கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நாடு வெனிசுலா. அண்மைக்காலமாகவே அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளனன. பொருளாதார நெருக்கடி அதி தீவிரமடைந்த நிலையில் இங்குள்ள மக்கள் அயல் நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். அத்துடன், குடும்ப உறுப்பினர்களின் பட்டினியை போக்க பெண்கள் அயல் நாடுகளில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமாத்திரமின்றி பட்டினியால் தமது பிள்ளைகள் வாடுவதை பொறுக்காமல் பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை விற்பனை செய்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பல நாட்கள் உணவ…
-
- 0 replies
- 658 views
-
-
கமரூனில் கடத்தப்பட்ட 77 மாணவர்கள் விடுதலை November 7, 2018 மத்திய ஆபிரிக்க நாடான கமரூனில் பாடசாலை ஒன்றிலிருந்து கடத்தப்பட்ட 77 மாணவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கமரூனில் பமிண்டா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் என 80க்கும் மேற்பட்டோர் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளால் கடந்த திங்கட்கிழமை கடத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது கடத்தப்பட்ட 77 பள்ளி மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் எனினும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர் தொடர்ந்தும் தீவிரவாதிகளின் கட்டுப்பாடிலேயே இருப்பதாகவும் அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடத்தலுக்க…
-
- 0 replies
- 488 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் இடைக்கால தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வென்றுள்ளது. இந்த இடைக்கால தேர்தல்களில், பிரதிநிதிகளின் முழு சபைக்கான 435 உறுப்பினர்களையும், 100 உறுப்பினர் கொண்ட செனட்டின் 33 உறுப்பினர்களையும் அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள இந்த தேர்தல் முடிவுகள் குறித்த ஐந்து முக்கியமான தகவல்களை காண்போம் …
-
- 0 replies
- 384 views
-
-
அமெரிக்க இடைத்தேர்தல் ; பிரதிநிதிகள் சபை ஜனநாயகக் கட்சி வசம் ; செனட் சபையை தக்க வைத்தது குடிரசுக் கட்சி அமெரிக்க இடைத் தேர்தலில் ஜனநாயக கட்சி, பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியுள்ளது என்றும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அங்கம் வகிக்கும் குடிரசுக் கட்சி, செனட் சபையின் பெரும்பான்மையை தக்க வைத்துக் கொண்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க இடைத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. இந்த வாக்கெடுப்பானது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முதலாவது இரு வருட காலப் பதவிக் காலம் தொடர்பான மக்களின் கருத்தை அறியும் ஒரு வாக்கெடுப்பாக நோக்கப்படுகிறது. அத்துடன் இது அவரது எஞ்சியுள்ள இரு வருட பதவிக் காலம் தொடர்பில் தீர்மானிப்பதாகவும் உள்ள…
-
- 2 replies
- 702 views
-
-
அமெரிக்கா இடைத்தேர்தல் ஆர்வத்துடன் மக்கள் வாக்களிப்பு! அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அமெரிக்க நாடாளுமன்றத்தில் மேலவையான செனட் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 ஆக உள்ளது. கீழவையான பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 435 ஆகவும் இருக்கிறது. இதில் பதவிக்காலம் முடிவடையும் 435 பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் தொகுதிகளில் இன்று(செவ்வாய்கிழமை) தேர்தல் நடைபெற்று வருகிறது. வழக்கமாக ஜனாதிபதி தேர்தலுடன் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் தேர்தல் நடைபெறும். ஆனால் இந்த முறை ஜனாதிபதிதேர்தலுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த தேர்தல் நடைபெறுவதால் இடைக்கால தேர்தல் என ஊடகங்கள் வர்ண…
-
- 1 reply
- 509 views
-
-
ஈராக்கில் 200 க்கும் அதிகமான மனிதப் புதைகுழிகளை விட்டுச்சென்ற ஐ.எஸ் ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் ஆயிரக்கணக்கான சடலங்களைக் கொண்ட 200 க்கும் மேற்பட்ட மனிதப்புதைகுழிகள் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்புதைகுழிகள் 12000 வரையான சடலங்களைக் கொண்டிருக்கக்கூடுமென ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் ஈராக்கின் சிலபகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ் குழு, அப்பகுதிகளில் மிகவும் கொடூரமான ஆட்சியை நடத்தியதுடன் தமக்கு எதிராக செயற்பட்ட அனைவரையும் கொன்று குவித்தது. பின்னர் அமெரிக்காவின் ஆதரவுடன் ஈராக் அரசு முன்னெடுத்த தாக்குதல்களினால் ஐ.எஸ் குழு தோற்கடிக்கப்பட்ட போதிலும்கூட இ…
-
- 0 replies
- 486 views
-
-
பிரித்தானியாவில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய இலங்கை தமிழ் குடும்பம்! இந்தக் காலத்தில் இப்படியுமா? Report us Vethu 9 hours ago பிரித்தானியாவில் வாழும் இலங்கையைச் சேர்ந்த தமிழ் குடும்பத்தின் செயற்பாடு, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இலங்கையில் பிறந்து ஜேர்மனியில் வளர்ந்து பிரித்தானியாவில் வாழைப்பழம் செய்கையில் ஈடுபட்டு வரும் தமிழ் குடும்பம் ஒன்று பிரபல்யம் அடைந்துள்ளது. பிரித்தானியா கொவன்றி பிரதேசத்தில் Radford பகுதியில் வாழும் நபர் ஒருவர் பாரிய வாழைப்பழ செய்கையில் ஈடுபட்டுள்ளார். Radford சாலையில் வசிக்கும் சின்னையா செந்தில்செல்வன் தனது வீட்டின் பின்னாலுள்ள தோட்டத…
-
- 81 replies
- 7.3k views
-