Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வடகொரியாவுடன் சுமூகமான உறவைப் பேண விரும்புவதாக சீனா அறிவிப்பு வடகொரியாவுடன் சுமூகமான உறவுகளைப் பேண விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது. அண்டை நாடான வடகொரியாவுடன் நட்புறவை பேண விரும்புவதாகவும் சீனாவின் நிலைப்பாடு தெளிவானதும் தொடர்ச்சியானதுமாகும் எனவும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Geng Shuang தெரிவித்துள்ளார். கொரிய பகுதியில் சமாதானத்தையும் அமைதியையும் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரியுள்ள அவர் வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்ய சீனா விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டுமெனவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அமெரிக்கா வலியுறுத்தி வரு…

    • 0 replies
    • 245 views
  2. சோமாலியாவில் அரச படையினர் தவறுதலாக நடத்திய தாக்குதலில் அமைச்சர் பலி சோமாலியாவில் அரச படையினர் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு அமைச்சர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 31 வயதான Abas Abdullahi Sheikh என்ற அமைச்சரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். தீவிரவாதி என்ற சந்தேகத்தின் பேரில் அரசாங்கப் படையினர் தவறுதலாக இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தலைநகர் மொகடிஸூவில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிறுவயது புகலிடக் கோரிக்கையாளரான Abas Abdullahi Sheikh கடந்த ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதுடன், இந்த ஆண்டு அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். அல் கய்தா இயக்கத்துடன் தொடர்புடைய தீவிரவாதிகள் சோமாலியாவில் குழப்ப…

    • 0 replies
    • 335 views
  3. மே 24-இல் போப் பிரான்சிஸ் - டொனால்டு டிரம்ப் சந்திப்பு மத்திய கிழக்கு நாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்டு திரும்பும் போது ரோம் நகரில் போப் பிரான்சிஸ்-ஐ அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திக்க இருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது. ரோம்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போப் பிரான்சிஸ்-ஐ மே மாதம் 24-ந்தேதி சந்திக்க இருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் டொனால்டு டிரம்ப் அமெரிக்கா திரும்பும் போது ரோம் நகரில் போப் பிரான்சிஸ்-ஐ சந…

  4. ரஸ்யா இணைய தாக்குதல்களை நடத்துவதாக ஜெர்மனி குற்றச்சாட்டு ரஸ்யா இணையத் தாக்குதல்களை நடத்துவதாக ஜெர்மனி; அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. ஜெர்மனியின் உள்ளகப் புலனாய்வுப் பிரிவு முகவர் நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. சைபர் தாக்குதல்களை நடத்தி ஜெர்மனியின் முக்கிய தகவல்களை ரஸ்யா சேகரித்துள்ளதாகவும் இந்த தாகவல்கள் சில வேளைகளில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தல்களின் போது பயன்படுத்தப்படலாம் எனவும் ஜெர்மனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல்களில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ரஸ்யா இவ்வாறு சைபர் தாக்குதல்களை நடத்துவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் ஜெர்மனியின் அரசியல் நிறுவனங்கள் மீது எவ்வித சைபர் தா…

  5. இன்றைய (04/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அரச பணிகளிலிருந்து ஓய்வு பெறும் அரசியின் கணவர்; எடின்பரோ கோமகன் இளவரசர் பிலிப் இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறுகிறார். * மதநிந்தனை செய்ததாக கூறப்படுபவரை கொலைகார கும்பலிடமிருந்து காப்பாற்றிய பாகிஸ்தான் மதகுரு; அன்பை போதிப்பதே மதம் என்று வலியுறுத்தல். * சீனாவில் அதிகரிக்கும் சைக்கிள்களின் செல்வாக்கு; சுற்றுச்சூழலை பாதுகாக்குமென செயற்பாட்டாளர்கள் வரவேற்பு.

  6. அரச கடமைகளில் இருந்து விலகுகிறார் இளவரசர் பிலிப் Published by Kumaran on 2017-05-04 16:40:52 எலிசபெத் மகாராணியின் கணவரும், பிரித்தானிய இளவரசருமான பிலிப், அரச கடமைகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாகவும், பொது நிகழ்வுகளில் இனிக் கலந்துகொள்ளப் போவதில்லை எனவும் என பக்கிங்ஹாம் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. 70 வருடங்கள் இளவரசராக இருந்து வரும் பிலிப், பிரித்தானிய வரலாற்றில் அதிக காலம் அரச கடமைகளை ஆற்றிய இளவரசர் என்ற பெருமையையும் பெற்றவர். தற்போது 95 வயதாகும் பிலிப் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் (அவரது 95வது பிறந்த நாளுடன்) பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ள மாட்டார். எனினும் அறக்கட்டளை நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்கவுள்ளார். …

  7. மனித இனம் உயிருடன் வாழவேண்டுமென்றால் பூமியை துறந்து, வேறு கிரகங்களை நோக்கி 100 வருடங்களுக்குள் செல்லவேண்டுமென பிரபல இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டிபன் ஹாக்கிங் தெரிவித்துள்ளார். மேலு உலகில் ஏற்படும் மாற்றங்களை குறித்து ஆய்வு செய்து வரும் ஹாக்கிங், கரும் துளை ஆய்வின் மூலம் காலத்தை வெல்லும் சூட்சுமத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில் தற்போது உலக இருப்பு தொடர்பான ஆவணப்படமொன்றை உருவாக்கியுள்ளார். குறித்த காணொளியினுடாக இன்னும் 100 வருடங்களில் பூமி மனிதர்கள் வாழ்வதற்கான சூழலை கொண்டிருக்காது என தெளிவுபடுத்தியுள்ளார். அத்தோடு குறித்த ஆவணப்படத்தினுடாக, உலக சனத்தொகை பெருக்கம், தொற்றுநோய் பரவல்கள், வளங்கள் இழக்கப்படுகின்றமை மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுவரும் அழ…

    • 2 replies
    • 486 views
  8. ஏயர்டெல் மக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கு தொடர்பில் சன் குழும தலைவர் கலாநிதி மாறன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமுலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. மத்திய அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏயர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை எனத் தெரி…

    • 0 replies
    • 248 views
  9. இன்றைய (03/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்காது; ஐரோப்பிய ஒன்றிய பேச்சுவார்த்தைக்குழுவின் தலைமை பேச்சாளர் அறிவிப்பு. * வீட்டுப்பாடத்தை குறைத்து விளையாட்டை ஊக்குவிக்கும் சிங்கப்பூரின் புதிய கல்விக்கொள்கை; மனப்பாடத்தைவிட, வாழ்வின் சவால்களை சந்திக்க கூடுதல் பயிற்சி. * மாதவிலக்கும் மாறாத நம்பிக்கைகளும்; நேபாள அரசு சட்டம் போட்டும் தீட்டு குறித்த மக்கள் மனநிலை மாறாமல் இருப்பதேன்?

  10. பெரிதும் அறியப்படாத இந்திய - வட கொரிய வர்த்தக உறவுகள் சில நாட்களுக்கு முன்பு வரை வட கொரியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக கூட்டாளி நாடு இந்தியா என்று பலருக்கும் தெரியாமல் இருந்திருக்கலாம். படத்தின் காப்புரிமைCHANDAN KHANNA/AFP/GETTY IMAGES) உணவு மற்றும் மருந்து உதவிகள் தவிர வட கொரியாவோடு இருக்கும் பிற எல்லா வர்த்தகங்களையும் நிறுத்திவிடுவதாக இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் ஏப்ரல் மாதம் கடைசி வாரம் தகவல் வெளியிட்டது. வட கொரியா மீது ஐக்கிய நாடுகள் அவை விதித்துள்ள தடைகளை கடைபிடிக்கும் வகையில் இந்த வர்த்தக நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக இந்தியா கூறியிருக்கிறது. ஆனால், சமீப காலம் வரை, இந்…

  11. பிபிசி தொலைக்காட்சி செய்திகள் 02/05/2017 பிரெஞ்ச் அதிபர் தேர்தலில் போட்டியிடும் மரீன் லூபென் தனது எதிரணி வேட்பாளர் பேச்சின் பல பகுதிகளை களவாடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்த செய்தி; வெனிசுவேலா போராட்டங்கள் தொடர்ந்து அதிகரிக்கும் சூழலில் நாட்டுக்கு புதிய தேசிய அவை ஒன்றை உருவாக்கபோவதாக அதிபர் அறிவித்திருப்பது குறித்த தகவல்கள்; உகாண்டாவில் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகும் சிறுமிகளை அவர்களின் குடும்பமே தனித்தீவுக்கு அனுப்பி உயிரிழக்கச் செய்யும் கொடுமையிலிருந்து தப்பி உயிர்வாழும் கடைசி பெண்ணின் கதை ஆகியவை இடம்பெறுகின்றன.

  12. பிரான்ஸ் அதிபர் வேட்பாளர் மீது கருத்து திருட்டு குற்றச்சாட்டு தனது முன்னாள் போட்டியாளர் ஒருவரின் உரையை திருடியதாக பிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தலின் தீவிர வலதுசாரி வேட்பாளர் மரைன் லு பென் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. போட்டி வேட்பாளர் பிரான்ஸ்ஸுவா ஃபியோவின் உரையை ஒத்ததாக அவரது பெருமளவு உரை இருந்துள்ளது. பிரான்ஸ்ஸுவா பியோ ஏற்கனவே முதற்சுற்று வாக்கெடுப்பில் தோல்வியடைந்துவிட்டார். இவை குறித்த பிபிசியின் காணொளி.

  13. 'உலகிலேயே வயதான' 146 வயது இந்தோனேசிய முதியவர் மரணம் உலகிலேயே இதுவரை வாழ்ந்தவர்களில் மிகவும் அதிக வயதானவராக கருதப்பட்ட 146 வயது சோடிமெட்ஜோ மத்திய ஜாவாவில் உள்ள தனது கிராமத்தில் மரணமடைந்தார். படத்தின் காப்புரிமைEPA சோடிமெட்ஜோ என்ற பெயர் கொண்ட, ம்பா கோட்டோ (தாத்தா கோட்டோ) 1870 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்தவர் என்று ஆவணங்கள் சான்றளிக்கின்றன. ஆனால், இந்தோனேசியாவில் 1900ஆம் ஆண்டில்தான் பிறப்புப் பதிவு நடைமுறை தொடங்கப்பட்டதால், அதற்கு முந்தைய ஆவணங்களில் தவறுகளும் இருக்கலாம். இருந்தபோதிலும், சோடிமெட்ஜோ அளித்த ஆவணங்களின் அடிப்படையில் அவரது வயது 146 என்பது உண்மை என்று அதிகாரிகள் பிப…

  14. கிம்-ஜோங் உன் குறித்து டிரம்பின் அணுகுமுறையில் மாற்றம்? சரியான சூழ்நிலைகளில் வடகொரிய தலைவர் கிம்-ஜோங் உன்னை சந்தித்தால், தான்அதனை கவுரவமாக கருதுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகிம்-ஜோங் உன் குறித்து டிரம்பின் அணுகுமுறையில் மாற்றம்? இது குறித்து திங்கள்கிழமையன்று ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவிக்கையில், ''கிம்-ஜோங் உன்னை சந்திக்கும் சூழல் பொருத்தமாக இருந்தால், நிச்சயமாக நான் அவரைச் சந்திப்பேன். அதனை நான் கவுரவமாகவும் கருதுவேன்'' என்று டொனால்ட் டிரம்ப் மேலும் தெரிவித்தார். இதற்கு ம…

  15. வானில் ஏற்பட்ட காற்றுக் கொந்தளிப்பில் விமானப் பயணிகள் 27 பேர் காயம் வானில் ஏற்பட்ட திடீர் காற்றுக் கொந்தளிப்பினால் விமானப் பயணிகள் காயமடைந்துள்ளனர். ரஸ்யாவின் மொஸ்கோவிலிருந்து தாய்லாந்தின் பாங்கொக் நகர் நோக்கிப் பயணித்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் இந்த விபத்தில் 27 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதில் சிலருக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்த எவருக்கும் உயிராபத்து கிடையாது என ரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காற்று கொந்தளிப்பினால் விமானம் ஆடத்தொடங்கியதாக பயணி ஒருவர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். பாங்கொக்கில் தரையிறக்குவதற்கு 40 நிமிடங்களுக்கு முன்னதாக இந்த விபத்து …

  16. கொரிய வளைகுடாவில் அதிகரிக்கும் பதற்றம் : காணொளி ----------------------------------------------------------------- முன்கூட்டி, தாமாகவே அணுத்தாக்குதலை நடத்துவது உட்பட தமது இராணுவ வல்லமையை அதிகரித்துக்கொள்ளும் நடவடிக்கைகளை தொடரப்போவதாக வடகொரியா வலியுறுத்தியதை அடுத்து கொரிய வளைகுடாவில் பதற்றம் அதிகரித்து வருகின்றது. அதேவேளை, மேற்கு பசுபிக் கடலுக்கு வந்து சேர்ந்துள்ள அமெரிக்க கடற்படை கப்பல்களுக்கு ஆதரவாக, ஜப்பான் தனது மிகப்பெரிய போர்க்கப்பலை அங்கு அனுப்பியுள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் இப்படியான நடவடிக்கைக்கு ஜப்பான் தனது போர்க்கப்பலை அனுப்புவது இதுவே முதற்தடவை. இவை குறித்த பிபிசியின் காணொளி. BBC

  17. இங்கிலாந்தில் தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் மூவர் கைது இங்கிலாந்தில் தீவிரவாதத்துடன் தொடர்புடைய செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் இன்று மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மூவரும் பெண்கள் எனவும் அவர்களில் இருவர் 18 வயது மதிக்கத்தக்கவர்கள் எனவும் மற்றையவர் 19 வயது மதிக்கத்தக்கவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது பெண் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தை தொடர்ந்தே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தடுப்புக்காவலில் உள…

  18. தலித் மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் கிணற்றில் மண்ணெண்ணெய் ஊற்றி ஆதிக்க சாதியினர் அராஜகம்! [Sunday 2017-04-30 09:00] மத்திய பிரதேசத்தில் இருந்து 200 கி.மி தொலைவில் உள்ளது அகர் மால்வா என்ற கிராமம். இந்த கிராமத்தில் தலித் மக்கள் பயன்படுத்தும் கிணற்றில் மண்ணெண்ணெய்யை கொட்டி அப்பகுதியில் உள்ள ஆதிக்க சாதியினர் கொடுஞ்செயல் புரிந்துள்ளனர். இதனால் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அல்லாடி வருகின்றனர் தலித் மக்கள். கடந்த வாரம் சந்தர் மேக்வால் என்ற தலித் தனது மகளுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளார். மணமகனை வரவேற்பதாக பேண்டு வாத்தியங்களை அவர் பயன்படுத்த முடிவு செய்திருந்தார். இதை அறிந்த ஆதிக்க சாதியினர் அந்த கிராமப்பகுதி வழ…

    • 0 replies
    • 290 views
  19. ராஜீவ் கொலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விசாரணை எப்போது முடிக்கப்படும் என கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்டவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை விதித்திருந்தது. இதையடுத்து அவர்கள் செய்த மேல் முறையீடுகளும் நிராகரிக்கப்பட்டது. இதனிடையே கூடுதல் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என சிபிஐ தரப்பில் கேட்கப்பட்டது. சுமார் 17 வருடங்களாக தொடர்ந்து வரும் இவ்விசாரணையின் நிலை குறித்து அறிந்துக்கொள்ள பேரறிவாளன் தரப்பில் மனுத்தாக்கல…

  20. நீதிபதி கர்ணனுக்கு மனநல பரிசோதனை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு. நீதிபதி கர்ணனுக்கு மனநல பரிசோதனை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார் கூறியதற்காக உச்சநீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உள்ளாகியுள்ளவர் கொல்கத்தா ஹைகோர்ட் நீதிபதியான கர்ணன்.உச்சநீதிமன்றம் என்பதை ஹைகோர்ட்டின் எஜமானர் கிடையாது என்றெல்லாம் கருத்து கூறியிருந்தார் கர்ணன். இந்த நிலையில், கடந்த முறை இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, கர்ணனுக்கு மனநிலை சரியாக உள்ளதா, இந்த வழக்கின் தன்மையை அவர் புரிந்துகொள்ளவில்லையே என நீதிபதி ஆதங்கம் தெரிவித்திருந்தார். ஆனால் தனது பணியை செய்ய உச…

  21. ஐரோப்பிய ஒன்றியத்துடனான, பிரெக்சிற் குறித்த பேச்சுவார்த்தைகள் சிக்கலானதாக அமையலாம் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே:- பிரெக்சிற் விவகாரம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகள் நெருக்கடி மிகுந்ததாக அமையலாம் என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின் போது இதனைத் தெரிவித்துள்ளார். பிரெக்சிற் விதிமுறைகள் தொடர்பில் பிரித்தானியா தவிர்ந்த ஏனைய 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பிரஸ்சல்ஸில் பேச்சுவார்த்தை நடத்திய போது, குறித்த விதிமுறைகளுக்கு 27 நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ள நிலையிலேயே தெரேசா மே மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை என…

  22. வடகொரிய அதிபர் இளம்பெண் போன்று கவர்ச்சியாக இருக்கிறார்: டொனால்டு டிரம்ப் கிண்டல் வடகொரிய அதிபர் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமான இளம்பெண் போன்று இருக்கிறார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கிண்டல் செய்துள்ளார். வாஷிங்டன: அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங் குறித்தும், அவரது அணு ஆயுத சோதனை, ஏவுகணைகளின் சோதனை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு அவ…

  23. 100-ஆவது நாள் பேரணியில் ஊடகங்களை கடுமையாக சாடிய டிரம்ப் அமெரிக்க அதிபராக தான்பதவியேற்ற 100-ஆவது நாளை குறிக்கும் வகையில் நடந்த பேரணியில் ஊடகங்கள் மீது கடுமையான தாக்குதலை டொனால்ட் டிரம்ப் தொடுத்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஊடகங்கள் மீது டிரம்ப் சாடல் பென்சில்வேனியாவில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றிய டிரம்ப், ஒன்றன் பின் ஒன்றாக தனது வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாகவும், தன்மீதான விமர்சனங்களை எவ்வித தொடர்பும், புரிதலும் இல்லாத சில பத்திரிக்கையாளர்கள் எழுதும் பொய்யான செய்திகள் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அதிபர் அலுவலகத்தின் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுட…

  24. மனித ரோபோக்களை வாடகைக்கு எடுக்கும் நடைமுறை! [Wednesday 2017-04-26 08:00] மனித ரோபோக்களை வாடகைக்கு எடுக்கும் நடைமுறை ஜப்பான் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. ORIX Rentec Corporation என்ற நிறுவனம் தயாரித்துள்ள யுமி (YUMI) எனப்படும் அந்த மனித ரோபோவை வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனை, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை, வீட்டு வேலை போன்றவற்றிற்கு வாடகைக்கு எடுத்து வருகின்றனர். மனிதர்களுக்கு தரும் சம்பளத்தை விட ரோபோக்களுக்கு தரும் விலை சற்று குறைவு என்பதால் யுமி ரோபோவை மக்கள் வாடகைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.http://www.seithy.com/breifNews.php?newsID=181182&category=CommonNews&language=tamil

    • 0 replies
    • 327 views
  25. உலக நாடுகளுக்கு போப் ப்ரான்சிஸ் வேண்டுகோள் அமெரிக்கா மற்றும் வட கொரியா நாடுகளுக்கு இடையே மூன்றாவது நாடுகள் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று போப் ப்ரான்சிஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வட கொரியா அணு ஆயுத சோதனை மேற்கொள்வதை அமெரிக்கா விரும்பவில்லை. அதனால் வட கொரியா அணு ஆயுத சோதனை மேற்கொள்வதை தடுக்க அமெரிக்கா பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகிறது. இருப்பினும் வட கொரியா, அமெரிக்காவின் எதிர்ப்புக்கு அஞ்சாமல் செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் அமெரிக்கா தனது கடற்படையை கொரிய தீபகற்ப பகுதியில் கொண்டு நிறுத்தியது. இந்த செயல் வட கொரியாவிற்கு ஆத்திரத்தை மூ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.